Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியலமைப்பும் சர்வஜன வாக்கெடுப்பும்

Featured Replies

புதிய அரசியலமைப்பும் சர்வஜன வாக்கெடுப்பும்

 

 வட, ­கி­ழக்­குக்கு    வெளி­யே­யுள்ள  மாகா­ணங்கள் அல்­லது  மாவட்­டங்­களில் மலை­யகம் மற்றும் ஒரு­சில மாவட்­டங்­களில் சாத­க­மான சூழ்­நி­லை­யொன்று உரு­வாக்­கப்­பட்­டாலும்  பெரும்­பா­லான மாவட்­டங்­களில் இன­வாத தீ கொழுந்­து விட்­டெ­ரியும் சூழ்­நி­லை­யொன்றை உரு­வாக்க இன­வா­தி­களும் மத­வா­தி­களும் மஹிந்த  தரப்­பி­னரும் தேசிய மித­வா­திகள் என்று கூறிக் ­கொண்­டி­ருக்­கின்ற பேரின புத்­தி­ஜீ­வி­களும் காத்­துக் ­கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­பது வெளிப்­ப­டை­யான யதார்த்தம்.

 

புதிய அர­சியல் அமைப்­பிற்கு பாரா­ளு­மன்­றத் தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை கிடைக்­கப்­ பெற்று நிறை­வேற்­றப்­பட்­டாலும் பெரும்­பான்மை சிங்­க­ள­வர்­களும் புதிய அர­சியல் சாச­னத்­துக்கு ஆத­ரவு அளித்தால் மட்­டுமே அது நடை­மு­றைக்குக் கொண்­டு­வ­ரப்­படும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்த 19 ஆம் திகதி சபையில் பகி­ரங்­க­மாக அறி­வித்­தி­ருந்தார்.

அர­சியல் நிர்­ணய சபை­யா­னது சபா­நா­யகர் தலை­மையில் கூடிய வேளை அர­சியல் அமை ப்பு சபையின் உப­கு­ழுக்­களின் ஆறு அறிக்­கை­ க­ளையும் சமர்ப்­பித்து உரை­யாற்றும் போதே பிர­தமர் இவ்­வாறு தெரி­வித்­தி­ருந் தார். இது விடயம் தொடர்பில் எதிர்­க்கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன், எதிர்க்­கட்­சி­களின் பிர­தம கொற­டா­வான ஜே.வி.பி.யின் தலைவர் அநு­ர­கு­மார திஸா­நா­யக்க, பொது எதி­ர­ணியைச் சேர்ந்த தினேஷ் குண­வர்த்­தன ஆகியோர் தமது கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருந்­தனர்.

இங்கு கருத்தை முன்­வைத்த தமிழ்த் தேசி யக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மா­ன இரா.சம்­பந்தன் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறிய கருத்­துக்கு அல்­லது அறி­வித்­த­லுக்கு அனு­ச­ரணை வழங்­கு­வது போல் கூறிய விட­ய­மா­ன­து தமிழ் மக்கள் மத்­தியில் குறிப்­பாக வட­கி­ழக்கு மக்கள் மத்­தி யில் சிறிய சலன அலை­யையும் சஞ்­ச­லத்­தை யும் உண்­டாக்­கி­ விட்­டது போல் ஒரு­மா­யத்­தன்மை தோற்றம் பெற்­றி­ருக்­கி­றது.

முதலில் சம்­பந்தன் அவர்கள் கூறிய கூற்றின் மூலத்தை அறிந்து கொள்­வது நன்று.

வழி­ந­டத்தல் குழுவில் ஆரா­யப்­படும் விட­யங்கள் அர­சியல் நிர்­ணய சபையில் கலந்­து­ரை­யா­டப்­பட்டு அதன்பின் அது அமைச்­ச­ர­வைக்கு அனுப்­பி­ வைக்­கப்­படும். அங்கு அதற்கு அனு­ மதி வழங்­கப்­பட்ட பின் மீண்டும் அது பாரா­ளு­மன்­றத்தில் அர­சியல் நிர்­ணய சபைக்கு கொண்டு வரப்­படும். பாரா­ளு­மன்­றத்தில் மூன் றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் அது நிறை­வேற்­றப்­பட்­டாலும் மக்கள் கருத்­த­றிய சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பி­னூ­டாக மக்­களின் அனு­ம­தியைப் பெற்­றுக் ­கொள்­வது மிகவும் அவ­சி­ய­மா­னது என தனது ஆணித்­த­ர­மான கருத்தை முன்­வைத்­துள்ளார் இரா.சம்­பந்தன்.

