Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரவு விடுதியில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு : 35 பேர் பலி.!

Featured Replies

Many wounded' in Istanbul nightclub attack

 
Breaking News image
 

Many people have been wounded in an attack on a nightclub in Istanbul, Turkey's NTV reports.

Footage appears to show a number of ambulances and police vehicles outside the Reina nightclub, in the Besiktas area of the city.

NTV says two attackers were involved, with CNN Turk reported they were dressed in Santa costumes.

Istanbul had been on high alert for any terror attacks, with some 17,000 police officers on duty in the city.

There were reportedly several hundred people in the nightclub at the time.

http://www.bbc.com/news/world-europe-38481521

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

'Many wounded' in Istanbul nightclub attack

 

Many people have been wounded in an attack on a nightclub in Istanbul, Turkey's NTV reports.

NTV said around 20 to 30 people may have been wounded in the attack, which took place in the Reina nightclub, in the Ortakoy area, at about 01:30 local time (23:30 GMT).

The channel says two attackers were involved, while CNN Turk reported they were dressed in Santa costumes.

Unconfirmed reports say one attacker may still be inside.

Istanbul had been on high alert for any terror attacks, with some 17,000 police officers on duty in the city.

There were reportedly several hundred people in the nightclub at the time.

http://www.bbc.com/news/world-europe-38481521

  • தொடங்கியவர்

Istanbul nightclub attack 'leaves 35 dead'

At least 35 people have lost their lives in an attack on a nightclub in Istanbul, the city's governor has said.

http://www.bbc.com/news/world-europe-38481521

  • தொடங்கியவர்

இரவு விடுதியில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு : 35 பேர் பலி.!

 

 

துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் இரவு விடுதியில் நிகழ்ந்த புத்தாண்டு விழா கொண்டாட்டத்தின்போது மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு 35 பேர் பலியாகினர்.

Istanbul_Turkey.jpg

துருக்கி தலைநகரான இஸ்தான்புல் நகரையொட்டி, ஐரோப்பிய கண்டத்தையும், ஆசிய கண்டத்தையும் பிரிக்கும் பாஸ்பரஸ் ஜலசந்தி பகுதியில் ஆர்ட்டாக்கோய் மாவட்டத்தில் உள்ள அந்த பிரபல இரவு விடுதி, உள்நாட்டினரும், வெளிநாட்டினரும் அடிக்கடி ஒன்றுகூடி விருந்து நிகழ்ச்சிகளை நடத்தும் பிரசித்தி பெற்ற இடமாகும்.

இன்று பிறந்த புத்தாண்டை வரவேற்க இந்த இரவு விடுதியில் நேற்றிரவு சுமார் 500 பேர் திரண்டு, மகிழ்ச்சியுடன் காத்திருந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் உச்சகட்ட உற்சாகத்தில் அவர்கள் திளைத்திருந்தபோது, இரவு சுமார் 1.30 மணியளவில் தானியங்கி ரக துப்பாக்கியுடன் உள்ளே புகுந்த ஒருவன், எதிர்பட்டவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டான்.

இதில் 35 பேர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தனர், 40 இற்கும் அதிகமானவர்கள் குண்டு காயங்களுடன் அருகாமையில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலை நடத்தியவனை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றதாக இஸ்தான்புல் கவர்னர் வாசிப் சாஹின் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தேவையான அவசர உதவிகளை செய்ய அமெரிக்க அரசு தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/14951

  • தொடங்கியவர்

இஸ்தான்புல் கேளிக்கை விடுதியில் பயங்கரவாத தாக்குதலில் 39 பேர் பலி

 
 

 

இஸ்தான்புல்லில் உள்ள இரவு கேளிக்கையகம் ஒன்றில் நிகழ்ந்த தாக்குதலில் 16 வெளிநாட்டினர் உள்பட குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கியின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இஸ்தான்புல் கேளிக்கை விடுதியில் பயங்கரவாத தாக்குதலில் 39 பேர் பலி
 இஸ்தான்புல் கேளிக்கை விடுதியில் பயங்கரவாத தாக்குதலில் 39 பேர் பலி

உள்ளூர் நேரப்படி 01.30 மணிக்கு ரீய்னா இரவு கேளிக்கையகத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியை இன்னும் போலிசார் தேடி வருவதாக அமைச்சர் சுலேமான் சொய்லு தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நிகழ்ந்து பல மணி நேரங்கள் கழித்தும் தாக்குதல்தாரி எங்கு இருக்கிறார் என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்தான்புல் கேளிக்கை விடுதியில் பயங்கரவாத தாக்குதலில் 39 பேர் பலி 

