Jump to content

மீல் மேக்கர் - பட்டாணி குருமா செய்வது எப்படி


Recommended Posts

பதியப்பட்டது

மீல் மேக்கர் - பட்டாணி குருமா செய்வது எப்படி

 

இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையான மீல் மேக்கர் (சோயா மீட்) குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
மீல் மேக்கர் - பட்டாணி குருமா செய்வது எப்படி
 
தேவையான பொருட்கள் :
 
மீல் மேக்கர் - 1 கப்
பட்டாணி - அரை கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன்
தனியா தூள் - 1/2 ஸ்பூன்
சீரக தூள்  - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
தேங்காய் பால் - 1/2 கப்
உப்பு - 3/4 ஸ்பூன்  
எண்ணெய் - 4 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது

செய்முறை :

* தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
 
* மீல் மேக்கரை வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நீரை வடித்து விட்டு, மீல் மேக்கரை பிழிந்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
 
* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் வதக்கவும்.
 
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* பின் அதில் மஞ்சள் தூள், சீரகப் பொடி, தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

* அடுத்து அதில் மீல் மேக்கர், தேங்காய் பால், வேக வைத்த பட்டாணி மற்றும் உப்பு சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விடவும்.

* கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.

* சுவை மிகுந்த மீல் மேக்கர் குருமா தயார்.

