Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச நீதிபதிகளின்றி உள்ளக விசாரணையை முன்னெடுக்கவே எதிர்பார்க்கின்றோம் : வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர

Featured Replies

சர்வதேச நீதிபதிகளின்றி உள்ளக விசாரணையை முன்னெடுக்கவே எதிர்பார்க்கின்றோம் : வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர

 

 

நல்லிணக்கத்திலும் பொறுப்புக்கூறலிலும்  முன்னேற்றத்தை வெளிக்காட்டுவதற்கு நாங்கள் இரண்டு வருடகால அவகாசத்தை ஐ.நா.விடம் கோரினோம். அந்த கால அவகாசம் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. நாங்கள் எமது  திட்டத்திற்கேற்ப உள்ளக விசாரணையை சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பின்றி  முன்னெடுக்கவே எதிர்பார்க்கின்றோம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

fsafasfs.JPG

வெளிவிவகார அமைச்சில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

 

 

சர்வதே நீதிபதிகள் என்பது  இலங்கை தொடர்பான பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள ஒரு பரிந்துரை மட்டுமேயாகும். அதனை கட்டாயமாக  ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம்  எமக்கில்லை. 

 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பகரமான தீர்வை வழங்குவதே எமது எதிர்பார்ப்பாகும். அதனை நாம் மீண்டும் வலியுறுத்துகின்றோம். நாம் முன்வைத்த வேலைத்திட்டத்திற்கே அமெரிக்காஇ  பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன. 

 

 காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிவதற்கான தேவை எங்களுக்கும் இருக்கிறது. உண்மையை நாம் கண்டுபிடிக்கவேண்டும். அதற்காகவே   காணாமல்போனோர் அலுவலகத்தை அமைத்து  நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

 

எமது நாட்டின் நீதித்துறை   கடந்த காலங்களில் சுயாதீனத்தன்மையை இழந்து காணப்பட்டமையே இந்தக் கோரிக்கைக்கான காரணமாகும்.  எமது நீதித்துறை கடந்த காலங்களில் சுயாதீன நிலையை இழந்து இருந்தது. ஆனால் நாங்கள் கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் சுயாதீன நீதித்துறையை கட்டியெழுப்பியிருக்கிறோம். 

நல்லிணக்கத்திலும் பொறுப்புக்கூறலிலும்  முன்னேற்றத்தை வெளிக்காட்டுவதற்கு நாங்கள் இரண்டு வருடகால அவகாசத்தைக் கோரினோம். அந்த கால அவகாசம் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. 

 

விசாரணைப் பொறிமுறைக்கு சர்வதே நீதிபதிகளை கொண்டுவருவதற்கு எமது தற்போதைய அரசியலமைப்பில் இடமில்லை. எனவே அரசியலமைப்பை மீறி  வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டுவந்து விசாரணை நடத்த நாம் தயாராக இல்லை.  எனவே  நாங்கள் உள்ளக  நீதிபதிகளைக் கொண்டே  விசாரணைப் பொறிமுறையைக் கொண்டுவருவோம்.

தெற்கு மக்கள் காணாமல் போனபோது  மஹிந்தவுக்கு ஜெனிவா போகமுடியும் என்றால் வடக்கு மக்கள் பற்றி நாம் சிந்திக்கவேண்டியது அவசியம்.

இலங்கையில் ஜோசப் முகாம் என்ற சித்திரவதை முகாம் இருந்ததாக ஜஸ்மீன் சூகா குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். அவரை நான் இலங்கைக்கு வந்து உண்மை நிலையைப் பார்வையிடுமாறு கூறியிருந்தேன். அதன் பின்னரே சித்திரவதைகள் தொடர்பான ஐ.நா.வின் விசேட நிபுணர்  இலங்கைக்கு அழைத்து  அனைத்து இடங்களையும் சென்று பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கினோம்.  

