Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமற்போனோர் தொடர்பான பிரதமரின் யோசனை நிராகரிப்பு

Featured Replies

காணாமற்போனோர் தொடர்பான பிரதமரின் யோசனை நிராகரிப்பு
 
 
காணாமற்போனோர் தொடர்பான பிரதமரின் யோசனை நிராகரிப்பு
கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை நடத்துவதற்காக விசேட பொலிஸ் குழுவொ ன்றை அமைப்பதாக  பிரதமரினால் முன்வைக்கப்பட்ட யோசனையை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நிராகரி த்துள்ளனர்.
 
அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் யோசனைகள் மீது தமக்கு நம்பிக்கை வரவேண்டும் என்றால் முதலில் நீண்ட காலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளில் பாதிப்பேரையாவது விடுதலை செய்ய வேண்டும் என்றும்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்..
 
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்றைய தினம் கொழும்புக்கு சென்று  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில்  சந்தித்தனர். 
 
இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன, சட்டம்,ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோரும் கலந்து கொண்டிருந்த இந்த சந்திப்பின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான, விசாரணைகளை துரிதப்படுத்தவும், அதனை தொடர்ந்து முன்னெடுக்கவும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தலைமையில் சிறப்பு பொலிஸ் குழுவொ ன்றை அமைக்கும் யோசனை அரசாங்கத்திடம் இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 
9-2-2017%2019.2.26%201.jpg
எனினும் இந்த யோசனையை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பிரதமரின் முன்னிலையிலேயே நிராகரித்து ள்ளனர். இதனை இந்த சந்திப்புக்குப் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலும் உறுதிப்படுத்தினர்.
 
அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் தமக்கு நம்பிக்கை வரவேண்டும் என்றால் அதற்கு முன் நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் காணாமல்போனோரின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 
இதன்போது குறுக்கீடு செய்த  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அதிகாரம்கூட தனக்கு இல்லை என்று கூறி, மக்களின் கோரிக்கையை மறைமுகமாக நிராகரித்துவிட்டதாக சட்டத்தரணி டொமினிக் தெரிவித்தார். 
 
தமது கோரிக்கைகள் தொடர்பில்  அரசாங்கம் தொடர்ந்தும் இவ்வாறான தீர்மானத்தில் இருந்தால் போராட்டங்களை தொட
ர்வோம் என்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இதேவேளை அரசாங்கத்தினால் அமைக்கத்திட்டமிடப்பட்டுள்ள காணாமல்போனோர் அலுவலகத்திற்கும் கடும் எதிர்ப்பை வெளியிட்ட காணாமல்போனோரின் உறவினர்கள் சர்வதேச விசாரணையே தங்களுக்கு இருக்கின்ற ஒரேயொரு அரண் என்றும்  கூறினர். 
 
இதனிடையே கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட சிலரது பெற்றோரும், காணாமல் போன ஊடக வியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் பாரியார் சந்தியா எக்னலிகொடவும் இன்று முற்பகல் பிரதமரை சந்திக்க அலரி மாளிகையில் காத்திருந்த போதிலும், பிரதமரை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய சம்பவமும் இடம்பெற்றது.
 

http://www.onlineuthayan.com/news/23681

  • தொடங்கியவர்

காணாமற்போனோரின் உறவினர்கள் சிலர் பிரதமரை சந்தித்தனர்


காணாமற்போனோரின் உறவினர்கள் சிலர் பிரதமரை சந்தித்தனர்
 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் காணாமற்போனோரின் உறவினர்கள் சிலருக்கும் இடையில் அலரி மாளிகையில் இன்று காலை சந்திப்பொன்று இடம்பெற்றது.

காணாமற்போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி வவுனியாவில் கடந்த மாதம் 23 ஆம் திகதி, சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

நான்கு நாட்களின் பின்னர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவுடன் கடந்த மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

ருவன் விஜேவர்தன அங்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய, இன்று இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையிலான ஊடக சந்திப்பொன்றை, காணாமற்போனோரின் உறவினர்கள் இன்று மாலை ஏற்பாடு செய்திருந்தனர்.

