Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் தினமும் வடக்கும் கிழக்கும்

Featured Replies

மாவீரர் தினமும் வடக்கும் கிழக்கும்

 

அடக்­கு­மு­றை­களும் ஆதிக்க கெடு­பி­டி­களும் எங்கு இறுகிப் போகின்­றதோ அங்­கெல்லாம் முரண்­பா­டு­களும் மோதல்­களும் புரட்சி  உணர்­வு­களும் வெடித்து  வெளிக்­கி­ளம்­பு­கின்­றன என்­ப­தற்கு வடக்கில் இம்­முறை அமை­தி­யா­கவும்  அடக்­க­மா­கவும் நினைவு கொள்­ளப்­பட்ட மாவீரர் தினம் சிறந்த உதா­ர­ண­மாகும்.

 

ஆயிரம் ஆயிரம் அக்­கி­னிப்­பந்­து­க­ளாக, எரி நட்­சத்­தி­ரங்­க­ளாக துருவ தார­கை­க­ளாக எமது விடு­தலை வானை அழ­கு­ப­டுத்­திய, இனத்தின் இருப்­புக்­காக இன்­னு­யிர்­களை ஈகம் செய்த மாவீ­ரர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்த அணி திர­ளுங்கள் என வடக்கின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான சிறீ­தரன் மாவீரர் தினத்தை முன்­னிட்டு பாரா­ளு­மன்றில் அழைப்­பொன்றை விடுத்­தி­ருந்தார்.

இவ்­வ­ழைப்­பா­ணையின் குரல், வடக்கு கரைக்கு கேட்ட அள­வுக்கு கிழக்கு கரைக்கு கேட்­க­வில்­லையோ என்­னவோ எவ்­வித உணர்வும் அற்ற நிலை­யிலும் நினைப்­பற்ற போக்­கிலும் கிழக்கு மக்கள் இருந்­து­ விட்­டார்கள். இன­வி­டு­த­லைக்­காக இன்­னுயிர் நீத்த மா தில­கங்கள் ஆயி­ர­மா­யிரம் பேர் இருந்­துங்­ கூட, முறை­யாக அவர்கள் நினைவு கொள்­ளப்­ப­ட­வில்­லை­யென்ற மன­வே­த­னையைக் கொட்­டிக்­கொண்டார் கிழக்கு மாகா­ணத்தின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர்.

இதே­போன்று தமது உற­வு­களை இழந்த குடும்­பத்­த­வர்கள், மாவீரர் குடும்­பத்தைச் சேர்ந்­த­வர்கள் என கிழக்­கி­லுள்ள பலரும் இக்­க­வ­லையை நெஞ்சில் சுமந்­த­வர்­க­ளாக காணப்­ப­டு­கி­றார்கள் என்­பதை பல­ருடன் உரை­யா­டி­ய­போது தெரிந்து கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

வடக்கில் மாவீரர் துயிலும் இல்­லங்கள், கோயில்கள், பொது இடங்கள், கட்சி காரி­யா­ல­யங்கள், பல்­க­லைக்­க­ழக வளா­கங்கள், விடு­திகள் என ஏகப்­பட்ட இடங்­களில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகாண சபை உறுப்­பி­னர்கள், உற­வி­னர்கள், பொது­மக்கள், பாதி­ரிமார், ஆல­ய­கு­ருமார் என பல­த­ரப்­பினர் ஒன்­று­கூடி உணர்வு பூர்­வ­மாக நினைவு வேட்கை கொட்ட நினைவு கூர்ந்­தி­ருக்கும் நிலையில் கிழக்கில் அங்­கொன்றும் இங்­கொன்­று­மாக மறைந்தும் பயந்தும் தெரிந்தும் தெரி­யா­மலும் சொல்­லியும் சொல்­லா­மலும் நினைவு கூர்ந்­தி­ருக்­கி­றார்­களே என்­ப­தை­யிட்டு தங்கள் கவ­லை­யையும் விச­னத்­தை­யுங்­கூட சில தாய்­மாரே வெளி­யிட்­டுள்­ளனர்.

