Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திமுக ஆசைகாட்டியதா?- ஓ.பி.எஸ்.ஸுக்கு சசிகலா கேள்வி

Featured Replies

திமுக ஆசைகாட்டியதா?- ஓ.பி.எஸ்.ஸுக்கு சசிகலா கேள்வி

 
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா | படம்: வி.கணேசன்.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா | படம்: வி.கணேசன்.
 
 

"திமுகவைச் சேர்ந்த துரைமுருகன் சட்டமன்றத்தில் பேசியது போல், கருத்து வேறு வகையிலும் பரிமாறப்பட்டதா? ஆசைகாட்டப்பட்டதா?" என்று பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், அதிமுகவினரை பிரிக்கும் ஆற்றல் யாருக்கும் இல்லை என்றும், மக்கள் மத்தியில் எழுப்பப்படும் குழப்பங்களை உரிய நேரத்தில் நான் தீர்த்து வைப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்ப்புப் போக்கின் தொடர்ச்சியாக, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டார்கள் என உறுதிபட தெரியவில்லை. இருப்பினும், சுமார் 100 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டிருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பேசியது:

"33 ஆண்டு காலங்களில் எத்தனையோ நிகழ்வுகள், எத்தனையோ அதிர்ச்சிகள். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நோக்கி வந்த பல துரோகங்களை, அவருடன் இணைந்து நானும் அவற்றை சந்தித்திருக்கிறேன். அதையெல்லாம் வென்றிருக்கிறோம்; இதையும் வெல்வோம்.

அவர் மறைந்தபோது, இந்தக் கழக குடும்பத்தில் கலகம் வராதா என்று, கண்ணி வைத்து காத்திருந்தார்கள். எதுவும் நடக்கவில்லை. அவர் கட்டிக்காத்த குடும்பத்தில் அன்புதான் மேலோங்கி நின்றது, கட்டுப்பாடுதான் ஓங்கி நின்றது.

திமுக-வின் சதித் திட்டத்திற்கு பலர் துணை போனார்கள்; பலர் புழுதி வாரித் தூற்றினார்கள். இப்போது ஒருவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவின் போது நான் எடுத்த முடிவு, அவர் முதல்வராக தொடர வேண்டும் என்று. அப்போது பலரும் ஓ.பன்னீர்செல்வம் உட்பட, என்னை பொறுப்பேற்கச் சொல்லி நிர்பந்தம் செய்தார்கள். அப்போது எதையும் ஏற்கும் மனநிலையில் நான் இல்லை.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அன்று பிளவுபட்ட நிலையில், மாற்று அணியில் இருந்து அவர் செய்த செயல்களை எல்லாம் கருணை உள்ளத்தோடு மன்னித்துதான் அவருக்கு வாய்ப்பு வழங்கினார். பலமுறை அந்த வாய்ப்பைப் பெற்றார். அந்த வழியில்தான் நானும் செயல்பட்டேன்.

ஆனால், அதன் பின்னால் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தையும் நான் உற்று நோக்கிய நிலையில், சட்டமன்ற நிகழ்வுகளில் ஜெயலலிதாவை அழிக்கத் துடித்த திமுகவுடன் கழகத்திற்கு கேட்டையும், நாசத்தையும் விளைவித்த திமுகவுடனான அவரின் செயல்கள், ஜெயலலிதா எதற்காக போராடினாரோ, கடைக்கோடித் தொண்டர்கள் எதற்காகப் போராடினார்களோ அதனை ஈடேற்றும் விதத்தில் அமைந்திடவில்லை.

ஜெயலலிதா இல்லாத இந்த நேரத்தில், முதல்வர் பதவியில் அமர்ந்து விட்டதால், அவர் வகுத்த பாதையில் இருந்து விலகிட முடியாது. இங்கு முதல்வர் என்கிற சொல்லைக் காட்டிலும் 'அம்மா' என்கிற சொல்லுக்கு மதிப்பு அதிகம். அவரது கனவுதான் நம் பார்வை. நான் அன்றே சொன்னேன், அவர் வழியில்தான் நம் பாதை. அவர் காட்டிய பாதையில்தான் நமது பயணம் என்பதைச் சொன்னேன். இதைத் தாண்டி யார் நடந்தாலும், நடித்தாலும் அந்த நடையை, நடிப்பை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கண்டுபிடித்துவிடும்.

இத்தனை நாட்கள் வராத எதிர்ப்பு, நம் எதிரிகளிடமிருந்து புறப்படுகிறது என்றால் என்ன அர்த்தம்? நம் எதிரிகள் விரும்பாதது இங்கு நடக்கிறது. அதனால் தான் இந்த சலசலப்பு. இதற்கெல்லாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் அஞ்சாது, நானும் அஞ்சமாட்டேன்.

ஜெயலலிதாவின் கனவுகளும், அவர் இதயத்தில் தாங்கிய கணலும் என்றும் நம்மிடம் இருக்க வேண்டும். அவை நிறைவேற்றப்பட வேண்டும். எந்த சக்தியாலும் அதைத் தடுக்க முடியாது. காரணம், அம்மா என்கிற சக்தி நம்மிடமுண்டு.

கடந்த 5-ம் தேதி நடந்த சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் என்பது ரகசியக் கூட்டமல்ல. அது பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வெளிவந்த செய்திதான். அது, கடைசி நேரத்தில் தான் தனக்கு தெரிய வந்தது என்பது போன்ற ஓ. பன்னீர்செல்வத்தின் பேச்சை யாரும் நம்பமாட்டார்கள்.

கட்டாயப்படுத்தினார்கள் என்கிறார், என்னை சட்டமன்ற குழு தலைவராக முன்மொழிந்தவர், என் அருகில் அமர்ந்து உரையாடிக் கொண்டுதான் இருந்தார். 48 மணி நேரம் கழித்து ஒரு பொய்யை சொல்கிறார் என்றால், அந்த இடைப்பட்ட நேரத்தில் நடந்தது என்ன? யார் யாருடன் ஆலோசித்தார்.

திமுகவைச் சேர்ந்த துரைமுருகன் சட்டமன்றத்தில் பேசியது போல், கருத்து வேறு வகையிலும் பரிமாறப்பட்டதா? ஆசைகாட்டப்பட்டதா?