மேலும், 69 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

தீவிரவாதியை தேடும்பணி தொடர்ந்து கொண்டிருப்பதாகவும், விரைவில் அவரை பிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் சொய்லு கூறியுள்ளார்.

http://www.bbc.com/tamil/global-38482453

கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போட்ட பயங்கரவாதி

இஸ்தான்புல்: துருக்கி தாக்குதலில் துப்பாக்கியால் சுட்ட பயங்கரவாதிகளில் ஒருவன் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வந்ததாக தப்பி பிழைத்தவர்கள் கூறினர். 
துருக்கியில் உள்ள இரவு நேர விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. இங்கு 7 பேர் இருந்துள்ளனர். கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென துப்பாக்கிச் சப்தம் கேட்டது. இதனை பார்த்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர் . சிலர் அருகில் இருந்த கடலுக்குள் குதித்து தப்பினர். இதில் 39 பேர் பலியாயினர். 50 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். 
இந்த சம்பவத்தில் உயிர் தப்பிய சிலர் கூறுகையில்; மேடை அருகே வந்த இருவர் சுட்டனர். ஒருவர் சன்டா கிளாஸ் வேடம் அணிந்திருந்தார். மற்றொருவர் இருட்டில் அடையாளம் தெரியவில்லை என்றனர். 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1681436

  • தொடங்கியவர்

#Istanbul Attack Updates: இரண்டு இந்தியர்கள் பலி

 

istanbul-nightclub-attack4_19482.jpg

துருக்கி இஸ்தான்புல் நகரில், புத்தாண்டு கொண்டாடிய விடுதி ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 39 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த தாக்குதலில் இந்திய நாட்டைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். குஜராத்தைச் சேர்ந்த குஷி ஷா மற்றும் அபிஸ் ரிஸ்வி ஆகிய இரண்டு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் ரிஸ்வி முன்னாள் ராஜ்யசபா எம்.பியின் மகன் என்றும் சுஷ்மா கூறியுள்ளார். மேலும், இஸ்தான்புல்லுக்கு இந்திய தூதர் விரைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/world/76536-two-indians-dead-in-istanbul-attack.art

  • தொடங்கியவர்

துருக்­கிய இரவு விடு­தியில் துப்­பாக்கிச் சூடு 15 வெளி­நாட்­ட­வர்கள் உட்­பட 39 பேர் பலி

p24-27aee0aa528b8bfe7f27b070430034282edfd886.jpg

 

69 பேருக்கும் அதி­க­மானோர் காயம் 
துருக்­கிய இஸ்­தான்புல் நக­ரி­லுள்ள இரவு விடு­தியில் புது­வ­ருட தினத்தில் துப்­பாக்­கி­தா­ரி­யொ­ருவர் நடத்­திய தாக்­கு­தலில் குறைந்­தது 15 வெளி­நாட்­ட­வர்கள் உட்­பட 39 பேர் பலி­யா­கி­யுள்­ள­துடன் 69 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ள­தாக அந்­நாட்டு உள்­துறை அமைச்சர் தெரி­வித்தார்.

 மேற்­படி ரெயினா இரவு விடு­தியில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை அந்­நாட்டு நேரப்­படி அதி­காலை 1:30 மணிக்கு துப்­பாக்­கி­தாரி பிர­வே­சித்து துப்பாக்கிச் சூட்டை நடத்­தி­யுள்ளார்.

இந்­நி­லை­யில் தாக்­கு­தலை நடத்தி விட்டு தலை­ம­றை­வா­கி­யுள்ள நபரைத் தேடும் நட­வ­டிக்கை மும்­மு­ர­மாக  மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக உள்­துறை அமைச்­ச­ரான சுலைமான் சோய்லு தெரி­வித்தார்.   தாக்­கு­தல்­தா­ரிகள் குழப்­பத்தை உரு­வாக்கி தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ரான போராட்­டத்தை முடி­வுக்­கு­கொண்டு வரும் முயற்­சியில் ஈடு­பட்­டுள்­ள­தாக துருக்­கிய ஜனா­தி­பதி தாயிப் எர்­டோகன் கூறினார்.   

