Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘வாட்டே மேட்ச்... வாட்டே கம்பேக்..!’ - பார்சிலோனாவை பாராட்டும் கால்பந்து உலகம்

Featured Replies

‘வாட்டே மேட்ச்... வாட்டே கம்பேக்..!’ - பார்சிலோனாவை பாராட்டும் கால்பந்து உலகம்

‘‘Bloody hell!’’ - ஃபுட்பால் குறித்து மான்செஸ்ட் யுனைடெட் கிளப் முன்னாள் பயிற்சியாளரான ஜாம்பவான் சர் அலெக்ஸ் பெர்குசன் சொன்ன வார்த்தைகள் இவை. உச்சபட்ச பாராட்டு கெட்ட வார்த்தையில்தானே முடியும்! இந்தியாவுக்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத இரு அணிகள் மோதிய, சாம்பியன்ஸ் லீக் மேட்ச்சை நேற்று நள்ளிரவு கண் விழித்து பார்த்தவர்களுக்குப் புரியும், பெர்குசன் ஏன் அப்படி வர்ணித்தார்... கால்பந்து ஏன் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கால் பதித்திருக்கிறது என்று. எஸ்... ஃபுட்பால் இஸ் ஏ பியூட்டிஃபுல் கேம். ஏன், எதனால்? 

பார்சிலோனாவை பாராட்டும் கால்பந்து உலகம்

இரண்டு வாரங்களுக்கு முன் பாரிஸில் நடந்த சாம்பியன்ஸ் லீக் ரவுண்ட் -16 முதற்கட்ட போட்டியில் பார்சிலோனா  4-0 என்ற கோல் கணக்கில் தோல்வி. கிட்டத்தட்ட சாம்பியன்ஸ் லீக் தொடரில் இருந்து வெளியேறும் நிலை. ‘கடந்த பத்து ஆண்டுகளில் நான்குமுறை (2006, 2009, 2011, 2015) சாம்பியனாகி, ஏழுமுறை அரையிறுதிக்கு முன்னேறி, ஐரோப்பிய கால்பந்து உலகை ஆட்டிப் படைக்கும் கிளப்புக்கு இது அழகல்ல’- வரிசைகட்டின விமர்சனங்கள். அப்பேற்பட்ட அணியை வென்ற மிதப்பில் இருந்தது பாரிஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (PSG -பி.எஸ்.ஜி.). கவானி, தியாகோ சில்வா தவிர்த்து சொல்லும்படி பிரபலங்கள் இல்லாத கிளப் அது.

தோல்வியின் விளைவு... ‘இந்த சீசனுடன் இந்த கிளப் உடனான என் பந்தம் முடிகிறது’ என வருத்தம் தோய்ந்த வார்த்தைகளில் சொன்னார் பார்சிலோனோ கோச் லூயிஸ் என்ரிகே. Messi, Suárez, Neymar என மூன்று ஸ்ட்ரைக்கர்களையும் முன்னிறுத்தி M.S.N. strike force என்ற வார்த்தையை கால்பந்து உலகில் முணுமுணுக்க வைத்தவர் அவர். அவரது நிலைமையைப் பார்த்து, பரிதாபப்பட்டனர் பார்சிலோனாவைப் பிடிக்காதவர்கள். கார்லஸ் பியோல் குட்பை சொல்லி விட்டார்; ஜாவி ஹெர்ணான்டஸ் விடைபெற்றுவிட்டார்; மெஸ்சி, செர்ஜியோ, சுவாரெஸ் முப்பதை நெருங்குகின்றனர்; ஜெரார்டு பீக்கே, ஆண்ட்ரஸ் இனியஸ்டா இருவரும் 30+ல் இருக்கின்றனர்; எதிரணியை பார்சிலோனா நிலைகுலைய வைத்ததெல்லாம் பழைய செய்தியா? அவ்வளவுதானா பார்சிலோனா? Catalonia சாம்ராஜ்யம் சரிகிறதா? - கவர் ஸ்டோரிக்கு காத்திருந்தன பத்திரிகைகள். பாரிஸில் அந்த இரவில் கிடைத்த தோல்வி ஸ்பெயினில் பல விடியல்களுக்கு அச்சாரம்.

