Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை எதிர் பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் செய்திகள்

Featured Replies

பங்களாதேஷ் அணிக்கெதிரான தொடரைக் கைப்பற்றுவோம்  ; ஹேரத்

 

 

பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் நம்பிக்கை எமக்குள்ளதென இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் ரங்கண ஹேரத் தெரிவித்தார்.

DSC_4454_copy.jpg

 

தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை அணித் தலைவர் ரங்கண ஹேரத் மேலும் தெரிவிக்கையில்,

 

பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நாம் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. துடுப்பாட்ட பலம் எமதணியில் மிகவும் வலிமையாகவுள்ளது.

DSC_4470_copy.jpg

எமது அணியைப்பற்றி அவர்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளனர். ஏனெனில் இலங்கையைச் சேரந்த 3 பயிற்றுவிப்பாளர்கள் பங்களாதேஷ் அணிக்கு பயிற்சியளித்துள்ளனர்.  குறிப்பாக பங்களாதேஷ் அணியின் தற்போதைய பயிற்றுவிப்பாளர் ஹத்துருசிங்க மிக முக்கியமானவர். இதனால் இத் தொடர் எமக்கு மிகவும் சவாலாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன். ஏனைய அணிகளின் பயிற்றுவிப்பாளர்களைவிடவும் ஹத்துருசிங்கவிடம் எம்மைப்பற்றிய தரவுகள் அதிகம் இருக்கும்.

DSC_4374_copy.jpg

இதேவேளை, மலிந்த புஷ்பகுமார குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ஹேரத் பதிலளிக்கையில்,

புஷ்பகுமாரவிடம் அனைத்து அனுபவங்களும் உள்ளன. அவர் சிறந்த அடைவுமட்டத்தை அடைந்துள்ளார். முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அவர் 500 மேற்பட்ட விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதனால் அவர் தேசிய அணியில் திறமையாக செயற்படுவாரென நினைக்கின்றேன்.

நானொரு இடதுகை சுழற்பந்து வீச்சாளர். சில வேளைகளில் மற்றுமொரு வலிமையான இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அணியில் தேவைப்படும் போது  தேவைக்கு ஏற்றவகையில் அவரைப் பயன்படுத்துவோம் என்றார்.

 

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 7 ஆம் திகதி காலியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/17218

  • தொடங்கியவர்

‘பங்­க­ளா­தேஷின் முன்­னேற்­றத்தை எடுத்­துக்­காட்ட சிறந்த சந்­தர்ப்பம்’ – முஷ்­பிக்குர், ஹத்­து­ரு­சிங்க

(நெவில் அன்­தனி)
சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் பங்­க­ளாதேஷ் எந்­த­ளவு  முன்­னேற்றம் கண்­டுள்­ளது என்­பதை இலங்­கைக்­கான தமது கிரிக்கெட் விஜயம் உல­குக்கு எடுத்­துக்­காட்டும் என பங்­க­ளாதேஷ் அணித் தலைவர் முஷ்­பிக்குர் ரஹிமும் தலைமைப் பயிற்­றுநர் இலங்­கை­ய­ரான சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­கவும் செய்­தி­யா­ளர்­க­ளிடம் தெரி­வித்­தனர்.

press-conference

சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் மழ­ழைகள் எனவும் எதி­ர­ணி­களின் பலத்­திற்கு ஈடு­கொ­டுக்க முடி­யா­த­வர்கள் எனவும் கூறப்­பட்­டு­வந்த பங்­க­ளாதேஷ், கடந்த வருடம் டாக்­காவில் நடை­பெற்ற இரண்­டா­வது டெஸ்ட் போட்­டியில் இங்­கி­லாந்தை அதிர்ச்சி தோல்வி அடையச் செய்து  தனது முன்­னேற்­றத்தை உல­குக்கு உணர்த்­தி­யி­ருந்­தது.

சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­க­விடம் கடந்த மூன்று வரு­டங்­க­ளாக பெற்­று­வந்த பயிற்­சியே பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் அணியின் இந்த வெற்­றிக்கு கார­ண­மாக அமைந்­தது என்று கூறினால் தவ­றா­காது.

சந்­திக்­க­வை­விட மேலும் இரண்டு இலங்­கை­யர்­களான திலான் சம­ர­வீர (துடுப்­பாட்டப் பயிற்­றுநர்), மரியோ வில்­ல­வ­ராயன் (உடற்­ப­யிற்சி ஆலோ­சகர்) ஆகியோர் பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்­றுநர் குழாமில் இடம்­பெ­று­கின்­றனர்.

‘‘பயிற்­றுநர் குழாமில் இடம்­பெ­று­ப­வர்­க­ளிடம் எதி­ரணி தொடர்­பான நுட்­பங்கள், வியூ­கங்கள் தெரிந்­தி­ருக்­கலாம். ஆனால், அதுவே அழுத்­தத்தைக் கொடுப்­ப­தாக அமைந்­து­வி­டு­கின்­றது.

பயிற்­று­நர்கள் வழங்கும் வியூ­கங்­க­ளுடன் களத்தின் மத்­திக்குச் சென்று ஆற்­றலை வெளிப்­ப­டுத்­த­வேண்டும் என்­பதே முக்­கியம்’’ என முஷ்­விக்குர் ரஹிம் தெரி­வித்தார்.

‘‘இலங்­கையின் சிறந்த துடுப்­பாட்ட வீரர்கள் ஓய்­வு­பெற்­று­விட்­ட­தாலும் அணியை மீளக்­கட்டி எழுப்ப முயற்­சிக்கும் அனு­ப­வ­மற்ற அணி என்­ப­தாலும் எமக்கு வெற்­றி­பெ­று­வ­தற்­கான வாய்ப்பு இருப்­ப­தாக கூறு­கின்­றனர்.

ஆனால், இலங்­கையை அதன் சொந்­த­மண்ணில் வீழ்த்­து­வது என்­பது இல­கு­வான காரி­ய­மல்ல. ஏனெனில், பலம்­வாய்ந்த அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான டெஸ்ட் தொடரில் இலங்கை திற­மையை வெளிப்­ப­டுத்தி வெற்­றி­பெற்­றதை மறக்­க­லா­காது’’ என முஷ்­பிக்குர் குறிப்­பிட்டார்.

இது இவ்­வா­றி­ருக்க, பங்­க­ளா­தேஷின் முன்­னேற்­றத்தில் இலங்கை பெரும் பங்­காற்­றி­ய­தாக இலங்­கையின் முன்னாள் ஆரம்ப வீரரும் பங்­க­ளா­தேஷின் பயிற்­று­ந­ரு­மான ஹத்­து­ரு­சிங்க தெரி­வித்தார்.

‘‘மற்­றைய நாடு­க­ளை­விட இலங்­கைக்கு எதி­ரா­கவே அதி­க­மான டெஸ்ட் போட்­டி­களில் நாங்கள் விளை­யா­டி­யுள்ளோம். இருந்­தாலும் நான் டெஸ்ட் விளை­யா­டிய காலத்தில் இலங்கை எந்­த­ளவு பின்­னி­லையில் இருந்­ததோ அதே­போன்­றுதான் பங்­க­ளாதேஷ் தற்­போது இருக்­கின்­றது.

நாம் எந்­த­ளவு முன்­னே­றி­யுள்ளோம் என்­பதை இலங்­கைக்­காக கிரிக்கெட் விஜயம் வெளிப்­ப­டுத்தும்’’ என்றார் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க.

‘‘மற்­றைய நாடு­க­ளுக்கு எதி­ராக தயா­ரா­வது போன்று இந்தத் தொட­ருக்­கா­கவும் நாங்கள் தயா­ரா­கி­யுள்ளோம். எமது ஆற்­றலை சரி­யாக வெளிப்­ப­டுத்­தினால் எமக்கு சிறந்த வாய்ப்பு இருக்­கின்­றது. ஆனால், இலங்­கையை குறைத்து மதிப்­பி­ட­மாட்டோம்’’ என்றார் அவர். 

இலங்கை அணியின் பயிற்­று­ரா­வ­தற்­கான வாய்ப்பு நழுவிப் போனது குறித்து பேசிய அவர், ‘‘சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் இலங்கை அணியின் பயிற்­று­ந­ரா­வ­தற்­கான வாய்ப்பு நழுவிப்போனதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துடன் எந்த வித பிரச்சினையும் இல்லை.