அதன்படி அவர்  ஜோசப் முகாமிற்கும் சென்று பார்வையிட்டு விட்டு அவ்வாறு  சித்திரவதை முகாம் எதுவும் இல்லையெனக் கூறினார்.  கடந்த காலத்தில்   சித்திரவதை முகாம்கள்  இருந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டை  நாங்கள்   மறுக்கவில்லை.  ஆனால்  தற்போது  சித்திரவதை முகாம் என்று  எதுவும் இல்லை என்பதை   சுட்டிக்காட்டுகிறோம்.  அதனால் தற்போது  ஜஸ்மின் சூகாவிற்கு மீண்டுமொருமுறை  இலங்கை வருமாறு அழைப்புவிடுக்கின்றோம். இலங்கை வந்து உங்களுக்குத் தேவையான அனைத்து இடங்களையும் பார்வையிடலாம். சித்திரவதை முகாம்  இருக்கின்றதா இல்லையா என்பதை கண்டுபிடிக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/17883

  • தொடங்கியவர்

எமது திட்டத்திற்கே சர்வதேசம் ஆதரவு

01-5002947e8558688e3c95bccf55a4648803b419b9.jpg

 

சர்வதேச நீதிபதிகளை ஏற்க வேண்டியதில்லை என்கிறார் மங்கள

காணாமல் போனோர் விவகாரத்துக்கு

விரைவில் தீர்வு காணப்படும்

கண்காணிப்பு அலுவலகத்தைக் கோர

கூட்டமைப்புக்கு உரிமையுள்ளது

சர்வதேச விசாரணையை தடுத்து நிறுத்தியுள்ளோம்

 (ரொபட் அன்­டனி)

சர்­வ­தேச நீதி­ப­திகள் என்­பது இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள ஒரு பரிந்­துரை மட்­டு­மே­யா கும். அதனை கட்­டா­ய­மாக ஏற்­றுக்­கொள்­ள­வேண்­டிய அவ­சியம் எமக்­கில்லை. நாங் கள் எமது திட்­டத்­திற்­கேற்ப உள்­ளக விசா­ர­ணையை சர்­வ­தேச நீதி­ப­தி­களின் பங்­க­ளிப்­பின்றி முன்­னெ­டுக்­கவே எதிர்­பார்க்­கின் றோம். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நம்­ப­க­ர­மான தீர்வை வழங்­கு­வதே எமது எதிர்­பார்ப்­பாகும். அதனை நாம் மீண்டும் வலி­யு­றுத்­து­கின்­றோம்­ என்று வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார்.

நாம் முன்­வைத்த வேலைத்­திட்­டத்­திற்கே அமெ­ரிக்கா, பிரிட்டன் உள்­ளிட்ட நாடுகள் இணை அனு­ச­ரணை வழங்­கி­யுள்­ளன. மேலும் காணாமல் போனோ­ருக்கு என்ன நடந்­தது என்­பதை கண்­ட­றி­வ­தற்­கான தேவை எங்­க­ளுக்கும் இருக்­கி­றது. ஒரு­வேளை அவர்கள் இறந்­தி­ருக்­கலாம். அல் ­லது மறைத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கலாம், வெளி­நாடு சென்­றி­ருக்­கலாம். அல்­லது உயி­ருடன் இருந்­தி­ருக்­கலாம்.

எவ்­வா­றெ­னினும் உண்­மையை நாம் கண்­டு­பி­டிக்­க­வேண்டும். அதற்­கா­கவே காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்தை அமைத்து நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறோம் என்றும் அமைச்சர் சுட்­டிக்­காட்­டினார்.  

சர்­வ­தேச நீதி­ப­தி­க­ளையும் ஐ.நா. கண்­கா­ணிப்பு அலு­வ­ல­கத்­தையும் கோரும் உரிமை தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­புக்கு உள்­ளது. அது தொடர்பில் நாம் பேசி முடி­வெ­டுக்­கலாம். 2014 ஆம் ஆண்டு இலங்கை மீது கொண்­டு­வ­ரப்­பட்ட சர்­வ­தேச விசா­ர­ணையை நாங்கள் தடுத்து நிறுத்­தி­யி­ருக்­கின்றோம். அதுவே எமக்கு கிடைத்த பாரிய வெற்­றி­யா­கும்­எ­னவும் அமைச்சர் மங்­கள சம­ர­வீர குறிப்­பிட்டார்.

