Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீறப்படும் கூட்டு ஒப்பந்த சட்டவிதிகள்

Featured Replies

மீறப்படும் கூட்டு ஒப்பந்த சட்டவிதிகள்

 

நீண்ட இழு­ப­றியின் பின்னர் கூட்டு ஒப்­பந்தம் அண்­மையில் கைச்­சாத்­தி­டப்­பட்­டமை தெரிந்த விட­ய­மாகும். கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­திட்ட பின்­னரும் இன்னும் இது குறித்த அதிர்­வ­லைகள் தொடர்ந்த வண்­ண­மா­கவே உள்­ளன. இதற்­கி­டையில் கூட்டு ஒப்­பந்­தத்­தில் ­கைச்­சாத்­தி­டப்­பட்ட சட்ட விதி­களை மீறி தொழி­லா­ளர்­களை அடக்கு முறைக்குள் தோட்ட நிர்­வா­கங்கள் கொண்­டு­வர முனை­வ­தாக குற்­றச்­சாட்­டுகள் பர­வ­லாக மேலெ­ழுந்து வரு­கின்­றன.

 இத்­த­கைய தோட்ட நிர்­வா­கங்­க­ளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் மக்கள் பேர­ணி­யுடன் போராட்டம் மற்றும் ஒப்­பந்தம் தொடர்பில் தெளி­வூட்டும் நிகழ்வு ஒன்­றினை கடந்த வியா­ழக்­கி­ழமை (17) அட்­டனில் ஏற்­பாடு செய்­தி­ருந்­தமை தொடர்பில் நீங்கள் அறிந்­தி­ருப்­பீர்கள்.

தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு உள்­ளிட்ட பல்­வேறு நலன்­க­ளுக்கும் கூட்டு ஒப்­பந்தம் வித்­தி­டு­கின்­றது. கூட்டு ஒப்­பந்த நடை­மு­றையின் ஊடாக கடந்த காலங்­களில் சாதக விளை­வு­க­ளையும் எமது மக்கள் பெற்­றுக்­கொண்­டுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இந்­நி­லையில் கூட்டு ஒப்­பந்தம் தொடர்­பாக பல்­வேறு விமர்­ச­னங்கள் தொடர்ச்­சி­யாக முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­ற­மையும் புதிய விட­ய­மல்ல.

 கூட்டு ஒப்­பந்­தத்தின் ஊடாக தொழி­லா­ளர்­களின் பல்­வேறு நலன்­களும் பறி­போ­வ­தா­கவும், ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திடும் தொழிற்­சங்­கங்கள் தொழி­லா­ளர்­களை காட்டிக் கொடுத்து சுய­நலன் பேணி வரு­வ­தா­கவும் பல்­வேறு குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. கால­மாற்­றத்­துக்­கேற்ப புதிய சரத்­துகள் இவ்­வொப்­பந்­தத்தில் உள்­ளீர்ப்பு செய்­யப்­பட வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தல்கள் இடம்­பெற்­றுள்­ளன. 

கூட்டு ஒப்­பந்­தத்­தினை கூத்து ஒப்­பந்தம், மர­ண­சா­சனம் என்­றெல்லாம் பல­வா­றாக விமர்­சிக்­கின்ற சிலர் இந்த நடை­முறை உட­ன­டி­யாக மாற்­றப்­ப­டுதல் வேண்டும் என்றும் குறிப்­பிட்­டுள்­ளனர். கூட்டு ஒப்­பந்த நடை­முறை இல்­லாது ஒழிக்­கப்­பட்டு தொழி­லா­ளர்­க­ளுக்கு கூடு­த­லான நன்­மை­களை பெற்­றுத்­த­ர­வல்ல முறை­யொன்று தொடர்பில் கவனம் செலுத்­தப்­ப­டுதல் வேண்டும் என்று கோரிக்­கைகள் விடு­விக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இதே­வேளை, கூட்டு ஒப்­பந்த நடை­முறை மிகவும் அவ­சி­ய­மா­ன­தாகும் என்­பது தொடர்­பிலும் பலரின் கருத்­துகள் இடம்­பெற்­றுள்­ளன. கூட்டு ஒப்­பந்­தத்­தினை வர­வேற்றும் இவர்கள் ஒப்­பந்­தத்தில் உள்ள சில சரத்­துகள் தொழி­லா­ளர்­க­ளுக்கு பாதக விளை­வு­களை ஏற்­ப­டுத்தக் கூடி­யன என்றும் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். இந்த நிலையில் இத்­த­கைய பாதக விளை­வு­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய சரத்­துகள் உட­ன­டி­யாக நீக்­கப்­ப­டுதல் வேண்டும் என்றும் இவர்கள் குறிப்­பிட்டுக் கூறி இருக்­கின்­றனர். 

