கதை - 193 / 'மதத்தைத் தாண்டிய காதல்' அல்லது தேவாலய மணிக்கும் தைப் பொங்கலுக்கும் இடையில் / பகுதி: 01 கிறிஸ்துமஸ் ஈவ் [christmas eve] சந்திப்பு டிசம்பர் 24 அன்று, யாழ்ப்பாணத்தின் அன்றைய மாலை மெதுவாக மங்கிக் கொண்டிருந்தது. நாட்காட்டியில் [காலண்டரில்] அது கிறிஸ்மஸ் ஈவ் [இயேசுநாதர் பிறந்த நாள் பண்டிகைக்கு முந்திய நாள்] என்று எழுதப்பட்டிருந்தாலும், யாழின் வானம் அதை எந்த மத நாளாகவும் கருதவில்லை. அது பைபிளில் காணப்படும் தேதி அல்ல. கிறிஸ்து டிசம்பர் 25 அன்று பிறந்ததாக ஒருபோதும் பைபிளில் கூறப்படவில்லை. அது ஒரு முன்மொழிவு மட்டுமே. அதுவும் கிறிஸ்து இறந்து 340 ஆண்டுகளின் பின்பே. அதனாலோ என்னவோ அது எப்போதும் போலவே — காற்றோடு, உப்புக் காற்றின் சுவையோடு, மண்ணின் நினைவோடு இருந்தது. ஆனாலும் மக்கள் பெரும் திரளாக வந்தார்கள். வரலாற்றுக்காக அல்ல, நம்பிக்கைக்காக வந்தார்கள். கிறிஸ்துமஸ் ஈவ் அன்று, யாழ்ப்பாண தேவாலயத்திற்குள் காலண்டரில் நம்பிக்கை கொண்டவராக அல்ல, மாறாக மக்களை, இயேசுவை நம்புபவராக, பகுத்தறிவில் என்றும் தன்னை ஒரு மாணவனாகக் கருதும் அடைக்கலம் நுழைந்தான். அவன் ஒரு இளம் வழக்கறிஞர். வடக்கு – கிழக்கில் உண்மைக்காக வழக்காடும் ஒருவன். போலீஸ் நிலையங்களில் அவன் பெயர் நன்கு அறியப்பட்டது. அதிகாரிகளுக்குப் பிடிக்காத பெயர். ஆனால் மக்களுக்கு நன்கு அறியப்பட்ட , விரும்பப்பட்ட பெயர். இவன் அடிக்கடி, தூசி நிறைந்த மாஜிஸ்திரேட் (நீதிபதி / Magistrate) நீதிமன்றங்களிலும் இராணுவத்தால் பாதுகாக்கப்பட்ட காவல் நிலையங்களிலும் தோன்றினான். - தங்கள் சொந்த நிலம், பலவந்தமாக பறிபோவதை பாதுகாத்ததற்காக கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளுக்காகவும், நில உரிமையாளர்களுக்காகவும் , இந்தியா மீனவர்களின் அத்துமீறலுக்கு - அரசின், கடற்படையின் தீவீர கண்காணிப்பு வேண்டி எதிர்ப்பு தெரிவித்ததால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்காகவும், தங்கள் இறந்தவர்களை நினைவு கூர்ந்ததற்காக கைது செய்யப்பட்ட மாணவர்களுக்காகவும், மக்களுக்காகவும் குரல் கொடுத்தான். அவனுக்கும் டிசம்பர் 25 கிறிஸ்மஸ் என்பது பிறந்தநாள் அல்ல, அது வேறு ஒரு நோக்கத்திற்காக, அதாவது அவர் இறந்து நீண்ட காலத்திற்குப் பிறகு - அந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது, அப்போது ரோம் நகருக்கு எளிதான மதமாற்றம் தேவைப்பட்டது, கிறிஸ்துவின் பிறப்பை ஐரோப்பா ஏற்கனவே விரும்பிய சாட்டர்னேலியா மற்றும் சூரிய விழாக்களுடன் இணைக்க அந்த நாள் தேர்ந்து எடுக்கப்பட்டது என்பது வரலாறாகும். ஆனால் உலகத்திற்கு வழிகாட்டிய இயேசுவில் நம்பிக்கை உண்டு. தேதிகளை மட்டும் தான் அவன் நம்பவில்லை. அதனால்த்தான் அவன் அங்கு