Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'மீண்டும் ஜனாதிபதியானால் நாட்டில் வித்தியாசமாக எதனை செய்வீர்கள் ?' : பதிலளித்தார் மஹிந்த

Featured Replies

 'மீண்டும் ஜனாதிபதியானால் நாட்டில் வித்தியாசமாக எதனை செய்வீர்கள் ?' :   பதிலளித்தார் மஹிந்த

 

 

மீண்டும் ஜனாதிபதியாக வாய்ப்பு கிடைத்தால் நாட்டில் வித்தியாசமாக எதனை செய்வீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு, நாட்டை யார் ஆட்சி செய்தாலும் தற்போதைய தலைமுறையினருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் ஏற்ற சரியானதை செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.AskMR--mahinda.jpg

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை அவரது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கேள்வி 

உங்களுடைய தம்பி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதே?

பதில்

அரசியில் அமைப்பின் பிரகாரம் தகுதியுள்ள எந்தவொரு நபரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும்

கேள்வி

2020 ஆம் ஆண்டில் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீங்கள் மைத்திரிபாலவை எதிர்த்து போட்டியிடுவீர்களா?

பதில்

நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல எதிர்காலத் தலைவர்களுக்கு இதுவொரு சரியான நேரம் என நினைக்கின்றேன்.

கேள்வி

பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்படும் வரவு செலவுத் திட்டங்கள், அரசியலமைப்பு திருத்தங்கள் என இது போன்ற பல விடயங்களில் ஏன் பங்கெடுப்பதில்லை.

பதில்

எனக்கு இயலுமான நேரங்களில் பாராளுமன்றுக்கு செல்வேன். மேற்கூறிய விடயங்கள் தொடர்பான வாக்கெடுப்புகளில் எனது நிலைப்பாடுகளை தெரிவித்துள்ளேன்.

கேள்வி

முஸ்லிம் சமூகம் உங்கள் மீது மீண்டும் நம்பிக்கை வைக்க ஆரம்பித்துள்ளது. நாட்டில் உள்ள கடும்போக்குவாதிகளுக்கு எதிராக உங்களுடைய எதிர்கால ஆட்சியில் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்?

பதில்

தற்போதும் எதிர்காலத்திலும் கடும்போக்குவாதிகளுக்கு இடமளிக்கமாட்டோம். நாம் எப்போது நாட்டின் ஒற்றுமைக்காக செயற்படுவோம்.

கேள்வி

சீனாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் நோக்கம் என்ன? சீனாவிடம் நீங்கள் கூறியது என்ன? சீனா உங்களுக்கு விடுத்த வேண்டுகோள் என்ன?

பதில்

சீனா எப்போது இலங்கையின் நண்பனாக இருந்து வருகின்றது. அவர்களின் ஆதரவை நாம் மதிக்கின்றோம். மக்களையும் சூழலையும் பாதிக்காத வகையில் செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோளாக இருந்தது.

கேள்வி

எட்கா தொடர்பில் உங்களதும், எதிரணியினரினதும் நிலைப்பாடு என்ன?

பதில்

நாம் எப்போது அதற்கு எதிராகவே உள்ளோம். இருக்கும் ஒப்பந்தங்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் இலங்கையர்களின் வேலை வாய்ப்புகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட கூடாது.

கேள்வி

தேசிய பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு காணுமா?

பதில்

தேசிய பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் நடத்தைகள் தீர்க்கமானதாக இல்லை.

கேள்வி

எதிர்காலத்தில் உங்களது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் நிதி மோசடி விசாரணைப்பிரிவை தொடர்ந்தும் கொண்டு செல்லுமா?

பதில்

நிதி மோசடி விசாரணைப்பிரிவு ஒரு சட்டவிரோத நிறுவனம். இது தொடர்பில் ஆராய்ந்து நல்லாட்சி எனும் போர்வையில் குற்றப்புரிந்தவர்களை தண்டிக்க முடியும் என்றார்.

கேள்வி.

உங்களது அரசாங்கத்துக்கும் பொதுபல சேனாவுக்குமிடையிலான உண்மையான தொடர்பு என்ன? அதேவேளை சிறுபான்மையினருக்கெதிரான அவர்களின் செயற்பாடுகளுக்கு ஏன் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை?