இன்னும் சொல்­லு­மி­டத்து நாட்டில் பொருட்­களின் விலைகள் நாளுக்கு நாள் வேக­மாக அதி­க­ரித்து வரு­கின்­றன. எனவே விலை­வாசி அதி­க­ரிப்­பிற்­கேற்ப நிவா­ரண உத­வி­களை பெற்­றுக்­கொ­டுக்­கக்­கூ­டிய வகையில் கூட்டு ஒப்­பந்­த­மா­னது நெகிழும் தன்­மை­யுடன் காணப்­ப­டுதல் வேண்டும். இதை­வி­டுத்து கூட்டு ஒப்­பந்தம் இறுக்­க­முடன் காணப்­ப­டு­வதால் தொழி­லா­ளர்­களின் பொரு­ளா­தார நெருக்­கடி உக்­கி­ர­ம­டையும் நிலைமை மேலோங்­கு­கின்­றது.

 என்­னதான் விலை­வாசி அதி­க­ரிப்பு ஏற்­பட்­டாலும் தொழி­லா­ளர்கள் இரண்டு வரு­டத்­துக்கு பேச முடி­யாத நிலை­யி­னையே கூட்டு ஒப்­பந்தம் உண்டு பண்ணி வரு­கின்­றது என்­றெல்லாம் கூறப்­பட்டு வரு­கின்­றது. கூட்டு ஒப்­பந்தம் தொழி­லா­ளர்­களின் நியா­ய­மான சம்­பள உயர்­வுக்கு குந்­த­க­மாக இருப்­ப­தா­கவும் இந்த நடை­முறை இல்­லா­த­வி­டத்து தொழி­லா­ளர்­களின் சம்­பளம் இன்னும் கணி­ச­மாக உயர்ந்­தி­ருக்கும் என்றும் கருத்­துக்கள் பலவும் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. கருத்­துக்கள் எவ்­வி­தத்தில் அமைந்­தி­ருந்­த­போதும் கூட்டு ஒப்­பந்த நட­வ­டிக்­கைகள் தொடர்ந்த வண்­ணமே உள்­ளன.

இதற்­கி­டையில் வெளியார் உற்­பத்தி முறை தொடர்பில் தற்­போது ஆரா­யப்­பட்டு வரு­கின்­றது. இத­ன­டிப்­ப­டையில் தோட்ட நிர்­வாகம் குறிப்­பிட்ட நாட்கள் தொழி­லா­ளர்­க­ளுக்கு வேலை வழங்கும். ஏனைய நாட்­களில் தொழி­லா­ளர்­க­ளுக்கு பிரித்து கொடுக்­கப்­படும் தேயிலை செடி­களை பரா­ம­ரித்து உற்­பத்தி நட­வ­டிக்­கை­களில் தொழி­லா­ளர்கள் ஈடு­ப­டுதல் வேண்டும். ஏற்­க­னவே வெளியார் உற்­பத்தி முறை­யா­னது சில தோட்­டங்­களில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

 எனினும் இதன் சாதக விளை­வுகள் தொடர்பில் திருப்தி கொள்ள முடி­யா­தி­ருப்­ப­தாக பலரும் விசனம் தெரி­விக்­கின்­றனர். இந்த நிலையில் வெளியார் உற்­பத்தி முறை ஏனைய பல தோட்­டங்­க­ளுக்கும் விஸ்­த­ரிக்­கப்­ப­டு­மி­டத்து தொழி­லா­ளர்கள் நிம்­ம­தி­யாக வாழும் நிலை ஒரு போதும் ஏற்­படப் போவ­தில்லை என்ற விமர்­ச­னங்­களும் இருந்து வரு­கின்­றன. கம்­ப­னிகள் வெளியார் உற்­பத்தி முறை­யினை முன்­வைத்து காய்­ந­கர்த்­தல்­களை மேற்­கொண்டு வரு­கின்­றன.

 தொழி­லா­ளர்­களை கூறு­போ­டு­கின்ற அல்­லது நசுக்­கு­கின்ற புதிய வடி­வ­மா­கவே வெளியார் உற்­பத்தி முறை நோக்­கப்­ப­டு­கின்­றது. தொழிற்­சங்­கங்­களும் மலை­யக அர­சி­யல்­வா­தி­களும் இத்­திட்டம் தொடர்பில் பூரண திருப்தி கொள்­ள­வில்­லை­யா­யினும் இவர்கள் உரிய மாற்­றுத்­திட்­டங்கள் தொடர்பில் வலு­வான முன்­வைப்­பு­களை மேற்­கொள்­ள­வில்லை என்று பலரும் கடிந்து கொள்­கின்­றனர்.

தொழிற்­சங்­க­வா­தி­க­ளி­னதும், மலை­யக அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும் இத்­த­கைய போக்­குகள் கம்­ப­னி­யி­னரின் கரங்­களை மேலோங்க செய்­தி­ருக்­கின்­றன என்­ப­தனை எவரும் மறுத்­து­விட முடி­யாது. வெளியார் உற்­பத்தி முறை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­மானால் தொழிற்­சங்­கங்­களின் எதிர்­காலம் மற்றும் வலிமை என்­பன தொடர்பில் சிந்­திக்க வேண்டி வரும் என்­பதும் உண்­மையே.