http://www.maalaimalar.com

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காயப்பட்ட போராளிகளுக்கு மருத்துவ பிரிவின் கள மருத்துவ வேங்கைகள் பண்டுவம் அளிக்கையில் 2008      
    • இதை தான் ரணில் அனுபவ ரீதியாக சொன்னவர் ...எல் போர்ட் அரசு எண்டு... அதுசரி.. இதையெல்லாம் தோழர் அனுரா சுங்க திணைக்களத்துக்கு போய் பார்வையிட ஏலாது .. இது என்ன சினிமாவா மூன்று மணித்தியாலத்தில் தோழர்கள் நினைத்த சோசலிஸ்ட் ரட்டையை உருவாக்குவதற்கு ..30 வருடங்களுக்கு மேல் செல்லும் அதுவரை தாக்கு பிடிக்க வேணும்...புயல்,காற்று ,ஊழல்,இனவாதம்,பூலோக அரசியல் ....இப்படி பல பூதங்கள் இவரை சுற்றி வலம் வரும்... பாகிஸ்தானில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய பிளான் போடுதோ ஒரு குறூப்
    • காயப்பட்ட போராளிக்கு மருத்துவ பிரிவின் கள மருத்துவ புலியொருவர் முதலுதவிப் பண்டுவம் அளிக்கிறார் ஓயாத அலைகள் - 3  
    • Valavan எழுதியதற்குப் பதில் எழுதியிருக்கிறேன். அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?  விடுதலைப் போராட்டத்திற்கு தாங்கள் உழைத்தவர் என்று நீங்கள் கூறுகின்ற காரணத்தினாலேயே உங்களைக் கனம் பண்ணுகிறேன். அதற்காக விபு க்களுக்கு சொந்தம் கொண்டாட நினைப்பது மாகா தப்பு,.... நினைவில் வைத்திருங்கள்.  😏
    • டாக்டர். பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை புதுக்குடியிருப்பு     பல உயிர்களைக் காத்த மருத்துவமனை. எனது உயிரைக் காத்த மருத்துவமனையும் இதுதான்!   "தொடக்கக்கால கட்டடம்"         'கட்டடப் பணிகள் நிறைவடையாத புதிய மருத்துவமனைக் கட்டடம்'       16.10.2005:   1996 ஆம் ஆண்டு இயங்கத் தொடங்கிய புதுக்குடியிருப்பு மருத்துவமனை, போர்க்காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியமைக்காகப் பெயர்பெற்ற மருத்துவர் பொன்னம்பலத்தின் நினைவாகப் பெயரிடப்பட்டது. தற்போது ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் பண்டுவம் பெற்று வரும் மருத்துவமனை, ஒரு நாளைக்கு 15 முதல் 20 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, மாதம் 30 பெரிய மற்றும் 70 சிறு அறுவைப்பண்டுவம் செய்து வருகிறது, தற்போது கூடுதல் கட்டிடங்களுடன் விரிவாக்கம் செய்யப்படுகிறது.     தகவல்: தமிழ்நெற்   'கட்டடப் பணிகள் நிறைவடைந்த மருத்துவமனை'   ''நுழைவுவாயில்''   'நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்வதற்காக வெளியில் நிழலில் காத்திருக்கிறார்கள். ஆழிப்பெரலைக்குப் பிறகு நோயாளிகளின் புதிய வருகைக்கு தற்காலிக கூடாரங்கள் கூடுதல் இடத்தை வழங்குகின்றன.'   'உள்ளூரில் பயிற்சி பெற்ற ஆய்வக நுட்பவியலாளர், நன்கு ஏந்தனப்படுத்தப்பட்ட ஆய்வகத்தில் நோயாளியிடமிருந்து அரத்த மாதிரிகளைப் பெறத் தயாராகிறார்.'   'மருத்தவர் சிவபாலன் ஒரு அறுவை சிகிச்சை குழுவை வழிநடத்துகிறார். மருத்தவர் சிவபாலன் கூறுகையில், மருத்துவமனை பணம் வழங்கு இயலுமையுடைய நோயாளிகளிடம் மட்டுமே கட்டணத்தை அறவிடுகிறது. எனவே மருத்துவமனையின் பெரும்பாலான சேவைகள் இலவசமாக செய்யப்படுகின்றன.'   'மருத்துவமனையில் உள்ள இரண்டு குளிரூட்டப்பட்ட முதன்மை அறுவை பண்டுவ அரங்கங்கள். அறுவைப்பண்டுவக் கருவிகளுடன் கூடுதலாக உள்ள தொற்றுநீக்க ஏந்தனங்கள் மற்றும் மயக்க மருந்து ஏந்தனங்கள் மருத்துவமனையில் மூன்று அறுவை பண்டுவங்கள் செய்ய அனுமதிக்கிறது.'   'பொன்னம்பலம் மருத்துவமனையில் நன்கு ஏந்தனப்படுத்தப்பட்ட பல் மருத்துவ ஆய்வுக்கூடம் உள்ளது, அங்கு சராசரி வழக்கமான துப்புரவு அமர்வுகள் மற்றும் நிரப்புதல்கள் மற்றும் மிகவும் சிக்கலான அறுவை பண்டுவ முறைவழிகள் நிகழ்த்தப்படுகின்றன.'   