பார்சிலோனாவை பாராட்டும் கால்பந்து உலகம்

சாம்பியன்ஸ் லீக் தொடரில் நாக் அவுட் சுற்றுகள் Home, Away என இரண்டு கட்டங்களாக (leg) நடக்கும். இரண்டு கட்ட மேட்ச் முடிவில் அதிக கோல்கள் அடித்திருக்கும் அணி, அடுத்த சுற்றுக்கு முன்னேறும். பாரிஸில் நடந்த முதற்கட்ட போட்டியில் பி.எஸ்.ஜி வெற்றி. பார்சிலோனாவுக்கோ 0-4 என என்றென்றும் மறக்க முடியாத தோல்வி. கிட்டத்தட்ட பி.எஸ்.ஜி காலிறுதிக்குள் ஒரு காலை எடுத்து வைத்து விட்ட நிலை. இருந்தாலும் தங்கள் முறைக்காக காத்திருந்தது பார்சிலோனா. இப்போது இரண்டாவது லெக். அதாவது பார்சிலோனாவின் சொந்த மண்ணில் போட்டி. 

சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில், முதல் லெக்கில், அதிக கோல் வித்தியாசத்தில் முன்னிலைப் பெற்ற அணியை, இரண்டாவது லெக்கில் வீழ்த்திய வரலாறு சொற்பம். ஆனாலும், ஏதாவது அதிசயம் நிகழாதா? எதிர்பார்ப்பில் கேம்ப் நு ஸ்டேடியத்தின் 96,000 இருக்கைகளும் நிறைந்திருந்தன. விசில் அடித்த மூன்றாவது நிமிடத்திலேயே லூயிஸ் சுவாரெஸ் ஒரு கோல்... இனியஸ்டா 6 யார்டு பாக்ஸ்க்குள் இருந்து விடாப்பிடியாக மல்லுக்கட்ட, லேவின் குர்ஸவா Own goal அடிக்க வேண்டிய நெருக்கடி... முதல் பாதி முடிவில் ஸ்கோர் 2-0.

டிரஸ்ஸிங் ரூமில் வியூகங்கள். ரசிகர்கள் மனதிலும் கொஞ்சம் நம்பிக்கை. இன்னும் இரண்டே கோல்தான், அதை அடித்து விட்டால் 4-4 (மொத்த கோல் கணக்கு) என சமநிலை. கணக்குப் போட்டான் ரசிகன். ரசிகன் மட்டுமல்ல, பார்சிலோனா வீரர்களும். ‘முடிந்த வரை கோல் வாங்கக் கூடாது. அதேநேரத்தில் எவ்வளவு சீக்கிரம் கோல் அடிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கோல் அடிக்க வேண்டும். நம்மிடம் நேரமும் இல்லை. கவனம்...’ - என்ரிகே மட்டுமல்ல, ஒட்டுமொத்த பார்சிலோனாவின் கணக்கும் அதுதான்.

இரண்டாவது பாதி தொடங்கிய பத்து நிமிடத்துக்குள், பெனால்டி பாக்ஸில் புகுந்து விளையாடினார் நெய்மர். பி.எஸ்.ஜி டிஃபண்டர் தாமஸ் மியூனியர், நெய்மரைக் கீழே தள்ளிவிட,  விசில் அடித்து ‛ஸ்பாட் கிக்’ திசை நோக்கி கை காட்டினார் ரெஃப்ரி. இது எல்லாமே பிளான். குறிப்பாக நெய்மரின் பிளான். வழக்கம்போல அந்த ஸ்பாட் கிக்கை தன் இடது கால் மூலம் பவுர்ஃபுல் ஷாட் மூலம் தெறிக்க விட்டார் மெஸ்ஸி. ‘Camp Nou erupts’ என அங்கிருந்து ட்வீட் செய்தனர் நிருபர்கள். 3-0 என பார்சிலோனா முன்னிலை. ஒட்டுமொத்தமாக 3-4 என்ற நிலை. இன்னும் ஒரு கோல், ஒரே கோல்.... பார்சிலோனா ரசிகர்கள் பிரார்த்தித்தனர். “Sí se puede, sí se puede,” - கோரஷாகக் கத்தினர். இதன் அர்த்தம் Yes we can, yes we can...

பார்சிலோனாவை பாராட்டும் கால்பந்து உலகம்

அடுத்தடுத்து ட்விஸ்ட்டுகளால் நிறைந்ததுதானே கால்பந்து. 62-வது நிமிடத்தில் பி.எஸ்.ஜி. வீரர் கவானி ஒரு கோல் அடிக்க, ‘இது ஸ்க்ரிப்ட்லயே இல்லையே...’ என நொந்தான் ரசிகன். பார்சிலோனா ரசிகனின் கணக்குப்படி வெற்றிக்கு இன்னும் இரண்டு கோல் தேவை. அதேநேரத்தில் பி.எஸ்.ஜி இன்னும் ஒரு கோல் அடித்தாலும் போச்சு. ஒரு தப்பு செய்தாலும் போச்சு. கால்பந்தில் ஒரு தவறு அடுத்தடுத்த தவறுகளுக்கு வழி வகுக்கும். இன்னும் இருப்பது பத்து நிமிடங்களே. தேவை இரண்டு கோல்கள். முடியுமா? முடியும். முழுதாக பத்து நிமிடங்கள் இருக்கின்றன. அதுபோக, போனஸாக இஞ்சுரி டைம் நிமிடங்கள். கணக்கு மேல் கணக்குப் போட்டான் ரசிகன்.

