Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னிப் பெருநிலப்பரப்பில் கட்டுக்கரைக் குளத்தை அடுத்து நாகபடுவானில் கண்டுபிடிக்கப்பட்ட இன்னொரு புராதன குடியிருப்பு மையம்

Featured Replies

வன்னிப் பெரு­நி­லப்­ப­ரப்பில் கட்­டுக்­கரைக் குளத்தை அடுத்து நாக­ப­டு­வானில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட இன்­னொரு புரா­தன குடி­யி­ருப்பு மையம்

01-7e76407d6b2a127c1f9540550c857182cd0e95ca.jpg

 

நீண்­ட­கா­ல­மாக தொல்­லியல், வர­லாற்று ஆய்­வா­ளர்­களால் அதிகம் கவ­னத்தில் கொள்­ளப்­ப­டாத வன்னிப் பிராந்­தி­யத்­திற்கு தொன்­மை­யான, தொடர்ச்­சி­யான வர­லாறு உண்டு என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வதில் அண்­மைக்­கால­மாக மன்னார் மாவட்­டத்தில் கட்­டுக்­கரைக் குளம் என அழைக்­கப்­படும் பிர­தே­சத்தில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் தொல்­லியல் அகழ்­வாய்­வு­க­ளுக்கு முக்­கிய இட­முண்டு. இங்கு தொடர்ந்தும் அகழ்வுப் பணிகள் மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் நிலையில் பூந­க­ரிப்­ பி­ர­தேச சபையின் நிர்­வா­கத்­திற்கு உட்­பட்ட முழங்­காவில் குமு­ழ­முனை வட்­டா­ரங்­களை அண்­டிய நாக­ப­டு­வானில் தெரி­ய­வந்த தொல்­லியற் சின்­னங்கள் பற்­றிய செய்­தி­களை அப்­பி­ர­தேச கிராம அலு­வ­லகர்;, சமுர்த்தி உத்­தி­யோ­கத்தர், ஊட­க­வி­ய­லாளர் மற்றும் வர­லாற்று ஆர்­வ­லர்கள் எமது தொல்­லியல் இறு­தி­ வ­ருட மாணவன் பானு­சங்­க­ருக்கு தெரி­யப்­படுத்­தினர். அதன் அடிப்­ப­டையில் தொல்­லியல் திணைக்­களப் பிர­திப்­ப­ணிப்­பாளர் மற்றும் பூந­கரிப் பிர­தேச செய­லா­ளரின் அனு­ம­தி­யுடன் தொல்­லி­யல் ­தி­ணைக்­கள பிர­தேச பொறுப்­பாளர் பா. கபிலனின் உத­வி­யுடன் யாழ்ப்­பாணப் பல்­கலைக்­க­ழக தொல்­லியல் பிரிவு ஆசி­ரி­யர்கள், மாண­வர்கள் இணைந்து கடந்த­ வாரம் அவ்­வி­டத்தை அடை­யாளம் கண்டு அங்கு பரீட்ச்­ச­ார்த்தமான ஆய்வு ஒன்றை மேற்­கொண்டு வரு­கின்­றனர். இவ்­விடம் கட்­டுக்­க­ரைக்­கு­ளத்­திற்கு வட­மேற்கே 50 கி.மீற்றர் தொலைவில் நாக­ப­டு­வானில் கானா மேட்டைக் குளம் என அழைக்­கப்­படும் காட்­டுப்­ப­கு­தியில் பாழ­டைந்த குளத்தின் அணைக்­கட்­டுக்கு அருகில் அமைந்­துள்­ளது. இவ்­வி­டத்தில் இருந்த பாரிய மர­மொன்று வேருடன் விழுந்த போது அவற்றின் அடிப்­ப­கு­தியில் புதை­யுண்­டி­ருந்த வர­லாற்றுத் தொன்மை மிக்க பல சின்­னங்கள் வெளிக்­கி­ளம்­பி­யி­ருந்­தன. இச்­சின்­னங்­களை அச்­சத்­து­டனும் ஆச்­ச­ரி­ய­மா­கவும் பார்த்த மக்­களில் ஒரு பிரி­வினர் அவற்றின் வர­லாற்றுப் பெறு­ம­தியை உண­ராமல் அச்­சின்­னங்­களில் பல­வற்றை ஆல­யங்­க­ளுக்கும், தமது வீடு­க­ளுக்கும் எடுத்துச்சென்­றுள்­ளனர். எஞ்­சி­யி­ருந்­த­வற்றை அச்சம் கார­ண­மாக மக்கள் சிதை­வ­டையச் செய்து ஒதுக்­குப்­பு­றங்­களில் வீசி­யுள்­ளனர்.

