Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியூசிலாந்து - பாகிஸ்தான் முதல் டெஸ்ட் செய்திகள்

Featured Replies

நியூசிலாந்து - பாகிஸ்தான் முதல் டெஸ்ட் நாளை
 
 

article_1479306150-InNZ_16112016_GPI.jpg

நியூசிலாந்து அணிக்கும் பாகிஸ்தான் அணிக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி, நாளை ஆரம்பிக்கவுள்ளது. இப்போட்டி, இலங்கை நேரப்படி அதிகாலை 3 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது. பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட கிறைஸ்ட்சேர்ச்சில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக அமையவுள்ளது.

பலமான அணியாகக் கருதப்பட்ட நியூசிலாந்து அணி, இந்தியாவில் வைத்து 3 போட்டிகள் கொண்ட தொடரை, 0-3 என்ற கணக்கில் இழந்திருந்தது. மறுபக்கமாக பாகிஸ்தான் அணி, 2014ஆம் ஆண்டு ஓகஸ்டுக்குப் பின்பு, டெஸ்ட் தொடரொன்றில் தோல்வியடையாத தன்னம்பிக்கையுடன் காணப்படுகிறது.

வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமான ஆடுகளங்கள் கிடைக்கப்பெறும் நியூசிலாந்து ஆடுகளங்களில், இரு அணிகளிலும் காணப்படும் திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள், கடுமையான போட்டியை வழங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியத் தொடரில் பங்குபற்றாத நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி, இப்போட்டியில் பங்குபற்றுகின்றமை, நியூசிலாந்துக்குப் பலத்தை வழங்கும்.

எதிர்பார்க்கப்படும அணிகள்:

நியூசிலாந்து: ஜீட் றவல், டொம் லேதம், கேன் வில்லியம்ஸன், றொஸ் டெய்லர், ஹென்றி நிக்கொல்ஸ், ஜேம்ஸ் நீஷம், பி.ஜே. வற்லிங், டொட் அஸ்டில், டிம் சௌதி, நீல் வக்னர், ட்ரென்ட் போல்ட்.

பாகிஸ்தான்: சமி அஸ்லாம், அஸார் அலி, அசத் ஷபீக், யுனிஸ் கான், மிஸ்பா உல் ஹக், பாபர் அஸாம், சப்ராஸ் அஹமட், வஹாப் றியாஸ், யாசீர் ஷா, மொஹமட் ஆமிர், சொஹைல் கான்.

- See more at: http://www.tamilmirror.lk/186201#sthash.ruAuOOT2.dpuf
  • தொடங்கியவர்

பாகிஸ்தான் - நியூசிலாந்து டெஸ்ட்: முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து

 

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

 
 
பாகிஸ்தான் - நியூசிலாந்து டெஸ்ட்: முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து
 
கிறிஸ்ட்சர்ச்:

மிஸ்பா-உல்-ஹக் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.

இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று தொடங்கியது. ஆனால் மழையால் போட்டி பாதிக்கப்பட்டது. ‘டாஸ்’ கூட போட முடியாத அளவுக்கு பலத்த மழை பெய்தது. இதனால் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதனால் இந்த டெஸ்ட் போட்டி 4 நாட்களே நடைபெறும் எஞ்சிய நாட்கள் ஆட்டத்தில் 98 ஓவர்கள் வரை வீசப்படும். இயல்பாக ஒருநாளில் 90 ஓவர் வீசப்படும்.

கிறிஸ்ட்சர்ச் நகரில் சமீபத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தான் வீரர்கள் பீதி அடைந்தனர். இதனால் இந்த டெஸ்ட் போட்டிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கருதப்பட்டது. ஆனால் திட்டமிட்டப்படி போட்டியை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் நடத்தியது. ஆனால் மழை காரணமாகத் தான் போட்டிக்கு பாதிப்பு ஏற்பட்டது.

http://www.maalaimalar.com/News/Sports/2016/11/17104029/1051276/Pakistan-vs-New-zealand-first-day-match-cancel-for.vpf

  • தொடங்கியவர்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் 133 ரன்னில் சுருண்டது

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 133 ரன்னில் சுருண்டது.