இரவு விடுதித் தாக்­கு­தலில் பலி­யா­ன­வர்­களில் 21 பேர் மட்டும் இது­வரை அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்த துருக்­கிய உள்­துறை அமைச்சர், இந்தத் தாக்­கு­தலில் 15 அல்­லது 16 வெளி­நாட்­ட­வர்கள் உயி­ரி­ழந்­துள்­ள­தாகக் கூறினார்.

இது ஒரு மனி­தா­பி­மா­ன­மற்ற மோச­மான படு­கொலைச் சம்­பவம் என அவர் தெரி­வித்தார்.

 ஆரம்ப கட்ட ஊடகத் தக­வல்கள், நத்தார் தாத்தா உடையில் வந்தே தாக்­கு­தல்­தாரி இந்தத் தாக்­கு­தலை நடத்­தி­ய­தாக தெரி­வித்­தி­ருந்­தன. ஆனால் சி.சி.ரி.வி. கண்­கா­ணிப்பு கரு­வி­களில் பதி­வா­கி­யுள்ள காணொளிக் காட்­சிகள் தாக்­கு­தல்­தாரி கறுப்பு நிற மேலாடை அணிந்து குறிப்­பிட்ட இரவு விடு­திக்கு முன்­பாக நட­மா­டு­வதை வெளிப்­ப­டுத்­து­கின்­றன.

துப்­பாக்­கி­தாரி மேலா­டையும் காற்­சட்­டையும் அணிந்து வந்­தி­ருந்த போதும் அவர் அந்த இரவு விடு­திக்குள் வேறு­பட்ட ஆடை­களை அணிந்து காணப்­பட்­ட­தாக எமக்குத் தக­வல்கள் கிடைத்­துள்­ளன என சுலைமான் சோய்லு தெரி­வித்தார்.

தாக்­கு­தல்­தாரி அந்த இரவு விடு­திக்கு வெளியில் துப்­பாக்கிச் சூட்டை நடத்தி பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வ­ரையும் பொது­மகன் ஒரு­வ­ரையும் கொன்­றுள்­ள­தாக இஸ்­தான்புல் ஆளுநர் வாஸிப் சாஹின் தெரி­வித்தார்.

மேற்­படி துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வத்தில் உயிர்­தப்­பிய சினெம் உயானிக் என்ற பெண் விப­ரிக்­கையில், துப்­பாக்கிச் சூட்­டுக்கு இலக்­காகி தனது கணவர் தன் மீது விழுந்­த­தா­கவும் தான் தனக்கு மேலாக விழுந்­தி­ருந்த பல சட­லங்­களை தூக்கி அப்­பு­றப்­ப­டுத்­தியே எழுந்­தி­ருக்க வேண்­டி­யி­ருந்­த­தா­கவும் கூறினார்.

தாக்­குதல் இடம்­பெற்ற வேளை அந்த இரவு விடு­தியில் சுமார் 700 பேர்­வரை இருந்­துள்­ளனர். அவர்­களில் சிலர் உயர் தப்­பு­வ­தற்­காக அந்த இரவு விடு­திக்கு அரு­கி­லி­ருந்த கடல் நீரில் குதித்­த­தாக சம்­ப­வத்தை நேரில் கண்­ட­வர்கள் தெரி­விக்­கின்­றனர்.

அதே­ச­மயம் பாது­காப்பு மற்றும் பொது ஒழுங்கு விதி­களை கரு­திற்­கொண்டு தாக்­குதல் நடத்­தப்­பட்ட இடத்­திற்கு செல்ல ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டி­ருந்­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லையில் இந்தத் தாக்­கு­தலில் ஒன்­றுக்கு மேற்­பட்ட தாக்­கு­தல்­தா­ரிகள் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கலாம் என சில ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

தாக்­கு­தல்­தாரி அரே­பிய மொழியில் பேசி­ய­தாக சம்­ப­வத்தை நேரில் கண்ட சிலர் தெரி­வித்­துள்­ள­தாக டொகான் செய்தி முகவர் நிலையம் கூறு­கி­றது.

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் துருக்கி மீது தனிப்­பட்ட தாக்­கு­தல்­களை நடத்த அந்­நாட்­டி­லுள்ள ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு ஏற்­க­னவே அழைப்பு விடுத்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

துருக்கி நான்கு மாதங்­க­ளுக்கு முன்னர் சிரி­யாவில் ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் மற்றும் குர்திஷ் குழு­வினர் ஆகி­யோ­ருக்கு எதி­ரான தாக்­குதல் நட­வ­டிக்­கையை ஆரம்­பித்­தி­ருந்­தது.

