Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெங்கு காய்ச்சல் என்றால் என்ன ? தடுப்பது எப்படி ?

Featured Replies

டெங்கு காய்ச்சல் என்றால் என்ன ? தடுப்பது எப்படி ?

டெங்கு காய்ச்சல் என்பது, கொசுக்கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் நோய். இது சாதரணமாக, திடீரென பாதிப்பை ஏற்படுத்தி, அதிக காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி, கடுமையான தசை வலி, சோர்ந்து போதல், முட்டு வலி, கண்ணின் பின்புறம் வலி மற்றும் தோலில் ஒரு வகை கலர் மற்றம் ஏற்படுத்தும். இதில் குறிப்பாக ஜுரம், தோல் நிற மாற்றம், தலைவலி தான் எல்லா டெங்கு நோயாளிகளுக்கும் இருக்கும் மூன்று நோய் அறிகுறி. இதுபோக இரத்த கசிவுகளை ஏற்படுத்தலாம்.
இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை அதிகம், கடுமையாக பாதிக்கும்.இந்த நோய், நான்கு வகையான வைரஸ்களால் உண்டாக்கபடுவதால், ஒருவருக்கே பலமுறை டெங்கு வரலாம். ஆனால் டெங்கு வைரஸ் ஒரு வகையால், பாதிக்கபட்டால், அந்த வகை வைரஸுக்கு மட்டும், வாழ்நாள் முழுவதும், நோய் எதிர்ப்பு தன்மை உருவாகி விடும். மற்ற வகை வைரஸுக்கு எதிராக, நோய் எதிர்ப்பு தன்மை வராது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கடுமையான முட்டு மற்றும் தசை வழியால் பாதிக்கபடுவதால், இதற்கு எழும்பு ஒடியும் நோய் BREAKBONE நோய் என்று பெயர்.

டெங்கு இரத்த கசிதல் நோய் (Dengue hemorrhagic fever) என்பது மிக தீவிரமான தன்மை கொண்டது. உடலில் தோலில் இரத்த கசிவு, மூக்கில் இரத்த வடிதல், வாய் ஈருவில் இரத்தம் வருதல்,கருப்பு மலம், இரத்த வாந்தி வரலாம். இந்த வகையான டெங்கு இரத்த கசிவு நோய் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் dengue shock syndrome என்னும் வகைக்கு இறப்பு வரை கொண்டு சென்று விடும்.

dengue_0

எப்படி பரவுகிறது? 

ஏடிஸ் ஈஜிப்டி (Aedes aegypti) என்னும் உடலில் கோடுள்ள, பகலில் கடிக்கும் கொசு மூலம் இந்த வைரஸ் பரவுகிறது.இந்த கொசு நோயால் பாதிக்க பட்ட ஒரு நபரை கடித்து தன்னுள் வைரஸை எடுத்து, மற்றவர்களுக்கு பரப்புகிறது. இந்த கொசு அநேகமாக வீட்டினுள் பதுங்கி இருக்கும்.இந்த கொசு அநேகமாக மழை காலங்களில் இனபெருக்கம் செய்யும். மழை இல்லாத காலங்களில், தண்ணீர் தேங்கும் பூச்சாடிகள்,பிளாஸ்டிக் பைகள், கேன்கள்,தேங்காய் செரட்டைகள்,, டையர்கள், போன்றவற்றில் இனபெருக்கம் செய்கிறது. இந்த வைரஸ் கொசுக்கடி மூலம் இல்லாமல், நேரிடையாக நோயாளிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாது.நோயாளிடம் இருந்து,கொசுக்குள் போய் பின்னர் தான் அடுத்த மனிதர்க்கு பரவும்.. நோயாளியை தொடுதல், அருகில் இருத்தல் மூலம் பரவாது.

டெங்கு அறிகுறிகள்:-

 

கொசு கடித்து, நோய் வர 5 முதல் 15 வரை ஆகும்.ஆரம்பதில் குளிர் ஜுரம்,தலைவலி,கண்ணை சுற்றி வலி,முதுகு வலி, பின்னர் கடுமையான கால் மற்றும் முட்டு வலி நோய் வந்து சில மணிநேரத்தில் வரும்.காய்ச்சல் 104 f போகலாம்,. இலேசாக, நாடித்துடிப்பு குறைதல், இரத்த அழுத்தம் குறைதல், வரலாம்.கண்கள், சிவந்து போகலாம்.உடலில் தோலில் சிகப்பு நிற மாற்றம் ஏற்படும்.கழுத்து மற்றும் பிறப்பு உறுப்பு அருகே நெறிகட்டலாம். இந்த ஜுரம் மற்றும் மற்ற நோய் அறிகுறிகள் 2 முதல் 4 வரை இருந்து,பின்னர் திடீரென உடல் வெப்பம் குறைந்து, அதிகமான வியர்வை ஏற்படும். இந்த காலகட்டதில், உடல் வெப்பம் நார்மலாக இருந்த, நல்ல ஆரோக்கியமாக இருப்பது போல் தோன்றும். இந்த காலகட்டம் தான், அநேகர் தாம் நோயிளிருந்து மீண்டுவிட்டோம் என்று பொடுப்போக்காக இருந்து விடுவர். சில நாட்கள் கழித்து மீண்டும் ஜுரம் மற்றும் தோலில் கலர் மாற்றம் , முகம் தவிர எல்லா பகுதியிலும் தோன்றும். உள்ளங்கை மற்றும் கால் பாதம் சிவந்து தடிக்கலம்.

nr_dengue_figure1

டெங்கு : எப்படி கண்டுபிடிப்பது?

டெங்கு நோயின் ஆரம்ப கால அறிகுறி, மற்ற வைரஸ் நோய் போல் இருந்தாலும், டெங்கு பரவும் காலகட்டத்தில், இந்த நோய் பரவும் பகுதியில் இருந்தாலோ, அல்லது அந்த பகுதிக்கு போய் வந்தாலோ, , மேல் சொன்ன நோய் அறிகுறி இருந்தால், டெங்கு இருக்கும் வாய்ப்பு இருப்பதாக கருதி மருத்துவரை கலந்து ஆலோசிக்க வேண்டும். டாக்டர்கள் பிரத்யோக இரத்த டெஸ்ட் மூலம் இந்த நோயை கண்டு அறிவர்.

டெங்கு-சிகிச்சை முறை

இதற்கு தனியான மாத்திரை மருந்துகள் கிடையாது. காய்ச்சலை குறைக்க சாதாரண பரசெடமால்,போதிய ஒய்வு , நன்றாக நீர் ஆகாரங்கள் உட்கொள்ளுதல் தான் இதற்கு சிகிச்சை..மருத்துவர் அறிவுரை இல்லாமல், வலி நிவாரினிகள் எடுத்தல், இரத்த இழப்பு அதிகமாகலாம்.1% குறைவான டெங்கு தான் உயிரிழப்பில் போய் முடிவும்,

 

Dengue Hemorrhagic Fever என்னும் டெங்கு இரத்த கசிதல் ஜுரம்:-

இந்த வகையான டெங்குவால் பதிக்க பட்டவர்களுக்கு வயிற்று வலி, இரத்த கசிவு, மற்றும் ஷாக் என்ற மோசமான உடல்நிலை உருவாகும.இந்த வகை டெங்கு, தொடர்ந்து அதிக ஜுரம், தலைவலி வரும்.இருமல், வாந்தி,குமட்டல், வயிற்று வலி வரலாம்.2 முதல் 6 நாட்கள் கழித்து கை கால்கள் குளிர்ந்து போய், நாடித்துடிப்பு குறைந்து, வாயை சுற்றி நீளமாகி மோசமான நிலைக்கு கொன்று சென்று விடும்.
தோலில் இரத்த கசிவு,இரத்த வாந்தி,மலத்தில் இரதம் போய் கருப்பு மலம்,பல் ஈரலில் இரத்த கசிவு, மூக்கில் இரத்தம், போன்ற ஏதாவது ஒன்று வரலாம். நிமோனியா வரலாம். இருதயம் பாதிக்கலாம்.

dengueFever1

இதற்கு சிகிச்சை, மருத்துவ மனையில் அனுமதித்து, இரத்த குழாய் வழியாக நீர் ஏற்றுதல். இரத்தில் தட்டை அணுக்கள் என்னும் platelet குறைவதால் தான் இரத்த கசிவு ஏற்படுவதால், தொடர்ந்து தட்டை அணுக்கள் அளவை பரிசோதித்து, அது மிகவும் குறைந்தால், இரத்த தட்டை அணுக்க என்னும் Platelet transfusion பண்ண வேண்டும். ஷாக் என்னும் dengue shock syndrome வந்தால், அதற்காக பிளாஸ்மா என்ற வகை இரத்தம் செலுத்த பட வேண்டும்.

டெங்கு தடுக்கும் முறை:-

• வைரஸ் நோயாளிடம் இருந்து கொசு மூலம் பரவும் சுழற்சியை தடுக்க வேண்டும்.அதனால், நோயாளிகள், கொசுவலைக்குள் சுகம் ஆகும் வரை வைக்க வேண்டும்.

• டெங்கு வைரஸை பரப்பும் கொசுவான aedes கொசுவை ஒழிக்க அல்லது கட்டுபடுத்த வேண்டும்.பழைய டயர், தூக்கி வீசிஎரியபட்ட பூச்சாடி,பிளாஸ்டிக் பைகள்,கேன்களில் தண்ணீர் சேராதவரு பார்க்கவேண்டும்,.தேவையற்ற அதுபோன்ற பொருள்களை அகற்றி விடவேண்டும்.

• வீட்டில் உபயோகபடுத்தாத கக்கூஸ்களில், கொசு இனவிருத்தி செய்யும் வாய்ப்பு உண்டு.அந்த மாதிரி கழிப்பிடங்களை, அடிக்கடி சுத்தம் செய்து , கழி பீங்கன்களை மூடி வைக்க வேண்டும்.

