Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் உண்மையானவர்களை தற்போது இனங்காணவேண்டும் வடக்கு,கிழக்கு இணைப்பு தற்போதைக்கு சாத்தியமில்லை என்கிறார் சுமந்திரன் எம்.பி.

Featured Replies

மக்கள் உண்மையானவர்களை தற்போது இனங்காணவேண்டும்

sumamm-copy-3653a6f40ce6141671d2cf2fab72f8d717629308.jpg

 

வடக்கு,கிழக்கு இணைப்பு தற்போதைக்கு சாத்தியமில்லை என்கிறார் சுமந்திரன் எம்.பி.
(வட­ம­ராட்சி நிருபர்)

புதிய அர­சி­ய­ல­மைப்பில் சமஷ்டிக் கோரிக்­கையை நாம் கைவி­ட­வில்லை. இருந்தும் தமிழ் மக்­க­ளுக்­காக பெறக்­கூ­டிய அனைத்­தையும் பெற்­றுக்­கொள்ள முயற்­சிப்போம் என தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் யாழ்.மாவட்­ட­ பா­ரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்­துள்ளார்.

பருத்­தித்­துறை இரண்டாம் குறுக்­குத்­தெ­ருவில் உள்ள இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்சி பருத்­தித்­துறைக் கிளை கட்சி அலு­வ­ல­கத்தில் கட்­சிக்கு புதிய இளை­ஞர்­களை, அங்­கத்­த­வர்­களை இணைக்கும் நிகழ்வு நேற்­றைய தினம் இடம்­பெற்­றது. இன்­றைய அர­சியல் நிலை குறித்து அவர் உரை­யாற்றும் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

வடக்கு மாகா­ண­சபை உறுப்­பினர் ச.சுகிர்தன் தலை­மையில் இடம்­பெற்ற இந்­நி­கழ்வில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மேலும் உரை­யாற்­றி­ய­தா­வது,

இன்­றைய கால­கட்­டத்தில் புதிய அர­சியல் வேலைத்­திட்­டத்தில் நாம் இறங்­கி­யுள்­ளளோம். மக்கள் வழங்­கிய சமஷ்டி ஆணையின் பிர­காரம் சமஷ்­டித்­தீர்வைப் பெறும் பணியில் எல்லாச் சமிக்­கை­க­ளு­டனும் இணைந்து செயல்­பட்டு வரு­கின்றோம். ஆயு­தப்­போ­ராட்ட காலத்தில் சமஷ்டித் தீர்வு தட்டில் வைத்­துக்­கொ­டுக்­கப்­பட்­டது. அப்­போது வேண்டாம் என்றோம். இப்­போது அத்­தீர்­வுக்­காகப் பேசு­கின்றோம். 2005ஆம் ஆண்டில் சமஷ்டித் தீர்வை நாங்கள் கொடுத்­ததோம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஒரு பேட்­டி­யின்­போது தெரி­வித்­துள்ளார். இந்­நி­லையில் நாங்கள் சமஷ்­டியை கைவி­ட­வில்லை. இதில் நாம் உறு­தி­யாக உள்ளோம். இத்­த­கைய நிலையில் சமஷ்டி கைவி­டப்­பட்­ட­தாக பெய்­பி­ரச்­சாரம் செய்­கின்­றார்கள்.

சில விட­யங்­களில் நாங்கள் விட்­டுக்­கொ­டுப்­பு­களைச் செய்­வது உண்­மைதான். உலக அர­சி­யலை நாம் பார்க்­கின்றோம். அங்­கெல்லாம் ஒற்­றை­யாட்சி என்ற பெய­ராக நடப்­பதோ சமஷ்டி ஆட்சி. சமஷ்டி ஆட்சி என்ற பெய­ராக இருக்கும் நிலையில் நடப்­பதோ ஒற்­றை­யாட்சி. உலகில் பிரித்­தா­னியா சமஷ்டி ஆட்­சியைக் கொண்­டது. அங்கு எல்லா நாடு­க­ளுமே பிரிந்து போகும் உரி­மை­களைக் கொண்­டுள்­ளன. அயர்­லாந்து பிரிந்து போகும் உரிமை கொண்­டுள்­ளது. ஸ்கண்­டி­நே­வியா பிரிந்து போக முயற்­சித்­த­போது அந்­நாட்டு மக்கள் வாக்­கெ­டுப்பில் ஏற்­றுக்­கொள்­ளா­த­தினால் பிரிந்­தா­னி­யாவின் ஒற்­றை­யாட்­சிக்­குள்­ளேயே இருந்­து­வ­ரு­கி­றது. சமஷ்டி இணைந்த ஒற்­றை­யாட்­சிக்கு கூறக்­கூ­டய நாடு பிரித்­தா­னி­யாதான். இந்­தி­யா­விலும் சமஷ்­டி­யுடன் கூடிய ஒற்­றை­யாட்­சிதான் இருந்து வரு­கி­றது.