புதிய அர­சியல் அமைப்பு பாரா­ளு­மன்­றத்தால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டாலும் அதனை மக்­ களே இறு­தியில் தீர்­மா­னிக்க முடி­யு­மென்­ப­து டன் அதற்­கான இறைமை நாட்டு மக்­க­ளுக்­கே­யுள்­ளது என்று அழுத்தம் திருத்­த­மாக எதிர்க்­கட்சித் தலைவர் தெரி­வித்­துள்ளார்.

தேசிய பாரா­ளு­மன்­ற­மொன்றின் எதிர்க்­கட் சித் தலைவர் என்ற வகையில் அவரின் கூற்று (கருத்து) ஏற்­றுக் ­கொள்­ளக்­கூ­டிய வகி­ தன்மை கொண்­ட­தாக இருக்­கின்­ற­போ­திலும் தமிழ் மக்கள் மத்­தியில் மறை­தன்மை கொண்ட ஒரு அச்­சத்­தையும் சல­னத்­தையும் உரு­வாக்­கி­விட்­டதோ? என்று எண்ண வைக்­கி­றது.

நீண்­ட­காலப் போராட்­டங்­க­ளுக்­குப் பின் அர ­சியல் தீர்­வொன்றைப் பெறும் வாய்ப்பு உரு­வா­கி­யி­ருக்­கி­றது என அதீத நம்­பிக்கை கொண்­ட­வர்­க­ளாக தமிழ் மக்­க­ளு­டைய எதிர்­பார்ப்பு தற் ­பொ­ழுது விரிந்­தி­ருக்­கி­றது.

இன்­னு­மொரு புறம் இலங்­கையின் இரு பெரும்­பான்மைக் கட்­சி­களும் இணைந்து ஒரு தேசிய அர­சாங்­கத்தை நிறுவி வர­லாற்று மாற்­றத்தை உரு­வாக்­கி­யி­ருக்கும் இச்­சந்­தர்ப்­ப­மா­னது அனு­கூ­ல­மான சூழ்­நி­லையைக் கொண்டு வந்­துள்­ளது. இச்­சூழ்­நிலை மாற்­ற­ம­டை­யாது என்ற உறு­தியும் இதன் பின்­ன­ணி­யாக இருந்­துள்­ளது.

இத்­த­கைய சாத்­தி­ய­மான சூழ்­நி­லையில் தமிழ் மக்­களின் நீண்­ட­கால கோரிக்­கைகள், அபி­லா­ஷைகள், எதிர்­பார்ப்­புகள் பூர்த்தி செய்­யப்படும் வகையில் அர­சியல் சாச­ன­மொன்று வரை­யப்­பட்டு அச்­சா­சனம் பெரும்­பான்மை வாக்­குப்­ப­லத்­துடன் பாரா­ளு­மன்ற வள­வுக்­குள்­ளேயே நிறை­வேற்­றப்­பட்டு அமுல்­ப­டுத்­தப்­படும் என்ற நம்­பிக்கை கொண்­ட­வர்­க­ளாக இருக்கும் இச்­சந்­தர்ப்­பத்­தில் தான் பிர­தமர் மற்றும் எதிர்க்­கட்சித் தலைவர் ஆகி­யோ­ரு­டைய சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு அர­சியல் சாசனம் விடப்­ப­டு­மென்ற அறி­வித்தல் தலையில் குண்­டைப்­ போட்ட அதிர்ச்­சியை உரு­வாக்­கி­யுள்­ளது.

நல்­லாட்சி அமைக்­கப்­பட்ட போதும் சரி. அது ஓடிக் ­கொண்­டி­ருந்த போதிலும் சரி தமிழ் மக்­களின் கற்­ப­னைகள் மேற்­போந்த எண்ணம் கொண்­ட­தா­கவே இருந்­துள்­ளது.

