Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் உயிருடன் உள்ளார்களா?? கொழும்பில் இருந்து ஒரு தகவல்..!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளில் முக்கியஸ்தர்கள் இன்றும் இலங்கையில் இருப்பார்களாயின் அவர்கள் தாராளமாக வெளிவரலாம் என ஜாதிக ஹெல உறுமய கட்சி உறுப்பினர் நிஷந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

மாவீரர் தினத்தினை அனுஷ்டிக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நாட்டை பயங்கர பாதைக்கு வழிநடத்திச் சென்ற பிரபாகரனின் பிறந்த நாளையோ அல்லது மாவீரர் தினத்தையோ எம்மால் அனுமதிக்க முடியாது.

யாழ். பல்கலைக்கழகத்தில் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாடப்படுகின்றது. அந்த மாணவர்கள் ஏமாற்றப்படுகின்றார்கள். உண்மையில் இவ்வாறு செய்வதற்கு தமிழ் மக்கள் வெட்கம் கொள்ள வேண்டும்.

இந்த நாட்டிற்கு அழிவைக்கொண்டு வந்த பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாடப்படுகின்றது. ஆனாலும் இந்த நாள் இலங்கையின் கருப்பு தினமாக வேண்டிய நாளே.

நல்லது கெட்டது தெரிந்த எவரும் இதனைக் கொண்டாடமாட்டார்கள், தமிழ் மக்களின் உயிர்களையும் வாழ்வையும் அழித்தவர் பிரபாகரன் எனும் தீவிரவாதியே.

யுத்தத்தில் இறந்த சொந்தங்களை நினைவு கூற அனுமதி உண்டு ஆனாலும் விடுதலைப்புலிகளை நினைவு கூற அனுமதி இல்லை. அவ்வாறு இறந்த பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்த அவர்களுக்கு மே மாதம் 17, 18, 19 ஆம் திகதிகளே ஏற்றதாகும்.

மேலும் தமிழ் அரசியல் தலைவர்கள் மீண்டும் பிரபாகரன் ஒருவரை உருவாக்கவே திட்டம் தீட்டுகின்றார்கள். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் தமிழர்கள் மீண்டும் ஒரு பிரபாகரனை அழைக்கின்றார்கள் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

அதே போன்று யாழ்ப்பாணத்தில் ஒரு வகையிலும் கொழும்பில் ஒரு வகையிலும் விக்னேஷ்வரன் நடந்து கொள்கின்றார். இதன் மூலம் அவர் போலி நாடகமாடுகின்றார் என்பது தெரிகின்றது.

தமிழ் தலைவர்கள் நாட்டை பிளவு செய்யவே காத்திருக்கின்றார்கள் இன்று வரை அவர்கள் வெளிப்படையாக தனி ஈழம் வேண்டாம் என்ற கருத்தை கூற வில்லை ஒற்றையாட்சிக்கும் இணங்கவில்லை. இதன் மூலம் அவர்கள் இலங்கையை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்ல காத்திருக்கின்றார்கள்.

இறுதி யுத்தத்தின் பின்னர் விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் உயிருடன் இந்தால் அவர்கள் தாராளமாக வெளிவரலாம் அரசியலிலும் இணைந்து கொள்ளளாம்.

ஆனால் இனிமேல் ஆயுதம் ஏந்த மாட்டோம், தனி ஈழம் கோரமாட்டோம் என வாக்குறுதி அளிக்க வேண்டும் இதனை செய்ய முடியும் என்றால் அவர்களும் அரசியல் களத்தில் பயணிக்கலாம்.

தமிழ் அரசியல் தலைவர்களும் பிரபாகரன் ஆயுதம் ஏந்தி செய்தவற்றையே ஆயுதம் இல்லாமல் செய்து வருகின்றனர். தற்போது தெற்கில் இனவாதிகள் இருக்கின்றார்கள் என கூறுகின்றார்கள் ஆனால் உண்மையில் இனவாதிகள் இருப்பது வடக்கிலேயே.

ஆனால் தமிழர்களும், முஸ்லிம்களும் நாட்டில் பௌத்தத்தை அடக்க நினைக்கும் செயலை தட்டிக் கேட்பவர்களை இனவாதிகளாக சித்திரிக்கின்றார்கள்.

தெற்கில் உள்ளவர்களுக்கு போதனைகள் விடுப்பதனை விட்டு விட்டு வடக்கில் உள்ள இனவாதிகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் நிஷந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/statements/01/126178

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

50ம் ஆண்டுகளிலிருந்து தொடர்ந்த இனக்கலவரங்கள் மூலம் உயிரிழந்த அப்பாவி தமிழர்களுக்கும் ஒரு தினம் நினைவு கூரப்பட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.