Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவிரித்தாடும் இனவாதம் !

Featured Replies

தலைவிரித்தாடும் இனவாதம் !

 

செல்­வ­ரட்னம் சிறி­தரன்

நல்­லாட்சி அர­சாங்கம் நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்ள போதிலும், சட்­டத்­தையும் ஒழுங்­கையும் சீராக நிலை நாட்­டு­வதில் அர­சாங்கம் பல­வீ­ன­மான நிலை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றது. 

நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு சட்டம் ஒழுங்கு நிலை­நாட்­டப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். சட்­டமும் ஒழுங்கும் சீர்­கு­லைந்­துள்ள ஒரு நிலையில் நல்­லி­ணக்கச் செயற்­பா­டுகள் வீரி­ய­முள்­ள­தாக இருக்க முடி­யாது. 

சட்­டத்­தையும் ஒழுங்­கையும் முறை­யாக நிலை­நாட்­டு­வதன் ஊடா­கவே நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்க முடியும். இரண்டும் இரு­வேறு விட­யங்­க­ளாக இருக்­கின்ற போதிலும், நாட்டில் அமை­தி­யையும் ஐக்­கி­யத்­தையும் நிலை­நாட்­டு­வ­தற்கு இவை இரண்டும் இரண்டு கண்­களைப் போன்று முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்­கின்­றன என்­பதை மறுக்க முடி­யாது.

இன­வாத சக்­தி­களும், மத­வாத சக்­தி­களும் அச்­ச­மே­து­மின்றி, குரோ­தத்­துடன் செயற்­ப­டு­கின்ற ஒரு போக்கு நாட்டில் வெளிப்­ப­டை­யா­கவே காணப்­ப­டு­கின்­றது.  சட்­டத்­தையும் ஒழுங்­கையும் மீறிச் செயற்­ப­டு­கின்ற இந்த சக்­தி­களைக் கட்­டுப்­ப­டுத்­தாமல் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற நல்­லி­ணக்­கத்­துக்­கான முயற்­சிகள் விழ­லுக்­கி­றைத்த நீரா­கவே இருக்கும் என்­பது சொல்லித் தெரிய வேண்­டி­ய­தில்லை.  

மோச­மான ஒரு யுத்­தத்தின் பின்னர், நாட்டில் இத்­த­கைய போக்கு தலை­யெ­டுத்­தி­ருப்­பது, தேசிய நல்­லி­ணக்கம், நாட்டின் அமைதி சமா­தானம் என்­ப­வற்­றுக்கு மட்­டு­மல்­லாமல், இந்த அர­சாங்­கத்தின் நல்­லாட்­சிக்கும் குந்­த­க­மா­னது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.  

இரா­ணு­வத்தைக் கட்­டுப்­ப­டுத்தும் அதி­காரம்

இன­வாத, மத­வாத சக்­தி­களைப் போலவே, நாட்டின் பாது­காப்­புக்கு ஆதா­ர­மாக உள்ள இரா­ணு­வத்தைக் கையாள்­வ­திலும் ஜனா­தி­ப­தியும், அர­சாங்கம் என்ற கட்­ட­மைப்­புக்­குட்­பட்­டுள்ள ஆட்­சி­யா­ளர்­களும் அர­சியல் ரீதி­யாக சக்­தி­யற்­ற­வர்­க­ளா­கவே உள்­ளனர். 

நிறை­வேற்று அதி­கா­ரத்­தையும், பாது­காப்பு அமைச்சர் என்ற ரீதியில், முப்­ப­டை­களின் தள­பதி என்ற அதி­காரத் தகு­தி­யையும் கொண்­டுள்ள போதிலும், நிர்­வாக ரீதியில் இரா­ணு­வத்தைக் கையாள்­கின்ற விட­யத்தில் அவர் அர­சியல் ரீதி­யாகக் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்ற நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது. 

இரா­ணுவ ரீதி­யாக அடக்­கி­யொ­டுக்கி அழிக்­கப்­பட்­டு­விட்­ட­தாகக் கரு­தப்­ப­டு­கின்ற விடு­த­லைப்­பு­லிகள் மீண்டும் தலை­யெ­டுத்து ­விடக் கூடாது என்­பதில் முன்­னைய அர­சாங்­கத்தைப் போலவே, இந்த அர­சாங்­கமும் மிகவும் கவனம் செலுத்திச் செயற்­பட்டு வரு­கின்­றது. 

