Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிப்.9-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

Featured Replies

பிப்.9-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

 

 
 
 
ஓ.பன்னீர்செல்வம் (இடது) ; வி.கே.சசிகலா (வலது)
ஓ.பன்னீர்செல்வம் (இடது) ; வி.கே.சசிகலா (வலது)
 
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் புதன்கிழமை சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் பேட்டியளித்தார். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு அரசியல் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில் இன்றும் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன. அவற்றின் நிகழ்நேரத் தொகுப்பு: (அவ்வப்போது இந்தப் பக்கத்தை ரெஃப்ரஷ் செய்க)

11.15 am: 'ஜெயலலிதா சிகிச்சை மர்மங்களை மறைத்தது ஏன்?' என்பன உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், 'சசிகலா குழுவினருக்கு துணையாக இருந்து விட்டு, இப்போது பிரிந்து வந்த பிறகு உத்தமர் வேடம் போட பன்னீர்செல்வம் முயல்கிறார். ஆனால், அவரது நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள்' என்று கூறியுள்ளார். | முழு விவரம் > உத்தமர் வேடத்தில் ஓபிஎஸ் நாடகம்: பல கேள்விகளை அடுக்கி ராமதாஸ் கருத்து

11.00 am: நாடாளுமன்றத்தில் அதிமுக எம்எல்ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. தமிழக முதல்வராக சசிகலா உடனடியாக பதவியேற்க வேண்டும் என்பது அவர்களது விருப்பக் குரலாக இருந்தது.

10.55 am: "அதிமுக எம்.ஏல்.ஏ-க்கள் பிணை கைதிகள் போல் இருக்கிறார்கள். இது தொடர்பாக ஆளுநர் விசாரணை நடத்த வேண்டும்" என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

10.50 am: முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைந்தியநாதன் அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

10.45 am: "உச்ச நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா தண்டனை பெற்றாலும், அதிமுக சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளது. ஓ. பன்னீர் செல்வம் முதல்வராக முடியாது. அவர் இரு வழிகளையும் இழந்துவிட்டார்" என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

10.42 am: அதிமுக புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர், அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவால் அடிப்படை உறுப்பினர் பொறுப்புலிருந்து நீக்கப்பட்டார்.

10.40 am: தமிழக டிஜிபி ராஜேந்திரன், முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசினார்.

10.35 am: குற்றவாளிகளைப் போல் எம்.எல்.ஏ.க்களை நடத்துவதற்கு இந்தப் பெண்ணுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். | முழு விவரம் > குற்றவாளிகளைப் போல் எம்.எல்.ஏ.க்களை நடத்துவதா?- குஷ்பு சாடல்

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்9ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9531177.ece?homepage=true

  • தொடங்கியவர்

12.15 pm: "அதிமுகவின் உட்கட்சி விகாரங்களில் திமுக தலையிடவில்லை. அதிமுகவில் நடக்கும் பிரச்சினைகள் மோசமாகவும், வருத்தமளிப்பதாகவும் உள்ளது" என்று திமுக நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி டெல்லியில் கூறியுள்ளார்.

12.08 pm'அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 130-க்கும் மேற்பட்டோரை காணவில்லை; அவர்களை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்' எனக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

11.55 am: சென்னை போயஸ் கார்டனில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிராக அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • தொடங்கியவர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் புதன்கிழமை சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்தார். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு அரசியல் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் இன்றும் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அவற்றின் நிகழ்நேரத் தொகுப்பு: (அவ்வப்போது இந்தப் பக்கத்தை ரெஃப்ரஷ் செய்க)

2.42 pm: ஆளுநரை வரவேற்க விமான நிலையம் செல்கிறார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.

2.33 pm: தமிழக ஆளுநரை இன்று மாலை 5 மணிக்கு சந்திக்கிறார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.

2. 30 pm: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா இன்று இரவு 7.30 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார்.

1.49 pm: மதுசூதனன் வருகை தங்களுக்கு வலிமையைக் கூட்டியுள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். விவரம்: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் நேரில் ஆதரவு: ஓ.பன்னீர்செல்வம் நெகிழ்ச்சியுடன் உற்சாகம்

1.47 pm: சசிகலாவை அதிமுகவினர் நிராகரிக்க வேண்டும். அதிமுக காப்பாற்றப்பட வேண்டும்- மதுசூதனன்.