• தண்ணீர் கஷ்ட காலங்களில், தண்ணீரை பாத்திரங்களில் மூடி வைக்கும் நிலை ஏற்பட்டால், இரண்டு நாளுக்கு மேல் பார்த்து கொள்ளவேண்டும். அதை நன்றாக மூடி, கொசு அண்டவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும். பொதுவாக இந்த கொசுவின் வாழ்கை சுழற்சி ஏழு நாள் ஆதலால், எந்த தேங்கும் சுத்தமான நீரும் ஏழு நாளை தாண்டினால், அது கொசு இனபெருக்கம் செய்து தனது வழக்கை சுழற்சியை முடித்து பரவ எதுவாக அமைந்து விடும்.

• நீர் தேக்க தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். வீட் AC, FRIDGE மூலம் வெளியாகும் தண்ணீர் தேங்கமல் அவாபோது நீக்கி விடவேண்டும்.

• கொசு கடிக்காமல், கை கால் களைநன்றாக மூடி வைக்க வேண்டும். கொசுவலைகளை பயன்படுத்தலாம்,.. வீட்டு கதவு ஜன்னல்களுக்கு கொசு வலை அடித்து கொசு அண்டாமல் பார்த்து கொள்ளலாம். கொசுவை விரட்டும் புகைகள் உபயோகபடுத்தலாம்.. ஆனால் சிலருக்கு இது சுவாச அலர்ஜி ஏற்படுத்தலாம்.

• உடலில் தேய்க்கும் கொசு ஒலிப்பான் மருந்தான deet உபயோகபடுத்தலாம். அனால் தோல் அலர்ஜஜி இது உண்டு பண்ணலாம்.

• இந்த கொசு பகல் நேரத்தில் அதிலுக்ம் குறிப்பாக சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் நேரத்தில் அதிகம் கடிக்கும் .

• அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம், கொசு விரட்டும் புகை மற்றும் மருந்து தெளிப்பது மூலம் கொசுவை ஒழிக்கலாம்

• நீர் சேர்ந்து இருக்கும் இடங்களில், கொசுவின் லார்வா வை ஒழிக்கும் மருந்துகளை அடிப்பதன் மூலம், கொசுவின் வாழ்க்கை சுழற்சி லார்வாவிலே நிறுத்தப்பட்டு, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறாமல் தடுக்கலாம்.

• சுருங்க சொன்னால், கொசுவை ஒழிப்பதன் மூலமும், கொசு கடிக்காமல் பார்பதன் மூலமே இதை தடுக்க ஒழிக்க முடிம்யும்.

ஆக்கம் : டாக்டர் டி. முஹம்மது கிஸார்,

குழந்தை நல மருத்துவர்,

சென்னை.

http://www.kayalnews.com/misc/medical-section/2470-2012-10-13-07-08-19

டெங்கு காய்ச்சல் - Dengue Fever - அதன் தாக்கமும் சிகிச்சையும்- அறிந்து கொள்வோம்

 

தற்போது மீண்டும் இலங்கையில் குருநாகல் மாவட்டத்தில் டெங்கு நோய் தீவிரமாக பரவி வருவதாகவும், 520 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அறிவிக்கப்பெற்றிருப்பதால் மக்களுக்கு விளிப்புணர்ச்சி ஊட்டும் வகையில் அந் நோய் பற்றிய முக்கிய சில தகவல்கள் பிரசுரமாகின்றன


டெங்கு காய்ச்சல் எவ்வாறு ஏற்படுகின்றது?


டெங்கு காய்ச்சல் வைரஸ் கிருமியினால் உண்டாகும் நோயாகும். சில சமயங்களில் நோய் தீவிரமாகும் போது மூக்கு, பல்ஈறு மற்றும் தோலிலிருந்து இரத்தம் வடிதல் ஏற்படலாம். வாந்தி, காபி கொட்டை நிறத்திலோ அல்லது மலம் கறுப்பு நிறத்திலோ வெளியேறும். இதிலிருந்து வயிற்றுக்குடலினுள் இரத்தம் வடிகிறது எனக் கண்டு கொள்ளலாம். டெங்கு காய்ச்சல் மற்றும் இரத்தம் வடிதல் இரண்டுமிருப்பதை டெங்கு இரத்தக்கசிவு காய்ச்சல் என்கிறோம். சில சமயம் நோயாளிக்கு டெங்கு ஷாக்கும் ஏற்படலாம்.

டெங்கு காய்ச்சல் எப்படி பரவுகின்றது ? டெங்கு (Dengue) என்ற ஸ்பானிய மொழிச் சொல் எலும்பு முறிக் காய்ச்சல் எனப் பொருள்படும். இந்நோய் ஒருவகை வைரஸ் கிருமியால் ஏற்பட்டு; நுளம்புகளால் காவப்பட்டு பரப்பப்படுகிறது. ஏடிஸ் ஏகிப்டி, ஏடிஸ் அல்போடிக்டஸ் Aedes aegypti என்ற இரண்டு வகை நுளம்புகள் இந்நோய்க் கிருமிகளைக் காவி சுகதேகிகளைக் கடிக்கும்போது அவர்கட்குப் பரப்புகின்றன. 

இவை கடித்த இரண்டு முதல் ஏழு நாட்களுள் நோய் ஏற்படும். இந்நோய்க் காவி நுளம்புகள் கறுப்பு நிறமானவை. இறக்கையில் வெள்ளி நிறப் புள்ளிகள் தென்படும். மற்றைய நுளம்பு வகையுடன் (மலேரியா-Aanophleles,  யானைக்கால்-Culicines ) ஒப்பிடுகையில் தோற்றத்தில் சிறியவை. முதுகில் வெள்ளி நிறக் கோடுகள் இரண்டு தெரியும். பெண் நுளம்புகள் தான் நோயைப் பரப்புபவையாகும்.

இந் நுளம்புகள் கறுப்பு நிறமான முட்டைகளை தனித்தனியாக ஒரு தடவையில் 30 முதல் நூறு வரை தண்ணீரின் மேல் இடும். இவை கடிக்கும் நேரம் சூரிய உதயத்தின் பின் 2 - 3 மணித்தியாலங்களும், பின்னேரம் சூரிய அஸ்தமனத்திற்கு முன் 2 - 3 மணித்தியாலங்கள் எனக் கூறலாம். ஆனால் சில வேளைகளில் எல்லா நேங்களிலும் கடிக்க வாய்ப்பு உள்ளது. 

வெளியிலிருந்து வீட்டிற்குள் வந்து மனிதரின் இரத்தத்தைக் குடித்துவிட்டு மீண்டும் வெளியே போய்த் தங்கும். ஆனால் வீட்டிற்குள் வசதியாக தங்க இடவதி கிடைத்து விட்டால் வீட்டினுள் தங்கி பசிக்கும் போது இரத்தம் புசிக்க ஓய்ந்து இருப்பவர்களைக் கடிக்கும்.  இது சாதாரண சூழலில் 60 நாட்கள் வரை உயிர் வாழக்கூடியது. தற்போதைய வைத்திய முறைகள் மூலம் நோயைக் குணப்படுத்த முடியாது. நோயின் தாக்கத்தைக் குறைத்து மரணங்களைக் குறைக்கலாம். இந்த நுளம்புகள் கடிக்காதவாறு பார்த்துக் கொள்வதன் மூலமும், அவை பெருகும் இடங்களை அழிப்பதன் மூலமுமே நோய் ஏற்படுவதையும், பரவுவதையும் முற்றாகத் தடுக்க முடியும்.

நாம் வெளிவிடும் மூச்சுக்காற்றே நுளம்புகள் எம் இருப்பிடங்களை கண்டு பிடிக்க உதவுகின்றன. உயிரினங்கள் வெளிவிடும் மூச்சுக்காற்றில் காபனீரொக்கசைடு அதிகமாக காணப்பெறுகின்றது. காபனீர் ஒகைசைட்டை தேடிவரும் எம்மை கண்டு கொண்டு இரத்தத்தை உறுஞ்சுவதுடன் தாம் பிறரிடம் இருந்து பெற்று வந்த கிருமிகளையும் எம்முள் செலுத்தி விடுகின்றது.      

நோய்க் கணிப்பு:
உடலில் நோய் எதிப்பு சக்தி கொண்ட வெள்ளை அணுக்களின் மொத்த அளவை பரிசோதனை செய்தல், அதாவது ரத்தத்தில் சாதாரணமாக இருக்க வேண்டிய லியூகோசைட்ஸ் என்ற வெள்ளை ரத்த அணுக்களின் அளவு (4000-10,000 சி.எம்.) எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை பரிசோதனை செய்தல். 

த்ராம்போசைட்டோபீனியா: Dengue காய்ச்சலின் போது ரத்தத்தில் உள்ள ரத்த வட்டுக்களின் (platelets) எண்ணிக்கை குறைவாக காணப்படும். Dengue வைரஸிற்கு எதிராக உடல் உற்பத்தி செய்யும் ஆன்ட்டி-பாடி என்று அழைக்கப்படும் எதிர்ப்பு சக்தியை பரிசோதனை செய்யும் ரத்த நிணநீர் பரிசோதனை ஆகியவைகள் இந்த நோயை கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும்.

1990 ஆம் ஆண்டுகளில் நுளம்பு மூலம் பரவும் முக்கியமான நோயாக Dengue இருந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் இதனால் பாதிப்படைந்துள்ளனர். இது ஒரு தொற்று நோயாக பரவுவதால் நெருக்கடி மிகுந்த பகுதிகளில் சுமார் 2.5 பில்லியன் மக்கள் வாழ்ந்து வருவதாக உலக சுகாதார கழகம் தெரிவித்துள்ளது.

Aedes Aegypti என்ற கொசு அதிகமாக காணப்படும் தென் கிழக்கு ஆசியா, இந்தியா, மற்றும் அமெரிக்க வெப்பமண்டல நாடுகளில் Dengue காய்ச்சல் அதிகமாக ஏற்படுகின்றது. வெப்பமண்டல நாடுகளில் இது மிகவும் சகஜமாக தோன்றுகிறது. மக்கள் நெரிசல், தண்ணீரை திறந்த வெளியில் சேமிப்பது, பாசன கால்வாய்கள் ஆகியவைகளில் இந்த வகை கொசுக்கள் அதிகம் முட்டையிடுகின்றன.