வெளி­வி­வ­கார அமைச்சில் நேற்று நடை­பெற்ற விசேட செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்;

2014ஆம் ஆண்டு இலங்­கைக்கு எதி­ராக ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ரணை ஊடாக இலங்கை அர­சாங்கம் விரும்­பி­னாலும் விரும்­பா­விட்­டாலும் சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்­டு­மென வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது.

இந்த நிலை­யி­லேயே 2015 ஆம் ஆண்டு அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­தது. ஒரு­வேளை நாங்கள் ஆட்­சிக்கு வந்­தி­ருக்­கா­விடின் இலங்கை மீது சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­பட்டு இப்­போ­தைக்கு பொரு­ளா­தார தடைகள் விதிக்­கப்­பட்டு நாடு நெருக்­கடி நிலை­மையை சந்­திந்­தி­ருக்கும்.

அது­மட்­டு­மன்றி ராஜ­பக்ஷ குடும்­பத்­தி­ன­ருக்கு வெளி­நாடு செல்­வ­தற்­கான தடை­களும் விதிக்­கப்­பட்­டி­ருக்கும். ஆனாலும் நாம் 2015 ஆம் ஆண்டு ஆட்­சிக்கு வந்து நிலை­மையை மாற்­றி­ய­மைத்தோம். சர்­வ­தேச விசா­ரணை என்ற நிலை­மையே இல்­லாமல் செய்தோம். உள்­ளக விசா­ரணை நடத்­து­வ­தாக வாக்­கு­றுதி அளித்தோம். அவ்­வாறு நாம் முன்­வைத்த வேலைத்­திட்­டத்­திற்கே 2015 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் அமெ­ரிக்கா, பிரிட்டன் உள்­ளிட்ட நாடுகள் ஆத­ரவு வழங்­கின.

உண்­மையில் இலங்கை 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணைக்கு அனு­ச­ரணை வழங்­கி­யது எனக் கூறப்­ப­டு­வது தவ­றாகும். மாறாக நாங்கள் முன்­வைத்த வேலைத்­திட்­டத்­திற்கு சர்­வ­தேச நாடுகள் ஆத­ரவு வழங்­கின. அத­ன­டிப்­ப­டையில் நாங்கள் உள்­ளக விசா­ர­ணையை முன்­னெ­டுப்போம். நாங்கள் வெளி­நாட்டு நீதி­ப­தி­களை கொண்­டு­வர முயற்­சிப்­ப­தாக கூட்டு எதி­ரணி குற்றம் சுமத்­து­கி­றது.

ஆனால் சர்­வ­தேச நாடுகள் வெளி­நாட்டு நீதி­ப­தி­களை பரிந்­து­ரைப்­ப­தற்கு என்­ன­கா­ரணம் என்­பதை நாம் கண்­டு­பி­டிக்­க­வேண்டும். எமது நாட்டின் நீதித்­துறை கடந்த காலங்­களில் சுயா­தீ­னத்­தன்­மையை இழந்து காணப்­பட்­ட­மையே இந்தக் கோரிக்­கைக்­கான கார­ண­மாகும். எமது நீதித்­துறை கடந்த காலங்­களில் சுயா­தீன நிலையை இழந்து இருந்­தது. ஆனால் நாங்கள் கடந்த இரண்டு வரு­டங்­களில் நாட்டின் சுயா­தீன நீதித்­து­றையை கட்­டி­யெ­ழுப்­பி­யி­ருக்­கிறோம்.

அந்­த­வ­கையில் நாங்கள் 2015 ஆம் ஆண்டு பிரே­ரணை வழங்­கு­வ­தற்கு யாரும் அழுத்தம் பிர­யோ­கிக்­க­வில்லை. மாறாக எமது வேலைத்­திட்­டத்­திற்கு சர்­வ­தேச நாடுகள் ஆத­ரவு தெரி­வித்­தன. குறிப்­பாக அமெ­ரிக்கா, பிரிட்டன் உள்­ளிட்ட நாடுகள் நாம் முன்­வைத்த வேலைத்­திட்­டத்­திற்கு ஆத­ரவு தெரி­வித்­தன. எவ்­வா­றெ­னினும் சர்­வ­தேச விசா­ர­ணையை நாங்கள் நீக்­கி­விட்­டமை எமக்கு கிடைத்த பிர­தான வெற்­றி­யாகும்.

