Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா பொறுப்பேற்றதற்கு கிளம்பியுள்ள எதிர்ப்பு, மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் பரவியுள்ளது.

Featured Replies

 
 
 
gallerye_234624157_1681172.jpg

 

  • gallerye_233632614_1681172.jpg

 

அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா பொறுப்பேற்றதற்கு கிளம்பியுள்ள எதிர்ப்பு, மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் பரவியுள்ளது.

 

Tamil_News_large_168117220161231233610_318_219.jpg

சசிகலாவை ஏற்றுக்கொள்ள முடியாமல், கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் உள்ள, இரண்டாம் கட்ட நிர்வாகிகள், பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.சென்னையில் நேற்று, கட்சித் தொண்டர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மற்ற சில பகுதிகளில், கொடும்பாவி எரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நேற்று பொறுப்பேற்றார். 'தனக்கு சாதகமான பொதுக்குழு உறுப்பினர்களை மட்டும் அழைத்து, சசிகலா பொதுச்செயலராகி உள்ளார். முன்னணி தலைவர்கள், தொண்டர்களின் எண்ணங்களுக்கு மாறாக, பதவி சுகத்தில் உள்ளவர்கள் சசிகலாவை ஆதரித்துள்ளனர்' என, கட்சியில் பெரும்பாலானோர் கொதித்து போய் உள்ளனர்.

தங்கள் ஆதங்கத்தையும், கோபத்தையும் பல விதங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். ஈரோடு மாநகர் மாவட்ட மீனவரணி செயலரும், தமிழ்நாடு அரசு வக்பு வாரிய உறுப்பினருமான பாரூக், ஈரோடு மாநகர் மாவட்ட அம்மா பேரவை மாவட்ட தலைவர் கவுரி சங்கர், மாநகர் எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர், ஈரோடு மாநகர் அம்மா பேரவை இணை செயலர் ஆகியோர், சசிகலாவுக்கு

எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் கட்சி பதவியை நேற்று ராஜினாமா செய்தனர்.
 

பதவியை ராஜினாமா செய்த, அவர்கள் கூறியதாவது:


தொண்டர்களின் எண்ணங்களுக்கு மாறாக, எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள், எம்.பி.,க்கள் மூலம் பொதுச்செயலர் பதவியை, சசிகலா அபகரித்துள்ளார். ஜெ., அண்ணன் மகள் தீபா, கட்சிக்கு வருவதை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அவரால் மட்டுமே கட்சியை காப்பாற்ற முடியும். ஆட்சி, பதவி சுகத்துக்கா கவே முன்னணி மற்றும் மூத்த தலைவர்கள் சசிகலாவை ஆதரிக்கின்றனர்.

தொண்டர்கள், பொதுமக்கள் முழுமையாக எதிர்க்கின்றனர். அ.தி.மு.க.,வுக்கு சமாதி கட்டி, இரண்டு நாட்களாகி விட்டது. வரும் நாட்களில் மேலும் பல நிர்வாகிகள், பதவி மற்றும் கட்சி யில் இருந்து விலகுவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

சசிகலா நியமனத்தால் அதிருப்தியடைந்த, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட, அ.தி.மு.க., கிளை நிர்வாகிகள் ஒன்றிணைந்து, 'புரட்சி மலர் ஜெ.தீபா பேரவை' என்ற பெயரில், திருச்சியில் புதிய அமைப்பை துவக்கியுள்ளனர். இதற்கான துவக்க விழா, ஸ்ரீரங்கத் தில் நேற்று நடந்தது.திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்படும் ரங்கராஜ்
கூறியதாவது:

புதிய தலைமை பிடிக்கவில்லை. அதே நேரத்தில் தீபா, கட்சித் தலைமை பொறுப்பை ஏற்று நடத்த வேண்டும் என, விரும்புபவர்கள் ஒருங்கிணைந்து, புதிய பேரவையை துவக்கி உள்ளோம். 10 மாவட்டங்களை சேர்ந்த, அ.தி.மு.க., கிளை செயலர்கள் இங்கு வந்துள்ளனர்.