 வெளியார் உற்­பத்தி முறை­யா­னது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­மி­டத்து கூட்டு ஒப்­பந்த நட­வ­டிக்­கைகள் எத்­த­கைய வடி­வத்­தினை எடுக்கும் என்­பது குறித்தும் இது­வ­ரையில் பூர­ண­மான விளக்­கங்கள் எதுவும் இடம்­பெ­ற­வில்லை. கூட்டு ஒப்­பந்தம் தொடர்ந்தும் வாழுமா? வாழாதா? என்றும் சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது.

ஏற்­க­னவே கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறு­தி­யுடன் முன்­னைய கூட்டு ஒப்­பந்தம் காலா­வ­தி­யான நிலையில் புதிய கூட்டு ஒப்­பந்­தத்தை கைச்­சாத்­தி­டு­வதில் சுமார் 19 மாத­கா­ல­மாக இழு­பறி நிலையே தொடர்ந்து கொண்­டி­ருந்­தது. முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்தில் விட்டுக் கொடுப்­பில்­லாத தன்­மையும், ஆயிரம் ரூபா என்ற ஒரே­ய­டி­யான சம்­பள உயர்வு கோரிக்­கையும் இன்னும் சில கார­ணி­களும் கூட்டு ஒப்­பந்­தத்தின் இழு­ப­றி­யான நிலை­மைக்கு உந்து சக்­தி­யாக அமைந்­தன.

 கூட்டு ஒப்­பந்த விட­யத்தில் இது­கா­ல­வ­ரையில் பெரும்­பாலும் கூட்டு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­தி­டாத மற்றும் கைச்­சாத்­திடும் தொழிற்­சங்­கங்­க­ளுக்­கி­டை­யி­லேயே முரண்­பா­டுகள் அதி­க­ரித்து காணப்­பட்­டன. எனினும் இந்தத் தடவை கூட்டு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திடும் தொழிற்­சங்­கங்கள் தமக்­கி­டையே முரண்­பட்டுக் கொண்­டி­ருந்­த­தையும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருந்­தது. குறிப்­பாக இலங்கை தொழி­லாளர் காங்­கி­ர­ஸுக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வடிவேல் சுரே­ஸுக்கும் இடையில் முரண்­பாட்டு சூழ்­நி­லைகள் மேலோங்கி இருந்­தமை தெளி­வா­கவே வெளித்­தெ­ரிந்­தது.

 இது ஒரு பாத­க­மான நிலை­யி­னையே தோற்­று­வித்­தி­ருந்­தது. ஊர் இரண்டு பட்டால் கூத்­தா­டிக்கு கொண்­டாட்டம் என்­பதைப் போல தொழிற்­சங்க முரண்­பா­டு­களை தமக்கு சாத­க­மாக்கிக் கொண்டு முத­லா­ளிமார் சம்­மே­ளனம் காய் நகர்த்­தல்­களை மேற்­கொள்ளத் தொடங்­கி­யது.

தொழி­லா­ளர்­களின் கண்­ணீ­ரையும் பொரு­ளா­தார நெருக்­க­டி­யையும், முத­லா­ளிமார் சம்­மே­ளனம் ஒரு பொருட்­டா­கவே கரு­த­வில்லை. இழுத்­த­டிப்பு நட­வ­டிக்­கை­களால் சம்­பள உயர்­வினை மழுங்­க­டிப்பு செய்து வரு­வதை முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்தின் நட­வ­டிக்­கைகள் எடுத்­துக்­காட்­டின. தொழி­லா­ளர்கள் பொறுத்­தது போதும் என்று பொங்­கி­யெழத் தொடங்­கினர்.

 அர­சியல் மற்றும் தொழிற்­சங்­க­வா­தி­களை நம்­பு­வதால் எந்­த­வி­த­மான பயனும் இனி­மேலும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை என்று தொழி­லா­ளர்­களின் உள்­ம­னது உணர்த்­தி­யது. போராட்­டங்கள் பல விதத்­திலும் இடம்­பெற்­றதால் கம்­ப­னி­யினர் நெருக்­கடி நிலைக்கு உள்­ளா­கினர். தோட்டத் தொழி­லா­ளர்­களின் போராட்டம் அர­சாங்­கத்­துக்கும் தலை­யி­டி­யாக அமைந்­தது. அமைச்­சர்­களும் தலை­யிட்டு சம்­பள உயர்­வினை பெற்­றுக்­கொ­டுக்க துணிந்­தனர். இத­ன­டிப்­ப­டையில் 500 ரூபா அடிப்­படை சம்­பளம் அடங்­க­லாக ஏனைய கொடுப்­ப­ன­வு­க­ளுடன் 730 ரூபா­வுக்கு கைச்­சாத்­தி­டப்­பட்­ட­மையும் தெரிந்த விட­ய­மாகும்.

கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டதன் பின்­னரும் தொழி­லா­ளர்கள் ஆயிரம் ரூபா சம்­பள உயர்வு வழங்­கப்­பட வேண்டும் என்று ஓங்கி குரல் கொடுத்­தனர். வழ­மை­யாக பெரும்­பாலும் கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­தா­னதன் பின்னர் தொழி­லாளர் போராட்­டங்கள் ஓய்­வ­டைந்து விடும் என்ற போதும் இம்­முறை கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்ட பின்­னரும் தொழி­லா­ளர்கள் சம்­பள உயர்வு திருப்­தி­ய­ளிக்­காத நிலையில் 1000 ரூபா­வுக்­காக குரல் கொடுத்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தொரு விட­ய­மாக உள்­ளது.

 பல்­வேறு இழு­ப­றி­க­ளுக்கு மத்­தி­யிலும் புதிய கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­தா­ன­போதும் சம்­பள நிலு­வைப்­ப­ணத்­தினை வழங்­காத நிலையே காணப்­பட்­டது. இந்­நி­லையில் நிலுவைப் பணத்தை தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்க வேண்­டி­யதன் அவ­சி­யத்தை பலரும் வலி­யு­றுத்தி இருந்­தனர். எனினும் இது சாத்­தி­ய­மா­க­வில்லை. இதற்­கி­டையில் உலக சந்­தையில் தேயி­லையின் விலை அதி­க­ரித்­தி­ருப்­ப­தா­கவும் எனவே தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்க வேண்­டிய நிலுவை பணத்தை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு அனைத்து தொழிற்­சங்­கங்­களும் ஒன்­று­பட்டு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள முன்­வர வேண்டும் என்று அஸீஸ் ஜன­நா­யக தொழி­லாளர் காங்­கிரஸ் தலைவர் அஷ்ரப் அஸீஸ் அண்­மையில் வேண்­டுகோள் விடுத்­தி­ருக்­கின்றார்.

இலங்கை தொழி­லாளர் ஐக்­கிய முன்­ன­ணியின் பிரதிப் பொதுச் செய­லாளர் இரா.சலோ­ப­ராஜா ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு அனுப்பி வைத்­துள்ள மகஜர் ஒன்றில் தோட்டத் தொழி­லாளர் தொடர்பில் பல்­வேறு விட­யங்கள் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­களின் சம்­பள விடயம் குறித்தும் இதில் வலி­யு­றுத்­தல்கள் பலவும் இடம்­பெற்­றுள்­ளன. பெருந்­தோட்­டங்­களை பொறுப்­பேற்­றி­ருக்கும் 22 கம்­ப­னி­களும் தொழி­லா­ளர்­களின் அடிப்­படை சம்­பள விட­யத்தில் சம­நி­லை­மை­யினை பேணு­வது போன்று ஏனைய ஊக்­கு­விப்பு கொடுப்­ப­ன­வு­களில் கம்­ப­னிக்கு உயர்­நி­லையில் மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­ப­டுதல் வேண்டும். 

உதா­ர­ண­மாக 22 கம்­ப­னி­க­ளிலும் உற்­பத்தி செய்­யப்­படும் தேயி­லையின் விலை­யி­னது அதி­க­ரிப்­பிற்­க­மைய தொழி­லா­ளர்­களும் நன்­மை­ய­டையும் திட்­டங்­களை அக்­கம்­ப­னிகள் முன்­னெ­டுக்க வேண்டும். இத்­த­கைய நன்­மைகள் கிடைக்கும் போது தொழி­லா­ளர்கள் அக்­கம்­ப­னி­களின் வளர்ச்­சிக்கு மென்­மேலும் பங்­க­ளிப்­பு­களை வழங்­குவர்.

கம்­ப­னிகள் பெறும் வரு­மா­னங்­க­ளுக்கு ஏற்ப அந்­தந்த கம்­ப­னிகள் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஊக்­கு­விப்புக் கொடுப்­ப­ன­வினை செலுத்­தும்­போது, ஒவ்­வொரு கம்­ப­னி­க­ளுக்கும் போட்டி மனப்­பான்­மை­யுடன் கூடிய உற்­சாகம் ஏற்­ப­டு­கையில் தொழி­லா­ளர்­களும் நன்­மை­ய­டைவர். அனைத்து கம்­ப­னி­களும் அக்­க­றை­யுடன் செயற்­ப­டவே செய்வர் என்­பது போன்ற பல விட­யங்கள் இலங்கை தொழி­லாளர் ஐக்­கிய முன்­ன­ணியின் மக­ஜரில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்­றன. 

புதிய கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்ள நிலையில் தொழி­லா­ளர்கள் நாளாந்தம் பறிக்கும் தேயி­லையின் அள­வினை தோட்ட நிர்­வா­கங்கள் கண்­மூ­டித்­த­ன­மாக அதி­க­ரித்­துள்ள நிலையில் தொழி­லா­ளர்­களை நசுக்கும் நடை­மு­றை­க­ளையும் கடை­பி­டித்து வரு­கின்­றன. இத்­த­கைய அதி­க­ரிப்­பினை மேற்­கொள்­வ­தற்கு கூட்டு ஒப்­பந்தம் சார்ந்த தொழிற்­சங்­கங்கள் பிழை­யான பிர­சா­ரத்­தி­னையும் தொழி­லா­ளர்­க­ளி­டத்தே மேற்­கொண்டு வரு­கின்­றன. 