 
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் 133 ரன்னில் சுருண்டது
 

கிறிஸ்ட்சர்ச்:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று கிறிஸ்ட்சர்ச் நகரில் தொடங்க இருந்தது. ஆனால் பலத்த மழை பெய்ததால் டாஸ் கூட போடாமல் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தனர்.

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பாகிஸ்தான் விக்கெட்டுகளை இழந்து திணறியது.

அந்த அணி 55.5 ஓவரில் 133 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் மிஸ்பர் - உல்-ஹக் 31 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் கிராண்ட்ஹோமே 6 விக்கெட் வீழ்த்தினார். டிம் சவுத்தி, போல்ட் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

அடுத்த முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்துள்ளனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/11/18112145/1051517/Pakistan-vs-New-Zealand-1st-Test-Pak-133-all-out.vpf

பாக். கேப்டனாக 50-வது போட்டி: கேக் வெட்டி கொண்டாடிய மிஸ்பா

 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக 50-வது போட்டியில் பங்கேற்றதை கேக் வெட்டி கொண்டாடினார் மிஸ்பா உல் ஹக்.

 
 
பாக். கேப்டனாக 50-வது போட்டி: கேக் வெட்டி கொண்டாடிய மிஸ்பா
 
பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருப்பவர் மிஸ்பா உல் ஹக். 42 வயதாகும் இவர் 68 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச் நகரில் நேற்று தொடங்குவதாக இருந்தது.

76C43346-F5B8-4D17-8F0A-C6AD94C38EBC_L_s

அங்கு மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இது மிஸ்பாவிற்கு 69 டெஸ்ட் ஆகும். அதனுடன் இந்த டெஸ்ட் மூலம் அவர் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக 50 டெஸ்டில் பணியாற்றியுள்ளார். இந்த சந்தோசத்தை மிஸ்பா உல் ஹக் சக வீரர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

2B2DCC97-ABDD-4F09-8D8B-B050D9393A44_L_s

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 133 ரன்னில் சுருண்டது. மிஸ்பா உல் ஹக் அதிகபட்சமாக 31 ரன்கள் சேர்த்தார்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/11/18124529/1051549/Pakistan-Team-celebrating-Misbah-ul-Haq-50th-Test.vpf

  • தொடங்கியவர்

பாகிஸ்தான் அபார பந்துவீச்சு: நியூசிலாந்து அணி 200 ரன்னில் ‘ஆல் அவுட்’

 

நியூசிலாந்து அணி 200 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. இது பாகிஸ்தான் அணியின் ஸ்கோரை விட 67 ரன் கூடுதலாகும்.

 
 
பாகிஸ்தான் அபார பந்துவீச்சு: நியூசிலாந்து அணி 200 ரன்னில் ‘ஆல் அவுட்’
 

கிறிஸ்ட்சர்ச்:

பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடை பெற்று வருகிறது.

முதல்நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 2-வது நாளில் பாகிஸ்தான் அணி 133 ரன்னில் சுருண்டது. கேப்டன் மிஸ்பா அதிக பட்சமாக 31 ரன் எடுத்தார். கோலின் கிராண்ட் ஹோம் 6 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 104 ரன் எடுத்து இருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது.

தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 59.5 ஓவர்களில் 200 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. இது பாகிஸ்தான் அணியின் ஸ்கோரை விட 67 ரன் கூடுதலாகும்.

இந்திய வம்சாவளி வீரர் ஜீத்ராவல் அதிக பட்சமாக 55 ரன்னும், நிக்கோலஸ் 30 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ரகாத் அலி 4 விக்கெட்டும், முகமது அமீர், சோகைல்கான் தலா 3 விக்கெட்டும் எடுத்தனர்.