 

http://newsfirst.lk/tamil/2017/02/காணாமற்போனோரின்-உறவினர-4/

  • தொடங்கியவர்

தமிழ் எம்.பி.க்களை வெளி­யேற்றிய பின்னரே அமைச்சர்களுடன் பேச்­சு­

P9-f9c2b2efc9ca61f2eb0b6d4a87e4edf14550f224.jpg

 

மக­ஜரும் கைய­ளிக்­கப்­ப­ட­வில்லை; பேச்சுவார்த்தையும் தோல்வி

(க.கம­ல­நாதன்)

அலரிமாளி­கையில் நேற்று அமைச்சர்கள் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகி­யோரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­திய காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் சர்­வ­தேச விசா­ரணை ஊடா­கவே தமது பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண முடியும் என்­ப­தனை வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.   இந்த பேச்­சு­வார்த்­தையில் நீதி அமைச்சர் விஜே­தாஸ ராஜ­பக் ஷ, சட்டம் ஒழுங்கு மற்றும் தென்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சர் சாகல ரத்­நா­யக்க, சிறை­ச்சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன், பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர்  ருவன் விஜே­வர்­தன உள்­ளிட்டோர் கலந்­துக்­கொண்­டுள்­ளனர். 

மேலும் தமிழர் தரப்­புக்கள் சார்பில் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்தின், சார்ல்ஸ் உள்­ளிட்­ட­வர்கள் இந்த சந்­திப்பில் பங்­கேற்­றுள்­ளனர். ஆனால் இந்த சந்­திப்பு இடம்­பெ­று­கின்ற போது தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அவ்­வி­டத்தில் இருக்க கூடாது என காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் தெரி­விக்­கவே அதன் பிர­காரம் தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சக­லரும் அவ்­வி­டத்­தி­லி­ருந்து வெளியில் சென்ற பின்பு பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­றுள்­ளது. 

பாது­காப்பு துறைகள் சார்ந்த அமைச்­சர்­க­ளுடன் இடம்­பெற்ற இந்த பேச்­சு­வார்த்­தையின் போது தமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கிட்டும் என்ற நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­திக்­கொள்ள அர­சியல் கைதி­களை விடு­வித்து முன்­னோடி செயற்­பாடு ஒன்­றி­ணையும் காண்­பிக்க வேண்டும் என்று பாதிக்­கப்­பட்­ட­வர்கள் கோரி­யுள்­ளனர்.

ஆனால் அதனை தீர்­மா­னிப்­ப­தற்­கான அதி­கா­ரங்கள் தமக்கு இல்லை என அமைச்­சர்கள் இவர்­க­ளிடம் கூறி­யுள்­ளனர். அதனால் மக்கள் அதன் பின்னர் பேச்­சு­வார்த்­தை­களை நீடிப்­பதில் அர்த்­த­மில்லை என்ற நிலை­பாட்­டுடன் பேச்­சு­வார்த்­தை­யினை நிறைவு செய்து கொண்டு வெளியில் வந்­துள்­ளனர். மேலும் பேச்­சு­வார்த்­தையின் போது சர்­வ­தேச நீதி­மன்றம் வரு­வதால் மாத்­தி­ரமே தமக்கு தீர்வு கிட்டும் என்ற விட­யத்­தையே மக்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.  

இந்­நி­லையில் பேச்­சு­வார்த்­தையில் திருப்­தி­ய­டை­யாத மக்கள் அமைச்­சர்­க­ளி­டத்தில் கைய­ளிக்­கப்­ப­ட­வி­ருந்த மக­ஜ­ரையும் கைய­ளிக்­க­வில்லை. அத்­துடன் முன்பு தீர்­மா­னித்­தி­ருந்­தது போன்று கொழும்பில் அமைந்­துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் நேற்று கையளிக்கவிருந்த மகஜரையும் கையளிக்கவில்லை. 30 மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் அவர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகளும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்தனர்.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-10#page-1

 

 

 

நாமே புறக்கணித்தோம்

03-ac7fa55658752ea93633073882ab520ad41a7bb7.jpg

 

(ஆர்.யசி )

காணாமல்போனோரின் உறவினர்களுக்கும் அமைச்சர்களுக்குமிடையில் நேற்று இடம்பெற்ற சந்­திப்பை நாமே புறக்கணித்தோம் என்று தமிழ்த் தேசியக்கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எ.சுமந்­திரன் தெரி­வித்துள்ளார்.  