விடு­தலைப் புலி அமைப்பில் இருந்து போர்க்­க­ள­மாடி வீரச்­சா­வ­டைந்த மாவீ­ரர்­களை நினைவு கூரும் மாவீரர் தினம் விடு­த­லைப்­புலி அமைப்­பி­னரால் 1989 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யி­லி­ருந்து வட­கி­ழக்­கெங்கும் நினைவு கொள்­ளப்­பட்டு வந்­தது. நவம்பர் 21 ஆம் திக­தி­யி­லி­ருந்து நவம்பர் 27 ஆம் திகதி வரை அனுஷ்­டிக்­கப்­படும் இவ்­வார நிகழ்வில் இறுதி நாளான 27 ம் திகதி விடு­த­லைப்­புலி அமைப்பின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரனின் மாவீரர் தின உரை நடை­பெறும்.

இவ்­வு­ரையை செவி­கொள்ள இலட்­சக்­க­ணக்­கான மக்கள், அர­சியல் தலை­வர்கள், இலங்கை அர­சாங்கம், புலம் பெயர் வாசிகள், ஆர்­வ­லர்கள், ஆத­ர­வா­ளர்கள் என இலட்­சோப இலட்சம் மக்கள் ஆர்வம் காட்­டுவர். எல்­லா­வற்­றுக்கும் அப்பால் சர்­வ­தேச நாடு­களைச் சேர்ந்த தலை­வர்கள், ராஜ­தந்­தி­ரிகள், அர­சியல் சாணக்­கி­யர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள் என எத்­த­னையோ தரப்­பினர் இவ்­வு­ரையை உன்­னிப்­பாக அவ­தா­னித்­து­ வந்த காலங்­களை யாரும் மறந்­து­ விட முடி­யாது.

முள்ளிவாய்க்கால் யுத்­தத்தின் பின் மாவீ­ரர்­களை நினைவு கொள்­வ­தையோ, கூரு­வ­தையோ, அனுஷ்­டிப்­ப­தையோ இலங்கை அரசு உட்­பட இந்­திய அரசு கூட கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களை விதித்­தி­ருந்­தது. இன்னும் நுனிப்­பாகக் கூறு­வ­தானால், 2015 நவம்­ப­ருக்கு முன்­னுள்ள காலப்­ப­கு­தி­யி­லெல்லாம் வட­கி­ழக்கில் குறித்த தினத்தில் வெளிச்சம் கொட்டும் விளக்­கு­களை வீடு­களில் ஏற்­று­வ­தையும் இரா­ணு­வத்­தினர் சந்­தே­கக்கண் கொண்­டு­ பார்த்­தார்கள். மீறு­கின்­ற­வர்­களை கைது செய்­தார்கள் 2009 ஆம் ஆண்­டுக்கு பின்­னுள்ள ஒரு ஆண்டில் மாவீரர் வாரம் கொண்­டா­டப்­படும் நாளில் கார்த்­திகை விளக்­கீடு வந்­த­ போது அத்­தீ­ப­நாளை கொண்­டா­டக்­கூ­டாது என இலங்கை அர­ச­ப­டைகள் வட, ­கி­ழக்கில் கட்­டாயத் தடை விதித்த ஒரு­கா­லமும் உண்டு.

இவை­யெல்­லா­வற்­றுக்கும் விடிவு கிடைத்­தது போல் இவ்­வ­ருடம் மாவீரர் தினத்தை தமது உற­வு­களை இழந்த உற்றார் நினைவு கூரும் விதத்தில் அதிக கெடு­பி­டி­யற்ற ஒரு சூழல் உரு­வாகி விட்­டி­ருந்­த­மை­யினால் இவ்­வ­ருடம் மேற்­படி தினத்தை சுதந்­தி­ர­மாக மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அளவில் அனுஷ்­டிக்­கும் ஒரு சூழ்­நிலை உரு­வா­கி­யி­ருப்­பது அரச தரப்­பி­ன­ரு­டைய மன­மாற்றம் படை மற்றும் பொலிஸ் தரப்­பி­ன­ரு­டைய விட்­டுக்­கொ­டுப்புக்­களை எடுத்­துக்­காட்­டு­வ­ன­வா­க­வுள்­ள­து. இது ஆட்­சி­மாற்றம் கார­ண­மாக ஏற்­பட்­டி­ருந்­தாலும் இம்­மாற்­றத்­தையும் விட்­டுக்­கொ­டுப்­பையும் நாம் சுவீ­க­ரித்­துத்தான் ஆக வேண்டும்.