67 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை விளையாடியது. 64 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 3 விக்கெட்டை இழந்தது.

சமி அஸ்லம் 7 ரன்னில் கிராண்ட் ஹோம் பந்திலும், பாபர் ஆசாம் (29 ரன்), யூனுஸ்கான் (1 ரன்) ஆகியோர் வாக்னர் பந்திலும் ஆட்டம் இழந்தனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/11/19103411/1051728/Pakistan-amazing-bowling-New-Zealand-Run-200-on-team.vpf

  • தொடங்கியவர்

நியூஸிலாந்துக்கு எதிராக தோல்வியின் பிடியில் பாகிஸ்தான்

 

 
டிரெண்ட் போல்ட் அப்பீல் செய்கிறார். | நியூஸிலாந்து-பாகிஸ்தான் முதல் டெஸ்ட். | கிறைஸ்ட் சர்ச். | படம்.| ஏஎப்பி
டிரெண்ட் போல்ட் அப்பீல் செய்கிறார். | நியூஸிலாந்து-பாகிஸ்தான் முதல் டெஸ்ட். | கிறைஸ்ட் சர்ச். | படம்.| ஏஎப்பி
 

கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று பாகிஸ்தான் தன் 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் நியூஸிலாந்தைக் காட்டிலும் 62 ரன்களே முன்னிலை பெற்றுள்ளது பாகிஸ்தான்.

முன்னதாக பாகிஸ்தான் அருமையான வேகப்பந்து வீச்சின் மூலம் 104/3 என்று தொடங்கிய நியூஸிலாந்தை 200 ரன்களுக்கு அதன் முதல் இன்னிங்ஸில் சுருட்டியது.

பிறகு 2-வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் கடைசி செஷனில் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. டிரெண்ட் போல்ட் 15 ஓவர்களில் 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்த நீல் வாக்னர் 21 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பாகிஸ்தான் அணியில் கடைசியில் சில அதிரடி ஷாட்களை ஆடிய சொஹைல் கான் 22 ரன்களுடனும், ஆசாத் ஷபீக் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இன்று 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தொடங்கிய நியூஸிலாந்து தங்களது கடைசி 7 விக்கெட்டுகளை 96 ரன்களுக்கு இழந்தது.

நியூஸிலாந்து பேட்ஸ்மென்கள் ஆடிய சில ஷாட்களும் கோளாறுதான். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பசுந்தரை ஆடுகளத்தில் பொறுமை காக்க வேண்டிய நியூஸிலாந்து பேட்ஸ்மென்கள் மழை அச்சுறுத்தல் காரணமாக விரைவு ரன்களை விரும்பினர்.

நேற்று நாட் அவுட்டாக இருந்த ஜீத் ராவல் 1 ரன் மட்டுமே சேர்த்து 55 ரன்களிலும், நிகோல்ஸ் 30 ரன்களிலும் முதல் 4 ஒவர்களில் ஆமிர், சொஹைல் கானிடம் வெளியேறினர்.

அறிமுக ஆல் ரவுண்டர் டி கிராண்ட்ஹோம் பந்து வீச்சில் 6 விக்கெட்டுகள் எடுத்து சாதனை புரிந்ததோடு, பேட்டிங்கில் இறங்கி 29 ரன்களை 6 பவுண்டரிகளுடன் விரைவில் எடுத்தார். சவுதீ (22), வாக்னர் (21) ஆகியோரும் விரைவில் ரன் எடுத்தனர். நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸ் 55.5 ஓவர்களில் 200 ரன்களுக்கு முடிந்தது.

