Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் தெருவில் நிற்க இராணுவம் கண்முன்னே எமது சொத்துக்களைச் சூறையாடி வருகிறது கேப்பாப்புலவு மக்கள் விசனம்

Featured Replies

நாம் தெருவில் நிற்க இரா­ணுவம் கண்முன்னே எமது சொத்­துக்­களைச் சூறை­யாடி வரு­கி­றது

 

கேப்­பாப்­பு­லவு மக்கள் விசனம்
- எஸ்.கணேசன், ரி.விரூஷன் -

நாங்­களோ தெருவில் நிற்­கின்றோம். ஆனால் எங்­க­ளு­டைய வாழ்­வா­தா­ரங்­களை படை­யினர் தொடர்ந்தும் சூறை­யா­டி­வ­ரு­கின்­றனர். கேப்­பாப்­பு­லவு போராட்­டத்தில் இருக்­கும்­போது எம் கண்­முன்னே படை­யினர் எமது காணி­க­ளி­லி­ருக்கும் தேங்­காய்­களைப் பறித்து அவற்றை லொறி­களில் ஏற்­றிக்­கொண்டு செல்­கின்­றார்கள். ஆனால், நாங்­களோ கடையில் காசு­கொ­டுத்து தேங்காய் வாங்­க­வேண்­டிய நிலை உரு­வா­கி­யுள்­ளது.

மொத்­த­மாக இந்த 482 ஏக்கர் காணிகளும் விடு­விக்­கப்­பட­ வேண்டும். எங்­க­ளு­டைய உயிரை இழந்­து தான் எமது நிலத்தை மீட்க வேண்­டு ­மென்­றாலும் அதற்கும் நாங்கள் தயார். அவ்­வாறு நாங்கள் இந்தப் போராட்­டத்தில் இறந்­தாலும் எங்­க­ளு­டைய சட­லங்­களை கேப்­பாப்­பி­ல­வி­லுள்ள சுடு­காட்­டில்தான் அடக்கம் செய்­ய­வேண்டும் என அங்கு தொடர்ச்­சி­யாக போராட்­டத்தில் ஈடு­பட்­டு­வரும் பெண்கள் தெரி­வித்­துள்­ளனர்.  

இது குறித்து போராட்­டத்தில் ஈடு­பட்­டு­வரும் கேப்­பாப்­பு­லவு மாதர் அபி­வி­ருத்திச் சங்கத் தலைவி சந்­தி­ர­லீலா கருத்துத் தெரி­விக்­கையில் ,

விமா­னப்­ப­டை­யினர் ஆக்­கி­ர­மித்து வைத்­துள்ள கேப்­பாப்­பு­லவு காணிகள் எங்­க­ளு­டைய மக்­க­ளுக்குச் சொந்­த­மான உறு­திக்­கா­ணி­க­ளாகும். அதா­வது இக்­கா­ணி­க­ளுக்கு காணி அனு­ம­திப்­பத்­திரம், காணி உறுதி என்­பன காணப்­ப­டு­கின்­றன. அத்­துடன் இக்­கா­ணி­க­ளுக்கு சொர்ண பூமி உறுதி எனப்­ப­டு­கின்ற உறு­தியும் உண்டு.

அர­சாங்கம் தொடர்ந்தும் கேப்­பாப்­பு­லவு மக்­களை ஏமாற்றும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்­றது. கடந்த ஜன­வரி மாதம் 25 ஆம் திகதி கேப்­பாப்­பு­லவு மக்­க­ளு­டைய அரை­வா­சிப்­ப­குதி காணி­களும் ஒரு வீதியும் ஜனா­தி­பதி முன்­னி­லையில் விடு­விக்­கப்­படும் என எங்­க­ளுக்கு கூறப்­பட்­டது. ஆனால் ஜன­வரி மாதம் 23 ஆம் திகதி தான் கேப்­பாப்­பு­லவு காணிகள் விடு­விக்­கப்­ப­டாது எனவும் இந்த வீதிக்கு அப்­பா­லுள்ள வற்­றாப்­பளை மக்­க­ளுக்­கு­ரிய காணிகள் தான் கைய­ளிக்­கப்­போ­வ­தா­கவும் எமக்கு வேறொரு தகவல் கிடைத்­தது. ஆகவே, நாங்கள் கடந்த 25 ஆம் திகதி ஆர்ப்­பாட்­ட­மொன்றை மேற்­கொண்டோம். ஆனால் முன்னர் கூறி­ய­படி ஜனா­தி­பதி வர­வு­மில்லை. இந்த மாதி­ரிக்­கி­ரா­மத்­தி­லுள்ள ஒரு குடும்­பத்­தி­னு­டைய காணியும் விடு­விக்­கப்­ப­ட­வு­மில்லை.

