Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கபடத்தனமாகச் செயற்பட்ட புலிகள் – ‘மென்வலு மொழி’ பேசும் சத்தியமூர்த்தி

Featured Replies

 

கபடத்தனமாகச் செயற்பட்ட புலிகள் - 'மென்வலு  மொழி' பேசும் சத்தியமூர்த்தி

போராட்டம் என்பது சுயவிருப்பின்றி உசுப்பேத்தல் மற்றும் சிலரது தூண்டுதலின் பேரால் நடந்ததாகவும், விடுதலைப் புலிகளின் கபடத்தனமான செயற்பாட்டால் சிக்கவைக்கப்பட்ட ஒருவர்தான் சதீஸ் என்று யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திரு சத்தியமூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதி விவேகானதனூர் சதீசின் விடியலைத் தேடும் இரவுகள் நூல் வெளியீட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய மருத்துவர் சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்தாவது,

போர் என்பது ஒருபோதும் நீதியாக நடைபெறாது. போரில் ஈடுபடுகிற தரப்பில் யார் முந்திக்கொள்வது என்றுதான் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். இருதரப்பும் போரைச் செய்தபோது நாங்கள் உண்மையிலே சுகாதார ஊழியர்கள் கடுமையான ஒரு சவாலை எதிர்நோக்கினோம். இதில் எங்கள் சாரதிகள் மிகவும் நெருக்கடிகளைச் சந்தித்தனர். கபடத்தனமாகப் பாவிக்கப்பட்டார்கள். போரில் ஈடுபட்ட இருதரப்பும் தங்கள் தேவைகளுக்காக அவர்களை ஒப்புதல் இல்லாமல் தினசரி அவர்களை வதைத்து அவர்களை தீயவழியில் செல்வதற்கு அல்லது கபடத்தனமாக அவர்களைப் பாவித்தும் உள்ளார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. நான் கூடப் போய்வருகிறபோது கூட சில பொருட்களைக் கொண்டு வருமாறு கேட்பார்கள். இவ்வாறு சம்பவங்கள் கபடத்தனமாக நடைபெற்றபோது அதில் சிக்கிக்கொண்ட ஒருவர் தான் இந்தச் சதீஸ்.

இருதரப்பும் போரை நியாயமாகச் செய்யவில்லை. உண்மையிலேயே போரினால் பாதிக்கப்பட்டவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். இங்கே சுமந்திரன் அவர்கள் வந்திருக்கிறார். அவரை இங்கே பார்த்தபோது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. உண்மையை கதைக்க வேண்டும் விஞ்ஞானபூர்வமாகக் கதைக்க வேண்டும். இலங்கை ஒரு சின்னத் தீவு. இங்கே சிங்களவர் தமிழர் முஸ்லிம்கள் பறங்கியர் எனப் பல இனங்கள் இருக்கின்றன. உலகத்தில் வளர்ந்த நாடுகள் எவ்வாறு தமக்கிடையிலான உறவுகளையும் இனங்கள் எவ்வாறு தனித்துவங்களைக் காப்பாற்றிக்கொள்கின்றன என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும்.

இவற்றைவிடுத்து 30வருட காலமாக நாங்கள் கிடைக்காத ஒன்றுக்காகச் சண்டைபிடித்து பலரை இழந்து நிற்கும்போது நாம் உசுப்பேத்திக் கதைப்பது அல்லது உண்மையை மறைத்துக் கதைப்பது மிகவும் குற்றமான செயல். போரில் ஈடுபட்ட இளைஞர்கள் சுயவிருப்பின் பேரில் போராடவில்லை என்பதை அனுபவரீதியாக உணர்ந்துகொண்டேன். சிலருடைய தூண்டுதலின் பேரில்தான் அவர்கள் போராடினார்கள்.

நீங்கள் செய்யவேண்டியது சனசமூக நிலையத்தை ஒழுங்காக நடத்துவது அல்லது கஸ்டப்படுவர்களுக்கு உதவி செய்வதுதான் அதை விடுத்து கிடைக்காத ஒன்றுக்காக ஆசைகாட்டித் தூண்டக் கூடாது. உசுப்பேத்திக் கதைக்கக் கூடாது. இது உண்மையிலேயே பாரிய பிரச்சினைகளை சமூகத்தில் உருவாக்கும். மீண்டும் தோற்றவர்களையும் குற்றவாளிகளையும் உருவாக்கிவிடும். இந்த உலகத்தை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். உலக அரசியலை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். உலகத்தில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமைகள் எப்படி இருக்கின்றது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். பூகோள அரசியலை விளங்கிக்கொள்ளவேண்டும். என்றார்.

http://thuliyam.com/?p=48233

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த முப்பது வருடகாலமாக நடைபெற்ற போர் மற்றும் அதனால் ஏற்ப்பட்ட சூழ்நிலைகள் தராத எந்தத் தீர்வையும் இனிமேல் எவராலும் பெற்றுத்தரமுடியாது. இஅதற்கான சூழ்நிலைகள் எமைவிட்டு அகன்றுவிட்டன என்பதே உண்மை. சம்பந்த சுமந்திரன் மாவை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் டக்ளஸ் விஜயகலா ஆகிய இன்னபிற அரசியல்வாதிகளாலோ அன்றேல் இனிமேல் புதிதாகப் பிறந்துவருகிற அரசியல் மற்றும் போர்க்குணமுள்ளவர்கலோ தமிழர்களுக்கான முழுமையான தீர்வையோ அன்றேல் ஒப்புக்குச் சப்பாணியான தீர்வையோ பெற்றுத்தரமுடியாது.

தவிர,

இந்தத் தருணத்தில் ஒன்றைச்சொல்லவிரும்புகிறேன்,

ஐ பி சி வாணொலியில் கடந்தகாலங்களில் புலிகளுக்குக் காசு சேத்தவர்கள் யார் எனும் போர்வையில் ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதாகக் கேள்விப்பட்டேன், நல்லம் இது காலத்தின் தேவை.

அனைவருக்கும் சந்தர்ப்பம் இருந்தால் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும்.

நீங்கள் யாரிடம் காசுகொடுத்தீர்கள் எவ்வளவு கொடுத்தீர்கள் என்பதுபற்றி அறியத்தரவும் இதன்மூலம் புலிகளின்பேரில் காசுசேர்த்தவர்கள் சேர்த்தகாசினை உரிய இடத்தில் கொண்டுசேர்த்தார்களா என்பதும்,

யாரிடம் இவர்கள் கொடுத்தார்கள் என்பதும், உள்ளூரில் புலிகளது ஏஜண்டுகளாகச் செயற்பட்டவர்கள் சேர்த்தபணத்தை புலிகளது பிராந்திய நிதிப்பொறுப்பாளர்களுக்குக் கொடுத்தார்களா? கொடுத்திருந்தால் பெற்றுக்கொண்டவர்கள் யார் அப்பணம் என்னவானது? யாரது கைகளுக்குப்போனது. இவைபோன்ற கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்.

இறுதி யத்தத்தின்போது, நானும் சூசையரது உரைக்காட்சியைப் பார்த்து ஆயிரம் யூரோக்களை கொடுத்தேன் கொடுத்து இரண்டு நாளில் எல்லாமே முடிந்துபோய்விட்டது எனச் செய்திவந்தது. காசுக்கு என்ன நடந்தது என இன்னமும் தெரியாது. கிட்டத்தட்ட எல்லாமாக இருபத்திஐந்தாயிரம் யூரோக்கள் எனக் கேள்விப்பட்டேன்.

எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகவேண்டும். 
யார் காசை ஆட்டையைப்போடதென.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.