பாகிஸ்தான் தரப்பில் ரஹத் அலி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 62 ரன்களையும், சொஹைல் கான் மற்றும் ஆமிர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

67 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் சமி அஸ்லம் 7 ரன்களில் கிராண்ட்ஹோம் பந்தில் வெளியேறினார். இவரும் அசார் அலியும் கடும் தடுமாற்றத்துடன் நின்று 18 ஓவர்களில் 21 ரன்களையே சேர்த்தனர். அசார் அலி (31), பாபர் ஆசம் (29) இணைந்து மேலும் கட்டை போட்டு 32.5 ஓவர்களில் வேதனையான 37 ரன்களைச் சேர்த்தனர். அப்போது நீல் வாக்னர் பாபர் ஆசமை வீழ்த்தினார். யூனிஸ் கான் கிரீன் டாப் விக்கெட்டில் எல்லாம் சோபிக்கக் கூடியவர் அல்ல என்பதால் முதல் இன்னிங்ஸ் 2 ரன்களுடன் 2-வது இன்னிங்சில் 1 ரன்னில் வாக்னரிடம் வீழ்ந்தார்.

மிஸ்பா உல் ஹக் (13), அசார் அலி இணைந்து ஸ்கோரை 93 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். மிஸ்பா அப்போது சவுதியிடம் வெளியேற, சர்பராஸ் அகமது (2), மொகமது ஆமிர் (6) ஆகியோரை போல்ட் வீழ்த்தினார், இதில் சர்பராஸ் பவுல்டு ஆனார். அசார் அலியையும் போல்ட் பவுல்டு செய்தார்.

கடைசியில் இறங்கி சொஹைல் கான் 3 பவுண்டரிகளையும் ஒரு அருமையான சிக்சரையும அடித்து 18 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். ஆசாத் ஷபிக் 6 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். பாகிஸ்தான் 129/7. என்று 62 ரன்களே முன்னிலை பெற்றுள்ளதால் தோல்வியின் பிடியில் சிக்கியுள்ளது.

http://tamil.thehindu.com/sports/நியூஸிலாந்துக்கு-எதிராக-தோல்வியின்-பிடியில்-பாகிஸ்தான்/article9365072.ece?homepage=true

  • தொடங்கியவர்

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து வெற்றி

 

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 
 
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து வெற்றி
 
கிறிஸ்ட்சர்ச்:

நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்தது. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 133 ரன்னில் சுருண்டது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 200 ரன்னில் ஆல் அவுட் ஆனது. 67 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்து இருந்தது.

இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடியது. அந்த அணி 78.4 ஓவர்களில் 171 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 105 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பாகிஸ்தான் தரப்பில் சோகைல்கான் அதிகபட்சமாக 40 ரன் எடுத்தார். வாக்னர், போல்ட் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

105 ரன் எடுத்ததால் வெற்றி என்ற நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை விளையாடியது. தொடக்க வீரர் வாதம் 9 ரன்னில் ஆட்டம் இழந்தார். 2-வது விக்கெட்டான ராவல்- வில்லியம்சன் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தது.

நியூசிலாந்து அணி 31.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 108 ரன் எடுத்தது. 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வில்லியம்சன் 66 ரன்னும், ராவல் 36 ரன்னும் (அவுட் இல்லை) எடுத்தனர்.

இந்த வெற்றி மூலம் 2 போட்டி கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் வருகிற 25-ந்தேதி ஹோமில்டனில் தொடங்குகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2016/11/20112927/1051871/New-Zealand-won-by-8-wickets-against-pakistan-in-1st.vpf

  • தொடங்கியவர்

நியூசி. - பாக். டெஸ்ட்: முதல் நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி மழையினால் பாதிப்பு

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி மழையினால் பாதிக்கப்பட்டது.

 
 
 
நியூசி. - பாக். டெஸ்ட்: முதல் நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி மழையினால் பாதிப்பு
 
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி ஹாமில்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் ராவல், லாதம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை மொகமது ஆமீர் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் லாதம் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.