இந்த வகையில் தேசிய பாது­காப்­புக்கு முக்­கி­யத்­துவம் கொடுத்து வடக்கு, கிழக்குப் பிர­தே­சங்­களில் - குறிப்­பாக வடக்கில் இரா­ணு­வத்­தி­னரை முதன்மை நிலையில் அர­சாங்கம் வைத்­தி­ருக்­கின்­றது.

தேசிய பாது­காப்­புக்­காக, தேவைக்கு அதி­க­மான நிலை­யி­லேயே, அர­சாங்­கத்­தினால்  இரா­ணு­வத்­தி­ன­ருக்கு வச­தி­களும் அதி­கா­ரங்­களும் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. ஒப்­பீட்­ட­ளவில் முன்­னைய ஆட்சிக் காலத்­திலும் பார்க்க இந்த ஆட்­சியில் இந்த நிலைமை சற்று தளர்த்­தப்­பட்­டிருப்­பதை ஏற்­றுக்­கொள்­ளத்தான் வேண்டும். 

ஆயினும் தேசிய மட்­டத்தில் நல்­லி­ணக்­கத்தைக் கொண்டு வர முற்­பட்­டுள்ள அர­சாங்கம், காணி­களை மீளவும் பொது­மக்­க­ளிடம் கைளிப்­பதில் இரா­ணுவம் கடும் போக்கைக் கடைப்­பி­டித்து வரு­வ­தையும், அர­சாங்கம் அதனைக் கண்டும் காணாமல் இருப்­ப­தையும் எந்த வகை­யிலும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. 

கையறு நிலைமை

யுத்தம் முடி­வ­டைந்து ஏழரை ஆண்­டு­க­ளுக்குப் பின்­னரும், இரா­ணு­வத்தைக் கட்­டுப்­ப­டுத்தி, இரா­ணு­வத்தின் வச­முள்ள பொது­மக்­களின் காணி­களை கைய­ளித்து, அவர்­களை மீள்­கு­டி­யேற்ற முடி­யாமல் இருக்­கின்ற அர­சாங்கம் எந்த வகையில் நல்­லி­ணக்­கத்தை வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுத்துச் செல்ல முடியும் என்­பது தெரி­ய­வில்லை.

இரா­ணு­வத்­தினர் கைப்­பற்­றி­யுள்ள பொது­மக்­களின் காணி­களை உரி­ய­வர்­க­ளிடம் மீண்டும் ஒப்­ப­டைப்­பதன் அவ­சியம், அதன் ஊடாக, பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நியா­யத்­தையும் நீதி­யையும் வழங்­கு­வதன் தேவைப்­பாடு போன்ற விட­யங்கள் குறித்து, சிவில் உரி­மை­சார்ந்த வழி­க­ளிலும், அர­சியல் வழி­க­ளிலும் பலரும் பல தட­வை­களில் அர­சாங்­கத்­திற்கு  ஏற்­க­னவே இடித்­து­ரைத்­தா­கி­விட்­டது.

வீதிப் போராட்­டங்கள், மறியல் போராட்­டங்கள், பணி­பு­றக்­க­ணிப்புப் போராட்­டங்கள் என பல்­வேறு வழி­களில் பாதிக்­கப்­பட்ட மக்கள் சாத்­வீக வழி­களில் தமது உணர்­வு­க­ளையும் கோரிக்­கை­க­ளையும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றனர். இதனை அர­சாங்கம் நன்­றா­கவே புரிந்து கொண்­டி­ருக்­கின்­றது. 

காணி­களை விடு­விப்­பது தொடர்பில் அவ்­வப்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அளித்­துள்ள பகி­ரங்­க­மான உத்­த­ர­வா­தங்கள், உறுதி மொழிகள் என்­பன இதற்குச் சரி­யான ஆதா­ரங்­க­ளாக அமைந்­தி­ருக்­கின்­றன. இருந்த போதிலும், பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு, அவர்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களை வழங்கி, அவர்­களை அங்கு மீள்­கு­டி­யேற்­று­வ­தற்­கான உறு­தி­யான நட­வ­டிக்­கை­களை எடுக்க முடி­யாத கையறு நிலை­யி­லேயே ஜனா­தி­பதி இருக்கின்றார் என்ற விட­யமும் வெளிச்­சத்­திற்கு வந்­துள்­ளது. 