அது முடிந்த கதை. அதனால் நான் கவலைப்படவில்லை. ஆனால், தாய் நாட்டிற்காக உதவ முடியாமல் போனதையிட்டு பெரும் ஏமாற்றம் அடைகின்றேன். எனினும், இப்போதைய தொழில் குறித்து மகிழ்ச்சியும் திருப்தியும் அடைகின்றேன்’’ என்றார்.

http://metronews.lk/?p=2327

  • தொடங்கியவர்

முஷ்பிகுர் ரஹிமின் விக்கெட் கீப்பர் பணி பறிப்பு

பதிவு: மார்ச் 03, 2017 09:47

 
 

இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து வங்காளதேச அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான முஷ்பிகுரை விக்கெட் கீப்பிங் பணியில் இருந்து விடுவிப்பது என்ற முடிவுக்கு அணி நிர்வாகம் வந்துள்ளது.

 
 
 
 
முஷ்பிகுர் ரஹிமின் விக்கெட் கீப்பர் பணி பறிப்பு
 
இலங்கைக்கு சென்றுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் வருகிற 7-ந்தேதி காலேயில் தொடங்குகிறது.

இந்த டெஸ்டில் வங்காளதேச அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான முஷ்பிகுர் ரஹிம், ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே களம் இறங்குவார் என்று அந்த அணியின் மேலாளர் காலித் மக்மூத் நேற்று கூறினார்.

10198970-8561-4727-A5BB-091604308659_L_s

அண்மை காலமாக முஷ்பிகுர் ரஹிமின் விக்கெட் கீப்பிங் பணி மெச்சும்படி இல்லை. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கூட முக்கியமான கட்டத்தில் விருத்திமான் சஹாவின் ஸ்டம்பிங் வாய்ப்பை கோட்டை விட்டார்.

இதைத் தொடர்ந்தே முஷ்பிகுரை விக்கெட் கீப்பிங் பணியில் இருந்து விடுவிப்பது என்ற முடிவுக்கு அணி நிர்வாகம் வந்துள்ளது. அந்த அணியின் விக்கெட் கீப்பராக லிட்டன் தாஸ் செயல்படுவார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/03094732/1071552/Bangladesh-team-wicket-keeper-Rahim-mushfiqur.vpf

  • தொடங்கியவர்

பயிற்சிப்போட்டியில் வலுவான நிலையில் ஆடிவரும் பங்களாதேஷ்

 

 

இலங்­கைக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டுள்ள பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் அணி தற்­போது இலங்கைக் கிரிக்கெட் சபைத் தலைவர் அணி­யு­ட­னான பயிற்சிப் போட்­டியில் விளை­யா­டி­வ­ரு­கி­றது.

Bangladesh-fielder-Soumya-Sarkar-3L-cele

இரண்டு நாட்கள் கொண்ட இந் தப் போட்டி நேற்று மொறட்­டுவை மைதா­னத்தில் ஆரம்­ப­மா­னது. இதில் நாணயச் சுழற்­சியில் வெற்­றி­பெற்ற இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் அணி, பங்­க­ளாதேஷ் அணியை முதலில் துடுப்­பெ­டுத்­தாட பணித்­தது.

அதன்­படி தமீம் இக்பால் மற்றும் சௌமியா ஷர்கார் ஜோடி ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாகக் கள­மி­றங்­கி­யது. 

இதில் ஷர்கார் 9 ஓட்­டங்­க­ளுடன் சம­ர­கோனின் பந்­து­வீச்சில் ஆட்­ட­மி­ழந்தார். அதைத் தொடர்ந்து தமீ­முடன் ஜோடி சேர்ந்த மொமினுல் நிதா­ன­மாக ஆடி 73 ஓட்­டங்­களைப் பெற்று ரிடையர் அவுட் முறையில் வெளி­யே­றினார். 

தொடர்ந்து அபா­ர­மாக ஆடி வந்த தமிம் இக்­பாலும் 136 ஓட்­டங்­களைப் பெற்று ரிடையர் அவுட் முறையில் பெவி­லியன் திரும்­பினார்.

ஏனைய வீரர்­க­ளான ஷகிப் (30), மொஹ­ம­துல்லா (43), அணித் தலைவர் ரஹீம் (21) என ஆட்­ட­மி­ழக்க பங்­க­ளாதேஷ் அணி நேற்­றைய ஆட்ட நேர முடிவில் 7 விக்­கெட்­டுக்­களை இழந்து 391 ஓட்­டங்­களைப் பெற்றுக் கொண்­டு ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இந்நிலையில் இன்றை ஆட்டத்தில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் அணி 33 ஓட்டங்களைப் பெற்று 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

 

களத்தில் டினேஷ் சந்திமல் 4 ஓட்டங்களுடனும் ரெஷேன் சில்வா 7 ஓட்டங்களுடனும்  களத்திலுள்ளனர். இன்று போட்­டியின் கடைசி நாள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. 

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது.

http://www.virakesari.lk/article/17318

  • தொடங்கியவர்

190 ஓட்டங்கள் விளாசிய தினேஸ் சந்திமால் : சமநிலையில் முடிந்தது பயிற்சி போட்டி

 

 

இலங்கை ஜனாதிபதி  பதினொருவர் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டு நாள் பயிற்சி போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

249861.jpg

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி முதல் நாள் ஆட்டநிறைவின்போது  391 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.

பங்களாதேஷ் அணஜ சார்பில் தமிம் இக்பால் 136 ஒட்டங்களையும், மொமினுல் அக் 73 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சமிக கருணாரத்ன 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் இரண்டாம் நாள் தனது முதல் இன்னிங்ஸை  ஆரம்பித்த இலங்கை அணி இன்றைய ஆட்டநேர முடிவின் போது  7 விக்கட்டுகளை இழந்து 403 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய தினேஸ் சந்திமால் 7 ஆறு ஓட்டங்கள் மற்றும் 21 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 190 ஓட்டங்களை விளாசினார்.

மறுமுனையில் சமிக கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் டஸ்கின் அஹமட் 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 7 ஆம் திகதி காலி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

http://www.virakesari.lk/article/17350

  • தொடங்கியவர்

இலங்கை - பங்களாதேஷ் முதல் டெஸ்ட் : துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

adfdasfa.jpg

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் ஹேரத், உபுல் தரங்க, திமுத் கருணாரத்ன, குசால் மெண்டிஸ், தினேஸ் சந்திமால், நிரோஷன் டிக்வெல்லஅசேல குணரத்ன, டில்ருவான் பெரேரா, சுராங்க லக்மால், லஹிரு குமார மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.

பங்களாதேஷ் அணி சார்பில் முஷ்பிஹுர் ரஹீம், தமிம் இக்பால், சோமிய சர்க்கார், மொனிமுல் ஹக், மஹமதுல்லா, சகிப் அல் ஹசன், லிடோன் டையாஷ், மெஹிதி அசன் மிராஷ், தஷ்கின் அஹமட், முஷ்தபிஹுர் ரஹ்மான்,சுபாஷிஷ் ரோய் ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.

http://www.virakesari.lk/article/17460

  • தொடங்கியவர்

166 ஓட்டங்கள் விளாசி களத்தில் நிற்கும் மெண்டிஸ் : திடமான நிலையில் இலங்கை

 

 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

sfasfasf1.jpg

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி இன்றைய ஆட்டநேர முடிவின்போது 4 விக்கட்டுகளை இழந்து 321 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் குசால் மெண்டிஸ் இரண்டாவது டெஸ்ட் சதத்தை பூர்த்திசெய்தத நிலையில், 166 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றார்.

259850.jpg

மறுமுனையில் அசேல குணரத்ன தனது அரைச் சதத்தை பூர்த்திசெய்து 85 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.

பங்களாதேஷ் அணி சார்பில் தஷ்கின் அஹமட் 48 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டினை வீழ்த்தினார்.

