Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நாடுகளின் போர்க் கப்பல்கள் இலங்கையில் சங்கமம்

Featured Replies

உலக நாடு­களின் போர்க் கப்­பல்கள் இலங்­கையில் சங்­கமம்

 

- லியோ நிரோஷ தர்ஷன் -

உலக நாடு­களின் அதி­ந­வீன போர்க் கப்­பல்கள், இலங்கைத் துறை­மு­கங்­களில் நங்­கூ­ர­மிட ஆரம்­பித்­துள்­ளன. ஏற்­க­னவே அமெ­ரிக்­காவின் அதி­வேக போக்குவரத்து கப்பல் பல்­வேறு கூட்டு  நட­வ­டிக்­களில் அம்­பாந்­தோட்டை பகு­தியில் ஆரம்­பித்­துள்ள நிலையில் , மேலும் ,இரண்டு பாகிஸ்தான் கப்­பல்கள் ,இன்று ,இலங்கை வரு­கின்­றன. ,இந்­நி­லையில் ,இந்­தி­யாவின் ஆய்­வுக்­கப்­ப­லான ஐஎன்எஸ் தர்­ஷக்­த­னது விய­ஜத்தை திடீ­ரென ஒத்தி வைத்­துள்­ளது. 

பாகிஸ்தான் கடற்­ப­டையின் ,இரண்டு போர்க்­கப்­பல்கள் ,இன்று ஞாயிற்­றுக்­கி­ழமை ,இலங்கை வரு­கின்­றன. நான்கு நாட்கள் நல்­லெண்ணப் பய­ண­மாக கொழும்புத் துறை­மு­கத்­துக்கு வர­வுள்ள பாகிஸ்தான் போர் கப்­பல்கள் கூட்டு பயிற்­சி­க­ளிலும் ஈடுப்­பட உள்­ள­தாக கடற்­படை தலை­மை­யகம் தெரி­வித்­துள்­ளது.

பி என் எஸ் நாசர் மற்றும் பி என் எஸ் சாய்ப் ஆகிய போர்க்­கப்­பல்­களே ,இன்று ,இலங்கை வரு­கின்­றன. ,இரண்டு நாடு­க­ளி­னது கடற்­ப­டை­க­ளுக்கும் ,இடை­யி­லான பல­மான மர­புசார், நிபு­ணத்­தவ மற்றும் சகோ­த­ரத்­துவ உறவின் ஒரு பகு­தி­யா­கவே பாகிஸ்தான் போர்க்­கப்பல் கொழும்­புக்குப் பயணம் மேற்­கொள்­ள­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

,இந்தப் போர்க்­கப்­பல்கள் கொழும்புத் துறை­மு­கத்தில் தரித்து நிற்கும் போது, ,இலங்கை கடற்­ப­டை­யி­ன­ருடன் பல்­வேறு நிபு­ணத்­துவ பயிற்சி செயற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்கும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் அமெ­ரிக்க கடற்­ப­டையின் அதி­வேகப் போக்­கு­வ­ரத்துக் கப்­ப­லான யு எஸ் என் எஸ் போல் ரிவர் (USNS Fall River) கடந்த திங்­கட்­கி­ழமை ,இலங்­கைக்கு வருகை தந்­த­துள்­ளது. இது 46 அம்ச பயிற்சி திட்­டங்­களை ,இலங்கை கடற்­ப­டை­யுடன் ,இணைந்து 13 நாட்கள் முன்­னெ­டுக்க உள்­ள­தாக அமெ­ரிக்க கடற்­ப­டையின் ஆசிய கட்­டளை தலை­மை­யகம் குறிப்­பிட்­டுள்­ளது.

அனர்த்த மீட்பு , அவ­சர உதவி மற்றும் மீட்பு போன்ற பிர­தாண திட்­டங்­களை முன் வைத்து அமெ­ரிக்க மற்றும் ,இலங்கை கடற்­ப­டை­யினர் கூட்டு பயிற்­சி­களில் ஈடுப்­பட உள்­ளனர். மேலும் விடு­தலை புலி­க­ளுக்கு எதி­ரான போரின் போது கடல் வழி போரில் ஏற்­பட்ட அனு­ப­வங்கள் மற்றும் ஏனைய படை­க­ளுக்­கான ஒத்­து­ழைப்­புகள் என பரந்­த­ளவில் அனு­பவ பகிர்வும் அமெ­ரிக்க கடற்­ப­டை­யி­ன­ருடன் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது.

அமெ­ரிக்க கடற்­ப­டையின் அதி­வேகப் போக்­கு­வ­ரத்துக் கப்­ப­லான யு எஸ் என் எஸ் போல் ரிவர் ,இவ்­வா­றான கூட்டு பயிற்­சி­களில் தெற்­கா­சி­யாவில் முன்­னெ­டுக்­கின்­றமை ,இதுவே முத­லா­வது சந்­தர்ப்பம் என கடற்­படை பேச்­சாளர் தெரி­வித்­தி­ருந்தார்.

மேலும் ,இந்திய கடற்படையின் நீர்ப்பரப்பு ஆய்வுக் கப்பலான ஐஎன்எஸ் தர்ஷக் ,இரண்டு மாதகால ஆய்வுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு ,இவ்வாரத்தில் ,இலங்கை வரவிருந்த நிலையில் அந்த விஜயம் ,ரத்து செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தலைமையகம் அறிவித்துள்ளது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-03-12#page-1

  • தொடங்கியவர்

பாகிஸ்தான் நாஸர் மற்றும் சாய்ப் கப்பல்கள் இலங்கையில்..! (படங்கள் இணைப்பு)

Published by RasmilaD on 2017-03-13 09:45:34

 

(பா.ருத்ரகுமார்)

unnamed-_2_.jpg

பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான நாஸர் மற்றும் சாய்ப் ஆகிய கப்பல்கள் நல்லெண்ண விஜயமாக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இரண்டு நாடுகளின் கடற்படைக்கும் இடையிலான பலமான மரபு சார் நிபுணத்துவ மற்றும் சகோதரத்துவ உறவின் ஒரு பகுதியாகவே குறித்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

unnamed-_3_.jpg

நான்கு நாட்கள் நங்கூரமிட்டிருக்கும் குறித்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் காலப்பகுதியில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு பயிற்சிகளில் பங்கேற்கவுள்ளன. அத்துடன் இன்று நாசர் கப்பலில் வரவேற்பு நிகழ்வு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

unnamed-_4_.jpg

சீன, அமெரிக்க மற்றும் இந்திய கப்பல்கள் எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு வரவுள்ள நிலையில் தற்போது பாகிஸ்தான் கப்பல் இலங்கைக்கு வந்துள்ளமை பெரும் அவதானத்தை உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

unnamed-_5_.jpg

unnamed-_6_.jpg

unnamed-_7_.jpg

unnamed-_9_.jpg

http://www.virakesari.lk/article/17690

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.