எனவே இத்­த­கைய பிழை­யான தோட்ட நிர்­வா­கத்தின் நட­வ­டிக்­கை­களை கண்­டிப்­ப­தற்கு சக­ல­ரையும் ஒன்­றி­ணை­யு­மாறு இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் அண்­மையில் அழைப்பு விடுத்­தி­ருந்­தது. இதற்­க­மைய கடந்த வியா­ழக்­கி­ழமை (17) அட்­டனில் மக்கள் பேர­ணி­யுடன் போராட்டம் மற்றும் ஒப்­பந்தம் தொடர்பில் தெளி­வு­ப­டுத்தும் நிகழ்வு இடம் பெற்­றுள்­ளது. 

இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய இ.தொ.கா.வின் பொதுச்­செ­ய­லா­ளரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஆறு­முகன் தொண்­டமான், பதி­னெட்டு கிலோ தேயிலை பறிக்­கப்­பட வேண்­டு­மென்று கூட்டு ஒப்­பந்­தத்தில் எங்கும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்­கான கூட்டு ஒப்­பந்­தத்தில் உள்­ள­டக்­கப்­பட்­ட­வற்றை தோட்ட நிர்­வா­கங்கள் மதித்து நடக்க வேண்டும். தவறும் நிர்­வா­கங்­க­ளுக்கு எதி­ராக தொழிற்­சங்க மற்றும் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். தொழி­லா­ளர்­களை நசுக்கும் நிர்­வா­கங்­க­ளுக்கு பத்து நாட்கள் அவ­காசம் வழங்­கப்­ப­டு­கின்­றது என்று குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

500 ரூபா அடிப்­படை சம்­பளம் அடங்­க­லாக ஏனைய கொடுப்­ப­ன­வு­க­ளுடன் 730 ரூபா­வுக்கு கூட்டு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­தி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. அத்­தோடு ஊழியர் சேம­லாப நிதி மற்றும் ஊழியர் நம்­பிக்கை பொறுப்பு நிதி என்று 75 ரூபா உள்­ள­டக்­கப்­பட்டு 805 ரூபா சம்­ப­ள­மாக கிடைக்க கையொப்பம் இடப்­பட்­டுள்­ளது. தொழி­லாளி ஒருவர் மேல­தி­க­மாக பத்து கிலோ தேயிலைக் கொழுந்தை பறிக்­கும்­போது மேல­திக கிலோ­விற்கு வழங்­கப்­படும் 25 ரூபா தொகையின் ஊடாக ஆயிரம் ரூபா சம்­ப­ளத்தை கிட்டும் வாய்ப்பு உள்­ளது. இந்­நி­லையில் ஒப்­பந்த விதி­களை மீறி தொழி­லா­ளர்­க­ளிடம் நாளொன்­றுக்கு 18 கிலோ தேயிலை வேண்டும் என்று நிர்­வா­கங்கள் தொழி­லா­ளர்­களை அடக்கு முறைக்குள் கொண்டு வரு­கின்­றன. ஆனால்18 கிலோ தேயிலை வேண்டும் என்­பது ஒப்­பந்­தத்தில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

தோட்ட தொழி­லா­ளர்கள் வழ­மை­யாக பறிக்­கப்­பட்ட கொழுந்­தி­னையே பறிக்க வேண்டும். அதற்கு உயர்வு இல்­லா­ததன் கார­ண­மா­கவே சம்­பள பிரச்­சி­னையை உரிய வேளையில் முடிக்க முடி­யாமல் இருந்­தது. மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள புதிய ஒப்­பந்­தத்தில் தோட்­டங்­களின் பரா­ம­ரிப்பு குறித்த விட­யமும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. பிரச்­சி­னை­களை வெற்றி கொள்ள மக்கள் மத்­தியில் ஒற்­றுமை மிகவும் அவ­சி­ய­மாகும் என்றும் ஆறு­முகன் மேலும் வலி­யு­றுத்தி இருந்தார்.

தோட்டத் தொழி­லா­ளர்கள் நாள்­தோறும் பறிக்க வேண்­டிய தேயிலைக் கொழுந்தின் அள­வினை தோட்ட நிர்­வா­கங்கள் எதேச்­ச­தி­கார ரீதியில் தீர்­மா­னிப்­பதன் கார­ண­மாக தொழி­லா­ளர்கள் பல்­வேறு சிக்­கல்­க­ளுக்கும் முகம் கொடுத்து வரு­வ­தனை காணக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது. இதனால் தோட்­டங்­களின் இயல்பு நிலையும் பாதிப்­ப­டைந்து வரு­வ­தனை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. இத்­த­கைய முரண்­பாட்டு நிலைமை தொடர்பில் பதுளை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அ.அர­விந்­த­கு­மாரும் ஒரு­வ­ராவார்.