259854.jpg

259857.jpg

259860.jpg

259861.jpg

259862.jpg

http://www.virakesari.lk/article/17484

  • தொடங்கியவர்

குசல் இரட்டைச் சதத்தை தவற விட்டார் இலங்கை 494, பங்களாதேஷ் 133–2

பங்­க­ளா­தே­ஷுக்கு எதி­ராக காலி சர்­வ­தேச விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­று­வரும் முத­லா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் அபா­ர­மாக துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்­கையின் குசல் மெண்டிஸ் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக 6 ஓட்­டங்­களால் இரட்டைச் சதத்தைத் தவ­ற­விட்டார். இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தாட இணங்­கிய இலங்கை அதன் முத­லா­வது இன்­னிங்ஸில் சகல விக்­கெட்­க­ளையும் இழந்து 494 ஓட்­டங்­களைக் குவித்­தது.

141060-01-02பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தாடும் பங்­க­ளாதேஷ், இன்றைய இரண்டாம் நாள் ஆட்­ட­நேர முடிவில் 2 விக்கெட் இழப்­புக்கு 133 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­தது.

சௌம்யா சர்க்கார் ஆட்டமிழக்காமல் 66 ஓட்­டங்­க­ளையும் தமிம் இக்பால் 57 ஓட்­டங்­க­ளையும் பெற்­றனர்.போட்­டியின் இரண்டாம் நாளான  இன்று காலை இலங்கை அணி தனது முத­லா­வது இன்­னிங்ஸை 4 விக்கெட் இழப்பு 321 ஓட்­டங்கள் என்ற நிலை­யி­லி­ருந்து தொடர்ந்­த­துடன் குசல் மெண்டிஸ் 166 ஓட்­டங்­க­ளுடன் தனது இன்­னிங்ஸைத் தொடர்ந்தார். 

ஆனால் 194 ஓட்­டங்கள் பெற்­றி­ருந்­த­போது சிக்ஸர் மூலம் இரட்டைச் சதத்தை எட்­டிப்­பி­டிக்க எத்­த­னித்த குசல், தமிம் இக்­பா­லிடம் பிடி­கொ­டுத்து ஆட்­ட­மி­ழந்தார். பந்தைப் பிடித்த தமிம் இக்பால் தன்னை சமா­ளிக்க முடி­யாமல் எல்லைக் கோட்டைக்கடக்க­ வேண்­டி­யி­ருந்­ததால் பந்தை மேல்­நோக்கி வீசி விட்டு எல்­லைக்­கோட்­டுக்கு வெளியே சென்றார்.

ஆனால் பந்து கீழே விழமுன் மீண்டும் எல்­லைக்­கோட்­டுக்குள் பாய்ந்த தமிம் இக்பால் பிடியைப் பூர்த்தி செய்தார். தொடர்ந்து தமிம் இக்­பாலின் பிடி விதி­க­ளுக்கு உட்­பட்­டது என மூன்­றா­வது மத்­தி­யஸ்தர் அறி­வித்­ததை அடுத்து குசல் ஏமாற்­றத்­துடன் களம் விட்டு வெளி­யே­றினார்.

குசல் மெண்­டி­ஸுக்கு பக்­க­ப­ல­மாகத் துடுப்­பெ­டுத்­தா­டிய நிரோஷன் டிக்­வெல்ல 75 ஓட்­டங்­களைப் பெற்­ற­துடன் ஐந்­தா­வது விக்ெ­கட்டில் 100 ஓட்­டங்­களைப் பகிர்ந்தார். இவர்களைத் தொடர்ந்து டில்­ருவன் பெரே­ராவும் திற­மை­யாகத் துடுப்­பெ­டுத்­தாடி 51 ஓட்­டங்­களைப் பெற்றார்.

பின்­வ­ரிசை ஆட்­டக்­கா­ரர்­க­ளான ரங்­கன ஹேரத், சுரங்க லக்மால், லக் ஷான் சந்­தகான், லஹிரு குமார ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை. பங்களாதேஷ் பந்துவீச்சில் மெஹ்தி ஹசன் மிராஸ் 113 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் முஸ்தாபிஸுர் ரஹ்மான் 68 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

 

http://metronews.lk/?p=2917

  • தொடங்கியவர்

தமிம் இக்பாலை வேடிக்கையாக ஆட்டமிழக்கச் செய்த டிக்வெல்ல (வைரல் காணொளி இணைப்பு)

இலங்கை பங்களாதேஷ் டெஸ்ட்  போட்டியின் நேற்று பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்தது.

இதன்போது பங்களதேஷ் அணியின் சார்பாக சிறப்பான துடுப்பெடுத்தாடி வந்த தமிம் இக்பால் அவரது கவனயீனக்குறைவால் மோசமான முறையில் ஆட்டமிழந்தார்.

லக்ஷான் சந்தகன் வீசிய பந்து துடுப்பாட்ட வீரரை தாண்டி விக்கட் காப்பாளரான டிக்வெல்லவுக்கு சென்றது.

 

இதன்போது அது பிடியிருப்பாக இருக்கலாம் என கோரி டிக்வெல்ல மற்றும் இலங்கை வீரர்கள் நடுவரிடம் ஆட்டமிழப்பை கோரினர்.

இந்நிலையில் டிக்வெல்ல பந்தை பிடித்ததை அறியாத தமிம் உடனடியாக எல்லையை விட்டு வெளியேறி ஓட்டத்தை எடுக்க முற்பட்டார்.

எனினும் பந்து டிக்வெல்லவின் கைவசமிருக்க அவர் தமிம் இக்பாலை ரன் அவுட் மூலமாக ஆட்டமிழக்கச் செய்தார்.

இந்த ஆட்டமிழப்பு காணொளி சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது.

http://www.virakesari.lk/article/17553

  • தொடங்கியவர்
Sri Lanka 494
Bangladesh 312 (97.2 ov)
  • தொடங்கியவர்

312 ஓட்டங்களுக்கு சுருண்டது பங்களாதேஷ் : இலங்கை 182 ஓட்டங்களால் முன்னிலை (படங்கள்)

 

 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

259922.jpg

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ்  அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 312 ஓட்டங்களை பெற்றுள்ளது.

பங்களாதேஷ் அணி சார்பில் அணித்தலைவர் முஷ்பிகூர் ரஹீம் 85 ஓட்டங்களையும்,சௌம்யா சர்க்கார் 71 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

259923.jpg

பந்துவீச்சில் டில்ருவான் பேரேரா மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் தலா 3 விக்கட்டுகளை வீழ்த்தினர்.

இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 494 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இதேவேளை போட்டி மழைக்காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

259955.jpg

259956.jpg

259958.jpg

259961.jpg

259962.jpg

17156348_2105511996146663_50048808298164

17190557_2105510176146845_23602594948457

http://www.virakesari.lk/article/17574

  • தொடங்கியவர்

உபுல் தரங்க சதம் : பாரிய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடுகிறது பங்களாதேஷ்

Published by Pradhap on 2017-03-10 16:39:31

 

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 247 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.

drowning-hands.jpg

இலங்கை அணி சார்பில் உபுல் தரங்க தனது 3 ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்திசெய்து 115 ஓட்டங்களை பெற்றதுடன், சந்திமால் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

 பங்களாதேஷ் அணி வெற்றிபெறவேண்டுமாயின் 457 ஓட்டங்களை பெற வேண்டியுள்ளது.

தற்போது துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் அணி விக்கட்டிழப்பின்றி 38 ஓட்டங்களை பெற்றுள்ளது.

http://www.virakesari.lk/article/17627

  • தொடங்கியவர்
Sri Lanka 494 & 274/6d
Bangladesh 312 & 157/5 (47.0 ov)
Bangladesh require another 300 runs with 5 wickets remaining
  • தொடங்கியவர்

சாதனை படைத்த ஹேரத் : இலங்கை அபார வெற்றி

Published by Pradhap on 2017-03-11 14:14:18

 

இலங்கை மற்றும் பங்களாதேஷ அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 259 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

260077.jpg

457 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 197 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

பங்களாதுஷ்  அணி சார்பில் சோமிய சர்க்கார் 53 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் இலங்கை அணி தலைவர் ரங்கன ஹேரத் 6 விக்கட்டுகளை கைப்பற்றியதுடன், அதிகூடிய விக்கட்டுகளை கைப்பற்றிய இடதுகை சுழல் பந்துவீச்சாளர்  என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.