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து துரைமுருகன் பேசும் போது, அதற்கு எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் அப்போதே ஓ.பன்னீர்செல்வம் மவுனம் காத்த செயல், அவர் திமுகவில் ஐக்கியம் ஆகிவிட்டதை என்னால் நன்கு உணர முடிந்தது. அவரின் இந்தச் செயலால், அமைச்சர்கள் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மிகுந்த கொதிப்படைந்தனர். அவருக்கு நெருடல் ஏற்படும் வகையில் அமைச்சர்களும், கழகத்தினரும் கருத்து தெரிவித்த வேளையில், என்னிடம் அதை அவர் சொன்ன போது, அதற்கு உரிய மதிப்பளித்து, அமைச்சர்களிடமும், சட்டமன்ற உறுப்பினர்களிடமும், மற்ற கழகத்தினரிடமும், அவ்வாறு கருத்து சொல்ல வேண்டாம் என்று நான் கண்டித்தேன்.

ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்கினேன். ஆனால், சட்டமன்றத்தில், திமுக மற்றும் முதல்வர் ஆகியோருக்கு இடையேயான வார்த்தை பரிமாற்றங்களில் இருந்த உள் அர்த்தம் எனக்குப் புரியாமல் இல்லை. அது, அடுத்த கட்டத்தை நோக்கி செல்லாமல் தடுப்பது தான் பொதுச் செயலாளர் ஆன என்னுடைய கடமை. குழப்பத்தை ஏற்படுத்த திமுக எடுத்த முயற்சி இது என்பதை நேற்று பேட்டி கொடுத்த ஸ்டாலினின் அளவு கடந்த மகிழ்ச்சி, அதை உண்மை ஆக்கிவிட்டது.

துரோகங்கள் ஒரு போதும் வென்றது கிடையாது. அதுவும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை என்றும் வெல்லவே முடியாது. இத்தனை காலம் ஜெயலலிதாவுக்காக வாழ்ந்தேன். இனி, அவரது கனவுகளுக்காக வாழ்வேன். அதே முடிவைத் தான் நீங்களும் எடுத்துள்ளீர்கள். இந்த லட்சியப் பயணத்தில் என்னோடு பயணிக்கும் அம்மாவின் பிள்ளைகளாகிய உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

நம் எதிரிகள், அவர்களின் சுயரூபத்தைக் காட்டுகிறார்கள். நாம் யார் என்று அவர்களுக்கு நிரூபித்துக் காட்டுவோம். நம்மை பிரிக்கும் சக்தி; நம்மை பிரிக்கும் ஆற்றல் யாருக்கும் இல்லை. மக்கள் மத்தியில் எழுப்பப்படும் குழப்பங்களை உரிய நேரத்தில் நான் தீர்த்து வைப்பேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் விரோதிகள் வரிந்துகட்டி வருகிறார்கள்; துரோகத்தின் வடிவத்திலும் வருகிறார்கள். கழகம் அதற்கு அஞ்சாது. அச்சம் என்பது மடமை, அஞ்சாமை திராவிடர் உடமை, ஆறிலும் சாவு, நூறிலும் சாவு, நம் தாய் கட்டிக் காத்த கழகத்தைப் பாதுகாப்பது நமது கடமை. துரோகமும் - விரோதமும் கைகோர்த்து வந்தாலும் அவை தோற்று ஓடும்; தோற்க வைப்போம். இது சத்தியம்" என்றார் சசிகலா.

http://tamil.thehindu.com/tamilnadu/திமுக-ஆசைகாட்டியதா-ஓபிஎஸ்ஸுக்கு-சசிகலா-கேள்வி/article9528584.ece?homepage=true

  • தொடங்கியவர்

மக்களிடம் சசிகலாவுக்கு பெண் எனும் சாஃப்ட் கார்னர் ஏன் உருவாகவில்லை? #OPSvsSasikala

சசிகலா 

அரசியல், அனுதாப அலை இந்த இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாது. அந்தளவுக்கு ஒவ்வொரு தேர்தலிலும் 'அனுதாப அலை' என்பதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதேபோல, அரசியல் தளத்தில் பெண் எனும் சாஃப்ட் கார்னரும் வாக்குகளைப் பெறுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பெண்கள் அரசியலில் நுழைவது, அதில் தங்களை நிலைநிறுத்திக்கொள்வது, ஓர் ஆளுமையாக வளர்வது என்பதெல்லாம் மிகப் பெரிய உழைப்பையும் அர்ப்பணிப்பையும் கோரும் பெரும் போராட்டம்தான். அதை மீறியும் பெண் ஒருவர் வளர்ந்துவிட்டால், அவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிடுவார். அதற்கு மிகச் சரியான உதாரணம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

திரைப்பட நடிகையாக வாழ்க்கையைத் தொடங்கிய ஜெயலலிதா, அ.தி.முக-வில் இணைந்து கட்சிப் பொறுப்புகளில் இடம்பிடித்தார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின், ஜெயலலிதா அணி, ஜானகி அணி என அ.தி.மு.க இரு அணிகளாகப் பிரிந்தன. இதில் 'எம்.ஜி.ஆரின் மனைவி'  என்ற ஒரே செல்வாக்குதான் ஜானகியின் தலைமையில் அணி உருவாவதற்குக் காரணம். ஆனால், ஜெயலலிதாவை விட சீனியர்கள் அந்தக் கட்சியில் இருந்தபோதும், ஜானகிக்கு எதிராக ஜெயலலிதா முன்னிறுத்தப்பட்டதற்குக் காரணம், மக்களிடையே அவருக்கு இருந்த வசீகரம்தான். 'தேர்தலைச் சந்திக்க மக்கள் விரும்பும் முகம் வேண்டும்' என்ற அரசியல் விதிதான். இறுதியில் அந்த யோசனையே வென்றது. அ.தி.மு.க கட்சி மட்டுமல்ல, ஆட்சியும் ஜெயலலிதா வசமானது.

ஜெயலலிதா

1991-ல் முதன்முதலாக ஜெயலலிதா ஆட்சி அமைக்கிறார். அந்த ஐந்தாண்டு காலம் முடிவதற்குள் கட் அவுட் கலாசாரம், வளர்ப்பு மகன் திருமணம் என ஏராளமான அதிருப்திகள் ஜெயலலிதா மீது படிகிறது. அதன் எதிரொலியாக 1996-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வி அடைந்தது. ஜெயலலிதாவுக்கு அவர் போட்டியிட்ட தொகுதியிலும் மக்கள் தோல்வியைக் கொடுக்க, 'ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது, இனி மீண்டும் அவரால் கட்சியை நிலைநிறுத்திக்கொள்ள முடியாது' எனச் சிலர் கணித்தார்கள்.

