Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சித்திரவதைகள் தொடர்கின்றனவா?

Featured Replies

சித்திரவதைகள் தொடர்கின்றனவா?

 

திருமலை நவம்

முழுப்­பூ­ச­ணிக்­காயை ஒரு தட்­டு­ச் சோற்றில் மறைக்க முற்­ப­டு­வது போல் இன்­றைய நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது முன்­னைய ஆட்­சி­யா­ளர்­களின் அத்­து­மீ­றல்­க­ளையும் குற்றத் தொகுப்­பு­க­ளையும் குல­நாச செயல்­க­ளை யும் மறைக்க முயல்­வது எவ்­வ­ளவு காலத்­துக்கு உள்­நாட்டு அரங்­கி லும் சர்­வ­தேச அள­விலும் செல்­லு­ப­டி­யாகப் போகி­றது என்­பதும் ஒரு விப­ரீ­த­மான எதிர்ப்­பார்ப்­புத்தான்.

சித்­தி­ர­வ­தைகள் கடத்­தல்கள், காணாமல் ஆக்­கப்­ப­டுதல், இரக­சிய தடுப்பு முகாம்கள்,மனித உரிமை மீறல்கள், போர்க் குற்­றங்கள், பாலியல் வன்­மங்கள் என்ற மனித நாக­ரி­கத்­துக்கு அப்­பாற்­பட்ட கேவல வித்­தை­களில் ஈடு­படும் எந்­த­வொரு நாடும் மனி­தனும் உலக நிய­தி­க­ளி­லி­ருந்து தப்­பி­வி­ட­மு­டி­யாது. 

இத்­த­கைய படு­பா­தகச் செயல்­களில் ஈடு­பட்ட மனி­தர்கள் காலம் கடந்தும் நீதியின் முன்­னி­றுத்­தப்­பட்­டி­ருக்­கி­றார்கள் என்­ப­தற்கு பல நாடு­க­ளையும் சர்­வா­தி­கா­ரி­க­ளையும் உதா­ர­ண­மாக காட்­ட­மு­டியும். வர­லாற்று நீதி­யி­லி­ருந்து அவர்கள் தப்­பி­வி­ட­மு­டி­யாது.

இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லைதான் இலங்­கைக்கு இன்று ஏற்­பட்­டி­ருக்­கி­றது என்­பதை ஐக்­கிய நாடுகள் சபையின் சித்­தி­ர­வ­தை­க­ளுக்­கெ­தி­ரான குழுவின் 57ஆவது அமர்வின் போது இலங்கை விவ­காரம் தொடர்பில் ஆரா­யப்­பட்­ட­போது எழுப்­பப்­பட்ட வினாக்கள், சந்­தே­கங்கள், குற்­றப்­பத்­தி­ரி­கைகள் நிரூ­பித்துக் காட்­டு­கின்­றன.

மேற்­படி அமர்வில் இலங்­கையைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய சட்­டமா அதிபர் ஜயந்த ஜய­சூ­ரிய, பிர­திப்­பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண உள்­ளிட்ட இலங்கை அர­சாங்­கத்தின் பிர­தி­நி­தி­க­ளிடம் பல்­வேறு கேள்­விக்­க­ணை­களை பெலிஸ் கேர் தலை­மை­யி­லான குழுவின் பிர­தி­நி­திகள் தொடுத்­துள்­ளனர்.

இக்­கு­ழுவின் பகி­ரங்­க­மான விசா­ரிப்­புகள் இலங்கை பற்­றிய மதிப்­பீ­டு­களை அவர்கள் எவ்­வாறு கொண்­டுள்­ளார்கள் என்­பதை தெளி­வா­க­வெ­ளிப்­ப­டுத்தி நிற்­கி­றது.

1.யுத்த காலத்தில் இர­க­சிய முகாம்கள் நடத்­தப்­பட்­டதா? 2.பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உரிய காப்பு செய்து கொடுக்­கப்­பட்­டதா? 3.பயங்­க­ர­வாதச் தடைச்­சட்டம் ஏன் இன்னும் நீக்­கப்­ப­ட­வில்லை? 4. 2015 ஆம் ஆண்­டு­வரை வெள்­ளைவேன் கடத்தல் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றது உண்­மையா? 5. கடத்­தப்­பட்­ட­வர்கள் சித்­தி­ர­வ­தைக்கும் பாலியல் வன்­மு­றைக்கும் உட்­ப­டுத்­தப்­பட்­டார்­களா?