சிகிச்சை:
Dengue காய்ச்சலை பொறுத்தவரை, ஓய்வும், திரவங்கள் வகை உணவு அதிகம் உடலில் ஏற்றப்படுவதும், உடல் உஷ்ணத்தைக் குறைக்க அசிட்டாமினோபென் மாத்திரைகள் ஆகியவை அவசியம். ரத்த வட்டுக்களை கண்காணிக்கும் அளவுக்கு சீரியஸாகப் போகும் போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அவசியம். இதற்கான தகுந்த ஆலோசனைகளை உங்கள் மருத்துவர் வழங்கக்கூடும். ரத்த வட்டுக்கள் அளவு 40,000-த்திற்கும் குறைவாக இறங்கும்போது புதிய ரத்தமோ அல்லது ரத்தவட்டுக்கள் நிறைந்த ஊனீர் (பிளாஸ்மா), அதாவது பி ஆர் பி ஏற்றப்படும்.

கொசுக்கடிகளிலிருந்து நம்மை பாதுகாப்பதன் மூலம் இதனை தடுக்கலாம். பாதுகாப்பான உடைகள், கொசு விரட்டிகள் இவைகளின் பங்கு அவசியமாகும். வாழ்விடங்களுக்கு அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். மேலும் வெள்ளம் ஏற்படும் காலங்களில் எந்த நீரையும் நன்றாக காய்ச்சிய பிறகு பயன்படுத்துவது மிக மிக அவசியமாகும். 

இந்நோயின் அறிகுறிகள் நான்கு நிலைகளில் தென்படும்.
1.  அறிகுறிகள் இல்லாத காய்ச்சல் நிலை, 
2.  ஆரம்ப நிலை டெங்கு காய்ச்சல் நிலை, 
3.  இரத்தப் பெருக்குடன் கூடிய டெங்குக் காய்ச்சல் நிலை, 
4.  டெங்குக் அதிர்ச்சி அறிகுறி நிலை. முதல் நிலையை 

தொடர்ந்து அடுத்தடுத்த நிலைகள் ஒன்றின் பின் ஒன்றாக ஏற்படும். ஆரம்ப நிலை டெங்குக் காய்ச்சல் ஓரிரு நாட்களுள் குறையாவிடின் உடனடியாக அரசாங்க வைத்திய மனைகளுக்குச் சென்று சிகிச்சை பெற்றால் முற்றிய நிலை ஏற்படுவதைத் தடுத்து மரணத்தைத் தவிர்க்க முடியும். பெரும்பாலான டெங்கு நோயாளர்கள் நோய் முற்றிய நிலையிலேயே வைத்திய மனைகளுக்குச் செல்வதால் அதிகமானோர் சிகிச்சை அளிப்பதற்கு முன்பே இறந்துவிடுகின்றனர். 

திடீரென ஏற்பட்ட கடுமையான காய்ச்சல், தாங்க முடியாத தலைவலி முக்கியமாக முன்தலைப் பக்கத்தில், கண்களின் பின் புறத்தில் வலி, கண்களை உருட்டும் போது கடுமையான வலி, உடல்வலி, மூட்டுக்கள், தசைகள், கை, கால், எலும்பு போன்றவற்றில் வலி, குமட்டல், வாந்தி, சிறிய சிவந்த புள்ளிகளைக் கொண்ட சிரங்குகள், கண் சிவத்தல், உடல் சோர்ந்து வெளிறிக் காணப்படல், பசியின்மை, வெளிச்சத்திற்குப் பயம், திடீரெனக் காய்ச்சல் குறைதல், குருதிச் சிறுதட்டுகளின் எண்ணிக்கை குறைதல் போன்றவை ஆரம்ப நிலை டெங்குக் காய்ச்சலின் அறிகுறிகளாகும். 

இவ் அறிகுறிகள் தென்பட்டதும் உடனடியாக நோயாளியை அரசாங்க வைத்தியமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அலட்சியமாக இருந்தால் இரத்தப் பெருக்குடன் கூடிய டெங்கு காய்ச்சல் நிலை ஏற்பட்டு ஏழு முதல் எட்டு நாட்களுள் டெங்கு அதிர்ச்சி அறிகுறி நிலை ஏற்படும்.

உடம்பு குளிர்தல், பதற்றம், அரைத்தூக்கம், அதிர்ச்சி நிலை, அதிகரித்த சுவாசம், அதிகரித்த நாடித்துடிப்பு, திடீரெனக் காய்ச்சல் குறைதல், தோலில் இரத்தக் கசிவு, இரத்த வாந்தி, கறுப்பு நிற மலம், வயிறு, கால் முதலியவற்றில் வீக்கம், இரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு இரத்த ஓட்டம் தடைப்படல், இரத்தத்தின் வெள்ளை அணுக்கள் மற்றும் சிறுதட்டுகளின் எண்ணிக்கை குறைதல், முதலியன டெங்கு அதிர்ச்சி அறிகுறி நிலையின் அறிகுறிகளாகும். 

சிறுதட்டுகளின் எண்ணிக்கை 28,000 இற்குக் கீழ் குறையும் போது நுரையீரலுக்குள் தண்ணீர் புகுந்து மரணம் ஏற்படும். இந்நிலை ஏற்பட்ட பின் சிகிச்சை அளித்து நோயாளியைக் காப்பாற்றுதல் மிகவும் கடினம்.

டெங்குவாக இருக்குமோ என ஐமிச்சம் என்றால், காய்ச்சல் தொடங்கி மூன்று நாட்களுக்குப் பின்னர் FBC என்று சொல்லப்படும் Full blood Count செய்து பார்க்கலாம். அதில் முக்கியமாக Platelet count மற்றும் PCV ஆகியவற்றையே மருத்துவர்கள் கவனத்தில் எடுத்துப் பார்ப்பார்கள். இந்தப் பரிசோதனைகளில் மாற்றம் இருந்தால் அடுத்து வரும் ஒரு சில நாட்களுக்கு இப்பரிசோதனையை மீண்டும் மீண்டும் செய்து நோயின் நிலையைத் தொடர்ந்து கணிக்க நேரிடும். 

ஆனால் அதுவரை ஏனைய கடும் காய்ச்சல்காரர்களைப் பராமரிப்பது போல பாராமரித்தால் போதுமானது. காய்ச்சலுக்கு பரசிற்றமோல் ஆறு மணிநேரத்திற்கு ஒரு தடவை கொடுக்கலாம்.  வளர்ந்தவர்களுக்கு ஒவ்வொரு தடவையும் இரண்டு மாத்திரைகள் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கும், இளவயதினருக்கும் அவர்களது எடைக்கு ஏற்ப அல்லது வயதிற்கு ஏற்ப மாத்திரையின் அளவு மாறுபடும். மருந்து மாத்திரை கொடுப்பதற்கு குடும்ப வைத்தியரின் ஆலோசனை பெறவேண்டும்.

புரூபன், பொன்ஸ்டன், டைகுளோபெனிக் போன்ற வலிநிவாரணி மருந்துகளை டெங்கு என்ற சந்தேகம் இருந்தால் காய்சலுக்கோ உடல்வலிக்கோ கொடுக்கக் கூடாது என டாக்ரர்களால் பரிந்துரைக்கப் பெற்றுள்ளது. போதிய நீராகாரம் கொடுக்க வேண்டும். உண்ண முடிந்தால் வழமைபோலச் சாப்பிடலாம். ஆயினும் கோக், நெக்ரோ போன்ற செந்நிறப் பானங்களைத் தவிர்க்க வேண்டும். 

அதேபோல சிவப்பு நிறமுடைய ஏனைய உணவுகளையும், பீற்ரூட் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். 

சாதாரண டெங்கு காய்ச்சல் ஆபத்தானது அல்ல. சிலநாட்களில் எந்தவித பின்வளைவுகளும் இன்றி தானாகவே குணமாகிவிடும். ஆயினும் டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் (Dengue Haemorrhagic Fever- DHF) மிகவும் ஆபத்தானது. இதன் போதும் கடுமையான காய்ச்சல் இருக்கும். முகம் சிவத்தல், கடுமையான தலையிடி, கண்வலி, தசைவலி, மூட்டுவலி ஆகியன சேர்ந்திருக்கும். இவை 2 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கலாம். 

அத்துடன் இரத்தம் கசிவதற்கான அறிகுறிகள் ஏதும் தோன்றலாம். உதாரணமாக மூக்கால் இரத்தம் வடிதல், முரசிலிருந்து இரத்தம் கசிதல், தோலில் ஆங்காங்கே சிவப்பான புள்ளிகள் தோன்றல், ஊசி ஏற்றிய இடத்தில் அல்லது குளுக்கோஸ் ஏற்றிய இடத்தில் இரத்தம் கசிந்து கண்டல் போலத் தோன்றுதல், வாந்தியோடு இரத்தம் வருதல், மலம் கருமையாக வெளியேறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாது உடன் வைத்தியசாலைக்கு செல்லல் வேண்டும். 

அத்துடன் இந்நோயின் போது ஈரல் வீக்கமடைவதால் பசியின்மை, வயிற்றுநோ, வாந்தி, போன்றவை தோன்றும். சிலருக்கு வயிற்றோட்டமும் ஏற்படுவதுண்டு. அத்தகைய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். 

டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் எந்த வயதினரையும் பாதிக்கலாம் ஆயினும் குழந்தைகளைப் பாதிப்பது அதிகமாகும். அதிலும் ஒரு வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளைத் தாக்கும் போது ஆபத்து அதிகமாகும். நோஞ்சான் பிள்ளைகளைவிட ஆரோக்கியமான பிள்ளைகளையே அதிகம் பாதிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதற்கான காரணம் தெளிவாகவில்லை. 