இடைப்பட்ட காலத்தில் ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக்குவித்த வழக்குடன், ஊழல் குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டன. 'இனி ஜெயலலிதா அவ்வளவுதான்' என்ற கணிப்புகளையெல்லாம் பொய்யாக்கி, அதிமுகவுக்கு 1998ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் 18 இடங்களில் வெற்றியை அளித்தனர் மக்கள். அதுமட்டுமல்லாமல், 2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 136 இடங்களில் மாபெரும் வெற்றி அடையச் செய்து மீண்டும் ஜெயலலிதாவை முதல்வராக்கினர்.

ஜெயலலிதாவுக்கு மக்கள் தந்த வெற்றியில் 'அவர் ஒரு பெண்' என்ற அவர்களின் மனநிலையும் முக்கியப் பங்கு வகித்தது. மேலும், பெண்கள் பெரும்பான்மையாக அவருக்கு ஆதரவு அளிக்க முதன்மைக் காரணம், தங்களின் பிரதிநிதியாக அவரைப் பெண்கள் பார்த்ததுதான். அந்த ஒற்றைக் காரணமே, ஜெயலலிதா மீது முன்வைக்கப்பட்ட நெகட்டிவ் விஷயங்களிலிருந்து அவரைக் காத்து வந்தது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்குத் தண்டனை கிடைத்து, சிறைக்குச் சென்றார் (மேல் முறையீட்டில் விடுவிக்கப்பட்டார்). அப்போது அவருக்கு மக்கள் செல்வாக்கு குறைந்துவிட்டது எனக் கூறப்பட்டது. ஆனால், 'எந்த அரசியல்வாதி இங்க ஊழல் செய்யாம இருக்கா? ஒரு பொம்பளைனுகூட பாக்காம என்ன பாடு படுத்துறாங்க? பொம்பளைங்கிறதாலதான் இப்படிப் படுத்துறாங்களோ?' என்றெல்லாம், அப்போதும் பெண் என்ற அடையாளம் அவருக்கு ஆதரவாகத் திரண்டது.

ஜெயலலிதா, ஊர் ஊராகச் சென்று மக்களைச் சந்தித்து வாக்கு கேட்காமலேயே 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றார். குறிப்பாக யாருடனும் கூட்டணி அமைக்காமல், இந்த வெற்றியை சாதித்துக்காட்டினார். இந்த அசாத்தியமான முடிவின்போதுகூட, 'அரசியல் தளத்தில் இத்தனை ஆண்களுக்கு மத்தியில், ஒற்றைப் பெண்ணாக துணிச்சலாக நிற்கிறாரே!' என்று, அவர் பெண்மையின் ஆளுமைதான் ஆச்சர்யமாகப் பேசப்பட்டது. வாக்காளர்களில் கணிசமாக இருக்கும் பெண்களின் ஆதரவு தனக்குத்தான் என ஜெயலலிதா உறுதியாக நம்பியதை அவர்களும் மெய்ப்பித்தனர். ஜெயலலிதாவைப் பற்றி மற்ற கட்சித் தலைவர்கள் விமர்சனம் வைக்கும்போதுகூட, 'அம்மையார்' என்றே குறிப்பிட்டு வந்ததை இதோடு இணைத்துப் பார்க்கமுடியும்.

ஜெயலலிதாவின் உயர்வு, வீழ்ச்சி என அனைத்து சமயங்களிலும் உடனிருந்தவர் அவரின் தோழி சசிகலா. ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு, அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல்வராக பதவியேற்பதற்கான முயற்சிகள் நடந்துவருகின்றன. ஆனால், மாநிலம் எங்கும் அதற்கு எதிரான மனநிலையே இருப்பதாகத் தெரிகிறது.

சசிகலா

'பொதுவாக, பெண்கள் என்றாலே கிடைக்கும் சாஃப்ட் கார்னர், சசிகலா விஷயத்தில் கிடைக்காமல் போனதுக்கு என்ன காரணம்?' என்ற கேள்விக்கு, மக்கள் மன்றத்தில் இருந்தே பதில்களை எடுக்கலாம்.

* அ.தி.மு.க-வின் நிழல் அதிகாரமாக சசிகலா இருந்தபோதும், கட்சி வட்டாரத்தில் அவரின் இருப்பு தெரிந்த அளவுக்கு மக்களிடையே பரவவில்லை. அப்படிப் பரவிய விஷயங்களும், 'ஆடம்பரத் திருமணம், ஜெயலலிதா மீது தொடரப்பட்ட ஊழல் வழக்குகள், கட்சியின் நிர்வாகிகள் மாற்றம், அமைச்சரவை மாற்றம் என ஜெ. எடுக்கும் சில விரும்பத்தகாத அரசியல் முடிவுகள் உள்ளிட்ட நெகட்டிவ் விஷயங்களுக்கு இவர்தான் காரணம்' போன்ற குற்றச்சாட்டுகளாகத்தான் மக்களை வந்து அடைந்தன. ஜெயலலிதாவுக்கு அவர் அனைத்துமாக இருந்திருக்கலாம். ஆனால், ஜெயலலிதாவின் அனைத்து இன்னல்களுக்கும் காரணம் அவரே என்றே மக்கள் கருதினர். 'அவர் ஜெயலலிதா வாழ்க்கையில் இல்லாமல் இருந்திருந்தால், நமக்கு இன்னும் சிறப்பான முதல்வராக ஜெயலலிதா கிடைத்திருப்பார்' என்றும் வருந்தினர், கோபப்பட்டனர். அம்மாவை ஹீரோயினாகக் கொண்டாடிய மக்களுக்கு, சசிகலா வில்லியாகத் தெரிய ஆரம்பித்தது  இப்படித்தான்.

