Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவில் எதிரொலித்த காணி விவகாரம்

Featured Replies

ஜெனி­வாவில் எதி­ரொ­லித்த காணி விவ­காரம்

 

ஐக்­கி­ய­ நா­டுகள் மனித உரிமை பேர­வையில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற இலங்கை தொடர்­பான ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைனின் அறிக்கை மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய கிட்­டத்­தட்ட அனைத்து நாடு­களும் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் பொது­மக்­க­ளிடம் அப­க­ரிக்­கப்­பட்­டுள்ள காணிகள் விரை­வாக மீள்­வ­ழங்­கப்­ப­ட­வேண்­டு­மென மிகவும் தீவி­ர­மாக வலி­யு­றுத்­தி­யுள்­ளன. குறிப்­பாக விவா­தத்தில் உரை­யாற்­றிய நாடு­களின் பிர­தி­நி­திகள் இலங்­கையில் காணி விடு­விப்பு என்ற விட­யத்தை முன்­வைப்­ப­தற்கு மறக்­க­வில்லை.

முதலில் விவா­தத்தை ஆரம்­பித்து வைத்து உரை­யாற்­றிய ஐக்­கி­ய ­நா­டுகள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் அப­க­ரிக்­கப்­பட்­டுள்ள பொது­மக்­களின் காணிகள் விரை­வாக விடு­விக்­கப்­பட வேண்­டு­மென வலி­யு­றுத்தி இருந்தார். அத்­துடன் நல்­லி­ணக்­கத்­திலும் பொறுப்­புக்­கூ­ற­லிலும் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்த வேண்­டு­மென தெரி­வித்­தி­ருந்தார். அல் ஹுசைன் பாதிக்­கப்­பட்ட மக்­களின் தேவை­களை விரை­வாக பூர்த்தி செய்­ய­வேண்­டு­மென வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். அத­ன­டிப்­ப­டையில் காணி விடு­விப்­பா­னது மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்த விடயம் என்­பதை ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் முன்­வைத்­தி­ருந்தார்.

அல் ஹுசைன் உரை­யாற்­றி­யதன் பின்பு பேர­வையில் உரை நிகழ்த்­திய உறுப்பு நாடு­க­ளான அமெ­ரிக்கா, நியூ­ஸி­லாந்து, பிரிட்டன், பாகிஸ்தான், டென்மார்க், ஐரோப்­பிய ஒன்­றியம், அவுஸ்­தி­ரே­லியா, ஜேர்­மனி, கனடா ஆகிய நாடுகள் இலங்கை விவ­காரம் தொடர்பில் உரை­யாற்­றி­யி­ருந்­தன. அங்கு உரை­யாற்­றிய அனைத்து நாடு­களும் இலங்­கையில் காணி ­வி­டு­விப்பு, காணா­மல் ­போனோர் விவ­காரம், நட்­ட­ஈடு வழங்கும் செயற்­பாடு உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் மிகவும் வலு­வான விட­யங்­களை முன்­வைத்­தி­ருந்­தன. விசே­ட­மாக விவா­தத்தில் உரை­யாற்­றிய ஜெனி­வா­விற்­கான அமெ­ரிக்கப் பிர­தி­நிதி வடக்கு, கிழக்கில் பொது­மக்­களின் 45 ஆயிரம் ஏக்கர் காணிகள் படை­யினர் வசம் உள்­ள­தா­கவும் அவற்றை உட­ன­டி­யாக விடு­விப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும் என்றும் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