 தோட்­டங்­களின் சம­கால நிலை­மைகள் குறித்து கருத்து தெரி­வித்த அர­விந்­த­குமார், தோட்ட நிர்­வா­கத்தின் எதேச்­ச­தி­கார நிலை­மையின் கார­ண­மாக தொழி­லா­ளர்கள் உற்­பத்­திக்­கான கொடுப்­ப­ன­வினை உரி­ய­வாறு பெற்­றுக்­கொள்ள முடி­யாத ஒரு சூழ்­நிலை மேலெ­ழுந்து வரு­வ­தா­கவும் கவ­லைப்­பட்டுக் கொள்­கின்றார். தோட்டத் தொழி­லா­ளர்கள் பொரு­ளா­தார நெருக்­கீ­டு­க­ளுக்கு மத்­தியில் மிகவும் சிர­மத்­துடன் வாழ்க்கை நடாத்திக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

 எனினும் கம்­ப­னி­யி­ன­ருக்கும், தோட்ட நிர்­வா­கத்­தி­ன­ருக்கும் இவை­யெல்லாம் தெரி­வ­தில்லை. கம்­ப­னி­யினர் இலாபம் ஈட்­டு­வ­த­னையே குறி­யாக கொண்­டி­ருக்­கின்­றனர். தொழி­லா­ளர்­களின் நலன்கள் புறந்­தள்­ளப்­ப­டு­கின்­றன. கம்­ப­னி­யி­ன­ரி­னதும் தோட்ட நிர்­வா­கத்­தி­னதும் கெடு­பி­டி­யான செயற்­பா­டுகள் அம்­மக்­களை மென்­மேலும் சிர­மத்­திற்கு உள்­ளா­கு­வ­தா­கவே அமைந்­துள்­ளமை வருந்­தத்­தக்க விட­ய­மாகும்.

தேயிலை மலை ஒவ்­வொன்­றிற்கும் தொழி­லா­ளர்கள் பறிக்க வேண்­டிய தேயிலை கொழுந்தின் அளவு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் கம்­ப­னி­யி­னரும் தோட்ட நிர்­வா­கத்­தி­னரும் இணைந்து தேயிலைக் கொழுந்தின் அள­வினை மேலும் உயர்த்தி இருக்­கின்­றனர். இது கூட்டு ஒப்­பந்த விதி­களை மீறும் ஒரு செய­லாகும். இதனால் தொழி­லா­ளர்கள் உரிய சம்­ப­ளத்­தினை பெற்­றுக்­கொள்ள முடி­யாத நிலைமை உரு­வாகி இருக்­கின்­றது. குறிப்­பாக உற்­பத்­திக்­கான கொடுப்­ப­ன­வினை தொழி­லா­ளர்கள் பெற்றுக் கொள்­வதில் சிக்கல் நிலை மேலெ­ழுந்­துள்­ளது. அத்­தோடு மேல­தி­க­மாக பறிக்கும் தேயிலை கொழுந்­துக்­கு­ரிய கொடுப்­ப­ன­வினை பெற்­றுக்­கொள்­வது தொடர்­பிலும் இடர்­பா­டுகள் மேலெ­ழுந்து காணப்­ப­டு­கின்­றன. இந்­நிலை விரும்­பத்­தக்­க­தன்று.

தேயிலை கொழுந்தின் அளவு அதி­க­ரிக்­கப்­பட்­டி­ருப்­பதன் கார­ண­மாக தொழி­லா­ளர்கள் 140 ரூபா­வினை இழக்­கின்­றனர். இதனால் இவர்­க­ளுக்கு 530 ரூபாவே கிடைக்கும் நிலை உரு­வாகி இருக்­கின்­றது. எனினும் முன்னர் 620 ரூபா கிடைத்­தது. எனவே புதிய கூட்டு ஒப்­பந்தம் பய­னற்­றது என்று தொழி­லா­ளர்கள் கரு­து­கின்­றனர். கூட்டு ஒப்­பந்தம் புதுப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலை­யிலும் தொழி­லார்கள் அதி­ருப்­தி­யு­ட­னேயே காணப்­ப­டு­கின்­றமை தெளி­வாக தெரி­கின்­றது.

