Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் உறுதி-ஜெனிவாவில் அமைச்சர் மங்கள

Featured Replies

மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் உறுதியாகவுள்ளதாக, அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 
 
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரின் 34வது அமர்வில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 
 
அவர் மேலும் கூறியுள்ளதாவது, 
 
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பில் கடந்த 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் இணைப் பங்காளர்களாக நாம் இணைந்து கொண்டு சுமார் ஒரு வருடங்களுக்கு மேற்பட்டுள்ள அல்லது 15 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இன்று நான் உரையாற்றுகிறேன். 
 
சிலர் எமது அந்த செயற்பாட்டை நாட்டுக்கு செய்த காட்டிக் கொடுத்தல் மற்றும் துரோகமாக விமர்சித்து வருகின்றனர். 
 
1948ம் ஆண்டு சுதந்திரத்தினைப் பெற நாம் அனைவரும் ஜாதி, மத, இன பேதங்களின்றி ஒன்றாக பணியாற்றி வெற்றி பெற்றோம். ஆனாலும் அனைத்து மக்களையும் சமமாக நடத்தும் நாட்டை கட்டியெழுப்பத் தவறியமையால் கடந்த 69 வருடங்கள் வலிகள், வன்முறைகளுடன் பயணித்தோம், விலைமதிப்பற்ற மனித வளங்கள் வாழ்க்கை என்பவற்றையும் இழந்தோம். 
 
அந்த சகாப்தம் தற்போது நிறைவடைய வேண்டும். இலங்கையை நீதியான ஆட்சியை கட்டியெழுப்ப கோருகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார். 
 
மேலும், தான் 2016ம் ஆண்டு கூட்டத் தொடரில் கூறியதைப் போன்று, சுமார் 5,515.98 ஏக்கர் அரச காணிகள் மற்றும் 2,090.03 ஏக்கர் தனியார் காணிகள் 2016ம் ஆண்டில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 1,383.51 அரச காணிகள் 30.54 ஏக்கர் தனியார் காணிகள் கடந்த மாதம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 
 
அத்துடன், நல்லிணக்க வழிமுறைகள் பற்றிய கலந்தாய்வுச் செயலணி பாதிக்கப்பட்ட சுமார் 7000 பேரின் கருத்துக்களை எழுத்து மூலம் பெற்றுக் கொண்டுள்ளதாகவும், இந்த அறிக்கை தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 
 
நாம் இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் சித்திரவதைகள் குறித்த குற்றச்சாட்டுக்களை மிகவும் சிரத்தையு டன் கவனத்தில் எடுத்துள்ளோம். கடந்த வருடம் ஜனாதிபதி தெரிவித்திருத்ததைப் போன்று, நாம் சித்திரவதை தொட ர்பில் பூச்சிய சகிப்புத்தன்மையினைக் கொண்டிருக்கிறோம்.
 
அண்மையில் தேசிய மனித உரிமை ஆணைக்குழு இலங்கையில் சித்திரவதை இடம்பெறும் எண்ணிக்கையின் அளவில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள போதிலும், அங்கு ஒரு சித்திரவதை சம்பவம் இடம்பெற்றாலும், நாம் அது குறி த்து மிகவும் சிரத்தையுடன் செயற்படுகிறோம்.
 
ஏனெனில், ஒரு சம்பவமே பல சம்பவங்களுக்கு ஒப்பானது. இலங்கை மனித உரிமை ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்   குழு சட்டம் ஒழுங்கு அமைச்சு மற்றும் இதனுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புக்களுமே சித்திரவதையை தடு த்து நிறுத்தவும், அதற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கவும் இணைந்து செயற்பட்டுவருகிறோம்.
 
ஏனைய விடயங்களைப் போலவே, இந்த விடயத்திலும் எமக்குத் தொழிநுட்ப உதவிகள் தேவைப்படுகின்றன. இந்த விடய த்தில் அனுபவமுள்ள உறுப்பு நாடுகள் எமக்கு அதனைத் தந்து உதவும் என நான் நம்புகிறேன்" என்று அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.