இரா­ணு­வத்தின் பிடியில் உள்ள பொது­மக்­க­ளு­டைய காணி­களை, உரி­ய­வர்­க­ளிடம் கைய­ளிப்­ப­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்ள போதிலும், இன்னும் பல­ரு­டைய காணி­களை விடு­விப்­பதில் தாமதம் ஏற்­பட்­டி­ருப்­பது பாதிக்­கப்­பட்ட மக்கள் மத்­தியில் பெரும் ஏமாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. 

இரா­ணு­வத்தின் வச­முள்ள பொது­மக்­க­ளு­டைய காணிகள் அவர்­க­ளி­டமே கைய­ளிக்­கப்­பட வேண்டும் என்­பதை அர­சாங்கம் ஏற்­றுக்­கொண்­டுள்ள போதிலும், அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­ப­டு­கின்ற தன்மை கூடு­த­லாக இரா­ணுவம் உள்­ளிட்ட முப்­ப­டை­க­ளி­டமும் காணப்­ப­ட­வில்லை. எனவே, அர­சாங்­கத்தின் உத்­த­ரவை ஏற்றுக் கொள்­கின்ற தள­ப­திகள் முப்­ப­டை­க­ளிலும் குறை­வாகக் காணப்­ப­டு­கின்­றார்­களா என தமிழ்த் தே­சிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ரெலோ கட்­சியின் தலை­வ­ரு­மான செல்வம் அடைக்­க­ல­நாதன் பாராளு­மன்­றத்தில் கேள்வி எழுப்­பி­யி­ருக்­கின்றார். 

நாட்டில் நல்­லி­ணக்­கத்­தையும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ர­ணத்­தையும் நீதி நியா­யத்­தையும் வழங்­கு­வ­தற்கு அவர் விருப்பம் கொண்­டி­ருக்­கின்ற போதிலும், அதற்குத் தடை­யேற்­ப­டுத்தும் நிலையில் உள்ள இரா­ணு­வத்தைத் தனது வழியில் செயற்­பட வைக்க முடி­யா­த­வ­ரா­கவே அவர் காணப்­ப­டு­கின்றார். 

இரா­ணு­வத்தைக் கையாள்­வது என்­பது சட்ட ரீதி­யான நிர்­வாகச் செயற்­பாடு சார்ந்த ஒரு விடயம் என்­ப­தற்கு அப்பால், அது ஓர் அர­சியல் சார்ந்த செயற்­பா­டாக அனு­ம­திக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பதே இதற்­கான கார­ண­மாகும்.  

நாட்டின் அதி­யுயர் அதி­கார பீடத்தில் உள்­ள­வரும், நாட்டின் தலை­வ­ரு­மா­கிய ஜனா­தி­பதி, நியா­ய­மா­னது, நீதி­யா­னது என தான் உணர்­கின்ற ஒரு விட­யத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் குறை­களைப் போக்கி, அவர்­க­ளுக்கு உரிய நிவா­ரண நட­வ­டிக்­கை­களை எடுக்க முடி­யாமல் இருப்­ப­தனை ஆழ்ந்து சிந்­திக்­கும்­போது, அவர் எத்­த­கைய அர­சியல் அழுத்­தங்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருக்கின்றார் என்­பதை உணர்ந்து கொள்ளக் கூடி­ய­தாக உள்­ளது. 

சட்­ட­பூர்­வ­மான அதி­கா­ரங்­களைக் கொண்­டி­ருக்­கின்ற போதிலும், அர­சியல் ரீதி­யான பலத்­தோடு, தென்­னி­லங்­கையில் தலை விரித்­தா­டு­கின்ற இன­வாத, மத­வாத சக்­தி­களின் முன்னால், பலம் குன்­றி­ய­வ­ராக, அந்த சக்­தி­களை எதிர்த்து தனது நியா­ய­மான அதி­கா­ரங்­களைப் பிர­யோ­கிக்க முடி­யாத ஒரு­வ­ரா­கவே ஜனா­தி­பதி திகழ்­கின்றார். 