ஆயினும் எமது ஆய்வின் போது இவ்­வ­கை­யான தொல்­லியற் சின்­னங்கள் அவ்­விடத்தில் பரந்த அளவில் மண்­ணினுள் புதை­யுண்­டி­ருப்­பதை உண­ர­மு­டிந்­தது. அவற்றை உறு­திப்­ப­டுத்தும் நோக்கில் அங்கு தெரிவு செய்­யப்­பட்ட ஒரு இடத்தில் 4 × 3 மீற்றர் நீள, அக­லத்தில் மாதி­ரிக்­குழி அமைத்து அகழ்வு செய்தோம். இந்த அகழ்வின் போது அடை­யாளம் காணப்­பட்ட மூன்று கலா­சார மண் அடுக்­கு­களில் பல்­வேறு கால­கட்­டத்தைச் சேர்ந்த மட்­பாண்­டங்­களைக் கண்­டு­பி­டிக்க முடிந்­தது. அவை வடிவ அமைப்­பிலும், தொழில் நுட்­பத்­தி­ற­னிலும் கட்­டுக்­கரைக் குளப்­பி­ர­தேச அகழ்­வாய்வில் கிடைத்த மட்­பாண்­டங்­களைப் பெரு­ம­ளவு ஒத்­த­தாக உள்­ளன. மூன்­றா­வது கலா­சார மண் அடுக்கில் ஒரு சில மட்­பாண்­டங்­க­ளுடன் பெரு­ம­ளவு சுடுமண் உரு­வங்­களும், கழி­வி­ரும்­பு­களும் (Iron Slakes) கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன.

இக்­க­லாச்­சார மண்­ப­டையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட சுடுமண் உரு­வங்­களும், மட்­பாண்­டங்­களும் இங்கு வாழ்ந்த பண்­டைய கால மக்­களின் சமய நம்­பிக்­கை­களைப் பிரதி­ப­லிப்­ப­தாக உள்­ளன. அச்­சு­டுமண் உரு­வங்­களில் பீடத்தின் மேல் அமர்ந்­தி­ருக்கும் இரு தெய்­வங்­களின் சிலைகள் சிறப்­பாகக் குறிப்­பி­டத்­தக்­கன. இத்­தெய்வச் சிலை­களை ஊர்­வ­ல­மாகத் தூக்கிச்செல்லும் வகையில் அதன் சது­ர­மான பீடத்தின் நான்கு பக்­கங்­க­ளிலும் முக்­கோண வடி­வி­ல­மைந்த சது­ர­மான துவா­ரங்கள் காணப்­படுகின்­றன. பீடத்தில் அமர்ந்த நிலையில் உள்ள தெய்வச் சிலை­களின் இரு கால்­களும் காற்­ச­லங்­கை­க­ளுடன் தொங்­க­வி­டப்­பட்ட நிலையில் காணப்­ப­டு­கின்­றன. சிலையின் வலது கரம் பிற்­கால தெய்வச்சிலை­களில் இருப்­பது போன்ற அப­யகரமா­கவும், இடது கரம் வர­தகரதமா­கவும் தோற்­ற­ம­ளிக்­கின்­றன. அவற்றின் வலது கரத்தின் உள்­ளங்­கையில் திரண்ட மும்­ம­ணிகள் காணப்­ப­டு­கின்­றன. இவற்றின் தோற்ற அமைப்பு பிற்­காலச் சிலைகள், செப்புத் திரு­மே­னி­களின் கலை­வ­டி­வங்­களை நினை­வு­ப­டுத்­து­வ­தாக உள்­ளன. இருப்­பினும் இச்­சி­லை­களின் தலைப்­பாகங்கள் பெரு­ம­ள­வுக்கு சிதை­வ­டைந்த நிலை­யி­லேயே காணப்­பட்­டன. அவற்­றி­டையே கிடைத்த நட்­சத்­தி­ர­ வ­டி­வி­லான தோட­ணிந்த காதுகள், தாடைப்­ப­கு­திகள் பண்­டைய கால மக்­களின் கலை­ம­ர­பையும், உயர்ந்த தொழில் நுட்பத் திற­னையும் புலப்­ப­டுத்­து­வ­தாக உள்­ளன. இச்­சிற்­பங்­க­ளுடன் சேர்ந்­த­தாக மேலும் சில கைகள் உடைந்த நிலையில் கிடைத்­துள்­ளன. அக்­கை­களில் சில­வற்றின் உள்­ளங்­கை­களில் திரண்ட மும்­ம­ணிகள் காணப்­ப­டு­கின்­றன. இவற்றை நோக்கும் போது பல கரங்கள் கொண்ட தெய்வச் சிலை­க­ளாக இவை இருந்­தி­ருக்­கலாம் என எண்ணத் தோன்­று­கி­றது.