6. போர் உக்­கி­ர­வே­ளையில் அரச படை­யினர் பாலியல் வல்­லு­றவு செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டுள்ள குற்றம் தொடர்பில் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டதா? 7. இலங்கை அர­சாங்­கத்தால் உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­கு­ழு­வொன்று அமைக்­கப்­பட்ட நிலை­யென்ன? 8. திரு­கோ­ண­ம­லையில் 5 மாண­வர்கள் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம், மூதூரில் 17 அரச சார்­பற்ற நிறு­வன ஊழி­யர்கள் படு­கொலை செய்­யப்­பட்ட விவ­காரம் தொடர்பில் விசா­ர­ணைகள் தொடர்ந்து மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­ற­னவா? என்ற அதிர்ச்சி தரும் வினாக்­களை சர­மா­ரி­யாகத் தொடுத்­த­துடன் ஆழ­மான சந்­தே­கங்­க­ளையும் சித்­தி­ர­வ­தை­க­ளுக்கெதிரான குழு எழுப்­பி­யுள்­ளது.

இவ்­வ­ருட இறு­திக்குள் அர­சியல் சாச­னத்­தி­னூ­டாக அர­சியல் தீர்வை முன்­வைப்போம். போர்க்­குற்ற விசா­ர­ணைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணைக்கு இட­மில்லை, தமி­ழர்­க­ளு­டைய பிரச்­சி­னையைத் தீர்ப்­பது எனது பொறுப்பு, உலக நாடுகள் இன்­றைய அர­சியல் போக்கு சூழ்­நி­லை­களை அனு­மா­னித்து இலங்­கைக்கு நேசக்­கரம் நீட்­டு­கின்­றன.

 புதிய அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியின் வெற்றி இலங்கை அர­சுக்கு சாத­க­மான சூழ்­நி­லையை உரு­வாக்கித் தரும் என்­றெல்லாம் இலங்கை அரச தரப்பில் பேசப்­ப­டு­கின்ற நம்­பிக்கை கொண்­டி­ருக்­கின்ற சூழ்­நி­லையில் தான் ஐ.நா.சபையின் சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு எதி­ரான குழு­வினர் இலங்கை பிர­தி­நி­தி­க­ளிடம் இவ்­வா­றான கடும் கணை­களைத் தொடுத்­துள்­ளனர்.

இலங்கை அர­சாங்­கத்தின் இன்­றைய பொறுப்பு கூறல் நிலை­மை­களை ஆராய்ந்து பார்க்­கின்­ற­போது ஒரு பழ­மொழி ஞாப­கத்­திற்கு வரு­கி­றது.

இளநீர் குடித்­தவன் எவனோ கோம்­பையை தூக்­கி­யவன் குற்­ற­வா­ளி­யாக்­கப்­பட்­டி­ருக்­கிறான் என்ற மாறாட்ட நிலைதான் காணப்­ப­டு­கி­றது.

முன்­னைய அர­சாங்கம் செய்த அத்­தனை செயற்­பா­டு­க­ளுக்கும் பொறுப்­புக்­கூற வேண்­டிய கடப்­பாடு இவ்­வ­ர­சாங்­கத்தின் தலையில் பொறுப்­பிக்­கப்­பட்­டி­ருப்­பது தான் விசித்­தி­ர­மான விட­ய­மாகும்.

இன்­றைய அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வ­ரை யில் தானுண்டு தன் ஆட்­சி­யுண்டு என்ற மனோ­பா­வத்தில் செல்­லாமல் நாட்டுப் பற்று, எம் தேசம், எம்­மவர் என்ற கோதாவில் குற்­ற­மி­ழைத்­த­வர்­க­ளையும் மனித உரிமை மீறல்­க­ளுக்கு உடந்­தை­யா­ன­வர்­க­ளையும் நீதியின் கண்­ணி­லி­ருந்து மறைத்து சட்­டத்தை இருட்­டாக்கி அவர்­களை தப்ப வைக்கும் முயற்­சியில் மிக கச்­சி­த­மாக செயற்­பட்டு வரு­கி­றது.

