Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் அதிபர், மற்றும் ஆசிரியர் ஒருவரால், நாசமாகும் கல்லூரி

Featured Replies

யாழில் அதிபர், மற்றும் ஆசிரியர் ஒருவரால், நாசமாகும் கல்லூரி – காதோடு காதாக –அராலியூர் குமாரசாமி:-

ear.jpg

பக்கத்து காணிக்குள் கள்ளத் தனமாக இறங்கி இளநீர் பிடுங்கி குடித்த அனுபவம் இருக்குதா. மாங்காய் பிடுங்கித் தின்ற அனுபவம் இருக்குதா. இளவயதில் தான் இப்படியான காரியங்களை செய்திருப்போம். வயது வந்து இப்படியான காரியங்களைச் செய்ய மனம் விடாது பாருங்கோ. ஊருக்குள் கெட்ட பெயர் வந்துவிடும் என்ற காரணத்தால் ஆசையிருந்தும் அதனை அடக்கிக் கொண்டிருப்போம். ஆனால் இப்பொழுது இளம் வயதினரைவிட வயது வந்தவர்கள் அதிகம் பேர் இப்படியான காரியங்களில் இறங்கிவிடுகின்றனர். அதுவும் படித்து உயர் பதவிக்கு வந்தவர்கள் அரச நிர்வாக அதிகாரிகள் செய்வதைப் பார்க்கின்ற போது தான் இந்தக் கண்றாவியை நாமும் பார்க்க வேண்டியிருக்குது என்ற குற்ற உணர்வு ஏற்படுகிறது.

யாழ்.நகரப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் அதிபராக இருக்கின்றவர் செய்கின்ற களவுகள் தொடக்கம் பாலியல் சேட்டைகளைப் பார்த்தால் இந்த வயதில் இவர் இப்படி என்றால் இளம் வயதில் இவர் பட்டபாட்டை கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு போய்விடுகிறது. இவரால் இந்தக் கல்லூரியின் வளர்ச்சி பின்தங்கிய நிலைக்கு சென்று கொண்டிருப்பது மட்டுமல்ல இந்தக் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் வீதமும் குறைந்து கொண்டு செல்கிறது. மேலும் இவரைப் பார்த்து இந்தக் கல்லூரி உப அதிபரும் ஆசிரியர்களும் தாமும் தீய செயற்பாட்டில் இறங்கிவிடுகின்றனர்.

யாழிற்கு போதைப் பொருள் வந்தது தொடக்கம் வாள் வெட்டுக் குழு உருவானது வரை இந்தக் கல்லூரிக்கு முக்கிய இடம் இருக்கிறது. வகுப்பில் முதலாம் பிள்ளைகளாக வலம் வரும் மாணவர்கள் தான் இதற்கும் முதலாவதாக வலம் வருகிறார்கள். இந்த மாணவர்கள் வழி தவறிப் போவதற்கு இந்த அதிபரும் ஆசிரியர்களுமே காரணமாக அமைகின்றார்கள்.

இந்தக் கல்லூரிக்கு உதவி செய்வதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். தேவைக்கு அதிகமாக பணமாக இருந்தாலும் சரி பொருள்களாக இருந்தாலும் சரி கிடைத்துவிடுகிறது. அந்தப் பணத்தையும் பொருள்களையும் வைத்து கல்லூரியை மட்டுமல்ல மாணவர்களின் கல்வியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கையையும் எடுக்க வேண்டும். இதைவிட்டு தனக்கு வந்த நிதியாக அதிபர் அதனைப் பயன்படுத்துவது எந்தவிதத்தில் நியாயமாகும். இந்தக் கல்லூரியைச் சேர்ந்த ஒருவர் கல்லூரியில் நடக்கும் நிர்வாக சீர்கேட்டை தடுக்கச் சொல்லி வடக்கு ஆளுநர் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் உட்பட சம்பந்தப்பட்டவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