இச்­சி­லை­க­ளுடன் இவ்­வ­கழ்­வாய்வில் கிடைத்த பிற தொல்­லியற் சின்­னங்கள் இவ்­விடம் பண்­டை­ய­கால மக்­களின் வழி­பாட்­டுக்கு­ரிய மைய­மாக இருந்­தி­ருக்­கலாம் எனக் கருத இட­ம­ளிக்­கி­றது. இதற்கு அகழ்­வாய்வின் போது கிடைத்த பல அள­வு­களிள் வடி­வங்­களில் அமைந்த நாக உரு­வங்கள், ஆமையின் வடிவம், அகல் விளக்­குகள், ஆலய மணிகள், எருதின் உருவம், யானை, குதிரை என்­ப­வற்றின் உடற்­பா­கங்கள், இலிங்க வடி­வங்கள், பல அள­வு­களில் பயன்­ப­டுத்­தப்­பட்ட சட்­டிகள், தட்­டுகள், அவற்றின் விளிம்­பு­களில் படுத்­து­றங்கும் நாகபாம்பின் உருவம் என்­ப­வற்றை உதா­ர­ணங்­க­ளாகக் குறிப்­பி­டலாம். இச்­சான்­றா­தா­ரங்­க­ளுடன் இங்கு கண்­டு­பி­டிக்­கப்­பட்ட இரு சுடுமண் அச்­சுக்கள் இங்கு சிறப்­பாகக் குறிப்­பி­டத்­தக்­கன. அவற்றின் ஒரு­பக்­கத்தில் புள்­ளி­க­ளான இலச்சினை அல்­லது பண்­டைய கால எழுத்துக்கள் காணப்­ப­டு­கின்­றன. இது அறி­ஞர்­களின் முறை­யான பொருள் விளக்க்­கத்தைப் பெறும்­பட்­சத்தில் இங்­கி­ருந்த குடி­யி­ருப்­புக்கள் மற்றும் சமயச் சின்­னங்­களின் காலத்தை நிச்­ச­யப்­ப­டுத்தக் கூடி­ய­தாக இருக்கும் என நம்­பலாம்.

தமி­ழ­கத்தில் சுடு­மண்­ணா­லான தெய்வ உரு­வங்கள், அர­சனின் சிலைகள், சமயச் சின்­னங்கள் என்­பன நீர்­நி­லை­களை மையப்­ப­டுத்தி இற்­றைக்கு 2500 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் தோன்­றிய குடி­யி­ருப்புப் பகு­தி­களில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. அவற்றுள் தெய்வ உரு­வங்கள் கிராமி தெய்­வங்கள் அல்­லது நாட்­டுப்­புற த்தெய்வங்கள் என அழைக்கப்படுகின்றன. இம்­ம­ரபு பிற்­கா­லத்­திலும் தொடர்ந்­த­தற்கு சங்க இலக்­கி­யத்­திலும், பழந் தமிழ் இலக்­கி­யங்­க­ளிலும் பல ஆதா­ரங்கள் காணப்­ப­டு­கின்­றன. நாக­ப­டு­வானில் இவ்­வகைச் சிலைகள், சிற்­பங்கள் சின்­னங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட இடத்­திற்கு மிக அருகே தெற்­கிலும், மேற்­கிலும் உள்ள காட்­டுப்­ப­கு­தியில் பாழ­டைந்த இரு குளங்­களின் அணைக்­கட்­டுக்கள் காணப்­ப­டு­கின்­றன. இதனால் இங்கு கிடைத்த சம­யச்­சின்­னங்கள் கட்­டுக்­கரைக் குளத்தைப் போல் பண்­டைய காலத்தில் குளத்தை மையப்­படுத்தி தோன்­றிய குடி­யி­ருப்­புக்­க­ளுக்­கு­ரிய பெறு­ம­தி­மிக்க சான்­று­க­ளாகக் கொள்­ளத்­தக்­கன. இவை ஈழத்­த­மி­ழரின் பூர்­வீக வர­லாறு, பண்­பாடு பற்­றிய ஆய்­வு­க­ளுக்கு கிடைத்த முக்கிய சான்றுகளாகக் கொள்வதில் எதுவித சந்தேகமும் இல்லை எனலாம்.