மேலும் காணி விடு­விப்­புடன் நட்­ட­ஈடு வழங்கும் அலு­வ­லகம் அமைக்­கப்­ப­ட­வேண்­டு­மென்றும் அனைத்து விட­யங்­க­ளிலும் முக்­கி­ய­மாக காணி விடு­விப்பே விரை­வாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டி­யது என்றும் அமெ­ரிக்­காவின் ஜெனி­வா­விற்­கான பிர­தி­நிதி குறிப்­பிட்­டி­ருந்தார். அதே­போன்று நியூ­ஸி­லாந்து நாட்டின் ஜெனி­வா­விற்­கான பிர­தி­நி­தியும் பொது­மக்­களின் காணிகள் விடு­விக்­கப்­ப­ட­வேண்டும் என்­பதை மிகவும் வலு­வாக வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். மேலும் டென்மார்க் நாட்டின் பிர­தி­நி­தியும், ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் பிர­தி­நி­தியும் பொது­மக்­களின் காணி விடு­விப்பு தொடர்பில் உரை­யாற்­றி­யி­ருந்­தனர். இவ்­வாறு கிட்­டத்­தட்ட அனைத்து நாடு­க­ளி­னதும் பிர­தி­நி­திகள் காணி விடு­விப்பு தொடர்­பான வலு­வான விட­யங்­களை முன்­வைத்­தி­ருந்­தனர். அந்­த­வ­கையில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் யுத்த காலத்தில் தமது காணி­களை பாது­காப்பு படை­யி­ன­ரிடம் பறி­கொ­டுத்த பாதிக்­கப்­பட்ட பொது­மக்கள் தொடர்ச்­சி­யாக காணி­களை மீள் வழங்­கு­மாறு வலி­யு­றுத்தி தொடர் போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்ற சூழலில் சர்­வ­தேச மன்­ற­மான ஐக்­கி­ய ­நாடுகள் மனித உரிமை பேர­வையில் வடக்கு, கிழக்கு மாகாண மக்­களின் காணி அப­க­ரிப்பு தொடர்­பான விட­யங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. அந்த மக்­களின் காணிகள் விரை­வாக விடு­விக்­கப்­ப­ட­வேண்­டு­மென்ற செய்தி சர்­வ­தே­சத்­திற்கு நேற்று முன்­தினம் மிகவும் வலு­வான முறையில் எடுத்­து­ரைக்­கப்­பட்­டுள்ளது. தம்­மி­ட­மி­ருந்து அப­க­ரிக்­கப்­பட்ட காணி­களை தமக்கு மீள்­வ­ழங்­கு­மாறு வலி­யு­றுத்­தியே பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர் போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். ஏற்­க­னவே கேப்­பாப்­பு­லவு, பிலக்­கு­டி­யி­ருப்பு மக்கள் விமா­னப்­ப­டை­யினர் வச­மி­ருந்த தமது காணி­களை விடு­விக்­கு­மாறு வலி­யு­றுத்தி கிட்­டத்­தட்ட ஒரு மாத­காலம் வரையில் தொடர் ­போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வந்­தனர். அந்த போராட்­டத்தின் விளை­வாக கேப்­பாப்­பு­லவு பிலக்­கு­டி­யி­ருப்பு மக்­களின் குறிப்­பிட்ட தொகை­யான காணிகள் விடு­விக்­கப்­பட்­டன. எனினும் முழு­மை­யான காணி­களும் விடு­விக்­கப்­ப­ட­வில்லை.

மேலும் கேப்­பாப்­பு­லவு பூர்­வீக மக்­களும் தற்­போது தொடர் ­போ­ராட்­டங்­களை நடத்­தி­வ­ரு­கின்­றனர். அந்த மக்கள் தமது காணிகள் கிடைக்கும் வரை போராட்­டத்தை கைவி­டப்­போ­வ­தில்லை என தெரி­வித்து வரு­கின்­றனர். தமது சொந்­தக்­கா­ணி­களில் கால்­களைப் பதிக்கும் வரை போராட்­டத்தை கைவி­டப்­போ­வ­தில்லை என மிகவும் திட்­ட­வட்­ட­மான முறையில் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். இந்த மக்­களும் தற்­போது 20 நாட்­க­ளுக்கும் மேலாக போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­மையை அவ­தா­னிக்க முடி­கின்­றது. ஆனால், இது­வரை அந்த மக்­களின் போராட்­டத்­திற்கு நம்­பிக்கை அளிக்­கக்­கூ­டிய வகை­யி­லான தீர்­வெ­துவும் முன்­மொ­ழி­யப்­ப­ட­வில்லை. மக்கள் தொடர் போராட்­டத்தை பல்­வேறு கஷ்­டங்­க­ளுக்கு மத்­தியில் நடத்தி வரு­கின்ற நிலை­யிலும், அர­சாங்­க­மா­னது அது தொடர்பில் செவி ­மடுக்­காத போக்­கையே கொண்­டுள்­ளது. இந்த மக்­களின் போராட்டம் நியா­ய­மா­னது என்­ப­தைக்­கூட எந்­த­வொரு அர­சாங்கத் தரப்பும் எடுத்­துக்­கூ­று­வதை காண­மு­டி­ய­வில்லை. இதனால் தொடர் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள மக்கள் விரக்­தி­ நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளனர். தமது கோரிக்­கைகள் தொடர்பில் அர­சாங்கத் தரப்பு கவ­னத்தில் கொள்­ளாமல் இருக்­கின்­றதே என்ற கவ­லையும் ஆதங்­கமும் தொடர் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள மக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

