Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியா சென்றவர்கள் மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைப்பு

Featured Replies

அவுஸ்திரேலியா சென்றவர்கள் மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைப்பு
 
அவுஸ்திரேலியா சென்றவர்கள் மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைப்பு
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து  சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா சென்ற இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
 
கடந்த யுத்த காலத்தின் போது சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு  சென்றிருந்த 24 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்திகள் தெரிவிப்பதோடு, அவர்கள் அவுஸ்திரேலியாவில் இருந்து விசேட விமானம் மூலம் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களிடம் தற்போது விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இவர்கள் கடந்த 2016ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றுள்ளனர்.
 
முகாம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இவர்கள் தற்போது நாடுகடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.onlineuthayan.com/news/24875

  • தொடங்கியவர்

அவுஸ்திரேலியாவிலிருந்து 25 இலங்கையர்கள் நாடு கடத்தல்..!

 

 

இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக சென்றிருந்த இலங்கையர்கள் 25 பேரை அவுஸ்திரேலிய குடியகழ்வு திணைக்களம் நாடுகடத்தியுள்ளது.

 

இலக்காயிலிருந்து கடந்த வருடம் விமானம் மூலம் மலேசியா சென்று, இவ் வருடம் ஜனவரி மாதமளவில் அவுஸ்திரேலியா சென்றிருந்த 25 பேர், விஷேட விமானம் மூலம் இன்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் இன்று அதிகாலை 6 மணியளவில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள், இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் வவுனியா பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் விமானம் மூலம் மலேசியாவிற்கு சென்ற, அங்கிருந்து கடந்த ஜனவரி மாதம் சட்டவிரோத படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/17826

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.