Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமற்போனவர்களில் எவருமே உயிருடனில்லை : கோத்தபாய சொன்னார் என்கிறார் நவநீதம்பிள்ளை

Featured Replies

காணாமற்போனவர்களில் எவருமே உயிருடனில்லை : கோத்தபாய சொன்னார் என்கிறார் நவநீதம்பிள்ளை
 
 
காணாமற்போனவர்களில்  எவருமே  உயிருடனில்லை : கோத்தபாய சொன்னார் என்கிறார் நவநீதம்பிள்ளை
“காணா­மற்­போ­ன­வர்­கள் மற்­றும் கொல்­லப்­பட்­ட­வர்­கள் தொடர்­பான முழு­மை­யான விவ­ரங்­கள் இல்­லா­த­போ­தி­லும், விசா­ர­ணை ­களை ஆரம்­பித்து நீதியை நிலை­நாட்ட முடி­யும்.  அப்­போ­தைய பாது­காப்­புச் செய­ லர் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வி­டம், காணா­மற்­போ­ன­வர்­கள் எங்­கி­ருக்­கின்­றார்­கள் என்­பதை உறுதி செய்­வ­தற்­கான விசா­ர­ணை ­களை முன்­னெ­டுக்­கு­மாறு கேட்­டுக் கொண்­டேன். ‘காணாமற்போனவர்கள் இறந்து   விட்டார்கள். அதனை அவர்களது உறவினர்கள் ஏற்கத் தயாரில்லை’ என்று எனக்கு அவர் பதிலளித்தார்” இவ்வாறு ஐ.நா. மனித உரிமைகள் சபையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
 
கொழும்பு ஆங்கிலப் பத்திரிகைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
 
நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு போன்றவை இல்லாமல் நல்லிணக்கம் - தேசத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற இலக்குகளை அடைய முடியாது. 
 
விசாரணைகளை ஆரம்பித்து நீதி நிலைநாட்டப்படும் வரையில் அவற்றைத் தொடர்வதற்காகவே காணாமற்போனவர்களது விவரங்கள் ஆவணப்படுத்தப்படுகின்றன. தகவல்களோ, சாட்சிகளோ உள்ள சந்தர்பத்தில், இருக்கின்ற ஆவணங்கள் ஏனைய குழுக்களிடம் உள்ள ஆவணங்களிலும் இடம்பெற்றிருப்பின் அதனை அடிப்படையாக வைத்தும் விசாரணைகளை ஆரம்பிக்கலாம்.
 
தீர்ப்பாயம்
 
ருவன்டாவில்  இனப்படுகொலை நடைபெற்றது. இதன் பின்னர் மேற்சொன்ன முறைமையே அங்கு பின்பற்றப்பட்டது. ருவன்டா அரசு, ஐ.நா. பாதுகாப்புச் சபையின் பன்னாட்டுக் குற்றவியல் தீர்ப்பாயத்தை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொண்டது. இந்தத் தீர்ப்பாயம், படுகொலைகளை நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்களை நம்பி செயற்பட்டது. தீர்ப்பாயத்தின் முன்பாக எவரும் நிறுத்தப்படவில்லை. 
 
தடயவியல் ஆய்வுகள் எவையும் நடைபெறவில்லை.
 
பல்லாயிரக்கணக்கான டுட்சிகள் கொல்லப்பட்டனர் என்று மக்கள் வழங்கிய வாக்குமூலங்களை நீதிமன்றம் - தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டது. அந்த மக்களுக்குத் தெரிந்த பலர் தற்போது உயிருடன் இல்லாததை கருத்தில் கொண்டே தீர்ப்பாயம் மக்களின் வாக்குமூலங்களை ஏற்றுக் கொண்டது. ருவன்டாவுக்கான தீர்ப்பாயம், போர் மற்றும் மோதல் நடைபெற்ற சூழமைவு, கண்ணால் கண்டவர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் நிபுணர்களின் சாட்சியங்களை ஏற்றுக் கொண்டது.
 
மோதலின் போது கொல்லப்பட்டவர்கள் தொடர்பில் முழுமையான விவரங்கள் இல்லாதபோதிலும், நேர்மையான விசாரணைகளை மேற்கொண்டு பக்கச் சார்பற்ற நீதியை நிலைநாட்டலாம் என்பதற்கான முன்னுதாரணங்கள் இவை. ருவான்டாவுக்கான தீர்ப்பாயமும், யூகோஸ்லாவியவுக்கான தீர்ப்பாயமும் முன்னுதாரணங்களுக்குச் சிறந்தவை.
 
கோத்தாவின் சர்ச்சைக் கருத்து
 
2013ஆம் ஆண்டு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தேன். அப்போதைய பாதுகாப்புச் செயலராக விளங்கிய கோத்தபாய ராஜபக்சவிடம், காணாமற்போனவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பதை உறுதி செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொண்டேன். ‘காணாமற் போனவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை அவர்களது உறவினர்கள் ஏற்கத் தயாரில்லை’ என்று எனக்கு அவர் பதிலளித்தார்.
 
அதன் பின்பு, சில சிங்களக் குடும்பங்களைச் சந்திப்பதற்கு கோத்தபாய ஏற்பாடு செய்திருந்தார். அந்தச் சந்திப்புக்கு வந்திருந்த தந்தை, தனது ஒரேயொரு மகனுக்கு என்ன நடந்தது என்பதை அறிய முடியாமல் தான் படுகின்ற வேதனையைத் - துயரத்தை கண்ணீருடன் என்னிடம் தெரிவித்தார். தனது மகனின் உடலையாவது காண்பிக்குமாறு அவர் மன்றாட்டமாகக் கேட்டார். அந்தத் தந்தையிடம், கோத்தபாய ராஜபக்ச மிகவும் உறுதியாக உமது மகன் உயிரிழந்துவிட்டார். அதனை நீர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கோத்தபாய குறிப்பிட்டார். 
 
காணாமற்போனவர்களின் சாவு குறித்து அதிகாரிகளுக்குத் தெளிவாகத் தெரியும். அவர்கள் அது குறித்து தெளிவாக நம்புகின்றனர். போரின் சூழமைவையும், பலர் திரும்பி வராததையும் கருத்தில் கொள்ளும் போது அவ்வாறு நம்பாமல் இருக்க முடியாது - என்றார் நவிப்பிள்ளை. 

http://www.onlineuthayan.com/news/25001

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.