பதில்

பொதுபல சேன இப்பொழுது யாருடன் இணைந்துள்ளார்கள் என்பதனை தற்போது உங்காளால் தெளிவாக பார்க்க முடியும்

கேள்வி

அம்பாந்தோட்டையில் விவசாய நிலத்தை விற்பனை செய்வதற்கு எதிராக இருக்கின்றீர்கள். எனினும் உங்களுடைய ஆட்சியில் சாம்பூர் நிலத்தை வெளிநாட்டு விற்பனை செய்ய ஏன் முடிவெடுத்தீர்கள்?

பதில்

சம்பூர், நுரைச்சோலை போன்ற திட்டங்களை இலங்கை சார்ந்தவையாக இருந்த போதும் இந்தியாவினால் அமைக்கபடவிருந்தன. எனினும் நாம் யாருக்கு நிலத்தை விற்பனை செய்யவில்லை.

http://www.virakesari.lk/article/15348

  • தொடங்கியவர்

நாட்டை ஆட்சி செய்வதற்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தால்?

Sp09-57eb2f03828563cd331fb707e8fc8334b1eaee61.jpg

 

கேள்விக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த பதில்"
(லியோ நிரோஷ தர்ஷன்)

அனைத்து சமூ­கங்­களின் நலன்­களும் பேணப்­ப­டு­கின்ற அர­சியல் தீர்வு தொடர்பில் நான் தொடர்ந்தும் உறு­தி­யாக உள்ளேன். ஆனால், அபி­வி­ருத்­தியை காரணம் காட்டி தேசிய சொத்­துக்­களை இந்­தி­யா­விற்கோ சீனா­விற்கோ அல்­லது வேறு வெளி­நா­டு­க­ளுக்கோ விற்­பனை செய்­வதை அனு­ம­திக்க போவ­தில்லை என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்.  

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் உத்­தி­யோ­கப்­பூர்வ டுவிட்டர் தளத்தில் கேட்­கப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு நேற்று பதில் அளிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அந்த கேள்வி பதில்கள் பின்­வ­ரு­மாறு ,

கேள்வி அம்­பாந்­தோட்­டையில் விவ­சாய நிலங்­களை விற்­பனை செய்­வ­தாக தெரி­வித்து எதிர்ப்பை வெளி­யி­டு­கின்­றீர்கள் . அவ்­வா­றாயின் உங்கள் ஆட்­சியில் சம்பூர் நிலத்தை வெளி­நாட்­டிக்கு வழங்­கி­யது ஏன் ?

பதில் : நுரைச்­சோ­லையை போன்றே சம்­பூ­ரிலும் திட்டம் ஒன்றை இந்­திய அர­சாங்­கத்தின் உத­வி­யுடன் முன்­னெ­டுத்தோம். ஆனால் நாங்கம் எந்­த­வொரு சந்­திப்­பத்­திலும் காணி­களை விற்க வில்லை.

கேள்வி பிக்­குகள் அர­சி­யலில் எல்லை மீறி செயற்­ப­டு­வ­தாக பர­வ­லான விமர்­ச­னங்கள் காணப்­ப­டு­கின்­றன . இது குறித்து உங்கள் நிலைப்­பாடு என்ன ?

பதில் : தற்­போது காணப்­பட கூடிய பிக்­கு­களின் செயற்­பா­டு­களை அர­சி­ய­லாக கருத முடி­யாது. ஏனென்றால் நாட்டில் நெருக்­க­டி­யான நிலை­மைகள் ஏற்­பட்ட அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளிலும் பிக்­குகள் முன் வந்து அதற்கு எதி­ராக செயற்­பட்­டனர். இது வர­லாறு ஆகும்.

கேள்வி போர் வீரர்­க­ளுக்கு எதி­ரான அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளுக்கு எதிர்­கா­லத்தில் நீதி கிடைக்­குமா ?

பதில் :சட்­டத்தை மீறும் அனை­வரும் நீதியின் முன் அழைக்­கப்­ப­டு­வார்கள்.

கேள்வி எட்கா ஒப்­பந்தம் தொடர்பில் கூட்டு எதிர் கட்­சி­யி­னதும் உங்­க­ளதும் நிலைப்­பாடு என்ன ?

பதில் : நாங்கள் வன்­மை­யாக கண்­டிக்­கின்றோம். பிரச்­சி­னை­களை தீர்க்­காது ஒப்­பந்­தத்தை வியா­பிப்­பது ஏற்­பு­டை­ய­தல்ல. இதன் ஊடாக இலங்­கையில் தொழில் பாது­காப்­பின்மை ஏற்­படும்.