1.38 pm: முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

1:22 pm: முதல்வர் பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் வருகை.

1:17 pm: "அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அவர்களது விடுதியில் சுதந்திரமாக உள்ளனர். தமிழ்நாட்டின் முதல்வராக சசிகலா விரைவில் பதவியேற்பார்" என்று அதிமுகாவின் பா. வளர்மதி கூறியுள்ளார்.

12:55 pm: நெல்லித்தோப்பு முன்னாள் எம்எல்ஏ ஒம்சக்தி சேகரை சசிகலா நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி நெல்லித்தோப்பு அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.

12.50 pm : முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துடன் வீணை காயத்ரி சந்திப்பு

12.30 pm: மும்பையிலிருந்து சென்னை புறப்பட்டார் ஆளுநர் வித்தியாசாகர் ராவ். இன்று ( வியாழக்கிழமை) பிற்பகல் 3.15 மணிக்கு சென்னை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

12.20 pm: "எங்களை யாரும் கடத்தவில்லை. சுதந்திரமாகவே இருக்கிறோம். ஆளுநர் சென்னை வந்தவுடன் சசிகலாவுக்கு எங்களது ஆதரவை தெரிவிப்போம்" என்று குன்னம் தொகுதி எம்ஏல்ஏ ராமசந்திரன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்9ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9531177.ece?homepage=true

  • தொடங்கியவர்

3.15 pm: இன்று மாலை 5 மனிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்கிறார் ஓபிஎஸ். சசிகலா 7.30 மணிக்கு சந்திக்கிறார்.

3.03 pm: "சசிகலா அணியினரால் கடத்திச் செல்லப்பட்டு கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள விடுதிகளிலும், புதுச்சேரியிலும் கட்டாய சிறை வைக்கப்பட்டுள்ள 120-க்கும் மேற்பட்ட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

2.58 pm: "சசிகலாவை ஆதரித்தவர் பன்னீர்செல்வம். தற்போது நாடகமாடுகிறார். பன்னீர் செல்வமும், மதுசூதனனும் துரோகிகள். அதிமுகவின் சொத்துகளை அபகரிக்க முயற்சி நடக்கிறது" என்று அதிமுகவின் கோகுல இந்திரா கூறியுள்ளார்.

  • தொடங்கியவர்

சென்னை வந்தடைந்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்

vidyasagar rao

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். இன்று மதியம் மும்பையில் இருந்து கிளம்பிய அவர் தற்போது சென்னை வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு செல்கிறார் வித்யாசாகர் ராவ்.

தகித்துக் கொண்டிருக்கும் தமிழக அரசியல் சூழலில், அவரை இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்துப் பேச இருக்கிறார். அதன் பின்னர் மாலை 7.30 மணிக்கு வி.கே.சசிகலாவும் ஆளுநரை சந்தித்துப் பேசுகிறார்.

http://www.vikatan.com/news/tamilnadu/80268-governor-vidyasagar-rao-reaches-chennai-airport.art

 

 
 
ஆளுநர் மாளிகை | படம்: ம.பிரபு
ஆளுநர் மாளிகை | படம்: ம.பிரபு
 
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் புதன்கிழமை சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்தார். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு அரசியல் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் இன்றும் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அவற்றின் நிகழ்நேரத் தொகுப்பு: (அவ்வப்போது இந்தப் பக்கத்தை ரெஃப்ரஷ் செய்க)

4.00 pm: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ராஜ்பவன் வந்தடைந்தார்.

3.40pm: சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்.

3.30 pm: "அதிமுக எம்எல்ஏக்கள் அவர்களது விருப்பத்தில்தான் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எம்எல்ஏக்களை யாரும் கட்டுப்படுத்தவில்லை. 10 முக்கிய அமைச்சர்களுடன் ஆளுநரை இரவு 7.30 மணிக்கு சந்திக்க இருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா. விரைவில் சசிகலா தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும். ஆதாரமின்றி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார் பன்னீர்செல்வம்" என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

3.24 pm: வில்லிவாக்கம் எம்எல்ஏ ஜே.சி.டி பிரபாகர் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆதரவு அளித்தார்.