 இரட்டை வேடம் போடும் கைங்­க­ரி­யத்தை திறம்­படச் செய்து வரு­கி­றார்கள் என்ற மனப்­ப­தி­வு­களை உரு­வாக்கிக் கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­பது இவ்­வாட்­சியின் மீது வெறுப்பு நிலைப்­பட்­டி­ருக்கும் ஜே.வி.பி., தமிழ் தீவி­ர­வாத செயற்­பாட்­டா­ளர்கள் மற்றும் அதி­ருப்­தி­யா­ளர்­களின் கருத்­தாகும்.

முழுப்­பூ­ச­ணிக்­காயை தட்­டுச்­சோற்றில் மறைக்க முற்­ப­டு­வது போல் இன்­றைய நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது முன்­னைய ஆட்­சி­யா­ளர்­களின் அத்­து­மீ­றல்­க­ளையும் குற்றத் தொகுப்­பு­க­ளையும் குல­நாச செயல்­க­ளையும் மறைக்க முயல்­வது எவ்­வ­ளவு காலத்­துக்கு உள்­நாட்டு அரங்­கிலும் சர்­வ­தேச அள­விலும் செல்­லு­ப­டி­யாகப் போகி­றது என்­பதும் ஒரு விப­ரீ­த­மான எதிர்ப்­பார்ப்­புதான்.

இலங்­கையில் பல்­வேறு இரக­சிய முகாம்கள் பல இடங்­களில் இருந்­துள்­ள­தா­கவும் அங்கு சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு இளை­ஞர்கள் உள்­ளாக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள் என்ற விப­ரங்கள் பாரா­ளு­மன்­றத்­திலும் அதற்கு வெளி­யேயும் குற்­றச்­சாட்­டுக்­க­ளாக முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. உதா ­ர­ண­மாக கடந்த வருடம் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் ஓர் உண்­மையை வெளிக்­கொண்டு வரும் வகை யில் தகவல் ஒன்றை வெளி­யிட்­டி­ருந்தார். 

திரு­கோ­ண­ம­லை­யி­லுள்ள கடற்­படைத் தளத்தில் 35 குடும்­பங்­களும் கோத்தா முகா­மென்று அழைக்­கப்­படும் இன்­னு­மொரு முகாமில் 700 பேருக்கு மேல் தமிழ் இளை­ஞர்­களும் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்திருக்கி­றார்கள். இவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என இது­வரை யாருக்கும் தெரி­யாது. கோத்தா முகாம் தொடர்பில் முழு­மை­யான விசா­ரணை வேண்டும். சாட்­சி­ய­ம­ளிக்கும் நபர்­க­ளுக்கு உயிர் உத்­த­ர­வாதம் தரப்­ப­டு­மானால் குறித்த முகாம் தொடர்பில் சாட்­சி­ய­ம­ளிக்க பலர் தயா­ரா­க­வுள்­ள­ன­ரென சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் 2015 ஆம் ஆண்டு பெப்­ர­வ­ரியில் பாரா­ளு­மன்­றத்தில் எடுத்துக் கூறி­ய­போது;

இலங்கை அர­சாங்­கமும் இரா­ணுவ அதி­கா­ரி­களும் அதை முழு­மை­யாக எதிர்த்­தி­ருந்­தார்கள். தங்கள் மறுப்­ப­றிக்­கையை கூட வெளி­யிட்­டி­ருந்­தார்கள். திரு­கோ­ண­மலை கடற்­படைத் தளத்­தி­லுள்ள நிலக்கீழ் இர­க­சியத் தடுப்பு முகாமில் பெரும் எண்­ணிக்­கை­யான தமிழ் இளை­ஞர்­களும் யுவ­தி­களும் நீண்­ட­கா­ல­மாக தடுத்­து­வைக்­கப்­பட்டு சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்டு விசா­ரணை செய்­யப்­பட்­டுள்­ளார்கள். என்ற குற்­றச்­சாட்­டு­களை இலங்கை அர­சினர் மறுத்த நிலை­யில்தான் இலங்கை அர­சாங்­கத்தின் அழைப்பின் பேரில் இலங்கை வந்த பேர்­னாட்­டூஹேய்ம், டியங் பைக், ஏரி­யல்டு விட்ஸ்கி ஆகிய மூவர் அடங்­கிய குழு இலங்­கையில் பல­வி­டங்­க­ளுக்கு விஜயம் செய்து விசா­ர­ணை­களை மேற்­கொண்­டி­ருந்­தது.