டெங்கு கிருமியில் பல உபபிரிவுகள் இருப்பதால் ஒரு முறை டெங்கு வந்தால் மீண்டும் வராது என்று சொல்ல முடியாது. திரும்ப வரக் கூடிய சாத்தியம் உண்டு. உண்மையில் முதல் தடவை வரும்போது பெரிய பாதிப்புகள் இருப்பதில்லை. சாதாரண காய்ச்சல் போல குணமாகிவிடும். ஆயினும் அடுத்த முறை வரும்போதே கடுமையாக இருக்கும். டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் போன்றவை அப்பொழுதே வருகின்றன. 

பலருக்கு காய்ச்சல் விட்ட பின்னரும் கடுமையான களைப்பு, தலைச்சுற்று, கிறுதி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இவை உடலின் உள்ளே குருதிக் கசிவு ஏற்பட்டதால் அல்லது நீர்இழப்பு ஏற்பட்டதால் தோன்றியிருக்கலாம். எனவே அலட்சியப்படுத்தக் கூடாததாகும். 

இப்படிப்பட்ட கைவிடப்பட்ட நிலையிலுள்ள நோயாளர்கட்கு எளிய மூலிகை மருத்துவம் துணை செய்யக்கூடும். எளிதில் கிடைக்கக்கூடிய பப்பாசி இலைகள் இரண்டை எடுத்து தண்டு நீக்கி நன்றாக அரைத்துச் சாறு எடுத்து வடிகட்டித் தினமும் இரண்டு மேசைக் கரண்டியை நோயாளர்கட்குக் கொடுக்க அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவர். பப்பாசி உடலின் வெப்பத்தன்மையைக் குறைக்கும் தன்மை கொண்டது. டெங்கு வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்தி வாய்ந்தது. பப்பாசி இலைகளை அவிக்கவோ அல்லது சுடுநீரில் கழுவவோ கூடாது என்பது முக்கிய விடயமாகும். இப்படிப்பட்ட பக்கவிளைவுகளற்ற செலவற்ற எளிய மாற்று மருத்துவ முறை உலகளாவிய ரீதியில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்கட்கு எதிர்காலத்தில் பெரும் வரப்பிரசாதமாக இருக்கக்கூடும்.

(இந்த மூலிகை மருத்துவம் பற்றி செல்லையா துரையப்பா அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை சமீபத்தில் தேசிய தமிழ்ப் பத்திரிகைகளில் பிரசுரமாகி இருந்தமை. வாசகர்கள் அறிந்ததே. இந்த மூலிகை மருத்துவம் சமீபத்தில் இரண்டு நோயாளர்களிடம் வெற்றிகரமாகப் பரீட்சிக்கப்பட்டது. இதுபற்றிப் பிரபல வைத்திய நிபுணர் பேராசிரியர் குயுபேட் அபொன்சொ (Prof.Hubert Aponso) அவர்கள் ஆனி 19 ஆம் திகதி டெய்லி நியூஸ் (Daily News) பத்திரிகையில் அவரால் டெங்கு நோய் பற்றி எழுதப்பட்ட கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.)

சிறு தட்டுகளின் எண்ணிக்கை இரத்தம் பாய்ச்சிய போதும் மிகவும் குறைந்து காணப்பட்டதால் வைத்தியர்களால் கைவிடப்பட்ட நிலையில் தீவிர கண்காணிப்புப் பிரிவில் மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்த ஒரு சிறுவனுக்கு கடைசி முயற்சியாக அவரின் தந்தை பப்பாசி இலைச்சாற்றைப் பருக்கினார். எதிர்பாராதவாறு அவரின் சிறுதட்டுகளின் எண்ணிக்கை உயர்ந்து அவர் உயிர்பிழைத்ததைக் கண்டு வைத்திய நிபுணர்களும் தாதியர்களும் வியப்பில் ஆழ்ந்தனர். இரண்டு நாட்களின் பின் நோயாளி பூரண சுகமடைந்து வீடு திரும்பினார்.

32 வயதுடைய மற்றுமொரு டெங்கு நோயாளியின் சிறுதட்டுகளின் எண்ணிக்கை 28,000 க்குக் கீழ் குறைந்து சுவாசப்பைக்குள் நீர் புகுந்து சுவாசிக்கக் கஷ்டப்பட்டு மரணிக்கும் தருவாயில் இருந்த போது பப்பாசிச்சாறு கொடுக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இந்த மூலிகை மருந்தைக் கொடுத்த உடனேயே சிறுதட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்தன. காய்ச்சலும் விட்டது. மூன்று நாட்களின் பின் பூரணசுகமடைந்து நோயாளி வீடு சென்றார்.

மேற்படி வைத்திய நிபுணரின் அறிக்கை டெங்கு நோயாளர்கட்குப் பெரும் வரப்பிரசாதமாகும். உலகளாவிய ரீதியில் டெங்கு நோயால் ஏற்படும் பல மரணங்களை இவ் எளிய மூலிகை மருத்துவம் மூலம் தடுக்க ஏதுவாக இருப்பது எமக்குப் பெருமையாகும்.

டெங்கு நோயின் அடையாளங்கள்
1. கடுமையான காய்ச்சல
2. தலைவலி
3. கண்களுக்கு கீழாலும் தசைகளிலும் மூட்டுக்களிலும் வலி ஏற்படுதல
4. பசியின்மை/உணவில் விருப்பின்ம
5. வாந்தி ஏற்படுவதோடு தோலில் சிவப்பு நிற புள்ளிகள் ஏற்படுதல் 

நோய் அடையாளங்கள் வெளிப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
1. காய்ச்சலின் போது ஓய்வெடுக்க வேண்டும
2. காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக நீரினால் உடம்பு முழுவதும் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
3. ஒவ்வொரு 6 மணித்தியாலயத்தின் பின்னரும் பெரசெடமோல் வகையைச் சார்ந்த வில்லைகளை உட்கொள்ள வேண்டும்.
4. இரத்தப் போக்கிற்கான அடையாளங்கள் வெளிப்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும்.

டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
1. நீர் தேங்கி நிற்கும் எல்லா இடங்களையும் சுத்தம் செய்து, மண் அல்லது மணல் மூலம் நிரப்பி விட வேண்டும்.
2. கொங்ரீட் கூரைகள், பீலிகள், கான்கள் போன்றவற்றிலுள்ள இலைகுலைகளை அகற்றி, நீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.
3. சூழலிலுள்ள தண்ணீர் தேங்கக் கூடிய சிரட்டைகள், போத்தல்கள், பொலித்தீன் பைகள் போன்றவற்றை புதைத்து விட வேண்டும்/எரித்து விட வேண்டும்.
4. பாவிக்கக் கூடிய பாத்திரங்கள், வாளிகள் போன்ற வற்றை கவிழ்த்து வைக்க வேண்டும். 
5. பூந்தொட்டிகள், பாத்திரங்கள் போன்றவற்றில் தேங்கி நிற்கும் நீரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாற்ற வேண்டும். 
6. எறும்பு வராது மேசை கால்களுக்கு வைக்கும் பாத்திரங்களின் தண்ணீரையும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாற்ற வேண்டும். 
7. குளிரூட்டிகளிலிருந்து வெளியேறும் நீரையும் மாற்ற வேண்டும். 
8. தண்ணீரை அகற்ற முடியாத இடங்களில் உப்பை சேர்த்து விடவும். 
9. தண்ணீர் தாங்கிகளில் வாளியை விட்டு நீர் எடுக்காதபோது அங்கும் நுளம்புகள் பெருகலாம். எனவே, அதன் மூடியை ஒழுங்காக மூடவேண்டும். மூடி இல்லாதபோது மெல்லிய வலையினால் மூட வேண்டும். 
10. பழைய ரயர்களை அகற்றி புதைத்து விட வேண்டும். 

எப்போது டெங்கு காய்ச்சல்தானா என சந்தேகிக்க வேண்டும்?
திடீரென்று காய்ச்சல் வரும்போது (103f-105f)
காய்ச்சலுடன் தலைவலி, கண்களில் பின்புறம் வலி, உடம்பு வலி, தோல் சினைப்பு மற்றும் வாந்தி வருதல், வயிறு வலி, சிறு குழந்தைகளுக்கு வலிப்பும் வரலாம்.
காய்ச்சல் 5 நாட்களுக்கு மேல் இருத்தல்
திடீர் திடீரென்று காய்ச்சல் வருதல்.
காய்ச்சல் வந்தபின் மிகவும் அசதியாக இருத்தல்

காய்ச்சலில் நிறைய வகைகள் உள்ளன. எப்போது டெங்கு காய்ச்சல் என சந்தேகிக்க வேண்டும்?
கண்களில் பின்புறம் வலி
தசை வலி
மூட்டு வலி
தோலில் சினைப்பு
வயிறு வலி, வாந்தி
டெங்கு காய்ச்சல் மூட்டுகளையும் பாதிக்கின்ற காரணத்தால் அதனை எலும்பு முறிவு காய்ச்சல் எனவும் கூறலாம்.

டெங்கு காய்ச்சல் நேரிடக் கூடிய நோயாளிக்கும் டெங்கு காய்ச்சல் என சந்தேகிக்கிற நோயாளிக்கும் உள்ள வேறுபாடு என்ன?
இரத்த அடர்த்தியின் அளவு டெங்கு காய்ச்சல் உள்ள நோயாளிக்கு குறைவாகவே இருக்கும். நோயாளிக்கு இரத்த சோகை இருந்தால் அவை வேறுபடும்.

டெங்கு காய்ச்சல் ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு (தொற்றுமா) பரவுமா?
இல்லை. நுளம்புக்கடியின் மூலமாக மட்டுமே டெங்கு நோய்க்கிருமி பரவுகின்றது.