* ஜெயலலிதா மேடைகளில் தோன்றியும் கம்பீரமாக பேசியும் மக்களைச் சந்தித்து வந்தவர். தொடர்ந்து ஊடகங்களில் பாஸிட்டிவ், நெகட்டிவ் கோணங்களில் செய்திகள் வழியாக மக்களைச் சென்றடைந்தவர். இன்று முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படும் சசிகலா, இப்படி எந்த நெருப்பாற்றிலும் நீந்தி வந்தவர் இல்லை. சொல்லப்போனால், அவர் குரலைக்கூட எட்டாம் அதிசயம்போலதான் சமீபத்தில் கேட்டது தமிழகம். இப்படி மக்களிடம் எந்த நேரடித் தொடர்பும் இல்லாத ஒருவர், நேரடியாக தமிழக முதல்வர் நாற்காலியில் அமர ஆசைப்பட்டதில் குமுறியது தமிழகம். பெண்களைப் பொறுத்தவரை எப்போதுமே நம் சமூகத்துக்கு இரண்டு முகங்கள். ஒன்று, தூக்கிவைத்துக் கொண்டாடுவார்கள். அல்லது, ஆசைதீர வெறுப்பை உமிழ்வார்கள். சசிகலா, இவற்றின் முதல் சூழல் அமைவதற்கான எந்தக் காட்சியிலும் மக்கள் முன் தோன்றியதில்லை. ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின்னான தன் செயல்பாடுகளால், இரண்டாவது சூழலுக்கான வாய்ப்பையே அவர் மக்களுக்குத் தந்தார்.

* சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவும் சசிகலாவும் சேர்ந்தே சிறைக்குச் சென்றாலும், ஜெயலலிதாவின் இலவசத் திட்டங்கள் மூலம் நேரடியாக பொருட்கள் வீட்டுக்குச் சென்றதால் அவரின் செல்வாக்கு சேதப்படாமல் பாதுகாக்கப்பட்டது அல்லது சேதப்பட்டது சரி செய்யப்பட்டது. ஆனால், அரசியல் அரங்கில் அப்போது புள்ளியாகக் கூட இல்லாத சசிகலாவுக்கு, அப்படி மக்களிடம் தன்னைச் சரிசெய்துகொள்ளும் வாய்ப்பு இல்லை. இன்னொரு பக்கம், மக்களிடம் தன் இமேஜை நிலைநிறுத்த வேண்டிய அவசியமும் அப்போது அவருக்கு இல்லை. 'போயஸ் கார்டனை விட்டு போ' என்று ஜெயலலிதா சொன்னதும் சென்றார். 'வா' என்று அழைத்தபோது மீண்டும் வந்தார். அப்போது அவரின் மையம், ஜெயலலிதா மட்டுமே.

சசிகலா - தீபா

* ஜெயலலிதா மரணத்தில் இருந்த மர்மங்களின் அதிருப்தி சசிகலாவின் மீது மையம்கொண்டபோது, ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்த மீடியாவின், மக்களின், தமிழகத்தின், ஏன்... ஒட்டுமொத்த இந்தியாவின் கேள்விகளையும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை சசிகலா. மாநில அரசு முதல் மத்திய அரசு வரை யாராலும் கேள்விகேட்க முடியாத, பதில் பெற முடியாத அந்தப் பெண்ணின் இறுக்கம், அவருக்கு அதிக அதிருப்திகளைச் சம்பாதித்துக் கொடுத்தது.

* இவற்றையெல்லாம் மீறியும் அ.தி.மு.க-வின் எம்.எல்.ஏக்களில் பெரும்பகுதியினர் மற்றும் கட்சியின் குறிப்பிட்ட பகுதியினரின் ஆதரவு சசிகலாவுக்கு இருப்பதை மறுக்க முடியாது. பதவியை அனுபவிக்க விரும்புபவர்கள் என்று மட்டுமே அவர்களைச் சுருக்கி விட முடியாது. கீழ் மட்டத்திலும் குறிப்பிட்ட சதவிகித்தில் சசிகலாவுக்கு ஆதரவு இருப்பதனாலேயே அது மேல் மட்டத்திலும் எதிரொலிக்கிறது. ஆனால், பெண் எனும் சாஃப்ட் கார்னர் எனும் ஈர்ப்பை சசிகலாவால் முழுமையாக அடைய முடியாததற்கு, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் ஒரு காரணம் என்றும் பார்க்கலாம். ஜெயலலிதாவின் ரத்தச் சொந்தம் என்பதும் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருக்கும்போது, மருத்துவமனையின் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்கிற அனுதாபமும் இணைந்து தீபாவின் மீது பார்வையைக் குவித்திருக்கிறது.

* ஜெயலலிதா தனது தோற்றம், பேச்சு என தன் ஆளுமைக்கான அடையாளங்களை உருவாக்கிக் கொண்டார். ஆனால் சசிகலாவோ ஜெயலலிதாவின் அடையாள நகலாய் மாற முயற்சிப்பதும் அவர் மீதான மரியாதையைக் குறைத்தது. விகடன் இணையத்தளம் நடத்திய சர்வேயிலும் சசிகலாவுக்கு எதிராகவே பெரும்பன்மையினர் கருத்துத் தெரிவித்திருப்பதைக் காணமுடிகிறது.

இவற்றை எல்லாம் மீறி, சசிகலா அரசியலில் தனக்கான இடத்தை நிரூபிக்கப் போகிறாரா? என்பதே மில்லியன் டாலர் கேள்வி. ஒருவேளை அது நடந்தால், எதிர்காலம் இவருக்கும் எழுதக் காத்திருக்கும் 'பெண் ஆளுமை' கட்டுரைகள்!

http://www.vikatan.com/news/tamilnadu/80138-is-there-any-soft-corner-for-sasikala-among-the-people-opsvssasikala.art

  • தொடங்கியவர்

தொலைக்காட்சி பேட்டியில் கண்ணீர் விட்ட சசிகலா

sasikala

நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு வி.கே.சசிகலா பேட்டியளித்துள்ளார். அதில், 'நான்தான் இத்தனை ஆண்டுகளாக அம்மாவைப் பார்த்துக்கொண்டேன். அம்மா எவ்வளவு வலியைத் தாங்கினார்கள் என எனக்கு மட்டுமே தெரியும். அம்மா மரணம் தொடர்பான எந்த விசாரணைக்கும் தயார். அம்மா மறைந்த போது நான் அனுபவித்த வேதனை எனக்கு மட்டுமே தெரியும்' என கண்ணீர் விட்டார்.

sasikala

மேலும் அவர்,  'நான்தான் கட்சியை வழிநடத்த வேண்டும் என கட்சியினர் கேட்கின்றனர். யார் இந்த பன்னீர் செல்வம் என கேட்கின்றனர். 100% நான்தான் தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்பேன். என்னிடம் நன்றாக பேசிக் கொண்டே இவ்வளவு பச்சையான துரோகத்தை செய்துள்ளார் பன்னீர்செல்வம்' என காட்டமாக கூறினார்.