வட, ­கி­ழக்கில் இனப்­போரில் வீரச்­சாவு அடைந்த மாவீ­ரர்­க­ளுக்கு துயில்­இல்லம் அமைக்கும் மர­பா­னது, தமி­ழீழ விடு­தலைப் புலி­களால் நீண்­ட­கா­ல­மாக மேற்­கொள்­ளப்­பட்டு வரும் கைங்­க­ரி­ய­மாகும். மாவீ­ரர்­களின் புனித சின்னம் புனி­த­மான துயில் கள­மாகப் போற்­றப்­படும் மாவீரர் துயில் இல்­லங்­க­ளா­னது, வட­கி­ழக்கில் பல்­வேறு களங்­களில் அமைக்­கப்­பட்டு அவை உயர்ந்த பக்­கு­வத்­துடன் பாது­காக்­கப்­பட்டு வந்­துள்­ளன.

வடக்­கி­லுள்ள 5 மாவட்­டங்­களில் இத்­துயில் இல்­லங்­க­ளா­னவை, யாழ். மாவட்­டத்தில் கோப்பாய், கொடி­காமம், வல்­வெட்­டித்­துறை தீருவில், உடுத்­துறை சாட்டி, திக்கம் எள்­ளங்­குளம், முல்­லைத்­தீவு மாவட்­டத்தில், முள்­ளி­ய­வளை, முள்­ளி­வாய்க்கால், விளாங்­குளம், சூலங்­குளம், அலம்பில், வட்­டு­வாகல், நந்­திக்­கடல், தேவி­புரம், மண­லாறு, படி­முகாம், ஜீவன் முகம், வவு­னி­யாவில் ஈச்­சம்­குளம், கிளி­நொச்­சியில் கன­க­புரம் தேராவில், முழங்­காவில் மன்னார் மாவட்­டத்தில் ஆள்­காட்­டி­வெளி, பண்­டி­வி­ரிச் சான் என்ற இடங்­க­ளிலும் அமைக்­கப்­பட்­டி­ருந் ­தன.

இதே­ போன்றே கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள மூன்று, மாவட்­டங்­களில் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் ஆலங்­குளம், பெரி­ய­குளம் தியா­க­வனம், உப்­பாறும் இத்­திக்­குளம் ஆகிய இடங்­க­ளிலும் அம்­பாறைப் பிர­தே­சத்தில் கஞ்­சி­கு­டிச்­சாறு, மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் தரவை, தாண்­டி­யடி, மாவடி, கல்­லடி ஆகிய இடங்­களில் மாவீரர் துயில் இல்லம் அமைக்­கப்­பட்டு 2008 ஆம் ஆண்­டு­வரை அவை போற்­றிப் ­பா­து­காத்து வரப்­பட்­டுள்­ளது.

மாவீரர் துயிலும் இல்­ல­மென்­பது, மாவீரர் குடும்­பத்­தி­ன­ருக்கும் உற­வி­ன­ருக்கும் அது ஒரு ஆத்ம ஆல­ய­மா­கவே வந்­தது. இந்­திய இரா­ணு­வத்தின் பிர­சன்­னமும் அதைத் தொடர்ந்து விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கும் இந்­திய இரா­ணு­வத்­துக்­கு­மி­டையே ஏற்­பட்ட மோதல் காலத்தில் பல துயில் இல்­லங்கள் துவாம்ஷம் செய்­யப்­பட்­டன. அவ்­வா­றான இல்­லங்கள் மீண்டும் புன­ர­மைக்­கப்­பட்­டன.

