Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமஷ்டி முறைமையில் 9 மாநிலங்களாக பிரிக்கப்பட்ட இலங்கையே எஞ்சப்போகிறது

Featured Replies

சமஷ்­டி­ மு­றை­மையில் 9 மாநிலங்­க­ளாக பிரிக்­கப்­பட்ட இலங்­கையே எஞ்சப்போகிறது

p21-d2b767b0f2f1be514272a0626e3cdff51e4449fd.jpg

 

புதிய அர­சி­ய­ல­மைப்பு வந்தால் இதுவே நிலை என்கிறார் மஹிந்த
(லியோ நிரோஷ தர்ஷன்)

போரை வெற்றிகொண்­ட­தற்­காக இரா­ணு ­வத்தை தண்­டிப்­பது, மத்­திய அரசாங்கம் மற் றும் ஒற்­றை­யாட்சி இல்­லாமல் போகும் அள­வுக்கு அதி­கா­ரத்தைப் பகிர்­வது உள்­ளிட்ட பிரி­

வி­னை­வா­தி­க­ளுக்கு நன்­மை­ய­ளிக்கும் வகை யில் சந்­தர்ப்­பத்தை ஏற்­ப­டுத்­து­வது அர­சாங்­கத்தின் புதிய அர­சி­ய­ல­மைப்புத் திட்­டத்தின் நோக்­க­மாகும். இந்த திட்டம் வெற்­றி­ய­ளித்தால் சமஷ்டி முறை­மையில் 9 மாநி­லங்­க­ளாகப் பிரிக்­கப்­பட்ட இலங்­கையே இறு­தி­யாக எஞ்சும் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்.  

சம­கால அர­சியல் நிலைமை மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் வௌியிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

அதில் தொடர்ந்தும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது.  

இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பு , அரச நிர்­வாக முறைமை மற்றும் சட்ட கட்­ட­மைப்பை மாற்­றி­ய­மைக்கும் அர­சாங்­கத்தின் முயற்­சி­க­ளினால் எதிர்­கா­லத்தில் ஏற்­பட கூடிய நிலை­மைகள் தற்­போது வௌிப்­பட ஆரம்­பித்­துள்­ளன. அர­சி­ய­ல­மைப்பு சபையின் 6 வழி­ந­டத்தும் குழுக்­களின் அறிக்­கைகள் வௌியி­டப்­பட்­டுள்­ளன. மேலும் ஜி எஸ் பி வரிச்­ச­லு­கையை பெற்றுக் கொள்­வ­தற்­காக ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் 58 நிபந்­த­னைகள் மற்றும் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­திற்கு பதி­லாக பிர­தமர் பரிந்­து­ரைக்கும் புதிய சட்ட மூலம் உள்­ளிட்ட பல விட­யங்கள் ஊட­கங்கள் ஊடாக வௌிவந்­துள்­ளன.

இவை அனைத்­திற்கும் பிர­தான கார­ணாக ் அமைந்­தது 2015 ஆம் ஆண்டு நல்­லாட்சி அர­சாங்­கத்­தின்­ஆ­த­ர­வு­டனும் ஓபா­மாவின் ஆட்சி மற்றும் ஐரோப்­பிய தலை­வர்­களின் ் அனு­ச­ர­ணை­யுடம் ஜெனிவா மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­ன­மாகும்.

தற்­போது பாரிய அர­சியல் மாற்­றம்­ஏற்­பட்­டுள்­ளது. ஆனால் அமெ­ரிக்­காவின் புதிய ஆட்­சி­யுடன் கலந்­து­ரை­யாடி தீர்­மா­னத்தை மாற்­றி­ய­மைத்துக் கொள்ளும் தேவை அர­சாங்­கத்­திற்கும் கிடை­யாது. அதற்­கான முயற்­சி­களும் முன­னெ­டுக்­கப்­பட வில்லை.

2015 ஆம் ஆண்டு தீர்­மா­னத்­திற்கு நல்­லாட்சி அர­சாங்கம் ஆத­ரவு வழங்­கி­ய­மைக்கு சர்­வ­தேச அழுத்­தங்கள் மாத்­திரம் கார­ண­மல்ல. தமது தேசத்­து­ரோக நிகழ்ச்சி நிரலின் தேவையும் காணப்­பட்­டது. இந்­நி­லையில் 2015 ஆம­ஆண்டு தீர்­மா­னத்தை தோளில் சுமந்தும் செல்லும் தேவை அமெ­ரிக்­காவை விட அர­சாங்­கத்­திற்கே அதி­க­மாக விருப்­பத்­திற்­கு­றிய விட­ய­மாக உள்­ளது.

