"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 109 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 109 / பின் இணைப்பு – இராசவலியவின் சுருக்கம் விகார மகா தேவி கெமுனுவைப் [Gemunu] பெற்றெடுத்தாள். ஒரு பெண் யானை அவனது பிறந்தநாளில் தூத்துகுடியிலிருந்து (இன்றைய தமிழ்நாட்டின் தெற்கு முனை) ஒரு இளம் யானை 'கடோல்'லை [Kandula] அங்கு விட்டுச் சென்று விட்டு, தான் வந்த இடத்திற்குத் திரும்பிச் சென்றது. இந்த யானை மற்ற இரண்டு நாளாகமங்களிலும் கந்துலா [Kandula] என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் மற்ற இரண்டு நாளாகமங்களும் தூத்துகுடியிலிருந்து வந்ததாகக் கூறவில்லை. விகார மகா தேவி மீண்டும் மற்றொரு இளவரசர் திஸ்ஸ குமாரயவைப் [Tissa Kumaraya] பெற்றெடுத்தாள். கெமுனுவுக்கு பத்து வயதாக இருந்த போது, தமிழ் படையெடுப்பாளர்களிடம் பகைமை இல்லாமல் இருக்க வேண்டும் என்ற தனது தந்தையின் வேண்டுகோளை அவன் ஏற்க மறுத்து விட்டான். பின்னர் அவன் சுருண்டு, கைகால்களை நீட்டாமல் தரையில் படுத்துக் கொண்டான். கடல் தெற்கிலும், தமிழ் படையெடுப்பாளர்கள் மகாவலி நதியின் மறுபுறத்திலும் இருக்கும்போது தன்னால் எப்படி கால்களை நீட்டி படுக்க முடியும் என்று அவன் தாயிடம் கூச்சலிட்டான். காவன்தீசன் அல்லது காகவண்ண தீசன் முடிசூடியதிலிருந்து அறுபது ஆண்டுகள் ஆட்சி செய்தார். என்றாலும் இந்த ஆட்சிக்காலம் மற்ற இரண்டு நாளாகமங்களிலும் கொடுக்கப்படவில்லை. மகாவம்சத்தில் காமினியிடம் [Gamani] பத்து யானைகளின் பலம் கொண்ட பத்து வீரர்கள் இருந்தனர். மேலும் அந்த வீரர்களின் பெயர்களும் அங்கு கொடுக்கப்பட்டிருந்தன. அதே போல, இராசாவலியவும் பத்து வலிமைமிக்க வீரர்களைப் பற்றிப் பேசுகிறது, ஆனால் இருவரின் பெயர்களை மட்டுமே அதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டும் அவர்களின் வலிமை மற்றும் அவர்களின் வளர்ப்பு பற்றிய அற்புதமான கதைகளைக் கொண்டுள்ளன. மேலும் கெமுனுவின் படைகளுக்கும் எல்லாளனுடைய படைகளுக்கும் இடையே, போர்கள் நடந்த இடங்களின் பெயர்கள் மகாவம்சத்தில் உள்ளவற்றுடன் முரண்படுகின்றன. மகாவம்சத்தின்படி, காமனி இரண்டாவது போரில் எல்லாளனின் தளபதிக்கு தனது தாயை வழங்குவதாக நடித்து வென்றான். எனினும் இந்த சம்பவம் இராசாவலியத்தில் விவரிக்கப்படவில்லை. தனது படைகளை தமிழர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்ற கெமுனுவின் விருப்பம் தெய்வீகமானது என்று இராசாவலிய கூறுகிறது. எனினும் இப்படியான கருத்து மகாவம்சத்தில் கூறப் படவில்லை. இராசாவலியத்தின்படி பல்லுகன் அல்லது பல்லுகா [Bhalluka] முப்பதாயிரம் படைகளுடன் வந்தான், ஆனால் மகாவம்சத்தின்படி அறுபதாயிரம் படைகளுடன் வந்தான். எனினும் பல்லுகனின் அத்தியாயம் தீபவம்சத்தில் குறிப்பிடப்படவில்லை. கெமுனு நாக உலகத்திலிருந்து நினைவுச்சின்னத்தைக் கொண்டு வந்தான், அதை அவன் எப்படிப் பெற்றான் என்பது விளக்கப்படவில்லை. இராசாவலியத்தில் கெமுனுவின் எந்த மகனைப் பற்றியும் எந்த தகவலும் இல்லை. கெமுனுவின் தம்பி சேதெ தீசன் [Sedetissa] கெமுனுவுக்குப் பிறகு முப்பத்தேழு ஆண்டுகள் ஆட்சி செய்தார். மற்ற நாளேடுகளில் இவன் சத்தா திச்சன் [Saddha Tissa] ஆவார். அவன் இராசாவலியத்தில் கூறப்பட்டுள்ளபடி முப்பத்தேழு ஆண்டுகள் அல்ல, ஆக பதினெட்டு ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தார். பின்னர் அவரது மகன் துலானா அல்லது துலத்தன் [Tulana or Thulatthana] ஒரு வருடம் எட்டு மாதங்கள் ஆட்சி