நன்றி: NEWS18 தமிழ்நாடு

http://www.vikatan.com/news/tamilnadu/80187-sasikala-tears-up-in-news18-interview.art

  • தொடங்கியவர்

'கவர்னர் வரட்டும்னு காத்திருக்கோம்' - சசிகலா நேர்காணல்

சட்டமன்ற அதிமுக  தலைவரும், பொதுச்செயலாளருமான சசிகலா தனது முதல் தொலைக்காட்சி நேர்காணலை நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு வழங்கியிருந்தார். அதில் கேட்கபட்ட கேள்விகளும், அதற்கு அவர் சொன்ன பதில்களும்...

சசிகலாவின் தொலைக்காட்சி நேர்காணல்

அ..இ.அ.தி.மு.கவினுடைய சட்டமன்ற கட்சியினுடைய தலைவராக , அதாவது  தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்தவாரம் உங்களை தேர்ந்தெடுத்தார்கள். இரண்டு மூன்று தினங்களுக்குள் மீண்டும் சட்டமன்ற கட்சி , எம்எல்ஏ கூட்டம் நடந்திருக்கிறது. ஒரு வார காலத்துக்குள் இரண்டு முறை கூட வேண்டிய அவசியம் என்ன?

திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்கள், நேற்றைய தினம் ஒரு புது விளக்கத்தை சொல்லியிருக்கிறார். அவர் அம்மா சமாதியில் உட்கார்ந்து 'தியானம்' என்று சொல்லி... பிறகு அவர் அச்சுறுத்தப்பட்டு என்னை சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுத்தது மாதிரி ஒரு குற்றசாட்டை சொன்னார். அந்த குற்றச்சாட்டு உண்மையல்ல. அதற்கு எங்கள் அ.இ.அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொதித்தெழுந்து போயஸ் இல்லம் நோக்கி வந்துவிட்டனர். அவர்களுடன் எங்கள் 25 அயிரம் கழக தொண்டர்களும் வீட்டு முன் வந்தனர். அதனால், ஒரு பொதுச்செயலாளராகிய நான் ' ஒன்றும் கவலைப்படாதீர்கள். நான் இருக்கிறேன். நம் இயக்கத்தை நல்ல வழியில் நடத்தி செல்வேன். யாரும் கவலைப்பட வேண்டாம். அம்மா வழியில் இந்த இயக்கும் நன்றாக இருக்கும்' என்று சொல்லி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றாக சந்தித்து அவர்களின் மன உளைச்சலை போக்கி, அம்மாவின் அரசை நல்ல முறையில், அம்மாவின் அரசை நல்ல முறையில் அம்மாவின் வழியில் மக்களுக்கு  தொண்டு செய்வோம் என்பதை கூறி... அவர்கள் பிறகு சென்றார்கள். அந்த சமயத்தில் வெளியில் இருக்கு தொண்டர்களையும் சந்தித்து விட்டு வந்தேன். எல்லோருக்கும் ஒரு அம்மாவாக ஆறுதல் சொல்லி, 'நான் இருக்கிறேன். அம்மா நம்மை வழி நடத்துவார்கள்' என்று சொன்னேன். எங்கள் கழக அலுவகத்திற்கு சென்றேன். எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து வந்திருந்தார்கள். அனைவரிடமும் பேசினேன். நீங்கள் தான் எங்களை வழிநடத்தவேண்டும். இந்த பன்னீர் செல்வம் யார்? என்று பேசினார்கள். இருக்கட்டும் பார்த்துக் கொள்வோம். காலம் பதில் சொல்லும் என்றேன். இது தான் நடந்தது.

 

'நான் மிரட்டப்பட்டேன்' என பன்னீர் செல்வம் சொல்லும் குற்றசாட்டில் உண்மை இல்லை என்கிறீர்களா?

நிச்சயமா உண்மை இல்லை. 5.2.17 அன்று மதியம் 2 மணிக்கு கூட்டம் ஆரம்பித்தது. அந்த சமயத்தில் அவர் என்னுடன் நன்றாகவே பேசிக்கொண்டிருந்தார். எல்லா தொலைக்காட்சியிலும் பார்த்திருப்பீர்கள். அந்த மாதிரி நிகழ்ச்சி அங்க ஒன்னும் நடக்கலை.அவர் ஏன் அப்படி சொன்னார்? அவர் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று எனக்கு ஒரு சந்தேகம்.

 

அதற்கு முன்பு அவர் சொல்வது, 'சட்ட மன்ற கூட்டதிற்கு போவதற்கு முன்னாள் அழைக்கப்பட்டு மிரட்டப்பட்டேன். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் நான் சம்மதித்தேன். மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு செல்கிறேன் என்றேன் அதற்கு கூட அனுமதிக்கவில்லை...'

அந்த மாதிரி எதையும் அவர் சொல்லலை. அவர் மற்ற அமைச்சர்களுடன் சேர்ந்து எல்லோருமே தான் கழக அலுவலகத்திற்கு சென்றார்கள். இது கிட்டதட்ட 5 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சி. அவர் இதை சொல்வது இரண்டு நாட்கள் கழித்து. இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது போகபோகத்தெரியும். 

 

ஆளும் கட்சி சார்பில் அடுத்த முதலமைச்சராக, சட்டமன்ற கட்சி தலைவராக உங்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதற்கு ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு வந்ததாகவோ, அதிமுக தரப்பில் இருந்து நீங்கள் 'ஆட்சி அமைக்க அழையுங்கள்'  என உரிமை கோரி கடிதம் கொடுத்ததாகவோ இதுவரை எந்த தகவல்களும் பொதுவெளியில் இல்லை. என்ன நடந்தது? நீங்கள் ஆட்சி ஆமைக்க உரிமை கோரினீர்களா இல்லையா?

