Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்கின்றன – பெலிசி காயிர்

Featured Replies

இலங்கையில் வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்கின்றன – பெலிசி காயிர்

continue
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

இலங்கையில் வெள்ளைவான் கடத்தல்கள் தொடர்வதாக சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச தன்னார்வ அமைப்பின் துணைத் தலைவர் பெலிசி காயிர் தெரிவித்துள்ளார்.தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் அமைப்பின் கூட்டத் தொடரில் இலங்கை விவகாரங்கள் குறித்து மீளாய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், பெலிசி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

2012ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட சந்தேக நபர்களை காவல்துறையினர் சித்திரவதை செய்த சம்பவங்கள் தொடர்பில் 100க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/7142

  • தொடங்கியவர்

ஐ.நாவின் கேள்வியால் ஆட்டங்கண்டது அரசாங்கம்
 
16-11-2016 09:08 AM
Comments - 0       Views - 78

article_1479266986-UN-Committee.jpgகிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் மட்டக்களப்பிலும் உள்ள சித்திரவதைக் கூடங்களை, இலங்கை அரசாங்கம் விசாரித்ததா என்பது தெளிவில்லாமல் இருப்பதாக, சித்திரவதைக்கெதிரான செயற்குழுவின் 59ஆவது மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த அமர்வில், அச்செயற்குழுவின் தலைவர் ஜென்ஸ் மொட்விக், உப தலைவர் பெலிஸ் காயெர் உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள், தங்களது கருத்துகளை முன்வைத்ததோடு, கேள்விகளையும் முன்வைத்தனர். 

இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புப் பகுதியில், அதன் கொள்ளளவை விட 200 அல்லது 300 சதவீதம் அதிகமானவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டதாக அறிவிக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு உட்பட, பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 10 மடங்களுக்கும் அதிகமான முறைப்பாடுகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குக் கிடைத்துள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. 

சாட்சிகள் பாதுகாப்புச் சட்டமூலத்தில், சுயாதீன பாதுகாப்புப் பிரிவொன்று உருவாக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா எனக் கேள்வியெழுப்பப்பட்டதோடு, 2016ஆம் ஆண்டில், பல மனித உரிமைகள் செயற்பட்டாளர்களுக்கு எதிராக, அச்சுறுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்றன எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. 

பொலிஸாருக்கு எதிரான 170 சித்திரவதை விசாரணைகளில், 24 விசாரணைகள் மாத்திரம் முடிக்கப்பட்டுள்ளமை ஏனெனக் கேள்வியெழுப்பப்பட்டதோடு, அரச படைகளுக்கும் புலனாய்வாளர்களுக்கும் எதிரான பாலியல் துன்புறுத்தல், சித்திரவதைக் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக, முறையான பதில்கள் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. 

பாரிய குற்றங்களை மேற்கொண்டோருக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்படாது என்பதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை என, இலங்கை அரசாங்கத்தால் உறுதிப்படுத்த முடியுமா எனக் கேட்கப்பட்டதோடு, தடுத்து வைக்கப்பட்டோர், தொடர்ச்சியாக மருத்துவ சோதனைகளைக் கோர முடியும் என்ற உரிமை மதிக்கப்படுகிறதா எனவும் கேட்கப்பட்டது. 

போருக்குப் பின்னரான இலங்கையில், பாதுகாப்புப் படையினரால் அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் விடயம் தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டதோடு, உப தலைவரால், கடந்த கால அச்சம் கலந்த நிலைமை மாற்றுவதற்கு, அரசாங்கத்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படுமெனக் கேள்வியெழுப்பப்பட்டது.

- See more at: http://www.tamilmirror.lk/186133/ஐ-ந-வ-ன-க-ள-வ-ய-ல-ஆட-டங-கண-டத-அரச-ங-கம-#sthash.Z6Q8TTcY.dpuf
  • தொடங்கியவர்

இரகசிய முகாம்கள் இருந்தனவா கடத்தல்களும் தொடர்கின்றனவா

p5-7cc1bf085c2d3f31c6fdbaf9acdce11b0d27a09f.jpg

 

ஐ.நா.சித்திரவதைக்கு எதிரான குழு இலங்கைப் பிரதிநிதிகளிடம் கேள்விக்கணை 
(ரொபட் அன்­டனி, லியோ நிரோஷ தர்ஷன்)

சித்­தி­ர­வ­தைக்கு எதி­ரான ஐக்­கிய நாடுகள் குழுவின் பிர­தி­நி­திகள் இலங்கை மனித உரிமை விவ­காரம் தொடர்பில் இலங்கை அர­சாங்­கத்தின் பிர­தி­நி­தி­க­ளிடம் ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நேற்­றைய தினம் சர­மா­ரி­யாக கேள்விக் கணை­களைத் தொடுத்­தனர்.