செய்தார். ஆனால் மற்ற இரண்டு நாளேடுகளின்படி ஆட்சியின் காலம் ஒரு வருடம் பத்து மாதங்கள் ஆகும். லெமினிதிஸ்ஸ [Leminitissa] துலானாவைக் அல்லது துலத்தனாவைக் [Tulana] கொன்று முப்பத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். எனினும் லெமினிதிஸ்ஸனின் வம்சாவளி தெளிவாகத் தெரியவில்லை. பின்னர் அவரது தம்பி வலகம்பாஹு [Valagambahu] ஐந்து மாதங்கள் ஆட்சி செய்தார். பின்னர் ஏழு தமிழர்கள் சோழ நாட்டிலிருந்து ஏழாயிரம் ஆண்களுடன் வந்து இராச்சியத்தைக் கைப்பற்றினர். அப்பொழுது வலகம்பாஹு அங்கிருந்து தப்பி ஓடினான். எனினும் அந்நிய நாட்டிலிருந்து ஏழாயிரம் ஆண்கள் மட்டும் வந்து இராச்சியத்தைக் கைப்பற்ற முடிந்தது விசித்திரமாக உள்ளது. கெமுனுவிற்கும் எல்லாளனுக்கும் இடையிலான போர்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆண்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, ஒப்பீட்டளவில் மிகப் பெரிய படைவீரர்கள் அங்கு இருந்திருக்க வேண்டும்! மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ள ரோஹனாவில் [Rohana / Ruhuna / உருகுணை] வாழ்ந்த பிராமணர் பற்றிய அத்தியாயம் இராசாவலியத்தில் கொடுக்கப்படவில்லை. ஏழு தமிழர்களில் ஒருவன், தப்பி ஓடும் மன்னனைப் பின்தொடர்ந்து அவனது தலைமை இராணியைப் கைப்பற்றி அவளுடன் திரும்பினான். இருப்பினும், மகாவம்சத்தின்படி, மன்னன் தனது தலைமை இராணியை விட்டுவிட்டு மற்றவர்களுடன் தப்பிச் சென்றான். மற்றொருவர் புத்தரின் தானம் பாத்திரத்தை கைப்பற்றி அதனுடன் திரும்பினார். ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், புத்தரின் தானம் பாத்திரத்தில் திருப்தி அடைய தமிழர்கள் பௌத்தர்களாக இருக்க வேண்டும்! மீதமுள்ள ஐந்து தமிழர்கள் ஒன்றன் பின் ஒன்றாக பதினான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அவர்கள் பதினான்கு ஆண்டுகள் மற்றும் ஏழு மாதங்கள் ஆட்சி செய்ததாக மகாவம்சம் கூறுகிறது. இந்தத் தமிழர்களின் பெயர்கள் இராசாவலியத்தில் கொடுக்கப்படவில்லை, ஆனால் மகாவம்சத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. பின்னர் வாலகம்பாஹு திரும்பி வந்து பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அந்தப் வாலகம்பாஹு [Valagambahu] என்ற பெயர் மகாவம்சத்திலும் தீபவம்சத்திலும் வட்டகமணி [Vattagamani] என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டும் அல்ல, தீபவம்சம் ஐந்து தமிழர்களை மட்டுமே குறிக்கிறது. Part: 109 / APPENDIX – "Summary of Rajavaliya" Vihara Maha Devi gave birth to Gemunu. A she-elephant came from Tuttukudiya (southern tip of present day Tamil Nadu) on his birthday to leave a young elephant Kadol and went back to the place where she came from. This elephant is named Kandula in the other two chronicles. The other two chronicles do not say that it came from Tuttukudiya. Vihara Maha Devi again gave birth to another prince Tissa Kumaraya. When Gemunu was ten years old he refused to accede to the request of his father that he would be free of enmity towards the Tamil invaders. Then he curling and lied down on ground without stretching his limbs. He exclaimed to the mother how he could stretch when the sea is on the south and the Tamil invaders are on the other side of the river Mahaveli. Kawantissatissa reigned sixty years