யார் என்ன கூறிய போதிலும் தமிழ் மக்­களின் நீண்­ட­காலப் பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வொன்று கொண்­டு­வ­ரப்­படும். அந்த அர­சி யல் தீர்வை உரு­வாக்­கு­வ­தற்­கான பொறி­மு­றை­யாக புதிய அர­சியல் சாச­ன­மொன்று உரு­வாக்­கப்­ப­டு­மென்ற கருத்து நல்­லாட்­சி­யா­ளர்­களால் முன்­வைக்­கப்­பட்ட போது உண்­மையில் தமிழ் மக்கள் என்ன எண்ணம் கொண்­டி­ருந்­தார்கள் எனில் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்க்கும் பிர­தான இலக்கு கொண்­ட­தா­கவே அர­சியல் சாசனம் உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது என்ற நம்­பிக்­கையே மேலோங்கி நின்­றது என்­பதே உண்மை. இதை இரத்­தினச் சுருக்­க­மாகக் கூறப்­போனால் தமிழ் மக்­களின் பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்­கான ஒரு அர­சியல் சாச னம் உரு­வாகப் போகி­றது என்ற நம்­பிக்­கை­ வா­தமே தலை­தூக்கி நிற்­கின்­றது. ஆனால் அது நாட்­படப் பட புதிய பரி­மா­ணங்­களைப் பெறத் ­தொ­டங்­கி­யது. எவ்­வா­றெனில் சிறு­பான்மை மக்­களின் அடிப்­படைப் பிரச்­சி­னை­க­ளுக்கு பரி­காரம் காணும் சாச­ன­மாக மாற்­ற­ம­டைந்து இப்­பொ­ழுது நாட்டு மக்­க­ளுக்­கென அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படும் சிறு­பான்மைச் சமூகம், சிங்­கள பெரும்­பான்மைச் சமூகம் ஆகி­ய­வற்­றுக்­கான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் அர­சியல் சாச­ன­மென்ற பரந்த பரி­ணா­மத்தைப் பெற்­றி­ருப்­பதை காண முடியும்.

அர­சியல் சாச­ன­மொன்று குறித்த இனத்­துக்­கென்றோ, சமூ­கத்­துக்­கென்றோ உரு­வாக்க முடி­யாது. உரு­வாக்­கப்­ப­டு­வ­தில்­லை­யென்ற அர­சியல் தத்­துவம் இருக்­கின்ற போதும் தமிழ் மக்­களைப் பொறுத்­த­வரை அவ்­வா­றா­ன­தொரு கருத்தைக் கொண்­ட­வர்­க­ளா­கவே காணப்­பட்­டார்கள் என்­பதே யதார்த்தம். ஏனெனில் 13 ஆவது திருத்தம் கொண்டு வரப்­பட்ட போது இக்­க­ருத்து வலி­யு­றுத்­தப்­பட்­டது. ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன அவர்­களால் 1978 ஆம் ஆண்டு சன­நா­யக சோச­லிசக் குடி­ய­ரசின் அர­சியல் அமைப்பு உரு­வாக்­கப்­பட்­ட­போது பெரும்­பான்மைச் சமூ­க­மான சிங்­கள மக்­களின் நலனும் தேவை­களும் கருத்திற் கொள்­ளப்­பட்­டதே தவிர, சிறு­பான்மைச் சமூ­கத்தின் எந்­த­வொரு அபி­லா­ஷை­களும் கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வில்லை என்­ப­தே­யுண்மை.