இதற்கு முன்னர் நியுஸிலாந்து அணியின் டேனியல் விட்டோரி 362 விக்கட்டுகளை கைப்பற்றி குறித்த சாதனையை தக்க வைத்திருந்தார். இந்நிலையில் 363 விக்கட்டுகளை கைப்பற்றி ஹேரத் குறித்த சாதனையை முறியடித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/17659

  • தொடங்கியவர்

வீரர்களிடம் உறுதியான நம்பிக்கை மேலோங்கியுள்ளது ; அதே மனநிலையுடன் விளையாடுவார்கள்  - ஹேரத்

 

 

எமது அணி வீரர்களிடத்தில் உறுதியான நம்பிக்கை மேலேங்கியுள்ளது. அதே மனநிலையுடன் பங்களாதேஷ் அணிக்கெதிரான 2 ஆவது போட்டியிலும் விளையாடுவார்களென்ற நம்பிக்கை எனக்குள்ளதென இலங்கை அணியின் டெஸ்ட் அணித் தலைவர் ரங்கண ஹேரத் தெரிவித்தார்.

rangan.jpg

கொழும்பு பி.சரவணமுத்து ஓவல் மைதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் கேட்டகேள்விக்கு பதிலளிக்கையிலேயே அணித் தலைவர் ரங்கண ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்,

 

 

முதலாவது போட்டியை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளோம். நாளை இடம்பெறவுள்ளது புதிய போட்டி. அதற்கு நாம் சரியான முறையில் தயார்ப்படுத்தி வருகின்றோம். எனவே அடிமட்ட நிலையில் இருந்து போட்டியை ஆரம்பிக்க வேண்டியுள்ளது.

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது போட்டியில் அணியை வழிநடத்துவதற்கு சக வீரர்களும் நல்ல ஒத்துழைப்பு வழங்கினர். ஒவ்வொருவரும் சிறந்த பங்களிப்பை நல்கினர். வீரர்களிடம் உயர்ந்த அளவில் நம்பிக்கை காணப்பட்டது.

ஆகவே முதல் போட்டியில் வெளிப்படுத்திய நம்பிகையை 2 ஆவது  போட்டியிலும் வீரர்கள் வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது.

பங்களாதேஷ் அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் விரர்களின் பெயர் விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இன்று மாலை அல்லது நாளை காலை வீரர்களின் பெயர் விபரங்கள் அறிவிக்கப்படும். 

சரவணமுத்து ஓவல் மைதானம் விசேசடாக வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம். இருப்பினும் குறித்த ஆடுகளம் இறுதிநாட்களில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறிவிடும். ஆகையால் நாம் முதலிரண்டு நாட்களும் வேகப்பந்து வீச்சாளர்களை உபயோகித்து விட்டு இறுதி நாட்களில் சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்துவதற்கு எண்ணியுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இடம்பெற்று வருகின்றது. இதில் காலியில் இடம்பெற்ற முதல் போட்டியில் இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

கொழும்பு பி.சரவணமுத்து ஓவல் மைதானத்தில் நாளை ஆரம்பமாகும் போட்டி பங்களாதேஷ் அணிக்கு மிகவும் முக்கியமான போட்டியாகவும் இறுதிப் போட்டியாகவும் காணப்படுகின்றது. பங்களாதேஷ் அணி தனது 100 ஆவது டெ்ஸ்ட் போட்டியை விளையாடவுள்ளமையே முக்கிய அம்சமாகும். எனவே கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு பங்களாதேஷ் அணி இலங்கை அணியை தோற்கடித்து போட்டித் தொடரை சமநிலைப்படுத்த முயற்சிசெய்யலாம்.

இதேவேளை, இப் போட்டிக்கு காலநிலை சாதகமாக அமையுமா என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்விக்குறியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/17769

  • தொடங்கியவர்

100-வது டெஸ்ட்டில் வங்கதேசம்

 

 

வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே காலே நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் வங்கதேச அணி 259 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

தொடரில் 0-1 என வங்கதேச அணி பின்தங்கி உள்ள நிலையில் கொழும்பு நகரில் உள்ள சரவணமுத்து மைதானத்தில் இன்று 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கையுடன் அந்த அணி மோத உள்ளது. வங்கதேச அணிக்கு இது 100-வது டெஸ்ட் போட்டி ஆகும்.

2000-ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட்டில் அறிமுகமான அந்த அணி இதுவரை 99 டெஸ்ட்டில் விளையாடி 76 தோல்விகளை பெற்றுள்ளது. 17 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வரும் வங்கதேச அணி 8 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 15 ஆட்டங்களை டிரா செய்துள்ளது.

எந்த ஒரு அணியும் தனது முதல் 100 டெஸ்ட் போட்டிகளில் இந்த அளவுக்கு அதிக தோல்விகளை பெற்றதில்லை. நியூஸிலாந்து தனது முதல் 100 டெஸ்ட் போட்டிகளில் 7 ஆட்டங்களில்தான் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் 45 போட்டிகளை டிரா செய்திருந்தது.

வங்கதேச அணி பெற்ற 8 வெற்றிகளில் 4 ஜிம்பாப்வே அணிக்கு எதிரானது. வெளிநாடுகளில் 46 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிகளில் இரண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரானது, ஒரு வெற்றி ஜிம்பாப்வே அணிக்கு எதிரானது.

வங்கதேச அணி 2001 முதல் 2004-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தொடர்ச்சியாக 21 டெஸ்ட்டில் தோல்வி கண்டது. வேறு எந்த அணியும் தொடர்ச்சியாக இப்படி தோல்விகளை சந்தித்தது இல்லை. எனினும் சமீபகாலமாக அந்த அணியின் ஆட்டத்தில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான உள்நாட்டு தொடரை 1-1 என டிரா செய்திருந்தது. மேலும் கடந்த 4 டெஸ்ட் போட்டிகளையும் அந்த அணி 5 நாட்கள் முழுமையாக விளையாடி உள்ளது. எந்த அணிக்குமே 100-வது போட்டி என்பது வரலாற்று சிறப்புமிக்கதாகவே இருக்கும். இதனால் இந்த போட்டியில் முடிந்தவரை வங்கதேச அணி வெற்றி பெற முயற்சிக்கக்கூடும்.

http://tamil.thehindu.com/sports/100வது-டெஸ்ட்டில்-வங்கதேசம்/article9584688.ece?homepage=true

  • தொடங்கியவர்
பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கத்தை தகர்த்து ஓட்டம் குவித்த சந்திமால்
Sri Lanka vs Bangladesh

பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கத்தை தகர்த்து ஓட்டம் குவித்த சந்திமால்

 
singer-league-2017-728.jpg

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, இன்று கொழும்பு P. சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமாகியது.

பங்களாதேஷ் அணி விளையாடும் 100 ஆவது இந்த டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியினை கடந்த டெஸ்ட் போட்டி போன்று இப் போட்டியிலும் தமதாக்கி கொண்ட இலங்கை அணியின் தலைவர் ரங்கன ஹேரத் இம்முறை துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.

மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாயிருந்த காரணத்தினாலும், இலங்கை அணி முன்வரிசை வேகப்பந்து வீச்சாளர் ஒருவருடன் மாத்திரமே இப்போட்டியில் களமிறங்குவதும் ரங்கன ஹேரத்தின் நாணய சுழற்சி முடிவுகளிற்கு காரணமாக கருதப்படுகிறது. ஏனெனில், கடந்த போட்டியில், தமது சுழல் குழாமினை மாத்திரம் வைத்து இலங்கை பங்களாதேசுக்கு அழுத்தம் தந்த காரணத்தினால் இலங்கை அணியில் இப்போட்டிக்காக, துடுப்பாட்ட வீரர் தனஞ்சய டி சில்வாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டதோடு வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவிற்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், தொடரில் 1-0 என இலங்கை அணி முன்னிலை வகிப்பதால், இத் தொடரினை சமநிலைப்படுத்தும் நோக்கில் பங்களாதேஷ் குழாமில் நான்கு வீரர்கள் மாற்றப்பட்டிருந்தனர்.

