Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதான வழி நடத்தல் குழுவின் அறிக்கை வந்ததும் எவ்வாறான தீர்வு என்பதனை அறிந்துகொள்ள முடியும்

Featured Replies

பிர­தான வழி நடத்தல் குழுவின் அறிக்கை வந்­ததும் எவ்­வா­றான தீர்வு என்­ப­தனை அறிந்­து­கொள்ள முடியும்

Sumanthiran222-29b7e75af9e0e5cf51f6f43da6c2f20ae90dc2bf.jpg

 

மிக­ வி­ரைவில் உப­கு­ழுக்கள் மற்றும் வழி­ந­டத்தல் குழு ஆகி­ய­வற்றின் இடைக்­கால அறிக்­கைகள் பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வி­ருக்­கின்­றன. அவ்­வ­றிக்­கையில் உள்ள விட­யங்கள் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­போது தமிழ்­ மக்­க­ளுக்கு எத்­த­கைய அதி­கா­ரப்­ப­கிர்வு வழங்­கப்­பட விருக்­கின்­ற­தென்று தமிழ் மக்­களும் தென்­னி­லங்­கை­யரும் அறிந்து­கொள்ள முடியும் என்று யாழ் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன் தெரி­வித்தார்.

இலங்கை இந்­திய மீனவர் விவ­காரம் தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு புது­டில்லி சென்று திரும்­பிய அவ­ரிடம் இலங்கை இந்­திய மீனவர் பிரச்­சினை தொடர்­பிலும் விரைவில் வெளி­வ­ர­வுள்ள இடைக்­கால அறிக்கை பற்­றியும் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரி­விக்­கையில்,

எதிர்­வரும் நவம்பர் 19 ஆம் திகதி உப­குழுக்­களின் இடைக்­கால அறிக்­கையும் டிசெம்பர் முதல் வாரத்தில் வழி­ந­டத்தல் குழுவின் அறிக்­கையும் பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. தமிழ் மக்கள் எத்­த­கைய அர­சியல் தீர்வைப் பெற­வுள்­ளனர் என்­பதை தமிழ் மக்­களும் அதி­கா­ரப்­ப­கிர்வு எவ்­வ­கை­யா­னது என்­பதை தென்­னி­லங்­கை­யரும் பகி­ரங்­க­மாக அறிந்து கொள்ள முடியும்.

13 ஆவது சரத்­துக்கு அப்பால் சென்று அர்த்­த­முள்ள அதி­காரப் பகிர்வை வழங்­க வேண்டும் என இந்­தி­யா­வுக்கு வாக்­கு­று­தி­ய­ளித்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ

பக் ஷ இந்த அதி­காரப் பகிர்வை எதிர்க்­கவோ நிரா­க­ரிக்­கவோ முடி­யாது.

மீனவர் விவ­கார பேச்­சு­வார்த்தை

பேச்­சு­வார்த்­தையின் போது மூன்று விட­யங்கள் தீர்­வு­க­ளாக எடுக்­கப்­பட்­டன. முத­லா­வது மடி­ வ­லையை உப­யோ­கித்து மீன் பிடிக்கும் இழு­வைப் ­ப­ட­குகள் நிறுத்­தப்­பட வேண்டும். இது குறித்து துரி­த­மான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும். இரண்­டா­வது இரு­நா­டு­களும் சேர்ந்து ரோந்து நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டு­வது பற்றி ஆராய வேண்டும். மூன்­றா­வது இரு நாட்டு மீன­வர்­களும் தங்கள் நாட்­டுக்­கு­ரிய எல்லை தாண்டிச் செல்­கி­ன்ற­போது கைது செய்­யப்­ப­டு­கின்ற வேளை­களில் அவர்­களை துரி­த­மாக விடு­விப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை ­முறை பற்றி ஆராய வேண்டும்.

இம்­மூன்று விட­யங்­களை அமுல்­ப­டுத்­து­வ­தற்­காக கூட்டு நட­வ­டிக்கை குழு­வொன்று ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. மேற்­படி நட­வ­டிக்­கைக்­குழு இரு­நாட்டு அமைச்­சுக்­களின் செய­லாளர் மட்­டத்தில் மூன்று மாதத்­துக்­கொரு முறை சந்­திப்­பார்கள் என்றும் இணக்­கப்­பாடு காணப்­பட்­டுள்­ளது.