இலங்­கையில் சன­நா­யக பாரம்­ப­ரி­யங்­களை அறி­முகம் செய்த பிரித்­தா­னி­யர்­க­ளாக இருக்­கலாம். அதன்பின் சுதந்­திர இலங்­கையின் ஆட்­சி­யா­ளர்­க­ளாக இருக்­கலாம். அர­சியல் சாச­னங்­களை உரு­வாக்­கிய போதெல்லாம் மக்­களின் ஒப்­பங்­கோடல் என்ற சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு அவர்கள் செல்ல விரும்­ப­வே­யில்லை. சோல்­பரி அர­சியல் யாப்பை உரு­வாக்­கிய போது மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஆலோ­ச­னை­க ளைப் பெற்­றுக் ­கொண்டு யாப்பு உரு­வாக்­கப்­பட்­டது. சிறு­பான்மைச் சமூகம் பாதிப்­ப­டையக் கூடாது என்­ப­தற்­காக 29 ஆம் சரத்து, மேல்­சபை, நிய­மன உறுப்­பி­னர்கள், கோமறைக் கழ கம் என்ற மாற்­றீ­டுகள் கொண்டு வரப்­பட்­டது. ஆனால் 1972 ஆம் ஆண்டு முன்னாள் பிர­த மர் ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்க தலை­மை­யி­லான அர­சாங்­கமோ அதன் பின்னர் 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன அவர்­களால் உரு­வாக்­கப்­பட்ட சோச­லிஷ யாப்­புக்கோ எவ்­ வித ஆலோ­ச­னையும் மக்கள் அபிப்­பி­ரா­யங்­க ளும் பெறப்­ப­டா­மலே நடை­மு­றைக்கு கொண்­டு­ வ­ரப்­பட்­டது.

முன்னாள் ஜனா­தி­ப­தி­யான ஜே.ஆர்.ஜெய­வர்­த்தன தனக்கு கிடைத்த 140 க்கு மேற்­பட்ட மேல­திக பெரும்­பான்மை கார­ண­மாக அதிலும் எதிர்க்­கட்­சி­யான ஸ்ரீலங்கா சுதந்­தி ரக் கட்சி ஒட்டு மொத்­த­மாக 08 ஆச­னங்­களை மாத்­தி­ரமே பெற்­றி­ருந்த நிலையில் தனது அர­சாங்­கத்­துக்குக் கிடைத்த பெரும்­பான்மைப் பலத்தின் கார­ண­மாக எவ்­வித அபிப்­பி­ரா­யத்­தையோ, ஆலோ­ச­னை­யையோ பெற்­றுக் ­கொள்­ளாமல் புதிய அர­சியல் சாச­னத்தைக் கொண்டு வந்தார்.

ஜே.ஆர். அவர்­களால் உரு­வாக்­கப்­பட்ட அர­சி யல் சாச­ன­மா­னது சிறு­பான்மைச் சமூ­கத்தின் அபி­லா­ஷை­க­ளையோ, தேவை­க­ளையோ சிறி­ய­ள­வேனும் பொருட்­ப­டுத்­தாமல் கொண்டு வரப்­பட்­டதன் கன­தி­யான விளை­வு­க­ளையே இன்று வரை இலங்­கையில் சிறு­பான்மைச் சமூகம் அனு­ப­விக்கும் பிரச்­சி­னை­க­ளுக்கு மூல உள்­ளீ­டாக அமைந்­தி­ருக்­கின்­றது என்­பது மறுக்­கப்­ப­ட­ மு­டி­யாத உண்­மை­யாகும்.

இவ்­வா­றான நடை­மு­றையில் தான் பிர­தமர் கருத்­தான மூன்றில் இரண்டு பெரும்­பான்மை கொண்டு பாரா­ளு­மன்றில் புதிய அர­சியல் சாச னம் நிறை­வேற்­றப்­பட்­டாலும் அது மக்­களின் ஆத­ரவைப் பெற சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு விடப்­ப­டு­மென்று கூறி­யுள்ளார்.

பிர­தமர் இன்­னு­மொரு விட­யத்­தையும் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார். இப்­பா­ரா­ளு­மன்­றத்தில் எந்­த­வொரு கட்­சிக்கும் பெரும்­பான்மை கிடைக்­கா­மை­யா­னது அர­சியல் அமைப்பை தயா­ரிக்கும் செயற்­பாட்­டுக்கு பல­மாக அமைந்­துள்­ளது. சக­லரின் கருத்­து­ க்க­ளுக்கும் இட­ம­ளிக்­கப்­ப­டு­வ­துடன் அர­சியல் சாசனம் பற்றி நாட்டு மக்கள் கலந்­து­ரை­யாட சந்­தர்ப்பம் அளிக்­கப்­ப­டு­மென்றும் கூறி­யுள்ளார்.