ஒற்­றை­யாட்­சி­யாக மாறி­விடும் என்ற எண்­ணத்தில் நாம் இருக்­கிறோம். அப்­ப­டி­யல்ல, ஒற்­றை­யாட்­சியின் உள்­ள­டக்­கத்தில் சமஷ்­டிதான் இருக்­க­வேண்டும். கொடுக்­கப்­பட்ட அதி­கா­ரத்­தினை திரும்­பப்­பெ­றக்­கூ­டாது. எதிலும் மத்­திய அரசு தலை­யி­டக்­கூ­டாது. இந்த இரண்டு அம்­சங்­களும் அர­சி­ய­ல­மைப்பில் இருக்­க­வேண்டும். அப்­ப­டி­யான அர­சியல் சம்பம் வரும் என்ற சாத்­தி­யக்­கூ­றுகள் நிறைய இருக்­கின்­றது. இதற்­காக நாம் எத்­த­ணிக்­காமல் இருக்­க­மு­டி­யாது. இதை­யெல்லாம் எதை வைத்து நாம் சாதிக்­கப்­போ­கிறோம். இவை அர­சியல் தலை­மையின் அவ­தா­ன­மாகும். எம்­மிடம் பொறுப்பு உள்­ளது. அதலால் நாம் உள்­ளதைச் சொல்வோம்.

வடக்கு கிழக்கு இணப்பு வேண்டும். ஆனால் அது உட­ன­டி­யாக சாத்­தி­ய­மா­காது. கிழக்கு மாகாண முஸ்­லிம்கள் எங்­க­ளுடன் இணை­யும்­வரை இது சாத்­தி­ய­மில்லை. முஸ்­லிம்­களின் மனம் உடை­பட்­டுள்ள நிலையில் இணைப்பைுச் சாத்­தி­ய­மா­குமா? தமி­ழர்கள், முஸ்­லிம்கள் என இரண்டு பக்­கமும் சந்­தே­கங்கள் உண்டு. சந்­தே­கங்கள் தீர்க்­கப்­ப­ட­வேண்டும். சந்­தே­கங்கள் தீர்ப்­பது இன்று சாத்­தி­யப்­ப­டா­வி­டினும் இது சாத்­தி­ய­மாகும் வரை நாம் தொடர்ந்து பய­ணிக்­க­வேண்டும். பழைய புண் மாற­வேண்டும். கிழக்கில் எமது கட்­சியைச் சேர்ந்த 11 உறுப்­பி­னர்கள் மாகா­ண­ச­பையில் இருக்­கி­றார்கள். முஸ்­லிம்கள் சார்பில் 7 உறுப்­பி­னர்கள் இருக்­கி­றார்கள். எமக்குப் பலம் இருந்தும் அவர்­க­ளுடன் இணைந்த ஆட்சி முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­றது. இதன்­மூலம் விட்­டுக்­கொ­டுப்பை விடுத்து எமது நல்­லெண்­ணத்­தைக்­காட்­டி­யுள்ளோம்.

அவர்கள் இணைந்து வரும்­போது வட­கி­ழக்கு இணைப்பு சாத்­தி­ய­மாகும். இலங்கை, இந்­திய ஒப்­பத்­தத்­திலும் வட, கிழக்கு இணைப்பு இருந்­தது. ஆனால் அதற்கு நிபந்­தனை இருந்­தது. எல்லாம் கிடைத்தால் ஏற்­றுக்­கொள்வோம் என்றால் நாம் தோல்­வி­யைத்தான் அடை­ய­வேண்டும்.