இப்போதைக்கு ஒருங்கிணைப்பாளர்களை

 

மட்டும் நியமித்து, உறுப்பினர்கள் சேர்க் கையை துவக்கி உள்ளோம். இதுவரை, 1,000 பேரை உறுப்பினர்களாக சேர்த்துள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும் புதிய உறுப்பினர் களை சேர்த்த பின், தீபாவை நேரில் சந்தித்து, பேரவைக்கான அங்கீகாரத்தை பெற திட்ட மிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடலுாரில்,சசிகலா பதவி ஏற்றதை கண்டித்தும், பதவி விலகக் கோரியும், நேற்று, பலர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அ.தி.மு.க., மகளிரணி, வழக்கறிஞரணியை சேர்ந்தவர்கள் பங்கேற் றனர்.அதேபோல, புதுக்கோட்டை மாவட்டம், மறமடக்கி கிராமத்தில், சசிகலாவின் உருவபொம்மையை எரித்து, அ.தி.மு.க.,வினர் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோல, மாநிலத்தின் பல பகுதிகளிலும் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்கள் நடந்து வருகின்றன.

வேலுார், காட்பாடி அக்ரஹாரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில், தீபாவை வாழ்த்தி, அ.தி.மு.க.,வினர் சிலர், நேற்று பிளக்ஸ் பேனர் வைத்தனர். காட்பாடி, அ.தி.மு.க., பகுதி செயலரின் ஆதரவாளர்கள், அங்கு வந்து பேனரை அகற்ற முயன்றனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது; ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். பின், இரு தரப்பினரும், தனித்தனியாக போலீசில் புகார் செய்தனர்.
 

ஜெ. நினைவிடத்தில் தற்கொலை முயற்சி


ஜெயலலிதா மீதுள்ள பற்றால், அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள, எம்.ஜி.ஆர்., நினைவிடத்திற்கு, தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து செல்கின்றனர். அவர்க ளில் பெரும்பாலானோர், சசி கலாவை வசைபாடி செல்கின்றனர். அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நேற்று முறைப்படி பதவி யேற்ற நிலையில், ஜெயலலிதா நினைவிடத் தில், காலை, 11:30 மணிக்கு தொண்டர் ஒருவர், விஷம் குடித்து தற்கொலை க்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: தற்கொலைக்கு முயன்றவர், திருவள்ளுவர் மாவட்டம் காரனோடையைச் சேர்ந்த, சிவாஜி ஆனந்த், 50. ஜெ., நினைவிடத் தில், திடீரென விஷம் குடித்து, தற்கொலைக்கு முயன்றார். அவரை சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்.

'ஜெயலலிதா இருந்த பொறுப்புக்கு, சசிகலா வருவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை; அவர் பொதுச்செயலராக பதவியேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தற்கொலைக்கு முயன் றேன்' என, சிவாஜி ஆனந்த் கூறினர். இது குறித்து, அண்ணா சதுக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவ்வாறு போலீசார் கூறினர்.

- நமது நிருபர்கள் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1681172

பங்கு கேட்க்கிறார்கள் புரியவில்லையா ஊராட்ச்சி ,வட்டம் ,மாவட்டம் எல்லாரையும் கவனிக்க சொல்கிறார்கள் கவனித்தவுடன் இதெல்லாம் காணமல் போய்விடும் ஆனால் பிஜேபி வேறுவிதமாய் சதுரங்கம் விளையாடுது யார் வெட்டுப்பட போகிறார்கள் என்று பார்ப்பம்

gallerye_234624157_1681172.jpg

gallerye_233632614_1681172.jpg

அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா பொறுப்பேற்றதற்கு கிளம்பியுள்ள எதிர்ப்பு, மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் பரவியுள்ளது. 

சசிகலாவை ஏற்றுக்கொள்ள முடியாமல், கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் உள்ள, இரண்டாம் கட்ட நிர்வாகிகள், பதவியை ராஜி னாமா செய்து வருகின்றனர். சென்னையில் நேற்று, கட்சித் தொண்டர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மற்ற சில பகுதி களில், கொடும்பாவி எரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நேற்று பொறுப்பேற்றார். 'தனக்கு சாதகமான பொதுக் குழு உறுப்பினர்களை மட்டும் அழைத்து, சசிகலா பொதுச்செயலராகி உள்ளார். முன் னணி தலைவர்கள், தொண்டர்களின் எண்ணங் களுக்கு மாறாக, பதவி சுகத் தில் உள்ளவர்கள் சசிகலாவை ஆதரித்துள்ள னர்' என, கட்சியில் பெரும்பாலானோர் கொதித்து போய் உள்ளனர்.