முள்­ளி­வாய்க்கால் யுத்தம், மாவி­லாறு யுத்தம் மௌனம் கொண்­டதன் விளை­வாக, வட­கி­ழக்­கி­லுள்ள பெருந்­தொ­கை­யான துயில் இல்­லங்கள் இடித்துத் தரை மட்­ட­மாக்­கப்­பட்­டன. இருந்த இடம் தெரி­யாமல் நவீன இயந்­தி­ரங்கள் கொண்டு உருக்­கு­லைக்­கப்­பட்­டன.

இறந்த ஆத்­மாக்­களை நினைவு கொள்ளும் எந்­த­வொரு தட­யங்­க­ளையும் அடை­யா­ளங்­க­ளையும் அழிக்கும் அட்­டூ­ழி­யங்கள் என்­பது எந்­த­வொரு மனி­தர்­க­ளாலும் மானிட வர்க்­கத்­தாலும் செய்­யப்­ப­டு­கின்ற நாச­காரச் செயல் அல்ல என்­பது நாக­ரிக சமூ­கத்தின் உயர்ந்த பண்பு. எல்­லாளன் என்ற தமிழ் மன்­னனை வெற்றி கொண்ட துட்­ட­கை­முனு அவனின் சமா­திக்கு அளிக்­கப்­பட வேண்­டிய மரி­யா­தை­பற்றி மகா­வம்சத்தில் குறிப்­பிட்­டி­ருப்­பது பற்றி நாம் எல்­லோரும் அறிந்­தி­ருக்­கிறோம்.

விடு­தலைப் போரில் தங்கள் இன்­னு­யிர்­களை தியாகம் செய்த வீர­ம­ற­வர்­களை நினைவு கூரும் மாவீரர் நாளை வட­கி­ழக்­கிலும் புலம்­பெயர் மக்கள் வாழும் கனடா, பிரித்­தா­னியா, பிரான்ஸ், இந்­தியா, நோர்வே, ஜேர்மன் போன்ற நாடு­க­ளி­லெல்லாம் எவ்­வாறு நினைவு கொண்­டார்கள் என்­பதை அங்­கி­ருந்து வரும் தக­வல்கள் தெளி­வா­கவே எடுத்துச் சொல்­கின்­றன.

தமிழர் தாய­க­மான வடக்கில் இத்­தி­ன­மா­னது மிக நேர்த்­தி­யா­கவும் நிறைந்த சுதந்­தி­ரத்­து­டனும் கொண்­டா­டப்­பட்­டது என்­ப­தற்கு அடை­யா­ள­மாக தமிழர் தம் முத­லா­வது அகிம்சைப் போரா­ளி­யான திலீ­பனின் நல்லூர் நினைவுத் திடலில் மாகாண சபை உறுப்­பினர் சிவா­ஜி­லிங்கம் தலை­மையில் சுடர் ஏற்றி மலர் வைத்தும் அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது. வட­மா­காண விவ­சாய அமைச்சர் ஐங்­க­ர­நேசன், மாகாண சபை உறுப்­பினர் அனந்தி சசி­தரன், மாவீ­ரர்­களின் உற­வினர், உற்றார், புத்­தி­ஜீ­விகள் பிர­சன்­ன­மாக இருக்க உணர்வு உருக்கம் நிறைந்த அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது. இது­போன்றே கோப்பாய் மாவீ­ரர்­துயில் இல்ல வாச­லிலும் வல்­வெட்­டித்­துறை தீருவில் துயில் இல்ல வெளி­யிலும் நினைவுகொள்­ளப்­பட்­ட­வேளை ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் கலந்து கண்ணீர் மல்கி, கரைந்து போன இத­யத்­துடன் நினைவு கூர்ந்­துள்­ளார்கள்.