மொமினுல் ஹக், லிடொன் தாஸ் (காயம்), தஸ்கின் அஹமட் மற்றும் மஹமதுல்லாஹ் ஆகியோருக்கு இப்போட்டியில் ஓய்வளிக்கப்பட்டதோடு அவர்களிற்கு பதிலாக விருந்தினர் அணி இம்ருல் கைஸ், சப்பீர் ரஹ்மான், தய்ஜூல் இஸ்லாம் மற்றும் புதுமுக வீரர் மொசாதீக் ஹூசைன் ஆகியோருக்கு வாய்ப்பளித்தது.

இதனையடுத்து, நாணய சுழற்சி முடிவுகளிற்கு அமைவாக திமுத் கருணாரத்ன மற்றும் உபுல் தரங்க ஆகியோருடன், துடுப்பாட மைதானம் விரைந்த இலங்கை அணி மெதுவான ஆரம்பத்தினையே தந்தது.

போட்டியின் ஆரம்பத்தில், 7 ஓட்டங்களினை மாத்திரம் குவித்திருந்த கருணாரத்ன இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக பறிபோய் ஏமாற்றத்தினை தந்தார். இதனால், துல்லியமான வேகப்பந்து ஒன்றினை வீசிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் இலங்கையின் ஆரம்ப வீரர்களில் ஒருவரை வீழ்த்தி பங்களாதேஷ் அணிக்கு நல்ல ஆரம்பத்தினைப் பெற்றுத்தந்தார்.

பின்னர் இலங்கை அணி, களத்திற்கு வந்த குசல் மெண்டிசுடன் போட்டியின் ஆதிக்கத்தைப் பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட சந்தர்ப்பத்தில், பந்தினை கையில் எடுத்த மெஹதி ஹஸன் தந்திரமான பந்து வீச்சு ஒன்றின் மூலம் இன்றைய போட்டியில் விக்கெட் காப்பாளர் பொறுப்பினை எடுத்துக்கொண்ட பங்களாதேஷ் அணியின் தலைவர் முஸ்பிகுர் ரஹீம் ஸட்ம்பின் மூலம் கடந்த போட்டியின் ஆட்ட நாயகனை வெறும் 5 ஓட்டங்களுடன் ஓய்வறை அனுப்பினார்  

இதனை அடுத்து, சிறிது நேரத்தில் இலங்கை அணியின் மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்கவும் இலங்கை அணி 30 ஓட்டங்களை எட்டிய வேளையில், மீண்டும் திறமையினை வெளிக்காட்டிய  மெஹதி ஹஸன் மூலம் வீழ்த்தப்பட கடந்த போட்டியின் வெற்றிக்கு காரணமாய் இருந்த முக்கிய வீரர்கள் இருவரினையும் பறிகொடுத்த இலங்கை அணி தடுமாற்றத்தினை சந்தித்தது.

இதனை அடுத்து, களத்தில் நின்ற துடுப்பாட்ட வீரர்களான தினேஷ் சந்திமால் மற்றும் அசேல குணரத்ன ஆகியோர் கவனமான முறையில் அணிக்காக ஓட்டங்களை குவிக்கத் தொடங்கினர்.

இவர்கள் இருவரினது இணைப்பாட்டம் மூலம் இலங்கை அணிக்கு ஒரு சிறந்த அத்திவாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும், வலது கை வேகப்பந்து வீச்சாளர் சுபாசிஸ் ரோய் அசேல குணரத்னவை ஆட்டமிழக்கச் செய்து அந்த எதிர்பார்ப்பையும் தகர்த்தார்.

இதனால், கடந்த போட்டியில் அரைச்சதம் விளாசியிருந்த அசேல குணரத்தன இம்முறை வெறும் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இவரின் விக்கெட்டுடன் இரு அணி வீரர்களும் பகல் போசண இடைவேளையை எடுத்துக் கொண்டனர்.

பின்பு தினேஷ் சந்திமாலுடன், கூட்டு சேர்ந்த தனஞ்சய டி சில்வா மற்றும் இலங்கையின் விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் பெறுமதி சேர்க்கும் விதமாக, தலா 34 ஓட்டங்களினை பெற்று தந்து அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையை தேநீர் இடைவைளையை அடுத்து 150 ஓட்டங்களை தாண்ட வைத்தனர்.

இவர்கள் இருவரும், பங்களாதேஷின் இடது கை சுழல் பந்து வீச்சாளர்களான தய்ஜூல் இஸ்லாம் மற்றும் சகீப் அல் ஹஸன் ஆகியோரால் முறையே வீழ்த்தப்பட, களம் நுழைந்த தில்ருவான் பெரேரா, சிக்ஸர் ஒன்றினை விளாசி இலங்கை சார்பாக சிக்ஸர்கள் இப்போட்டியில் அடிக்கப்படாத குறையினை நிவர்த்தி செய்து 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இவரின் விக்கெட்டுடன், 7 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி, நீண்ட நேர இன்னிங்ஸ் ஒன்றினை வெளிப்படுத்திய தினேஷ் சந்திமாலின் துணையுடன், 200 ஓட்டங்களை கடந்தது. இதனை அடுத்து, போட்டியினை நடாத்த போதிய வெளிச்சம் இன்றி காணப்பட்டதன் காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டு போட்டியின் இன்றைய ஆட்ட நாளும் நிறைவுற்றதாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது.

போட்டியின் இன்றைய நாள் ஆட்ட நேர நிறைவின் போது, இலங்கை அணி 83.1 ஓவர்களிற்கு 7 விக்கெட்டுகளை இழந்து 238 ஓட்டங்களினைப் பெற்றிருந்தது.

களத்தில், அணிக்காக இன்று போராடிய தினேஷ் சந்திமால் 4 பவுண்டரிகள் அடங்கலாக 86 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் ரங்கன ஹேரத் 18 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் நிற்கின்றனர்.

பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சில், முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் மெஹதி ஹஸன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியுள்ளனர்.

 

SL 1st Inn

 

போட்டியின் இரண்டாம் நாளை தொடரும்

http://www.thepapare.com

  • தொடங்கியவர்

முதல் நாளில் தடுமாறிய இலங்கை : இன்றைய தினம் மீளுமா?

 

 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில் இலங்கை அணி 7 விக்கட்டுகளை இழந்து 238 ஓட்டங்கள பெற்றிருந்தது.

000_MO3RC.jpg

இந்நிலையில் இன்று ஆட்டத்தை ஆரம்பித்துள்ள இலங்கை அணி 243 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.

இலங்கை அணி சார்பில் சந்திமால் ஆட்டமிழக்காமல் 90 ஓட்டங்களையும், ஹேரத் 23 ஓட்டங்களையும் பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

பங்களாதேஷ் அணி சார்பில் முஸ்தபிகூர் 2 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000_MO38W.jpg

http://www.virakesari.lk/article/17851

  • தொடங்கியவர்

சாரா ஓவல் மைதானத்தில் சந்திமால் படைத்த சாதனை!

 

 

இலங்கை அணியின் வீரர் தினேஸ் சந்திமால் சாரா ஓவல் மைதானத்தில் மிக அதிக பந்துகளில் சதத்தினை பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

000_MP3JS.jpg

இவர் பங்களாதேஷ் அணிக்கெதிராக இடம்பெற்றுவரும் டெஸ்ட் போட்டியில் இன்று 244 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.

குறித்த சதமே சாரா ஓவல் மைதானத்தில் பெறப்பட்ட மிக மெதுவான சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் அணிக்கெதிராக இடம்பெற்றுவரும் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆடிவரும் இலங்கை அணி 9 விக்கட்டுகளை இழந்து 310 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.

000_MP3KA.jpg

 

 
 

http://www.virakesari.lk/article/17859

  • தொடங்கியவர்
Sri Lanka 338
Bangladesh 93/0 (26.5 ov)
Bangladesh trail by 245 runs with 10 wickets remaining in the 1st innings
  • தொடங்கியவர்
சந்திமாலின் சதத்துடன் மீண்ட இலங்கை : அபார ஆட்டத்தைக் காட்டிய பங்களாதேஷ் ஆரம்ப வீரர்கள்
C-96.jpg

சந்திமாலின் சதத்துடன் மீண்ட இலங்கை : அபார ஆட்டத்தைக் காட்டிய பங்களாதேஷ் ஆரம்ப வீரர்கள்

singer-league-2017-728.jpg

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இறுதிக் கட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய இலங்கை அணி 124 ஓட்டங்களால் எதிரணியை விட முன்னிலை பெற்றுள்ளது.  

பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கத்தை தகர்த்து ஓட்டம் குவித்த சந்திமால்

P. சரவணமுத்து மைதானத்தில் நேற்று ஆரம்பமாகியிருந்த இப்போட்டியின் முதலாம் நாளில் பந்து வீச்சுத் துறையில் பங்களாதேஷ் ஆதிக்கத்தினை காண்பித்திருந்தது. எனினும் தினேஷ் சந்திமாலின் போராட்டத்துடன் இலங்கை அணி தமது முதல் நாள் ஆட்டநேர முடிவின்போது 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 238 ஓட்டங்களைக் குவித்திருந்தவாறு போட்டியின் இரண்டாம் நாளான இன்று தமது  முதலாம் இன்னிங்ஸ் ஆட்டத்தினை தொடர்ந்தது.

களத்தில் அரைச் சதம் கடந்திருந்த சந்திமால் 86 ஓட்டங்களுடனும், இலங்கை அணியின் தலைவர் ரங்கன ஹேரத் 18  ஓட்டங்களுடனும் இன்றைய நாளினை ஆரம்பம் செய்தனர்.

போட்டி ஆரம்பித்து  அரைமணி நேரத்திற்குள் இலங்கை அணியின் 8 ஆவது விக்கெட் பறிபோனது. சகீப் அல் ஹஸனின் பந்து வீச்சில் செளம்யா சர்க்கரிடம் பிடிகொடுத்த ரங்கன ஹேரத் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இவர் 8 ஆம் விக்கெட்டிட்காக அரைச்சத (55) இணைப்பாட்டம் ஒன்றினை சந்திமாலுடன் சேர்ந்து பெற்று, அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை 250 ஐ நெருங்க உதவினார்.

ஹேரத்தின் விக்கெட்டினை தொடர்ந்து மைதானத்தில் இருந்த சந்திமால் சதம் தாண்டி அணிக்கு இன்றைய நாளிலும் முதுகெலும்பாக செயற்பட்டார். நீண்ட நேர இன்னிங்ஸ் ஒன்றினை வெளிப்படுத்திய சந்திமால்,  இறுதியில் மெஹதி ஹஸனின் சுழலிற்கு இரையாகி இலங்கையின் 9ஆம் விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

ஆட்டமிழக்கும் போது, மொத்தமாக 300 பந்துகளினை எதிர்கொண்ட சந்திமால் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உள்ளடங்களாக 138 ஓட்டங்களினை விளாசி இருந்ததுடன், இப்போட்டியின் மூலம் தனது 8ஆவது சர்வதேச டெஸ்ட் சதத்தினையும் பதிவு செய்து கொண்டார்.

சென்ற போட்டியின் இரண்டாம் இன்னிங்சில் பங்களாதேசுக்கு எதிராக அரைச் சதம் விளாசி இப்போட்டியிலும் ஜொலித்திருக்கும் சந்திமால், இப்போட்டியின் மூலம் பெற்ற சதம் பங்களாதேஷ் அணிக்கு எதிராக பெற்ற நான்காவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் 9ஆவது விக்கெட்டுக்கும் 8ஆம் விக்கெட் மூலம் பெறப்பட்ட அதே இணைப்பாட்டம் (55) சந்திமாலின் பெரும் பங்களிப்புடன் பெறப்பட்டிருந்தது.

பின்னர், இலங்கை அணி இறுதி துடுப்பாட்ட வீரர்கள் லக்மால் மற்றும் சந்தகன் ஆகியோர் சேர்த்த சில பெறுமதியான ஓட்டங்களுடன், சகல விக்கெட்டுக்களையும் இழந்து 113.3 ஓவர்களில் தமது முதல் இன்னிங்சுக்காக 338 ஓட்டங்களினைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி இந்த இன்னிங்சில் பின்வரிசை மூலம் மொத்தமாக (7 ஆவது விக்கெட் பறிபோனதிலிருந்து) 143 ஓட்டங்களினைக் குவித்து எதிரணியின் நேற்றைய சவாலான பந்து வீச்சிற்கு பதிலடி கொடுத்து மீண்டது. இதில், இலங்கை அணியின் இறுதி விக்கெட்டாக பறிபோன சுரங்க லக்மால் விரைவாகப் பெற்றுக்கொண்ட 35 ஓட்டங்களுடன் தனது டெஸ்ட் வாழ்க்கையில் சிறந்த துடுப்பாட்டத்தினை இப்போட்டியின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார்.

பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சில் மெஹதி ஹஸன் மொத்தமாக 3 விக்கெட்டுக்களையும், இலங்கை அணிக்கு இறுக்கம் தரும் வகையில் பந்து வீசிய சகலதுறை ஆட்டக்காரர் சகீப் அல் ஹஸன், முஹ்தபிசுர் ரஹ்மான் மற்றும் சுபாசிஸ் ரோய் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

இலங்கை அணியின் இன்னிங்சுடன் வீரர்களிற்கு மதிய போசன இடைவேளை வழங்கப்பட்டிருந்தது. பின்னர், பங்களாதேஷ் விளையாடும் இந்த நூறாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பிக்க தமிம் இக்பால் மற்றும் செளம்யா சர்க்கர் ஆகியோர்  மைதானம் விரைந்தனர்.

இரு ஆரம்ப வீரர்களும் சிறப்பாக துடுப்பாடி தமது அணிக்கு சிறந்த ஆரம்பத்தினை தந்திருந்ததோடு, இலங்கைப் பந்து வீச்சாளர்களுக்கும் சவாலாக காணப்பட்டனர்.

நீண்ட நேரம் நீடித்த இவர்களின் இணைப்பாட்டம் 95 ஓட்டங்களுடன் தகர்க்கப்பட்டது. இதன் மூலம் இலங்கை அணிக்கு மிகவும் தேவையாகவிருந்த எதிரணியின் முதல் விக்கெட்டினை மூன்றாம் நடுவரின் தீர்ப்புடன் ரங்கன ஹேரத் பெற்றுக் கொண்டார். பங்களாதேஷின் முதல் விக்கெட்டாக பறிபோன, இடது கை வீரர் தமீம் இக்பால் 6 பவுண்டரிகள் உள்ளடங்களாக 49 ஓட்டங்களுடன் தனது 22 ஆவது டெஸ்ட் அரைச் சதத்தினை தவறவிட்டிருந்தார்.

இக்பாலின் விக்கெட்டினை தொடர்ந்து போட்டியில் தேநீர் இடைவேளை எடுக்கப்பட்டிருந்தது. எனினும், தேநீர் இடைவேளையினை தொடர்ந்து அரைச் சதம் கடந்த செளம்யா சர்க்கரின் ஆட்டத்துடன் பங்களாதேஷ் ஓட்டங்களினை சேர்ப்பதில் நேரான நிலையிலையே காணப்பட்டிருந்தது. எனினும், லக்ஷன் சந்தகன் மூலம் பின்னர் செளம்யா சர்க்கரின் விக்கெட் வீழ்த்தப்பட்டது.

ஆட்டமிழக்கும் போது, சர்க்கர் மொத்தமாக 61 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார். இவரின் விக்கெட்டினைத் தொடர்ந்து மூன்றாம் விக்கெட்டுக்காக இம்ருல் கைஸ் மற்றும் சப்பீர் ரஹ்மான் ஆகியோரால் பிரயோஜனமான இணைப்பாட்டம் (62) அணிக்கு வழங்கப்பட்டிருந்தது.

எனினும், மீண்டும் பந்தினை கையில் பற்றிக்கொண்ட சந்தகன் 57 ஆவது ஓவரில்  தான் வீசிய நான்காவது மற்றும் ஐந்தாவது பந்துகளில் தொடர்ச்சியான முறையில் இரண்டு விக்கெட்டுக்களை சாய்த்து, பங்களாதேஷ் அணிக்கு மிரட்டல் விடுக்க, இம்ருல் கைஸ் (34) மற்றும் தய்ஜுல் இஸ்லாம் (0) ஆகியோர் ஓய்வறை திரும்பினர்.