பிர­த­மரின் நல்­லி­ணக்கம் தொடர்­பான செய­ல­ணியின் பரி­து­ரை­க­ளுக்கு அமை­வாக நாட்டில் இடம்­பெற்ற ஆயுத போராட்­டத்­தினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளிடம் அர­சாங்கம் மன்­னிப்­புக்­கோர வேண்டும். ஆனால் பயங்­க­ர­வாத அமைப்போ அல்­லது அவர்­க­ளுக்கு ஒத்­த­ழைப்பு வழங்­கிய அர­சியல் கட்­சி­களோ யாரி­டமும் மன்­னிப்பு கோர வேண்­டி­ய­தில்லை. இத­ன­டிப்­ப­டையில் பயங்­க­ர­வா­தத்தை ஒழித்­ததன் ஊடாக இலங்கை தவறு செய்­துள்­ளது என்ற செய்தி உல­கிற்கு வௌிப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

விடு­தலை புலி­களின் துயிலும் இல்­லங்கள் முன்­பி­ருந்­தது போன்று மறு­ப­டியும் அமைத்து கொடுக்­கப்­பட வேண்டும். மாவீரர் தினத்தை அனுஷ்­டிக்க சந்­தர்ப்ப அளிக்­கப்­பட வேண்டும். மேலும் உயி­ரி­ழந்த விடு­தலை புலி­களின் உரு­வப்­ப­டங்­களை அவர்­க­ளது சீரு­டை­யுடன் வீட்டில் காட்­சிப்­ப­டுத்த அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட வேண்டும் போன்ற விட­யங்­க­ளையும் பிர­த­மரின் செய­லணி பரிந்­து­ரைத்­துள்­ளது. ஆனால் பயங்­க­ர­வா­தத்தை ஒழித்த இரா­ணு­வத்­தி­ன­ருக்கோ அல்­லது போர் வெற்­றியை கொண்­டா­டு­வ­தற்கோ எவ்­வி­த­மான விட­யங்­களும் குறிப்­பி­டப்­பட வில்லை.

குற்­றச்­சாட்­டுக்கள் பதிவு செய்­யப்­ப­டாத அனைத்து விடு­தலை புலி உறுப்­பி­னர்­களும் உட­ன­டி­யாக விடு­விக்­கப்­பட வேண்டும். குற்றம் புரிந்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கின்ற இரா­ணு­வத்­தி­னரை சிறை­யி­லிட வேண்டும் என பிர­த­மரின் செய­லணி கூறு­கின்­றது. நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த இதுவே சிறந்த வழி என்றும் குறிப்­பிட்­டுள்­ளனர்.

2015 ஆம் ஆண்டில் ஓபாமா ஆட்­சியின் மனித உரிமை ் தீர்­மானம் மற்றும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஜி எஸ் பி வரி சலுகை நிபந்­த­னை­க­ளுக்கு அடி­ப­ணிந்து எமது இரா­ணு­வத்தை சர்­வ­தேச நீதி­ப­தி­களின் பங்­குப்­பற்­ற­லுடன் குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் நிறுத்த வேண்டும் என பிர­த­மரின் செய­லணி கூறு­கின்­றது.

ஆனால் விடு­தலை புலி உறுப்­பி­னர்கள் புனர்­வாழ்வு பெற்­றுள்­ள­மை­யி­னாலும் அல்­லது நடை­மு­றையில் உள்ள சட்­டத்தில் தண்­டிக்­கப்­பட்டு உள்­ள­மை­யி­னாலும் அவர்­க­ளுக்கு எதி­ராக இங்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட கூடாது. மேலும் புலி­களின் இயக்­கத்தில் இருந்து விலகி அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­பட்ட புலிகள் இயக்­கத்தின் தலை­வர்­க­ளுக்கு எதி­ராக போர் குற்ற விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் எனவும் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

2015 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரி­மைகள் தீர்­மா­னத்­திற்கு அமை­வாக போர் குற்றம் புரிந்­த­தாக சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்ற , ஆனால் போர் குற்ற விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்த கூடி­ய­ள­விற்கு சாட்­சி­க­ளற்ற படை­யி­னர்கள் நிர்­வாக முறை­களை பின்­பற்றி பதவி நீக்­கப்­பட வேண்டும் . பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­திற்கு பதி­லாக பிர­தமர் பரிந்­து­ரைக்­கின்ற புதிய சட்­டத்­திற்கு அமை­வாக பயங்­க­ர­வாத சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ராக போதிய சாட்­சிகள் காணப்­ப­டா­விடின் மன்­னிப்பு கோரல் , புனர்­வாழ்வு பெறல் , எதிர்­கா­லத்தில் குற்றம் செய்­யா­தி­ருப்­ப­தாக உறு­தி­மொழி வழங்­குதல் மற்றும் சமூக சேவையில் ஈடு்­ப­டுதல் போன்ற நிபந்­த­னை­களின் அடிப்­ப­டையில் சட்­ட­மா­தி­ப­ருக்கு அல்­லது நீதி­மன்­றத்தின் ஊடாக அவ­ருக்கு எதி­ரான சட்ட நட­வ­டிக்­கை­களை இடை­நி­றுத்த முடியும்.