வட­ம­ராட்சி கிழக்­கி­லுள்ள உடுத்­துறை, து யில் இல்­லத்­துக்கு சென்ற ஜன­நா­யக போரா­ளி கள் கட்­சி­யினர் அங்கு அஞ்­சலி செலுத்­தி­யுள் ­ள­னர். இவை ஒரு­பு­ற­மி­ருக்க புத்­தி­ஜீ­வி­க­ளையும் மாணவச் சமூ­கத்­தையும் கொண்ட யாழ். பல்­க­லைக்­க­ழக விடு­தி­களில் மாண­வர்கள் நினைவு கூர்ந்­த­முறை எல்லோர் இத­யங்­க­ளையும் கரை­ய­ வைத்­தது என்பர். 

கடந்த காலங்­களில் முன்­னைய அர­சாங்­கத்தின் அடக்­கு­மு­றைகள் ஒடுக்கு முறைகள், பாஷிச கெடு­பி­டிகள் மலிந்து போய்க்­கி­டந்த காலத்தில் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் வளாக பரப்பில் மாவீரர் தினத்தை எதிர்­நி­லை­யில் ­போ­ராடி நினைவு கூர்ந்த காலத்தில் ஏற்­பட்ட முரண்­பா­டுகள், முட்டி மோதல்கள் பற்றி நாம் நிறை­யவே அறிந்­தி­ருக்­கிறோம். அவ்­வா­றா­ன­தொரு சூழ்­நிலை விடு­பட்­டுப்போய் மாறாக என்­று­மே­யில்­லா­த­வாறு மாவீரர் தினத்தில் வட­மா­காணம் அமைதி கொண்­டி­ருந்­த­மையும் அடக்­க­மான முறையில் மாவீரர் நாள் நினைவு கூரப்­பட்­டதும் ஆச்­ச­ரி­ய­மான விட­யந்தான்.

அடக்­கு­மு­றை­களும் ஆதி க்க கெடு­பி­டி­களும் எங்கு இறுகிப் போகின்­றதோ அங்­கெல்லாம் முரண்­பா­டு­களும் மோதல்­களும் புரட்சி உணர்­வு­களும் வெடித்து வெளிக்­கி­ளம்­பு­கின்­றன என்­ப­தற்கு வடக்கில் இம்­முறை அமை­தி­யா­கவும் அடக்­க­மா­கவும் நினைவு கொள்­ளப்­பட்ட மா வீரர் தினம் சிறந்த உதா­ர­ண­மாகும். 

இறு­தி­ப் போரின் அனர்த்­தங்­களும் அட்­டூ­ழி­யங்­களும் பிர­ள­யங்­களும் விளைந்த பூமி­யாகப் பார்க்­கப்­ப­டு­வது வன்­னி­நி­ல­மாகும். முள்ளி வாய்க்கால் நந்­திக்­கடல் என்ற மயான பூமியில் உயிர் இழந்த ஆத்­மாக்­க­ளுக்கும் போரா­ளி­க­ளுக்கும் இவ்­வ­ருடம் அஞ்­சலி செலுத்­தப்­பட்ட மெய்­யு­ருக்­க­மா­னது சரித்­திர நாய­கர்­க­ளுக்கு அளிக்­கப்­பட்ட மகத்­தான அஞ்­ச­லி­யாகும்.  

தூர்ந்­து­ போன துயில் இல்­லங்கள் துப்­பு­ரவு செய்­யப்­பட்டு உற­வி­னர்கள் உடன்­பி­றப்­புக்கள் பாரா­ளு­மன்ற மற்றும் மாகாண சபை உறுப்­பி­னர்கள் புத்­தி­ஜீ­விகள் என ஏரா­ள­மா­ன­வர்கள் சுமார் 8 ஆண்­டு­க­ளுக்­குப்பின் ஒன்­று­கூடி இறந்து போன ஆத்­மாக்­க­ளுக்கு ஆன்ம அஞ்­சலி செலுத்­தி­யுள்­ளனர்.

