Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனது மகன் சுட்டு கொல்லப்பட்டார் என்பதை அறிந்த அந்த தந்தையின் கதறல்

Featured Replies

Shooting-at-prison-bus-kills-seven-in-Ka

எதிர்வரும் 10 ஆம் திகதி வீட்டுக்கு வருவேன் என்று கூறிய எனது மகன் சுட்டு கொலை செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன் என களுத்துறை பகுதியில் சிறைச்சாலை பஸ் மீது  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மட்டக்களப்பு, காரைதீவைச் சேரந்த இளைஞரின் தந்தை கண்ணீர்மல்க தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் களுத்துறை  சிறைச்சாலை பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில், களுத்துறை சிறைச்சாலையில் கடமை புரிந்த மட்டக்களப்பு காரைத்தீவைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தரான 24 வயதுடைய தர்மீகன் சிவானந்தம் என்ற இளைஞர் உயிரிழந்தார்.1514521_10201155739489569_805152682_n.jp

தனது மகனின் இறப்பு தொடர்பில் தெரிவித்த தந்தை ப. சிவானந்தம்,

'எனது மூத்தமகன் தர்மிகன் வெளிநாடு செல்லவேண்டும் என்பதற்காக ஆங்கில உயர்பரீட்சை எழுதுவதற்கு வசதியாக கொழும்பில் படிக்கலாம் என கருதி  சிறைச்சாலைத் திணைக்களத்தில் இணைந்து பணியாற்றினார். அவருக்கு சிறைச்சாலை நிருவாகமும் போதிய ஒத்துழைப்பையும் வசதியையும் வழங்கியிருந்தது.

Ddsdff.jpg

அடுத்தவருடம் அவர் நியுசிலாந்து செல்லவிருந்தார். அதற்காக இந்தவருடம் ஏப்ரல் மாதத்தோடு தொழிலை விட திட்டமிட்டிருந்தார். அவர் சேவையில் இணைந்து ஒருவருடமும் எட்டு மாதங்களுமாகின்றன. 

மாத்தறை மகசின் களுத்துறை சிறைச்சாலைகளில் அவர் கடமைபுரிந்துள்ளார்.

கடந்தவாரம் சிவராத்திரி விடுமுறைக்காக வீட்டுக்கு வந்து சென்றார்.

 ஆங்கில உயர்பரீட்சைக்குத் தோற்றவேண்டும் என்பதற்காக எதிர்வரும் 10ஆம் திகதி வீட்டுக்கு வருவேன் என்றுகூறி வேலைக்குச் சென்றவரை களுத்துறை ஆஸ்பத்திரியில் சடலமாப் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தேன்.

 

நேற்று அதிகாலை 3 மணிக்கு சடலத்தை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் குடும்பத்தினரிடம் கையளித்த நிலையில், தந்தை தனது கவலையை வெளியிட்டார்.

 

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை காலை 9 மணியளவில் எனது போனுக்கு களுத்துறைசிறைச்சாலை பஸ் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வந்தது. எனது மகனும் அங்கு வேலை செய்வதால் உடனடியாக களுத்துறை சிறைச்சாலையை தொடர்பு கொண்டேன். எனினும் அங்கு பதில் இல்லை.

D00d2d.jpg

இனத்போது எனது மகனோ வேலை செய்யும் யாழ்ப்பாண நண்பரொருவர் மகனின் சூட்டுச்சம்பவத்தை உறுதிப்படுத்தினார். பின்னர் கல்முனை சிறைச்சாலை அதிகாரியும் ஊர்ஜிதப்படுத்தினார்.

 

இதனையடுத்து களுத்துறை வைத்தியசாலைக்கு உடனடியாக சென்றோம். நாம்செல்ல முன்னரே அங்கிருந்த சட்டவைத்திய அதிகாரி சென்று விட்டார். அதனால் அன்றிரவு அடையாளம் காட்டமுடியவில்லை

 

காலையில் சென்று மகனை அடையாளம் காட்டினோம். பின்பு பிரேதபரிசோதனை நடாத்தப்பட்டது. பி.ப.2 மணியளவில் சடலத்தை விடுவித்தார்கள். சிறைச்சாலைத் திணைக்களத்தினர் சடலத்தை களுத்துறையிலுள்ள மகிந்த மலர்ச்சாலையில் கொண்டு சென்று அஞ்சலிக்காக வைத்தனர்.

இதனையடுத்து சடலம் காரைதீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக உயிரிழந்தவரின் தந்தை கண்ணீரோடு மேலும் கூறினார்.

http://www.virakesari.lk/article/17270

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.