Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போன உறவுகளின் ஆர்ப்பாட்டத்தை புகைப்படம் எடுத்த புலனாய்வாளர்கள்

Featured Replies

வவுனியாவில் காணாமல் போன உறவுகளினால் இன்று(10) மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலத்தினை புலனாய்வாளர்கள் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களையும், அவர்கள் எழுதி வைத்திருக்கும் சுலோக அட்டைகளையும் புகைப்படம் எடுத்துள்ளனர்.

மேலும் நல்லாட்சி அரசிலும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் தொடர்வதாக காணாமல் போனவர்களின் உறவுகள் குற்றம் சாட்டியுள்ளனர் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/community/01/127759?ref=youmaylike1

  • தொடங்கியவர்

வவுனியாவில் இளைஞர்களுக்கும் புலனாய்வாளர்களுக்கும் இடையில் முறுகல் - பொலிஸார் தலையீடு

வவுனியாவில் அமைதி ஊர்வலம் நடத்திய இளைஞர், யுவதிகளுக்கும் புலனாய்வாளர்களுக்கும் இடையில் இன்று முறுகல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸார் தலையிட்டதை தொடர்ந்து முறுகல் நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்புக்கும் நட்புக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்று பாரபட்சமற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப் பொருளில் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது குறித்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட இளைஞர், யுவதிகளை புலனாய்வுத்துறையினர் புகைப்படம் எடுத்தனர். எனினும், தம்மை புகைப்படம் எடுத்த புலனாய்வாளர்களுடன் இளைஞர்கள் சிலர் முரண்பட்டுக்கொண்டனர்.

இந்நிலையில் அவ்வமைப்பின் இயக்குனர் ரவீந்திர டி சில்வா புகைப்படம் எடுத்த ஒருவரை அழைத்து ஏன் புகைப்படம் எடுக்கிறீர்கள் என கேட்டபோது இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு கடமையில் இருந்த பொலிஸாரிடம் குறித்த விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டது. பொலிஸார் அப்பிரச்சனையை சமரசம் செய்து வைத்ததுடன் இது தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை செய்யுமாறும் கூறியிருந்தனர்.

பொலிஸார் முன்னிலையில் புகைப்படம் எடுத்த நபர் தன்னை புலனாய்வுத்துறை என அடையாளப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த ரவீந்திரடி சில்வா, இந்த நிகழ்வை நடத்துவதில் நாம் பல இடர்பாடுகளை எதிர்நோக்கியுள்ளோம்.

கடந்த காலத்தைப் போல் இன்றும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் தொடர்கிறது. இன்று மட்டும் பலர் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்ன செய்கிறீர்கள்..? ஏன் செய்கிறீர்கள், எங்கு செய்கிறீர்கள் எனக் கேட்டுள்ளனர்.

அதேபோல் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் எம்மை ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் எனவும், பெரியளவில் கோசம் எழுப்ப கூடாது எனவும் அமைதியாக ஊர்வலம் செய்யுமாறும் கூறியிருந்தார்.

தற்போது புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் புகைப்படம் எடுக்கிறார்கள். மாத்தளையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வு தொடர்பிலும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஆட்சி மாறி நல்லாட்சி எனக் கூறுகின்ற போதும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் குறையவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/community/01/127796?ref=morenews

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.