கல்லூரிக்கு சொந்தமான 172 கூரைத் தகடுகள் மற்றும் யன்னல் பிரேம் உட்பட கட்டட உபகரணப் பொருள்களை அதிபர் விற்றிருக்கிறார். இந்தப் பொருள்களை அருகில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் பராமரிப்பு உத்தியோகத்தராக இருக்கும் ஒருவருக்கு மலிந்த விலையில் விற்றிருக்கிறார். இவர் இந்தக் கல்லூரியில் பராமரிப்பு உத்தியோகத்தராக வேலை செய்து பின்னர் அருகில் உள்ள கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இடமாறிச் சென்றும் இந்தக் கல்லூரி அதிபருக்கும் இவருக்குமான தொடர்பு துண்டிப்பு இல்லாமல் தொடர்கிறது. இப்படிப்பட்ட ஓட்டுமாட்டு வேலைகளை இவர் மூலம் தான் அதிபர் செய்து வருகிறார்.

கிரிக்கெட் கோச்சராக தனக்கு தெரிந்த ஒருவரை கல்லூரிக்கு நியமித்து அவரை வைத்து விளையாட்டுப் பொருள்களை வெளியே விற்றிருக்கிறார். அதிபரின் இந்த நடவடிக்கையைப் பார்த்து கோச்சும் செய்து பார்த்திருக்கிறார். ஆனால் பிடிபட்டு போனார். ஒரு நாள் கல்லூரியில் மாணவர் தலைவர் கூட்டம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த நேரம் பார்த்து கோச்சும் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணியும் சேர்ந்து விளையாட்டு மைதானத்துக்கு பக்கத்தில் உள்ள வீட்டுக்குள் புகுந்து கதவை உடைத்து பொருள்களை களவெடுத்திருக்கிறார்கள். வீட்டின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்ய பொலிஸ் இவர்களை பிடித்து உள்ளே போட்டது. உடனடியாக விடயம் அறிந்த அதிபர் தனது கல்லூரியில் படிப்பிக்கும் 3 ஆசிரியர்களை பொலிஸ் நிலையம் அனுப்பி பிணை வைத்து அவர்களை விடுவித்துள்ளார். பிறகென்ன அதிபர் கோச்சுடன் சேர்ந்து மைதானத்தில் அல்ல வகுப்பிலும் ஆடலாம் தானே.

கல்லூரியின் ….  ஆம் ஆண்டு விழாவுக்கு 62 இலட்சத்தை செலவு செய்ததாக மாணவர்களின் பெற்றோருக்கு அதிபர் சொல்லியிருக்கிறார். ஆண்டு மலரை 500 ரூபாய் படி விற்றிருக்கிறார். 6 ஆம் ஆண்டு மாணவர்களைச் சேர்ப்பதில் இருந்து உயர்தர மாணவர்களைச் சேர்ப்பது வரை இலட்சக் கணக்கில் பணம் வசூலித்திருக்கிறார். மகிந்தோதைய ஆய்வுகூட மையம் ஒன்றினை கல்லூரியில் நிறுவுவதற்காக 1.96 மில்லியனை பாடசாலை நிதியில் இருந்து எடுத்து செலவு செய்திருக்கிறார். விளையாட்டுத் துறைக்கென பெற்றோரிடம் இருந்து 40 இலட்சம் ரூபாவினை சேகரித்துள்ளார். அது மட்டுமா அதிபர் தன்னுடைய நண்பர்களுக்கு பாடசாலை கணக்கில் தேனீர் விருந்து ஒன்றினையும் அளித்துள்ளார். இது போதாது இன்னும் கூடுதலாக பணத்தை சூறையாட வேண்டும் என்று அதிபரும் அவரது நண்பர்களும் சேர்ந்து களத்தில் இறங்கினர். அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றை நிறுவினர். அதற்குத் தேவையான பணத்தை பாடசாலை நிதியில் இருந்து எடுத்திருக்கிறார்கள். இதற்கான கணக்கு நிர்வாகம் இல்லாத கோயில் கணக்காக இன்றும் இருக்கிறது.

