Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இலங்கை காளைகள்!

Featured Replies

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இலங்கை காளைகள்!

Alanganallur Jallikattu

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான் வருகை தந்துள்ளார். இதில் செந்தில் தொண்டைமானின் மூன்று காளைகள் பங்கு பெறுகின்றன. காலை முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பார்வையிட்டு வருகின்றனர். தற்போது முதலாம் சுற்று முடிந்து இரண்டாம் சுற்று தொடங்கியுள்ளது. 

http://www.vikatan.com/news/tamilnadu/80331-srilankan-minister-visits-alanganallur-jallikattu.art

 

 

 

’ஜல்லிக்கட்டு பார்க்க வந்தேன்; அதிமுக மல்லுக்கட்டு பற்றி பேச விருப்பமில்லை’ : மு.க.ஸ்டாலின்

Stalin

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் மு.க.ஸ்டாலின் அருகருகே அமர்ந்து ஜல்லிக்கட்டை ரசித்து வருகின்றனர்.

மற்றொரு புறம் நடிகர்கள் லாரன்ஸ், ஆரி உள்ளிட்டோர் இளைஞர்களுடன் ஜல்லிக்கட்டுப் போட்டியை ரசித்து வருகின்றனர்.
.
ஜல்லிக்கட்டுக்கு வருகை தந்த மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் அ.தி.மு.க உட்கட்சி விவகாரம் தொடர்பாகக் கேள்வி எழுப்பிய போது, ’நான் அரசியல்வாதியாக இங்கு வரவில்லை. ஒரு பார்வையாளனாக வந்துள்ளேன். இந்தப்போட்டியை எந்தக் கட்சியும் நடத்தவில்லை. இது தமிழர்களின் பண்பாட்டு விளையாட்டு. அ.தி.மு.க.வில் நடக்கும் மல்லுக்கட்டு பற்றி பேச விரும்பவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/80335-mkstalin-visits-alanganallur-jallikattu.art

  • தொடங்கியவர்

உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது

Alanganallur Jallikattu

உலகப் புகழ் பெற்ற மதுரை  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது. ஆட்சியர் வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள்,  ’நாட்டு மாடுகளைப் பாதுகாப்போம், துன்புறுத்தமாட்டோம்’, என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

ஜல்லிக்கட்டில் 1,650 காளையர்கள் மற்றும் 950 காளைகள் பங்கேற்பு. ஜல்லிக்கட்டுப் போட்டியை நடிகர் லாரன்ஸ் மற்றும் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்திய இளைஞர்கள் நேரில் கண்டுகளித்து வருகின்றனர்.  மேலும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட உள்ளார். பாதுகாப்புப் பணியில் 2,500 போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/80329-alanganallur-jallikattu-today.art

  • தொடங்கியவர்

காளைகளை அடக்கி சாதித்த பாலமேடு ஜல்லிக்கட்டு ஹீரோக்கள்: 2 பேர் புல்லட் மோட்டார் சைக்கிள்களை வென்றனர்

 

 
 
 
karuppanan_3130697f.jpg
 
 
 

பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய வீரருக்கும், யாராலும் அடக்க முடியாத காளையை அடக்கி தனது வீரத்தை நிரூபித்த வீரருக்கும் புல்லட் மோட்டார் சைக்கிள்கள் பரிசாக வழங்கப்பட்டன.

மதுரை மாவட்டம் பாலமேட்டில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அவிழ்த்துவிடப்பட்ட 354 காளைகளை 1,465 வீரர்கள் அடக்கினர். நேற்றைய ஜல்லிக்கட்டில் பல காளைகளை யாராலும் அடக்க முடியாததால், பெரும்பாலான பரிசுகளை காளைகளே தட்டிச்சென்றன. இதுவரை பிடிபடாத காளைகள், பிரபலமான ஊர்களிலிருந்து வந்த காளைகள், பாரம்பரிய குடும்பத்தினர் வளர்த்துவரும் காளைகளை குறிவைத்து பிடிப்பதில் பல மாடுபிடி வீரர்கள் ஆர்வம் காட்டினர். சிறப்பு பரிசாக 2 புல்லட் மோட்டார் சைக்கிள் வாகனங்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவை அறிவிக் கப்பட்டன.

மேலூர் அரிட்டா பட்டியைச் சேர்ந்த மாடுபிடிவீரர் கருப்பணன், பிடிபடாத காளைகள் என பெயர் பெற்ற சில காளைகள் உட்பட 9 காளைகளை அடக்கினார். மிக லாவகமாக, காளைகளை அதன் போக்கிலேயே விட்டு மடக்கி பிடித்த இவரது பாணியை பார்வையாளர்கள் மிகவும் ரசித்தனர். கருப்பணன் சிறந்த மாடுபிடி வீரராக அறிவிக்கப்பட்டதுடன், இவருக்கு சிறப்பு பரிசான புல்லட் மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது.