இந்­திய ராஜ­தந்­திரி ஜெய்­சங்­க­ரு­ட­னான சத்­திப்­பின்­போது வடக்கு கிழக்கு இணைப்பு சாத்­தியம் என அவர் சொல்­ல­வில்லை. உங்கள் கோரிக்­கை­களை முன்­வை­யுங்கள் முதலில் பெறக்­கூ­டி­யவ்­றறைப் பெற்­றுக்­கொள்­ளுங்கள் என்­றுதான் அவர் சொன்னார். இவ்­வாறு ஜெய்­சங்கர் சொல்லும் போது கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன், நான். மாவை­சே­னா­தி­ராசா, சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் ஆகியோர் இருந்தோம். இவ்­வி­ட­யத்தில் யாருக்கும் குழப்பம் தேவை­யாக இக்­கின்­றது. சிலரை மக்கள் நிதா­ன­மாகத் தெரிவு செய்­துள்­ளார்கள். எனினும் குழப்­பி­ய­டிப்­ப­வர்­களும் இருக்­கத்தான் செய்­கி­றார்கள்.

வவு­னி­யாவில் காணா­மல்­போ­னோ­ருக்­காக ஒரு அர­சி­யல்­கட்சி போராட்டம் நடத்­தி­வ­ரு­கின்­றது. அதே கட்­சிதான் வவு­னி­யாவில் இளை­ஞர்­களை பிடித்து பல இளை­ஞர்­களை காணாமல் ஆக்­கி­யது. பான் கீ மூன் யாழ்ப்­பாணம் வந்­த­போது சம்­பந்­த­னையும் என்­னையும் பெண்கள் ஒப்­பா­ரி­வைத்து திட்­டி­னார்கள். அப்­போது எங்­க­ளுடன் நின்­றி­ருந்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சித்­தார்த்தன், எங்­களைக் கேட்­காமல் இவர்கள் ஏன் உங்­களை கேட்­கி­றார்கள். உங்­க­ளுக்கும் காணாமல் போன­வர்­களின் விட­யத்தில் சம்­பந்­த­மில்­லையே என எங்­க­ளிடம் கேட்டார்.

பிறர் என்­னத்தை சொல்­வது என்ற இங்­கிதம் தெரி­யாத நிலை இன்று வந்­தள்­ளது. பழை­யதை மறந்து எவ்­வாறு சேர்ந்து செய­லாற்­ற­வேண்டும் என்­பதே எமது அவா. ஆனால் அவர்கள் ஏற்று நடக்­கும்­போது எங்கள் தலையில் மிளகாய் அரைக்க முடி­யாது. பொய்­க­ளையும் புரட்­டுக்­க­ளையும் சொல்­வதை ஏற்க முடி­யாது. முழுப்­பொய்­களை சொல்லி மாண­வர்கள் என்னை வைத்து விவா­திக்கும் வகையில் செய்­துள்­ளார்கள். தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பின் 11 எம்.பிக்கள் கால அவ­காசம் கேட்டு கையொப்­ப­மிட்­டுள்­ளார்கள். அவர்கள் என்­னத்தை தெரிந்து கையொப்­ப­மிட்­டார்­களோ தெரி­யாது.

ஐ.நா.மனித உரிமை ஆணைக்­குழு 2015ஆம் ஆண்டு கூறிய ஒன்­றைக்­கூட அரசு செய்­ய­வில்லை. அவை அனைத்தும் செய்­யப்­ப­ட­வேண்டும் என முன்னர் 18 மாத கால அவ­காசம் கொடுக்­கப்­பட்­டது. அதுவும் செய்­யப்­ப­ட­வில்லை. இப்­போது மீண்டும் கால அவ­காசம் கோரப்­பட்­டுள்­ளது. இப்­போது நாங்கள் கால அவ­காசம் கோர­வில்லை. நிபந்­த­னை­யுடன் இறுக்­க­மான கால அட்­ட­வணை கொடுங்கள், அந்த அட்­ட­வணை உங்கள் மேற்­பார்­வை­யுடன் செயல்­ப­ட­வேண்டும் எனக்­கேட்­டுள்ளோம். தப்­ப­விட வேண்டாம் என்­றுதான் நாங்கள் கேட்­கிறோம்.

மக்கள் உண்­மை­ய­ன­வர்­களை இனங்­கா­ண­வேண்டும். யாரின் நிகழ்ச்சி நிரலில் இதை­யெல்லாம் செய்­கி­றார்கள் என மக்கள் இனங்­கா­ண­வேண்டும். இது தொடர்­பாக புலம்­பெயர் அமைப்­புக்கள், புலம் பெயர் கல்­வி­மான்கள் தினமும் மின்­னஞ்­சல்கள் மூலம் தக­வல்கள் தந்து கொண்­டி­ருக்­கி­றார்கள்.