பேரா­சி­ரியர் ப.புஷ்பரட்ணம்
(தொல்­லியல் இணைப்­பாளர் யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழகம்)

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-17#page-4

  • கருத்துக்கள உறவுகள்

 

வன்னியில் கிடைத்த இன்னொரு புராதன குடியிருப்பு மையம்

 

பேராசிரியர் ப.புஷ்பரட்ணம்
தொல்லியல் இணைப்பாளர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்: 

IMG_0974-1013x1024.jpg
அண்மையில் மன்னார் கட்டுக்கரை குளத்தை அண்டிய பகுதியில் ஈழத் தமிழரின் பண்டைய வாழிடம் குறித்த தொல்லியல் சான்றுகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் பேராசிரியரான ப.புஸ்ரீ்பரட்ணம் தலைமையிலான ஆய்வுக்குழு கண்டுபிடித்தது. இந்த நிலையில் அண்மையில் நாகபடுவான் பகுதியில் பண்டைய வழிபாட்டு மையம் ஒன்றை கண்டு பிடித்துள்ளனர் பேராசிரியர் தலைமையிலான குழு. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வன்னிப் பெருநிலப் பரப்பின் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஆய்வு ஈழத் தமிழர்கள் குறித்த வரலாற்று, பண்பாட்டு ஆய்வுகளுக்கு முக்கியத்துமான சான்று என்று பேராசிரியர் கூறுகின்றனர். வரலாற்று முக்கியத்துவம் மிக்க இவ் ஆய்வுக் கட்டுரையை நன்றியுடன் வாழ்த்துக்களுடன் குளோபல் தமிழ் செய்திகள் பிரசுரிக்கிறது.
-ஆசிரியர்

நீண்டகாலமாக தொல்லியல், வரலாற்று ஆய்வாளர்களால் அதிகம் கவனத்தில் கொள்ளப்படாத வன்னிப் பிராந்தியத்திற்கு தொன்மையான, தொடர்ச்சியான வரலாறு உண்டு என்பதை உறுதிப்படுத்துவதில் அண்மைக்காலமாக மன்னார் மாவட்டத்தில் கட்டுக்கரைக் குளம் என அழைக்கப்படும் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் அகழ்வாய்வுகளுக்கு முக்கிய இடமுண்டு. இங்கு தொடர்ந்தும் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் பூநகரிப்பிரதேச சபையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட முழங்காவில் குமுழமுனை வட்டாரங்களை அண்டிய நாகபடுவானில் தெரியவந்த தொல்லியற் சின்னங்கள் பற்றிய செய்திகளை அப்பிரதேச கிராம அலுவலகர்;, சமுர்த்தி உத்தியோகத்தர், ஊடகவியலாளர் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் எமது தொல்லியல் இறுதிவருட மாணவன் திரு.பானுசங்கருக்கு தெரியப்படுத்தினர்.

 

