Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடத்தப்பட்ட கணவனை மீட்க புலனாய்வுப் பிரிவு உறுப்பினருக்கு 15 இலட்சம் கப்பம் கொடுத்தேன் கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கப்பம் வழங்கியதாக பட்டியலிட்டு பெண்கள் கதறல்

Featured Replies

கடத்தப்பட்ட கணவனை மீட்க புலனாய்வுப் பிரிவு உறுப்பினருக்கு 15 இலட்சம் கப்பம் கொடுத்தேன்

 

கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கப்பம் வழங்கியதாக பட்டியலிட்டு பெண்கள் கதறல்
திரு­மலை நவம்

“கடத்­தப்­பட்ட தனது கண­வனை மீட்­ப­தற்­காக கடற்­படை புல­னாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒரு­வ­ருக்கு அவ­ரது மனைவி 15 இலட்­சத்­தையும் தனது மகனை மீட்டுத் தரு­வ­தாகக் கூறிய அதே நப­ருக்கு இன்­னொரு தாய் 10 இலட்­சத்­தையும் தனது இரு பிள்­ளை­க­ளையும் விடு­தலை செய்து தரு­கிறேன் என்று கூறிய ஒரு­வ­ருக்கு மற்­றொரு தாய் 10 இலட்­சத்­தையும் கப்பமாகக் கொடுத்து ஏமாந்­துள்­ள னர். ஆனால் அரசோ ஒப்­ப­டைக்கப் ­பட்ட உங்கள் உற­வுகள் இங்கு இல்லை என்று கூறு­கி­றது. இதுவா நல்­லாட்சி என வன்னி மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

கடத்­தப்­பட்டு கைய­ளிக்­கப்­பட்டு காணாமல்

ஆக்­கப்­பட்ட உற­வு­களைத் தேடி அலையும் உற­வி­னர்­களால் திரு­கோ­ண­மலை உவர்­மலை ஆளுநர் அலு­வ­ல­கத்­துக்கு முன்­பாக மேற்­கொள்­ளப்­பட்டு வரும் சுழற்சி முறை உண்­ணா­வி­ர­தத்தின் 13 ஆவது நாளான கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று அவர்­களை பார்­வை­யிட வந்த வன்னி மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­வித்த போதே மேற்­கண்­ட­வாறு கூறினார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரி­விக்­கையில்;

கடத்­தப்­பட்டும் கைய­ளிக்­கப்­பட்டும் காணாமல் ஆக்­கப்­பட்டோர் பிரச்­சி­னைக்குத் தீர்வு தேடித் தரும் ஆற்­றலும் அதி­கா­ரமும் கொண்ட ஒரே­யொரு தலைவர் இரா. சம்­பந்தன் அவர்­களே. நாங்கள் சாதா­ர­ண­மா­ன­வர்கள். அவரால் தான் இதற்கு முடிவு காண முடியும்.

. நாம் பிர­த­ம­ருடன் கைய­ளிக்­கப்­பட்­ட­வர்கள், கடத்­தப்­பட்­ட­வர்கள் தொடர்பில் பேசு­கிற போது பிர­தமர் கூறு­கிறார்

"இவர்­களில் அநே­க­மா­ன­வர்கள் வெளி­நாட்­டுக்கு ஓடி­விட்­டார்கள் என்று இரா­ணு­வத்­திடம் கைய­ளிக்­கப்­பட்­ட­வர்கள் வெளி­நாட்­டுக்கு ஓடி­விட்­டார்கள் என்­பதில் எந்­த­ளவு தூரம் சாதகம் உள்­ளது என்­பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

காணாமல் போன­வர்கள் தொடர்பில் வட­கி­ழக்­கி­லுள்ள எட்டு மாவட்­டங்­க­ளிலும் கடந்த 8 வரு­டங்­க­ளுக்கு மேலாக தொடர் போராட்­டங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. பிர­த­ம­ருக்கும் ஜனா­தி­ப­திக்கும் இது நன்­றா­கவே தெரியும். அவ்­வாறு இருக்கும் போது அவர்கள் ஏன் மௌனம் சாதிக்­கின்­றார்கள் என்று புரி­ய­வில்லை.