3.20 pm: அதிமுகவின் முன்னாள் எம்பி கே. பழனிசாமி முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு.

3.17 pm: அதிமுக உறுப்பினர் பரிதி இளம்வழுதி முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை இல்லத்தில் சந்தித்தார்.

3.15 pm: இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்கிறார் ஓபிஎஸ். சசிகலா 7.30 மணிக்கு சந்திக்கிறார்.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்9ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9531177.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஆளுநர் மாளிகை சென்றடைந்தார் முதல்வர் ஓபிஎஸ்

 

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் புதன்கிழமை சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்தார். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு அரசியல் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் இன்றும் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அவற்றின் நிகழ்நேரத் தொகுப்பு: (அவ்வப்போது இந்தப் பக்கத்தை ரெஃப்ரஷ் செய்க)

4.49 pm: டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில், பிரதமர் மோடியுடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்து பேசினார். தமிழக அரசியல் நிலவரம் குறித்து அலோசித்ததாக தகவல்.

4.41 pm: ஆளுநர் மாளிகை சென்றடைந்தார் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.

4.30 pm: ஆளுநரை சந்திக்க ராஜ்பவன் புறப்பட்டார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்9ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9531177.ece?homepage=true

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மனைவியைக் காணவில்லை: எம்.எல்.ஏ.வின் கணவர் ஆட்கொணர்வு மனு

 
 
சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப் படம்.
சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப் படம்.
 
 

தனது மனைவியைக் காணவில்லை கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதாவின் கணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் முதல்வராக பொறுப்பேற்க தயாராகி வருகிறார். இதற்கிடையே, சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் அளித்த திடீர் பேட்டியால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை சசிகலா நேற்று கூட்டியிருந்தார். இதில் பேசிய சசிகலா, "நம்மைப் பிரிக்கும் ஆற்றல் யாருக்கும் இல்லை. ஒற்றுமையுடன் இருப்போம்" என அறிவுறுத்தினார்.

வழக்கமாக கூட்டம் முடிந்து எம்எல்ஏக்கள் விடுதிக்கோ, தங்கள் வீடுகளுக்கோ செல்வார்கள். ஆனால், நேற்று கூட்டம் முடிந்ததும் எம்எல்ஏக்கள் யாரையும் அதிமுக தலைமை வெளியில் விடவில்லை. அமைச்சர்களை பொறுப்பாளர்களாக போட்டு, அவர்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்படி செய்தனர். அதன்பின், மதிய உணவு முடித்து பிற்பகல் 3.20 மணிக்கு மூன்று சொகுசுப் பேருந்துகளில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், தனது மனைவியைக் காணவில்லை கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதாவின் கணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். முன்னதாக, இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், 130-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை காணவில்லை எனக் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், அரசு தரப்பு வழக்கறிஞர் ராஜேந்திரன் விளக்கத்தையடுத்து அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/tamilnadu/மனைவியைக்-காணவில்லை-எம்எல்ஏவின்-கணவர்-ஆட்கொணர்வு-மனு/article9531865.ece?homepage=true

  • தொடங்கியவர்

5.17 pm: ஆளுநருடனான முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் சந்திப்பு நிறைவு பெற்றது. ஆளுநர் மாளிகையிலிருந்து இல்லத்துக்கு புறப்பட்டார் முதல்வர்.

5.10 pm: முதல்வர் பன்னீர்செல்வம், ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் ஆலோசனை. முதல்வருடன பி.ஹெச். பாண்டியன், கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் உடன் உள்ளனர்.

5.00 pm: தமிழக அரசியல் நிலவரம் குறித்து தம்பிதுரை மற்றும் பிரதமர் மோடி பேசவில்லை என்றும், நாடாளுமன்ற கூட்டத் தொடர் முதல்பகுதி நிறைவடைவதால் மரியாதை நிமித்தமாக இருவரும் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

  • தொடங்கியவர்

5.35 pm: ஆளுநர் உடனான சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பொறுப்பு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், "தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து ஆளுநருடன் விரிவாக விளக்கினேன். நல்லது நடக்கும். அந்த நம்பிக்கை இருக்கிறது. தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும்; தர்மம் மறுபடியும் வெல்லும்" என்றார்

ஆளுநர் உடன் சுமார் அரை மணி நேரம் சந்திப்பு நடந்தது. எனினும், முழு விவரத்தை ஓபிஎஸ் அளிக்கவில்லை. பொதுவாகவே பேசினார். நல்லது நடக்கும் என்பதை அவரது ஆதரவாளர்கள் தங்களுக்கு சாதகமாக அமையும் எனும் விதமாக எடுத்துக்கொண்டுள்ளனர்.

