Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருவெம்பாவையை முன்னிட்டு சிதம்பரம் செல்ல ஆயத்தமாகுக சிவசேனை அமைப்பு அழைப்பு

Featured Replies

12737.jpg

மார்கழி மாதத்து திரு வெம்பாவை முன்னிட்டு  கடல் மார்க்கமாக சிதம்பரம் செல்வதற்கு பக்தர்களை ஆயத்தமாகுமாறும் சிவசேனை அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.  அதேவேளை விரைவாக பதிவுகளை மேற்கொள் ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.

திருவெம்பாவைக் காலத்தில்  பக்தர்கள் செல்வதற்கு காங்கேசன்துறையிலிருந்து காரைக்காலுக்குக் கப்பல் சேவையினை மேற்கொள்ள இலங்கை- இந்திய அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
இது தொடர்பாக சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் கருத்து தெரிவிக்கையில்,

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நாவலர் விழாவில் சைவர்கள் வழிபாட்டுப் பயணமாக திரு வெம்பாவைக் காலத்தில் சிதம்பரம் செல்வதற்கு அரசு வசதி செய்யவேண்டும் என ஆளுநரிடம் மக்கள் சார்பாக கோரிக்கை முன்வைத்திருந்தேன். 

அத்துடன்  எதிர்வரும் டிசெம்பர் மாதம் 27 ஆம் திகதி தொடக்கம்  2017 ஜனவரி 13 ஆம் திகதி வரையிலும் காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினம் அல்லது  கடலூர் வரை  கப்பல் பயணச் சேவைக்கு ஏற்பாடு செய்து தருமாறு கடிதம் ஒன்று வடமாகாண ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.  
குறித்த கடிதத்தினை ஆளுநர், வெளிநாட்டமைச்சர் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் கலாசார அமைச்சருக்கு அனுப்பியதுடன் இவ்விடயம் தொட ர்பாக தெரியப்படுத்தியிருந்தார். 

அதன் அடிப்படையில்  கடந்த 14 ஆம் திகதி காலை வெளிநாட்டமைச்சில் இருந்து அழைப்பு வந்திருந்தது. நாகப்பட்டினத்துக்கும் கடலூருக்கும் கப்பல் விட இந்திய அரசு அனுமதிக்கவில்லை எனவும் காரைக்கால் வரை செல்ல இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அதன்படி ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியுமா என கேள்வி எழுப்பியிருந்தனர். 

அத்துடன் சைவ வழி பாட்டுப் பயணிகள் பணம் கொடுத்துப் பயணிப்பார்களா? அல்லது அரசே செலவை ஏற்கவேண்டும் என கேள்வி யெழுப்பியிருந்தனர். 
காங்கேசன்துறை - காரைக்கால் வரையான கப்பல் சேவை ஏற்றது எனவும் கட்டணம் தொடர்பாக அரசின் முடிவை ஏற்கிறேன் எனவும் தெரிவித்திருந்தேன். 
அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தனர். 

சைவப் பெருமக்களுக்கு கப்பலில் சிதம்பரத்துக்கு சென்று தரிசிக்க இது ஒரு அரிய வாய்ப்பு. 
எனவே ஓர் இலட்சம் ரூபாய் வரை செலவு செய்து மூன்று இரவுகள் பயணமாகி, கொழும்பு - சென்னை - சிதம்பரம் என வானூர்தியில் பயணமாகும் சைவப் பெருமக்களே, சில மணி நேரங்களில் மிக மிகக் குறை ந்த கட்டணத்தில் கப்பலில் சென்றடையும் வாய்ப்புகிட்டியுள்ளது. இந்த வாய்ப்பை பக்தர்கள் நழுவவிடாதீர் கள்.

அந்த வகையில் வழிபாட்டுக்கு செல்ல விரும்புவோர் கடவுச்சீட்டினை பெற்றுக் கொண்டு,  சிவசேனைப் பொறுப்பாளர் காண்டீபனுடன் 077 087 0414 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் குறுஞ்செய்தி {வைபர் வட்ஸ் அப் வழியாக  தமது பெயர்ப் பதிவுகளை மேற்கொள்ள முடியும். 

2000 ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்துச் சைவர்களும்; சிதம்பரத்தில் கூடி வழிபட்டு வருகிறோம். ஈழத்தவர் தங்குவதற்காக, ஞானப்பிரகாசர் குளத்தைச் சுற்றி ஈழத்தவர் தம் செலவில் அமைத்து அறம் வளர்க்கும் 30 திருமடங்கள் சிதம்பரத்தில் 300 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளன. 
இந்த ஆண்டு பெருந்திரளாகச் சிதம்பரம் சென்று அன்பும் அறமும் அருளும் பெருக்க ஒன்றிணைவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.        

http://www.valampurii.lk/valampurii/content.php?id=12737&ctype=news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.