கிளி­நொச்­சி­யி­லுள்ள கன­க­புரம் மாவீரர் துயிலும் இல்லம் முழங்­கா­வி­லுள்ள துயிலும் இல்லம் ஆகி­யன உற­வி­னர்­க­ளாலும் பொது­மக்­க­ளாலும் துப்­பு­ரவு செய்­யப்­பட்டு சிதைக்­கப்­பட்ட எச்­சங்கள் சேர்க்­கப்­பட்டு பந்­தல்கள் போடப்­பட்டு மர­ணித்துப் போன மாவீ­ரர்­களின் படங்கள் வைக்­கப்­பட்டு மாலை இடப்­பட்டு மலர்கள் தூவப்­பட்டு மண்­ணினால் உரு­வ­மைத்து கண்­ணீ­ரினால் அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது. கன­க­புர நிகழ்­வுக்கு யாழ். மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிறீத­ரனும் முழங்­காவில் மாவீரர் துயில் இல்ல நிகழ்வில் யாழ்.மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வ­ரு­மா­கிய மாவை­சே­னா­தி­ராஜா தலை­மை­யிலும் மேற்­படி அஞ்­சலி நிகழ்­வுகள் இடம்­பெற்று இருந்­தன.

வட­மா­கா­ணத்­தி­லுள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மாகாண சபை உறுப்­பி­னர்கள் உள்­ளூ­ராட்சி அங்­கத்­த­வர்கள் உற­வி­னர்கள் பொது­மக்கள் என ஏரா­ள­மா­ன­வர்கள் உணர்வு பூர்­வ­மாக துயிலும் இல்­லங்­க­ளுக்குச் சென்று அஞ்­சலி செலுத்­தி­யுள்ள நிலையில் கிழக்கு மண்ணில் நடந்­த­தாகக் கூறப்­படும் நிகழ்­வுகள் மக்­க­ளுக்கும் இறந்­த­வர்­களின் உற­வி­னர்கள் நண்­பர்கள் முன்னாள் போரா­ளிகள் மற்றும் புத்­தி­ஜீ­விகள் மத்­தியில் அதி­ருப்­தி­யையும் வேத­னை­யையும் தந்­தி­ருப்­ப­தாகக் கூறப்­ப­டு­கின்­றது.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் தரவை தாண்­டி­யடி, மாவடி, கல்­லடி ஆகிய இடங்­களில் மாவீரர் துயிலும் இல்­லங்கள் இருந்­த ­போ­திலும் அவ்­வி­டங்கள் யாராலும் கவ­னத்திற் கொள்­ளப்­ப­டாமல் மட்­டக்­க­ளப்­பி­லுள்ள இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி காரி­யா­ல­யத்தில் கிழக்கு மாகாண விவ­சாய அமைச்சர் கி.துரை­ரா­ஜ­சிங்கம் தலை­மையில் நினை­வஞ்­சலி நிகழ்வு இடம்­பெற்­றுள்­ளது.

இங்கு கவனம் கொள்­ளப்­பட வேண்­டிய விடயம் என்­ன­வெனில் யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள மாட்டின் வீதி தமி­ழ­ர­சுக் ­கட்சி கிளைக்­கா­ரி­யா­ல­யத்தில் மாவீரர் தின அஞ்­சலி நிகழ்­வென பகி­ரங்­க­மாக கொண்­டா­டப்­பட்ட நிலையில் மட்­டக்­க­ளப்பு நல்­லையா வீதி காரி­யா­ல­யத்தில் இடம்­பெற்ற நிகழ்வில் மாவீரர் பெயர் பாவிக்­கப்­ப­டாமல் போரில் உயிர்­நீத்­த­வர்­க­ளுக்­கான அஞ்­ச­லி­யென மறை பொருளில் கொண்­டா­டப்­பட்­டுள்­ளது.