மேற்­படி பிரச்­சினை பூதா­க­ர­மாக வெடிப்­ப­தற்குக் காரணம் மடி­வலை என்ற வலையைப் பயன்­ப­டுத்தி இழுவைப் பட­குகள் மீன்­பி­டிப்­ப­தாகும். இன்­றைய சூழ்­நி­லையில் 90 சதவீதத்­துக்கு மேலான பிரச்­சினை மடி­வ­லையைப் பயன்­ப­டுத்­து­வ­தனால் ஏற்­படும் பிரச்­சி­னை­யாகும். இப்­பி­ரச்­சினை கடல் எல்­லையைத் தாண்டும் பிரச்­சி­னையால் வரு­வ­தல்ல. நீரியல் வளத்தை முற்­றாக அழிக்கும் மீன்­பி­டி­முறை சார்ந்­தது. ஆக­வே தான் அம்­முறை நிறுத்­தப்­பட்டால் இப்­பி­ரச்­சி­னையின் முக்­கி­மான பங்கு இல்­லாமல் போகும் என்ற நம்­பிக்கை எமக்­குண்டு. அத­னால்தான் இந்­திய அர­சாங்கம் முதல் முறை­யாக மடி­வலை பாவித்து மீன்­பி­டிக்கும் முறை நிறுத்­தப்­பட வேண்டும் அதுவும் துரி­த­மாக நிறுத்­தப்­பட வேண்­டு­மென்­பதை ஒத்­துக்­கொண்டு இணங்­கி­யி­ருப்­பதை முக்­கி­ய­மான படிக்­கல்­லாக நாம் நினைக்­கின்றோம்.

மடி­வலை முறை மீன்­பி­டிப்பு நிறுத்­தப்­பட்­டாலும் ஒரு நாட்டு மீனவர் எல்­லை­தாண்டிச் செல்­வது நடக்­கலாம். ஆனால் இந்த விவ­காரம் இன்று நேற்று உரு­வா­கிய பிரச்­சி­னை­யல்ல. இப்­பி­ரச்­சினை நூற்­றாண்டு கால­மாக தொட­ரு­கின்ற பிரச்­சினை.

ஆகை­யி­னால்தான் இரு நாடு­களால் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கின்ற கூட்டு நட­வ­டிக்­கைக்­குழு இதனை எப்­படிச் சுமு­க­மாகக் கையாள்­வது அதிலும் குறிப்­பாக நவீன தொழில்­நுட்பக் கரு­வி­களைப் பயன்­ப­டுத்தி எவ்­வாறு மீன­வர்­க­ளுக்கு அறி­வித்தல் கொடுப்­பது, எச்­ச­ரிக்கை செய்­வது, ரோந்து நட­வ­டிக்கை மூலம் எல்லை தாண்­டாமல் பார்த்துக் கொள்­வது என்ற முறை­யையும் உபா­யத்­தையும் ஆராயும்.

இதில் சுட்­டிக்­காட்டக் கூடிய விட­ய­மென்ன வென்றால் மடி­வ­லையைப் பாவித்து மீன்­பி­டிக்கும் பிரச்­சினை தீர்க்­கப்­ப­டு­மானால் இலங்கை இந்­திய மீனவர் பிரச்­சி­னையில் முக்கால் பங்கு பிரச்­சினை தீர்ந்து விட்­ட­தாக நாங்கள் கரு­தலாம். இது நிறுத்­தப்­பட்டு மாற்றுத் தொழி­லுக்கு மீன­வர்கள் பழக்­கப்­படுத்­தப்­ப­டு­வார்­க­ளாக இருந்தால் மிகவும் இல­கு­வான முறையில் இவ்­வி­ட­யத்தை கையாள முடியும்.

கேள்வி: புதிய அர­சியல் யாப்பு முயற்­சிகள் எவ்வாறு முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன?