அடுத்து கேப்டன் வில்லியம்சன் களம் இறங்கினார். இவர் 13 ரன்கள் எடுத்த நிலையில் சோஹைல் கான் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

நியூசிலாந்து அணி 39 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு ராவல் உடன் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். நியூசிலாந்து அணி 21 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது.
 
7B58B4BE-C41C-4E04-AE72-70054278DB78_L_s

இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர். ஆகவே 21 ஓவர்களுடன் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ராவல் 35 ரன்னுடனும், டெய்லர் 29 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்

http://www.maalaimalar.com/News/Sports/2016/11/25164229/1052721/Pakistan-strike-twice-on-wet-first-day.vpf

  • தொடங்கியவர்

நியூசிலாந்திற்கு எதிரான 2-வது டெஸ்ட்: பாகிஸ்தான் 76 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்து திணறல்

 

நியூசிலாந்திற்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 76 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது.

 
 
நியூசிலாந்திற்கு எதிரான 2-வது டெஸ்ட்: பாகிஸ்தான் 76 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்து திணறல்
 
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 39 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு ராவல் உடன் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். நியூசிலாந்து அணி 21 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

மழை தொடர்ந்து பெய்ததால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர். ஆகவே 21 ஓவர்களுடன் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ராவல் 35 ரன்னுடனும், டெய்லர் 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ராவல், டெய்லர் தொடர்ந்து ஆட்டத்தை தொடங்கினார்கள். ராவல் அரைசதம் அடித்து 55 ரன்னில் ஆட்டம் இழந்தார். டெய்லர் 37 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

அதன்பின் வந்த கிராண்ட்ஹோமே 37 ரன்னும், வாட்லிங் அவுட்டாகாமல் 49 ரன்களும் எடுக்க நியூசிலாந்து அணி முதல் இன்னி்ங்சில் 271 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி சார்பில் சோஹைல் கான் 4 விக்கெட்டும், இம்ரான் கான் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
 
6C81FD0A-67DA-4950-8B08-A3F40EB1FBD2_L_s

பின்னர் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நியூசிலாந்து அணியின் சவுத்தி மற்றும் வாக்னர் ஆகியோரின் வேகத்தில் பாகிஸ்தான் வீரர்கள் நிலைகுலைந்தனர். அந்த அணியின் சமி அஸ்லாம் (5), அசார் அலி (1), யூனிஸ்கான் (2) அடுத்தடுத்து சவுத்தி பந்தில் ஆட்டம் இழந்தனர். ஆசாத் ஷபிக் (23), மொகமது ரிஸ்வான் (0) வாக்னர் பந்தில் ஆட்டம் இழந்தனர்.


பாபர் ஆசம் அவுட்டாகாமல் 34 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் 2-வது நாள் ஆட்டம முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. பாபர் ஆசம் 34 ரன்னுடனும், சர்பிராஸ் அகமது 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/11/26152143/1052868/NZvPAK-2nd-test-pakistan-loss-5-wickets.vpf

  • தொடங்கியவர்

ஹேமில்டன் டெஸ்ட்: பாகிஸ்தான் அணி 216 ரன்னில் ஆல்அவுட்

 

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 216 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

 
ஹேமில்டன் டெஸ்ட்: பாகிஸ்தான் அணி 216 ரன்னில் ஆல்அவுட்
 
ஹோமில்டன்:

நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹேமில்டனில் நடைபெற்று வருகிறது.

நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 271 ரன்னில் ஆல் அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 76 ரன் எடுத்திருந்தது.

இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் 67 ஓவர்களில் 216 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இது நியூசிலாந்து அணியின் ஸ்கோரை விட 55 ரன் குறைவாகும். 3-வது வீரராக ஆடிய பாபர் ஆசம் 90 ரன் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். சவுத்தி 80 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். வாக்னருக்கு 3 விக்கெட் கிடைத்தது.