அவன் கணக்கு பலிப்பது போல, 88-வது நிமிடத்தில் பார்சிலோனாவுக்கு ஒரு ஃப்ரீ கிக். அதுவும் பெனால்டி பாக்ஸ்-க்கு மிக அருகில் வைத்து. இந்தமுறை அந்த செட் பீஸை எடுத்தது பிரேசில் சூப்பர் ஸ்டார் நெய்மர். 30 யார்டு பாக்ஸில் இருந்து இரண்டடி தள்ளி மார்க் செய்யப்பட்ட இடத்தில் பந்து வைக்கப்படுகிறது. அதில் இருந்து இரண்டே இரண்டு ஸ்டெப் மட்டும் தள்ளி இருக்கிறார் நெய்மர். இந்த கேப் போதுமா? ஓடி வந்து அடிக்க வேண்டாமா? ஓடி வந்தால்தானே பவர்ஃபுல் ஷாட் அடிக்க முடியும்... ஏகப்பட்ட கேள்வி. ஆனாலும் நெய்மரிடம் பதில் இருந்தது. போதும், இந்த தூரம் போதும், இந்த இரண்டு ஸ்டெப் ஓட்டம் போதும். ஆம்... அவர் கணக்கு தப்பவில்லை. பி.எஸ்.ஜி கோல்கீப்பரை ஏமாற்றி பந்து வலைக்குள் விழுந்தது. வாட்டே கோல், வாட்டே கர்வ்... துள்ளிக் குதித்தான் ரசிகன். ஆனாலும், காலிறுதிக்குப் போக இது போதாதே. Away goal அதாவது எதிரணியின் மண்ணில் அடித்த கோலை கணக்கில் வைத்தால், பி.எஸ்.ஜிக்குத்தானே வாய்ப்பு. இன்னும் ஒரு கோல். ஏங்கினான் ரசிகன். ஆனால், நேரம்?

பார்சிலோனாவை பாராட்டும் கால்பந்து உலகம்

அசிஸ்டன்ட் ரெஃப்ரி காண்பித்த அந்த போர்டில், 6 என்ற எண் மிளிர்ந்தது. அப்பாடா... இன்னும் ஆறு நிமிஷம் இருக்கு. பெருமூச்சு விட்டது கேம்ப் நு மைதானம். டைம் ஓகே. பிளான்? இது சுவாரெஸ் முறை. ஆம், இஞ்சுரி டைமில் பெனால்டி பாக்ஸில் வைத்து அவரை, பெளல் செய்து வாங்கிக் கட்டிக் கொண்டது பி.எஸ்.ஜி. மீண்டும் பார்சிலோனாவுக்கு ஸ்பாட் கிக் வாய்ப்பு. அல்வா போல... அதுவும் இஞ்சுரி டைமில். விடுவாரா நெய்மர்? பளிச்சென ஒரு கோல். 5-5 என சமநிலை. கணக்கு டேலி. ‘இருந்தாலும் இன்னும் ஒரு கோல்... அடிச்சா கெத்தா அடுத்த ரவுண்டுக்குப் போகலாம்’- மீண்டும் கணக்குப் போட்டனர் பார்சிலோனா ரசிகர்கள். 

ஒரு கோல்தானே... அடிச்சிட்டாப் போச்சு... நெய்மர் கொடுத்த ஃப்ரீ கிக்கை, பெனால்டி பாக்ஸில் இருந்து லேசாக பறந்து பந்தின் போக்கில் காலை நீட்டி தட்டினார் செர்ஜி ராபர்டோ எனும் யுவன். பந்து கோல் கம்பத்தில் வலையில் பட்டு தெறித்தது. ‛கோல்ல்ல்’ - வர்ணனையாளர்கள் அலற, கேம்ப் நு மைதானம் முழுவதும் உற்சாகம். ஆட்டம் முடிந்தது. பார்சிலோனா 6-1 என வெற்றி. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால்  6-5 என வெற்றி. வாட்டே மேட்ச், வாட்டே கம்பேக்... இந்தமுறை பார்சிலோனா மட்டுமல்ல, கால்பந்து உலகமே கொண்டாடியது. 