பதில்: இவ்­வ­ருடம் ஜன­வரி 9 ஆம் திகதி அர­சியல் அமைப்பு சபை­யொன்றை உரு­வாக்­கு­வ­தற்­கான பிரே­ரணை இலங்கைப் பாரா­ளு­மன்றில் கொண்­டு­வ­ரப்­பட்­டது. இப்­பி­ரே­ரணை மார்ச் மாதம் 9 ஆம் திகதி நிறை­வேறி வழி­ந­டத்தல் குழு­வொன்று அமைக்­கப்­பட்­டது. அத்தோடு இணைந்த வகையில் ஆறு உப­கு­ழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டன. இக்­கு­ழுக்கள் அனைத்தும் கடந்த சில மாதங்­க­ளாக மிகவும் மும்­மு­ர­மாக இயங்கி வரு­கின்­றன. நான் வழி­ந­டத்தல் குழுவில் . சம்­பந்­த­னுடன் கூட்­ட­மைப்பை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் அங்கம் வகிக்­கின்றேன். உப­கு­ழுக்கள் தமது வேலை­களை முடித்து குறித்த அறிக்­கை­களை வழி­ந­டத்தல் குழு­விடம் சமர்ப்­பித்­து­ விட்­டன. வழி­ந­டத்தல் குழு முக்­கி­ய­மான விட­யங்­களை தானாக ஆராய்ந்து சில தீர்­மா­னங்­களை எடுத்­தி­ருக்­கி­றது. இன்னும் ஒரு சில விட­யங்கள் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளன.

இந்­நி­லையில் விட­யங்கள் எல்­லா­வற்­றையும் இரண்டு பகு­தி­யாக இடைக்­கால அறிக்­கை­க­ளாக அர­சியல் அமைப்பு சபைக்கு சமர்­ப்பிக்க முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. இது எவ்­வ­ளவு தூரம் முன்­னேற்றம் கண்­டுள்­ளது என்­பது பற்­றிய விப­ரங்கள் இது­வரை வெளி­யி­டப்­ப­ட­வில்லை. பல விட­யங்கள் குறித்து இணக்­கப்­பா­டுகள் காணப்­பட்­டி­ருக்­கின்ற போதும் இவை குறித்து பகி­ரங்­கப்­ப­டுத்­தினால் ஒவ்­வொரு கட்­சியும் தமது நிலைப்­பாடு குறித்து விமர்­சிப்­பார்கள். கட்­சிகள் தமது கருத்­துக்­களை வெளி­யிடத் தொடங்­கினால் அதன் பின்பு மேசை­யிலே இணக்­கப்­பாடு எய்­து­வது கடி­ன­மாக இருக்­கு­மென்று அனை­வரும் சேர்ந்து ஒரு தீர்­மானம் எடுத்­தி­ருந்தோம். இந்த தீர்­மா­னத்தை மஹிந்த ராஜபக் ஷவின் ஆத­ரவு அணியும் ஏற்றுக் கொண்டு எது­வித விப­ரங்­க­ளையும் தெரி­விக்­காமல் அமை­தி­யாக இருக்­கி­றார்கள்.

உப­கு­ழுக்­களின் அறிக்­கை­யா­னது இடைக்­கால அறிக்­கை­யாக இம்­மாதம் 19 ஆம் திகதி பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வி­ருக்­கி­றது. அன்­றைய தினமே அது பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­படும். நவம்பர் இறுதி வாரத்தில் அல்­லது டிசெம்பர் முதலாம் வாரத்தில் வழி­ந­டத்­தல்­குழு கையாண்ட மிக முக்­கி­ய­மான விட­யங்கள் தொடர்­பான இடைக்­கால அறிக்கை வெளி­யி­டப்­படும்.

அப்­பொ­ழுது எந்­த­ள­வுக்கு இணக்­கப்­பாடு காணப்­பட்­டுள்­ளது இணக்­கப்­பாடு காணப்­படாத விட­யங்கள் புதிய அர­சியல் அமைப்புச் சட்­டத்தில் சேர்க்க முடி­யு­மென்­ப­தற்கு வெவ்­வேறு மாற்று வழிகள் கண்டுபிடிக்­கப்­பட்டு அது முன்­வைக்­கப்­படும் என தீர்­மா­னித்­தி­ருக்­கிறோம். ஆகையால் வெகு­வி­ரைவில் மேற்­படி இடைக்­கால அறிக்­கைகள் வரு­கின்றபோது மக்கள் தெரிந்து கொள்­வார்கள். எவ்­வித அர­சியல் சாசனம் உரு­வாக்­கப்­பட விருக்­கி­றது என்ற செய்தி தெளி­வாக தெரி­ய­வரும்.