5.2.17 அன்று மதியம் 2 மணிக்கு எங்கள் கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் என்னை சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுத்தார்கள். அதற்கு உண்டான ரெக்கார்ட்ஸ் அனைத்தும் எங்களிடம் உள்ளது. அதன் பிறகு அன்று மாலையே கவர்னர் அலுவலகத்திற்கு சென்றோம். கவர்னர் கேம்ப் போயிருக்கிறார், ஊட்டியில் இருக்கிறார் என்று சொன்னார்கள். அதனால், என்னை சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுத்ததை ஊட்டியிலுள்ள கவர்னருக்கு 'ஃபேக்ஸ்' வழியாக தெரிவித்தோம்

 

சட்டமன்ற உறுப்பினர்கள் உங்களை ஆதரித்து கையெழுத்து போட்ட கடிதத்தை பார்த்து ஆளுநர் என்ன சொன்னார்?

அதன் பிறகு ஆளுநர் எந்த முடிவையும் சொல்லவில்லை. பின்னர், 7.2.17 அன்று மும்பையில் இருந்த ஆளுநருக்கு நினைவூட்டு கடிதம் அனுப்பினோம்.

 

நீங்கள் அனுப்பிய நினைவூட்டல் கடிதத்திற்கு , ஆளுநரோ அல்லது அவருடைய அதிகாரிகளோ எதனால் இந்த தாமதம் என அக்னாலெஜ்மெண்ட் கொடுத்தார்களா?

இதுவரையில்லை...

 

அக்னாலெஜ்மண்ட் கூட கொடுக்கலையா..!

கொடுத்திருக்காங்க.

 

ஃபேக்ஸ் வந்தது என்கிற அக்னாலெஜ்மெண்ட் வந்தது. அழைப்பு சார்ந்த எந்த கருத்தும் வரவில்லையா..?

வரவில்லை.

தொலைக்காட்சி நேர்காணலில் சசிகலா

பொதுவாக, பெரும்பான்மை பெற்றிருக்கும் கட்சி யாரை தேர்ந்தெடுக்கிறதோ அவர்களை ஆட்சி அமைக்க அழைப்பது என்பது வழக்கமான நடைமுறை. இதில் அசாதரணமான நடைமுறை பின்பற்றி, ஆட்சி அமைக்க அழைக்காமல் இருந்ததற்கு பின்னால் அரசியல் இருக்கிறது என நினைக்கிறீர்களா?

அப்படி எதுவும் நினைக்கவில்லை. ஆளுநரை பொறுத்தவரை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை மதித்து, ஜனநாயகத்தையும் பாதுகாப்பார் என்று நினைக்கிறேன்.

 

ஆளுநர் சட்டப்படி நடந்துக்கொள்வார், ஜனநாயகத்தை பாதுகாப்பர் என்று பாசிட்டிவான தொனியில் சொல்கிறீர்கள். ஆனால், ஒரு பெரும்பான்மை கட்சி தலைவர் அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்க இந்த காரணத்தினால் தான் தாமதமாகிறது, பொறுத்துக்கொள்ளுங்கள் என இத்தனை காலம் தாமதமாக பதில் சொல்லாமல் வேறு எந்த தகவலையும் சொல்லாமல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளதே...   

எங்களை பொறுத்தவரை சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலோனோர்கள் என்னை தேர்ந்தெடுத்திருக்கின்றனர். நாங்கள் பொறுமையாக காத்துக்கொண்டிருக்கிறோம்.

 

சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் 'முதலமைச்சர், கட்சியின் பொருளாளர் கட்சிக்கு நெருக்கடி வந்தபோதெல்லாம் ஓ.பிஎஸ் அவர்கள் துணையாக இருந்திருக்கிறார்' என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள். அவர் திடீரென இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்து இப்படி ஒரு குற்றச்சாட்டை முன்வைப்பார் என எதிர்பார்த்தீர்களா?

சமீபத்தில் நடந்த சட்டமன்ற கூட்டதொடரை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு விசயம் தெளிவாக தெரிந்தது. தி.மு.க-வை சேர்ந்த துரைமுருகன் அவர்கள் ஓ.பன்னீர் செல்வத்திடம் ' மீதமுள்ள உள்ள ஆண்டுகளுக்கும் நீங்களே முதலமைச்சராக இருக்கவேண்டும். அதற்கு நாங்கள் துணை நிற்போம்' என்று கூறினார். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் 'நாங்கள் பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்திருக்கிறோம். எங்களுக்கு உங்கள் தயவு தேவையில்லை' என்ற பதிலை சொல்வார் என எதிர்பார்த்தேன். ஆனால், அதை அவர் சொல்லவில்லை. அன்றிலிருந்துதான் உண்மையாகவே என்னை முதலமைச்சராக கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்குமே ஏற்பட்டிருக்கிறது.

 

துரைமுருகன் அவர்கள் சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர். தமிழ்நாடு சட்டமன்றத்தை பொறுத்தவரை ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இணக்கமான சூழ்நிலை இருக்கவேண்டும் எனும் நல்ல எண்ணத்தில் பகைமைய பாராட்ட வேண்டாம், ஆக்கபூர்வாமாக பொதுவான பிரச்னைகளில் இணைந்து செயல்படலாம் என்ற நோக்கத்தில் சொல்லியிருக்கமாட்டாரா; ஏதோ அரசியல் நோக்கத்தோடு தான் சொல்லியிருப்பார் என்று எப்படி முடிவுக்கு வருகிறீர்கள்?

திமுகவின் நிலைப்பாடு எப்போதுமே அதிமுகவை எதிர்ப்பது தான். ஒரு காலத்தில் எதிர்கட்சி தலைவராக இருந்த அம்மா அவர்களை சேலையை பிடித்து இழுத்தவர்கள் தான் இவர்கள். அவர்கள் எங்களுடைய எதிரிகட்சி தான். அவர்கள் இப்படி திடீரென ஒரு முடிவுக்கு வரவேண்டிய அவசியம் என்ன?  தேவையில்லையே. 

 

பன்னீர்செல்வத்தின் இந்த முடிவுக்கு பின்னால் திமுக தான் இருக்கிறது என்ற கருத்தை சொல்கிறீர்கள் அது சரியா? உங்கள் கட்சியில் நடக்கும் ஒரு பிரச்னைக்கு எதிர்கட்சியை குற்றம் சாட்டுவது, பழிசுமத்துவது என்பது எந்த வகையில் நியாயம்? 