அரச அதி­கா­ரிகள், சிவில் சமூ­கத்­தினர், காணா­மல்­போனோர் உற­வி­னர்கள் அத்­துடன் ஜனா­தி­பதி, பிர­தமர், நீதி­ய­ரசர், சட்­டமா அதிபர் என பல்­வேறு தரப்­பி­னரை சந்­தித்து உரை­யா­டிய பின் இர­க­சிய முகாம் பற்­றிய ஓர் உண்­மையை வெளி­யிட்­டி­ருந்­தது. 18.11.2015 கொழும்­பி­லுள்ள ஐ.நா. அலு­வ­ல­கத்தில் நடத்­திய ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் பல்­வேறு உண்­மை­களை வெளி­யிட்­டி­ருந்­தது. குறிப்­பாக திரு­கோ­ண­மலை கடற்­படைத் தளத்­தி­லுள்ள நிலத்தின் கீழ் இருந்த இர­க­சியத் தடுப்பு முகாம் தொடர்பில் அதிர்ச்­சி­யூட்டும் தக­வல்­களை தெரி­வித்­தமை இலங்கை அர­சாங்­கத்தை அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யி­ருந்­தது.

இவற்றின் ஆதார அடிப்­ப­டை­யி­லேயே சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு எதி­ரான குழு­வினர் இலங்கைப் பிர­தி­நி­தி­க­ளிடம் போர்க் காலச் சூழலில் இடம்­பெற்ற பல்­வேறு சித்­தி­ர­வதை குற்­றச்­சாட்­டுக்கள் எமக்கு கிடைத்­துள்­ளன. இர­க­சிய முகாம்­கங்கள் யுத்த காலத்தில் இருந்­த­தாக எமக்கு அறிக்கை இடப்­பட்­டுள்­ளது. அவ்­வாறு முகாம்கள் இருந்­தி­ருப்பின் அது எவ்­வாறு நடந்­தது. இவ்­வி­வ­காரம் குற்­றச்­சாட்டுத் தொடர்பில் இலங்கை அர­சாங்கம் மேற்­கொண்ட நட­வ­டிக்கை என்ன என்று விளக்கும் படியும் சித்­தி­ர­வ­தை­க­ளுக்­கெ­தி­ரான குழு­வினர் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்­ளனர்.

இம்­மு­காம்கள் தொடர்பில் பல்­வேறு விமர்­ச­னங்­களும் கண்­ட­னங்­களும் முன்­வைக்­கப்­பட்டு இருந்த போதிலும் இவை பற்றி முன்­னைய அர­சாங்­கத்தைப் போலவே தேசிய அர­சாங்­கமும் பரா­மு­க­மாக இருந்து கொண்டு குற்­ற­வா­ளி­களை காப்­பாற்றும் முயற்­சி­களை மேற்­கொண்­டு­வ­ரு­கி­றதே தவிர உண்மை கண்­ட­றி­யப்­ப­ட­வேண்டும். குற்­ற­வா­ளிகள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட வேண்டும். இத்­த­கைய அநீ­திகள் மீண்டும் தொட­ராமல் தடுக்­கப்­பட வேண்­டு­மென்ற கைங்­க­ரி­யத்தை முன்­னெ­டுப்­பதில் அரசு கவனம் செலுத்­த­வில்­லை­யென்ற கண்­ட­னங்கள் இன்னும் ஒரு சாராரால் முன்­வைக்­கப்­பட்ட வண்­ண­மே­யுள்­ளன.

பயங்­க­ர­வாத தடைச்­சட்­ட­மென்­பது கடந்த 38 வரு­டங்­க­ளுக்கு மேலாக இருந்து வரு­வது ஜன­நா­ய­கத்தின் உயி­ரோட்­டத்­தன்­மையை இல்­லாமல் ஆக்­கி­யி­ருப்­ப­துடன் மேற்­படி சட்­ட­மா­ னது கடந்துபோன காலம் முழு­வதும் சிறு­பான்மை, சமூ­கத்­துக்கும் இளை­ஞர்­க­ளுக்கும் எதி­ரா­கவே 90 வீத­மான அளவு பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­துள்­ளது என்ற உண்­மையை, யாரும் மறு­த­லிக்க முடி­யாது.