கேள்வி: தென்­னி­லங்­கையைப் பொறுத்­த­வரை அதி­கா­ரப்­ப­கிர்வு என்று கூறி­ய­வு­டனேயே ஒரு ஒவ்­வாமை காணப்­ப­டு­கி­றது. ஆனால் இனப்­பி­ரச்­சி­னையின் அடித்­தீர்வே அதி­காரப் பகிர்வு தானே-?

பதில்: அதி­கா­ரப்­ப­ரவல் அதி­கா­ரப்­ப­கிர்வு என்ற இரண்டும் வேறு­பட்ட கருத்­துக் ­கொண்­டவை. அதி­காரப் பகிர்வு சம்­பந்­த­மாக அர­சாங்­கத்­துடன் நேர­டி­யா­கவே பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருக்­கிறோம். உப­கு­ழுக்­களில் ஒன்று மத்­திய அர­சாங்­கத்­துக்கும் மாகாண சபை­க­ளுக்கும் இடை­யி­லான உறவு சம்­பந்­த­மாக ஆராயும் ஒரு உப­கு­ழு­வாகும். இக்­கு­ழுவின் தலை­வ­ராக த.தே.கூ. அமைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன் இருந்­துள்ளார். அவ­ரு­டைய பரிந்­து­ரையும் அதி­லுள்­ளது.

அதி­கா­ரப்­ப­கிர்வு எப்­ப­டி­யாக இருக்க வேண்­டு­மென்­பது வழி­ந­டத்­தல்­குழு தனக்­கென்று கொண்­டுள்ள ஆறு விட­யங்­களில் ஒரு விட­ய­மாகும். அது பற்றி கலந்­து­ரை­யாடி தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. ஆகையால் உரு­வா­க­வி­ருக்கும் அர­சியல் அமைப்பு சாச­னத்தில் அதி­காரப் பகிர்வு என்ற விடயம் மிக மிக முக்­கி­ய­மான ஒரு அம்­ச­மா­கத்தான் அணு­கப்­பட்­டி­ருக்­கி­றது. இது சம்­பந்­த­மான முரண்­பா­டுகள் குறிப்­பாக கட்­சி­களின் மத்­தியில் ஏற்­ப­ட­வில்லை. ஆகையால் புதிய அர­சியல் சாசன வரைவில் அர்த்­த­முள்ள ஒரு அதி­கா­ரப்­ப­கிர்­வு­முறை வெளி­வரும் என்ற நம்­பிக்­கை­யி­ருக்­கி­றது.

இதைத்தான் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தனது ஆட்­சிக்­கா­லத்தில் அடிக்­கடி கூறிக் கொண்­டி­ருந்தார். அது யாதெனில் 13 வது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்தி அதற்கு அப்­பாலும் சென்று அதி­கா­ரப்­ப­கிர்வை அர்த்­த­முள்­ள­தாக்­குவேன் என்ற சொற்­றொ­டரை தொடர்ச்­சி­யாக குறைந்­தது மூன்று தட­வை­யா­வது இந்­திய அர­சுடன் கூட்­ட­றிக்­கையில் கூறி­யி­ருந்தார். ஆகவே அதி­கா­ரப்­ப­கிர்வு என்­பது எவரும் மறு­த­லிக்கும் ஒரு விட­ய­மாக இருக்க முடி­யாது.

கேள்வி: மஹிந்த ராஜபக் ஷ பின்­னாளில் அது விடயம் தொடர்பில் பின்­வாங்­கி­யி­ருந்தார். கடும் போக்கைக் காட்­டினார். 13ஆவது திருத்தச் சட்டத்­துக்கு பௌத்த வாதிகள் எதிர்ப்புக் காட்­டி­னார்­களே?

பதில்: 13 ஆவது திருத்­தத்தை அடி­யொட்டி புதிய அர­சியல் சாசனம் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. 13 வது திருத்­தத்­துக்கு அப்பால் செல்வேன் என்று வாக்­கு­று­தி­ய­ளித்த மஹிந்த புதிய அர­சியல் சாச­னத்தை எதிர்க்க முடி­யாது. இருந்­தாலும் நம்­பிக்­கை­ வைக்க முடி­யாது.