ஜனா­தி­ப­தியைப் போலவே, நல்­லாட்சி புரி­வ­தாகக் கூறு­கின்ற அர­சாங்­கமும், திமி­ரோடு செயற்­ப­டு­கின்ற மத­வாத, இன­வாத சக்­தி­களின் அர­சியல் செல்­வாக்கின் முன்னால் செல்­லாக்­கா­சா­கவே செயற்­பட்டு வரு­கின்­றது.

இன­வாத, மத­வாத சக்­திகள் 

முரண்­பட்டு நிற்­கின்ற தரப்­புக்கள் தமக்குள் இணங்கி, நட்­பு­ற­வோடு செயற்­ப­டு­வதே நல்­லி­ணக்­க­மாகும். விட்­டுக்­கொ­டுப்பு இல்­லையேல் நல்­லி­ணக்கம் சாத்­தி­ய­மா­காது. சம்­பந்­தப்­பட்ட தரப்­புக்கள் மேலா­திக்கப் போக்கைக் கைவிட்டு, ஏனைய தரப்­புக்­க­ளுடன் சம­மாகச் செயற்­பட முன்­வ­ரு­கின்ற வரையில் நல்­லி­ணக்கம் சாத்­தி­ய­மா­காது. 

அர­சியல் உரி­மை­க­ளுக்­காக ஆயுதம் ஏந்திப் போரா­டிய தமிழ் தரப்­பினர், யுத்த மோதல்­க­ளின்­போது, மோச­மான பின்­ன­டை­வு­க­ளுக்கும் மோச­மான பாதிப்­பு­க­ளுக்கும் உள்­ளா­கிய நிலை­யிலும் நல்­லாட்சி அர­சாங்­கத்­துடன் நிபந்­த­னைகள் எது­வு­மற்ற நிலையில் விட்­டுக்­கொ­டுப்­புடன் செயற்­பட்டு வரு­கின்­றனர். 

தமிழர் தரப்பின், விட்­டுக்­கொ­டுப்­புடன் கூடிய அர­சியல் ஆத­ரவு என்ற அத்­தி­வா­ரத்­தி­லேயே இந்த நாட்டில் நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சி­ய­மைத்­துள்­ளது. நல்­லாட்சி அர­சாங்கம் அர­சோச்­சு­வ­தற்கும் அந்த ஆத­ரவே அடிப்­ப­டை­யாகும். 

யுத்தப் பாதிப்­புக்கு உள்­ளா­கிய மக்கள், தமது தேவைகள் பூர்த்தி செய்­யப்­படும், தமக்­கேற்­பட்ட பாதிப்­பு­க­ளுக்கு உரிய நிவா­ரணம் கிடைக்கும். தமது சொந்தக் காணி­களில் நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்தை விலக்கி,  இடம் பெயர்ந்­துள்ள தங்­களை, தமது சொந்தக் கிரா­மங்­களில் மீள்­கு­டி­யேற்றும், காணாமல் போயுள்ள ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­ப­தற்கு பொறுப்பு கூறு­வார்கள், விசா­ர­ணை­க­ளின்றி வரு­டக்­க­ணக்கில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமது உற­வு­க­ளான அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­வார்கள், யுத்த மோதல்கள் கார­ண­மாக வித­வை­க­ளா­கியும், ஆண் துணை­க­ளி­ருந்தும் இல்­லாத நிலையில் குடும்பப் பொறுப்­பு­களைச் சுமப்­ப­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்ள பெண்­க­ளுக்கு மறு­வாழ்­வ­ளிப்­பார்கள், யுத்தம் கார­ண­மாக கட்­டுக்­கு­லைந்­துள்ள சமூ­கத்தில் தலை­யெ­டுத்­துள்ள சமூக விரோ­தி­க­ளி­ட­மி­ருந்து தங்­க­ளுக்கும் தமது பிள்­ளை­க­ளுக்கும் உரிய பாது­காப்­ப­ளிக்­கப்­படும் என்­பது போன்ற பல எதிர்­பார்ப்­புக்­க­ளோடு நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­கிய பாதிக்­கப்­பட்ட மக்­களின் எதிர்­பார்ப்­புகள் உரிய முறையில் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. 