கேள்வி உங்­க­ளது இறுதி சீன விஜ­யத்தின் நோக்கம் என்ன ? சீனா உங்­க­ளிடம் கோரிய மற்றும் நீஙகள் வழங்­கிய உறு­தியும் என்ன ?

பதில் : திட்­டங்­களை முன்­னெ­டுங்கள். ஆனால் மக்­களை இடம்­பெ­யர செய்­வதோ இயற்­கைக்கு பாதிப்பு ஏற்­ப­டுத்­து­வ­தையோ அனு­ம­திக்க முடி­யாது. அதே போன்று சீனா எப்­போதும் இலங்­கையின் சிற்­நத நண்பன். அவர்­க­ளது ஒத்­த­ழைப்பு முக்­கி­ய­மா­னது.

கேள்வி 2020 ஆண்டு ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சுதந்­திர கட்­சியின் அமைச்­சர்கள் அறி­வித்­துள்­ளனர். அவரை எதிர்த்து நீங்கள் போட்­டி­யி­டு­வீர்­களா?

பதில் : எதிர்­கால தலை­வர்கள் நாட்டை முன்­னோக்கி கொண்டுச் செல்­வார்கள் என நான் நம்­பிக்கை கொள்­கின்றேன்.

கேள்வி இலங்கை வாழ் முஸ்லிம் மீணடும் உங்கள் மீது நம்­பிக்கை வைத்­துள்­ளனர். இந்­நி­லையில் அடிப்­ப­டை­வா­தி­க­ளுக்­கான உங்­க­ளது பதில் என்ன ?

பதில் : அடிப்­ப­டை­வா­தத்தை நாம் ஒரு போதும் அனு­ம­திப்­ப­தில்லை. எதிர்­கா­லத்­திலும் அவ்­வாறே இருக்கும். நாங்கள் எப்­போதும் இலங்­கையின் இன நல்­லி­ணக்­கத்­திற்­காக முன்­னிற்போம்.

கேள்வி நிதி குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு தொடர்­பாக உங்கள் ஆட்­சியில் எவ்­வா­றான தீர்­மா­னங்கள் எடுக்­கப்­படும் ?

பதில் : சட்­டப்­பூர்­வ­மற்ற நிதி குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு ஊடாக மேற்­கொள்­ளப்­படும் அர­சியல் பழி­வாங்­கல்­க­ளுக்கு எதி­ராக சட்­டப்­பூர்­வ­மான நிறு­வ­னத்தை அமைத்து குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்­படும்.

கேள்வி இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வாக 13 பிளஸ் அமுல்­ப­டுத்­து­வ­தாக இந்­தி­யா­விடம் கூறி­னீர்கள்.

பதில் : அனைத்து சமூ­கங்­களின் நலன்­களும் பேணப்­ப­டு­கின்ற அர­சியல் தீர்வு தொடர்பில் நான் தொடர்ந்தும் உறு­தி­யாக உள்ளேன்.

கேள்வி இளை­யோரை ஒன்­றி­ணைத்து நீலப்­ப­டை­யணி போன்ற அமைப்பை உரு­வாக்­கிய அர­சியல் பய­ணத்­திற்கு நீங்கள் தயார் இல்­லையா?

பதில் : இளையோர் அமைப்பை உரு­வாக்­கு­வது அவ­சி­ய­மாகும் .கூட்டு எதிர் கட்சி இளைஞர் அமைப்­பு­களை அணித்­தி­ரட்டி தலை­மைத்­தவம் வழங்கி வரு­கின்­றது.

கேள்வி பொரு­ளா­தார வர்த்­தக வல­யங்கள் தொடர்பில் உங்கள் காலத்­திற்கும் தற்­போதும் உள்ள வேறுப்­பாடு என்ன ?

பதில் : நன்­றாக பாருங்கள் . மோத­லுக்கு பின்னர் முன்­னெ­டுக்­கப்­பட்ட அனைத்து திட்­டங்­களும் எமது காலத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்­டவை .

கேள்வி எதிர்­கால தேர்­த­ல­களில்; வெற்­றிப்­பெ­று­வீர்­களா ?

பதில் : தேர்­தல்­களில் போட்­டி­யி­டு­வது வெற்­றிப்­பெ­ற­வ­தற்கே அன்றி தோல்­வி­ய­டை­ய­வல்ல.

கேள்வி நாட்டை ஆட்சி செய்­வ­தற்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் என்ன மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வீர்கள்.