இதேபோல், வாடிவாசலில் இருந்து வெளியேறிய காளை ஒன்றை எந்த மாடுபிடி வீரரும் தொட முடியவில்லை. மேலும் அந்த காளை 2 நிமிடத்துக்கும் மேல் வாடிவாசல் அருகிலேயே நின்று விளையாடியது. இந்த காளையை நெருங்க முடியாமல் வீரர்கள் தவித்தனர். அப்போது, ஒலிபெருக்கியில் பேசிய விழாக்குழு பிரமுகர், ‘இதுதாண்டா சூப்பர் காளை. இந்த காளையை அடக்கி வீரத்தை காட்டும் வீரருக்கு சிறப்பு பரிசான மற்றொரு புல்லட் மோட்டார் சைக்கிள் வழங்கப்படும்’ என அறிவித்தார். இந்த அறிவிப்பால் உற்சாகமடைந்த சில வீரர்கள் காளையை நெருங்க முயன்றும் தோற்றனர். அப்போது, விராட்டிபத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் அன்புசிவா திடீரென காளையின் திமிலை பிடித்தார். அவரை தூக்கி வீசி பந்தாட காளை எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.

முடிவில், அன்புசிவா புல்லட் மோட்டார் சைக்கிளை வென்று, பார்வை யாளர்களின் ஏகோபித்த பாராட்டுகளை பெற்றார். 7 காளைகளை அடக்கிய மாடுபிடிவீரர் சிவக்குமார் மோட்டார் சைக்கிளை வென்றார். இவர்களுடன் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு பெற்ற செந்தில், பிரபாகரன், சிலம்பரசன் ஆகியோருக்கும் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும் என ஆட்சியர் கொ.வீரராகவராவ் அறிவித்தார்.

இதேபோல், தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பேரவை தலைவர் பி.ராஜசேகர், சிக்கந்தர்சாவடி அன்பு, பூதகுடி அய்யாத்துரை, கருப்பாயூரணி செல்வம், உத்தங்குடி கருப்பசாமி ஆகியோர் பிடிபடாத மற்றும் சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கான பரிசுகளை வென்றனர்.

கடந்த 2014-ல் பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் 452 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. தற்போது 354 காளைகள் பங்கேற்றாலும், வீரர்களுக்கு போதிய அவகாசம் அளித்து நிதானமாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதாகவும் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/காளைகளை-அடக்கி-சாதித்த-பாலமேடு-ஜல்லிக்கட்டு-ஹீரோக்கள்-2-பேர்-புல்லட்-மோட்டார்-சைக்கிள்களை-வென்றனர்/article9533510.ece?homepage=true

  • தொடங்கியவர்

அ.தி.மு.க-வினர் மறைய... ஸ்டாலின் ரசிக்க... லாரன்ஸ் வெளியேற... என்ன நடந்தது அலங்காநல்லூரில்?

ஜல்லிக்கட்டு

மிழகமே மிக ஆவலுடன் எதிர்பார்த்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடந்து முடிந்துள்ளது. அடுத்து யார் முதல்வர் என அ.தி.மு.க.வில் பதவிச்சண்டை பரபரத்து கொண்டிருந்த நிலையிலும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று மிகவும் எழுச்சியுடனும், உணர்ச்சிகரமாகவும் நடந்துள்ளது.

அ.தி.மு.க.வில் நிலவும் அதிகார மோதல் காரணமாக அமைச்சர்கள் துவங்கி அ.தி.மு.க. நிர்வாகிகள் யாரும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளவில்லை. இதனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் வருகையே பிரதானமாக இருந்தது. காலை 9 மணிக்கு வந்த ஸ்டாலின், ஜல்லிக்கட்டு போட்டிகளை ரசித்து பார்த்தார். 

மு.க.ஸ்டாலின்

அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், "நான் அரசியல்வாதியாக இங்கு வரவில்லை. ஒரு பார்வையாளனாக வந்துள்ளேன். இந்த ஜல்லிக்கட்டை தி.மு.க.வோ, அ.தி.மு.கவோ நடத்தவில்லை. தமிழர்களின் பண்பாட்டு விளையாட்டு. நான் ஜல்லிக்கட்டை ரசிக்க வந்திருக்கிறேன். அ.தி.மு.க.வில் நடக்கும் மல்லுக்கட்டு பற்றி பேச விரும்பவில்லை.," என்றார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண... போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு தனி கேலரி அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அது போதுமானதாக இல்லை. மாற்று ஏற்பாடுகள் செய்து தரப்படவில்லை.  இதனால் மாணவர்கள் பலர் வெளியேறினர்.  