முன்­னைய ஆட்­சியில் நில­விய கெடு­பி­டிகள் குறைந்து சில சில விட­யங்­களில் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்ள போதிலும், நல்­லி­ணக்­கத்­தையும் அச்­ச­மற்ற வாழ்க்­கை­யையும் உறுதி செய்­வ­தற்குப் புதிய அர­சாங்கம் உரிய முறையில் வழி­ச­மைக்­க­வில்­லையே என்ற ஆதங்கம் பாதிக்­கப்­பட்ட மக்கள் மத்­தியில் படிப்­ப­டி­யாக விஸ்வ­ரூ­ப­மெ­டுத்து வரு­கின்­றது. 

இன­வாத சக்­தி­களும் மத­வாத சக்­தி­களும், தடுத்து நிறுத்­துவார் எவ­ரு­மற்ற நிலையில், தன்­னிச்­சை­யாகத் தலை­வி­ரித்­தாடி வரு­வதே இதற்கு முக்­கிய கார­ண­மாகும். 

கிழக்கு மாகா­ணத்தில் இன­வா­தத்­தையும் மத­வா­தத்­தையும் கிளப்பி, அமை­தி­யின்­மையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு சில சக்­திகள் முனைந்­தி­ருப்­ப­தாக கிழக்கு மாகா­ண முத­ல­மைச்சர் கூறி­யுள்ளார். 

 

அதே­போன்று இன­வா­தத்­தையும் மத­வா­தத்­தையும் தூண்டி, நாட்டில் கல­கத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான நிலைமை உரு­வாகி வரு­வ­தாக அர­சாங்­கத்­திற்குப் புல­னாய்வு பிரி­வினர் அறிக்கை சமர்ப்­பித்­தி­ருக்­கின்­றனர். இது தொடர்பில் ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் கூடிய கவனம் செலுத்­தி­யி­ருப்­ப­தாக வெளி­யா­கி­யுள்ள தக­வல்கள் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தையும் அதனால் நல்­லி­ணக்கச் செயற்­பா­டுகள் சீர்­கு­லைந்­தி­ருப்­ப­தையும்  எடுத்துக் காட்­டு­வ­தாக அமைந்­தி­ருக்­கின்­றன 

 

நலிந்­துள்ள நல்­லி­ணக்கச் செயற்­பா­டுகள் 

கிழக்கு மாகா­ணத்தில் அம்­பாறை மற்றும் மட்­டக்­க­ளப்பு ஆகிய மாவட்­டங்­களில் தீவிரப் போக்­கு­டைய பௌத்த மதத் தலை­வர்கள் முன்­னெ­டுத்­துள்ள அத்­து­மீறல் செயற்­பா­டுகள் அந்தப் பகு­தியில் பதற்ற நிலை­மையை உரு­வாக்­கி­யி­ருக்­கின்­றன. 

இது தொடர்­பி­லேயே கிழக்கு மாகாண முத­ல­மைச்சர், கிழக்கு மாகா­ணத்தில் அமை­திக்குப் பங்கம் ஏற்­பட்­டி­ருப்­ப­தாக அபாய அறி­விப்பு செய்­துள்ளார். 

அம்­பாறை மாவட்­டம் ­மா­ணிக்­க­மடு கிரா­மத்தில் பௌத்த மத­கு­ரு­மார்கள் அடங்­கிய குழு­வொன்று அத்­து­மீ­றிய வகையில் புத்தர் சிலை­யொன்றை அமைத்து, மத­வ­ழி­பா­டு­களை மேற்­கொண்­டுள்­ள­துடன்.

புதி­தாக பௌத்த விகா­ரை­யொன்றை அங்கு அமைப்­ப­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­டி­ருப்­பது அந்தப் பகு­தியில் பெரும்­பான்­மை­யாக வசிக்­கின்ற முஸ்லிம் மற்றும் தமிழ் மக்­க­ளி­டையே அச்­சத்­தையும் பதற்றத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன.
  

இதே­வேளை,  மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் அம்­பிட்­டிய கச்­சைக்­கொடி பகு­தியில் அத்­து­மீ­றிய வகையில் குடி­யேற முயன்ற 6 சிங்­களக் குடும்­பங்­க­ளுக்கு எதி­ராக அந்தப் பகு­திக்குப் பொறுப்­பான கிராம சேவை அதி­காரி நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்­துள்ளார்;. 

