Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த – முதலமைச்சர்கள் பேச்சுவார்த்தை தோல்வி ஜனாதிபதி மைத்திரியை பேச்சுக்கு வருமாறும் அழைப்பு

Featured Replies

மஹிந்த – முதலமைச்சர்கள் பேச்சுவார்த்தை தோல்வி

VD220117-PG01-R2-6c2c0a07ec55f0d621f6b1f9edefffe01b9c140a.jpg

 

ஜனாதிபதி மைத்திரியை பேச்சுக்கு வருமாறும் அழைப்பு
(ஆர்.யசி )

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவிற்கும் வடக்கு,கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாண முத­ல­மைச்­சர்­க­ளுக்கும் இடையில் நேற்று நடை­பெற்ற பேச்­சு­வார்த்தை இணக்­கப்­பா­டுகள் இன்றி தோல்வியில் முடி­வ­டைந்­துள்­ளது.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது அதி­காரம் இல்­லாத நபர்­க­ளை பேச்சுக்கு அனுப்

­பாது ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சே­ன பேச்­சு­வார்த்­தைக்கு வரவேண்டும் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் ஐக்­கிய தேசியக் கட்சியை எதிர்க்கும் எந்­த­வொரு கட்­சி­யினருடனும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்த தான் தயா­ராக உள்­ள­தா­கவும் தனித்து பல­மான அணியை

அமைக்கும் நகர்­வுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் இந்தச் சந்­திப்பில் மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்­துள்ளார்.

முன்னாள் ஜனா­தி­பதி  மஹிந்த ராஜபக் ஷ வுக்கும் வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த ஏழு மாகாண முத­ல­மைச்­சர்களுக்குமிடையில் நேற்று காலை சந்திப்பு இடம்பெற்றது.  

கொழும்பு விஜ­ய­ராம மாவத்­தையில் அமைந்­துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் நடை­பெற்­ற இந்தப் பேச்சுவார்த்தையில் பொது எதி­ர­ணியின் முக்­கிய உறுப்­பி­னர்­க­ளான ஜி.எல் பீரிஸ், பந்­துல குண­வர்­தன, காமினி லொக்குகே உள்­ளிட்ட உறுப்­பி­னர்­களும் கலந்­து­கொண்­டனர்.

நல்லாட்சி அரசாங்கத்தை இந்த வருடத்திற்குள் கவிழ்ப்பேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சூளுரைத்திருந்தார். அத்துடன் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை தனித்து எதிர்கொள்வதற்கும் பொது எதிரணியினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஒன்றிணையச் செய்யும் முயற்சியாகவே இந்த 7 முதலமைச்சர்களும் நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்தச்சந்திப்பின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிளவுபடுத்தாது ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியதன் அவசியம் குறித்து முதலமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எனினும் நேற்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுடன் நடை­பெற்ற இந்த பேச்­சு­வா­ரத்தை எந்­த­வித உடன்­பா­டு­களும் இல்­லாது முடி­வ­டைந்­துள்­ள­துடன் உறு­தி­யான தீர்மானத்தை எடுத்­து­கொண்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை பேச்­சு­வா­ரத்­தைக்கு வரு­மாறும் முன்னாள் ஜனா­தி­பதி மற்றும் பொது எதி­ர­ணி­யினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

மாகாண முத­ல­மைச்­சர்­க­ளு­ட­னான பேச்­சுவார்த்­தையின் பின்னர் பேச்­சு­வார்த்தை தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ கருத்து தெரி­விக்­கையில்,

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் எழு மாகாண முத­ல­மைச்­சர்கள் இன்று என்­னுடன் பேச்­சு­வார்த்தை ஒன்றை நடத்­தி­யி­ருந்­தனர். எனினும் இந்த பேச்­சு­வா­ரத்தையை ஆக்கபூர்வமானதொன்றாக நான் கரு­த­வில்லை. இன்று மாகாண முத­ல­மைச்­சர்­க­ளுடன் நடை­பெற்ற பேச்­சு­வா­ர்தை வெற்­றியா தோல்­விய என்­பது முக்­கியம் இல்லை.