தங்கள் ஆதங்கத்தையும், கோபத்தையும் பல விதங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். ஈரோடு மாநகர் மாவட்ட மீனவரணி செயல ரும், தமிழ்நாடு அரசு வக்பு வாரிய உறுப்பினரு மான பாரூக், ஈரோடு மாநகர் மாவட்ட அம்மா பேரவை மாவட்ட தலைவர் கவுரி சங்கர், மாநகர் எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர், ஈரோடு மாநகர் அம்மா பேரவை இணை செய லர் ஆகியோர், சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் கட்சி பதவியை நேற்று ராஜினாமா செய்தனர்.


பதவியை ராஜினாமா செய்த, அவர்கள் கூறியதாவது:


தொண்டர்களின் எண்ணங்களுக்கு மாறாக,

எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள், எம்.பி.,க்கள் மூலம் பொதுச்செயலர் பதவியை, சசிகலா அபகரித்துள்ளார். ஜெ., அண்ணன் மகள் தீபா, கட்சிக்கு வருவதை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அவரால் மட்டுமே கட்சியை காப்பாற்ற முடியும். ஆட்சி, பதவி சுகத்துக்கா கவே முன்னணி மற்றும் மூத்த தலைவர்கள் சசிகலாவை ஆதரிக்கின்றனர்.

தொண்டர்கள், பொதுமக்கள் முழுமையாக எதிர்க்கின்றனர். அ.தி.மு.க.,வுக்கு சமாதி கட்டி, இரண்டு நாட்களாகி விட்டது. வரும் நாட்களில் மேலும் பல நிர்வாகிகள், பதவி மற்றும் கட்சி யில் இருந்து விலகுவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

சசிகலா நியமனத்தால் அதிருப்தியடைந்த, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட, அ.தி.மு.க., கிளை நிர்வாகிகள் ஒன்றிணைந்து, 'புரட்சி மலர் ஜெ.தீபா பேரவை' என்ற பெயரில், திருச்சியில் புதிய அமைப்பை துவக்கியுள்ளனர். இதற்கான துவக்க விழா, ஸ்ரீரங்கத் தில் நேற்று நடந்தது.திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்படும் ரங்கராஜ்
கூறியதாவது:

புதிய தலைமை பிடிக்கவில்லை. அதே நேரத்தில் தீபா, கட்சித் தலைமை பொறுப்பை ஏற்று நடத்த வேண்டும் என, விரும்புபவர்கள் ஒருங்கிணைந்து, புதிய பேரவையை துவக்கி உள்ளோம். 10 மாவட்டங்களை சேர்ந்த, அ.தி.மு.க., கிளை செயலர்கள் இங்கு வந்துள்ளனர்.

இப்போதைக்கு ஒருங்கிணைப்பாளர்களை மட்டும் நியமித்து, உறுப்பினர்கள் சேர்க் கையை துவக்கி உள்ளோம். இதுவரை, 1,000 பேரை உறுப்பினர்களாக சேர்த்துள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும் புதிய உறுப்பினர் களை சேர்த்த பின், தீபாவை நேரில் சந்தித்து, பேரவைக்கான அங்கீகாரத்தை பெறதிட்ட மிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடலுாரில்,சசிகலா பதவி ஏற்றதை கண்டித்தும், பதவி விலகக் கோரியும், நேற்று,


Advertisement
spaceplay / pause qunload | stop ffullscreenshift + ←→slower / faster
↑↓volume mmute
←→seek  . seek to previous 12… 6 seek to 10%, 20% … 60%
பலர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அ.தி.மு.க., மகளிரணி, வழக்கறிஞரணியை சேர்ந்தவர்கள் பங்கேற் றனர்.அதேபோல, புதுக்கோட்டை மாவட்டம், மறமடக்கி கிராமத்தில், சசிகலாவின் உருவபொம்மையை எரித்து, அ.தி.மு.க.,வினர் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோல, மாநிலத்தின் பல பகுதிகளிலும் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்கள் நடந்து வருகின்றன.

வேலுார், காட்பாடி அக்ரஹாரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில், தீபாவை வாழ்த்தி, அ.தி.மு.க.,வினர் சிலர், நேற்று பிளக்ஸ் பேனர் வைத்தனர். காட்பாடி, அ.தி.மு.க., பகுதி செயலரின் ஆதரவாளர்கள், அங்கு வந்து பேனரை அகற்ற முயன்றனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது; ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். பின், இரு தரப்பினரும், தனித்தனியாக போலீசில் புகார் செய்தனர்.


