Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை குறித்த புதிய பிரேரணை ஜெனிவாவில் சமர்ப்பிப்பு

Featured Replies

இலங்கை குறித்த புதிய பிரே­ரணை ஜெனி­வாவில் சமர்ப்­பிப்பு

01-315e65b55cfb25dbb1482207c554627f058f20ba.jpg

 

அமெ­ரிக்கா, பிரிட்டன் உள்­ளிட்ட நான்கு நாடுகள் தாக்கல்

2019 வரை கால அவ­காசம்

2015 பிரே­ர­ணையை முழு­மை­யாக

அமுல்­ப­டுத்த வேண்டியது அவசியம்

நான்கு பரிந்­து­ரைகள் உள்­ள­டக்கம்

ஐ.நா.வின் மதிப்­பீட்­டுக்கு வலி­யு­றுத்தல்

(ரொபட் அன்­டனி)

ஜெனிவா மனித உரிமைகள் பேர­வையில் 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­மாறு வலி­யு­றுத்தும் புதிய பிரே­ரணை ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையில் நேற்று சமர்ப்­பிக்­கப்­பட்­டது. அமெ­ரிக்கா, பிரிட்டன், மொடெனெக்ரோ, 

மெஸ­டோ­னியா ஆகிய நான்கு நாடு­க­ளினால் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள

  இலங்கை தொடர்­பான இந்தப் புதிய பிரே­ர­ணை­யா­னது நல்­லி­ணக்­கத்­திலும் பொறுப்­புக்­கூ­ற­லிலும் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்­தவும் 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தவும் இரண்டு வரு­ட­கால அவ­கா­சத்தை இலங்­கைக்கு வழங்­கு­வ­தற்கு பரிந்­துரை செய்­துள்­ளது.  

2015ஆம் ஆண்டுப் பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்த வேண்­டு­மென்றும் அது தொடர்­பாக 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை­பெறும் ஐ.நா. மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடரில் எழுத்து மூல அறிக்­கை­யையும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை­பெறும் பேர­வையின்ல் 40 ஆவது கூட்டத் தொடரில் பரந்­து­பட்ட அறிக்­கை­யையும் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் பேர­வைக்கு சமர்­பிக்­க­வேண்­டு­மெ­னவும் பிரே­ர­ணையில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. 

நான்கு பரிந்­து­ரை­களை கொண்­டுள்ள புதிய பிரே­ர­ணை­யா­னது 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையின் 1, 2,19,18 ஆகிய செயற்­பாட்டு பந்­தி­களை திருத்தம் செய்யும் வகையில் அமைந்­துள்­ளது. 

அதே­போன்று கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை பிரே­ர­ணையை தாக்கல் செய்த நாடு­களே இம்­மு­றையும் புதிய பிரே­ர­ணையை தாக்கல் செய்­துள்­ளன. 

அந்­த­வ­கையில் தற்­போது மனித உரிமை பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள இலங்கை தொடர்­பான புதிய பிரே­ர­ணையில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள விட­யங்­களும் நான்கு பரிந்­து­ரை­களும் வரு­மாறு:-

சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்ள 

முக்­கிய விட­யங்கள் 

2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட இலங்­கையின் நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூ­றலை ஊக்­கு­வித்தல் என்ற 30-/1 பிரே­ர­ணையை மனித உரிமை பேரவை மீள் உறு­திப்­ப­டுத்­து­கி­றது.  

அது­மட்­டு­மன்றி 2012, 2013,2014 ஆகிய நாடு­களில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணை­களை நினை­வு­கூ­ரு­கின்றோம். இலங்­கையின் இறைமை, சுயா­தீனம், ஐக்­கியம்,மற்றும் ஆட்­புல ஒரு­மைப்­பாடு ஆகி­ய­வற்­றையும் உறு­திப்­ப­டுத்­து­கிறோம். 

அத்­துடன் கடந்த வருடம் பெப்­ர­வ­ரி­மாதம் 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹூசைன் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­ட­தையும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி முதல் செப்­டெம்பர் மாதம் 2 ஆம் திக­தி­வரை முன்னாள் ஐ.நா. செய­லாளர் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­ட­தையும் வர­வேற்­கின்றோம். 

மேலும் ஐ.நா.வின் பல­வந்­த­மாக காணாமல் ஆக்­கப்­பட்டோர் தொடர்­பான செயற்­குழு நீதி, உண்மை, நட்­ட­ஈடு, மற்றும் மீள் நிக­ழாமை தொடர்­பாக ஐ.நா. நிபுணர் சுயா­தீன நீதி­ப­திகள் மற்றும் சட்­டத்­த­ர­ணிகள் தொடர்­பான விசேட நிபுணர், சிறு­பான்மை மக்கள் தொடர்­பான ஐ.நா. நிபுணர் ஆகி­யோரின் இலங்கை விஜ­யங்­க­ளையும் வர­வேற்­கின்றோம். 

அத்­துடன் இலங்கை அர­சாங்­கத்­தினால் 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையை நிறை­வேற்­று­வ­தற்கு முன்­னெ­டுத்த ஆரோக்­கி­ய­மான வேலைத்­திட்­டங்­களை வர­வேற்­ப­துடன் மேலும் முன்­னேற்றம் அவ­சியம் என்­ப­தையும் சுட்­டிக்­காட்­டு­கின்றோம். 