இத்­தனை காலம் கடந்து இப்­போது மிகவும் தாம­த­மாகி என்னை நினைவு வந்­துள்­ளது. மக்­களின் நிலைப்­பாடும் அவ்­வாறு தான் உள்­ளது என நான் நினை­கின்றேன். நாட்டு மக்­க­ளுக்கும் இப்­போது என்னை அவர்களுக்கு நினை­வுக்கு வந்­துள்­ளது. ஆனால் மாகாண முத­ல­மைச்­சர்­களின் தேவைக்­காக இந்த சந்­திப்பை அவர்கள் நடத்­த­வில்லை. மாறாக கட்சி தலை­மையின் தேவைக்­காக தான் இவர்­களை ஏவி விட்­டுள்­ளனர்.

 யாரை ஏவி­விட்டு பேச்­சு­வா­ரத்­தை­களை நடத்­தி­னாலும் எமது நிலைப்­பாடு உறு­தி­யாக உள்­ளது. ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைத்து நகரும் எவ­ரு­டனும் பேச்­சு­வா­ரத்­தை­களை நடத்த நாம் தயா­ராக இல்லை. ஆனால் ஐக்­கிய தேசியக் கட்சி எதிர்க்கும் எந்­த­வொரு கட்­சி­யு­டனும் பேச்­சு­வாத்­தை­களை நடத்த தயா­ரா­கவே உள்ளேன். ஐக்­கிய தேசிய கட்சி ஆத­ர­வா­ளர்­களை நான் பேச்சுக்கு அனு­ம­திக்க மாட்டேன். ஐக்­கிய தேசிய கட்­சியை தவிர்ந்த ஒரு அணியை உரு­வாக்கும் நட­வ­டிக்­கைகள் இப்­போது முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

இந்த பேச்­சு­வார்த்தை தொடர்பில் பொது எதி­ரணி உறுப்­பினர் காமினி லொகுகே தெரி­விக்­கையில்,

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராபக் ஷ மற்றும் எம்­முடன் மாகாண முத­ல­மைச்­சர்கள் நடத்­திய பேச்­சு­வார்த்தை எந்த வகை­யிலும் சாத­க­மா­கவோ அல்­லது வெற்­றி­ய­ளிக்கும் வகை­யிலோ அமை­ய­வில்லை. இன்­றைய பேச்­சு­வார்த்­தைக்கு வந்த எவ­ருக்கும் கட்­சியில் அதி­காரம் இல்லை. அதி­காரம் இல்­லாத நபர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி அர்த்தம் இல்லை. இவ்­வா­றான ஒரு பேச்­சு­வா­ரத்தை நடை­பெற வேண்டும் என்றால் ஜனா­தி­பதி மைத்­தி­ரிபால சிறி­சேன வர­வேண்டும். அவர இந்த பேச்­சு­வார்த்­தையை முன்­னெ­டுக்க வேண்டும். ஆகவே இந்த விட­யத்தை நாம் மாகாண முதல்­வர்­க­ளுக்கு தெளிவு படுத்­தினோம். எமது தலைவர் மஹிந்த ராஜபக் ஷவும் இந்த கருத்­து­களை முன்­வைத்தார்.ஆகவே ஜனா­தி­பதி பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுக்­க வேண்டும் என்றார்.

சந்திப்பு தொடர்பில் பந்­துல குண­வர்­தன கருத்து தெரி­விக்­கையில்,

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தனித்து இயங்கும் எமக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கும் இடையில் இப்­போது ஏற்­பட்­டுள்ள கருத்து முரண்­பா­டுகள் மற்றும் குழப்­பங்கள் தொடர்பில் இன்­றைய பேச்­சு­வா­ர்த்தை முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

அடுத்து நடை­பெற்­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி சபைத் தேர்தல் மற்றும் மாகா­ண­சபைத் தேர்தல் தொடர்­பிலும் பேச்­சு­வா­ரத்தை நடத்­தினோம். எனினும் இந்த நிலையில் கட்­சியின் அதி­க­மான நபர்கள் மஹிந்த ராஜபக் ஷவுடன் உள்­ளனர் என்­பதை அவர்கள் ஏற்­றுக்­கொண்­டனர். ஆகவே இணைந்து செயற்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இருந்து அவர்கள் இந்த பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்­தனர். இந்த பேச்­சு­வார்த்தை ஆக்கபூர்வமானதொன்றாக அமை­ய­வில்லை. ஆகவே மேலும் பேச்­சு­வார்த்தை நடத்த வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் நாம் பேச்­சசை முடித்­துக்­கொண்டோம் என தெரி­வித்தார்.