எனினும் அந்த மக்கள் சற்றும் சளைக்­காமல் தொடர்ச்­சி­யாக போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இந்த நிலையில் யாழ்ப்­பா­ணத்­திலும் பல்­வேறு பகு­தி­களில் பொது­மக்கள் தொடர்ந்தும் அப­க­ரிக்­கப்­பட்ட காணி­களை மீள் ­வ­ழங்­கக்­கோரி தொடர் போராட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

இவ்­வாறு மக்கள் அஹிம்சை ரீதியில் தமது காணி­களை விடு­விக்கும் நோக்கில் போராட்­டங்­களை ஆரம்­பித்­துள்ள நிலை­யி­லேயே ஐக்­கி­ய­ நா­டுகள் மனித உரிமை பேர­வை­யிலும் அப்­பாவி மக்­களின் காணி விவ­காரம் எதி­ரொ­லித்­துள்­ளது. எனவே, அர­சாங்கம் இந்த மக்­களின் காணி­களை மீள் வழங்­கு­வ­தற்கு விரைந்து நட­வ­டிக்கை எடுக்­க­ வேண்­டி­யது மிகவும் அவ­சி­ய­மாக இருக்­கின்­றது.

காணி­களை இழந்­துள்ள மக்கள் உற­வினர், நண்­பர்கள் இல்­லங்­க­ளிலும் நலன்­புரி முகாம்­க­ளிலும் தஞ்­ச­ம­டைந்து பல்­வேறு அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு மத்­தியில் வாழ்ந்­து­ வ­ரு­கின்­றனர். எனவே, அந்த மக்­களின் காணிப்­பி­ரச்­சி­னைக்கு விரை­வான தீர்வு அவ­சி­ய­மாகும். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அப்­பாவி மக்­களின் காணி விடு­விப்பு தொடர்பில் அக்­கறை காட்­டி ­வ­ரு­கின்றார். பல்­வேறு தட­வைகள் யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்­தி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பொது­மக்­களின் சொந்­தக்­கா­ணிகள் மீள் வழங்கப்­ப­ட­வேண்­டு­மென்றும் காணி­களை இழந்­துள்ள பொது­மக்கள் எதிர்­கொள்­கின்ற கஷ்­டங்­களை தான் நேரில் பார்த்­த­தா­கவும் கூறி­யி­ருந்தார்.

அது­மட்­டு­மன்றி பொது­மக்­களின் காணி­களை விடு­விப்­பது தொடர்பில் ஆராயும் நோக்கில் விசேட செய­ல­ணி­யொன்­றையும் உரு­வாக்­கி­யி­ருந்தார். ஆனால், இது­வரை பொது­மக்­களின் காணிகள் முழு­மை­யாக விடு­விக்­கப்­ப­ட­வில்லை. புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்­ததன் பின்னர் குறிப்­பி­டத்­தக்க ஏக்கர் காணிகள் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் பொது­மக்­க­ளிடம் மீள கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தன. ஆனால், இன்னும் அதி­க­ள­வான காணிகள் விடு­விக்­கப்­ப­ட­வேண்­டி­யுள்­ளன. இந்த நிலையில் மக்­களின் தொடர் போராட்­டங்­களும் ஆங்காங்கே இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான நிலையில் இந்த மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்ற சூழலில் அரசாங்கம் தொடர்ந்தும் இந்த மக்களை காத்திருக்க வைக்கக்கூடாது. அவர்கள் அரசாங்கத்தின் காணிகளை கேட்கவில்லை. மாறாக தம்மிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகளையே மீள் வழங்குமாறு வலியுறுத்துகின்றனர். எனவே, அரசாங்கம் இதனை ஆழமான முறையில் கருத்தில் கொள்ள வேண்டும். அரசாங்கம் ஆரம்பத்தில் காணிகளை விடுவித்ததைப் போன்று விரைவாக அனைத்து காணிகளையும் விடுவிக்குமென எதிர்பார்த்தபோதும் அவ்வாறு நடைபெறவில்லை. அதனால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ஆகவே, தொடர்ந்து மக்களை ஏமாற்றாமல் அவர்களின் சொந்தக் காணிகளை மீள்வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். தற்போது ஐ.நா.வில் இந்த விடயம் எதிரொலித்துள்ளதால் இதில் அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது என்பதை வலியுறுத்துகின்றோம்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-24#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.