 140 ரூபா­வினை இழக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளமை இந்த அதி­ருப்­திக்­கான பிர­தான கார­ண­மாகும். கூட்டு ஒப்­பந்­தத்தின் மீது வெறுப்­ப­டைந்து தொழி­லா­ளர்கள் கொதித்துப் போய் இருக்­கின்­றனர். திட்­ட­மிட்டு தேயி­லையின் அள­வினை கம்­ப­னி­யி­னரும் தோட்ட நிர்­வா­கத்­தி­னரும் அதி­க­ரித்­துள்­ளனர். 140 ரூபாவை பெற்­றுக்­கொள்ள தொழி­லா­ளர்­க­ளுக்கு இட­ம­ளிக்கக் கூடாது என்­பதில் இவர்கள் குறி­யாக உள்­ளனர். அடைய முடி­யாத இலக்­கு­களை இவர்கள் தீர்­மா­னித்து தொழி­லா­ளர்­களை மென்­மேலும் சிர­மத்­துக்கு உள்­ளாக்கி வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

 கம்­பனி மற்றும் நிர்­வா­கத்தின் எதேச்­ச­தி­கார போக்­குகள் நிறுத்­தப்­ப­டவும் தொழி­லா­ளர்­களின் நலன்­களைப் பேணி அவர்­க­ளுக்கு உரிய சம்­ப­ளத்­தினை பெற்­றுக்­கொ­டுக்­கவும் உரி­ய­வர்கள் முன்­வ­ருதல் வேண்டும் என்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அ.அர­விந்­த­குமார் தனது நிலைப்­பாட்­டிற்கு மேலும் வலு­சேர்த்­தி­ருக்­கின்றார். இதே­வேளை, கூட்டு ஒப்­பந்­தத்­துக்கு எதி­ரான இயக்கம் ஒன்­றினை உரு­வாக்­கு­வது தொடர்­பிலும் சில அமைப்­புகள் முன்­னின்று செயற்­பட்டு வரு­கின்­றமை குறித்தும் எம்மால் அறியக் கூடி­ய­தாக உள்­ளது.

1967ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் பத்து சதம் சம்­பள உயர்­வாக பெறப்­பட்டு அந்த நிலையில்1992 ஆம் ஆண்டு முதல் கூட்டு ஒப்­பந்த நட­வ­டிக்கை ஊடாக உயர்­வான சம்­பள தொகை­யினை தொழி­லா­ளர்­களின் நலன் கருதி இ.தொ.கா .பெற்­றுக்­கொ­டுத்து வந்­தி­ருப்­ப­தாக அதன் தலைவர் முத்து சிவ­லிங்கம் தெரி­வித்­தி­ருக்­கின்றார். கூட்டு ஒப்­பந்­தத்தின் அடிப்­படை தெரி­யா­த­வர்கள் அதனை கேலிக் கூத்­தாக நினைப்­ப­தா­கவும் முத்து சிவ­லிங்கம் மேலும் குறிப்­பி­டு­கின்றார்.

 

இதே­வேளை தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள விடயம் தொடர்பில் எத­னையும் தீர ஆரா­யாமல் செய்து கொள்­ளப்­பட்ட குருட்டு ஒப்­பந்­தத்தின் கார­ண­மா­கவே இன்று தொழி­லா­ளர்கள் பொரு­ளா­தார ரீதியில் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தேசிய அமைப்­பா­ளரும் மத்­திய மாகாண சபையின் உறுப்­பி­ன­ரு­மான சோ.ஸ்ரீதரன் கருத்து வெளி­யிட்­டி­ருக்­கின்றார்.

 உலக நாடு­களில் தேயி­லையின் விலை அதி­க­ரித்­துள்ள இன்­றைய நிலையில் தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள விட­யத்தில் புதிய ஒப்­பந்­த­மொன்றை ஏற்­ப­டுத்தி தொழி­லா­ளர்­க­ளுக்கு நியா­ய­மான சம்­ப­ளத்­தி­னையும் சம்­பள நிலு­வை­யையும் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு கூட்டு ஒப்­பந்த தொழிற்­சங்­கங்கள் முன்­வர வேண்­டு­மெ­னவும் ஸ்ரீதரன் மேலும் தனது நிலைப்­பாட்­டினை தெளி­வுப்­ப­டுத்தி இருக்­கின்றார். உலக சந்­தையில் தேயி­லையின் விலையில் தற்­போது அதி­க­ரிப்பு ஏற்­பட்­டுள்ள நிலையில் அதன் சாத­க­மான விளை வு­களை எமது தொழி­லாளர் தோழர்கள் பெற்­றுக்­கொள்ளும் வண்­ண­மாக உரிய காய்­ந­கர்த்­தல்கள் இடம்­பெ­றுதல் வேண்டும்.

கூட்டு ஒப்­பந்­தத்தின் சம­கால போக்­குகள் தொடர்பில் பேரா­சி­ரியர் சோ.சந்­தி­ர­சே­கரன் பின்­வ­ரு­மாறு தெரி­விக்­கின்றார். நாளாக நாளாக கூட்டு ஒப்­பந்தம் தொடர்பில் மக்கள் மனதில் பல்­வேறு எதிர்­பார்ப்­புகள் இருந்­தன. எனினும் தொழி­லா­ளர்­களின் எதிர்­பார்ப்­புகள் கூட்டு ஒப்­பந்­தத்தின் ஊடாக நிறை­வேற்றி வைக்­கப்­ப­ட­வில்லை. தொழி­லா­ளர்கள் கூட்டு ஒப்­பந்தம் தொடர்பில் அதி­ருப்­தி­யான போக்­கினை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு இதுவே கார­ண­மாக அமைந்­தி­ருக்­கின்­ற­தெ­னலாம்.  