தான் வாக்­கு­று­தி­ய­ளித்­ததை நிறை­வேற்­றாமல் விட்­டமை அவரின் தோல்­விக்கு ஒரு கார­ண­மாக அமைந்­தது. நீண்­ட­கால இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வைக் காணாமல் அதை தட்டிக் கழித்து காலம் கடத்­தி­யதும் தமிழ் மக்கள் அவ­ருக்கு எதி­ராக வாக்­க­ளிக்க வேண்­டிய நிலையை உரு­வாக்­கி­யது. ஆகையால் தற்­பொ­ழு­துள்ள சூழ்­நி­லையில் புதிய அர­சியல் சாசனம் உரு­வாக்­கப்­ப­டு­கி­றது. இதற்கு இந்­தியா உட்­பட எந்த நாடு­களின் தலை­யீடும் கிடை­யாது.

கடும்­போக்­கு­வா­தி­களும் இன­வா­தி­களும் எல்லாச் சமூ­கத்­திலும் இருக்­கத்தான் செய்­வார்கள். ஆனால் இலங்­கையில் வாழும் அனைத்து இனத்­த­வரும் இந்த புதிய முயற்­சிக்கு பூரண ஆத­ரவை தரு­வார்கள் என்று நம்­பு­கின்றோம்.

வினா: போர்க்­குற்றம் தொடர்பில் எடுக்­கப்­பட்டு வரும் முயற்­சிகள்?

பதில்: இலங்­கையில் பல­ வி­ட­யங்கள் தொடர்பில் முன்­னேற்றம் காணப்­ப­டு­வதில் தாம­தங்கள் காணப்­ப­டு­கின்­றன. மக்கள் நில மீட்பு, அர­சி­யல்­கை­திகள் விவ­காரம் போன்ற இன்­னோ­ரன்ன விட­யங்கள் மிக­மிக மந்த கதி­யி­லேயே இடம்பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. நிலை­மா­று­கின்ற நீதி­யென்­கின்ற பாரிய வேலைத்­திட்­டத்தில் காணாமல் போன­வர்­களை கண்டுபிடித்­த­லுக்கு ஒரு பொறி­முறை சட்­டத்தின் மூலம் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. ஆனால் அதுவும் இன்னும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. எனவே தாம­த­மா­கி­றது என்­பது அனை­வ­ருக்கும் தெரிந்த உண்மை. தாம­த­மா­கின்ற கார­ணத்­தினால் அது நடை­பெ­ற­வில்­லை­யென்று கூற ­மு­டி­யாது. வேகம் குறைந்த தன்மை காணப்­ப­டு­கின்­றது.

கேள்வி: சில விட­யங்­களில் தாம­த­மாக இருப்­ப­தற்கு அப்பால் திரு­கோ­ண­மலை 5 மாணவர் படு­கொலை, மூதூர் அ­க் ஷன்பாம் தொண்டர் படு­கொலை போன்­ற­வற்றில் கூட முன்­னேற்றம் ஏன் காணப்­ப­ட­வில்லை?

பதில்: இது விடயம் தொடர்பில் ஒரு சில நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருக்­கி­ன­றன. இது தொடர்பில் எமது நியா­ய­மான ஆட்­சேப­னை­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறோம். ஒன்றும் நடை­பெ­ற­வில்­லை­யென்று கூற­முடியாது. மந்­த­க­தியில் நடந்­தாலும் அது முழு­மை­யாக நடை­பெற வேண்டும்.

எந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­தாலும் இவற்றைத் தட்­டிக்­க­ழிக்க முடி­யாது. பொறுப்­புக்­கூறும் விடயம் தொடர்பில் இலங்கை அர­சாங்கம் பொறுப்­புக்­கூ­றித்தான் ஆக வேண்டும். அதற்­கான அழுத்­தங்­களை நாங்கள் எமது மக்கள் சார்பில் தொடர்ந்து கொடுத்துக் கொண்­டே­யி­ருப்போம்.

கேள்வி: கூட்­ட­மைப்பு பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் இலங்கை அர­சுக்கு அழுத்தம் கொடுக்­க­வில்­லை­யென விமர்­சனம் தமிழ் மக்­களால் முன்­வைக்­கப்­ப­டு­கி­றதே?