அரச ஊழி­ய­ரா­கிய அந்த கிராம சேவை­யா­ளரை நேர­டி­யாக இழி­சொற்கள் பேசி, சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்­டு­கின்ற கட­மைக்குப் பொறுப்­பான பொலிஸ் உய­ர­தி­கா­ரி­களின் முன்­னி­லையில் மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­பதி சும­ண­ரத்ன தேரர் நிந்­தித்­துள்ளார். 

ஆயினும் இவ­ருக்கு எதி­ராக பொலிசார் எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை. 

அங்கு ஏற்­பட்­டி­ருந்த பதற்றமான சூழ்­நி­லையில் வெறி­பி­டித்­த­வரைப் போன்று வார்த்­தை­களை அள்ளிக் கொட்­டி­ய­தையும், தன்னை சமா­தா­னப்­ப­டுத்த முயன்ற ஒரு பொது­மகன் மீதும்  மற்றும் பொலிஸ் அதி­காரி ஒருவர் மீதும், அவர் தாக்­குதல் நடத்­தி­ய­தை­யும் வீடியோ காட்­சி­களின் மூலம் சமூக வலைத் தளங்­களில் பார்த்த பலரும் விக்­கித்துப் போயி­ருக்­கின்­றார்கள். 

ஒரு பௌத்த மதத்­து­ற­வி­யான சும­ண­ரத்ன தேரர் வெறி­பி­டித்­த­வரைப் போன்று ஏன் நடந்து கொண்டார் என்­பது பல­ருக்கும் புரி­யாத புதி­ராக உள்­ளது. 

இதற்குக் காரணம் இல்­லாமல் இல்லை. விடு­த­லைப்­பு­லிகள் பலம் பெற்றுத் திகழ்ந்த காலத்தில் நடை­பெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் மேடையில் ஏறி, தமிழ் மக்­க­ளுக்­காக விடு­த­லைப்­பு­லிகள் நடத்தி வரு­கின்ற போராட்டம் நியா­ய­மா­னது என அவர் உரை­யாற்­றி­யி­ருந்தார். 

அத்­துடன் பௌத்த மதத் துற­வி­யா­கிய தனக்கு விடு­த­லைப்­பு­லிகள் அளித்த மரி­யா­தையும் கௌர­வமும் மற்­ற­வர்­க­ளினால் அளிக்­கப்­ப­ட­வில்லை என அவர் பின்னர் ஒரு சந்­தர்ப்­பத்தில் கருத்து வெளி­யிட்­டி­ருந்தார். 

அது­மட்­டு­மல்­லாமல் முன்­னைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவுக்கு எதி­ரா­கவும் ஆர்ப்­பாட்டம் செய்­தி­ருந்தார். வெள்ள அனர்த்­தங்­க­ளின்­போதும், சுனாமி தாக்­கத்­தின்­போதும் இன மத பேதங்­களைக் கடந்த நிலையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உரிய நிவா­ரண உத­வி­களை வழங்­கி­யி­ருந்த சுண­ரத்ன தேரரா இவ்­வாறு மோச­மான மத­வா­தி­யாக, இன­வா­தி­யாக நிந்­தனை வார்த்­தை­களை அள்ளி வீசி­யுள்ளார் என்று அவ­ரைப்­பற்றி அறிந்­துள்ள பலரும் திகைப்­ப­டைந்­துள்­ளனர். 

அத்­துடன் அவர் நின்­று­வி­ட­வில்லை. பன்­குடா வெளி என்ற இடத்தில் தனி­யா­ருக்குச் சொந்­த­மான காணி­யொன்றில் அடா­வ­டி­யாகப் புகுந்து அங்கு புத்தர் சிலை­யொன்றை வைப்­ப­தற்கும் முயன்­றி­ருக்­கின்றார். 

அவ­ரு­டைய அத்­து­மீ­றிய நட­வ­டிக்­கையை நீதி­மன்­றத்தின் இடைக்­காலத் தடை­யுத்­த­ரவு பெற்று அதி­கா­ரிகள் கட்­டுப்­ப­டுத்­தி­யுள்­ளனர். நீதி­மன்­றத்தின் இந்த உத்­த­ர­வை­ய­டுத்து, அந்தக் காணிக்கு பொலிஸ் காவல் வழங்­கப்­பட்­டுள்­ளது. 

