Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூர் ஆலய சூழலில் அடையாள உண்ணாவிரத போராட்டம்

Featured Replies

நல்லூர் ஆலய சூழலில் அடையாள உண்ணாவிரத போராட்டம்

IMG_8343-1024x768.jpg
வவுனியாவில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யாழில் இன்றைய தினம் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தகவல்களை வெளியிடுமாறு கோரி வவுனியாவில் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
IMG_8367-768x1024.jpg
நான்காவது நாளாக இன்றைய தினமும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் நல்லூர் ஆலய சூழலில் அடையாள உண்ணாவிரத போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னேடுக்கப்பட்டு வருகின்றது.

IMG_8309-1024x768.jpgIMG_8319-1024x768.jpgIMG_8320-768x1024.jpgIMG_8322-1024x768.jpgIMG_8349-1024x768.jpgIMG_8354-1024x768.jpgIMG_8357-1024x768.jpgIMG_8358-1024x768.jpg

 

http://globaltamilnews.net/archives/15209

  • தொடங்கியவர்
நல்லூரிலும் உண்ணாவிரதப் போராட்டம்
நல்லூரிலும் உண்ணாவிரதப் போராட்டம்
வடக்கில்  கடந்த காலத்தில் இடம்பெற்ற  யுத்தத்தின்போது கடத்தப்பட்டு  காணாமற் போன உறவுகள் தொடர்பில் அரசாங்கம் தீர்க்க மான பதிலைத் தரவேண்டுமென வலியுறுத்தி   நல்லூர் ஆலய முன்றலில் இன்றைய தினம் உண்ணாவிரத போராட்டம்  நடைபெறுகி ன்றது.
 
குறித்த போராட்டமானது வடக்கில் காணாமற் போனோர் பாதுகாவலர் சங்கதினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
 
இந்த போராட்டத்தில் வடக்கில் யுத்த காலத்தில் காணாமற் போன நபர்களின் உறவுகளால் காலை 9 மணி முதல் மாலை 4 வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
16344114_1265738793539643_2080010663_n.jpg16295660_1265738830206306_219931700_n.jpg

http://onlineuthayan.com/news/23128

  • தொடங்கியவர்
கொட்டும் மழையில் நல்லூரில் கவனயீர்ப்பு
 
26-01-2017 06:50 PM
Comments - 0       Views - 4

article_1485436987-2.JPG

-எம்.றொசாந்த்

வவுனியாவில் கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய சூழலில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

குறித்த போராட்டத்துக்கு  இளைஞர்கள், சமூக வலைத்தளங்கள் ஊடாக அழைப்பு விடுத்திருந்த நிலையில்,  கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், வவுனியா உண்ணாவிரத போராட்டம் சற்று முன்னர், தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

- See more at: http://www.tamilmirror.lk/190485/க-ட-ட-ம-மழ-ய-ல-நல-ல-ர-ல-கவனய-ர-ப-ப-#sthash.jCI01RQ2.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

அங்க இருக்கிற எம்மவர்களுக்கே இதெல்லாம் பெரிய விசயமா இப்ப இல்லை. அவை ரெம்ப பிசி. இதில சிங்கள அரசு மட்டும்......??! :rolleyes:

  • தொடங்கியவர்

மீளக்கொடு மீட்டுக்கொடு கொட்டும் மழைக்குள்ளும் நல்லூரில் ஒலித்த குரல்.

 IMG_8410-1024x768.jpg
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக நல்லூர் ஆலய சூழலில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 
யாழ்.நல்லூர் ஆலய சூழலில் இன்று வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் ஒன்று கூடியவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
IMG_8418-1024x768.jpgIMG_8428.jpgIMG_8445.jpgIMG_8467.jpgIMG_8495-1024x768.jpgIMG_8506-1024x768.jpgIMG_8509-1024x768.jpgIMG_8521-1024x768.jpgIMG_8597-1024x768.jpgIMG_8616-1024x768.jpgIMG_8620-1024x768.jpgIMG_8644-1024x768.jpgIMG_8472-1024x768.jpgIMG_8537-1024x768.jpgIMG_8652-1024x768.jpg

 

http://globaltamilnews.net/archives/15270

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.