பிர­த­மரின் இவ்­வெ­ளிப்­ப­டை­யான கருத்­தா­னது சன­நா­யகப் பாரம்­ப­ரி­யங்­க­ளுக்கு அமைய ஏற்­றுக் ­கொள்­ளப்­ப­டக் ­கூ­டிய கருத்­தாக இருந்த போதிலும் இன­வாதம், மத­வாதம், பேரினக் கெடு­பி­டிகள் மலிந்­துபோய்க் கிடக்கும் இந்­நாட்டில் சம­தன்­மை­யான விட்­டுக்­கொ­டுப்­பு­க­ளுக்கும் ஏற்­றுக் ­கொள்­ளல்­க­ளுக்கும் எங்கே இட­மி­ருக்­கப்­போ­கி­றது என்­பதே தமிழ் மக்கள் மத்­தி­யிலும் முஸ்லிம் சமூ­கத்­துக்கு இடை­யி­லை­யேயும் தோன்­றி­யுள்ள சந்­தே­கங்­க­ளாகும்.

புதிய அர­சியல் அமைப்பைத் தடுப்­ப­தற்கு புத்­த­பிக்­குகள், இன­வாத தலை­வர்கள், மஹிந்த ஆத­ர­வ­ணி­யினர், ஆளும் அர­சாங்­கத்­துக்கு எதி­ரான புத்­தி­ஜீ­விகள் என்ற வகையில் அணி­வ­குத்து நிற்­கின்ற நிலையில் தமிழர்கள் எதிர்­பார்க்­கின்ற அர­சியல் தீர்­வொன்றைப் பெற ­மு­டி­யுமா? இப்­பா­ரா­ளு­மன்­றத்­துக்குள் சாத்­தி­ய­மான நிலை­யொன்றைக் கொண்­டு­ வந்­தாலும் அதற்கு வெளியே சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு ஒன்றின் மூலம் வெற்­றி­ கொள்ளும் கள­நிலை உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றதா என்­பதே இன்று எழுந்­துள்ள கேள்­வி­யாகும்.

சர்­வஜன வாக்­கெ­டுப்­பென்­பது உரு­வாக்கக் கூடிய இரட்டைச் சூழ்­நி­லை­களை ஆராய்ந்து பார்ப்­போ­மானால் தமிழ் மக்கள் நீண்­ட­கா­ல­மாக எதிர்­பார்க்கும் மற்றும் கோரி­ வரும் இரண்டு விட­யங்கள் அர­சியல் சாசன உரு­வாக்­கத்­துக்குச் சவா­லாக இருக்­கின்­றது, இருக் கப் போகின்­றது என்­பது அனை­வரும் புரிந்து கொண்­டுள்ள விடயம். ஒன்று சமஷ்டி அமைப்பு முறை­யி­லான அர­சியல் தீர்வு மற்­றொன்று வட­, கி­ழக்கு இணைந்­த ­வ­கை­யி­லான பிராந்­திய பலம் கொண்ட ஆட்­சி­முறை.

இவை­யி­ரண்­டு­மற்ற அர­சியல் தீர்வை நாம் நினைத்துக் கூடப் பார்க்கப் போவ­தில்­லை­யென்ற உறுதி கொண்­ட­வர்­க­ளா­கவே இன்று வரை த.தே.கூ. அமைப்­பி­னரும் ஏனைய தமிழ்த் ­த­ரப்­பி­னரும் இருந்து வரு­கின்­றனர். சமஷ்டி என்ற பதத்தை தவிர்த்துக் கொண்­டாலும் அத ற்கு மாற்­றீ­டான பதத்தைப் பாவித்து சமஷ்டி முறை­யி­லான தீர்­வொன்றைத் தர­ வேண்­டு­மென்ற அழுங்­குப்­பி­டி­யி­லி­ருந்து தமிழ்த் ­த­ரப்­பினர் கரைந்து போக­வில்லை.