55 ரன்கள் முன்னிலையில் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சை விளையாடியது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அதோடு இன்றைய ஆட்டம் முடிந்தது.
 

http://www.maalaimalar.com/News/Sports/2016/11/27124054/1052956/Pakistan-216-runs-against-New-Zealand-in-2nd-test.vpf

  • தொடங்கியவர்

ஹாமில்டன் டெஸ்ட்: ராஸ் டெய்லர் சதம்: பாகிஸ்தானுக்கு 369 ரன்கள் வெற்றி இலக்கு

 

 
ராஸ் டெய்லர் மற்றும் பாகிஸ்தான் வீரர்கள். | படம். ஏஎப்பி.
ராஸ் டெய்லர் மற்றும் பாகிஸ்தான் வீரர்கள். | படம். ஏஎப்பி.
 

ஹாமில்டனில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 369 ரன்களை இலக்காக நியூஸிலாந்து அணி நிர்ணயித்தது. முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 271 ரன்களும், பாகிஸ்தான் 216 ரன்களும் எடுத்தன.

55 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி திங்களன்று நடைபெற்ற 4-வது நாள் ஆட்டத்தில் 85.3 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.

132 பந்துகளில், 16 பவுண்டரிகளுடன் 16-வது சதம் விளாசிய ராஸ் டெய்லர் 102, வாட்லிங் 80 ரன்களுடனும் நியூஸிலாந்து வலுவான நிலைக்குச் சென்றது.. ராஸ் டெய்லர் கடந்த 11 இன்னிங்ஸ்களில் அரை சதத்தை கூட எட்டாத நிலையில் தற்போது சதம் அடித்து அசத்தியுள்ளார். மிட் ஆன், மிட் ஆஃபில் மொத்தம் 3 ஷாட்களையே ஆடினார். இதனால் பாகிஸ்தான் அவருக்கு வீசிய லைன் மற்றும் லெந்த் டெய்லருக்கு வசதியாக இருந்தது என்றே கூற வேண்டும். பிட்சும் பேட்டிங் சாதக ஆட்டக்களமாக தற்போது எளிதடைந்துள்ளது. முதல் 2 நாட்கள் இருந்த ஸ்விங் இன்று இல்லை.

லேதம், வில்லியன்சன் (42) கூட்டணி 96 ரன்களை 2-வது விக்கெட்டுக்காகச் சேர்த்த பிறகு டெய்லர் களமிறங்கினார். 82 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்ட டெய்லர் அதன் பிறகு 52 பந்துகளில் மேலும் 9 பவுண்டரிகளுடன் 102 நாட் அவுட் என்று அதிரடி காட்டினார். கட், கிளான்ஸ் என்று அவர் விக்கெட்டின் இருபுறமும் சாத்தினார்.

இன்று காலை பாகிஸ்தான் 4 மெய்டன்களுடன் தொடங்கியது, தொடக்க வீரர் ஜீத் ராவலை வீழ்த்தியது, ஆனால் அதன் பிறகு நியூஸிலாந்து ரன்களை கட்டுப்படுத்த தவறியது பாகிஸ்தான் பந்து வீச்சு. கொலின் டி கிராண்ட்ஹோம் 21 பந்துகளில் 32 ரன்கள் விளாசினார். இதில் 6 பவுண்டரிகள் அடங்கும். கேன் வில்லியன்சன் 42 ரன்களிலும், நிகோல்ஸ் 26 ரன்களிலும் இம்ரானிடம் வீழ்ந்தனர். கடைசியில் வாட்லிங் 15 ரன்களுடனும் டெய்லர் 102 ரன்களுடனும் இருந்த போது 313/5 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது நியூஸிலாந்து.