இந்­நி­கழ்வில் கலந்­து­ கொண்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஸ்ரீநேசன், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான அரி­ய­நேத்­திரன், பொன் செல்­வ­ராஜா, மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான நல்­லையா, நட­ராசா, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் யோகேஸ்­வரன் இது தவிர மட்­டக்­க­ளப்பு மாவட்ட தொகுதிக் கிளை உறுப்­பி­னர்கள், பிர­தேச சபை உறுப்­பி­னர்கள் கலந்­து­ கொண்டு உரிமைப் போராட்­டத்தில் உயிர்­நீத்த உற­வு­களின் நினை­வேந்தல் நிகழ்­வினை நடத்­தி­யுள்­ளனர். ஆனால் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ப.அரி­ய­நேத்­திரன் தலை­மையில் மாவடி முன்­மாரி மாவீரர் துயிலும் இல்­லத்­துக்குச் சென்று 2008ஆம் ஆண்­டுக்­குப்பின் அஞ்­சலி செலுத்­தி­யுள்­ளனர். மட்­டக்­க­ளப்­பி­லுள்ள ஏனைய துயிலும் இல்­லங்கள் யாராலும் கவ­னத்திற் கொள்­ளப்­ப­ட­வில்­லை­யென கவலை தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதே­போன்றே அம்­பாறை மாவட்­டத்தில் கஞ்­சி­கு­டிச்­சாறு துயி­லு­மில்லம் தவிர்க்­கப்­பட்டு பெரிய நீலா­வணை விஞ்சு ஆல­யத்தில் மாகாண சபை உறுப்­பினர் கலை­ய­ரசன் தலை­மை­யிலும் வாக­ரையில் பிள்­ளையார் ஆல­யத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தலைமையிலும் நினைவு கொள்ளப்பட்டது.

திருகோணமலைப் பிரதேசத்தில் இக்கட்டு ரையில் ஏலவே குறிப்பிட்டது போல் சேனையூ ரில் உள்ள ஆலங்குளம், பெரியகுளம், தியாகவனம், உப்பாறு ஆகிய இடங்களில் மாவீரர் துயிலும் இல்லங்கள் சிதைக்கப்பட்டு அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்ட நிலையில் அவை காணப்பட இம்மாவீரர் தின நிகழ்வு திருகோணமலை நகரில் உள்ள சிவன் கோவிலடி தந்தை செல்வா உருவச்சிலை முன்பும் மூதூரில் மணற்சேனை, சாலையூர் ஆகிய இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளன.

மாவீரர் குடும்பங்களையும் போராளிக் குடும்பங்களையும் பெருந்தொகையாகக் கொண்டமண் கிழக்குமண் என்பது அனை வரும் அறிந்த தகவல். இன ஒடுக்குமுறைகள், பேரின வாதக்கெடுபிடிகள், அரசியல் பாஷி ஷங்கள் மலிந்த மண்ணாக அன்றும் இன்றும் காணப்படுவது கிழக்குமண். மண்ணின் விடுதலைக்காக ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் அணிதிரண்டு தம்மினத்தின் விடிவுக்காகவும் விடுதலைக்காகவும் அரிய உயிர்களை தியாகம் செய்த தியாக பூமியில் அவர்கள் நினைவு கொள்ளப்பட்ட விதம் பற்றி தங்கள் வேதனைகளையும் மனக்குமுறல்களையும் வெளிப்படுத்தியவர்கள் பலர்.

அந்த தியாக துருவ தாரகைகளின் அழிவின் தியாகத்திலேயே பலர் பாராளு மன்றம் சென்றனர். மாகாண சபை உறுப் பினர் ஆகினர். அரசியலுக்கு அழைத்து வரப் பட்டனர். சிம்மாசனம் ஏறிக் கொண்டனர். இவ்வாறு இருக்க எங்கள் தியாக நெருப்புக் களை அவர்கள் விதைக்கப்பட்ட இடங்களில் நினைவு கொள்ளாமை ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது என தனது இரண்டு புதல்வர்க ளையும் மகளையும் ஈன்று புறம் தந்த தாயொ ருத்தி கவலையுடன் தெரிவித்தார்.

திரு­மலை நவம்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-12-03#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.