பொலிஸ் , சட்டம் மற்றும் அமை­திக்­கான உப குழுவின் பரிந்­து­ரை­க­ளுக்கு அமை­வாக மூன்று மாதங்­க­ளுக்கு அதிகம் அல்­லது 180 நாட்­களில் 90 நாட்­க­ளுக்கு அதி­க­மான காலங்கள் அவ­ச­ர­கால சட்­டத்­தினை முன்­னெ­டுப்­ப­தாயின் அதற்கு பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை ஆத­ரவு அவ­சி­ய­மாகும்.

சர்­வ­தேச பிர­க­ட­னங்­களை இலங்­கையின் சட்ட கட்­ட­மைப்­பிற்குள் உள்­வாங்­கு­வ­தற்­கான பொறி­மு­றை­களை திருத்­தி­ய­மைத்து ஜெனிவா மனித உரி­மைகள் குழு­விற்கு இலங்­கை­யி­லி­ருந்து மேன்­மு­றை­யீடு செய்­வ­தற்கு சந்­தர்ப்பம் வழங்­கப்­பட வேண்டும் என நீதி­மன்றம் தொடர்­பான உப குழு பரிந்­து­ரைத்­துள்­ளது. இதனால் இலங்­கையின் உச்ச நீதி­மன்­ற­மாக கருத கூடிய உயர் நீதி­மன்­றத்­திற்­கான அந்­தஸ்து இல்­லாமல் போய் விடும். ஒரு நாட்டின் நீதி மன்றம் சர்­வ­தேச நீதி மன்­றத்­திற்கு கட்­டுப்­படும் நிலை ஏற்­பட்டால் அது நாட்டின் இறை­யாண்­மையை பாதிக்கும் விட­ய­மாகும். பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வில­கு­வ­தற்கு இதுவும் ஒரு கார­ண­மாகும்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு ஊடாக அர­சாங்கம் முன்­னெ­டுக்க திட்­ட­மிட்­டி­ருக்கும் விட­யங்­களில் சில விட­யங்­களை மேல் குறிப்­பிட்­டுள்ளேன். இவற்றை போன்ற மேலும் பல விட­யங்கள் காணப்­ப­டு­கின்­றன. போரை வெற்றிக் கொண்­ட­தற்­காக இரா­ணு­வத்தை தண்­டிப்­பது மற்றும் மத்­திய அரசோ அல்­லது ஒற்­றை­யாட்­சியோ இல்­லாமல் போகும் அள­விற்கு அதி­கா­ரத்தை பகிர்­வது உள்­ளிட்ட பிரி­வி­னை­வா­தி­க­ளுக்கு நன்­மை­ய­ளிக்கும் வகையில் சந்­தர்ப்­பத்தை ஏற்­ப­டுத்­து­வது இந்த திட்­டத்தின் நோக்­க­மாகும்.

மேற்­கு­றிப்­பிட்ட விட­யங்கள் நிறை­வேற்­றப்­பட்டால் சமஷ்டி முறை­மையில் 9 மாநி­லங்­க­ளாக பிரிக்­கப்­பட்ட இலங்­கையே இறு­தி­யாக மிச்­சப்­படும். அங்­கி­ருந்து சுயாட்­சிக்கு இருப்­பது ஒரு படி மாத்­தி­ர­மே­யாகும்.

தேசிய மற்றும் சர்­வ­தேச தனி ஈழத்­திற்­கான கோரிக்­கை­யா­ளர்கள் சர்­வ­தேச சக்­தி­க­ளுடன் இணைந்து 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்தல் முடி­வு­களை திரிவுப்படுத்தியதுடன் நான்கு தசாப்தகால பயங்கரவாத போரில் பெற்றுக் கொள்ள முடியாமல் போனதை வழங்குவதற்காகு தேவையான ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. எனவே அரசாங்கத்தில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கும் ஐக்கிய தேசிய கட்சியினருக்கும் ஒரு விடயத்தை கூற விரும்புகின்றேன். இவ்வாறான தேசத்துரோக திட்டத்திற்கு நாட்டையும் மக்களையும் காட்டிக்கொடுப்பதா இல்லையா என்பதை அனைத்து உறுப்பினர்களும் கட்சி பேதங்களை மறந்து தனித்து தீர்மானிக்க வேண்டும்.

 நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் மற்றும் தேர்தல் முறைமையை மாற்றுதல் இவை இரண்டுமே நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறுவதற்கு முன்னர் வழங்கிய பிரதான உறுதிமொழிகளாகும். மக்களுக்கு வழங்கிய இந்த இரண்டு உறுதிமொழிகள் இரண்டையும் புறம் தள்ளிவிட்டு , மேல் குறிப்பிட்ட விடயங்களை மாத்திரம் முன்னெடுக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்வது குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-14#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.