இறுதி யுத்­தத்தில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பொது­மக்கள் காணா­மல்­போ­யுள்ள நிலை­யிலும் பலர் அர­சியல் கைதி­க­ளாக தொடர்ந்து தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள நிலை­யிலும் அவர்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தாது ஒரு­சி­லரின் தூண்­டு­தலின் பெயரில் குறிப்­பிட்ட சில காண­மால்­போ­னோரின் உறவினர்கள் மாத்­திரம் அமைச்சர்களை சந்­திப்­பது ஏற்­று­கொள்ள முடி­யாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய அமைச்சர்களுக்கும் காணாமல்போனோரின் உறவினர்களுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற சந்­திப்பு தொடர்பில் விடுத்­துள்ள அறிக்­கையில் இதனை அவர் குறிப்­பிட்­டுள்ளார். அதில் மேலும் குறிப்­பிட்­டுள்­ள­தா­னது,

காணாமல் போனோர் மற்றும் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்­துள்ள அர­சியல் கைதிகள் தொடர்­பி­லான சந்­திப்­பொன்று இன்­றைய தினம் ( நேற்று ) அல­ரி­மா­ளி­கையில் நடை­பெற்­றது. காணாமல் போனோரின் உற­வி­னர்­க­ளு­ட­னான இந்த சந்­திப்பில் அரச தரப்பின் சார்பில் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­தன, சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக, நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷ, மீள்­கு­டி­யேற்ற அமைச்சர் சுவா­மி­நாதன் ஆகியோர் கலந்­து­கொண்­ட­துடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் எமக்கும் அழைப்பு விடுக்­கப்­ப­டி­ருந்­தது. இந்த சந்­திப்பின் போது இரத்­தி­னவேல் தலை­மையில் 15பேர் கொண்ட குழு­வினர் கலந்­து­கொள்ள தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

அதேபோன்று காணா­மல்­போனோர் மற்றும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் கைதி­களில் பிர­தி­நி­திகள் என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இந்த சந்­திப்பில் கலந்­து­கொள்ள வேண்டும் என தீர்­மா­னிக்­கப்­பட்­டது. ஆனால் இந்த சந்­திப்பில் அரச தரப்­புடன் பேச்­சு­வா­ரத்­தை­களை முன்­னெ­டுக்கும் போது காணாமல் போனோர் அனை­வரின் சார்­பிலும் சகல தரப்­பி­ன­ரு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்த வேண்டும். தவிர ஒரு­சி­லரின் தூண்­டு­தலின் பெயரில் குறிப்­பிட்ட சில காண­மால்­போ­னோரின் பிர­தி­நி­தி­களை மாத்­திரம் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

பல்­லா­யி­ரக்­க­ணக்­கான காணா­மல்­போனோர் பற்­றியும் பேச வேண்டி இருப்­ப­தனால் தனிப்­பட்­ட­வர்­களின் பிரச்­சி­னை­களை பேசி அவர்­களின் அபி­லா­சை­களை நிறை­வேற்­று­வ­தற்­கான கள­மாக இந்த சந்­திப்­பு­களை பயன்­ப­டுத்த முடி­யாது. ஒரு சிலரின் அர­சியல் சுய தேவை­க­ளையும், அர­சியல் நலன்­க­ளையும் பூர்த்தி செய்­வ­தற்கு இந்த சந்­திப்­பினை கள­மாக பயன்­ப­டுத்த முயற்­சித்தால் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான காணாமல் போன­வர்­களின் பிரச்­சி­னையை பேசமுடியாது போய்விடும். இந்த சந்திப்பிலும் அவ்வாறான நிலைமைகள் உள்ளது. ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் இருந்து வெளியேற தீர்மானித்து சந்திப்பை விட்டு வெளியேறினர் .

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-10#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.