இதனையடுத்து, சிறிது நேரத்தில் 5ஆவது விக்கெட்டினையும் லக்மாலின் பந்து வீச்சில், விரைவான முறையில் பறிகொடுத்த பங்களாதேஷ் அணி சிறப்பான ஆட்டம் ஒன்றினை வெளிக்கொணர்ந்த சப்பீர் ரஹ்மானையும் (42) பறிகொடுத்தது.

முடிவில் போட்டியின் இரண்டாம் நாள் நிறைவுற மேலதிக விக்கெட் இழப்பின்றி 60 ஓவர்களிற்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 214 ஓட்டங்களினை பங்களாதேஷ் அணி குவித்திருந்தது.

புதிய துடுப்பாட்ட வீரர்களான சகீப் அல் ஹஸன் 18 ஓட்டங்களுடனும் பங்களாதேஷ் அணியின் தலைவர் முஸ்பிகுர் ரஹீம் 2 ஓட்டங்களுடனும் களத்தில் நிற்கின்றனர்.

இலங்கையின் பந்து வீச்சில் இன்றைய நாளில், ஹெட்ரிக் வாய்ப்பொன்றினை தவறவிட்டிருந்த லக்ஷன் சந்தகன் 65 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

போட்டியின் மூன்றாம் நாள் நாளை தொடரும்

 
 
 
 

http://www.thepapare.com

  • தொடங்கியவர்
Sri Lanka 338
Bangladesh 316/6 (88.0 ov)
  • தொடங்கியவர்

சுரங்க லக்மாலுக்கும், ஷகிப் அல் ஹசனும் இடையில் மைதானத்தில் மோதல் ; சம்பவ காணொளி வெளியாகியது

 

 

பங்களாதேஷ் அணி வீரர் ஷகிப் அல் ஹசனும் இலங்கை பந்து வீச்சாளரான சுரங்க லக்மாலுக்கும் இடையில் மைதானத்தில் வைத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

பங்களாதேஷ் அணிக்கெதிராக இடம்பெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இறுதியாக துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி வீரரான சுரங்க லக்மாலுக்கும் பங்களாதேஷ் அணி வீரரான ஷகிப் அல் ஹசனுக்கும் இடையில் கருத்து பரிமாற்றம் மோதலாகியுள்ளது.

குறித்த மோதல் தொடர்பான காணொளி இணையத்தில் வெளியாகி பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.

http://www.virakesari.lk/article/17910

  • தொடங்கியவர்
சகீபின் சதத்துடன் போட்டியை கட்டுக்குள் வைத்திருக்கும் பங்களாதேஷ்
C-97.jpg

சகீபின் சதத்துடன் போட்டியை கட்டுக்குள் வைத்திருக்கும் பங்களாதேஷ்

 
singer-league-2017-728.jpg

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான இரண்டாம் டெஸ்ட்டின் மூன்றாம் நாள் ஆட்ட நிறைவின்போது, துடுப்பாட்டத்தில் ஆதிக்கத்தை முழுமையாக பிரயோகித்த பங்களாதேஷ் அணி இலங்கையை  விட 75 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

சந்திமாலின் சதத்துடன் மீண்ட இலங்கை : அபார ஆட்டத்தைக் காட்டிய பங்களாதேஷ் ஆரம்ப வீரர்கள்

போட்டியின் இரண்டாம் நாளான நேற்றைய நாளின் இறுதிப் பகுதியில் இலங்கைப் பந்து வீச்சாளர்களின் மூலம் அழுத்தத்திற்கு உட்பட்டிருந்த பங்களாதேஷ் அணி, முதல் இன்னிங்சிற்காக 5 விக்கெட்டுக்களை இழந்து 215 ஓட்டங்களினை பெற்றிருந்தவாறு இன்றைய நாள் ஆட்டத்தினை ஆரம்பித்தது.

களத்தில் நின்ற சகீப் அல் ஹஸன் (18), பங்களாதேஷ் அணித் தலைவர் முஸ்பிகுர் ரஹீம் (2) ஆகியோர் தமது அணி நேற்றைய நாளின் பிற்பகுதியில் விட்ட பிழைகளை சரிசெய்து பங்களாதேஷின் நூறாவது டெஸ்ட் போட்டிக்காக கடுமையாக உழைக்க தயாராகினர்.  

எதிரணியை விட தாம் பின்தங்கியிருக்கும் 124 ஓட்டங்களினை எட்ட போட்டியின் ஆரம்பத்தில் கவனமான முறையில் இலங்கை பந்து வீச்சாளர்களினை கையாண்டவாறு ஆடத் தொடங்கிய இருவரும், பொறுப்பாகச் செயற்பட்டு ஆறாவது விக்கெட்டிற்காக உறுதியான இணைப்பாட்டம் ஒன்றினை வழங்கினர்.

இலங்கை அணிக்கு, ரன் அவுட் முறையில் விக்கெட் பெறும் வாய்ப்பொன்று 77 ஆவது ஓவரில் கிட்டியிருந்த போதும், அது கைகூடியிருக்கவில்லை. நீண்ட நேரத் தேவையாக இருந்த இலங்கையின் இன்றைய நாளிற்கான விக்கெட்டினை 80 ஓவரின் பின்னர் எடுக்கப்பட்டிருந்த புதிய பந்தின் மூலம், சுரங்க லக்மால் பெற்றுக்கொண்டார்.  

இதனால், பங்களாதேஷின் ஆறாம் விக்கெட்டின் வலுவான இணைப்பாட்டம் 92 ஓட்டங்களுடன் முடிவுற்றது. லக்மாலின் பந்து வீச்சு மூலம் நேர்த்தியான முறையில் போல்ட் செய்யப்பட்ட எதிரணித் தலைவர் ரஹீம் தனது 17ஆவது டெஸ்ட் அரைச் சதத்துடன், மொத்தமாக 52 ஓட்டங்களினைப் பெற்று வெளியேறினார்.

இதனையடுத்து, இப்போட்டியின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகும் மொசாதிக் ஹொசைனுடன் ஜோடி சேர்ந்த சகீப் அல் ஹஸன் அணியினை தான் பெற்ற அரைச் சதத்துடன் போட்டியின் மதிய போசணம் வரை மேலதிக விக்கெட் இழப்பின்றி, இலங்கை முதல் இன்னிங்சுற்காக பெற்றிருந்த ஓட்ட எண்ணிக்கையை நெருங்கச் செய்தார்.

பின்னர், சகீப் சதம் விளாசியதோடு, 7ஆவது விக்கெட்டுக்காக 131 ஓட்டங்கள் என்கிற அதிவலுவான இணைப்பாட்டத்தினையும் அறிமுக வீரர் ஹொசைன் உடன் இணைந்து பகிர்ந்து இலங்கை அணியினரை விட பங்களாதேஷ் முதலாம் இன்னிங்சில் முன்னேறுவதற்கு பெரும் பங்காற்றினார்.

போட்டியின் தேநீர் இடை வேளைக்கு சற்று முன்னதாக, லக்ஷன் சந்தகனினால் வீழ்த்தப்பட்ட சகீப் அல் ஹஸன், தனது ஐந்தாவது சர்வதேச டெஸ்ட் சதத்தினை பூர்த்தி செய்ததோடு, மொத்தமாக 159 பந்துகளினை எதிர்கொண்டு 10 பவுண்டரிகளுடன் 116 ஓட்டங்களினை பெற்றிருந்தார்.

இவ்வருட ஆரம்பத்தில் நியூசிலாந்திற்கு எதிராக இரட்டைச் சதம் விளாசியிருந்த ஹஸன், இப்போட்டியின் மூலம் பெற்ற சதம் இலங்கை அணிக்கு எதிராக சகீப் பெற்ற முதலாவது டெஸ்ட்  சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து கன்னி டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடும் வாய்ப்பினை பெற்றுக்கொண்ட மொசாதிக் ஹொசைன் தனது கன்னி  அரைச் சதத்துடன், பங்களாதேஷ் அணி 400 ஓட்டங்களினை தாண்டி வலுப்பெற்றவாறு போட்டியின் தேநீர் இடைவேளையினை எடுத்துக்கொண்டது.

