Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூவத்தூர் ரிசார்ட்டில் ரவுடிகள் அடித்துத் துன்புறுத்துகிறார்கள் - துண்டுச் சீட்டால் பரபரப்பு

Featured Replies

கூவத்தூர் ரிசார்ட்டில் ரவுடிகள் அடித்துத் துன்புறுத்துகிறார்கள் - துண்டுச் சீட்டால் பரபரப்பு

 

கூவத்தூர் ரிசார்ட்டில் ரவுடிகள் அடித்துத் துன்புறுத்துவதாக கூறி வந்துள்ள துண்டுச் சீட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

சென்னை: கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள கோல்டன் பே ரிசார்ட்டின் லெட்டர் பேட் அல்லது துண்டுச் சீட்டில் எங்களை ரவுடிகள் அடித்துத் துன்புறுத்துகிறார்கள். காப்பாற்றுங்கள் என்று கூறி வந்துள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை எழுதியது யார் என்பது தெரியவில்லை.

 

எம்.எல்.ஏக்கள்தான் தற்போது அங்கு வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பதால் இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது உண்மையா என்றும் தெரியவில்லை. அதேசமயம், கோல்டன் பே ரிசார்ட் பேப்பரில் எழுதி வந்துள்ளதால் இதைப் புறக்கணிக்கவும் முடியவில்லை. பிப்ரவரி 14ம் தேதி எழுதப்பட்டுள்ள அந்த துண்டுச் சீட்டில் உள்ள தகவல் இதுதான்:

An SOS from Kuvathur creats tension


மரியாதைக்குரிய தமிழக ஆளுநர் ஐயா அவர்களே, நாங்கள் எம்.எல்.ஏக்கள் அனைவரும் இங்கு கூவத்தூரில் ரவுடிகளால் மிகவும் கொடுமைப்படுத்தப்படுகிறோம். டிவி செல், பேப்பர் என எதுவுமே கிடையாது.

ரவுடிகள் அடிக்கடி அடித்துத் துன்புறுத்துகின்றனர். நேற்று ஒரு எம்.எல்.ஏ. நண்பரை அடித்ததில் வயிற்று வலி, நெஞ்சு வலி ஏற்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளார். எனவே ரவுடிகளிடமிருந்து எங்களை ஆளுநர் மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/an-sos-from-kuvathur-creats-tension-274139.html

Edited by நவீனன்

கூவத்தூர் ரெசார்ட்டில் பரபரப்பு: 3 எம்.எல்.ஏ.க்கள் தப்பியதில் அமைச்சர் மாட்டினார்
 
கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களில் அதிருப்தி எம்எல்ஏக்களும் உள்ளனர் என்று தப்பி வந்த மாபா பாண்டியராஜனும், மதுரை தெற்கு தொகுதி சரவணனும் தெரிவித்திருந்தனர். 
 
அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை விடுவித்தால் எனது பலம் கூடும் என்று பன்னீர்செல்வம் பத்திரிகை வாயிலாக தெரிவித்திருந்தார். 
 
இந்த நிலையில் கூவத்தூரில் உள்ள எம்எல்ஏக்கள் அனைவரும் தங்களுக்கு ஆதரவு என்றும், அவர்கள் கையெழுத்திட்ட கடிதம் உள்ளது என்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் எடப்பாடி பழனிச்சாமி. 
 
இந்த நிலையில் இன்று காலை 3 எம்எல்ஏக்கள் கூவத்தூரில் ரெசார்ட்டின் பின் பக்கம் வழியாக தப்பியுள்ளனர். இதில் ஒருவரை மன்னார்குடி சபாரி டிரஸ் ரவுடிகள் பிடித்துள்ளனர். பிடிபட்டவர் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் என தெரிய வந்தது. தப்பிய எம்எல்ஏக்கள் இரண்டு பேர் யார் என தெரியவில்லை. 
 
நேற்று சசிகலா கூவத்தூரில் இருந்து புறப்பட்டவுடன் போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. மீண்டும் சபாரி டிரஸ் ரவுடிகள் குவிக்கப்பட்டனர். 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=184455

  • தொடங்கியவர்

சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது ஆள்கடத்தல் வழக்குப்பதிவு!