பதில்: இவ்­வி­மர்­ச­னத்தில் நியாயம் கிடை­யாது. இது­வரை இலங்­கை­ய­ர­சாங்கம் பொறுப்­புக்­கூறல் விவ­கா­ரத்தில் உரிய பொறி­மு­றையை மேற்­கொள்­வோ­மென ஏற்றுக் கொண்­ட­தற்கு கூட்­ட­மைப்பின் அழுத்­தமும் நட­வ­டிக்­கை­யுந்தான் காரணம். கடந்த வருடம் மனித உரி­மைப்­ பே­ர­வையில் இலங்­கை­ய­ர­சாங்கம் இணங்கி தீர்­மா­னத்தை ஏற்­றுக்­கொண்­டது. எனவே இவைகள் நடை­பெற வேண்டும். இலங்­கை­ய­ரசு நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்­கிற நோக்­கத்­துடன் நாங்கள் அர­சுடன் இணைந்து அவர்­களை வழிக்கு கொண்­டு­வர முயற்­சிக்­கி­ன்றோமே தவிர எவ்­வ­கை­யிலும் அத­னு­டைய தாக்­கத்தைக் குறைப்­ப­தற்­காக நாங்கள் செயற்­ப­ட­மாட்டோம்.

இப்­பொ­ழு­துள்ள அர­சாங்­கத்தின் ஆயுட் காலத்­துக்குள் அனைத்­துப்­ பி­ரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வைக் காண்­போ­மென்ற நம்­பிக்கை எமக்­குண்டு. தற்­பொ­ழுது அர­சியல் சாசன உரு­வாக்கம் நடந்து கொண்­டி­ருக்­கி­றது. நாங்கள் எதிர்­பார்த்­ததை விட துரி­த­மாக நடை­பெ­று­கி­றது. எங்கள் மக்­க­ளு­டைய அபி­லா­ஷை­களை முழு­மை­யாக நிறைவு செய்­யக்­கூ­டிய வகையில் அர­சியல் யாப்பு உரு­வாக்க உதவி செய்வோம்.

கேள்வி: வட மாகாண முதல் அமைச்சர் விக்­கி­னேஸ்­வரன் தங்­க­ளை­ விட தீவி­ர­மாகக் காணப்­படு­கிறார். தமிழ் மக்கள் பேர­வை­யுடன் இணைந்து காணப்­ப­டு­கிறார். இதில் வேறு­பட்ட அர­சியல் நோக்கம் உள்­ளதா?

பதில்: மக்கள் அதி­ருப்தி அடைந்­தி­ருப்­பது நியா­ய­மான விடயம். காரணம் இது­வரை எதுவும் நடை­பெ­ற­வில்லை. தீர்வு வரும் வரும் என்ற நாம் கூறி­னாலும் 70 வருடம் வராத தீர்வு நாளை வரப்­போ­கி­றதா என்று கேட்­பதில் நியா­ய­முள்­ளது. மக்­க­ளு­டைய கருத்­துக்­க­ளையும் அபி­லா­ஷை­க­ளையும் முத­ல­மைச்­சரும் மற்­ற­வரும் பிர­தி­ப­லிப்­பது நியா­ய­மான விட­யமே. ஆனால் நம்­பிக்கை குறை­வாக இருக்­கி­றது என்­ப­தற்­காக கிடைக்­கிற சந்­தர்ப்­பத்தை நாம் பயன்­ப­டுத்­தாமல் இருக்க முடி­யாது. வேகப்­ப­டுத்த வேண்­டு­மென்ற ரீதியில் நாங்கள் செயற்­ப­டு­கிறோம்.

கூட்­ட­மைப்பு என்­பது பல அர­சியல் கட்­சி­க­ளு­டைய கூட்­ட­மைப்பு. நான்கு கட்­சி­க­ளுடன் 5 ஆவது கட்­சி­யையும் இணைக்க வேண்­டு­மென்று நினைப்­பது தவறு. இவ்­வாறு சேர்க்­கப்­பட வேண்­டு­மாயின் எல்லா கட்­சி­களும் ஒன்று இணைந்து தீர்­மா­னிக்க வேண்டும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-09#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.