 
அதன் அடிப்படையில் தொல்லியற் திணைக்களப் பிரதிப்பணிப்பாளர் மற்றும் பூநகரிப் பிரதேச செயலாளரின் அனுமதியுடன் தொல்லியற்திணைக்களப் பிரதேசப் பொறுப்பாளர் திரு. பா. கபிலன் உதவியுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியற் பிரிவு ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து கடந்தவாராம் அவ்விடத்தை அடையாளம் கண்டு அங்கு பரீட்ச்சகரமான  ஆய்வு ஒன்றை  மேற்கொண்டு வருகின்றனர். இவ்விடம் கட்டுக்கரைக்குளத்திற்கு வடமேற்கே 50 கி.மீற்றர் தொலைவில் நாகபடுவானில் கானா மேட்டைக் குளம் என அழைக்கப்படும் காட்டுப்பகுதியில் பழடைந்த குளத்தின் அணைக்கட்டுக்கு அருகில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் இருந்த பாரிய மரமொன்று வேருடன் விழுந்த போது அவற்றின் அடிப்பகுதியில் புதையுண்டிருந்த வரலாற்றுத் தொன்மை மிக்க பல சின்னங்கள்; வெளிக்கிளம்பியிருந்தன. இச்சின்னங்களை அச்சத்துடனும், ஆச்சரியமாகவும் பார்த்த மக்களில் ஒரு பிரிவினர் அவற்றின் வரலாற்றுப் பெறுமதியை உணராமல் அச்சின்னங்களில் பலவற்றை ஆலயங்களுக்கும், தமது வீடுகளுக்கும் எடுத்துச் சென்றுள்ளனர். எஞ்சியிருந்தவற்றை அச்சம் காரணமாக மக்கள் சிதைவடையச் செய்து ஒதுக்குப்புறங்களில் வீசியுள்ளனர்.
 
கட்டுக்கரை மட்பாண்டங்களை ஒத்தவை

ஆயினும் எமது ஆய்வின் போது இவ்வகையான தொல்லியற் சின்னங்கள் அவ்விடத்தில் பரந்த அளவில் மண்ணினுள் புதையுண்டிருப்பதை உணரமுடிந்தது. அவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில் அங்கு தெரிவு செய்யப்பட்ட ஒரு இடத்தில் 4 ஒ 3 மீற்றர் நீள அகலத்தில் மாதிரிக்குழி அமைத்து அகழ்வு செய்தோம்.  இந்த அகழ்வின் போது அடையாளம் காணப்பட்ட மூன்று கலாசார மண் அடுக்குகளில் பல்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த மட்பாண்டங்களைக் கண்டுபிடிக்க முடிந்தது. அவை வடிவ அமைப்பிலும், தொழில் நுட்பத்திறனிலும் கட்டுக்கரைக் குளப்பிரதேச அகழ்வாய்வில் கிடைத்த மட்பாண்டங்களைப்  பெருமளவு ஒத்ததாக உள்ளன. மூன்றாவது கலாசார மண் அடுக்கில் ஒரு சில மட்பாண்டங்களுடன் பெருமளவு சுடுமண் உருவங்களும், கழிவிரும்புகளும் (ஐசழn ளுடயமநள) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இக்கலாச்சார மண்படையில் கண்டுபிடிக்கப்பட்ட சுடுமண் உருவங்களும், மட்பாண்டங்களும் இங்கு வாழ்ந்த பண்டைய கால மக்களின் சமய நம்பிக்கைகளைப் பிரதிபலிப்பதாக உள்ளன. அச்சுடுமண் உருவங்களில்  பீடத்தின் மேல் அமர்ந்திருக்கும் இரு தெய்வங்களின் சிலைகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இத்தெய்வச் சிலைகளை ஊர்வலமாகத் தூக்கிச் செல்லும் வகையில் அதன் சதுரமான பீடத்தின் நான்கு பக்கங்களிலும் முக்கோண வடிவிலமைந்த சதுரமான துவாரங்கள் காணப்படு கின்றன. பீடத்தில் அமர்ந்த நிலையில் உள்ள தெய்வச் சிலைகளின் இரு கால்களும் காற்சலங்கைகளுடன் தொங்கவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. சிலையின்  வலது கரம் பிற்கால தெய்வச் சிலைகளில் இருப்பது போன்ற அபயக~;தமாகவும்,  இடது கரம் வரதக~;தமாகவும் தோற்றமளிக்கின்றன. அவற்றின் வலது க~;தத்தின் உள்ளங்கையில் திரண்ட மும்மணிகள் காணப்படுகின்றன. இவற்றின் தோற்ற அமைப்பு பிற்காலச் சிலைகள், செப்புத் திருமேனிகளின் கலைவடிவங்களை நினைவுபடுத்துவதாக உள்ளன. இருப்பினும் இச்சிலைகளின்  தலைப்பாகங்கள்  பெருமளவுக்கு சிதைவடைந்த நிலையிலேயே காணப்பட்டன. அவற்றிடையே கிடைத்த நட்சத்திரவடிவிலான தோடணிந்த காதுகள், தாடைப்பகுதிகள் பண்டைய கால மக்களின் கலைமரபையும், உயர்ந்த தொழில் நுட்பத் திறனையும் புலப்படுத்துவதாக உள்ளன. இச்சிற்பங்களுடன் சேர்ந்ததாக மேலும் சில கைகள் உடைந்த நிலையில் கிடைத்துள்ளன.  அக்கைகளில் சிலவற்றின் உள்ளங்கைகளில் திரண்ட மும்மணிகள் காணப்படுகின்றன. இவற்றை நோக்கும் போது பல கரங்கள் கொண்ட தெய்வச் சிலைகளாக இவை இருந்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.