திவு செய்த நாள் : 9, பிப்ரவரி 2017 (18:20 IST) 
மாற்றம் செய்த நாள் :9, பிப்ரவரி 2017 (18:56 IST)

 
சசிகலா கோஷ்டியின் பிடியில் உள்ள
 12 எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரதம்!
 
கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க  வைக்கப்பட்டுள்ள 12 எம்.எல்.ஏக்கள் தடபுடல் விருந்துகளை தவிர்த்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
 
 சசிகலா கோஷ்டியினர் அதிமுக எம்எல்ஏக்களை சொகுசுப் பேருந்தில் அழைத்துச்சென்று அவர்களை நேற்றிரவு முதல் கல்பாக்கம் அருகே உள்ள கூவத்தூரில் கோல்டன் பே ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளனர்.
 
எம்எல்ஏக்கள் மற்றவர்களை சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்களை கண்காணிக்க மன்னார்குடியில் இருந்து  கும்பல்  இறக்கப்பட்டுள்ளதாக தகவல்.
 
 ரிசார்ட் பகுதியாக அன்றாடப் பணிக்கு செல்லூம் மக்களைக் கூட விடாமல் தடுத்து அவர்களை அடித்து விரட்டி வருகின்றனர்.
 
 இந்த அராஜகத்தால் கூவத்தூர் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
எம்.எல்.ஏக்களுக்கு பொறுப்பாளராக இருந்துவரும் செந்தில்பாலாஜி, விஜயபாஸ் கடும் கட்டுப்பாடு விதிப்பதாகவும், எம்.எல்.ஏக்களை உறவினர்களோ, ஓபிஎஸ் தரப்பினரோ தொடர்புகொள்ள முடியாத அளவுக்கு பாதுகாப்பாக இருப்பதாலும், எம்.ஏல்.ஏக்கள் ஆவேசம் அடைந்துள்ளதாகவும் தகவல்.
 
இந்நிலையில், எம்.எல்.ஏக்களுக்கு வைக்கப்படும் தடபுடல் விருந்தை புறக்கணித்து விட்டு 12 பேர் உண்ணாவிரதம் இருப்பதாக தகவல்.
 
 
அடப்பாவியளா பேசாம தந்ததை தின்னுட்டு - மனச்சாட்சிப்படி நடக்கிறதை விடுத்து இது என்ன கூத்து?.
  • தொடங்கியவர்

பிப்.9-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

 

 
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா | கோப்புப் படம்: வி.கணேசன்
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா | கோப்புப் படம்: வி.கணேசன்
 
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் புதன்கிழமை சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்தார். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு அரசியல் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் இன்றும் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அவற்றின் நிகழ்நேரத் தொகுப்பு: (அவ்வப்போது இந்தப் பக்கத்தை ரெஃப்ரஷ் செய்க)

7.40 pm : ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சசிகலா!

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தன்னிடம் உள்ள ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை ஆளுநரிடம் அளித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தை கழகப் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா ஆளுநரிடம் வழங்கினார். அப்போது மூத்த அமைச்சர்களும் உடன் இருந்தனர்.

7.05 pm: ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய சசிகலா, எம்.எல்.ஏ.க்கள் பட்டியல் அடங்கிய கோப்பு ஒன்றை அங்கு வைத்து வணங்கினார். பின்னர், அங்கிருந்து ஆளுநர் மாளிகைக்கு காரில் புறப்பட்டார்.

6.00 pm: மெரினா செல்கிறார் சசிகலா: தமிழக ஆளுநரைச் சந்திப்பதற்கு முன்பாக மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் செல்கிறார் சசிகலா. ஆளுநர் வித்யாசாகர் ராவ்வை சசிகலா 7.30 மணிக்குச் சந்திக்கவுள்ளார்.