Sasikala


அ.தி.மு.க எம்.எல்.ஏ சரவணன் கொடுத்த புகாரின் பேரில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் அ.தி.மு.க சட்டமன்ற தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது ஆள்கடத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் கூவத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் 130 பேரை காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டனர். எட்டாவது நாளாக எம்எல்ஏக்கள் ரிசார்ட்டில் உள்ளனர்.

முன்னதாக, மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் அங்கிருந்து தப்பி, முதல்வர் பன்னீர்செல்வம் இல்லத்துக்கு வந்து ஆதரவு தெரிவித்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய சரவணன், "என்னை சசிகலா அடைத்து வைத்திருந்தார். மாறுவேடத்தில் அங்கிருந்து தப்பி வந்தேன்" என்று கூறினார்.

இதனிடையே, அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா, அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தன்னை கடத்தி வைத்திருந்ததாக எம்.எல்.ஏ சரவணன், கூவத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சசிகலா மற்றும் அதிமுக சட்டமன்றக் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது ஆள்கடத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/80884-koovathur-police-filed-kidnapping-case-against-sasikala-and-edapadi-palanisamy.html

  • தொடங்கியவர்
கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு

 

 

 
Tamil_News_large_1711311_318_219.jpg
 

 

 

சென்னை: அ.தி.மு.க.,வின் சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா உள்ளிட்ட சிலர் மீது, எம்.எல்.ஏ., சரவணன் கொடுத்த புகாரின் பேரின், இந்திய தண்டனை சட்டமான ஐ.பி.சி.,யின் கடுமையான பிரிவுகளின் கீழ், கூவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

 

நடந்தது என்ன?


கூவத்தூர் சொகுசு விடுதியில் மற்ற அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுடன் அடைத்து வைக்கப்பட்டிருந்த மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சரவணன், இரண்டு நாட்களுக்கு முன் அங்கிருந்து தப்பி, முதல்வர் பன்னீர்செல்வம் வீட்டுக்கு சென்று அவரது அணிக்கு ஆதரவு தெரிவித்தார். தன்னை சட்டவிரோதமாக அடைத்து வைத்து இருந்ததாகவும் அவர் புகார் கூறினார். இதை தொடர்ந்து தமிழக டி.ஜி.பி.,யிடம் தன்னை கடத்தி சென்று சட்டவிரோதமாக அடைத்து வைத்து இருந்ததாக, அவர் புகார் அளித்தார். இந்த புகார் கூவத்தூர் போலீஸ் நிலையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா மற்றும் அடையாளம் தெரியும் சிலர் மீது, ஐ.பி.சி., 342, 343, 365, 353, 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



ஐ.பி.சி., 342: யாரையாவது சட்டவிரோதமாக அடைத்து வைத்து இருக்கும் நபருக்கு, ஒரு ஆண்டு வரை சாதாரண சிறை தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டு சேர்த்து தண்டனை விதிக்கப்படும். இது, ஜாமினில் வெளியே விடும் பிரிவு.



ஐ.பி.சி., 343: யாரையாவது சட்டவிரோதமாக மூன்று நாட்கள் அல்லது மூன்று நாட்களுக்கு மேல் அடைத்து வைத்து இருக்கும் நபருக்கு, இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்கப்படும். இது, ஜாமினில் வெளியே விடும் பிரிவு.



ஐ.பி.சி.,365: யாரையாவது சட்டவிரோதமாக கடத்தி, ரகசியமாக அடைத்து வைத்திருக்கும் நபருக்கு, ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். இது, ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவு.



ஐ.பி.சி., 353: அரசு ஊழியர் ஒருவரை தாக்கி அல்லது கிரிமினல் ஆட்களை பயன்படுத்தி, அரசு ஊழியர் தன் கடமையை செய்ய தடுப்பவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இது, ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவு.



ஐ.பி.சி., 560(1): கொலை மிரட்டல் விடுக்கும் நபருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டு சேர்த்து விதிக்கப்படும். இது, ஜாமினில் வெளியே வர கூடிய பிரிவு.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1711311

  • தொடங்கியவர்

ரிசார்ட்டில் எம்.எல்.ஏ.க்களிடம் போலீஸ் விசாரணை: அதிமுகவினர் வாக்குவாதத்தால் நுழைந்தது அதிரடிப்படை

Dinakaran

ரிசார்ட்டில் எம்.எல்.ஏ.க்களிடம் போலீஸ் விசாரணை: அதிமுகவினர் வாக்குவாதத்தால் நுழைந்தது அதிரடிப்படை

எம்எல்ஏ சரவணின் கடத்தல் புகாரின் பேரில் கூவத்தூர் ரிசார்ட்டில் உள்ள அதிமுக எம்எல்ஏக்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, காவல்துறையினருடன் அதிமுக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.