வந்தான். ஒரு சைவ தமிழ், இசை மற்றும் நடன ஆசிரியை, அவர் மதம் மாறுவதற்காக அல்ல, பாடகர் குழுவிற்கு ஒரு பயிற்சி அளிக்க அங்கு அழைக்கப்பட்டு இருந்தாள். அவளின் பெயர் ஆராதனா. சங்கீதத்தை இறைவனுக்காக அல்ல — மனிதனுக்காகப் பாடுவாள். எல்லாவற்றிற்கும் மேலாக, பண்டிகை கீதங்கள் (கரோல் கீதங்கள் / Christmas Carols) முதலில் கிறிஸ்துமஸுக்கு மட்டுமே பிரத்தியேகமானவை அல்ல. அவை ஒருகாலத்தில், வசந்தத்திற்கும், அறுவடைக்கும், சில நேரம் கிண்டலுக்கும் கூட பாடப்பட்ட பாடல் ஆகும். [They were sung in May fields, during harvests, even as satire]. அதனால் அவள் அதில் தேர்ச்சி பெற்ற பாடகியாகவும் இருந்தாள். ஆராதனா, பலிபீடத்தின் அருகே வெறுங்காலுடன் நின்று, சுருதியை சரிசெய்து, தாளத்தைக் கற்றுக் கொடுத்தாள். அது மட்டும் அல்ல, மகிழ்ச்சி ஒரு கடவுளுக்கு மட்டும் சொந்தமானது அல்ல [how joy does not belong to one god alone.] என்பதையும் கற்றுக் கொடுத்தாள். ஒரு மரப் பலகையில் தாளம் போட்டு, ஒரு சிறுவனை மெதுவாகத் திருத்துவதை அடைக்கலம் ஓரளவு அருகில் நின்று கவனித்தான். அவள், அவர்களுக்கு குரல் பயிற்சிக்காக பாடிய போது, தேவாலயம் ரோமன், புராட்டஸ்டன்ட் அல்லது ஆங்கிலிகன் மதத்தை உணரவில்லை - அது தமிழை உணர்ந்தது [When she sang, the church did not feel Roman, Protestant, or Anglican—it felt Tamil.]. நள்ளிரவு சேவைக்குப் பிறகு, அடைக்கலமும் ஆராதனாவும், அலங்கரிக்கப்படட காகித நட்சத்திரங்களின் கீழ் அமர்ந்து ஒருவருடன் ஒருவர் சமயங்களின் வரலாறு பற்றியும், இன்றைய இலங்கை வாழ் தமிழரின் நிலைகள் பற்றியும் பேசினர் . அப்பொழுது, "உனக்குத் தெரியுமா? ," அவள் சிரித்துக் கொண்டே கேட்டாள், "புத்தாண்டும் வரப்போகிறது. இன்னொரு கடன் வாங்கிய கொண்டாட்டம்." அவன் தலையசைத்தான். "ஜனவரி 1 ஆம் தேதி பிரபஞ்சம் சார்ந்தது அல்ல. அது நிர்வாக ரீதியானது. ஜூலியஸ் சீசரின் நாட்காட்டி. பேரரசால் எழுதப்பட்ட காலம்." "மகாவம்சம் கூட புத்தர் இலங்கைக்கு மூன்று முறை பறந்து வந்தார் என்று கூறுகிறதே ?, அதை நம்புகிறீர்களா? என்று ஆராதனா இலங்கை அரசியல் பக்கம் திரும்பினாள். அடைக்கலம் ஒரு சிரிப்புடன் கூறினான், எல்லா புராணங்களும் கூறும் புரளிகள் தான் இவை, என்றாலும் மகாவம்சத்தை உண்மையான வரலாறாக இன்னும் நம்புகிறார்கள். அது தான் தமிழர் பூமியில் நிகழும் அட்டூழியம்" என்றான். “நம்பிக்கை கேள்வி கேட்காத போது தான் ஆபத்தாகிறது,” அவன் தொடர்ந்தான். அவள் மெதுவாகச் சொன்னாள்: “ஆமாம் கேள்வி கேட்கத் தெரிந்த ஒரு மனிதனால் மட்டுமே நம்பிக்கையையும் காதலையும் உண்மையாகப் பாதுகாக்க முடியும். [Only a man who knows how to ask questions can truly protect belief and