நோய் தொற்றியபின் டெங்கு காய்ச்சல் எவ்வாறு உண்டாகிறது?
நோய்க்கிருமி தொற்றியவுடன் அவை நிணநீர் நாளங்களில் பெருக்கம் அடைகின்றன. போதிய எண்ணிக்கையில் பெருக்கம் அடைந்தவுடன் அறிகுறிகளை தோற்றுவிக்கின்றன. இது 4 முதல் 6 நாட்களில் அறிகுறிகள் உண்டாகின்றன.

டெங்கு காய்ச்சலை வீட்டிலேயே குணப்படுத்த முடியுமா?
முடியும். மருத்துவரிடம் ஆலோசித்து வீட்டிலேயே நன்கு ஓய்வெடுத்து நீராகாரங்களும், சுத்தமான உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். நீராகாரங்கள் நிறைய எடுப்பதன் மூலம் டெங்கு இரத்தக்கசிவு நோயையும் தவிர்க்க இயலும். மேலும் அபாய அறிகுறிகளை கண்டவுடன் மருத்துவரிடம் கொண்டு போக வேண்டும்.

டெங்கு காய்ச்சலுக்கான மருத்துவ ஆலோசனை என்ன? இதனை குணப்படுத்த முடியுமா?
டெங்கு காய்ச்சலுக்கென தனியாக மருத்துவ சிகிச்சை இல்லை. தொற்று நோய் எதிர்ப்பு மருந்துகள் இதற்கு உதவாது. பாரசிட்டமால் மருந்து காய்ச்சலுக்கும், மூட்டுவலிக்கும் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆஸ்பிரின், பூரூபென் போன்ற மருந்துகளை தவிர்ப்பதன் மூலம் இரத்தக்கசிவினை தடுக்க இயலும். 

டெங்கு காய்ச்சலினால் அபாயங்கள் உண்டா?
டெங்கு காய்ச்சலினால் இரத்த குழாய்களுக்கு தீங்கு ஏற்படும். இரத்தக்கசிவு. இரத்த அடர்த்தி குறைதல் முக்கியமான உறுப்புகளில் இரத்தம் வடிதல் ஏற்படும்.

டெங்கு நோயாளி எப்போது மருத்துவ உதவிக்கு அணுக வேண்டும்?
டெங்கு இரத்தக்கசிவு நோய் உண்டாகும்போது (அ) டெங்கு ஷாக் இருந்தாலும் காய்ச்சல் வந்து 3 முதல் 5 நாட்களுக்குள் மருத்துவரை அணுக வேண்டும். சிலசமயம் காய்ச்சல் இருக்காமல் உடலின் வெப்பநிலை சாதாரண நிலைக்கு வந்துவிடும். இதனால்தான் காய்ச்சல் சரியாகிவிட்டதாக நாம் தவறாக நினைக்கிறோம். எனவே இந்த சமயம்தான் மிகவும் அபாயகரமானது.

மிகவும் வயிற்றுவலி, வாந்தி எடுத்துக் கொண்டே இருத்தல், சிறு சிறு சிவப்பு (அ) ஊதா நிறத்தில் கொப்பளங்கள் மூக்கில் இரத்தம் வடிதல், ஈறுகளில் மற்றும் கழிவுகளில் இரத்தம் வருதல் இவையெல்லாம் அபாய அறிகுறிகள் ஆகும். 

எனவே மிகவும் வயிற்றுவலி இருந்தாலோ, வாந்தி தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இரத்தக்கசிவு உறுப்புகளில் வரும்வரை பொருத்திருந்தால் அபாயகரமானதாகும்.

டெங்குவிற்கு ஏதாவது தடுப்பூசி இருக்கின்றதா?
ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அறிவியல் ஆய்வுகள் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக தடுப்பூசியினை கண்டுபிடிக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு சிலகாலம் பிடிக்கும்.

டெங்கு காய்ச்சினால் நீண்டகால பாதிப்புகள் உண்டா?
1-2 வாரங்களில் முழுமையான குணம் அடைந்து வருவார்கள். சிலருக்கு பல வாரங்களுக்கு அசதிகள் இருக்கும்.

டெங்கு வைரஸை பரப்பும் கொசு எங்கு வாழ்கிறது?
இந்த நுளம்பு இட்டு இடங்களிலும் வீட்டை சுற்றிலும் வாழ்கிறது. பெண் நுளம்பு தேங்கி கிடக்கும் நீரின் மேற்பரப்பிலும் வீட்டைச் சுற்றிலும் முட்டையிடுகிறது. இந்த முட்டை 10 நாளில் வளர்ச்சியடைந்து லார்வாக்களை உண்டு செய்யும்.

இந்த நுளம்பு உற்பத்தியாவதை எவ்வாறு தவிர்க்கலாம்?
டெங்கு நுளம்புகள் பகல் நேரங்களில் கடிக்கும். அதிகப்படியாக சூரிய உதயத்தில் இருந்து 2 மணி நேரம் வரையிலும், சூரியன் மறையக் கூடிய மாலை வேளைகளிலும் கடிக்கும்.
முழுக்கை ஆடைகளையும் நீண்ட ஆடைகளை அணிந்து உடலினை நன்றாக மூடுவதன் மூலம் கொசுக்கடியின தவிர்க்க இயலும்.
கொசுவலை, நுளம்புகளை கொல்லும் காயில் முதலியவற்றை உபயோகிக்கலாம். குழந்தை மற்றும் முதியவர்க்கு உபயோகப் படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.

டெங்கு நோயாளிக்கு அவற்றைப் பரவச் செய்யாமல் தடுக்க ஏதேனும் அறிவுரை உள்ளதா?
டெங்கு காய்ச்சல் அடுத்தவருக்கு பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்த காய்ச்சல் உள்ள நோயாளி நுளம்புகளில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளவேண்டும். எனவே கொசு விரட்டியை உபயோகிக்கவேண்டும். கொசுவர்த்தி, காயில்கள் போன்றவைகளையும் உபயோகப்படுத்தலாம். இதன் மூலம் டெங்கு காய்ச்சலை தவிர்க்க முடியும்.

டெங்கு காய்ச்சல் நோய் உள்ளவர்களுக்கு மருத்துவர்களின் சிகிச்சை என்ன?
டெங்கு நோய் இருப்பதாக இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். 
நோயின் தன்மையை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
இரத்த அடர்த்தி குறைந்தால் இரத்தம் கொடுக்க வேண்டும். இரத்த அடர்த்தியின் அளவு முன் இருந்ததை விட 20% அதிகரித்தால் இரத்தக் குழாய்களின் மூலம் நீர் சத்தை அதிகரிக்க வேண்டும்.

சிகிச்சையின் போது நோயாளிகள் தவிர்க்க வேண்டியன எவை? 
ஆஸ்பிரின் புரூபென், மருந்துகளை சாப்பிடக்கூடாது. இது இரத்தத்திட்டுகளை குறைவு செய்யும். மற்றும் இரத்தக்சிவு உண்டாகும். 

டெங்கு காய்ச்சலை தடுப்பதில் பொது மக்களின் பங்கு என்ன?
பொது மக்கள்தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை தவிர்க்க முதலில் நுளம்பு உற்பத்த்தியினை தடுக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் தேங்கியிருக்கும் நீரை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 
எனவே நுளம்புகள் பறக்கும் வேகம் மிக குறைவாக இருப்பதினால் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து சுற்றியிருக்கும் இடங்களை சுத்தம் செய்வதின் மூலம் நுளம்புகள் நீரில் தேங்குவதை தவிர்க்கலாம்.

http://www.panippulam.com/index.php?option=com_content&view=article&id=4353:2012-01-21-01-06-17&catid=54:what-ails-you&Itemid=411

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு இந்த டெங்கு காய்ச்சல் இருந்ததாக கேள்விப்படவில்லை. 
அல்லது அந்த நோயின் தன்மையின்.. போதிய விளக்கங்கள் இல்லாமல் இருந்திருக்கலாம்.
இப்போது.... இது இலங்கையிலும், குறிப்பாக தமிழ் பகுதிகளில் அதிகமாக காணப்படுவது கவலை தரும் விடயம்.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

மூன்று விடயங்களை சரிவர பின்பற்றினால் மரணம் நிகழாமல் தடுக்க முடியும்

டாக்டர்.M.B.ஹாலித். MBBS (SI), DCH(Col) ஓட்டமாவடி

1. காய்ச்சல் ஏற்பட்டதிலிருந்து 48 மணித்தியாலங்களுக்கு பிறகு, புள் பிBளட் கவுண்ட் (Full Blood Count-FBC ) பரிசோதனை செய்தல் , அத்தோடு 3ம் , 4ம் , 5ம் நாட்களிலும் இந்தப் பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும்.

2. புள் பிளட் கவுண்ட்(FBC) ரிப்போர்ட் இல் பிளேட்டிலட்(Platelets – Plt) எனும் குருதிசிறுதட்டுக்களின் எண்ணிக்கை 130 ஐ விட குறைவடைந்தால் வைத்திய சாலையில் கட்டாயம் அனுமதித்தல். 

3. எந்தக்காரணம் கொண்டும் காய்ச்சலைக் குறைப்பதற்காக டைக்குளோபெனக் ( diclofenac ) , புரூபன் (brufen),மெபெனமிக் அசிட் (mefenamic acid) போன்ற மருந்துகளை பாவித்தல் கூடாது.

இம்மூன்று விடயங்களையும் சரிவர பின்பற்றுவதனால் டெங்கு மரணம் ஏற்படுவதை தவிர்க்கமுடியும் அது பற்றிய பூரண விளக்கத்தை கீழ் உள்ளவற்றை வாசிப்பதன் மூலம் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள் .

டெங்கு காய்ச்சலானது டெங்கு வைரசினால் ஏற்படுத்தப்படுகிறது, இந்த காய்ச்சலில் உயிரை பறிக்கக்கூடிய ஒரு நிலை சிலரில் ஏற்படுகிறது ஆனால் இந்த நிலையை வெற்றிகரமாக எதிர்கொண்டு மரணம் ஏற்படுவதை தடுப்பதற்கான மிகச்சிறந்த , பாதுகாப்பான வைத்திய முறை இன்று காணப்படுகின்றது.