அதனைத் தொடர்ந்து பந்தினை கையில் எடுத்த இலங்கை அணித் தலைவர் ஹேரத் 129 ஆவது ஓவரில், பங்களாதேஷின் 8ஆம் விக்கெட்டினை வீழ்த்தி தனது மற்றொரு சாதனையைப் பதிவு செய்தார்.  

இதனையடுத்து அதே ஓவரின் அடுத்த பந்தில் பங்களாதேஷ் அணியின் 9ஆவது விக்கெட்டாக, முஸ்தபிசுர் ரஹ்மானை வீழ்த்திய ஹேரத், தனது முதல்தர கிரிக்கெட் வாழ்க்கையில் 1000ஆவது விக்கெட்டினைப் பெற்றுக்கொண்டார். இதன்மூலம் இலங்கை சார்பாக 1000 முதல்தர விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் இரண்டாம் நபராகவும் தனது பெயரினைப் பொறித்துக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, பங்களாதேஷ் அணியின் இறுதி விக்கெட்டினையும் ஹேரத் கைப்பற்ற, அவ்வணி தமது முதல் இன்னிங்சிற்காக, 134.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 467 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டது.  

இறுதியாக பங்களாதேஷ் அணியில் ஆட்டமிழந்த மொசாதிக் ஹூசைன், மொத்தமாக 155 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் உள்ளடங்களாக 75 ஓட்டங்களினைக் குவித்ததோடு தனது முதல் போட்டியின் மூலம் அணிக்கு நம்பிக்கை தரும் ஒரு வீரராகவும் மாறியிருக்கின்றார்.

சர்வதேச கிரிக்கெட் சபை தலைவர் சஷாங் மனோகர் திடிர் ராஜினாமா!

இலங்கை அணியின் பந்து வீச்சில் ஹட்ரிக் வாய்ப்பொன்றினை தவறவிட்டிருந்த ஹேரத் மற்றும் சந்தகன் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர். பங்களாதேஷில் பறிபோன மேலதிகமான இரு விக்கெட்டுக்களிலும் சுரங்க லக்மால் தனது பெயரினை பதித்தார்.

இதன்மூலம் தமது முதல் இன்னிங்ஸ் மூலம் 129 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற பங்களாதேஷ் வெளிநாட்டு மைதானம் ஒன்றில் தாம் எதிரணியை விட முதலாம் இன்னிங்சிற்காக முன்னிலை பெற்ற அதிக ஓட்டங்களினை இப்போட்டியின் மூலம் பெற்றுக்கொண்டு இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்சில் களத்தடுப்பு செய்ய மைதானம் விரைந்தது.

இன்றைய நாளின் மூன்றாம் பாதியின் பிற்பகுதியில் தமது இரண்டாம் இன்னிங்சினை ஆரம்பித்த இலங்கை, போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில் 13 ஓவர்களிற்கு விக்கெட் இழப்பின்றி 54 ஓட்டங்களினைப் பெற்று நல்ல ஆரம்பத்தினை வெளிக்கொணர்ந்தது.

இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான, திமுத் கருணாரத்ன மற்றும் உபுல் தரங்க ஆகியோர் தலா 25 ஓட்டங்களினைப் பெற்றவாறு களத்தில் நிற்கின்றனர்.

போட்டியின் நான்காம் நாள் நாளை தொடரும்

 
 

http://www.thepapare.com

  • தொடங்கியவர்

சுவர் போல் நின்ற சகிப் ஹல் ஹசன் : பங்களாதேஷின் நூறாவது போட்டியில் சதம் கண்டு அசத்தல் , இன்று 4 ஆவது நாள்

Published by Priyatharshan on 2017-03-18 09:45:24

 

இலங்­கைக்கு எதி­ரான 2ஆவது டெஸ்ட் போட்­டியில் பங்­­ளாதேஷ் அணி முதல் இன்­னிங்ஸில் 467 ஓட்­டங்­களைக் குவித்து இலங்­கையை விட 129 ஓட்­டங்கள் முன்­னிலை பெற்­றுள்­ளது.

260285.jpg

இலங்கை –- பங்­­ளாதேஷ் அணி­­ளுக்­கி­டை­யி­லான 2ஆவது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடை­பெற்று வரு­கி­றது. இந்த போட்டி பங்­­ளாதேஷ் அணிக்கு 100ஆவது டெஸ்ட் போட்­டி­யாகும்.

ஏற்­­னவே காலியில் நடை­பெற்ற முதல் போட்­டியில் தோல்­வி­­டைந்­­தற்கு, இந்த போட்­டியில் வெற்றி பெற்று இரண்டு போட்­டிகள் கொண்ட தொடரை சமன் செய்ய வேண்டும் என்ற நோக்­கத்தில் பங்­­ளாதேஷ் கள­மி­றங்­கி­யது.

இதில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை அணி முதல் இன்­னிங்ஸில் 338 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது. சந்­திமால் சதம் அடித்து இலங்கை அணியின் ஓட்டக் குவிப்­புக்கு முக்­கிய கார­­மாக இருந்தார்.

பின்னர் பங்­­ளாதேஷ் அணி முதல் இன்­னிங்ஸை தொடங்கியது. அந்த அணி ஒரு கட்­டத்தில் 191 ஓட்­டங்­­ளுக்கு 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்­தி­ருந்­தது. அதன்பின் 198 ஓட்­டங்­­ளிற்கு 5 விக்­கெட்­டுக்­களை இழந்­தது. இதனால் சற்று தடு­மாற்றம் அடைந்­தது.

6ஆவது விக்­கெட்­டுக்கு ஜோடி சேர்ந்த சஹிப் அல்ஹசன், தலைவர் ரஹிம் ஆகியோர் சிறப்­பான ஆட்­டத்தை வெளிப்­­டுத்­தி­னார்கள். குறிப்­பாக சஹிப் அல் ஹசன் இலங்கையின் பந்து வீச்சை சிர­­மின்றி எதிர்­கொண்டார். ரஹிம் 52 ஓட்­டங்கள் எடுத்த நிலையில் ஆட்­­மி­ழந்தார். இந்த ஜோடி 6ஆவது விக்­கெட்­டுக்கு 92 ஓட்­டங்­களைக் குவித்­தது.

அடுத்து அறி­முக வீரர் மொசாடெக் ஹொசைன் கள­மி­றங்­கினார். அவர் இலங்­கையின் தரம்­வாய்ந்த சுழற்­பந்து வீச்சை சிறப்­பாக எதிர்­கொண்டார். இவர் நிலைத்து நிற்க, மறு­மு­னையில் சஹிப் அல்ஹசன் சதம் அடித்து 116 ஓட்­டங்­­ளுடன் வெளி­யே­றினார்.

இந்த சதம் மூலம் தனது அணியின் 100ஆவது போட்­டியில் சதம் அடித்த வீரர் என்ற பெரு­மையை பெற்­றுள்ளார்.  29 வய­தாகும் சஹிப் அல்ஹச­னுக்கு இது 49ஆவது டெஸ்ட் போட்­டி­யாகும்.

மொசாடெக் ஹொசைன் 75 ஓட்­டங்­களைப் பெற்று கடைசி விக்­கெட்­டாக ஆட்­­மி­ழந்தார். பங்­­ளாதேஷ் அணி 134.1 ஓவர்­களில் 467 ஓட்­டங்­களைக் குவித்து ஆட்­­மி­ழந்­ததுஇதன்­மூலம் முதல் இன்­னிங்ஸில் பங்­­ளாதேஷ் 129 ஓட்­டங்கள் முன்­னிலை பெற்­றுள்­ளது.

அதைத் தொடர்ந்து இரண்­டா­வது இன்­னிங்ஸை ஆரம்­பித்­துள்ள இலங்கை அணி நேற்­றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 54 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. திமுத் மற்றும் தரங்க ஆகியோர் தலா 25 ஓட்டங்கள் வீதம் பெற்று களத்தில் உள்ளனர்.

இன்று போட்டியின் நான்காவது நாள் ஆட்டமாகும்இன்றைய முழு நாளிலும் இலங்கை அணி களத்தில் நிற்க வேண்டியது கட்டாயமாகும். காரணம் நான்காம் நாளிலிருந்து ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

http://www.virakesari.lk/article/17921

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.