கேள்வி: இரண்டு வரு­ட­கால அவ­காசம் கோரப்­பட்­டுள்­ளதா?

பதில்: நல்­லி­ணக்­கத்­திலும் பொறுப்­புக்­கூ­ற­லிலும் முன்­னேற்­றத்தை வெளிக்­காட்­டு­வ­தற்கு நாங்கள் இரண்டு வரு­ட­கால அவ­கா­சத்தைக் கோரினோம். அந்த கால அவ­காசம் எமக்கு கிடைக்­கப்­பெற்­றுள்­ளது. அதன்­படி நாங்கள் எதிர்­வரும் இரண்டு வரு­டங்­களில் பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டை முடித்து மக்­க­ளுக்கு நீதியைப் பெற்­றுக்­கொ­டுப்போம். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு திருப்­தி­ய­ளிக்கும் வகை­யி­லான வேலைத்­திட்­டத்­தையே நாங்கள் முன்­னெ­டுப்போம்.

கேள்வி: 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையில் சர்­வ­தேச நீதி­ப­திகள் என்ற பரிந்­துரை உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில்?

பதில்: 2015 ஆம் ஆண்டு பிரே­ரணை எமது ஆலோ­ச­னை­யு­ட­னேயே தயா­ரிக்­கப்­பட்­டது. இதில் நாம் விட­யங்­களை முன்­வைத்­தது போன்று வேறு சில உறுப்பு நாடு­களும் சில பரிந்­து­ரை­களை முன்­வைத்­தன. அதில் சர்­வ­தேச நீதி­ப­திகள் என்ற பரிந்­து­ரையும் உள்­ள­டங்­கி­யி­ருந்­தது. அது இயல்­பா­னது. நாங்கள் சில யோச­னை­களை முன்­வைக்கும் போது வேறு நாடுகள் சில யோச­னை­களை முன்­வைக்கும் அவை வெறு­மனே பரிந்­து­ரை­யாகும்.

அவற்றை நாம் ஏற்­றுக்­கொள்­ள­வேண்­டிய அவ­சியம் இல்லை. மேலும் இவ்­வாறு சர்­வ­தேச நீதி­ப­திகள் என்ற பரிந்­துரை முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தாலும் அது தொடர்­பான இறுதி முடிவை எடுக்கும் அதி­காரம் இறைமை உள்ள இலங்கை அர­சாங்­கத்­திற்கு உள்­ள­தாக மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைனே தெரி­வித்­துள்ளார். மாற்று வழி­மு­றை­களை கையா­ளலாம் எனக் குறிப்­பிட்­டி­ருந்தார்.

எனவே அந்தப் பரிந்­து­ரையை நாங்கள் ஏற்­றுக்­கொள்­ள­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. நாங்கள் வெளி­நாட்டு நீதி­ப­திகள் இல்­லாமல் நாம் விசா­ர­ணையை முன்­னெ­டுத்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி­வ­ழங்­கவே எதிர்­பார்க்­கின்றோம். இறு­தி­யாக முடி­வெ­டுக்கும் உரிமை அர­சாங்­கத்­திற்கே உள்­ளது.

கேள்வி: சர்­வ­தேச நீதி­ப­தி­களை ஏற்­பீர்­களா இல்­லையா? உறு­தி­யான பதிலை சொல்­லுங்கள்?