from his coronation. This length of reign is not given in the other two chronicles. Gamani in the Mahavamsa had ten warriors each with the strength of ten elephants, and the names of the warriors are given. Rajavaliya also speaks of ten mighty warriors but gives the names of only two. These two are with fantastic tales about their strength and upbringing. Names of places where the battles between Gemunu’s forces and the Elara’s forces took place are in conflict with those in the Mahavamsa. Gamani won the second battle, as per the Mahavamsa, by pretending to offer his mother to the Elara’s general, and this incident is not narrated in the Rajavaliya. Gemunu’s wish to distinguish his forces from the Tamils is divine granted. This is not in the Mahavamsa. Bhalluka came with thirty thousand troops as per the Rajavaliya, but he came with sixty thousand troops as per the Mahavamsa. The Bhalluka episode is not at all mentioned in the Dipavamsa. Gemunu brought the relic from the Naga world, it is not explained how he got it. There is no information about any son of Gemunu in the Rajavaliya. Sedetissa, younger brother of Gemunu, ruled for thirty-seven years after Gemunu. The corresponding king in the other chronicles is Sadhatissa, and ruled only for eighteen years, not thirty-seven years as stated in the Rajavaliya. Then his son Tulana ruled for one year and eight months, but the length of reign is one year and ten months as per the other two chronicles. Leminitissa killed Tulana and ruled for thirty-nine years. Lineage of Leminitissa is not clear. Then his younger brother Valagambahu ruled for five months. Then seven Tamils landed from Soli country with seven thousand men and captured the kingdom. Valagambahu fled the scene. It is strange that seven thousand men from a foreign country were able to capture the kingdom. Looking back at the number of men mentioned in the battles between Gemunu and Elala, there must have had been comparatively larger body of troops! The episode of Brahmin from Rohana in the Mahavamsa is not given in the Rajavaliya. One of the seven Tamils pursued the king, and got his chief queen and returned with her. However, as per the Mahavamsa, the king left his chief queen and went with others. Another one returned with Buddha’s alms bowl. Tamils must be Buddhists to be satisfied with the alms bowl of Buddha! The remaining five Tamils reigned one after the other, for fourteen years. The Mahavamsa says that they ruled for fourteen years and seven months. These Tamils’ names are not given in the Rajavaliya, but given in the Mahavamsa. Then Valagambahu returned and ruled for twelve years. The name is not Valagambahu, but Vattagamani in the Mahavamsa and the Dipavamsa. The Dipavamsa refers to five Tamils only. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 110 தொடரும் / Will follow துளி/DROP: 2046 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 109 https://www.facebook.com/groups/978753388866632/posts/33896997296615483/? "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 110 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 110 / பின் இணைப்பு – இராசவலியவின் சுருக்கம் வாலகம்பாஹுவுக்குப் [Valagambahu] பிறகு மகாதேலியன் [Mahadeliya] ஐம்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். மகாதேலியன் எவ்வாறு அரியணை ஏறினார் என்பது குறிப்பிடப்படவில்லை. மேலும், தீபவம்சம் மற்றும் மகாவம்சத்தின்படி, நாம் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட கால எல்லையில் மூத்தசிவனுக்குப் பிறகு ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் யாரும் ஆட்சி செய்யவில்லை. மேலும் இராசாவலியவில், ஜம்புத் தீவு அல்லது நாவலந்தீவில் [Jambudvipa] மிலிந்து [Milindu] என்ற மன்னனைப் பற்றியும், ஒரு பிராமணன் மற்றும் அவரது மனைவியைப் பற்றியும் ஒரு கதை அங்கு உள்ளது. என்றாலும் இந்தக் கதை மற்ற இரண்டு நாளாகமங்களிலும் இல்லை. மிலிந்து என்ற மன்னனின் துஷ்பிரயோகம் காரணமாக இந்தியாவில் பன்னிரண்டு ஆண்டுகள் பஞ்சம் ஏற்பட்டது. இந்தக் கதை, பின்னர் சிங்களவர்களால் பத்தினி தெய்வமாக வணங்கப்பட்ட கண்ணகியின் [Goddess Pattini Kannagi] கணவருக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டத்துடன் ஓரளவு ஒற்றுமையையும் கொண்டுள்ளது. சோரநாகன் [Chora Naga, also known as Coranaga or Mahanaga] பதினெட்டு விகாரைகளை தரைமட்டமாக்கியதால் இலங்கையில் மூன்று ஆண்டுகள் பஞ்சம் ஏற்பட்டது. இந்த மன்னரின் ஆட்சிக் காலத்தில் மற்ற இரண்டு நாளாகமங்களிலும் மேலே கூறப்பட்ட இந்த இரண்டு பஞ்சங்களும் இல்லை. என்றாலும் பன்னிரண்டு ஆண்டு பஞ்சம் என்பது மௌரிய வம்சத்தை நிறுவிய சந்திரகுப்த மௌரியரின் [Chandragupta Maurya, the founder of the Maurya dynasty] காலத்தில் ஏற்பட்ட பன்னிரண்டு ஆண்டு பஞ்சத்தைக் குறிக்கலாம்?. ஆனால் அது நிகழ்ந்த அல்லது நடந்த காலம் வேறுபட்டது என்பது குறிப்பிடத் தக்கது. சோரநாகன் பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார், மக்கள் அவரைக் கொன்றனர். மகாவம்சத்தின்படி சோரநாகன் மக்களால் அல்ல, அவரது மனைவி அனுலாவால் [Anula] விஷம் வைத்து கொல்லப்பட்டார். பக்கம் 45 இல் சோரநாகரின் ஆட்சி முடிவுக்கு வரும்போது அறுநூற்று இருபத்து மூன்று (623) ஆண்டுகள், புத்தர் இறந்ததில் இருந்து [அல்லது விஜயன் இலங்கைக்கு வந்ததில் இருந்து] கடந்துவிட்டன என்று கூறப்பட்டுள்ளது? மகாவம்சத்தின்படி சோரநாகனின் ஆட்சியின் முடிவு கி.மு 50 ஆகும். [Chora Naga, also known as Coranaga or Mahanaga, was King of Anuradhapura in the 1st century BC, who ruled from 62 BC to 50 BC] எனவே ஆண்டுகளின் எண்ணிக்கை 483 - 50, மொத்தம் 433 ஆண்டுகள் இருக்க வேண்டும்? எனவே நாளாகமங்களுக்கிடையே மோதல் அல்லது வேறுபாடு வரலாற்று ரீதியாக உள்ளது. சோரநாகனின் ஆட்சிக்குப் பிறகு இராசாவலியத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்ற இரண்டு முன்னைய நாளாகமங்களில் உள்ள விவரங்களுடன் மிகவும் வேறுபடுகின்றன. மகாதெலிய திஸ்ஸனின் [Mahadeliya Tissa or Mahakuli Mahatissa, also known as Maha Cula Maha Tissa] மகன் குட்ட திச்சன் அல்லது குட திச்சன் [Kuda Tissa], சோரநாகத்திற்குப் பிறகு மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். தலைமை ராணி அவனைக் கொன்று, மந்திரி