அவ்வாறு இருந்த ஏன் மரணம் ஏற்படுகின்றது?

அதிக மரணங்களுக்கான காரணம் மேற்குறிப்பிட்ட விடயங்களில் நமது கவலையீனம், அசமந்தப்போக்குகளாகும் .

1. காய்ச்சல் ஏற்பட்டதிலிருந்து 48 மணித்தியாலங்களுக்கு பிறகு, உடனடியாக புள் பிBளட் கவுண்ட் (Full Blood Count-FBC ) பரிசோதனை செய்யாது விடுதல் காரணமாக டெங்கு மரணங்கள் ஏற்படுவதில் பலர் அடங்குகின்றனர்

உதாரணமாக….

சிலர் எனக்கு இருமல் தடிமல் காய்ச்சல் தான் , டெங்கு காய்ச்சலாக இருக்காது என இப்பரிசோதனையை செய்யாது விடுகின்றனர்.

சிலர் 2ம் நாளில் இப்பரிசோதனை செய்து விட்டு அப்பரிசோதனை நோர்மல் தான் அதனால் 3ம் , 4ம் நாட்களில் செய்யாது விட்டுவிடுகின்றனர்.

சிலர் ஊசி குத்த முடியாது இரத்தம் எடுக்கும் போது பிள்ளை அழுகின்றான் என்று இப்பரிசோதனையை தொடர்ச்சியாய் 3ம் , 4ம் ,5ம் நாட்களில் செய்வதை தவிர்ந்து விடுகின்றனர்.

சிலர் தேவையில்லாமல் காய்ச்சலின் 1ம் நாளில் , 48 மணித்தியாலங்கள் முடிவதற்குள் இரத்தப்பரிசோதனை 2 /3 தடைவைகள் செய்துவிடுகின்றனர் இதனால் தேவையான போது செய்வதற்கு தயங்கி செய்யாது விடுகின்றனர்.

சிலர் காய்ச்சல் விட்டுவிட்டது தானே இனி இரத்தப்பரிசோதனை தேவை இல்லை என வைத்தியரின் அறிவுறுத்தலை தாங்களாகவே நிராகரித்து விடுகின்றனர்.

சிலர் 4ம் நாள் காய்ச்சலோடு வைத்தியரிடம் வருவர், இரத்தப்பரிசோதனை செய்து வாருங்கள் என்று ஒரு பரிசோதனை துண்டை கொடுத்து , இப்போது பரிசோதித்துக்கொண்டு வாருங்கள் என்று அனுப்பினால், சரி டொக்டர் எடுத்து வருகின்றேன் என்று போய்விடுவர் , பின் அடுத்த நாள் ரிப்போர்ட்டோடு , மிகவும் அபாய நிலையில் நோயாளியை கொண்டுவருவர். ஏன் இப்படி நடந்துகொண்டீர்கள் என்றால் போனோம் டொக்டர் பிள்ளை அழுது விட்டது வீட்டே சென்றுவிட்டோம் இன்று காலையில் தான் பரிசோதனை செய்தோம் என்பர் , அப்படியாயின் உடனடியாக ரிப்போர்ட்டை காட்டி இருக்கலாமே என்று சொன்னால் , பின்னேரம் 5 மணிக்குதான் ரிப்போர்ட் தந்தார்கள் என்பர் , அப்படியாயினும் உடனடியாக வந்திருக்கலாமே என்று கூறினால் ஏதாவது ஒரு காரணத்தை கூறுவார்கள் அதாவது நேற்று மாலை 6 மணிக்கு ரிப்போர்ட்டுக்காக அனுப்பப்பட்டவர்கள் இன்று இரவு 9 மணிக்குத்தான் ரிப்போர்ட்டோடு வருவார்கள், மிக மோசமான நிலையில் அந்த நோயாளி இருப்பார் , வைத்தியர் பதறிக்கொண்டு உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பவேண்டும் என்றால் , வெளியால் வைத்து பார்க்க முடியாதா டொக்டர் என்பர் , பின் ஒருவழியாக கதைத்து , (ஏசி , பயமுறுத்தி) வைத்தியசாலைக்கு அனுப்பினால் 11 மணிக்குப் பிறகுதான் வைத்திய சாலையை அடைவர். 

அவசரமாக குறித்த நோயாளியை பெரிய வைத்தியசாலகளுக்கு அனுப்பி வைப்பதற்கான வசதிகள் குறித்த நேரத்தில் இல்லாமல் காணப்படும் உதாரணமாக அம்பியுலன்ஸ் பற்றாக்குறை,…. ,

 சில பெரிய வைத்திய சாலைகளும் பல நிறை குறைகளைக் கொண்டிருக்கும் தேவையான மிகமுக்கியமான பரிசோதனைகள் கூட செய்ய முடியாமல் இருக்கலாம் எனவே நோய் வீரியமடைவதற்கு முன்னர் வைத்தியசாலைகளை அடைதல் வேண்டும் .

2. புள் பிளட் கவுண்ட்(FBC) ரிப்போர்ட் இல் பிளேட்டிலட்(Platelets – Plt) எனும் குருதிசிறுதட்டுக்களின் எண்ணிக்கை 130 ஐ விட குறைவடைந்தால் வைத்திய சாலையில் அனுமதிக்காது காலம் கடத்துவதாலும் மரணத்திற்கு இட்டுச்செல்கின்றது.

இவ்வாறான நிலைக்கு பல உதாரணங்களைக் கூறலாம்…

சிலர் பிளேட்டிளட் 130 ஐ விட குறைவடைந்த நோயாளியை வைத்திய சாலையில் வைக்ககோரினால் , இல்லை டொக்டர் வைக்க முடியாது, வீட்டில் பிள்ளை தனியாக இருக்கிறது, உம்மா தனியாக இருக்கின்றார் என்று ஏதாவது காரணம் கூறி , நாளை காலையில் வருகிறேன் என்பர் என்ன வழிமுறையை கையாண்டாலும் அவர்களை வைத்திய சாலையை நோக்கி அனுப்ப முடியாது. பின் மிக மிக அபாயகரமான நிலையில் வைத்தியசாலையை அடைவர்.

சில வேளைகளில் வைத்தியர்கள் , சில காரணங்களைக் கருத்தில் கொண்டு 150 மேற்பட்ட எண்ணிக்கையில் பிளேட்டிலெட் காணப்படும் போதும் வைத்தியசாலையில் அனுமதிப்பர் எனேவே உங்களை வைத்தியர் வைத்தியசாலையில் அனுமதிக்க கோரினால் கட்டாயம் செவி மடுங்கள்.

3. எந்தக்காரணம் கொண்டும் காய்ச்சலைக் குறைப்பதற்காக டைக்குளோபெனக் ( diclofenac ) , புரூபன் (brufen),மெபெனமிக் அசிட் (mefenamic acid) போன்ற மருந்துகளை பாவித்தல் கூடாது. ஆனாலும் சிலர் பாவித்து விடுகின்றனர் .

இவ்வகையான மருந்துகள் குளிசைகளாக , பாணி மருந்துகளாக , அல்லது , மலவாயில் வைக்கும் குளிசையாக காணப்படலாம்.

சிலர் டொக்டர் காய்ச்சல் மிக கடுமையாக இருக்கின்றது 2 தடவை மருந்து எடுத்துவிட்டேன் காய்ச்சல் 3ம் நாளாகவும் விடாமல் காய்கின்றது , என்று நீங்கள் மலவாயில் வைக்கும் அந்த குளிசையை தாருங்கள் என்பர் , அதற்காக கட்டாயப்படுத்துவர், எவ்வளவு எடுத்துக்கூறினாலும் கேட்காமல் எப்படியாவது வேறு பாமசிகளில் அல்லது போலி வைத்தியர்களிடம் சென்றாவது எடுத்து பாவித்துவிடுவர். பிள்ளைகளுக்கு காய்ச்சலுடன் வலிப்பு ஏற்படுபவர்களுல் அதிகமானவர்கள் இவ்வாறான பிழையான முறையை பின்பற்றுவர்.

4. பிழையான நம்பிக்கைகளினால் குறித்த நேரத்தில் வைத்திய ஆலோசனையை பெறத்தவறுதல் அல்லது வைத்தியசாலையில் அனுமதிக்காமல் காலம் கடத்துதல்.

போலி வைத்தியர்களிடம் மருந்துக்காக செல்லுதல்.

உண்மையென உறுதிப்படுத்தப்படாத(ஆங்கில வைத்தியமுறைகள் அல்லாத) வைத்தியமுறைகள் மூலம் குணப்படுத்தமுடியும் என நம்பி ஏமாற்றம் அடைதல்.

பிழையான உறுதிப்படுத்தப்படாத நம்பிக்கைகளினால் கவரப்பட்டு வைத்திய ஆலோசனையில் நாட்டமில்லாது விடல் ( உதாரணமாக பப்பாசிச்சாறு போன்றவை).

டெங்கு மரணங்களுக்கான பிரதான காரணங்களாக சொல்லப்படுபவை !

டெங்கு வைரசின் காரணமாக மரணமடைதல் என்பது மிக மிகக் குறைவாகும் , இவ்வாறு வைரசின் காரணமாக மரணமடைபவர்கள் , வைரசினால் மூளை தாக்கப்படுதல் (என்செபலோபதி) , இதயத்தசை அழற்சி (மயோகார்டைடிஸ்) போன்றவற்றினால் இறக்கக்கூடும். இவ்வாறான நிலைகளில் நோயாளியை உயிர்பிழைக்க வைப்பது மிகவும் போராட்டம் நிறைந்தது.

அனேகமான மரணங்கள் நிகழ்வதற்கான காரணம் இரத்தக்குளாய்களில் காணப்படும் இரத்தத்தில் காணப்படும் பாய்மம் , இரத்தக்குளாய்களைவிட்டு தசைகளுக்குள் வெளியேறுவதால் ஏற்படும் அதிர்ச்சி நிலமையாகும் (dengue hemorrhagic shock) இவ்வாறான மரணங்கள் மிக அதிகமாக ஏற்படுவதற்கான காரணம் சரியான நேரத்தில் வைத்தியசாலைக்கு நோயாளி கொண்டுவரப்படாமல் இருத்தலாகும். குறித்த நேரத்தில் வைத்தியசாலையில் வழங்கப்படும் சிறப்பான சிகிச்சைகள் இவ்வகை மரணத்தை 100 வீதம் தடுக்கக்கூடியவை.