பதில் : யார் ஆட்சி செய்­தாலும் நிகழ்­கா­லத்­தையும் எதிர்­கால சந்­த­தி­யி­ன­ரையும் சிந்­தித்து செய­லாற்ற வேண்டும்.

கேள்வி நாட்டில் அபி­வி­ருத்தி திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கின்­றது. அது குறித்து உங்கள் நிலைப்­பாடு என்ன ?

பதில் : அர­சாங்கம் பெற்­றுக்­கொள்­கின்ற கட­னுக்கு ஈடான அபி­வி­ருத்­திகள் நாட்டில் இடம்­பெற வில்லை என்­பது சாதா­ரண அறி­வுள்­ள­வர்­க­ளுக்கு கூட விளங்கிக் கொள்ள முடியும்.

கேள்வி தேசிய வளங்கள் விற்­பனை செய்­யப்­ப­டு­வ­தற்கு எதி­ராக எவ்­வாறு நீங்கள் நட­வ­டிக்கை எடுக்க போகி­றீர்கள். ?

பதில் : பொது மக்­க­ளுக்கு மாத்­தி­ரமே அதனை நிறுத்த முடியும். மக்கள் அதற்கு எதி­ராக முன்­னிற்க வேண்டும்.

கேள்வி வில்­பத்து காட­ழிப்பு தொடர்பில் உங்­கள நிலைப்­பாடு என்ன ?

பதில் :அபி­வி­ருத்­திக்­கா­கவோ அல்­லது மீள்­கு­டி­யேற்­றத்­திற்­கா­கவோ சூழலை அழிப்­பதை ஏற்க முடி­யாது.

கேள்வி பாரா­ளு­மன்­றத்தில் வாக்­கெ­டுப்­புகள் இடம்­பெறும் போது நீங்கள் தொடர்ந்தும் சமூ­க­ம­ளிக்­கா­தது ஏன்?

பதில் : முக்­கி­ய­மான அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளிலும் நான் இருந்­தி­ருக்­கின்றேன்.

கேள்வி பொது­பல சேனா உங்­க­ளுக்கு எதி­ராக குற்­றச்­சாட்­டுக்­களை முன் வைக்­கின்­றது. ஊங்கள் நிலைப்­பாடு என்ன ?

பதில் :பொது­ப­ல­சேனா அமைப்­பிற்கு பின்னால் யார் இருக்­கின்­றனர் என்­பது தற்­போது மக்கள் அறி­வார்கள்

கேள்வி 2020 மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரானால் ஆலோ­சகர் என்ற வகையில் ஆத­ரவு வழங்­கு­வீர்­களா ?

பதில் : சுதந்­திர கட்­சியின் அப்­போ­தைய தீர்­மா­னத்­திற்கு அமை­வ­தாக எனது தீர்­மானம் அமையும்

கேள்வி குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கு அதீத அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கின்­றது.

பதில் :ஜன­நா­யக தேர்­தல்­களின் ஊடா­கவே அவர்கள் தெரி­வா­னார்கள் . கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் நாட்­டிற்­கான பங்­க­ளிப்பு அனை­வ­ருக்கும் தெரியும்.

கேள்வி சீன எதிர்ப்பு நட­வ­டிக்கைள் தொடர்­பாக சீன தூது­வ­ரு­ட­னான சந்­திப்பில் பேசப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கின்­றது.

பதில் : அதில் உண்­மை­யில்லை. அது ஒரு சுமூ­க­மான சந்­திப்பு

கேள்வி போர் விசாரணையில் சீனாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டால் அதற்கு எதிராக செயற்படுவீர்களா ?

பதில் : அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானங்களை கொண்டு வரும் போது சீனா எப்போதும் எமது பக்கம் நின்றது.

கேள்வி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இலங்கைக்கு எவ்விதமான தாக்கத்தை தரும்

பதில் : அமெரிக்காவின் புதிய அரசாங்கம் ஏனைய நாடுகளின் இறையாண்மையை மதித்து புதிய வெளிவிவகார கொள்கையுடன் இராஜதந்திர ரீதியில் செயற்படும் என நான் கருதுகின்றேன்.

கேள்டவி ஜனாதிபதி டொனல்ட் ட்ரம் தொடர்பான உங்களது நிலைப்பாடு என்ன ?

பதில் : ஜனாதிபதி டொனல்ட் ட்ரம் புதிய வெளிவிவகார கொள்கையுடன் நிர்வாகத்தை முன்னெடுப்பார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-12#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.