கேப்­பாப்­பு­ல­வி­லுள்ள பிலக்­கு­டி­யி­ருப்பு மக்­க­ளையும் அர­சாங்­கமும் படை­யி­னரும் ஏமாற்றி விட்­டனர். கடந்த ஜன­வ­ரி­மாதம் 30 ஆம் திகதி கேப்­பாப்­பு­ல­வி­லுள்ள 84 குடும்­பங்­க­ளுக்­கு­மு­ரிய காணிகள் அடுத்­தநாள் விடு­விக்­கப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டது. அதனால் குறித்த தினத்தில் காணி அள­வி­டப்­ப­டு­வ­தற்கு அரச அதி­கா­ரிகள் வரு­கை­த­ரு­வார்கள் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

அதை நம்பி மக்­களும் தங்­க­ளது காணிகள் விடு­விக்­கப்­படும் என்ற எதிர்­பார்ப்­புடன் 31 ஆம் திகதி பிலக்­கு­டி­யி­ருப்­புக்கு வந்­தனர். ஆனால் குறித்த தினத்தில் ஒரு அதி­கா­ரியும் வரு­கை­தந்­தி­ருக்­க­வில்லை. இதனால் ஏமாற்­ற­ம­டைந்த கேப்­பாப்­பு­லவு மற்றும் பிலக்­கு­டி­யி­ருப்பு மக்கள் இதற்கு ஒரு தீர்வு வேண்­டு­மென தொடர்ச்­சி­யான போராட்­டத்தில் ஈடு­பட்டு வந்­தனர்.

அன்­றி­லி­ருந்து ஒட்­டு­மொத்த கேப்­பாப்­பி­ல­வையும் விடு­விக்­க­வேண்டும் என்றே போராட்­டத்தில் இறங்­கினோம். சரி­யாக கடந்த ஜன­வரி மாதம் 31 ஆம் திகதி போராட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. அடுத்த மார்ச் 1 ஆம் திகதி பிலக்­கு­டி­யி­ருப்பின் 42 ஏக்கர் காணிகள் விடு­விக்­கப்­பட்­டன. தற்­போது எமக்கு கேப்­பாப்­பு­ல­வி­லுள்ள எஞ்­சிய 482 ஏக்கர் காணி­களும் விடு­விக்­கப்­ப­ட­வேண்டும்.

இவை அனைத்தும் உறு­திக்­கா­ணிகள். அத்­துடன் 7 தலை­மு­றை­க­ளாக நாங்கள் வாழ்ந்த காணி­யையே படை­யினர் சுவீ­க­ரித்­துள்­ளனர். இக்­கா­ணி­களில் எமக்கு கல்லால் கட்­டப்­பட்ட வீடுகள் காணப்­பட்­டன. அத்­துடன் வாழ்­வா­தா­ரத்தைக் கொண்டு நடத்­து­வ­தற்கு பல பயன்­தரு மரங்­களும் காணப்­பட்­டன. இன்று காலை (கடந்த திங்கட் கிழமை) எங்­க­ளு­டைய காணி­க­ளி­லுள்ள தேங்­காய்­களைப் பறித்து அவற்றை எமது கண்முன் இரா­ணுவம் லொறி­களில் ஏற்றிச் செல்­கின்­றது. நாங்­களோ தினமும் ஒரு தேங்­காய்க்கு 45 ரூபா வீதம் கடை­களில் பணம் செலுத்தி வாங்­க­வேண்­டிய நிர்ப்­பந்­தத்தில் இருக்­கின்றோம்.

கடந்த ஏழரை வரு­டங்­க­ளாக 20 பேர்ச்சஸ் காணி­களில் எந்­த­வொரு அடிப்­படைத் தேவை­களும் இல்­லாத நிலையில் வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கின்றோம். ஆனால் இரா­ணு­வமோ எம் கண்­முன்னே கேப்­பா­பி­ல­வி­லுள்ள எம் சொந்தக் காணி­களில் வாழ்­வா­தா­ரங்­களைச் சூறை­யாடிச் சென்றுகொணடிருக்கின்றது.

ஆகவே, இந்த 482 ஏக்கர் காணிகளையும் அரசாங்கம் விடுவிக்கும் வரை எம்முடைய போராட்டம் தொடரும். மேலும் போராட்டத்தில் நாங்கள் இறந்தால் எங்களுடைய சடலங்களை கேப்பாப்புலவிலுள்ள சுடுகாட்டிலேயே நல்லடக்கம் செய்யவேண்டும். அவ்வாறில்லாவிடில் இந்த சடலங்கள் தெருவிலேயே விடப்படவேண்டும். இதுவே எங்கள் அனைவருடைய கோரிக்கையுமாகும்.

உயிரை இழந்துதான் காணிகளை மீட்க வேண்டுமாயின் நாம் அதற்கும் தயாராகவே இருக்கின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-03-12#page-1

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியின் ஆராட்சி மணியை அடித்திருக்கலாமே !!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.