ஜாதிக ஹெல உறு­ம­ய­வினர் அமெ­ரிக்கா ஜனா­தி­பதி ட்ரம்பை உப­யோ­கித்து அதி­லி­ருந்து விடு­பட வேண்டும் எனச் சொல்­லி­யுள்­ளனர். சர்­வ­தேச நீதி­மன்­றத்தை அமெ­ரிக்கா எதிர்த்­தது. ஆனால் ஜனா­தி­பதி ஒபாமா அதனை மாற்றி சர்­வ­தேச நீதி­மன்­றத்தை முன்­னெ­டுத்தார். ஐ.நா. கவுன்­சிலை அமெ­ரிக்கா ஆத­ரித்­தமை எமக்கு சாத­க­மா­னது. இந்த விட­யத்தை சர்­வ­தேச நீதி­மன்­றத்­துக்குப் பாரப்­ப­டுத்த முடி­யாது. ஏனெனில் இலங்கை அதில் அங்­கத்­துவம் பெற­வில்லை. பாது­காப்புச் சபைக்கு கொண்­டு­போ­கலாம். அப்­ப­டிக்­கொண்­டு­போ­னாலும் ரஷ்­யாவும் சீனாவும் வீட்­டோவைப் பயன்­ப­டுத்தும். சர்­வ­தே­ச­நீ­தி­மன்­றத்­துக்கு வட­கொ­ரி­யாவைக் கொண்­டு­போன போது இந்­நிலை ஏற்­பட்­டது. சர்­வ­தேச நீதி­மன்­றத்தில் கடந்த 30 வரு­டத்தில் 3 பேர் குற்­ற­வா­ளி­க­ளாகக் காணப்­பட்­டுள்­ளனர். 39 வழக்­குகள் நிலு­வையில் உள்­ளன. 4 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

வலிந்து காணா­மல்­போ­னனோர் தொடர்­பான குற்­றத்­துக்கு தண்­டனை வழங்கும் திட்­டத்தை இலங்கை அரசு பரி­சீ­லிக்­கி­றது. இலங்கை அரசு மெது­வாகச் சில காரி­யங்­களைக் செய்­து­வ­ரு­கின்­றது. கால அவ­காசம் வேண்டாம் என்றால் விடயம் முடிந்­து­விடும்.

நாங்கள் மக்களுக்குச் செய்ய வேண்டியதைச் செய்வோம். தீமையான எதையும் செய்யமாட்டோம். சில விடயங்கள் சிலருக்கு கசப்பாக இருக்கும். எந்தப்பொறிமுறை உள்ளதோ அதை நாங்கள் செய்யவேண்டும்.

இனி ஒரு தடவை நாங்கள் ஆயுதம் ஏந்தக்கூடாது. அந்த அறிவு எமக்கு வேண்டாம். அதற்காக ஆயுதப்போராட்டத்தை நான் கொச்சைப்படுத்தவில்லை. ஆயுதப் போராட்டத்தில் உன்னதமான தியாகம் செய்தார்கள். அதனை மதிக்கிறோம். எனினும் இனியும் ஒரு இலட்சம் இளைஞர்களைப் பலி கொடுக்க முடியாது. எமது இளைஞர்கள் வாழவேண்டும். காலம் தாழ்த்தியாவது எமது மக்களுக்கு விடிவு கிடைக்கும். மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளலாம். எமது கோரிக்கை நியாயமானது.

திரும்பவும் இரத்தக்களரி தேவையில்லை. கோபம் வந்துவிடதற்காக எமது மூக்கை வெட்டக்கூடாது. சித்தித்து அறிவாற்றலுடன் செயல்பட்டு எம்மக்கள் உரிமையை வென்றெடுப்போம் எனத் தெரிவித்தார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-06#page-1

  • கருத்துக்கள உறவுகள்

 

மக்கள் உண்மையானவர்களை தற்போது இனங்காணவேண்டும் வடக்கு,கிழக்கு இணைப்பு தற்போதைக்கு சாத்தியமில்லை என்கிறார் சுமந்திரன் எம்.பி.

இசுலாமியரட்டையும்  பி.எம்.டபிள்யூ வாங்கிட்டார்.....அய்யாவுக்கு இனி காலுக்கு ஒன்று கையிரற்கு ஒன்று.....என்ன துணிவு  .... கருவாட்டு விலை போல இனத்தை விலைபேசும் ஈனப் பிறவி இது...

Edited by alvayan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.