Uvadur_15433.jpg

காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் 120க்கும் மேற்பட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த ரிசார்ட்டில் இருந்த மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன், அங்கிருந்து மாறுவேடத்தில் தப்பிவந்தார். இதையடுத்து, முதல்வர் பன்னீர்செல்வத்தை சரவணன் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தன்னை கடத்தியதாக கூவத்தூர் காவல்நிலையத்தில் சரவணன் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், ஆள்கடத்தல், கொலை மிரட்டல், சிறைப்பிடித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

Uvadur_1_15025.jpg

இதையடுத்து, ஐஜி செந்தாமரைக்கண்ணன், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. முத்தரசி, கூவத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் விக்டர் ஆகியோர் இன்று ரிசார்ட்டிற்கு சென்றனர். அங்கு ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களிடம் அவர்கள் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது, காவல்துறையினருடன், அ.தி.மு.க நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், ரிசார்ட்டிற்குள் அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர்.  அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ரிசார்ட்டுக்கு சென்றுள்ளார். ரிசார்ட்டில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் தவிர மற்றவர்களை காவல்துறையினர் வெளியேற்றினர். இதனால் ரிசார்ட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Uvadur_1a_15202.jpg

போலீஸ் விசாரணை குறித்து ஆண்டிப்பட்டு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறுகையில், சட்டமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். பன்னீர்செல்வம் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார். விசாரணையின்போது காவல்துறையினர் மிரட்டுகின்றனர்.

ராஜன் செல்லப்பா கூறுகையில், எம்எல்ஏக்கள் அனைவரும் சுதந்திரமாக இருக்கிறோம். அறையில் அடைத்து வைத்திருக்கிறோம் என்று கூறுவது பொய்யான தகவல் என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/80903-argument-raised-between-admk-mlas-and-police-at-koovathur-resort.html

  • தொடங்கியவர்

8 முறை மன்னிப்பு கேட்ட செங்கோட்டையன்! - நேற்று ரிசார்ட்டில் நடந்தது இதுதான்! #OPSVsSasikala

செங்கோட்டையன் பேச்சு வார்த்தையில்...

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்குத் தண்டனை கிடைத்துவிட்டது. பன்னீர்செல்வம் தரப்புக்கும் மனநிம்மதி கிடைத்துவிட்டது. இது, இன்றையச் செய்தி. ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா தரப்புக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்? தற்போது கூவத்தூரில் சசிகலா கஸ்டடியில் இருக்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என தமிழ்நாடே பதற்றத்தின் உச்சத்தில் இருந்தது. இது, நேற்றைய காலைச் செய்தி. நேற்று, அதிகாலை முதல் இரவுவரை ரிசார்ட்டில் நடந்தது என்ன? 