புதிய அர­சாங்­கத்தில் எல்­லாமே மாற்­ற­ம­டைந்­துள்­ளது. இரா­ணுவத் தள­பதி மாறி­யுள்ளார். பாது­காப்பு செய­லாளர் மாறி­யுள்ளார். இவ்­வா­றா­ன­தொரு நிலையில் இவர்­க­ளிடம் முழுப்­ப­திவு இருக்­கி­றது. சர­ண­டைந்­த­வர்கள் எத்­த­னைபேர், வெள்ளை வேனில் கடத்­தப்­பட்­ட­வர்கள் யார் யார், சிறை­யி­லி­ருப்போர் விப­ர­மென்ன, உயி­ருடன் இருப்போர் யாவர் என்ற எல்லாத் தக­வல்­களும் அவர்­க­ளி­ட­முள்­ளன. ஏன் இதை வெளி­யிட அரசு பயப்­ப­டு­கி­ற­தென்றால் உண்­மையை தெரி­வித்தால் சிங்­கள மக்கள் குழம்­பி­வி­டு­வார்கள் மஹிந்த தங்­களை தோற்­க­டித்து விடு­வா­ரென பயப்­ப­டு­கி­றார்கள். மஹிந்த 12,000 விடு­த­லைப்­பு­லி­களை விட்­ட­போது குழப்பம் ஏற்­ப­ட­வில்­லையே! கருணா போன்ற பல பெரிய தலை­வர்­களை விடு­வித்த போது குழப்பம் ஏற்­ப­ட­வில்­லையே என்றார்.

இதே­வேளை ஆஷா நாகேந்­திரம் என்ற தாய் கூறு­கையில்;

"எனது மகன் நாகேந்­திரம் பிர­தீபன் 2008 ஆம் ஆண்டு ஆனி 29 ஆம் திகதி கடத்­தப்­பட்டார். கடத்­தி­ய­வ­ரையும் எனக்குத் தெரியும். கப்பம் வேண்­டி­ய­வ­ரு­டைய பெயரும் தெரியும். கடற்­படை புல­னாய்வுப் பிரிவைச் சேர்ந்த பாலை­யூற்­றி­லுள்ள ஒரு­வ­ருக்கு 10 இலட்சம் ரூபா கப்பம் கொடுத்தேன். (09.09.2008) அவ­ரு­டைய பெயரைக் கூட தெரி­வித்­தி­ருந்தேன். அவர் இது­வரை கைது செய்­யப்­ப­ட­வில்லை என்றார்.

மற்­றைய பெண் ஒருவர் கூறு­கையில்;

"எனது கணவர் பிர­காஷ்­குமார் குப்­பைச்­சாமி நாலுப்­பிள்­ளை­களின் தந்­தையை திருக்­க­ட­லூரில் வைத்து கடத்­தி­னார்கள். அவரை மீட்­ப­தற்­காக 15 இலட்சம் ரூபா பாலை­யூற்று நப­ரான அந்த நப­ரிடம் கப்பம் கொடுத்தேன். இது­வரை எனது கண­வரைக் காண­வில்லை" என்றார்.

மேலும் எனது இரு பிள்­ளை­க­ளான இரா­ம­கி­ருஷ்ணன் பிர­தாபன், இரா­ம­கி­ருஷ்ணன் ஜெக­ரூபன் என்ற இரு­வ­ரையும் 2008 ஆம் ஆண்டு 2 ஆம் மாதம் (04.02.2008) எனது வீட்­டுக்கு வந்த 17 பேர் கடத்திச் சென்­றார்கள். கடத்­தி­ய­வர்­க­ளு­டைய பெயரும் எனக்குத் தெரியும். எனது இரு பிள்­ளை­களை மீட்க கடற்­ப­டையைச் சேர்ந்த ஒரு­வ­ருக்கு 10 இலட்சம் ரூபா கப்பமும் அதுவும் மக்கள் வங்கியில் குறித்த ஒரு நபரின் பெயருக்கு வைப்பிலிட்டேன். அதற்கு மேலாக 10 ஆயிரம் ரூபாவுக்கு அவருடைய போனுக்கு ரீலோட் இட்டேன்" என அன்புவழிபுரத்தைச் சேர்ந்த இ.லதா என்ற தாய் குறிப்பிட்டார்.

அத்துடன் சில தாய்மார்கள் தாம் காணியை, தாலிக் கொடியை அடகுவைத்து, கடன்வாங்கி தமது பிள்ளைகளை, கணவன்மாரை மீட்க கப்பம் கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-03-19#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.