369 ரன்கள் வெற்றி இலக்குடன் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் 3 ஓவர்களில் 1 ரன் எடுத்துள்ளது. நாளை 5-ம் நாள் பாகிஸ்தான் வெற்றிக்கு ஆடுமா அல்லது டிரா செய்யுமா? அல்லது நியூசிலாந்து தொடரை வெல்லுமா என்பதைப் பார்க்க வேண்டும்.

http://tamil.thehindu.com/sports/ஹாமில்டன்-டெஸ்ட்-ராஸ்-டெய்லர்-சதம்-பாகிஸ்தானுக்கு-369-ரன்கள்-வெற்றி-இலக்கு/article9395182.ece?homepage=true

  • தொடங்கியவர்
பாகிஸ்தானுடனான இரண்டாவது டெஸ்ட்டிலும் நியூஸிலாந்து வெற்றி
2016-11-29 11:01:32

நியூஸிலாந்தின் ஹமில்டன் நகரில் நடைபெற்ற பாகிஸ்தானுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி  138 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

 

20960new-zealand-vs-pakistan-test-cricke


இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 2:0 விகிதத்தில் நியூஸிலாந்து வென்றுள்ளது.


2 ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கு இரண்டாவது இன்னிங்ஸில் 368 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணியிக்கப்பட்டது. போட்டியின் நான்காம் நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவின்போது பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி ஒரு ஒட்டத்தைப் பெற்றிருந்தது.


5 ஆவது நாளான இன்று பாகிஸ்தான் அணி  230  ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.


சமி அஸ்லம் 91 ஓட்டங்களைப் பெற்றார். நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களில் நீல் வாக்னர் 57 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைவ வீழ்த்தினார்.

எண்ணிக்கை சுருக்கம்:


நியூஸிலாந்து 1வது இன்:  271 (ஜீட் நவால் 55, பிறட்லி வொட்லிங் 49, கொலின் டி க்ராண்ட்ஹொம் 37, சொஹெய்ல் கான் 99 க்கு 4 விக்., இம்ரான் கான் 52 க்கு 3 விக்.)


பாகிஸ்தான் 1வது இன்: சகலரும் ஆட்டமிழந்து 216 (பபார் அஸாம் 90 ஆ.இ., சார்வ்ராஸ் அஹ்மத் 41, சொஹெய்ல் கான் 37, டிம் சௌதி 80 க்கு 6 விக்., நீல் வோர்னர் 59 க்கு 3 விக்.)


நியூஸிலாந்து 2வது இன்: 313 க்கு 5 விக். டிக். (ரொஸ் டெய்லர் 102 ஆ.இ., டொம் லதம் 80, கேன் வில்லியம்சன் 42, கொலின் டி கிராண்ட்ஹொம் 32, இம்ரான் கான் 76 க்கு 3 விக்.)
பாகிஸ்தான் 2வது இன்: 230

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=20960#sthash.XsOkrxQB.dpuf
  • தொடங்கியவர்

மெதுவாக பந்து வீசியதால் பாக். கேப்டனுக்கு 100 சதவீதம் அபராதம்

 

நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் மெதுவாக பந்து வீசியதால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் அசார் அலிக்கு 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 
மெதுவாக பந்து வீசியதால் பாக். கேப்டனுக்கு 100 சதவீதம் அபராதம்
 
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஹாமில்டனில் நடைபெற்றது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 271 ரன்களும், பாகிஸ்தான் 216 ரன்களும் எடுத்தது,

55 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 369 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அணி 230 ரன்னில் சுருண்டது. இதனால் பாகிஸ்தான் 138 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் 2-வது இன்னிங்சில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசவில்லை. இதனால் பாகிஸ்தான் அணியின் கேப்டனுக்கு இந்த போட்டியின் சம்பள பணம் அனைத்தையும் அபராதமாக ஐ.சி.சி. விதித்தது. அத்துடன் மற்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

இதே பிரச்சினையில் முதல் டெஸ்டில் சிக்கியதால் மிஸ்பா உல் ஹக் ஒரு போட்டியில் தடை பெற்று இந்த டெஸ்டில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/Sports/2016/11/29191815/1053407/Azhar-Ali-fined-100-percent-match-fee-for-slow-over.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.