குவிக்கப்பட்டிருக்கும் காவலர்கள்

நேற்றைய அதிகாலைப் பொழுது கூவத்தூர் ரிசார்ட் மிகுந்த பரப்பரப்பில் இருந்தது. சசிகலா தரப்பு ஆட்கள் மற்றும் பௌன்சர் பாய்ஸ் ரிசார்ட்டின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அதிகாலை ஐந்து மணிக்கு ரிசார்ட்டின் வெளிப்பகுதியில் இருந்த பார்க்கிங்கில்.... பத்திரிகையாளர்கள் தங்களுடைய கார்களைப் பார்க் செய்தபோது... அங்கிருந்த சசிகலா தரப்பினர், ''மரியாதையாக காரை எடுத்துவிடுங்கள்'' என்று மிரட்டினர். அவர்கள் மறுக்கவே, ''இனி வருவது எங்கள் ஆட்சியே... அதனால், உங்கள் கார்களையும், உங்களையும் என்ன வேண்டுமானாலும் செய்வோம்'' என்று பகிரங்க மிரட்டல் விடுத்தனர். அருகில் இருந்த காவலர்கள், ''ஏன் சார்... இவனுங்க கூட வம்பு பண்றீங்க. எங்களுக்கே மரியாதை தராம கேவலமா பேசுறானுங்க. நீங்க போங்க சார்...'' என்றனர். பின் அந்த இடம் முழுவதும் சசிகலாவின் கைக்கூலிகள் நிறுத்தப்பட்டு, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, பொதுமக்கள் செல்வதற்கே அந்தப் பகுதி தடை செய்யப்பட்டிருந்தது என்பதுதான் உண்மை. நேரம் காலை 9 மணியைத் தாண்டியபோது... சசிகலா தரப்பு அ.தி.மு.க-வினர், ரிசார்ட்டுக்கு வருவதும் போவதமாக இருந்தனர். இதனால் நிலைமை சற்றுப் பதற்றமாக இருந்தது. சசிகலாவுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தால் ரிசார்ட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான பௌன்சர் பாய்ஸாலும், சசிகலா தரப்பு அரசியல்வாதிகளாலும் பெரிய பிரச்னை உருவாகிவிடும் சூழல் இருந்தது. இதனால் போலீஸார் குவிக்கப்பட்டு கூவத்தூர் மெயின் ரோட்டிலிருந்து ரிசார்ட் வரை நிறுத்திவைக்கப்பட்டனர். அரசுப் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களும் கூவத்தூருக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. ரிசார்ட்டில் பதற்றம் அதிகமாக, வெளி ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டிருந்த 12 எம்.எல்.ஏ-க்களும் அவசரஅவசரமாகச் சரியாக 9.40-க்கு வரவழைக்கப்பட்டனர். 10.30 மணிக்கு சசிகலாவுக்கு எதிராக அறிவிப்பு வர... ரிசார்ட்டுக்குள் எம்.எல்.ஏ-க்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு அவர்கள் இரு அணிகளாகத் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஐ.ஜி செந்தாமரைகண்ணன் தலைமையில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டனர். 

குவிக்கப்பட்டிருக்கும் காவலர்கள்

அதன்பின், அங்குள்ள எம்.எல்.ஏ-க்களை சென்னைக்கு அழைத்துச் செல்ல இரண்டு அரசுப் பேருந்துகள் வரவழைக்கப்பட்டன. சரியாக 11.30 மணியளவில் ரிசார்ட்டின் உள்ளே இருந்த வெளியாட்களைப் போலீஸார் அப்புறப்படுத்தினர். சசிகலாவுக்கு எதிராகத் தீர்ப்பு வந்ததால், அங்கிருந்த எம்.எல்.ஏ-க்களுக்குள் ஏற்பட்ட குழப்பத்தைத் தீர்க்க சசிகலா தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகப் பேசிய எம்.எல்.ஏ-க்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு அமைதிப்படுத்தப்பட்டது. பின், கூட்டத்தில்.... ''எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் அனைவரும் செயல்பட வேண்டும்'' என்று சசிகலா அறிவித்தார். இது அங்கிருந்த எம்.எல்.ஏ-க்கள் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், சில எம்.எல்.ஏ-க்கள் ரிசார்ட்டை விட்டுக் காணாமல் போயினர். எம்.எல்.ஏ-க்களை அப்புறப்படுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்றது. ஆனால், ஒளிந்துகொண்ட எம்.எல்.ஏ-க்களை... கடைசிவரை அவர்களால் ரிசார்ட்டில் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் அனைவரும் ரிசார்ட்டைவிட்டு வெளியேறிவிட்டனர் என்று அப்போதுதான் சசிகலா தரப்புக்கே தெரிந்தது. 