தமிழ் மக்கள் கோரும் சமஷ்டி முறை­யி­லான அர­சியல் சாச­ன­மொன்று வரை­யப்­பட்டு உச்ச அள­வி­லான அதி­கா­ரங்கள் உள்­வாங்­கப்­ப­டு­மாயின் இவ்­வகை அர­சியல் சாச­ன­மொன்று இலங்­கை­யி­லுள்ள எத்­தனை மாகா­ணங்­களில், மாவட்­டங்­களில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பில் வெற்றி பெறு­மென்­பது கற்­ப­னையில் கூட கணி க்க முடி­யாத விட­ய­மாகக் காணப்­படும்.

வட, ­கி­ழக்­குக்கு வெளி­யே­யுள்ள மாகா­ணங் கள் அல்­லது மாவட்­டங்­களில் மலை­யகம் மற்றும் ஒரு­சில மாவட்­டங்­களில் சாத­க­மான சூழ்­நி­லை­யொன்று உரு­வாக்­கப்­பட்­டாலும் பெரும்­பா­லான மாவட்­டங்­களில் இன­வாத தீ கொழுந்­து­விட்­டெ­ரியும் சூழ்­நி­லை­யொன்றை உரு­வாக்க இன­வா­தி­களும் மத­வா­தி­களும் மஹிந்த தரப்­பி­னரும் தேசிய மித­வா­திகள் என்று கூறிக் ­கொண்­டி­ருக்­கின்ற பேரின புத்­தி­ஜீ­வி­களும் காத்­துக் ­கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­பது வெளிப்­ப­டை­யான யதார்த்தம்.

தமி­ழீ­ழத்­துக்­கான புதிய சாச­னமே அர­சியல் சாசனம். நாட்டைப் பிரிப்­ப­தற்­கான பட்­ட­யமே புதிய அர­சியல் சாச­ன­மென்ற விஷ­மத்­த­ன­மான பிர­சா­ரங்­க­ளையும் வியாக்­கி­யா­னங்­க­ளையும் நெருப்­பைப் போல் கக்­கிக் ­கொண்­டி­ருக்­கி­றார் கள் ஒரு குழு­வினர்.

தென்­னக நிலை இவ்­வாறு இருக்­கும்­போது வட, ­கி­ழக்­கி­லுள்ள எட்டு மாவட்­டங்­க­ளி­லுள்ள இன்­றைய நிலையைப் பரி­சோ­தித்துப் பார்ப்­போ­மாயின் வடக்­கி­லுள்ள முல்­லைத்­தீவு மாவட்டம், வவு­னியா, மன்னார் மாவட்­டங்­களில் 2009 ஆம் ஆண்­டுக்குப் பின் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள குடி­யேற்­றங்கள், தொழில்­வாய்ப்­புகள், பௌத்­த­மத விஸ்­த­ரிப்­புகள்,இரா­ணு­வச்­ செ­றி­வுகள், படை­களின் பரப்­பாண்­மைகள் அனைத்­துமே இன­வி­கி­தா­சா­ரத்­துக்கு சாவு­மணி அடிக்கும் சூழ்­நி­லையை உரு­வாக்கிக் கொண்­டி­ருக்­கி­ன்றன. இவர்கள் அனை­வ­ருமே மேற்­படி தீர்­வுக்கு எதி­ ரான வியூ­கங்­க­ளா­கவே பயன்­ப­டுத்­தப்­ப­டு­வார் கள், பயன்­ப­டப் ­போ­கி­றார்கள்.

இது ஒரு­பு­ற­மி­ருக்க கிழக்கின் நிலை­மைகள் இன்னும் மோச­மான சூழ்­நி­லை­யையே படம்­பி­டித்துக் காட்­டு­கி­றது.

அம்­பாறை மாவட்டம் எமது கையை­விட்டு கழன்று போன­ மா­வட்­ட­மா­கவே இப்­பொ­ழுது கணிக்­கப்­ப­டு­கி­றது. திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் நிலை­மைகள் இன்­னு­மொரு புதிய வடி­வத்தைக் கொண்டு வளர்ந்­து­ கொண்­டி­ருக் ­கி­றது. இவை அனைத்­தி­னு­டைய பிர­தி­கூ­லங்­க­ளையோ அநு­கூ­லங்­க­ளையோ பார்ப்­போ­மா யின் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பென்­பது வட­கி­ழக் கில் கூட தனது ஆதிக்­கத்தை இழந்­து­ வி­டுமோ என்ற பயமே தமிழ் மக்கள் மத்­தியில் எஞ்­சி­ நிற்­கி­றது.