சித்­தி­ர­வ­தைக்கு எதி­ரான ஐக்­கிய நாடுகள் குழுவின் 59 ஆவது அமர்வு நேற்று ஜெனிவா மனித உரிமை பேர­வையில் ஆரம்­ப­மா­னது. இந்த அமர்வில் இலங்­கையின் விவ­காரம் தொடர்பில் ஆரா­யப்­பட்­ட­போதே இவ்­வாறு இலங்­கையின் சார்பில் கலந்து கொண்ட

சட்­டமா அதிபர் ஜயந்த ஜய­சூ­ரிய, பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன உள்­ளிட்ட இலங்கை அர­சாங்­கத்தின் பிர­தி­நி­தி­க­ளிடம் கேள்­விக்­க­னை­களை பெலிஸ் கேர் தலை­மை­யி­லான குழுவின் பிர­தி­நி­திகள் தொடுத்­தனர்.

குறிப்­பாக இலங்­கையின் யுத்­த­கா­லத்தில் இர­க­சிய முகாம்கள் பேணப்­பட்­டதா என்றும் கேள்வி எழுப்­பிய சித்­தி­ரை­வ­தைக்கு எதி­ரான ஐக்­கிய நாடுகள் குழுவின் பிர­தி­நி­திகள் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையின் நிலைமை எந்த மட்­டத்தில் உள்­ளது என்றும் வின­வினர்.

மேலும் பல்­வேறு சித்­தி­ர­வதைக் குற்­றச்­சாட்­டுக்கள் எமக்கு கிடைக்கப் பெற்­றுள்­ளன. இது தொடர்பில் அரா­சங்கம் மேற்­கொண்ட நட­வ­டிக்­கைகள் என்ன எனவும் சித்­தி­ரை­வ­தைக்கு எதி­ரான ஐக்­கிய நாடுகள் குழுவின் பிர­தி­நி­தி­க­ளிடம் கேள்வி எழுப்­பினர்.

இர­க­சிய முகாம்கள் யுத்­த­கா­லத்தில் இலங்­கையில் இருந்­தாக எமக்கு அறிக்­கை­யி­டப்­பட்­டுள்­ளது. அவ்­வாறு இர­க­சிய முகாம்கள் இலங்­கையில் இருந்­தி­ருப்பின் அது எவ்­வாறு நடந்­தது என்று விளக்க முடி­யுமா? எனவும் ஐ.நா. பிர­தி­நி­திகள் கேள்வி எழுப்­பினர்.

இதே­வேளை பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளுக்கு உரிய வச­திகள் செய்­து­கொ­டுக்­கப்­பட்­டுள்­ள­னவா? அவர்கள் தொடர்பில் சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளதா? பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­கி­வி­டு­மாறு நாம் அர­சாங்­கத்தை கோரி­வ­ரு­கின்றோம். எனினும் இது தொடர்பில் இது­வரை நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை. இது­தொ­டர்பில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டை விளக்­க­மு­டி­யுமா எனவும் இலங்கை அர­சாங்­கத்தின் பிர­தி­நி­தி­க­ளிடம் சித்­தி­ரை­வ­தைக்கு எதி­ரான ஐக்­கிய நாடுகள் குழுவின் பிர­தி­நி­திகள் வின­வினர்.

அது­மட்­டு­மன்றி கடந்த 2015 மற்றும் 2016 ஆண்டில் வெள்­ளைவேன் கடத்தல் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ள­தாக பதி­வா­கி­யுள்­ளது. இவ்­வாறு கடத்­தப்­பட்­ட­வர்கள் சித்­தி­ர­வ­தைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும், குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. இது தொடர்பில் அர­சாங்கம் என்ன நட­வ­டிக்கை என்ன என்­பதை விளக்க முடி­யுமா எனவும் கேள்வி எழுப்­பப்­பட்­டது.