சசிகலா மற்றும் தினகரன்

இதனிடையே மாஃபா பாண்டியராஜனும், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் ரிசார்ட்டுக்கு வருவாதாக் தகவல் கிடைக்க... சசிகலா தரப்பினர் கடுங்கோபத்துக்கு ஆளாயினர். இருப்பினும், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ரிசார்ட்டுக்கு வரும் வழியிலேயே, ஏதேனும் அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்காக அவர்களைப் போலீஸார் திருப்பியனுப்பினர். அதன்பின், ரிசார்ட்டில் இருந்த எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்களிடத்தில் சசிகலா பேசினார். அப்போது, பத்திரிகையாளர் ஒருவர் உள்ளே நுழைந்தபோது... சசி தரப்பு ஆதரவாளர் ஒருவர், மைக்கைப் பிடுங்கி அவர் வயிற்றில் பலமாக அடித்துவிட்டார். இதனால், ''தாக்கியவர் கைது செய்யப்படும்வரை... எந்தப் பத்திரிகையாளர்களும் லைவ் ஒளிபரப்பு செய்யமாட்டோம்'' என ரிசார்ட்டின் முன் போராட்டம் நடத்தினர். சுமார் அரை மணி நேரத்துக்கும் மேல் நடந்த இந்தப் போராட்டத்தினால், சசிகலா தரப்பு எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்கள் பதற்றத்துடன் பத்திரிகையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், தாக்கியவர் வராததால் பத்திரிகையாளர்கள் யாரும் அந்த இடத்தைவிட்டு எழுந்திருக்கவில்லை. இதுபற்றிப் புகார் கொடுக்கப்பட்டபோதும் காவல் துறையும் அதைக் கண்டுகொள்ளவில்லை. பின்னர் செங்கோட்டையன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ''பலன் இல்லை'' என்று தெரிந்ததும் எட்டு முறை மன்னிப்பு கேட்டார். ''தெரியாமல் அடித்துவிட்டார்... தயவுசெய்து எங்களுடன் ஒத்துழைப்பு தாருங்கள்'' என்றார். இருப்பினும், ''பத்திரிகையாளரை அடித்தவர் வராமல் யாரும் எழுந்திருக்க மாட்டோம்'' என்றனர். பின், பலத்த பாதுகாப்போடு அந்த நபர் அழைத்துவரப்பட்டார். அவர், ''அவரை, அடித்தது என் தப்புத்தான். இனி, இதுபோல் செய்யமாட்டேன்... என்னை மன்னித்துவிடுங்கள்'' என்றார். அதன்பிறகே, அனைத்துப் பத்திரிகையாளர்களும் எழுந்தனர். பின், சரியாக 9.40 மணிக்கு சசிகலா காரில் போயஸ் கார்டன் நோக்கிப் புறப்பட்டார்.

பத்திரிகையாளரை தாக்கியவர்

அதன்பின் எம்.எல்.ஏ-க்களையும் காவலர்கள் கிளம்பச் சொல்ல... ''ரிசார்ட்டுக்கு நாங்கள்தானே வந்தோம். எங்களுக்குப் போகத் தெரியும்'' என்று பதிலளித்தனர். அதனால் காவல் துறையும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

http://www.vikatan.com/news/tamilnadu/80917-this-is-what-happened-at-golden-bay-resortopsvssasikala.html

  • தொடங்கியவர்

தப்பிய எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் முடக்கம்! கூவத்தூர் ரிசார்ட்டில் என்ன நடக்கிறது? #VikatanExclusive

Uvadur_1aa_15423.jpg

கூவத்தூர் ரிசார்ட்டிலிருந்து சசிகலா தலைமையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் வெளியேறியபோது  இரண்டு எம்.எல்.ஏ.க்கள் தப்பிச் செல்ல முயன்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் நடக்கும் நிகழ்வுகள் மர்மமாக இருப்பதாக பன்னீர்செல்வம் தரப்பு சொல்லி வருகிறது. அந்த மர்மத்தை உடைத்தெறிய பலவகையில் முயற்சிகள் நடக்கின்றன. குறிப்பாக உச்ச நீதிமன்றம், குற்றவாளி என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவை அறிவித்தப்பிறகும் கூவத்தூரில் அவர் தங்கி இருந்தார். இதனால் ரிசார்ட்டுக்குள் போலீஸார் நுழைந்தாலும் அமைதி காத்தனர். வடக்கு மண்டல ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன், காஞ்சிபுரம் எஸ்.பி. முத்தரசி தலைமையிலான போலீஸார், சசிகலா மற்றும் தினகரனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதோடு அமைச்சர்களிடமும், எம்.பி.க்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன்பிறகு சசிகலா, தினகரன், செங்கோட்டையன் உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் ரிசார்ட்டிலிருந்து வெளியேறினர். ஆனால், இன்னும் எம்.எல்.ஏ.க்கள் அங்கே முகாமிட்டுள்ளனர். அவர்களையும் வெளியேற்ற போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 
சசிகலா வெளியேறிய போது இரண்டு எம்.எல்.ஏ.க்கள் தப்பி ஓட முயன்ற சம்பவத்தை நேரில் பார்த்தவர் விவரித்தார்.