சில சம­யங்­களில் புள்­ளி­வி­ப­ரங்கள் அல்­லது கடந்த கால அனு­ப­வங்­க­ளுக்கு அப்­பாற்­பட்ட கார­ணி­களும் சில தீர்­மா­னங்­களை தீர்­மா­னிக்க முடி­யு­மெனக் கூற ­மு­டிந்­தாலும் இவ்­வி­டயங்­களை அரசு எப்­படி தாக்குப் பிடித்து சாதிக்­கப் ­போ­கி­றது என்­பதில் தான் எல்­லாமே அடங்­கி­யுள்­ளது. இது இவ்­வாறு ஒரு­பு­ற­மி­ருக்க அர­சியல் சாச­ன­மா­னது ஒன்­றை­யாட்­சிக்குள் அர­சியல் தீர்வை அடைக்க முற்­ப­டு­மாயின் அதா­வது சமஷ்டி வடி­வத்­தையோ அல்­லது வட, ­கி­ழக்கு இணைப்­பை­யோ­உ­றுதி செய்­யாத ஒரு கன­தி­யற்ற அர­சியல் சாசனம் உரு­வாக்­கப்­பட்டு அவற்­றுக்­கான சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பின் வட, ­கி­ழக்கு நிலை­மையை சிறிது அனு­மா­னித்துப் பார்ப்­போ­மாயின் இச்­சா­ச­னத்தை வட­கி­ழக்கு மக்கள் ஏற்­றுக் ­கொள்­ளாத அசாத்­திய நிலை­யொன்று உரு­வாகும். இன்­னு­மொ­ரு­வ­கையில் கூறு­வ­தானால் இச்­சா­ச­னத்தை 1972ஆம் ஆண்டு அர­சியல் அமைப்பை மக்கள் பகிஷ்­க­ரித்­தது போன்­ற­தொரு சூழ்­நிலை உரு­வாக வாய்ப்பு ஏற்­ப­டலாம். இவ்­வா­றா­ன­தொரு சாச னம் தென்­ப­குதி மக்­களால் ஏற்­றுக் ­கொள்­ளப்­பட்டு பெரும்­பான்மை செல்­வாக்­குடன் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு வெற்­றியும் பெறலாம்.

ஆனால் வட­கி­ழக்கு மக்­களைப் பொறுத்­த­வரை நீண்­ட­கால இனப்­பி­ரச்­சி­னைக்கு சமஷ்டி முறை­யி­லான அர­சியல் தீர்வே உகந்­த­தா­கவும் உரி­ய­தா­கவும் இருக்­க­ மு­டி­யு­மென்­பதை கடந்த 70 வரு­டங்­க­ளுக்கு மேலாக வலி­யு­றுத்தி வரு­கின்­றார்கள் என்­பது அர­சாங்கம் அறி­யா­தொரு விட­ய­மல்ல.

கடந்த புதன்­கி­ழமை (22.11.2016) இலங்கை மன்­றக்­கல்­லூ­ரியில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­ போது வடக்கு முதலமைச்சர் விக்­கி­னேஷ்­வரன் அர­சியல் தீர்வு பற்றி விளக்­கு­கையில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வாக சமஷ்டி முறையே ஏற்­றது என்­பதில் மாற்­றுக்­க­ருத்து இல்லை. அதனால் தான் நாம் சமஷ்டி கோரிக்­கையில் உறு­தி­யா­க­வுள்ளோம். சமஷ்டி முறை­யி­லான தீர்வை முன்­வைப்­ப­தற்கு மறுத்­தால்தான் மாற்­றுத்­திட்டம் பற்றி யோசிக்க வேண்­டி­ வரும் என அழுத்தம் திருத்­த­மா­கவும் ஆணித்­த­ர­மா­கவும் வடக்கு முதல் அமைச்சர் கூறி­யுள்ளார்.