சுராகித்தை [Surakit] ஒரு வருடம் ஆட்சி செய்ய வைத்தாள். மற்ற இரண்டு நாளாகமங்களிலும் அவளுடைய பெயர் அனுலா என்றாலும், தலைமை ராணியின் பெயர் இராசாவலியத்தில் அடையாளம் காணப்படவில்லை. தலைமை ராணி சுராகித்தைக் கொன்று, ஒரு தமிழரான முகவேட்டியை [Mukavetti] ஒரு வருடம் ஆட்சி செய்ய வைத்தாள். தலைமை ராணி மீண்டும் முகவேட்டியைக் கொன்று, தனது குடும்பப் பூசாரியான பிராமணரை ஒரு வருடம் ஆட்சி செய்ய வைத்தாள். பின்னர் அவள் அந்த பிரமணனைக் கொன்று நான்கு மாதங்கள் ஆட்சி செய்தாள். குட திச்சனின் மகன் மகலன் திச்சனால் [Makalantissa, the son of Kuda Tissa] அவள் கொல்லப்பட்டு, இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். பின்னர் மகலன் திச்சனின் மகன் பாட்டியா [Bhatiya] பதினெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். பின்னர் அவரது தம்பி மகாதெலியா [Mahadeliya] பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். தலைமை ராணியின் பூசாரியாக ஒரு பிராமணர் இருந்தார் என்பது சுவாரஸ்யமானது, காரணம் அவன் இந்து சமய பூசாரியாகும். அவரது மகன் அடகேமுனு [Adagemunue] ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். எந்த உயிரினமும் அழிக்கப்படக்கூடாது என்று அவர் தடை விதித்தார். மகாவம்சத்தின்படி, இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்ட ஒகாரிக திச்சன் [Voharikatissa] தான் இந்த மன்னன். இங்கே நிறைய காலப் பொருத்தமின்மை காணப்படுகிறது. பின்னர் ஆறு அல்லது ஏழு மன்னர்கள் ஆட்சி செய்தனர். ஆனால் அவர்களின் ஆட்சிக்காலம் காணப்படவில்லை. ஏழு மன்னர்கள் என்று மன்னர்களின் அட்டவணை கூறுகிறது, ஆனால் அது உரையில் தெளிவாகத் தெரியவில்லை. இந்த ஏழு மன்னர்களும் சொர்க்கத்திற்குச் சென்றனர். எனவே, அவர்களின் ஆடசி மிகவும் சரியானதாக இருக்க வேண்டும்? அதன் பிறகு மன்னர் வேஹெப் [Vehep] நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார். பின்னர் அவரது மகன் சினநம்பப்பா [Sinanambapa] என்றும் அழைக்கப்படும் வன்னேசிநம்பப்பா [Vannesinambapa] மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரது காலத்தில் சோழ நாட்டின் மன்னர் தமிழர்களின் படையுடன் வந்து பன்னிரண்டாயிரம் பேர்களை கைதிகளாக பிடித்துச் சென்றார். என்றாலும் சோழ மன்னன் பன்னிரண்டாயிரம் கைதிகளை சோழ நாட்டிற்கு பிடித்துச் சென்றதை அல்லது இந்த சம்பவத்தை தீபவம்சமும் மகாவம்சமும் கூறவில்லை. எனவே இது 100 , 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை நகலெடுக்கும் செயல்பாட்டின் போது பின்னர் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்? மற்ற இரண்டு நாளாகமங்களில் வன்னேசிநம்பப்பாவின் [Vannesinambapa] தொடர்புடைய மன்னன் வங்கனாசிக தீசன் அல்லது வங்க நாசிக தீசன் [Vankanasikatissa] ஆவார். தீபவம்சம் 22 - 28 இன் படி, 'வங்கநாசிகதீசன் இறந்த பிறகு அவரது மகன் முதலாம் கஜபாகு அல்லது கஜபாகுக காமணி [Gajabahu I or Gajabahuka Gamani] இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார்'. தீபவம்சத்தில் இந்த மன்னரைப் பற்றி வேறு எதுவும் இல்லை. மகாவம்சத்தின் 35 ஆம் அத்தியாயத்தின் 112 முதல் 122 வரையிலான வசனங்கள் வங்கனாசிக தீசன் மற்றும் அவரது மகன் கஜபாகுக காமணி ஆகியோரைப் பற்றியது, மேலும் வங்கனாசிக தீசன் ஆட்சிக் காலத்தில் சோழ மன்னன் இலங்கைக்கு வந்து கைதிகளுடன் திரும்பியதற்கான எந்தக் குறிப்பும் அங்கு இல்லை. மற்ற இரண்டு நாளாகமங்களிலும் கஜபாகுக