Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீனவர் விவகாரம்: நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீனவர் விவகாரம்: நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி

 

மீனவர் விவகாரம்: நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி

இந்திய மத்திய அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படும் மீனவரின் உடலை பெற்று அடக்கம் செய்ய போராட்டக் குழுவினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். 

இராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது கடந்த 6-ம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ கழுத்துப்பகுதியில் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து இலங்கை கடற்படையினரே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக குற்றம்சாட்டிய மீனவர்கள், தமது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், இலங்கையில் உள்ள அனைத்து படகுகளையும் விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் கடந்த 6 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தங்கச்சிமடம் வந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இந்திய மத்திய அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கை, செயல்பாடுகள் குறித்து மீனவர்களிடம் தெரிவித்து போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார். 

இதனைத் தொடர்ந்து நேற்று மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்கச்சிமடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் மத்திய அரசின் நடவடிக்கை குறித்து ஒரு மணி நேரம் எடுத்துக் கூறினர். மீனவர் பிரிட்ஜோவின் உடலை பெற்று நல்லடக்கம் செய்யவேண்டும் என்றும் போராட்டத்தை மீளப் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். 

இந்த பேச்சுவார்த்தையின் போது, இலங்கை கடற்படையினரை கைது செய்யவேண்டும். சிறைபிடிக்கப்பட்டுள்ள படகுகள் அனைத்தையும் விடுவிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களுக்கு எந்த தொல்லையும் ஏற்படக்கூடாது என்று போராட்டக் குழுவினர் வலியுறுத்தினர். இதற்கு மத்திய அமைச்சர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து சமசர உடன்பாடு ஏற்பட்டது. 

பின்னர் மீனவ சங்க தலைவர் யு.அருளானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 6 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வந்து ஆதரவு தெரிவித்தாலும் மத்திய அமைச்சர்கள் நேரில் வருகை தந்து மீனவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளனர். அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் தங்கச்சிமடத்தில் நடைபெறும் போராட்டத்தை நாளை (இன்று) மீளப் பெற்று மாலை மீனவர் பிரிட்ஜோவின் உடலை அடக்கம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது, என்றார். 

அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறுகையில், ‘மத்திய அரசின் மீது நம்பிக்கை கொண்டு போராட்டத்தை மீனவர்கள் மீளப் பெறுவதாக அறிவித்ததற்கு நன்றி. வருகிற 20-ம் திகதி முதல் 23-ம் திகதிக்குள் ஏதாவது ஒரு நாளில் வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகளை மீனவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க மத்திய அரசு முழுமூச்சாக நடவடிக்கை எடுக்கும்’ என்றார். 

இந்தநிலையில் இந்த தகவல் அறிந்த போராட்டகளத்தில் இருந்த இளைஞர்கள், பெண்கள் உட்பட அனைவரும் போராட்டத்தை மீளப் பெறுவதாக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டனர். கோரிக்கை நிறைவேற்றப்படாமல் போராட்டத்தை மீளப் பெறமாட்டோம் என்றும் அவர்கள் கூறினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

மத்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை முடிந்து போராட்ட களத்துக்கு வந்த மீனவர் பிரிட்ஜோவின் உறவினர் ஜெஸ்டின் மீனவர்களிடையே பேசுகையில், ‘மத்திய அமைச்சர்கள், மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாகவும், மீனவர்களின் பிரச்சினை குறித்து பேச வெளியுறவுத்துறை செயலாளரை சந்திக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். மீனவர்களின் போராட்டம் தொடரும். நாளை(இன்று) உண்ணாவிரதம் இருந்து மாலையில் பிரிட்ஜோவின் உடலை பெற்று நல்லடக்கம் செய்யப்படும் என்றார். 

இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர். இதையடுத்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் போராட்டம் மீளப் தொடர்பாக குழப்பமான சூழ்நிலை நிலவிவருகிறது. தொடர்ந்து அங்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

http://tamil.adaderana.lk/news.php?nid=89073

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.