அர­சியல் சாச­னத்தில் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற இன்­னு­மொரு விடயம் வட, ­கி­ழக்கு இணைப்­பாகும். இவ்­வி­ணைப்­பா­னது அர­சி யல் சாச­னத்தின் வழி உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண் டும். வட, ­கி­ழக்கு தமிழர் தாயகம் அனைத்து முறை­க­ளிலும் இவ்­விரு பிர­தே­சங்­களும் ஒரே பண்பைக் கொண்­ட­வை­யென்­பது தமிழ்த்­ த­ரப்­பி­ன­ரு­டைய வாத­மாகும். இது­வி­ட­யத்தில் த.தே.கூட்­ட­மைப்பும் உறு­தி­யான நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருக்­கி­றது என்­பது அனை­வ­ராலும் ஏற்­றுக் ­கொள்­ளப்­பட்­ட­ வி­டயம்.

வட­கி­ழக்கு பிரிக்கப்பட்டதன் பின்பும் (16. 10.2006) குறிப்பாக கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டதன் பின் (10.03.2008) கிழக்கு பிரிந்திருக்கப்பட வேண்டுமென்ற வாதம் வலிமைபெறத் தொடங்கியது. அண்மைக்காலமாக ஆட்சியாளர்கள் உட் பட சிங்களத்தலைமைகள் மற்றும் சில முஸ் லிம் தலைமைகள், பேரினவாதிகள் இணை ப்புக்கு கடும் எதிர்ப்புக் காட்டிக் கொண் டிருப்பதைக் காண்கின்றோம் இதற்குப் பல பின்புலங்கள் இருக்கலாம். நியா­யங்­க­ளும் கூறப்படுகின்றன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களே இணைப்புக்கு வாய்ப் பில்லை என்று கூறியுள் ளார்.

இதேவேளை தென்னிலங்கை சக்திகள் இல்லாத, பொல்லாத கற்பனைக்கு எட் டாத சாதனங்களையெல்லாம் பறைசாற் றிக் கொண்டு கூக்குரல் இட்டும் வருகின்றா ர்கள். இவ்வாறானதொரு நச்சு சூழ்நிலை யில் புதிய அரசியல் சாசனமானது வட, கிழக்கு இணைப்பு பற்றி ஏதாவது வியாக்கியானத்தை செய்ய முயலுமாயின் விதந்துரைப்புகள் செய்யப்படுமாயின் சர்வஜன வாக்கெடுப்பு என்ற ஒப்பம்கோடல் தனது வெற்றிக் கோட்டை எட்ட எவை? எவை? சவாலாக அமையு மென்பதை அரச தரப்பினர் உணராம லில்லை.

இதேவேளை இணைப்பு பரிந்துரை செய்யப் பட்டவில்லையாயின் தமிழ் மக்களின் நீண்ட காலப் போராட்டம் மாற்று வடிவம் பெற வேண் டிய தேவையும் ஏற்படலாமென்பது பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழ்த் தரப்பினரால் எச்சரிக்கப்பட்டு வருகின்ற விடயமாகும். இணைப்பு என்ற மந்திரம் தென்னிலங்கை சக்திகளுக்கு சூனியமந்திரமாகவும் வடக்கு கிழக்கைச் சேர்ந்தவர்களுக்கு தாரக மந்திரமாகவும் இருக்கும் நிலையில் இவ்விரு எதிர்எதிரான சக்திகளை ஒன்று இணைக்க வேண்டிய சூட்சும கயிறு இன்றைய தேசிய அரசாங்கத்திடமேயுண்டு.

சர்வஜன வாக்கெடுப்பு என்ற சித்துவிளை யாட்டு இந்நாட்டில் மீண்டும் ஒரு இனக்குழப் பத்தைக் கொண்டு வராமலும் தமிழ் மக்க ளின் எதிர்பார்ப்புக்கள், நம்பிக்கைகள், அபிலா ஷைகள் ஆகியவற்றுக்கு மீண்டும் சாவு மணி அடிக்காமலும் முறையான உபா யங் களை, ராஜதந்திரங்களைப் பாவித்து நாட்டை நேர்கோட்டுப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டிய பொறுப்பு நல்லாட்சி அரசாங்கத்துக் கேயுரியது.

திரு­மலை நவம்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-11-26#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.