Uvadur_15434.jpg

"நீண்ட நேரம் போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு சசிகலா தலைமையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் வெளியேற சம்மதம் தெரிவித்தனர். கூவத்தூரில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதை யாரும் பின்பற்றவில்லை. இன்னும் கூவத்தூர் ரிசார்ட்டில் வெளியாட்கள் தங்கி உள்ளனர். அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.  ரிசார்ட்டிலிருந்து சசிகலா மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகளின் கார்கள் அணிவகுத்து புறப்பட்டன. அப்போது ரிசார்ட் அறையிலிருந்து இரண்டு எம்.எல்.ஏ.க்கள் வேகமாக ஓடிவந்தனர். அவர்கள் சின்னம்மா வாழ்க என கோஷமிட்ட கூட்டத்தில் கலந்தனர். அப்போது மன்னார்குடி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் கண்ணில் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் சிக்கினர். சசிகலா கார் ரிசார்ட்டிலிருந்து வெளியேறியதும் அந்த இரண்டு எம்.எல்.ஏ.க்களை குண்டுக்கட்டாக தூக்கிக் கொண்டு உள்ளே சென்று விட்டது மன்னார்குடியின் செக்யூரிட்டி கும்பல். அவர்களின் பிடியிலிருந்து அந்த இரண்டு எம்.எல்.ஏ.க்கள் தப்ப முடியவில்லை" என்றார்.

இதுகுறித்து சசிகலாவின் ஆதரவாளர்களிடம் கேட்ட போது, "பன்னீர்செல்வம் தரப்பினருக்கு எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையாக இருப்பது ஆரம்பத்திலிருந்தே பிடிக்கவில்லை. இதனால் உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பி வருகின்றனர்.  எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சுயவிருப்பத்தோடுதான் கூவத்தூரில் தங்கி உள்ளனர். 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் வெளியாட்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விட்டனர். போலீஸ் மூலம் எங்களை வெளியேற்ற பன்னீர்செல்வமும், மத்திய அரசும் துரிதமாக செயல்பட்டு வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சின்னம்மா எங்களிடம் தெரிவித்துள்ளார்" என்றனர்.

பன்னீர்செல்வம் தரப்பில் பேசியவர், "போலீஸார் தங்களது கடமையைச் செய்து கொண்டு இருக்கிறார்கள்.  எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சசிகலாவை முழுமனதோடு ஆதரிக்கிறார்கள் என்றால் அவர்களை ஏன் சிறைப்பிடித்து வைத்திருக்க வேண்டும்" என்றனர். 

http://www.vikatan.com/news/tamilnadu/80907-whats-happening-for-admk-mlas-inside-koovathur-resort.html

 

  • தொடங்கியவர்

முட்டல் - மோதல்.... உடைகிறதா சசிகலா அணி?

சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைக் கோரினார். மேலும், ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்த சசிகலாவின் அக்காள் மகன் டி.டி.வி. தினகரன் அதிமுக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தற்போது செங்கோட்டையன்-எடப்பாடி-தினகரன் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது செங்கோட்டையனுக்கு பிடிக்கவில்லையாம். இதனால் அவர் யாருடனும் அதிகம் பேசுவதில்லை, இறுக்கமான முகத்துடனே இருக்கிறார் என்கின்றனர். அதேபோல், டி.டி.வி தினகரனை அதிமுக துணைப் பொதுச்செயலாளராக நியமித்தது எடப்பாடி பழனிச்சாமிக்கு பிடிக்கவில்லை என்கின்றனர்.


collage_20403.jpg

இதன் காரணமாக இவர்கள் மூவருக்கும் இடையே சரியாக பேச்சுவார்த்தை இல்லையாம். இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏக்களும் கூவத்தூர் ரிசார்ட்டில் இருக்க ஆர்வம் காட்டுவதில்லையாம். தற்போது கூவத்தூர் ரிசார்ட்டில் 47 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர் என்று கூறப்படுகிறது. அவர்களும் அங்கிருந்து வெளியேறத்தான் விரும்புகிறார்களாம்.

இந்நிலையில், முதல்வர் பன்னீர் அணியில் சேர்ந்துள்ள மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் சசிகலா மற்றும் எடப்பாடி மீது தொடர்ந்த கடத்தல் புகார், புயலை கிளப்பும் என கூறப்படுகிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/80950-clash-in-sasikala-camp.html

  • தொடங்கியவர்
 
 
 
 
Tamil_News_large_1711475_318_219.jpg
 
கூவத்தூரிலிருந்து தப்பியது எப்படி? : போட்டு உடைக்கிறார் செம்மலை!