'நோர்வேயைச் சேர்ந்த இரைப்பைக் குடலியல் வல்லுநர் பெர் ஆர்தர் இயொகன்சன் டாக்டர் பொன்னம்பலம் மருத்துவமனைக்குச் சென்று செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு ஏந்தனக்கள் பயன்படுத்துதல் மற்றும் நோயறிதல் நுட்பங்களைப் பற்றி பயிற்சி அளித்தார்.'   'கலிபோர்னியாவைச் சேர்ந்த இருதயநோய் வல்லுநர் மரு.ஷான் கே. சுந்தர் வன்னி மருத்துவ வசதிகளுக்கு பயிற்சி அளிக்கவும், இதய நோய்களுக்கான பண்டுவத்தை முன்னேற்ற உதவவும் வழக்கமாக வருகை தருகிறார்.'   'மகளிர் நலவியல் மருத்துவர் நவநீதன் உள்ளூர் மருத்துவ ஊழியர்களுக்கு ஆற்றுகிறார்.'   'அறுவை பண்டுவ அரங்கில் அமெரிக்க மகப்பேறு மருத்துவர் சாமுவேல்'   'அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இருதயநோய் வல்லுநரான மருத்துவர் மனோமோகன், உள்ளூர் ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கவும், அறுவை பண்டுவம் செய்யவும் பொன்னம்பலம் மருத்துவமனைக்கு வருகைதந்தார்.'   'நோர்வேயைச் சேர்ந்த பல் மருத்துவர்கள் சிவகணேசன் மற்றும் சிவபிரான் ஆகியோர் உள்ளூர் மருத்துவப் பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஒரு நோயாளியுடன் வேலைசெய்கின்றனர்.'   'அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த இரையகக் குடலியவியலாளர் மருத்துவர் மூர்த்தி, ஒரு நோயாளியைக் நோயறிவதில் மருத்துவர் சிவபாலனுக்கு உதவினார்.'   'மருத்துவர் கணேந்திரன், ஒரு மயக்க மருத்துவர், மருத்துவமனையில் அறுவை பண்டுவத்திற்கு உதவுகிறார்.'   'நியூசிலாந்தைச் சேர்ந்த ENT அறுவை பண்டுவ வல்லுநர் மருத்துவர் ராபர்ட் பெஞ்சமின், பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையில் நோயாளியை பரிசோதிக்கிறார்.'   'நோர்வே சிறுநீரக மருத்துவர் மருத்துவர் ஃவாச்சால்ட், உள்ளூர் மருத்துவர்களுக்கு சிறுநீரகம் தொடர்பான நோய்களில் தனது வல்லுனத்துவத்தை வழங்குவதற்காக பொன்னம்பலம் மருத்துவமனைக்கு தொடர்ந்து வருபவர் ஆவார்.'   'மலேசியாவைச் சேர்ந்த எலும்பியல் அறுவை பண்டுவ வல்லுநர் மருத்துவர் சிவானந்தன், ஒரு நோயாளியின் கால் முறிவுக்கு அறுவை பண்டுவம் செய்கிறார்.'   'ஆஸ்திரேலிய எலும்பியல் அறுவை பண்டுவ வல்லுநர், மரு. கிறிஸ் ராபர்ட், அறுவை பண்டுவத்திற்காக மருத்துவமனை அறுவை பண்டுவ வசதிகளைப் பயன்படுத்துகிறார்.'   'பிரித்தானிய கண் அறுவை பண்டுவ வல்லுநர், மருத்துவர் புவனச்சந்திரன், கண் அறுவை பண்டுவம் செய்வதில் உள்ள சிக்குப்பிக்குகளில் ஊழியர்களுக்கு உதவுகிறார்.'   'நோர்வே ஞெகிழி அறுவை பண்டுவ வல்லுநர், மருத்துவர் இலூயிசு டி வீர்ட், முகக் குறைபாட்டைச் சரிசெய்வதற்கு ஞெகிழி அறுவை பண்டுவம் செய்ய வேண்டியதன் கட்டாயத்தேவை குறித்து நோயாளியிடம் பேசுகிறார்.'   'இங்கிலாந்தைச் சேர்ந்த ஞெகிழி அறுவை பண்டுவ வல்லுநர் மருத்துவர் சார்லசு விவேகானந்தன், ஆண் நோயாளிக்கு அறுவை பண்டுவம் செய்கிறார்.'   'பிரித்தானியாவைச் சேர்ந்த ஞெகிழி அறுவை பண்டுவ வல்லுநர், மருத்துவர் பிலிப் கிரே, ஒரு பெண் நோயாளிக்கு உதவும் அறுவை பண்டுவத்தைத் தீர்மானிக்கிறார்.'   'அமெரிக்காவின் இசுரான்ஃவோர்ட்டு பல்கலைக்கழகத்தின் அறுவை பண்டுவக் குழு, டாக்டர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையில் பணிபுரிந்து, உள்ளூர் மருத்துவர்களுக்கு அவர்களின் மருத்துவ அறிவூட்டுகின்றனர்.'   'அமெரிக்காவில் உள்ள கலிஃவோர்னியாவைச் சேர்ந்த குழந்தை மருத்துவர் மருத்துவர் காருண்யன் அருளானந்தம், உள்ளூர் செவிலியர் உதவி செய்யும் போது குழந்தையை பரிசோதிக்கிறார்.'   'நியூயோர்க்கைச் சேர்ந்த ENT அறுவை பண்டுவ வல்லுநர் மருத்துவர் ஜெயலிங்கம், டாக்டர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையில் ஒரு பெண் நோயாளியின் கண்களைப் பரிசோதிக்கிறார்.'
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.