நுணுக்க ரீதியாக இது பிரமாதமான மேட்ச் அல்ல. ஆனால், ஸ்போர்ட்ஸில் எப்போதுமே சேஸிங், கம்பேக் ஸ்டோரிகளுக்கு கிராக்கி அதிகம். அந்தவகையில், இந்தப் போட்டி, திருப்பி அடித்த கதைக்கு நல் உதாரணம். போட்டி முடிந்ததும் என்ரிகே இப்படி சொன்னார்... Like a film, a horror film, not a thriller.” 

http://www.vikatan.com/news/sports/83155-barcelona-beats-psg-in-best-ever-comeback-match.html

  • தொடங்கியவர்

சாம்பியன்ஸ் லீக்: பிஎஸ்ஜியை 6-1 என துவம்சம் செய்தது பார்சிலோனா

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணியை 6-1 என துவம்சம் செய்து காலிறுதிக்கு முன்னேறியது பார்சிலோனோ.

 
சாம்பியன்ஸ் லீக்: பிஎஸ்ஜியை 6-1 என துவம்சம் செய்தது பார்சிலோனா
 
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஐரோப்பிய சாம்பயின்ஸ் லீக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெறும் 16 அணிகள், எதிரணியுடன் சொந்த மைதானத்தில் ஒரு முறையும், எதிரணி மைதானத்தில் ஒரு முறையும் என இரண்டு போட்டிகளில் மோத வேண்டும்.

அதன்படி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப்பான பார்சிலோனா, பிரான்ஸ் நாட்டின் முன்னணி அணியான பாரிஸ் ஜெயின்ட்- ஜெர்மைன் அணிகள் மோதும் வகையில் அட்டவணை அமைந்தது.

அதன்படி முதல் போட்டி பி.எஸ்.ஜி.க்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது. இதில் பார்சிலோனாவை 4-0 என பிஎஸ்ஜி வீழ்த்தியது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு பார்சிலோனா மைதானத்தில் 2-வது போட்டி நடைபெற்றது. சொந்த மைதானதில் 5-0 என வெற்றி பெற்றால் மட்டுமே காலிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் பார்சிலோனா இருந்தது. இது கடினமான ஒன்று என்றாலும் பார்சிலோனா அணி தன்னம்பிக்கையுடன் விளையாடியது.

ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் சுவாரஸ் முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் ஓன்கோல் மூலம் 40-வது நிமிடத்தில் பார்சிலோனாவிற்கு ஒரு கோல் கிடைத்தது. இதனால் முதல் பாதி நேரத்தில் பார்சிலோனா 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் பார்சிலோனாவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி மெஸ்சி கோல் அடித்தார். ஆனால் 62-வது நிமிடத்தில் பிஎஸ்ஜி அணியின் எடின்சன் கவானி ஒரு கோல் அடித்தார். ஆகவே பார்சிலோனா 3-1 என முன்னிலைப் பெற்றிருந்து.

காலிறுதிக்கு தகுதி பெற வேண்டுமென்றால் மேலும் 3 கோல்கள் அடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. சொந்த மைதானத்தில் 90 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் பார்சிலோனா ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. என்றாலும் கோல்கள் அடிக்க முடியவில்லை.

B79A46E2-777A-470A-9508-5729BBAE70A1_L_s

88-வது நிமிடத்தில் பார்சிலோனா அணிக்கு ப்ரீஹிக் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை நெய்மர் அருமையாக பயன்படுத்தி கோல் அடித்தார். ஆட்டம் நிறுத்தம், காயம் போன்றவற்றை கணக்கிட்டு 5 நிமிடங்கள் அதிகமாக கொடுக்கப்பட்டது. இதனால் 90 நிமிடத்தில் ஆட்டம் நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடைபெற்றது.

B6FD7D36-AD48-4675-ADCE-468402FCF118_L_s

91-வது நிமிடத்தில் பார்சிலோனாவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் நெய்மர் கோல் அடித்தார். 95-வது நிமிடத்தில், அதாவது ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் பார்சிலோனா அணியின் செர்ஜி ரொபர்ட்டோ கோல் அடிக்க பார்சிலோனா 6-1 என அபார வெற்றி பெற்றது.

789F6D09-446E-4CB2-8087-CAF232B08770_L_s

ஓட்டுமொத்தமாக இரண்டு போட்டிகளிலும் அடிக்கப்பட்ட கோல்கள் கணக்கின்படி பார்சிலோனா 6-5 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/09163503/1072765/Champions-League-Miracle-at-the-Camp-Nou-as-Barcelona.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.