சிலர் மூளை, தசைகள் , போன்ற அங்கங்களில் இரத்தக்கசிவு ஏற்படுவதனாலும் இறக்கின்றனர் இவ்வகையானவர்கள் , நாம் மேற்கூறிய மருந்துப்பொருட்களை பாவிப்பதனால் , வைத்திய சிகிச்சை பலனின்றி இறப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாகும்

மேலும் சில ஆலோசனைகள் .

நாம் ஏற்கனவே கூறியவற்றுடன்…

I. காய்ச்சல் தொடங்கிய நாளில் இருந்து 5-6 நாட்களுக்கு தொடர்ச்சியாக வைத்திய ஆலோசனையுடன் இணைந்து இருங்கள். பொதுவாக காய்ச்சல் விட்டபிறகே(காய்ச்சல் ஏற்பட்ட 3ம் 4ம் நாற்களுக்கு பிறகு) டெங்கு காய்ச்சலின் அபாயகரமான நிலை ஏற்படுகின்றது என்பதை கவனத்தில் கொள்க.

II. வைத்தியர் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையை செய்து முடியுங்கள். உதாரணமாக உடனடியாக இரத்தப்பரிசோதனையை கோரினால் , உடனடியாக செய்து காட்டுங்கள். 

நாளை காலை இரத்தப்பரிசோதனையை கோரினால், காலையிலேயே செய்துகாட்டுங்கள் .

இவ்வாறு செய்து காட்டமுடியாவிட்டால் வைத்தியரிடம் ஆலோசியுங்கள் . காலையில் இரத்தமாதிரியை பெற்றுக்கொண்டு மாலை தான் ரிப்போர்ட் தருவோம் என்றால் அப்பரிசோதனை நிலையத்தில் பரிசோதனையை செய்யாமல் , உடனடியாக இவ்விரத்தப் பரிசோதனையை உடனடியாக செய்யக்கூடிய இடங்களுக்கு செல்லுங்கள் அல்லது இவ்விரத்தப் பரிசோதனை 

வசதியுள்ள அரசு வைத்தியசாலைகளுக்கு செல்லுங்கள். 

III. இரத்தத்தில் 100 ஐ விட குறைவாக பிளேட்டிளட்ஸ் காணப்பட்டாலோ , அல்லது நோயாளியின் நோயின் தண்மை அதிகமாக காணப்பட்டாலோ அரசின் பெரிய வைத்தியசாலைகளில் (பயிற்சி வைத்தியர்கள் வேலைசெய்யும் வைத்தியசாலைகள்) வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதே சிறந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறான நிலைகளில் நீங்கள் சிறிய வைத்தியசாலைகளில் வைத்திருக்கப்பட்டால் வைத்தியருடன் கலந்துரையாடி மாற்றத்திற்கு பரிந்துரையுங்கள் அல்லது வைத்தியர் உங்களை மாற்றுவதற்கு விரும்பினால் மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்.

IIII. வைத்தியசாலைகளுக்கு காலை நேரகாலத்தோடு செல்லுங்கள். சில வைத்தியசாலைகளில் தேவையான முக்கியமான பரிசோதனைகள் கூட தேவையான வேலைகளில் செய்துகொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது என்பதை மறந்து விடாதீர்கள். பொது விடுமுறைகள், ஞாயிற்றுக்கிழமைகளில் சில முக்கியமான விடயங்களை கையாள்வதில் பல இடர்பாடுகள் காணப்படும் என்பதை நினைவில் கொள்க உதாரணமாக ( ஆளனிக்குறைபாடுகள் , தேவையான பரிசோதனை செய்வதில் கட்டுப்பாடுகள் காணப்படலாம் ). 

V. மருத்துவ வசதியை பெற்றுக்கொள்வதில் சிரமமுள்ளவர்கள் (அதாவது குக்கிராமங்களில் வசிப்போர்…) வைத்தியசாலைகளில் முன்கூட்டியே அனுமதியை பெற்றுக்கொள்ளுங்கள்.

VI. அரசு வைத்தியசாலைகள் தற்போது நிரம்பிக்காணப்படுவதால் நீங்கள் பொறுமையுடனும் , அவதானத்துடனும் செயற்படுங்கள் , உமது நோய்நிலமை சம்பந்தமாக வைத்தியரிடம் , தாதிமாரிடம் அடிக்கடி கேட்டு அறிந்துகொள்ளுங்கள். மிகவும் அதிகமான நோயாளர்கள் காணப்பட்ட போதும் அரசின் பெரிய வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள் , தனியார் வைத்தியசாலைகளில் மிகக்கவனமாக அன்றி தங்கி சிகிச்சை பெறுவதை தவிர்ந்துகொள்ளுங்கள்.

VII. டெங்கு காய்ச்சலுக்கு உலகின் தற்போதைய, உறுதிப்படுத்தப்பட்ட மிகச்சிறந்த வைத்தியமுறையே எமது வைத்தியசாலைகளில் பின்பற்றப்படுகின்றது என்பதை நினைவிற்கொள்க.

VIII. ஆனாலும் வருமுன் காப்பதே மிகச்சிறந்த முறை அதற்கான சகல வழிகளையும் பின்பற்றுங்கள் , அம்முறைகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

http://battinaatham.com/description.php?art=9319

  • 3 months later...
  • தொடங்கியவர்

டெங்கு காய்ச்­சலை கட்­டுப்­ப­டுத்த பச்சை நிற பழச்­சாறு வகை­களைப் பரு­கு­மாறு வைத்­தி­யர்கள் ஆலோ­சனை!

 

டெங்குக் காய்ச்சல் தொற்­றி­யுள்­ள­வர்­களின்  எண்­ணிக்­கை­மேலும் மேலும்  அதி­க­ரித்துச் செல்லும்   நிலையில் இந்த நோய்க்கு சிறந்த நோய் நிவா­ரணி எனக் கரு­தப்­படும்  பச்சை நிறத்­தி­லான பழ வகை­களின் சாறு­களைப்  பரு­கு­மாறு வைத்­தி­யர்கள் ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளனர். 

GreenDrinkபச்சை நிற அப்பில் மற்றும் திராட்சை   (முந்­தி­ரிகை)ப் பழங்­களின் சாறு­க­ளில், டெங்கு நோயைக் கட்­டுப்­ப­டுத்தும் தன்மை அதிகம் இருப்­பதால்  இதனை டெங்கு நோயா­ளர்கள் எவ்­வித  அச்­ச­மு­மின்றி பாவிக்க முடியும்  என்றும் வைத்­தி­யர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். 

 உண­வ­கங்­களில் அல்­லது சுப்பர் மார்க்­கட்­டுக்­களில் போத்­தல்­களில் அடைக்­கப்­பட்டு விற்­பனை செய்­யப்­படும் பழச்­சா­று­க­ளை­விட  இயற்­கை­யி­லேயே தயா­ரிக்­கப்­படும் பழச்­சா­று­க­ளி­லேயே அதி­கப்­ப­டி­யான விட்­ட­மின்­களும்  நோய் எதிர்ப்பு சக்­தியும்  இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டி­ருப்­பதால்  இயற்கைச் சாறு­க­ளையே விசே­ட­மாகத்  தயா­ரித்துப் பரு­கு­மாறும் வைத்­தி­யர்கள் ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளனர்.  

பச்சை நிற அப்பில்,  பச்சை நிறத் திராட்சை ஆகிய பழங்­க­ளுக்கு மேல­தி­க­மாக, பச்சை நிற வேறு வகை­யி­லான பழச்­சா­று­க­ளையும் டெங்குக் காய்ச்சல் தொற்­றி­யுள்­ள­வர்கள் தயாரித்துப் பரு கலாம் என்றும்  இதனால் எவ்விதப் பாதிப்புக்களும் உண்டாகமாட்டாது என்றும்  வைத்தியர்கள் கருத்துத் தெரி வித்துள்ளனர்.

http://metronews.lk/?p=11385

  • 1 month later...
  • தொடங்கியவர்

'அச்சுறுத்தும் டெங்கு'.. என்ன செய்ய வேண்டும் நாம்?

 

 

  • கருத்துக்கள உறவுகள்

Kein automatischer Alternativtext verfügbar.

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

Kein automatischer Alternativtext verfügbar.

  • தொடங்கியவர்

உயிர்க்கொல்லியா டெங்கு?

Dr.-Dinakaran_avatar_1502599306-96x96.jpDr. Dinakaran

கடந்த வாரம் நன்கு மழை பெய்து வந்தது. புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகளை பரிசோதித்துக் கொண்டிருக்கும்  பொழுது ஒரு எண்பது வயது மதிக்கத்தக்க பெரியவருக்கு பத்து தினங்கள் முன்பு என்டோஸ்கோபி டெஸ்டிற்கு தேதி கொடுக்கப்பட்டு இருந்தது. அவர் கொடுத்த தேதியில் வராமல் புறநோயாளிகள் பிரிவிற்கு சோகத்துடன் வந்திருந்தார். எதனால் நீங்கள் டெஸ்டிற்கு வரவில்லை என்று கேட்கும்பொழுது, “என்னுடைய 10 வயது பேரக்குழந்தை டெங்கு  காய்ச்சலால் இறந்துவிட்டது, அதனால் என்னால் வர இயலவில்லை” என்றார். மிகுந்த வேதனையுடன் அன்றைய  தினம் கடந்தது. அன்றிலிருந்து கடந்த  ஒரு மாதமாகவே தினமும் செய்திகளில்  வட மாவட்டங்களில்  பல குழந்தைகள், தென் மாவட்டங்களில்  பல குழந்தைகள் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்  என்றும்,  அதோடு  இதுவரை இல்லாத அளவில் பெருவாரியான மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் , பலர் என்ன காய்ச்சல் என்று தெரியாமலே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் கேட்கும்பொழுது  மிகுந்த மன வருடலைத் தந்தது. உடனே டெங்கு காய்ச்சலை பற்றிய விழிப்புணர்வு வலைப்பதிவுகளை ஏன் நாம் எழுதக்கூடாது என்று தோன்றியது.  எனவே நாம் இப்பொழுது

  1. டெங்கு காய்ச்சலுக்கான காரணங்கள் என்ன?
  2. டெங்குவின் அறிகுறிகள் என்ன?
  3. டெங்குவிற்கான பரிசோதனை முறைகள் என்ன?
  4. டெங்குவிற்கான மருந்து முறைகள் என்ன?
  5. வருமுன் காக்க வேண்டிய சில நடவடிக்கைகள் என்ன?