5:45 pm: சசிகலாவை ஆதரிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவர்களது ஹாஸ்டலில்தான் உள்ளனர் என்று உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் வி.எம்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் நிருபர் ஹாஸ்டலில் சென்று பார்த்த போது எம்.எல்.ஏ.க்கள் அறை பூட்டியே கிடந்தது தெரிய வந்துள்ளது.

சிவானந்தா சாலையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் ஹாஸ்டல் வளாகம் வெறிச்சோடிக் கிடந்தது. எம்.எல்.ஏ.க்களின் கார்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் அறைகள் பூட்டியே கிடக்கின்றன.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்9ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9531177.ece?homepage=true

பத்திரிகையாளர்கள் சந்திப்பை தவிர்த்த சசிகலா

 

சென்னை: ஆட்சிஅமைக்க உரிமை கோரி கவர்னரை சந்தித்த சசிகலா தொடர்ந்து பத்ரிகையாளர் சந்திப்பை தவிர்த்தார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா ஆட்சிஅமைக்க உரிமை கோரி கவர்னர் வித்யாசாகர் ராவை சந்திக்க கவர்னர் மாளிகைக்கு இன்று ( 9-ம் தேதி ) 7.30 மணிக்கு சென்றார், சுமார் 40நிமிட நேரம் இச்சந்திப்பு நடைபெற்றது. கவர்னரை சந்தித்த பின்னர் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் போயஸ் இல்லத்திற்கு திரும்பினார். முன்னதாக கவர்னரை சந்தித்த முதல்வர் பன்னீர் செல்வம் பத்திரிகையாளர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1707557

  • தொடங்கியவர்

பிப்.9-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

 
படம்.| ஆர்.ரவீந்திரன், ஜி.ஸ்ரீபரத்.
படம்.| ஆர்.ரவீந்திரன், ஜி.ஸ்ரீபரத்.
 
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் புதன்கிழமை சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்தார். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு அரசியல் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் இன்றும் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அவற்றின் நிகழ்நேரத் தொகுப்பு: (அவ்வப்போது இந்தப் பக்கத்தை ரெஃப்ரஷ் செய்க)

9.40 pm: ஓ.பன்னீர்செல்வம், சசிகலா சந்திப்புக்குப் பிறகு குடியரசுத் தலைவர், பிரதமருக்கு அறிக்கை அனுப்பினார் ஆளுநர்!

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோர் தனித்தனியாக சந்தித்துப் பேசினர். இதையடுத்து குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சருக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளார். இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு நீடிக்கிறது.

இருவரின் சந்திப்புக்குப் பிறகு அவர்களின் கோரிக்கைகள் மற்றும் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து மத்திய அரசுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியதாக தெரிகிறது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்த அறிக்கைகளின் அடிப்படையில் சட்ட நிபுணர்களிடம் விரிவாக ஆலோசனை நடத்தியும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலை பெற்றும் ஆளுநர் உரிய முடிவுகளை எடுப்பார் எனக் கூறப்படுகிறது.

9.00 pm: முதல்வர் பன்னீர்செல்வம் ஆட்சியமைக்க திமுக ஆதரவு அளிக்கும் என்று திமுக துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் என்று அளித்த பேட்டி திமுகவுக்கு உடன்பாடில்லாதது என்று செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

8.15 pm: ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய சசிகலா போயஸ் தோட்டம் திரும்பினார். இன்னும் ஊடகங்களிடம் அவர் சந்திப்பு பற்றி தெரிவிக்கவில்லை.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்9ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9531177.ece?homepage=true

  • தொடங்கியவர்
முடிவு கவர்னர் கையில் : ராஜ்நாத் பேட்டி

 

புதுடில்லி: தமிழக அரசியல் நிலவரம் குறித்து கவர்னர் வித்யாசாகர் ராவ் தனது அறிக்கையை ஜனாதிபதி, பிரதமர், உள்துறைஅமைச்சகம், அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோருக்கு அனுப்பி வைத்தார்.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நியூஸ் எக்ஸ் டி.வி.சானலுக்கு அளித்தபேட்டியில், கவர்னர் அறிக்கை மீது மத்திய அரசு முடிவு எடுக்க முடியாது. இந்த விவகாரம் கவர்னரின் அதிகாரத்திற்கு உட்பட்டது. ஆட்சி அமைக்க அழைப்பது குறித்து கவர்னர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1707625

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.