சரத் ஏக்கநாயக்க கருத்து

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவு­ட­னான சந்­திப்பின் பின்னர் மத்­திய மாகாண முத­ல­மைச்சர் சரத் ஏக்­க­நா­யக கருத்து தெரி­விக்­கையில்,

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுடன் நாம் பேச்­சு­வா­ரத்தை மேற்­கொண்டு எமது நிலைப்­பாடு மற்றும் தேர்தல் தொடர்பில் நாம் முன்­னெ­டுக்க வேண்­டிய நகர்­வுகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டினோம்.எனினும் இந்த பேச்­சு­வா­ரத்தை வெற்­றி­க­ர­மான ஒரு பேச்­சு­வார்த்­தை­யாக கருத முடி­ய­வில்லை. எனினும் கட்­சியை இணைக்கும் ஒரு நகர்வின் முதல் பணி­யா­கவே இதை நாம் அவ­தா­னிக்க வேண்டும். இன்று நல்ல ஆரம்பம் ஒன்று உரு­வா­கி­யுள்­ளது. ஆகவே தேர்தல் நடத்­தப்­பட முன்னர் கட்­சியை பலப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்வோம் எனக் குறிப்­பிட்டார்.

தென் மாகாண முத­ல­மைச்சர் ஷான் விஜ­யலால் டி சில்வா கருத்து தெரி­விக்­கையில்,

இன்­றைய பேச்­சு­வா­ரத்தை கட்­சியை இணைக்கும் நல்­ல­தொரு நகர்­வாக அமைந்­துள்­ளது. கட்­சிக்குள் ஒரு­சில கருத்து முரண்­பா­டுகள் காணப்­பட்ட போதிலும் கட்­சியை பலப்­ப­டுத்த நாம் சகல தரப்­பு­டனும் கலந்­தா­லோ­சிக்க வேண்­டிய கட்­டாயம் உள்­ளது. ஆனால் இன்­றைய பேச்­சு­வா­ரத்­தையின் போது இறுதித் தீர்­மானம் ஒன்றை எம்மால் எட்­ட­மு­டி­ய­வில்லை. ஆனால் ஜனா­தி­பதி மைத்­தி­ர­பால சிறி­சேன மற்றும் மஹிந்த ராஜபக் ஷ ஆகி­யோ­ருக்கு இடை­யி­லான தொடர்­பாடல் நகர்­வா­கவே நாம் ஏழு முத­ல­மைச்­சர்­களும் செயற்­பட்டு வரு­கின்றோம். இரு­வ­ரையும் இணைக்கும் பால­மாக நாம் செயற்­பட்டு வரு­கின்றோம். ஆகவே இன்­றைய பேச்­சு­வா­ரத்தை தொடர்பில் நாம் கட்­சியின் தலை­வ­ரி­டமும் கட்­சியின் மத்­திய குழு­விற்கும் தெரி­விப்போம்.அதன் பின்னர் அடுத்­த­கட்ட நகர்­வுகள் முன்­னெ­டுக்­கப்­படும்.

மேல் மாகாண முதல்வர் இசுறு தேவப்பிரிய கருத்து தெரிவிக்கையில்,

நல்லதொரு பேச்சுவாரத்தையை நாம் இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் மேற்கொண்டோம். இந்த பேச்சுவார்த்தை நல்லதொரு ஆரம்பமாக அமைந்துள்ளது.அதேபோல் இன்றைய பேச்சுவார்த்தை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் கட்சி மத்திய குழுவினருக்கும் தெரிவிப்போம். ஜனாதிபதி இந்த நடவடிக்கை தொடர்பில் நல்லதொரு பதிலை வழங்குவார் என நாம் நம்புகின்றோம். நாம் மீண்டும் இணைத்து செயற்பட்டால் ஐக்கிய தேசிய கட்சியை வீழ்த்தி மீண்டும் எமது ஆட்சியை உருவாக்க முடியும். அதற்காகவே நாம் இந்த நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றோம் எனக் குறிப்பிட்டார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-23#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.