இச்­சட்­டத்தின் பிர­யோகம் எத்­தனை அப்­பாவி இளை­ஞர்­களை காவு­கொண்­டுள்­ளது. சிறை­வாசம் கொள்ள வைத்­தது. இன்னும் விடு­விக்­கப்­ப­டாத அப்­பாவி அர­சியல் கைதிகள் என ஏரா­ள­மான கொடூ­ரங்­களின் பின்­ன­ணியில் பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் இருந்­துள்­ளது. என்­பதை கடந்த முப்­பது வருட யுத்­தத்தில் பாட­மாகப் படித்­தி­ருக்­கிறோம். இச்­சட்டம் நீக்­கப்­பட வேண்­டு­மென்ற அழுத்­தங்கள், கோரிக்­கைகள் விடுக்­கப்­பட்­ட­போதும் அவை கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வில்­லை­யென்­பது வெளிப்­ப­டை­யான தக­வல்கள்.

யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு ஏழு வரு­டங்­க­ளுக்கு மேலா­கியும் அவற்­றுக்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இது ஒரு­பு­ற­மி­ருக்க நல்­லாட்சி அர­சாங்கம் நிறு­வப்­பட்டு 22, மாதங்கள் கடந்து போன நிலை­யி­லுங்­கூட, நீக்­கப்­ப­டு­வ­தற்­கான கால்கோள் இடப்­ப­ட­வில்லை. மாறாக, பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­துக்கு பதி­லீ­டாக அல்­லது மாற்­றீ­டாக, பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்டம் கொண்­டு­வ­ரப்­ப­டு­மென இலங்கை அர­சாங்கம் கூறிக் கொண்­டி­ருக்­கி­றது. ஏலவே இருந்­து­வரும் பயங்­க­ர­வாத சட்­டத் தின் கொடு­மை­யை­விட, கொண்­டு­வ­ர­வி­ருக்கும் பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­ட­மா­னது, மோச­மா­னது என கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் அண்­மையில் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருந்தார். இது இவ்­வாறு இருக்­கின்ற நிலையில் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர இது­பற்றி கருத்துத் தெரி­விக்­கையில்;

இலங்­கையில் புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்ட நகல்­வ­ரைபு தொடர்பில் தான் ஆட்­சே­பனை தெரி­வித்­தி­ருப்­ப­தா­கவும் முன்­னைய பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­கி­விட்டு புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்டம் சர்­வ­தேச மட்­டத்தில் சிறப்­பாக கடைப்­பி­டிக்கும் விதத்தில் அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் உறுதிப் ­பாடு கொண்­டி­ருப்­ப­தாக கூறி­யி­ருந்தார். எது எவ்­வாறு இருந்தபோதிலும் மாற்­று­வ­டி­வ ­முறை யில் பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்டம் வர­வி­ருக்­கின்­றது என்­ற­வுண்மை வெளிக்­கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.

 பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் பற்றி அறி­ஞர்­க­ளாலும் சட்­ட­வல்­லு­நர்­க­ளாலும் தெரி­விக்­கப்­ப­டு­கின்ற கருத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு பார்க்­கின்­ற­போது மேற்­படி சட்­ட­மா­னது நாட்­டுக்கு நாடு வேறு­பட்ட வலிமை கொண்­ட­தா­கவே காணப்­ப­டு­கி­ற­தென்றும் ஆனால் இலங்கை போன்று சிறு­பான்மை சமூகம் வாழும் ஒரு நாட்டில் பயங்­க­ர­வாத தடைச்­சட்­ட­மா­னது எப்­பொ­ழுதும் சிறு­பான்மை சமூ­கத்தை அடக்கி ஒடுக்­கவே பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது என்ற கருத்து முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

இலங்­கையைப் பொறுத்தவரை பயங்­க­ரவாதம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டு­விட்­டது. புலிகள் முழு­மை­யாக அழிக்­கப்­பட்டு விட்­டார்கள். மீண்­டு­மொரு விடு­த­லைப்போர் வர நாம் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்­லை­யென வீரம் பேசு­கின்­ற­வர்கள் மீண்­டு­மொரு பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் மாற்று வடி­வத்தை கொண்­டு­வ­ரு­வது நாட்டின் நன்மை கரு­தி­யென்­பதை விட சிறு­பான்­மை­யி­னரின் வேட்­கைகள் மீண்டும் தளிர்­வி­டக்­கூ­டாது என்ற முன்­னெச்­ச­ரிக்­கை­யி­னா­லே­யே­யாகும்.