இதே­போன்று அநு­ரா­த­பு­ரத்தில் பௌத்த மத குருக்­க­ளினால் ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்த ஒரு கூட்­டத்தில் சிங்­கள இளைஞன் ஒருவர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக படு­மோ­ச­மான முறையில் இன­வாத கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருக்­கின்றார். அவ­ரு­டைய உரை அடங்­கிய வீடியோ காட்­சியும் சமூக வலைத்­த­ளங்­களில் பெரிய அளவில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. 

இத்­த­கைய நிலை­மை­க­ளினால் நல்­லி­ணக்கச் செயற்­பா­டுகள் நலி­வ­டைந்­தி­ருப்­பதைக் காண முடி­கின்­றது.

சட்டம் ஒழுங்;கு பார­பட்­ச­மின்றி நிலை­நாட்­டப்­ப­டுமா?

இது ஒரு­பு­ற­மி­ருக்க, இன­வாத கருத்­துக்­களை வெளி­யிட்­டதன் மூலம் பொது அமை­திக்குப் பங்கம் விளை­வித்­தனர் என்ற குற்­றச்­சாட்டின் கீழ் சிறி­லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் செய­லாளர் அப்துல் ராசிக், சிங்­கள தீவிர நிலைப்­பாட்­டா­ள­ரா­கிய டேன் பிரி­யசாத் ஆகியோர் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றனர். 

இவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்­கைகள் முடுக்­கி­வி­டப்­பட்­டி­ருக்­கின்­றன.  கொழும்புக் கோட்டை புகை­யி­ரத நிலை­யத்­திற்கு எதிரில் இடம்­பெற்ற ஆர்ப்­பாட்டம் ஒன்றில் முஸ்­லிம்­களை நிந்­தித்து அச்­சு­றுத்தும் வகையில் கருத்­தக்­களை வெளி­யிட்­ட­மைக்­கா­கவே டேன் பிரி­யசாத் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.  

இவர் கைது செய்­யப்­பட்­டதைக் கண்­டித்தும் எதிர்த்தும் பொது­பல சேன அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்த ஞான­சார தேரர் பொலிஸா­ருக்கு ஒருநாள் அவ­கா­ச­ம­ளித்து விடுத்­தி­ருந்த எச்­ச­ரிக்­கை­யை­ய­டுத்தே சிறி­லங்கா தவ்ஹீத் ஜமாஆத்தின் செய­லாளர் அப்துல் ராசிக் பொலி­சா­ரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வெளியிட்டிருந்த இனவாத கருத்துக்கள் தொடர்பில் அப்துல் ராஸிக்கிற்கு எதிராக ஏற்கனவே பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

ஆயினும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அநுராதபுரத்திலும் பகிரங்கமாக பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்து, இனங்களுக்கிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் இனவாத, மதவாத கருத்துக்களை விஷமாகக் கக்கிய பெரும்பான்மை இன மதத் தலைவர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக பொலிஸார் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

பொலிஸாரின் இந்த நடவடிக்கை பல தரப்பிலும் பல மட்டங்களிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது. 

இந்த நிலைமைகள் தொடர்பாக அவசர பாதுகாப்புக்குழு கூட்டத்தில் ஆராய்ந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டில் இனவாதம் பேசும் அனைவருக்கும் எதிராக,  இன, மத பேதங்களை கருதாது நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு உத்தரவிட்டிருப்பதாக  அமைச்சர் மனோ கணேசன் தகவல் வெளியிட்டுள்ளார். 

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற் கான சூழலை ஏற்படுத்த வேண்டியது அரசாங் கத்தினதும் ஜனாதிபதியினதும் கடமையும் பொறுப்புமாகும். அத்தகைய சூழலுக்குக் குந்தகமாக நடந்து கொள்பவர்கள் யாராக இருந்தாலும், அத்தகைய நடவடிக்கைகள் குறித்த முறைப்பாடுகள் கிடைப்பதற்கு முன்ன தாகவே சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பான பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். 

அத்தகைய செயற்பாடுகள் நல்லாட்சி புரிகின்ற – இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ள அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்படவில்லை. 

இனவாதம் மற்றும் மதவாதப் போக்கினால் நாட்டில் அமைதிக்கும் சமாதானத்திற்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பான நிலைமை குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து, இறுக்கமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளதன் பின்னராவது சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமா என்பது தெரியவில்லை. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-11-19#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.