ஜல்லிக்கட்டு

அமைச்சர்கள் யாரும் வராததால், மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், ஐ.ஜி. முருகன் ஆகியோர் அலங்காநல்லூர் காளியம்மன் கோயில் சிறப்பு பூஜையில் பங்கேற்று, வாடிவாசலை திறந்து வைத்தனர். அதன் பின்னர் ஐந்து ஊர்களின் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதன் பின்னர் அனைத்து ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மொத்தம் 950 காளைகள் பதிவு செய்யப்பட்டன. ஆயிரத்து ஐநூறு வீரர்கள் மாடுபிடிக்க வந்தனர். சிறந்த காளைகளுக்கும், மாடு பிடிப்போருக்கும் இந்த முறை கார், பைக், ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின்கள் என பரிசுகள் குவிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டிகளை காண காலை ஏழு மணிக்கே வந்தார் நடிகர் ராகவ லாரன்ஸ். அவருடன்  மெரினா போராட்ட இளைஞர்கள் 100 பேர் வந்திருந்தனர். ராகவா லாரன்ஸை அனுமதித்த போலீஸார், அவர்களுடன் வந்த இளைஞர்களை அனுமதிக்க மறுத்தனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பேசிய ராகவா லாரன்ஸ், பல முறை கேட்டும் இளைஞர்களை அனுமதிக்க  அவர் மறுத்தார். இதனால் அவர் வெளியேறினார்.

அமீர்

இயக்குநர்கள் அமீர், கரு.பழனியப்பன் ஆகியோரும் ஜல்லிக்கட்டு காண அலங்காநல்லூர் வந்திருந்தனர். அவர்களை உள்ளே விடாமல் கேலரிக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்தார்கள். சிறிது நேரத்துக்கு பிறகு இருவரும் ப்ரஸ் கேலரிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள், திரைத்துறையினருக்கு வி.ஐ.பி. கேலரியில் அனுமதி மறுக்கப்பட்ட அதேநேரம்  காவல்துறை அதிகாரிகளின் குடும்பமும், அரசு அதிகாரிகளின் குடும்பமும் வி.ஐ.பி. பார்வையாளர் கேலரியில் அமர்ந்திருக்கிறார்கள். அலங்காநல்லூர் போராட்டத்தின் போது மாணவர்களிடம்  மிருகத்தனமாக நடந்துகொண்ட இன்ஸ்பெக்டர் அன்னராஜ் குடும்பத்துடன் வந்து வி.ஐ.பி. கேலரியில் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான் ஆகியோரும் ஜல்லிக்கட்டை காண வருகை தந்தனர். இதில் செந்தில் தொண்டைமானின் மூன்று காளைகள் பங்கு பெற்றது. பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது, " பாரதப் பிரதமர் மோடியின் முயற்சியாலும் உண்மையான மாணவர்களின் போராட்டத்தாலும் இந்த ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இங்கு ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்படுகிறது. சென்னையில் அவிழ்த்து விடப்படும் காளைகள் எந்தபக்கம் செல்லும் என்று சொல்ல முடியாது" என்று பஞ்ச் வைத்தார்.

http://www.vikatan.com/news/tamilnadu/80380-admk-members-absent-mkstalin-present-what-happened-in-alanganallur.html

  • தொடங்கியவர்

உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களத்தில் குதித்த செந்தில் தொண்டமானின் காளைகள்

உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று கோலாகலமாக நடைப்பெற்றது.

alanganallur_09539.jpg

இந்த போட்டியில் 950 காளைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதோடு, 1650 இளைஞர்கள், மாடுபிடிவீரர்கள் கலந்து கொண்டனர். மேலும் பாதுகாப்புப் பணியில் 2,500 பொலிஸ் அதிகாரிகள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Untitled-3.jpg

குறித்த போட்டியில் ஊவா மாகாண தோட்ட உட்கட்டமைப்பு, வீதி  அபிவிருத்தி அமைச்சர் செந்தில் தொண்டமானின் 3 காளைகள் பங்கேற்றியமை குறிப்பிடத்தக்கது.

16603129_731511650343820_905038783827718

http://www.virakesari.lk/article/16491

  • தொடங்கியவர்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காரை வென்ற தொண்டமானின் காளை!

Published on 2017-02-11 10:35:06

 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்குப்பற்றிய ஊவா மாகாணசபை அமைச்சர் செந்தில் தொண்டமானின் காளை, கார் ஒன்றை பரிசாக வென்றுள்ளது.

1216106654jallikattu.jpg

இந்தியாவின் அலங்காநல்லூர் வாடிவாசலில் இடம் பெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டியில், ஊவா மாகாணசபை அமைச்சர் செந்தில் தொண்டமானின் காளையும் பங்குப்பற்றி, பெறுமதிமிக்க கார் ஒன்றை பரிசாக வென்றுள்ளது.

மேலும் இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக தடைபட்டிருந்த ஜல்லிக்கட்டானது, பெரும் போராட்டத்திற்கு மத்தியில், அரசினால் அங்கிககரிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகம் முழுவதிலுமிருந்து, சுமார் 980 காளைகளும், 1487 காளைபிடி வீரர்களும் பங்குபற்றியுள்ளனர். அதில் 47 பேர் வரையில் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.