தொழி­லா­ளர்­களின் கிளர்­தெ­ழு­கின்ற ஒரு நிலை­மை­யா­னது நாட்­டிற்கும், தொழிற்­து­றைக்கும் நல்­ல­தாகத் தெரி­ய­வில்லை. தோட்­டத்­து­றையில் தொழில் தக­ரா­று­களின் உச்­ச­கட்­டத்­தி­னையே இது வெளிப்­ப­டுத்­து­கின்­றது. தொழில் தக­ராறு என்­பது பல்­வேறு வழி­க­ளிலும் பாத­க­மான விளை­வு­க­ளையே ஏற்­ப­டுத்தக் கூடி­ய­தாக உள்­ளது. குறிப்­பாக பெருந்­தோட்ட தொழிற்­து­றை­யா­னது மோச­மான நிலை­யினை எதிர்­கொள்ளும் அபாயகரமான ஒரு நிலைமை காணப்படுகின்றது. மக்களையும் மக்கள் சார்ந்த தலைமைத்துவங்களையும் இது பாதிப்பதாகவே அமையும்.

 இந்த நிலையில் கூட்டு ஒப்பந்தத்தினை மறுபரிசீலனை செய்யப்படுதல் வேண்டும். எனினும் மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பு எந்தளவுக்கு இருக்கின்றது என்று தெரியவில்லை. தொழிலாளர்களின் அபிலாஷைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் என்பன கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக நிறைவு செய்யப்படுதல் மிக மிக அவசியமாக உள்ளது. கூட்டு ஒப்பந்தம் என்பது தொழிலாளர்களின் சம்பளத்துடன் தொடர்புபட்ட ஒரு விடயமாகும். எனவே வாழ்க்கைச் செலவுக்கேற்ப நியாயமான சம்பள உயர்வு அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படுதல் வேண்டும்.

தொழிலாளர்கள் தோட்டத் தொழிற்துறையில் இருந்து இன்று படிப்படியாக வெளியேறி வருகின்றார்கள். இந்நிலை மேலும் இறுக்கமடையுமிடத்து சமூக ரீதியிலும் பல்வேறு பாதிப்புகளும் மற்றும் பிளவுகளும் உருவாகக் கூடிய அபாயகரமான ஒரு நிலைமை மேலெழும்பும். தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து நகர்ப்புறங்களுக்கு வந்த போதும் மிக மிக சாதாரணமான தொழில்களிலேயே அவர்கள் ஈடுபட்டு வருவதனை காணக்கூடியதாகவே இருக்கின்றது. சிறந்த தொழிற்துறையில் ஈடுபடுவதற்கான ஒரு நிலைமையினை எம்மால் காண முடியாதுள்ளது. 

பெருந்தோட்ட வாழ்க்கை முறை சிதைவடையும் ஒரு நிலைமையும் உருவாகும். முதலாளிமார் சம்மேளனமும் இத்தகைய விடயங்களை நன்றாக கருத்தில் கொள்ளுதல் வேண்டும். முதலாளிமார் சம்மேளனம் தொடர்ந்தும் நட்டம் என்ற பாட்டினையே பாடி வருகின்றது. இந்த நட்டம் உண்மைதானா? என்று ஆராய்ந்து பார்த்தல் வேண்டும். கம்பனியினரினது இலாபத்தில் பெரும் பகுதியினை கம்பனியின் மேல்மட்ட உத்தியோகத்தர்கள் அனுபவிக்கின்றனர். 

கணிசமான சம்பளமும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. வாழ்க்கை வசதிகள் பலவும் வழங்கப்படுகின்றன. எனினும், தொழிலாளர்களின் நலன்கள் கவனிக்கப்படுவதில்லை. தொழிலாளர்களின் நலன்களே முதலில் கவனிக்கப்பட வேண்டும். தோட்டத் தொழிலாளர்களில் அநேகமானவர்கள் தமிழர்கள். எனவே இவர்களின் பிரச்சினைகளை திசை திருப்பும் சாத்தியக்கூறுகள் உண்டு. இது குறித்தும் அவதானம் தேவை என்றார் பேராசிரியர் சந்திரசேகரன்.

கூட்டு ஒப்பந்தம் குறித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில், இவ்வொப்பந்தமானது தொழிலாளர்களின் நலன்களுக்கு வலுசேர்க்க வேண்டும். பாதகமான சரத்துகள் நீக்கப்பட வேண்டும். கூட்டு ஒப்பந்த விதிகளை பின்பற்ற கம்பனியிரும், தோட்ட நிர்வாகமும் முன்வர வேண்டும். இல்லையேல் வீணான பிரச்சினைகள் தலைதூக்கும் என்பதனை மறந்து விடலாகாது.

– துரை­சாமி நட­ராஜா –

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-11-26#page-5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.