ஸ்டாலின் அவர்கள் சொன்னதிலேயே நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். ஸ்டாலின் "ஓ.பி.எஸ். திரும்பவும் ஆட்சிக்கு வருவார் " என்ற தொணியில் பேசுகிறார். தி.மு.கவினருடையே போக்கே இவர் அ.இ.அ.தி.மு.க-விலுள்ள ஒரு முதலமைச்சர் என்றே அவர்கள் நினைக்கவில்லை. அவர்களை பொறுத்தவரையிலும் என்ன சொல்கிறார்கள்... 'உங்களை நாங்கள் ஆதரிப்போம்' என்று சொல்வதிலிருந்தே அவர்கள் தான் பன்னீர் செல்வத்தின் பின் நிற்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

 

திமுக இதில் என்ன முடிவு எடுக்கிறது, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நீங்கள் அரசியல் ரீதியாக விமர்சனம் செய்வது ஒருபக்கம். திரு.பன்னீர் செல்வம் அவர்கள் தன்னை அதிமுக முதலமைச்சராக பாவித்துக்கொண்டாரா என்பதை தான் நீங்கள் அடிப்படை அளவுகோலாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், அவர் அப்படி இல்லை எனும் முடிவுக்கு ஏன் வருகிறீர்கள்?

ஒரு முதலமைச்சராக செயல்படுவது என்பதை சட்டமன்றத்தில் நடந்துக்கொள்ளும் விதத்திலிருந்தே நாம் புரிந்துக்கொள்ள முடியும். அம்மா முதலமைச்சராக இருந்தபோதும் பார்த்திருக்கிறேன். அவர் எப்படி நடந்துக்கொண்டார் என்பது நமக்கு தெரியும். அந்த மாதிரியான ஒரு சூழ்நிலை, இந்த நான்கு நாட்கள் நடந்த கூட்டத்தில் இல்லை.

 

நீங்கள் முதலமைச்சராகும்போது சட்டமன்றம் எப்படி இருக்கும்?

நிச்சயமா அம்மா எப்படி செயல்பட்டாரோ, அதே வழியில் தான் நான் தொடர்வேன்.

 

திமுக, அதிமுக இரண்டும் காரசாரமான எதிர்கட்சிகள் என்ற நிலையே தொடரும் என்கிறீர்களா?

நிச்சயமாக...

தொலைக்காட்சி நேர்காணலில் சசிகலா

 

ஆளும் கட்சிக்கும் எதிர் கட்சிக்கும் ஆக்கப்பூர்வமான இணக்கம் வேண்டுமென தமிழ்நாட்டில் சிலர் சொல்வதை கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டீர்களா?

ஒரு கட்சி, இன்னொரு கட்சி என சொல்வதை விட, ஒரு கட்சி நம்மை நம்பி ஓட்டுபோட்ட பொதுமக்களுக்கு என்ன செய்கிறோம் என்பது தான். இதுவரையிலும் பார்த்தீர்கள் என்றால் காவிரி பிரச்னையாகட்டும், கெயில் பிரச்னையாகட்டும், கச்சதீவு பிரச்னையாகட்டும் தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் அதில் அழுத்தம் திருத்தமாக நின்றது அம்மாவின் அரசு. அதிமுக தான் அதை செய்திருக்கிறது. திமுகவை பொறுத்தவரை அது மாதிரி எதையுமே சொல்லமுடியாது. அதன் அடிப்படையில் பார்க்கும்போது மக்களுக்காக செயல்படும் அரசு ' தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் தோள் கொடுத்து நிற்கும் அரசு அதிமுக தான். அதன் அடிப்படையில் திமுகவை வெறுக்கிறோம். அம்மாவே பலமுறை என்னிடம் சொல்லியிருக்காங்க , 'பல முக்கியமான விசயத்தில் திமுக அட்சியில் இருந்தபோது மக்களுக்கு விரோதமான விஷயங்களை எதை பற்றியும் கவலைபடாம உள்ளே இருந்து செய்திருக்கிறார்கள். நான் அப்படி இல்லை.' என ஒவ்வொரு காலக்கட்டத்திலேயும் சட்டசபைக்கு போய் வரும்போதும்  என்னிடம் சொல்வாங்க. அப்போ, நாங்க எப்படி திமுகவை தோழமையா நினைப்போம். நினைக்கமுடியாதே... எங்களுடைய வியூவே வேறையா இருக்கு. அது தான் காரணம். இணக்கம்ங்கிறதுக்கு இங்கே வேலையே இல்லை. மக்களுக்கு செய்யகூடிய இடத்தில் இருக்கும்போது நாங்களே செய்கிறோம். இவர்களே தேவையே இல்லையே. இவர்கள் ஆட்சியில் இருக்கும்போது மக்களுக்கு எதுவும் செய்தார்களா? அதை தான் நீங்கள் பார்க்கவேண்டும்.

 

தமிழ்நாட்டு மக்கள் மனதில் கடந்த இரண்டு மாதங்களாக அதிகம் பேசப்படுவது மறைந்த முதல்மைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு தரப்பட்ட சிகிச்சைகள் பற்றி தான் . அது தொடர்பாக சமூக வலைதலங்களிலும், மக்கள் மத்தியிலும் பல்வேறு சந்தேகங்கள்,கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ரிச்சர்ட் பீலே மற்றும் அவர்கள் குழுவை சேர்ந்தவர்கள் சிலர் விளக்கங்களை தந்திருக்கிறார்கள். அது எந்தளவு மக்களை திருப்தி படுத்தியிருக்குனு தெரியலை, இந்த நிலையில் 'இது தொடர்பாக நீதி விசாரணை வேண்டும்.சிகிச்சை சமயத்தில் என்னை பார்க்க அனுமதிக்கவில்லை என்று  ஓ.பிஎஸ் அவர்கள் சொல்லியிருக்கிறார். இது சம்பந்தமாக உங்களது பதில் என்ன?

