Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக் கோரி சிங்கள மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Featured Replies

தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக் கோரி சிங்கள மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

IMG8075-copy-f71af308cda468605770842c688e720dca7581d7.jpg

 

எம்.சி.நஜி­முதீன், படப்பிடிப்பு எம்.எஸ்.சலீம்

காணாமல் போனோரை கண்­ட­றிதல், அர­சியல் கைதி­ களை விடு­தலை செய்தல், வட – கிழக்கு மக்­களின் காணி­ களை விடு­வித்தல், பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­கு தல் போன்ற கோரிக்­கை­களை முன்­வைத்து “சம உரிமை இயக்கம்” நேற்று முன்­தினம்  கொழும்பு புறக்­கோட்டை புகை­யி­ரத நிலை­யத்­திற்கு முன்னால் கவ­ன­யீர்ப்பு போராட்­டத்தை ஆரம்­பித்­தது. 

குறித்த போராட்டம் தொடர்ந்து ஏழு நாட்­க­ளுக்கு முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள நிலையில் அக்­கண்­டனப் பேர­ணியில் நேற்று தெற்­கி­லுள்ள சிங்­கள மக்கள் கலந்­து­கொண்டு பாதிக்­கப்­பட்ட வட கிழக்கு மக்­க­ளுக்கு ஆத­ரவு தெரி­வித்­தனர். மேலும் அதில் பல சிவில் அமைப்­பு­களும் கலந்­து­கொண்டு தமது ஆத­ர­வினை தெரி­வித்து வரு­கின்­றன. அத்­துடன் நேற்று பகல் வேளையில் வடக்கு மாகாண சபை உறுப்­பினர் சிவா­ஜி­லிங்கம் கலந்­து­கொண்­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

நேற்று முன்­தினம் காணாமல் போன­வர்­களின் உற­வி­னர்­களும், அர­சியல் கைதி­களின் உற­வி­னர்­களும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். எதிர்­வரும் 23 ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்ள கண்­டனப் பேர­ணியில் இன்னும் பல அமைப்­பு­களைச் சேர்ந்த ஆயி­ரக்­க­ணக்­கானோர் கலந்­து­கொண்டு வட கிழக்கில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு ஆத­ரவு வழங்­க­வுள்­ள­தாக “சம உரிமை இயக்­கத்தின்” ஏற்­பாட்­டா­ளர்­களில் ஒருவர் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

வடக்கு கிழக்கு மக்­களின் உரி­மை­களை உறுதி செய்­வ­தாக தேர்தல் காலத்தில் நல்­லாட்சி அர­சாங்கம் வாக்­கு­றுதி வழங்­கி­யது. எனினும் ஆட்­சிக்கு வந்த பின்னர் அவ்­வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தாக இல்லை. ஆகவே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்­காமல் தவிர்த்து வந்­த­தைப்­போன்று தற்­போ­தைய அர­சாங்­கமும் செயற்­ப­டு­கி­றது. எனினும் அதனை எந்­த­வொரு புத்­தி­ஜீ­வி­யாலும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அது மாத்­தி­ர­மல்­லாமல் இந்த அர­சாங்­கத்தை ஆட்­சிக்கு கொண்­டு­வ­ரு­வதில் வட கிழக்கு மக்கள் மிகுந்த பங்­க­ளிப்பு வழங்­கி­யுள்­ளனர்.

மேலும் காணாமல் போன­வர்கள் தொடர்பில் அவர்­களின் உற­வி­னர்கள் தினந்­தோறும் தவித்துக் கொண்­டி­ருக்­கி­ன­றனர். அதேபோல் பலர் அர­சியல் கைதி­க­ளாக நீண்ட காலம் சிறையில் வாடு­கின்­றனர். எனவே அவர்­களை விடு­தலை செய்து அவர்கள் சமூக வாழ்வில் இணை­வ­தற்­கான ஏற்­பா­டு­களை அர­சாங்கம் உட­ன­டி­யாக மேற்­கொள்ள வேண்டும்.

நாட்டில் யுத்தம் இல்­லை­யெனின் பாது­காப்பு கார­ணங்­க­ளுக்­காக ஏன் மக்­களின் காணி­களை படைப்­பி­ரிவு தம்­வசம் வைத்­துக்­கொள்ள வேண்டும். ஆகவே அதனை விடு­வித்து அதன் சொந்­தக்­கா­ரர்­க­ளிடம் வழங்க வேண்டும். அத்­துடன் யுத்தம் நிறை­வ­டைந்த பின்­னரும் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை அர­சாங்கம் நீக்­க­வில்லை. ஆகவே அச்­சட்­டைத்­தையும் நீக்கி ஜனா­நா­ய­கத்தை உறுதி செய்ய வேண்டும்.

வடக்கு கிழக்கில் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் தெற்­கி­லுள்ள சிங்­கள மக்­க­ளுக்கு நன்கு தெரியும். எனவே அவர்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­பட்டு வட கிழக்கு மக்கள் ஜன­நா­யக ரீதியில் வாழ வேண்டும் என்­பதில் தெற்­கி­லுள்ள சிங்கள் மக்கள் உறு­தி­யாக உள்­ளனர். அதுதான் நியா­ய­மான கோரிக்­கை­யு­மாகும். இருந்­த­போ­திலும் சிலர் சுய அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக மாறு­பட்ட கருத்­து­களை மக்கள் மத்­தியில் பரப்பி இனங்­க­ளுக்­கி­டையில் தொடர்ந்தும் இடை­வெ­ளியைப் பேணு­வ­தற்கு எதிர்­பார்க்­கின்­றனர்.

அவ்வாறான எண்ணக்கருக்களை மக்கள் மத்தியில் பரப்புவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, வட கிழக்கு மக்களின் உரிமைகளை உறுதிப்டுத்திக்கொண்டு அம்மக்களுக்கும் தெற்கு மக்களுக்குமிடையில் நல்லுறவினைக் கட்டியெழுப்பும் வகையில் “சம உரிமை இயக்கம்” எதிர்காலத்தில் செயற்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-03-19#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.