Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுக்குடியிருப்பு பகுதியளவில் விடுவிப்பு

Featured Replies


புதுக்குடியிருப்பு பகுதியளவில் விடுவிப்பு
 
 

article_1488603200-IMG20170304091610.jpg

சுப்பிரமணியம் பாஸ்கரன், சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பகுதியில் தமது நிலங்களை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் தற்போது, 7.5 ஏக்கர் காணி பகுதியளவில் விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய அம்மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

புதுக்குடியிருப்புப் பகுதியில் இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டு, படைமுகாம் அமைக்கப்பட்டுள்ள 19 ஏக்கரையும் வடுவிக்குமாறு, அக் காணியின் உரிமையாளர்களினால், கடந்த 2ஆம் திகதி தொடர்ச்சியான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
 
ஏந்தவிதமான தீர்வுகளும் வழங்கப்படாமல் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள், கடந்த 14ஆம் திகதி முதல் 48 மணித்தியாலங்கள் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர்.
 
இந்நிலையில், இன்று சனிக்கிழமை (04) காலை, இம்மக்களுடைய 7.5 ஏக்கர் காணிகளை விடுவித்துள்ள இராணுவம், மிகுதிக் காணிகளை 3 மாத காலத்திலும் பொன்னம்பலம் வைத்தியசாலை அமைந்திருந்த காணியை 6 மாத காலத்திலும் விடுவிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

- See more at: http://www.tamilmirror.lk/192556/ப-த-க-க-ட-ய-ர-ப-ப-பக-த-யளவ-ல-வ-ட-வ-ப-ப-#sthash.zNJAkm5C.dpuf
  • தொடங்கியவர்

புதுக்குடியிருப்பு காணிகள் விடுவிப்பு, மக்கள் சந்தோஷத்தில் ; போராட்டம் நிறைவு

Published by Priyatharshan on 2017-03-04 13:28:20

 

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வாக்குறுதி வழங்கப்பட்டதற்கு அமைவாக 7.75 ஏக்கர் காணி மக்களிடம் இன்றுகாலை கையளிக்கப்பட்டுள்ளது.

IMG_2579.jpg
கடந்த 28 ஆம் திகதி இரண்டு வாரங்களுக்குள் பொதுமக்களின் 7.75 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபரால் தெரிவித்திருந்தபோதும், வாக்குறுதிகளை ஏற்றுக்கொள்ளாத மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

IMG_2516.jpg
இந்த நிலையில் இன்று காலை புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு சென்ற மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் 7.75 ஏக்கர் காணிகளை மக்களிடம் கையளித்திருந்தார்.

IMG_2519.jpg
இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவப்பிரகாசம் சிவமோகன் மற்றும் முன்னால பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான புவனேஸ்வரன் மற்றும் மயூரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

IMG_2532.jpg
இந்த நிலையில் காணிகளுக்குள் சென்ற மக்கள் யுத்தத்தில் பறிகொடுத்த உறவுகளை நினைத்து கதறி அழுததோடு தமது வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களை இராணுவம் அளித்துள்ளதையும் சேதமாக்கியுள்ளதையும் கண்டு வேதனையடைந்தனர்.

IMG_2556.jpg
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பின் மையப்பகுதியுள்ள 49 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த மாசி மாதம் மூன்றாம் திகதி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

IMG_2558.jpg

இந்த நிலையில் புதுக்குடியிருப்பில் 682ஆவது படைப்பிரிவினால் சுவீகரிக்கப்பட்ட பொதுமக்கள் 29 பேரினுடைய 7.75 ஏக்கர் காணி 2 வாரத்தில் விடுவிக்கப்படும் என்றும் மீதமுள்ள 29 பேரின் 10 ஏக்கர் காணி இராணுவ முகாமில் அமைக்கப்பட்ட கட்டடங்களை அகற்றிய பின்னர் மூன்று மாதத்திற்குள் விடுவிக்கப்படும் என்றும் பொன்னம்பலம் வைத்தியசாலைக் காணி விடுவிப்பதற்கு 6 மாத காலம் தேவைப்படுவதாகவும் இதன்படி போராட்டத்தைக் கைவிடுமாறும் வலியுறுத்தப்பட்டது.

IMG_2560.jpg
எனினும் புதுக்குடியிருப்பு மக்கள் உடன்படாத நிலையில், 7.75 ஏக்கர் காணிக்குள் தங்களை விடும்வரை போராட்டம் தொடரும் என மக்கள் தெரிவித்திருந்த நிலையில் வாக்குறுதிக்கு அமைவாக 7.75 மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_2561.jpg

IMG_2565.jpg

IMG_2566.jpg

IMG_2567.jpg

IMG_2568.jpg

IMG_2569.jpg

IMG_2570.jpg

IMG_2574.jpg

IMG_2575.jpg

IMG_2578.jpg

IMG_2581.jpg

IMG_2582.jpg

IMG_2586.jpg

IMG_2587.jpg

IMG_2592.jpg

IMG_2593.jpg

IMG_2596.jpg

IMG_2597.jpg

IMG_2602.jpg

IMG_2606.jpg

IMG_2608.jpg

IMG_2612.jpg

IMG_2626.jpg

IMG_2649.jpg

IMG_2656.jpg

IMG_2661.jpg

IMG_2664.jpg

IMG_2667.jpg

IMG_2671.jpg

IMG_2687.jpg

http://www.virakesari.lk/article/17381

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.