அம்மாவுடன் 33 ஆண்டுகளாக இந்த வீட்டில் இருந்திருக்கிறேன். அவரை எப்படி பார்த்துக்கொள்வேன் என்பது எங்கள் வீட்டில் உள்ள வேலையாட்களுக்கு தெரியும், தொண்டர்களுக்கும் தெரியும். இந்த சமயத்தில் இந்த மாதிரி கருத்துகள் வெளியில் வருவதெல்லாம் வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு பொய்யான கருத்தை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு உள்ளனர். என்னை பொறுத்தவரை 75 நாட்கள் மருத்துவமனையில் நான் இருந்தபோது, நான் எப்படி பார்த்துக்கொண்டேன் என்பது அங்குள்ள மருத்துவர்கள், வேலை செய்த செவிலியர்கள் எல்லோருக்கும் தெரியும். வெளியில் சொல்வதை பற்றி நான் கவலைப்படுவதே இல்லை. என் மனசாட்சிபடி.. எனக்கு தெரியும். அவரை பிரிந்து அந்த வேதனை அது எனக்கு மட்டும் தான் தெரியும். ஒவ்வொரு நிமிடமும் ( கண் கலங்குகிறார்... ) எப்படி பார்த்துக்கிட்டேன் என்பதை நான் வெளியே சொல்லவேண்டும் என்பதை நினைக்கவில்லை. எனக்கு திமுக காரர்கள் பரப்பிவிடும் செய்திகளை பற்றி கவலையில்லை. இவ்வளவு நாட்கள் எங்களுடன் இருந்த ஓ.பி.எஸ் விசாரணை கமிஷன் போடவேண்டும் என சொல்கிறார். அதை நினைத்து தான் நான் வருத்தப்பட்டேன். இவ்வளவு பச்சை துரோகியா இருந்திருக்கிறாரே! என்று நினத்து வருத்தப்பட்டேனே தவிர, அம்மாவினுடைய ட்ரீட்மெண்ட் பொறுத்தவரைக்கும் அது ஒரு திறந்த புத்தகம் மாதிரி தான்.  அங்கு ஒரு டாக்டர் இரண்டு டாக்டர் இல்லை... எய்மிஸில் இருந்து வந்திருந்தார்கள் அது மத்திய அரசு கன்ட்ரோலில் உள்ள மருத்துவமனை. எங்களுக்கு மனதில் பயமில்லை. அதனால், அங்கிருந்தே நாங்கள் மருத்துவர்களை அழைத்தோம். லண்டன் டாக்டர் வந்தார், சிங்கப்பூரில் இருந்து பிசியோ தெரபிஸ்ட் வந்தார்கள். அன்று மதியம் கூட தொடர்ந்து பிசியோதெரபி கொடுத்தோம். அப்போது டிவி கூட பார்ப்பார்கள். ஹனுமான் சீரியல், பழைய பாடல்கள் சிடி போட்டு காமிச்சுட்டு தான் இருக்கோம், பார்த்துட்டு தான் இருந்தாங்க. அந்த மாதம் 29-ஆம் தேதி வீட்டிற்கு அழைத்துவந்து விடலாம் என்று தான் இருந்தேன். இந்த மாதிரி இருக்கும்போது திடீர்னு ஒருத்தர்  சொல்லும்போது இவர் அரசியலில் விலை போயிட்டார் என்பதை நினைத்து தான் வருத்தப்பட்டேன். அம்மா இறப்புக்கு பிறகு அவர் கட்சியை, அதனால் அடையாளம் காட்டபட்ட ஓ.பிஎஸ் கொச்சை படுத்துறாரே, அது அம்மாவுக்கு செய்யும் துரோகம் இல்லையா. அந்த மனவேதனை தான் எனக்கு.

 

ஜெயலலிதா அவர்களுடைய மரணம், மரணத்துக்கு முந்தைய சிகிச்சைகள். அவர்களது பிரிவு எந்தளவு துயரத்தை தந்தது என்பதை சொல்கிறீர்கள். மக்கள் மனதில் உள்ள சந்தேகத்தை போக்கவேண்டும், கட்சிகாரர்களுக்கு இதுபற்றிய விளக்கத்தை தரவேண்டும் என்றார் முழுமையாக சொல்லக்கூடிய ஒருவர் நீங்களாக தான் இருக்க முடியம். ஜெயலலிதா அவர்கள் தாமதமாக அட்மிட் செய்யபட்டார்கள் என்பதிலிருந்து தொடங்கி...

( கேள்வியை முடிப்பதற்குள்.. ) இல்லை...அது தவறான செய்தி. அங்கே இருந்த டி.எஸ்.பியை தான் நான் முதலில் கூப்பிட்டேன். உதவி பண்ணுங்க என்றேன். அங்கே இருந்த மருத்துவர்கள் எல்லோரும் 'ரொம்ப சீக்கிரம் கொண்டுவந்துட்டீங்க...' என்றார்கள். 'சரியான நேரத்தில் கொண்டு வந்து அட்மிட் பண்ணிட்டீங்க. லேட் பண்ணாம வந்துட்டீங்க.  அதனால பிரச்னை இல்லை' என்றனர். 

 

எந்த விசாரணைக்கும் தயார் என்கிறீர்கள்..?

எந்த கவலையும் இல்லை. என்னை பொறுத்தவரை என்னுடைய சகோதரிக்கு நான் ( மறுபடியும் கண் கலங்குகிறார் )... அவர்களுக்கு தெரியும். நான் அவரை எப்படி பார்த்துக்கொண்டேன் என்பது அவருக்கு தெரியும். அங்கிருந்த மருத்துவர்களுக்கு தெரியும்.

 

தமிழ்நாட்டு அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கவுள்ள, உங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய வழக்கின் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்ற சூழல் இப்போது உள்ளது. ஒருவார காலத்திற்குள் சொத்துகுவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்துவிடும் என உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது, தீர்ப்புக்கும் பதவியேற்பு தேதி தள்ளிப்போவதற்கும் முடிச்சு இருப்பதாக பல அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள். இந்த தீர்ப்பு எப்படிப்பட்டதாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

நீதிமன்றஙளை மதிக்கிறேன். ஒரு வழக்கு நிலுவையில் உள்ள சமயத்தில் அதை பற்றி கருத்து சொல்வது சரியில்லை என நினைக்கிறேன்.

 

பழைய பல நெருக்கடிகள் உங்களை சூழ்ந்திருப்பது தெரிகிறது. பல சவால்கள் உங்களை காத்திருக்கிறது. முதலமைச்சராக பதவியேற்பேன். வி.கே.சசிகலா எனும் நான்... என ஆளுநரால் உச்சரிக்கப்பட்டு முதலமைச்சராக பதவியேற்பேன் என உங்களால் சொல்லமுடியுமா?

உறுதியாக சொல்வேன். நிச்சயமாக முதலமைச்சராக பதவியேற்பேன். அம்மாவின் ஆசியோடு அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமென நினைத்தாரோ அந்த வழியில் நான் செயல்படுவேன்.

 

நன்றி : நியூஸ் 18 தமிழ்நாடு

http://www.vikatan.com/news/politics/80211-we-are-awaiting-governors-visit-says-sasikala.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.