Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் புலி உறுப்பினர் உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல்..!

Featured Replies

முன்னாள் புலி உறுப்பினர் உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல்..!

 

 

முன்னாள் விடுதலை புலிகள் உறுப்பினர் உள்ளிட்ட நால்வர் வெள்ளவாய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதோடு, விளக்கமறியலில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

1485224575322.jpg

வெள்ளவாய பொலிஸ் நிலையத்திற்கு 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தினுடாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, அண்மையில் இரண்டு பெண்கள் உட்பட நால்வர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினரான பெண், புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்ட ஒருவரும், இலங்கை இராணுவத்தை சேர்ந்த கோப்ரல் ஒருவரும் அடங்குவதாக தெரியவந்துள்ளது. 

அத்தோடு கைது செய்யப்பட்டவர்கள் வெல்லாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/17821

  • தொடங்கியவர்

முன்னாள் பெண் போராளி உட்­பட நால்வர் கைது : வெல்­ல­வா­யவில் சம்­பவம்

Published by RasmilaD on 2017-03-16 10:54:57

 

 

(எம்.எப்.எம்.பஸீர்)

புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்­ட ­முன்னாள் பெண் புலி உறுப்­பினர், இரா­ணுவ வீரர் ஒருவர் உள்­ளிட்ட நால்வர் வெல்­ல­வாய பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்டு 14 நாட்கள் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

23104128-arrested-arrest-handcuffs.jpg

கொட்­ட­வெ­ஹ­ர­கல பகு­தியில் நேற்று முன் தினம் ஜனா­தி­பதி பங்­கேற்கும் நிகழ்­வொன்று இடம்­பெற்ற நிலையில் அதன் பாது­காப்புப் பணியில் ஈடு­பட்­டி­ருந்த வெல்­ல­வாய பொலி­ஸாரே 119 தகவல் ஒன்­றுக்கு அமை­வாக இந்த நால்­வ­ரையும் கைது­செய்­துள்­ளனர்.

கைது செய்­யப்­பட்ட விடு­தலைப் புலி­களின் முன்னாள் பெண் உறுப்­பினர் உள்­ளிட்ட நால்­வ­ரையும் எதிர்­வரும் 28ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு வெல்­ல­வாய நீதிவான் நீதி­மன்­றினால் உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

இவர்­களை வெல்­ல­வாய நீதிவான் நீதி­மன்­றத்தில் நேற்று முன்­னி­லைப்­ப­டுத்­தி­ய­போதே இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, 

ஜனா­தி­பதி கலந்­து­கொள்ளும் காணி வழங்கும் நிகழ்­வொன்று கொட்­ட­வெ­ஹ­ர­கல பகு­தியில் இடம்­பெற்­றுள்­ளது. இது தொடர்­பி­லான பாதுகாப்பு பணியில் ஜனா­தி­பதி பாது­காப்பு பிரி­வுடன் சேர்ந்து வெல்­ல­வாய பொலி­ஸாரும் ஈடு­பட்­டி­ருந்­துள்­ளனர். 

இதன் போது 119 என்ற அவ­சர தொலை பேசி இலக்­கத்­திற்கு கிடைக்கப்பெற்ற தக­வ­லுக்கு அமைய வெல்­ல­வாய கொட­வெ­ஹ­ர­கள பகு­தியில் வைத்து 35 வய­து­டைய பெண் ஒரு­வரையும் இரா­ணுவ வீரர் ஒரு­வரையும் வய­தான மற்­றொரு பெண்  மற்றும் முச்­சக்­கரவண்டிச் சாரதி ஒரு­வ­ரையும் பொலிஸார் கைது­செய்­துள்­ளனர். 

இதில், கைது­செய்­யப்­பட்ட நால்­வரில் 35 வய­து­டைய பெண்  விடு­தலைப் புலி­களின் முன்னாள் பெண் உறுப்­பி­ன­ராவார். புனர்­வாழ்வின் பின்னர் விடு­விக்­கப்­பட்ட  இவர் 1998ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரையில் விடு­தலைப் புலிகள் அமைப்பின் பொலிஸ் பிரிவில் கட­மை­யாற்றியுள்ளார் எனவும் தெரி­ய­வந்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து பொலி­ஸாரின் விசா ­ரணை தீவி­ர­ம­டை­யவே கைதா­ன­வர்­களில் ஒருவர் கிழக்கில் முகாம் ஒன்றில் கட­மை­யாற்றும் வெல்­ல­வாய கொட்­ட­வெ­ஹ­ர­கல பகு­தியைச் சேர்ந்த இரா­ணுவ வீரர் என்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

மேல­திக விசா­ர­ணை­களில், குறித்த இரா­ணுவ வீரர் திரு­ம­ண­மா­னவர் என்ற போதும் அவ­ருக்கு பிள்­ளைகள் இல்லை எனவும் அந்த குறையைத் தீர்க்க முன்னாள் புலி உறுப்­பினர் ஊடாக குழந்தை ஒன்­றினை பெற்­றுக்­கொள்ளத் திட்­ட­மிட்டு அவ­ரது விருப்­பத்­துக்கு அமை­வா­கவே அவரை வெல்­ல­வா­ய­வுக்கு அழைத்துவந்­த­தா­கவும் அது தொடர்பில் சட்ட ஆலோ­சனை பெறப்போகும் வழி­யி­லேயே கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் சந்­தேக நபர்கள் தெரி வித்துள்ளனர்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர பிரேமசாந்த, சிரேஷ்ட பொலிஸ் அத்தி யட்சர் சிஜித் வெதமுல்ல ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய மேலதிக விசார ணைகளை வெல்லவாய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.எம். ஜயரத்ன முன்னெடுத்துள்ளார்.

http://www.virakesari.lk/article/17855

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.