எல்லாம் தெரிந்த சகலகலா வல்லவன் கமல், காதல் மன்னன் ஜெமினிகணேசன் போலவும் காதல் விளையாட்டிலிலும் இறங்கினார். மன்னாரில் உள்ள ஒரு பாடசாலையில் அதிபராக இருந்த போது அந்தப் பாடசாலையில் பெண் ஆசிரியை ஒருவருக்கு ஆசைவார்த்தை கூறி தனது தேவையை நிறைவேற்றியுள்ளார். மன்னார் போனால் இந்த பெண் ஆசிரியரை சந்திக்காமல் வரமாட்டார். இந்த பெண் ஆசிரியருடன் கதைப்பதற்கு இரவு வேளையில் இந்தக் கல்லூரியின் அலுவலக போனில் தொடர்பை ஏற்படுத்தி கதைத்துக் கொண்டே இருக்கிறார். பாடசாலை விடயமாக அல்லது தனிப்பட்ட விடயமாக கொழும்பு செல்லும் போது மாணவர்களின் தனக்கு பிடித்த தாய்மாரை தன்னுடன் கூட்டிக் கொண்டு போகும் போதை போன்ற பழக்கம் இவருக்கு உண்டு. தனது மனைவியை கொழும்புக்கு கூட்டிக் கொண்டு போனது குறைவு.

இவரைப் பார்த்து இந்தக் கல்லூரி ஆசிரியர்கள் ஒருசிலரும் களத்தில் இறங்கியுள்ளனர். சாதாரண தரத்தில் பாடம் எடுக்கும் ஆசிரியர் ஒருவர் பெற்றோரை இழந்த மாணவர்களின் தாய்மார்களின் போன் நம்பர்களை எடுத்து வைத்திருந்து அவர்களின் பிள்ளைகளின் படிப்பு சம்பந்தமாக கதைக்க வேண்டும் என்று கூறி தமக்கு பிடித்த தாய்மாரை அழைத்து பாலியல் இலஞ்சம் கேட்கிறார். இதற்கு இணங்காத தாய்மார்களிடம் பிள்ளைகள் இந்தக் கல்லூரியில் தொடர்ந்து படிக்க வேண்டும் என்றால் தமது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று வற்புறுத்தி தமது தேவையை நிறைவு செய்கிறார்கள். அண்மையில் வலிகாமப் பகுதியில் வசிக்கும் ஒரு மாணவரின் தாய்க்கு நேசமான ஒரு ஆசிரியர் I miss you love என்று பொதிக்கப்பட்ட காட் ஒன்றினை அனுப்பியும் உள்ளார். 2015 ஆம் ஆண்டு 6 ஆம் வகுப்பு புதிய மாணவர்களுக்கு அனுமதி வழங்கிய போது பாலியல் இலஞ்சம் பெற்று அனுமதி வழங்கியதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு காலத்தில் இந்தக் கல்லூரியில் மாணவர்கள் படிப்பதற்கு அனுமதி எடுக்க வேண்டும் என்றால் அவர்கள் முன்னர் படித்த பாடசாலையில் திறமையுள்ளவர்களாக இருந்ததிற்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இன்று அப்படியல்ல பணம் கொடுத்தால் இந்தக் கல்லூரியில் மாணவர்களை இலகுவாக சேர்த்து விடலாம். அல்லது பாலியல் இலஞ்சம் கொடுத்தால் மாணவர்களை பணம் கட்டாமல் சேர்த்து விடலாம். ஒரு தாய்க்கு பிறக்காத பிள்ளை சமூகத்தில் எப்படி வளருமோ அப்படித்தான் இந்தக் கல்லூரியின் அதிபர் தொடக்கம் ஆசிரியர்கள் சிலரின் செயற்பாடுகள் இருக்கின்றன. இவர்கள் மீது விசாரணை செய்து தண்டனை வழங்காது விடின் கல்விச் சமூகத்தின் முன்னேற்றதிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை.

http://globaltamilnews.net/archives/21410

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.