love.]” அந்த இரவு கிறிஸ்துமஸ் நட்சத்திரம் இருவரையும் சமமாகப் பார்த்தது. அந்த உரையாடல் அவர்களை கொஞ்ச நேரம் ஆறுதலாக கதைக்க வழிவகுத்தது. ஆனால், அந்த உரையாடலின் போது, அவன் கண்களுக்கு ஒரு ஓய்வும் கிடைக்கவில்லை. அது அவளை அளந்து அளந்து அவன் மனதுக்கு சொல்லிக் கொண்டே இருந்தது. கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால் ஒப்புமையில் கடலினையும், மீனையும், அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந் தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை தன்னகத்தே கொண்ட ஆராதனா, அடைக்கலத்தின் மனதில் புகுந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. கிறிஸ்மஸ் – புத்தாண்டு இடைப்பட்ட நாட்கள், விடுதலைகளாக இருந்ததாலும், கொண்டாட்ட நாட்களாக இருந்ததாலும் அவர்கள் உரையாடல்களை தொலைபேசி மூலமும் சிலவேளை நேரடியாகவும் சந்தித்து தொடர்ந்தனர். யாழ்ப்பாண சுப்பிரமணிய பூந்தோட்டத்தின் பழைய மரங்களுக்குக் கீழும், யாழ் பொது நூலத்திலும் அவர்கள் இருவரும் தங்கள் எதிர்காலங்களை மெல்ல எழுதிக் கொண்டு இருந்தனர். ஆனால் அந்த பழைய மரங்கள் மகிழ்வாகக் காணப்படவில்லை. அதை வெட்டி அகற்றி, உட்புற அரங்கம்அமைப்பதில் சிலர் ஈடுபடுவது அதன் காதில் விழுந்ததோ என்னவோ? அடைக்கலத்தின் கண்களில் கேள்விகள் அதிகம். பதில் கொடுக்காத உலகத்திற்கான வழக்குத் தயாரிப்பே அவன் வாழ்வு. அதேபோல, ஆராதனாவுக்கு நடனமும் இசையும் அவளுக்குப் பக்தியின் மொழி. கேள்வி கேட்காமல் நம்புவதில் அவளுக்கு ஒரு அமைதி இருந்தது. ஆனால் அப்போது அவர்களுக்கு, குறிப்பாக ஆராதனாவுக்கு காதல் பிறக்கவில்லை. ஆனால் இரண்டு உலகங்கள் ஒருவரை ஒருவர் பார்த்தன. "இறப்பவே தீய செயினும் தம் நட்டார் பொறுத்தல் தகுவதொன்று அன்றோ - நிறக்கோங்கு உருவவண்டு ஆர்க்கும் உயர்வரை நாட! ஒருவர் பொறை இருவர் நட்பு" என்பது போல, இந்த அடி வாயிலாகப் பொறுமை குணமுடையோராக நண்பர்கள் இருக்க வேண்டுமென நாலடியார் பாடல் உரைக்கின்ற படி, அவர்களின் சந்திப்பு பொறுமையுடனும், ”ஈரம் இல்லாதது கிளைநட்பு அன்று” என்பதற்கு இணங்க, பிற உயிர்களுக்குக் கருணை பண்பு காட்டும் குணமில்லாதவரின் உள்ளத்தில் நட்பும் உறவும் தோன்றுவதில்லை என்பதை உணர்ந்து அது அமைதியாகத் அவர்களுக்கு இடையில் தொடங்கியது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 02 தொடரும் துளி/DROP: 1965 [கதை - 193 / 'மதத்தைத் தாண்டிய காதல்' அல்லது தேவாலய மணிக்கும் தைப் பொங்கலுக்கும் இடையில் / பகுதி: 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/33069006056081282/?
By
kandiah Thillaivinayagalingam · 40 minutes ago 40 min
Archived
This topic is now archived and is closed to further replies.