காமணி கடல் ஒதுங்கி [ கடலுக்கு நடுவில் நடந்து போக பாதை அமைத்து கொடுத்து], கடலுக்கிடையில் நடந்து போக வழிவிட, அதனூடாக சோழ நாட்டிற்கு நடந்து சென்று கைதிகளை மீண்டும் அழைத்து வந்ததற்கான எந்தக் குறிப்பும் கூட அங்கு இல்லை. கடல் இடைவெளி விட்ட பாதைகளுக்கு ஊடாக சுமார் நாற்பது மைல் தூரம் நீண்ட நடைப்பயணமாக இருந்திருக்க வேண்டும். சிங்கள பௌத்தர்களிடையே தமிழர்களின் வெறுப்பின் விதைகளைக் விதைப்பதற்கான பிற்கால துறவி எழுத்தாளர்களின் தெளிவான சதி இதுவாக இருக்கலாம்? போர்த்துக்கேயர்கள் [Portuguese] பைபிளுடன் வந்த பிறகு இது செருகப்பட்டிருக்க வேண்டும்? கஜபாகுக காமணி நடக்க வழிவகுத்த, கடல் பிளந்தது வழி விட்ட கதை பைபிளிலிருந்து ஒரு அப்பட்டமான திருட்டு போல் தெரிகிறது. மேலும் மொழிபெயர்ப்பாளர் பி. குணசேகரன் முன்னுரையில் 'அவர், இராசவாலியவை எழுதியவர், கிறிஸ்தவர்களுக்கு இயல்பான சொற்றொடர்களைப் பயன்படுத்துகிறார்' [‘he uses phraseology natural to Christian’.] என்று கூற இதுவே காரணமாக இருக்கலாம்? Part: 110 / APPENDIX – "Summary of Rajavaliya" Mahadeliya succeeded Valagambahu and reigned for fifty years. How Mahadeliya succeeded to the throne is not given. Furthermore, no one reigned for more than fifty years after Mutasiva as per the Dipavamsa and the Mahavamsa for the period under consideration. There is a story about a king, Milindu, in Jambudvipa and about a Brahamin and his wife. This story is not in the other two chronicles. There was a twelve-year famine in India due to the wickedness of the king Milindu. This story has some resemblance with the ill fate that happened to the husband of Kannagi who was later venerated by the Sinhalese as the Goddess Pattini. There was a famine for three years in Lanka as Choranaga demolished eighteen Viharas to the ground. These two famines are also not in the other two chronicles during the reign of this king. The twelve-year famine must have the reference to the twelve-year famine that happened during the time of Chandragupta Maurya, the founder of the Maurya dynasty. The time when it occurred is different. Choranaga ruled for twelve years, and the people killed him. Coranaga was poisoned by his wife Anula as per the Mahavamsa, and not killed by the people. It is stated on page 45 that six hundred and twenty three (623) years have elapsed by the time the Choranaga’s rule came to an end. The end of Coranaga’s rule as per the Mahavamsa is 9 A. D. Therefore the number of years must be, 483 + 9, 492 years. There is conflict between the chronicles. The details given in the Rajavaliya after the rule of Choranaga is quite at variance with that in the other two chronicles. Kuda-Tissa, the son of Mahadeliya Tissa, ruled for three years after Choranaga. The chief queen killed him, made the minister Surakit to rule for one year. The name of the chief queen is not identified in the Rajavaliya, though her name is Anula in the other two chronicles. The chief queen had assassinated Surakit, and made Mukavetti, a Tamil, to rule for one year. The