பரிந்­து­ரைகள் 

கடந்த 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையில் இரு­பது பரிந்­து­ரைகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த போதிலும் இம்­முறை நான்கு பரிந்­து­ரைகள் மட்­டுமே முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. அதா­வது 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையில் நான்கு பரிந்­து­ரை­களை திருத்தும் வகை­யி­லேயே புதிய பிரே­ரணை நான்கு பரிந்­து­ரை­களை முன்­வைத்­தி­ருக்­கி­றது. 

1. கடந்த 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையின் கோரிக்­கைக்கு அமைய ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை ஆணை­யாளர் இலங்கை தொடர்­பாக 34 ஆவது கூட்டத் தொடரில் முன்­வைத்­துள்ள பரந்­து­பட்ட அறிக்­கையை பாராட்­டு­கின்றோம். அத்­துடன் அந்தப் பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் விசே­ட­மாக அதில் நிலு­வையில் உள்ள விட­யங்­களை அமுல்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் இலங்கை அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுக்­கின்றோம். (இதன் மூலம் 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையின் முத­லா­வது செயற்­பாட்டு பந்தி திருத்தம் செய்­யப்­ப­டு­கின்­றது)

2. கடந்த 2015 ஆம் ஆண்­டி­லி­ருந்து இலங்கை அர­சாங்கம் ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை ஆணை­ய­ள­ரு­டனும் அவ­ரது அலு­வ­ல­கத்­து­டனும் மேற்­கொண்­டு­வரும் ஆரோக்­கி­ய­மான ஈடு­பாட்டை வர­வேற்­கின்றோம். அத்­துடன் விசேட ஆணை­யா­ளர்­க­ளு­டான இந்த ஈடு­பாட்­டையும் வர­வேற்­கின்றோம். இதே­வேளை இலங்­கையின் மனித உரிமை உண்மை, நீதி, நல்­லி­ணக்கம், மற்றும் பொறுப்­புக்­கூ­றலை ஊக்­கு­விப்­ப­தற்­காக இந்த ஈடு­பாட்டை தொட­ரு­மாறு ஊக்­கு­விக்­கின்றோம். (இதன் மூலம் 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையின் 2ஆம் இலக்­கப்­செ­யற்­பாட்டு பந்தி திருத்­தப்­ப­டு­கி­றது)

3.ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை ஆணை­யாளர் மற்றும் தொடர்­பு­பட்ட விசேட ஆணை­யா­ளர்கள் இலங்கை அர­சாங்­கத்­துடன் தொடர்ந்து ஆலோ­ச­னை­களை நடத்­த­வேண்­டு­மென்றும் இலங்­கையின் மனித உரிமை, உண்மை, நீதி, நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூ­றலை ஊக்­கு­விப்­ப­தற்­கான தொழி­நுட்ப உத­வி­க­ளையும் வழங்­க­வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்­கின்றோம். (இதன் மூலம் 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையின் 19 ஆவது செயற்­பாட்டு பந்தி திருத்தம் செய்­யப்­ப­டு­கி­றது)

4.ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை ஆணை­யாளர் இலங்­கையின் பிரே­ர­ணையின் பரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்­து­வது தொடர்­பாக தொடர் மதிப்­பீ­டு­களை செய்­ய­வேண்டும். அத்­துடன் இலங்­கையின் நல்­லி­ணக்கம் பொறுப்­புக்­கூறல் மனித உரிமை நிலைமை தொடர்­பா­கவும் மதிப்­பீடு செய்­ய­வேண்டும். அது­மட்­டு­மன்றி இலங்கை ஜெனிவா பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­கின்­றமை தொடர்­பாக 2018 ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடரில் எழுத்­து­மூல அறிக்­கை­யையும் 2019 ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 40 ஆவது கூட்டத் தொடரில் பரந்­து­பட்ட விப­ர­மான அறிக்­கை­யையும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் சமர்ப்­பிக்­க­வேண்­டு­மெ­னவும் கோரிக்கை விடுக்­கின்றோம். (இதன் மூலம் 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையின் 18 ஆவது செயற்­பாட்டு பந்தி திருத்தம் செய்­யப்­ப­டு­கின்­றது)

திருத்­தங்­களை முன்­வைக்­கலாம் 

இவ்­வாறு நான்கு பரிந்­து­ரைகள் இலங்கை தொடர்­பான புதிய பிரே­ர­ணையில் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. அதன்­படி நேற்று சமர்ப்­பிக்­கப்­பட்ட இந்த இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையில் எதிர்­வரும் 23 ஆம்­தி­கதி வரை திருத்­தங்­களை உறுப்­பு­நா­டுகள் முன்­வைக்க முடியும். 

23 ஆம் திகதி வாக்­கெ­டுப்பு 

குறிப்பாக இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனையுடன் இந்தப் பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜெனிவா தகவல்கள் தெரிவித்தன. அதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெறும். பிரேரணையானது வாக்கெடுப்பின்றி உறுப்பு நாடுகளின் ஏகோபித்த ஆதரவுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும் சாத்தியமே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம்திகதி ஆரம்பிக்கப்பட்ட ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. எதிர்வரும் 22 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை ஆணை யாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பாக முன்வைத்துள்ள அறிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-14#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.