 

 
பண்டைய வழிபாட்டு மையம்

இச்சிலைகளுடன் இவ்வகழ்வாய்வில் கிடைத்த பிற தொல்லியற் சின்னங்கள் இவ்விடம் பண்டையகால மக்களின் வழிபாட்டிற்குரிய மையமாக இருந்திருக்கலாம் எனக் கருத இடமளிக்கிறது. இதற்கு அகழ்வாய்வின் போது கிடைத்த பல அளவுகளிள் வடிவங்களில் அமைந்த நாக உருவங்கள், ஆமையின் வடிவம்,  அகல் விளக்குகள், ஆலய மணிகள், எருதின் உருவம், யானை, குதிரை என்பவற்றின் உடற்பாகங்கள், இலிங்க வடிவங்கள், பல அளவுகளில் பயன்படுத்தப்பட்ட சட்டிகள், தட்டுகள், அவற்றின் விழிம்புகளில் படுத்துறங்கும்  நாக பாம்பின் உருவம் என்பவற்றை உதாரணங்களாகக் குறிப்பிடலாம். இச்சான்றாதாரங்களுடன் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட இரு சுடுமண்  அச்சுக்கள் இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. அவற்றின் ஒருபக்கத்தில்  புள்ளிகளான இலட்சனை அல்லது பண்டைய கால எழுத்துக் காணப்படுகின்றது. இது அறிஞர்களின் முறையான பொருள் விளக்க்கத்தைப் பெறும்பட்சத்தில் இங்கிருந்த குடியிருப்புக்கள் மற்றும் சமயச் சின்னங்களின் காலத்தை நிச்சயப்படுத்தக் கூடியதாக இருக்கும் என நம்பலாம்.
 
ஈழத் தமிழர் பூர்வீக வரலாற்றுச் சான்று

தமிழகத்தில் சுடுமண்ணாலான தெய்வ உருவங்கள், அரசனின் சிலைகள், சமயச் சின்னங்கள் என்பன நீர்நிலைகளை மையப்படுத்தி இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய குடியிருப்புப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் தெய்வ உருவங்கள் கிராமி தெய்வங்கள் அல்லது நாட்டுப்புற தெய்வங்கள் என அழைக்கப்படுகின்றன. இம்மரபு பிற்காலத்திலும் தொடர்ந்ததற்கு சங்க இலக்கியத்திலும், பழந் தமிழ் இலக்கியங்களிலும் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன.
 
நாகபடுவானில் இவ்வகைச் சிலைகள், சிற்பங்கள் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு மிக அருகே தெற்கிலும், மேற்கிலும் உள்ள காட்டுப்பகுதியில் பாழடைந்த இரு குளங்களின் அணைக்கட்டுக்கள் காணப்படுகின்றன. இதனால் இங்கு கிடைத்த சமயச் சின்னங்கள் கட்டுக்கரைக் குளத்தைப் போல் பண்டைய காலத்தில் குளத்தை மையப்படுத்தி தோன்றிய குடியிருப்புக்களுக்குரிய பெறுமதிமிக்க சான்றுகளாகக் கொள்ளத்தக்கன. இவை ஈழத் தமிழரின் பூர்வீக வரலாறு, பண்பாடு பற்றிய ஆய்வுகளுக்கு கிடைத்த முக்கிய சான்றுகளாகக் கொள்வதில் எதுவித சந்தேகமும் இல்லை  எனலாம்.
  
   http://www.kuriyeedu.com/?p=45678                   
IMG_0776-1024x529.jpgIMG_0783-837x1024.jpgIMG_0974-1-1013x1024.jpgIMG_0992-1024x441.jpgIMG_1010-793x1024.jpgIMG_1020.jpgIMG_1030-909x1024.jpgIMG_1128-541x1024.jpgIMG_1131-717x1024.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.