ஜெ. நினைவிடத்தில் தற்கொலை முயற்சி


ஜெயலலிதா மீதுள்ள பற்றால், அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள, எம்.ஜி.ஆர்., நினைவிடத்திற்கு, தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து செல்கின்றனர். அவர்க ளில் பெரும்பாலானோர், சசி கலாவை வசைபாடி செல்கின்றனர். அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நேற்று முறைப்படி பதவி யேற்ற நிலையில், ஜெயலலிதா நினைவிடத் தில், காலை, 11:30 மணிக்கு தொண்டர் ஒருவர், விஷம் குடித்து தற்கொலை க்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: 

தற்கொலைக்கு முயன்றவர், திருவள்ளுர் மாவட்டம் காரனோடையைச் சேர்ந்த, சிவாஜி ஆனந்த், 50. ஜெ., நினைவிடத் தில், திடீரென விஷம் குடித்து, தற்கொலைக்கு முயன்றார். அவரை சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்.

'ஜெயலலிதா இருந்த பொறுப்புக்கு, சசிகலா வருவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை; அவர் பொதுச்செயலராக பதவியேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தற்கொலைக்கு முயன் றேன்' என, சிவாஜி ஆனந்த் கூறினர். இது குறித்து, அண்ணா சதுக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவ்வாறு போலீசார் கூறினர்.
 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1681172

  • தொடங்கியவர்
சசிகலா ஆதரவு பேனர்கள் கிழிப்பு:
பல மாவட்டங்களில் தொடரும் எதிர்ப்பு
 
 
 

அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலா பொறுப்பேற்றதற்கு, பல்வேறு இடங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல மாவட்டங்களில், பெரும்பாலானவர்கள் தங்கள் எதிர்ப்பை காட்ட, சசிகலாவுக்கு ஆதரவாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அடித்து நொறுக்கியும், போஸ்டர்களை கிழித்தும் வருகின்றனர்.

 

Tamil_News_large_1682309_318_219.jpg

ஈரோடு மாவட்டம் பவானியிலும், கிருஷ்ணகிரியிலும், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் பெயரில் வைக்கப்பட்ட பேனர்களை, மர்ம நபர்கள் கிழித்துவிட்டுச் சென்றனர். பின், தகவலறிந்து வந்த போலீசார், உடனடியாக அதை அகற்றினர்.
 

உண்மை தொண்டர்கள்


சசிகலாவை வாழ்த்தி, நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் வைக்கப்பட்ட பேனரை, மர்ம நபர்கள் கிழித்து, சாலையோரத்தில்

வீசியுள்ளனர்.நாமக்கல் மாவட்டம், மோகனுார் ஒன்றியம், கபிலர்மலை ஒன்றியம், கோப்பணம்பாளையம் ஊராட்சி, தன்னாசி மேடு பகுதியில், தீபாவை, அ.தி.மு.க.,விற்கு தலைமையேற்க வலியுறுத்தி, கட்சியின் உண்மைதொண்டர்கள் என, பேனர் வைக்கப்பட்டுள்ளது.

கடலுாரில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் இருந்த சசிகலா படம் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில், 'மக்கள் பணியாற்றிட வர வேண்டும்' என, தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து, பேனர் வைக்கப்பட்டுள்ளது.சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து வைக்கப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டு வருவதால், அ.தி.மு.க., நிர்வாகத்தினர் கலக்கம் அடைந்துள்ளனர்.
 

சசிகலா, தீபா பேனர்களை அகற்ற போலீசார் உத்தரவு


சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே,கெங்கவல்லி ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், கடைவீதி, ஆணையம்பட்டி ஆகிய இடங்களில், 'பிளக்ஸ்' பேனர் வைக்கப்பட்டது. நேற்று அதிகாலை, கடைவீதியில் இருந்த பேனரில் சசிகலா படம் மற்றும் பேனர் முழுவதும் கிழிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து, அ.தி.மு.க.,வினர், கெங்கவல்லி போலீசில்

 

புகார் செய்தனர்.
இதையடுத்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகள், ஜெ.தீபாவுக்கு வைத்திருந்த பேனரை அகற்றும்படி போலீசார் கூறியுள்ளனர்.
அதற்கு, தீபா ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, 'சசிகலா பேனர்களை அகற்றினால் தான், தங்களது பேனரும் அகற்றுவோம்' என, கூறினர்.
'கெங்கவல்லி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த அனைத்து பேனர்களையும், நேற்று இரவுக்குள் அகற்றப்பட வேண்டும். பேரூராட்சி, ஊராட்சிகளில் அனுமதி பெற்றே பேனர்கள் வைக்க வேண்டும்' என்று, போலீசார் தெரிவித்துள்ளனர்.
- நமது நிருபர் குழு -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1682309

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.