மேற்­படி இரவு விடு­தியில் நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லுக்கு அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா, ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டின் உள்­ள­டங்­க­லான உலகத் தலை­வர்கள் கடும் கண்­டனம் தெரி­வித்­துள்­ளனர்.

 ஹவாயில் விடு­மு­றையை கழிக்கச் சென்­றுள்ள பராக ஒபாமா இந்தத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்காக அனுதாபத்தை தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகைப் பேச்சாளர் எறிக் சுல்ட்ஸ் தெரிவித்தார்.

 பொதுமக்களை படுகொலை செய்யும் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தன்னால் வெளியிடப்பட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 இந்நிலையில் புது வருட தினத்தில் இஸ்தான்புல்லின் பாதுகாப்பு என்றுமில்லாதவாறு பலப்படுத்தப்பட்டிருந்தது.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-02#page-1

  • தொடங்கியவர்

துருக்கி புத்தாண்டு தாக்குதல் சம்பவத்துக்கு ஐஎஸ் பொறுப்பேற்பு

 

கோப்புப் படம்: கெட்டி இமேஜஸ்
கோப்புப் படம்: கெட்டி இமேஜஸ்
 
 

துருக்கியில் புத்தாண்டு தினத்தன்று கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றது.

இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) ஐஎஸ் இயக்கம் வெளியிட்ட அறிக்கையில்,"புனித போரின் தொடர்ச்சியாக துருக்கிக்கு எதிராக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. துருக்கியின் பிரபலமான கேளிக்கை விடுதியில் விடுமுறையைக் கொண்டாடிக் கொண்டிருந்த கிறிஸ்துவர்களைத் தாக்கியது எங்களது படைவீரர்தான்" என்று கூறப்பட்டுள்ளது.

புத்தாண்டு தினத்தில் நடந்த கொடூரத் தாக்குதல்

முன்னதாக இஸ்தான்புல் நகரில் உள்ள பிரபலமான ரீனா இரவு விடுதியில், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த ஒருவர், விடுதியின் நுழைவு வாயிலில் இருந்த ஒரு காவலர் உட்பட 2 பேரை துப்பாக்கியால் சுட்டார்.

பின்னர் விடுதிக்குள் நுழைந்த அவர் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினார். இதனால் விடுதியில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு இங்கும் அங்குமாக ஓடினர். இதனிடையே அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்தத் தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட 39 பேர் பலியாகினர்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக யாரும் பொறுப்பேற்காத நிலையில் இந்தத் தாக்குதலை ஐஎஸ் இயக்கம் நிகழ்த்தியிருக்கலாம் என துருக்கி அரசு சந்தேகம் தெரிவித்திருந்தது. இதனிடையே இன்று (திங்கட்கிழமை) இந்தத் தாக்குதலை தாங்கள்தான் நடத்தினோம் என்று ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

துருக்கி மீதான ஐஎஸ்ஸின் விரோத பின்னணி

2016-ஆம் ஆண்டு முதல் சிரியா மற்றும் இராக்கில் பரவியுள்ள ஐஎஸ் இயக்கத்தை அழிப்பதில் துருக்கி ஆர்வம் காட்டி வந்தது. அதனையடுத்து ஐஎஸ் இயக்கம் துருக்கிக்கு எதிராகத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது.

கடந்த டிசம்பர் மாதம் ஐஎஸ் அமைப்பால் துருக்கியின் இரு ராணுவ வீரர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவத்துக்கு பிறகு துருக்கி பிரதமர் பினலி இல்திரிம், "ஐஎஸ் அமைப்புக்கு தக்க பதிலடி அளிக்கப்படும். தீவிரவாதத்துக்கு எதிரான தாக்குதல் துருக்கியிலும், அதன் எல்லைப் பகுதிகளிலும் தொடரும். தீவிரவாதத்தை இறுதியில் நமது ஒற்றுமை வெல்லும்" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் துருக்கி மீது ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/world/துருக்கி-புத்தாண்டு-தாக்குதல்-சம்பவத்துக்கு-ஐஎஸ்-பொறுப்பேற்பு/article9454829.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.