 

 

மேட்டூர்: அ.தி.மு.க.,வின் மூத்த நிர்வாகி, அக்கட்சி அமைப்பு செயலர் மற்றும் மேட்டூர், எம்.எல்.ஏ.,வுமான செம்மலை, கூவத்துார் சொகுசு விடுதியில் இருந்து தப்பி, நேற்று முன்தினம் முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து, தன் ஆதரவை தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது: கூவத்துார் சொகுசு விடுதியில், கட்சி மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் தனித்தனி அறையிலும், எம்.எல்.ஏ.,க்கள் தனித்தனி குழுக்களாகவும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு மாவட்ட, எம்.எல்.ஏ.,க்களை கவனிக்க, தனித்தனி குழுவினர் இருந்தனர். அவர்களே, எம்.எல்.ஏ.,க்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தனர். விடுதியில், எம்.எல்.ஏ.,க்களுக்கு விரும்பிய உணவு பரிமாறப்பட்டது. ஒருநாள் இரவு, இன்னிசை கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டுஇருந்தது. நடனம் எதுவும் நடக்கவில்லை. ஜாமர் கருவி பொருத்தப்பட்டதால், எம்.எல்.ஏ.,க்களால் தங்கள் உறவினர்களிடம் கூட பேச முடியவில்லை.செய்தித்தாள் படிக்க வாய்ப்பில்லை. நான், கட்சி மூத்த நிர்வாகி என்பதால், ஓரளவு சுதந்திரம் இருந்தது. என் மொபைலில், காலை நேரத்தில் மட்டும் பேச முடிந்தது. அப்போதுதான், மேட்டூர் தொகுதியைச் சேர்ந்த கட்சி தொண்டர்கள், மக்கள் என்னிடம் தொடர்பு கொண்டு, முதல்வர் பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும்படி கருத்து தெரிவித்தனர். பெரும்பாலான தொண்டர்கள், இதே கருத்தை தெரிவித்ததால், தொகுதி மக்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடிவு செய்தேன். சசிகலா மற்றும் சில நிர்வாகிகளிடம், நேரடியாக தொகுதி மக்கள் கருத்தை கேட்டு வருவதாக கூறிவிட்டு, அங்கிருந்து வெளியேறி, பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு கொடுத்தேன். கூவத்துாரில் தங்கியுள்ள, எம்.எல்.ஏ.,க்கள் பலர், வெளிப்படையாக மட்டும் சசிகலாவை ஆதரிக்கின்றனர். என்னோடு, சில எம்.எல்.ஏ.,க்கள் தொடர்பில் உள்ளனர். அவர்கள், பன்னீர்செல்வத்தை ஆதரிக்க விரும்புகின்றனர். அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பணபலம் இருக்கலாம்; மக்கள் ஆதரவு இல்லை. இதனால், விரைவில், எம்.எல்.ஏக்கள் எங்கள் பக்கம் வருவர். இவ்வாறு அவர் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1711475

  • தொடங்கியவர்

பேசும் படம்: கூவத்தூரில் 'சுதந்திர' எம்.எல்.ஏ.க்கள்

 

 
 
mla4_3133780f.jpg
 
 
 

சசிகலா தலைமையை ஏற்றுப் பெரும்பாலான எம்எல்ஏக்கள் கூவத்தூரிலேயே காத்திருக்கின்றனர். ஆளுநரோ, எத்தனை பேர் எத்தனை முறை சென்று பார்த்தாலும் எந்த முடிவும் அறிவிக்காமல் இருக்கிறார்.

தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதில் இன்னும் தெளிவு ஏற்படாத நிலையில் ஆளுநரை இன்று மீண்டும் சந்திக்கவிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆளுநர் அழைப்பு விடுத்ததன் பேரில் கூவத்தூர் விடுதியிலிருந்து கிளம்பியுள்ளார்.

சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர், விட்டு வசதி துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.எல்.ஏ. தனியரசு ஆகியோர் கூவத்தூர் விடுதியில் நடைபயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

mla3_3133765a.jpg

mla2_3133767a.jpg

mla1_3133768a.jpg

 

http://tamil.thehindu.com/tamilnadu/பேசும்-படம்-கூவத்தூரில்-சுதந்திர-எம்எல்ஏக்கள்/article9546271.ece?homepage=true&theme=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.