chief queen again assassinated Mukavetti, and made her family priest, a Brahmin, to rule for one year. She then had the priest assassinated and ruled for four months. She put to death by Makalantissa, the son of Kuda Tissa, and reigned for twenty-two years. Then Bhatiya, the son of Makalantissa, ruled for eighteen years. Then his younger brother, Mahadeliya, ruled for twelve years. It is interesting to note that a Brahmin was the priest of the chief queen. His son Adagemunue reigned for nine years. He prohibited that no living being should be destroyed. Voharikatissa is the king, as per the Mahavamsa, who made the similar proclamation. There is quite a lot of time mismatch here. Then six or seven kings ruled, but the lengths of their reigns are not stated, table says seven kings, but it is not very clear in the text. These seven kings passed away to heaven, and therefore, their rules must be very proper. Thereafter king Vehep reigned for forty-four years. Then his son Vannesinambapa, also known as Sinanambapa, ruled for three years. During his time the king of the Soli country came with an army of Tamils and carried away twelve thousand prisoners. The Dipavamsa and the Mahavamsa did not record this coming of Soli king and taking away twelve thousand prisoners to Soli country. This must be a later inclusion during the copying process. Vankanasikatissa in the other two chronicles is the corresponding king to Vannesinambapa. As per the Dipavamsa, 22 – 28, ’After the death of Vankanasikatissa his son Gajabahukagamani reigned for twenty two years’. There is nothing more about this king in the Dipavamsa. The verses 112 to 122 of the chapter 35 of the Mahavamsa are about the kings Vankanasikatissa and his son Gajabahukagamani and there is no reference to the coming of the Soli king and returning with prisoners during the reign of Vankanasikatissa. There is also no reference of Gajabahukagamani walking through the sea walls to Soli country to bring back the prisoners in the other two chronicles. It must have been a long walk of about forty miles between two water walls. This is the clear plot of latter day monkish authors to saw the seeds of hatred of Tamils among the Sinhala Buddhists. This must have been inserted after the arrival of the Portuguese with the Bible. The sea parting to provide path for Gajabahukagamani to walk is a naked plagiarism from the Bible. Perhaps this might be the reason for the translator, B. Gunasekara, to say in the Preface that ‘he uses phraseology natural to Christian’. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 111 தொடரும் / Will follow துளி/DROP: 2048 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 110 https://www.facebook.com/groups/978753388866632/posts/33913180414997171/?
By
kandiah Thillaivinayagalingam · 7 minutes ago 7 min
Archived
This topic is now archived and is closed to further replies.