பதில்: அதா­வது விசா­ரணைப் பொறி­மு­றைக்கு சர்­வ­தேச நீதி­ப­தி­களை கொண்­டு­வ­ரு­வ­தற்கு எமது தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பில் இட­மில்லை. எனவே அர­சி­ய­ல­மைப்பை மீறி வெளி­நாட்டு நீதி­ப­தி­களைக் கொண்­டு­வந்து விசா­ரணை நடத்த நாம் தயா­ராக இல்லை. எனவே நாங்கள் உள்­ளக நீதி­ப­தி­களைக் கொண்டே விசா­ரணைப் பொறி­மு­றையைக் கொண்­டு­வ­ருவோம். ஆனால் பாதிக்­கப்­பட்ட மக்கள் நம்­பிக்கை கொள்­ளும்­வ­கை­யி­லான பொறி­மு­றையைக் கொண்­டு­வ­ருவோம் பாதிக்­கப்­பட்ட மக்கள் குறித்து நாம் சிந்­திக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

கேள்வி: காணாமல் போனோரின் உற­வி­னர்கள் நீண்­ட­கா­ல­மாக நீதிக்­காகக் காத்­தி­ருக்­கின்­றனர். அவர்­க­ளுக்கு உங்கள் பதில் என்ன?

பதில்: அவர்­களின் கவ­லையை நாங்கள் உண­ரு­கிறோம். அவர்­க­ளுக்கு நீதி கிடைக்­க­வேண்டும் என கரு­து­கிறோம். எனவே அவர்­க­ளுக்கு நீதி வழங்­கப்­படும். அவர்­களின் கவ­லையில் நியாயம் இருக்­கி்­ன­றது. தெற்கு மக்கள் காணாமல் போன­போது மஹிந்­த­வுக்கு ஜெனிவா போக­மு­டியும் என்றால் வடக்கு மக்கள் பற்றி நாம் சிந்­திக்­க­வேண்­டி­யது அவ­சியம்.

அதற்­கா­கத்தான் காணாமல் போனோர் அலு­வ­ல­கத்­திற்­கான சட்­டத்தை நிறை­வேற்­றி­யி­ருக்­கின்றோம். அந்த சட்­டத்தில் தற்­போது திருத்தம் செய்­ய­வேண்­டி­யி­ருக்­கி­றது. அந்த திருத்தம் நிறை­வேற்­றப்­பட்­டதும் காணாமல் போனோர் அலு­வ­லகம் இயங்கும். மேலும் உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­கு­ழு­வொன்றை உரு­வாக்கும் நட­வ­டிக்­கை­யொன்றை மேற்­கொண்டு வரு­கின்றோம்.

கேள்வி: சர்­வ­தேச நீதி­ப­திகள் வேண்­டு­மென்றும் ஐ.நா. கண்­கா­ணிப்பு அலு­வ­லகம் இலங்­கையில் அமைக்­கப்­ப­ட­வேண்டும் என்றும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு கூறி­யுள்­ளது. இது தொடர்பில் ?

பதில்: அவ்­வா­றான கோரிக்­கையை முன்­வைப்­ப­தற்கு தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­புக்கு உரிமை இருக்­கி­றது. அது தொடர்பில் நாம் பேச்­சு­வார்த்தை நடத்தலாம். அது குறித்து பரிசீலிக்கலாம். ஆனால் இந்த இடத்தில் நாங்கள் பெற்ற வெற்றி என்னவெனில் சர்வதேச விசாரணையை இல்லாமல் செய்திருக்கின்றோம். இதுவே எமது வெற்றியாகும். அதிலிருந்து நாட்டைப் பாதுகாத்திருக்கின்றோம்.

கேள்வி: காணாமல்போனவர்கள் இறந்திருக்கலாம் என்று ஒரு சந்தர்ப்பத்திலும் வெளிநாடு சென்றிருக்கலாம் என்று இன்னொரு சந்தர்ப்பத்திலும் பிரதமர் கூறியிருக்கிறார். இது தொடர்பில்?

பதில்: காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிவதற்கான தேவை எங்களுக்கும் இருக்கிறது. ஒருவேளை அவர்கள் இறந்திருக்கலாம். அல்லது மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம், வெளிநாடு சென்றிருக்கலாம். அல்லது உயிருடன் இருந்திருக்கலாம். எவ்வாறெனினும் உண்மையை நாம் கண்டுபிடிக்கவேண்டும். அதற்காகவே காணாமல்போனோர் அலுவலகத்தை அமைத்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்ற தேவை எமக்கும் உள்ளது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-17#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.