ஐ.நா.வின் சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு எதி­ரான குழு வின­விய, விட­யங்­களில் இன்­ன­மொ­ரு­வ­கையில் கவனம் பெற்று நிற்­பது, போர் உக்­கி­ர­வே­ளையில் அரச படை­யினர் பாலியல் வல்­லு­றவு செயற்­பா­டு­களில் ஈடு­பட்ட குற்றம் தொடர்பில் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டதா?- என அவர்­களால் எழுப்­பப்­பட்ட சந்­தே­க­மாகும்.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் எத்­த­கைய ஆதா­ரத்தின் அடிப்­ப­டையில் விசா­ர­ணை­களை மேற்­கொள்­வது என்­பது இலங்கை அர­சாங்­கத்­துக்கும் விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கும் ஒரு தர்­ம­சங்­க­ட­மான நிலையை உரு­வாக்­கு­மென்­பது யாவ­ராலும் புரிந்து கொள்­ளக்­கூ­டிய விட­ய­மாகும். சனல் 4, போன்ற நிறு­வ­னங்­களின் ஆதா­ரங்­களின் அடிப்­ப­டையில் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மென கோரிக்­கைகள் விடப்­பட்டு வரப்­ப­டு­கின்­ற­போதும், சனல் 4, காணொளிக் காட்­சி­களில் உண்­மைத்­தன்­மை­யில்லை. அவை சோடிக்­கப்­பட்ட, வண்­ணக்­க­ல­வைகள் என்றே இலங்கை அரசு மறு­த­லித்­ததை கேட்­டி­ருக்­கிறோம். இதற்கு அப்பால் இன்­னொரு விட­யமும் கவ­னத்தில் கொள்­ளப்­படல் வேண்டும். வெளிநாட்டு விசார ணையாளர்கள் தேவையற்றது எனக் கூறிவரும் இலங்கையரசானது சனல் 4, காணொளிக் காட்சிகளை எந்தளவுக்கு ஏற்றுக்கொள்ளும் என்பது சந்தேகத்துக்குரிய விடயமே!

2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திரு கோணமலையில் இடம்பெற்ற இருவேறு சம்ப வங்கள் இற்றைவரை இலங்கை அரசுக்கு பல்வேறு சவால்களை உருவாக்கிக் கொண்டி ருக்கிறது என்பதில் ஆழமான உண்மைகள் உண்டு. 5 மாணவர் படுகொலை மற்றும் மூதூர் தொண்டர் நிறுவன பணியாளர் 17 பேர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் நீதி விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென உத்தர வாதம் அளிக்கப்பட்டபோதும், உண்மையான குற்ற வாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. 5 மாணவர்கள் படுகொலை இடம்பெற்று வருடங்கள் 10 ஆகி விட்டபோதும் நீதி விசாரணை முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை. 17 தொண்டர் நிறு வன ஊழியர் படுகொலை சார்ந்த குற்றவாளி கள் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப் படவுமில்லை. அவர்கள் நீதியின் முன் நிறுத்தப் படவுமில்லை.

இவ்வாறான அசமந்த போக்குகளும் காலக் கடத்தல்களும் தொடர்ந்து நடைபெற்று வரு கின்றதே தவிர பொறுப்பு கூறலில் இலங்கை அரசாங்கம் நிதான நிலையைக் கடைப்பிடிக்க வில்லையென்ற குற்றச்சாட்டு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தடுத்து வைத்திருக்கும் போது சித்திரவதைகளுக்கு உட்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வெளிப் படையான மற்றும் சுயாதீனமான விசார ணைப் பொறிமுறையை விரைவில் ஆரம்பிக் கவுள்ளோம் என இலங்கை அரசாங்கம் வாக்கு தத்தம் செய்து கொடுத்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் குற்றவாளிகளை கண்டுபிடித்து நீதி வழங்குவதிலும் காட்டிவரும் அசமந்த போக்குகளும் காலக்கடத்தல்களும் இலங்கை அரசாங்கத்தின் மீதான நம்பிக் கையை தொடர்ந்தும் நலிவடையச் செய்த வண்ணமேயிருக்கின்றது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-11-19#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.