இது இவ்­வா­றி­ருக்க இலங்கை தொடர்­பான விசா­ரணை மேற்­கொண்ட ஐ.நா. மனித உரிமை அலு­வ­ல­கத்தின் விசா­ரணை அறிக்­கை­யா­னது யுத்­த­கா­லத்தில் அரச படை­யினர் பாலியல் வல்­லு­றவு செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டுள்­ள­தாக குற்­றம்­சாட்­டி­யுள்­ளது. இது தொடர்பில் எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கைகள் என்ன இவை தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­பட்­டதா? என்றும் ஐ.நா. பிர­தி­நி­திகள் குழு வின­வி­யது.

அத்­துடன் பொலிஸ் தடுப்­பின்­போது சந்­தே­க­ந­பர்கள் உயி­ரி­ழந்த சம்­ப­வங்கள் குறித்து குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. இது தொடர்பில் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டதா? இந்த விசா­ர­ணை­களின் முன்­னேற்­றங்கள் எவ்­வாறு உள்­ளன. எனவும் இந்த சந்­தர்ப்­பத்தில் கேள்வி எழுப்­பப்­பட்­டது.

மேலும் எமக்கு அறிக்­கை­யி­டப்­பட்­டுள்­ள­வ­கையில் தற்­போது இடம்­பெ­யர்ந்த நிலையில் மிகவும் குறைந்­த­ள­வி­லான எண்­ணிக்­கை­யா­னோரே மீள்­கு­டி­யேற்­றப்­ப­டாமல் இருப்­ப­தாக தெரி­கின்­றது. இது தொடர்­பான நிலை­மையை விளக்க முடி­யுமா? என்றும் தடுப்பு முகாம்­களில் சித்­தி­ர­வ­தைகள் இடம்­பெற்­றுள்­ள­தாக கூறப்­படும் சித்­தி­ர­வதை குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து அர­சாங்கம் என்ன நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ளது எனவும் சித்­தி­ரை­வ­தைக்கு எதி­ரான ஐக்­கிய நாடுகள் குழுவின் பிர­தி­நி­தி­க­ளிடம் கேள்வி எழுப்­பினர்.

இதே­வேளை இலங்கை அர­சாங்கம் ஐ.நா. மனித உரி­மை­பே­ர­வையில் கடந்த வருடம் இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யது. அந்த பிரே­ர­ணையின் பிர­காரம் பொறுப்­புக்­கூறல் விசா­ரணை பொறி­முறை தயா­ரிக்­கப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. அந்தப் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையின் முன்­னேற்றம் எவ்­வாறு உள்­ளது. அந்தப் பொறி­மு­றையை எப்­போது முடிப்­பீர்கள் என்று கூற முடி­யுமா? என்றும் கேள்வி எழுப்­பப்­பட்­டது.

உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­குழு ஒன்று அமைக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் கூறப்­பட்­டுள்­ளது. அதன் தன்மை குறித்தும் காணா­மல்­போனார் தொடர்பில் ஆரா­ய­வுள்ள நிரந்­தர அலு­வ­ல­கத்தின் நிலைமை குறித்தும் விளக்க முடி­யுமா எனவும் கேள்வி எழுப்­பப்­பட்­டது. இது இவ்­வா­றி­ருக்க திரு­கோ­ண­ம­லையில் ஐந்து மாண­வர்கள் கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வத்­திலும் மூதூரில் 17 அரச சார்­பற்ற நிறு­வன ஊழி­யர்கள் கொல்­லப்­பட்ட சம்­ப­வத்­திலும் விசா­ரணை எவ்­வாறு உள்­ளது. இந்த சம்­ப­வங்கள் நடை­பெற்று 10 வரு­டங்கள் கடந்­து­விட்­டன. ஏன் தாம­த­மான நிலைமை காணப்­ப­டு­கின்­றது என்றும் சித்­தி­ரை­வ­தைக்கு எதி­ரான ஐக்­கிய நாடுகள் குழுவின் பிர­தி­நி­திகள் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளிடம் கேள்வி எழுப்பினர். அத்துடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நட்டஈடுவழங்கும் செயற்பாடு எந்த மட்டத்தில் உள்ளது என்றும் கேள்விகள் சரமாரியாக சட்டமா அதிபர் உள்ளிட்ட இலங்கையின் பிரதிநிதிகளிடம் எழுப்பப்பட்டன.

இந்த குழுவின் கூட்டத் தொடர் இன்றைய தினமும் தொடரவுள்ள நிலையில் நேற்றைய தினம் முழுவதும் இவ்வாறு கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. முன்னதாக சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய சித்திரவதைகள் குற்றச்சாட்டுக்கள்தொடர்பான இலங்கையின் நிலைப்பாட்டை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-16#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.