ஆகிய விபரங்களைக் காண்போம்.

டெங்கு காய்ச்சலுக்கான காரணங்கள்:

டெங்கு காய்ச்சலும்  ஒரு வகையான வைரஸ் நோய் ஆகும். நான்கு வகையான டெங்கு வைரஸ் இருக்கிறது. டெங்கு வைரஸ் 1,2,3,4. இந்த வைரஸ் பரவுவதற்கான முக்கியக் காரணமே    பாதிக்கப்பட்ட ஏடிஸ் கொசு (Aedes Mosquito)  மனிதர்களை கடிப்பதுதான். ஏடிஸ் கொசுவிற்கான மற்றொரு பெயர் டைகர் கொசு. இது பெரும்பாலும் பகல் நேரங்களில் மனிதர்களை கடிக்கக்கூடியது. பெரும்பாலும் சூரியன் உதித்து 2 மணிக்குள்ளும்,  சூரியன் மறைய 2 மணி நேரத்திற்குள்ளும் இந்த ஏடிஸ் கொசு நம்மை கடிக்கும்.

 

maxresdefault-701x394.jpg

அதிலும்  பெண்பால் ஏடிஸ் தான்  பொதுவாக டெங்கு வைரஸைப்  பரப்பும். இதனுடைய இனப்பெருக்கத்திற்கு இரத்தம் தேவை என்பதால் இது அதிகப்படியான மனிதர்களை  இரத்தம் உறிஞ்ச கடிக்கிறது. அதன் மூலமாகவே  இந்த டெங்கு வைரஸ் பரவுகிறது. டெங்கு வைரஸ் உள்ள கொசு மனிதர்களைக்  கடிப்பதால், அதன் எச்சிலில் உள்ள வைரஸ் மனிதனின் இரத்தத்தில் கலந்து     தாக்கப்பட்ட மனிதர்களுக்கு டெங்கு நோய் ஏற்படுகிறது.

டெங்கு நோயின் அறிகுறிகள்:

  1. அதிகபடியான காய்ச்சல் (100 F அதிகமான இருப்பது ).
  2. தலைவலி , கண்களுக்கு பின்னால் வலி ஏற்படுவது.
  3. தசை , எலும்பு , மூட்டு வலி, முதுகுவலி.
  4. ராஸ் (Rash), இரத்தக்கசிவு– பற்களுக்கு இடையில், மூக்கில் இருந்து.
  5. களைப்பு மற்றும் வாந்தி.

wikihow-701x526.jpg

டெங்குவிற்காக  மருத்துவ  பரிசோதனை முறைகள் (மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே செய்ய வேண்டும் )

  1. முதல் வாரத்தில் (NS -1) எனப்படும் ஆன்டிஜன் டெஸ்ட் (முதல் 5 தினங்களுக்குள் ).
  2. இரண்டாவது வாரத்தில் 5 தினங்களுக்கு மேல் ஆன்டிபாடி டெஸ்ட் lgm/IgG Dengue ஆன்டிபாடி டெஸ்ட்.
  3. PCR- பாலி மரேஸ் செ யி ன் ரியாக்சன் எனப்படும் ஜெனிடிக் டெஸ்ட் வெகு அரிதாக செய்யப்படுகிறது. வெகு சில ஆராய்ச்சி நிலைகளில் மட்டும் செய்யபடுகிறது.
  4. பிளேட்லெட் (platelet ) அளவு , வெகு சில நேரங்களில் கல்லிரல் சம்மந்தமான டெஸ்ட் ( LFT) வயிற்றிற்கான ஸ்கேன், நெஞ்சு எக்ஸ்-ரே.
  5. மிக முக்கியமான பிளேட்லெட் (platelet ) அளவு தினமும் டெங்கு நோயினால் படிகபட்டவர்களுக்கு பார்க்கப்படும் ,அதன் அளவு வெகுவாக குறையும் பொழுது தேவைப்பட்டால் பிளேட்லெட் இரத்த வங்கியில் இருந்து வாங்கி டெங்குவினால் பாதிக்கபட்டவருக்கு ஏற்றப்படும்.

டெங்குவிற்கான மருத்துவ முறைகள்:

ஒரு முழுமையான ஓய்வு

  1. காய்ச்சலுக்கான மருந்தாக வெறும்  பாராசிட்டமால்  மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதே வேளையில் ஆஸ்பிரின் , ப்ருஃபன் போன்ற மருந்துகளைக் கட்டாயம் தவிர்த்திட வேண்டும்.
  2. அதிகபடியான நீர் பருகுதல் /ORS தண்ணீர் / தேங்காய் தண்ணீர்.
  3. காரமான /எண்ணைய் வகையான உணவுகளை தவிர்த்தல்.

 

wikihow-2-701x526.jpg

 

இயற்கை  மருந்துவ முறைகள்:

  • பப்பாளி (papaya juice) – பப்பாளி இலையில் உள்ள ஹைமோபாப்பின் பாப்டின் எனப்படும்  எண்ணெய் என்சைம் நம் உடம்பில் பிளேட்லெட் (platelet ) அளவை அதிகப்படுத்த உதவும்.
  • நில வேம்புக் கசாயம் நம் உடம்பின் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி ,டெங்குவில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவும்.

maxresdefault-1-701x394.jpg

சில நேரங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாகி நம் உடம்பில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். அதன் அறிகுறிகள்

   நாக்கு வறண்டுவிடுதல், சிறுநீர் குறைவாக வெளியேறுவது, மயக்கமாக காணப்படுவது, கை கால் குழிந்து தளர்ச்ச்சியுடன் காணப்படுவது.

வெகு சில நேரங்களில் சில வீரிய விளைவுகளை டெங்கு வைரஸ் ஏற்படுத்தும்.

  • டெங்கு ஹெமரேஸிக் சின்ரோம் (Dengue Hemorrhagic Syndrome)
  • டெங்கு ஷாக் சின்ரோம் (Dengue Shock Syndrome)

இந்த இரண்டு விளைவுகளும் டெங்குவினால் பாதிக்கப்பட்ட வெகு சிலருக்கு ஏற்படும். இந்த இரண்டும்  அபாயகரமான நோயின்   வெளிப்பாடாகும். சரியான நேரத்தில் ,சரியான மருத்துவ முறையில் இந்த விளைவுகளில் இருந்து வெளிவரலாம் .

எப்போது உள்நோயாளிகள் பிரிவில் இருக்க வேண்டும்?   

வயிற்று வலி /வாந்தி /இரத்த வாந்தி /இரத்த கசிவு /மலம் கருப்பாக போவது /மயக்கம் / மூச்சு விடுதல் கஷ்டம் /குழிந்த உடல் நிலை / பிளேட்லெட் வெகுவாகக்  குறைதல் இந்த காரணங்களினால் உள்நோயாளிகள் பிரிவில் இருப்பது சிறந்தது.

டெங்குவில் இருந்து வருமுன் காப்பது எப்படி?

  • கொசு அதிகமான இடங்களில் உடம்பு முழுவதும் மூடியாவது ஆடை அணிதல் சிறந்தது.
  • கொசுவலை (Mosquito net), Mosquito repelent (கொசு விரட்டி) பயன்படுத்துவது.
  • வீட்டிலும் , வீட்டின் அருகிலும்  தேவையற்ற தண்ணீர் தேங்கி இல்லாதவாறு பார்த்துக் கொள்வது.
  • கதவு மற்றும் ஜன்னலை மூடியே வைப்பது, குப்பைத்  தொட்டியை மூடி வைப்பது, வீட்டைச்   சுற்றிலும் நிறைய துளசி செடி வைப்பது.

shutterstock-701x395.jpg

மேற்கண்ட நடவடிக்கைகளினால் ஏ டி ஸ் கொசுவை நம் சுற்றுபுறங்களில் இருந்து கட்டுப்படுத்தி, டெங்கு வைரஸின் தாக்கத்தைக்  குறைக்க முடியும்.

  • பொதுவாக Recovery (டெங்குவில் இருந்து மீள்வதற்கு 2-3 வாரங்கள் ஆகலாம்.
  • வெகுசில நேரங்களில் சில தவிர்க்க முடியாத விளைவுகள் ஏற்படும் பொழுது இந்த மீள்விற்கான நேரம் அதிகமாகலாம்.
  • சரியான நேரத்தில் ஆரம்ப கட்டத்தில் மருத்துவரை அணுகுவதன் பயனாகவும்  டெங்குவில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்.

தற்போது இதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பதற்கான முயற்சியும் தீவிரமாக நடந்து வருகிறது.   இறுதியாக தூய்மையாகவும், உரிய நேரத்தில் மருத்துவரை அணுகி சரியான பரிசோதனைகளை மேற்கொண்டும் , சரியான மற்றும் அளவான மருந்துகளை உட்கொண்டும்  இந்த உயிர்கொல்லியை வெல்ல வேண்டியது அனைவரது கடமையும் கூட. டெங்குவை ஒழிப்போம், சுகாதாரமான சமுதாயம் காப்போம்.

 

https://roar.media/tamil/medical/was-dengue-a-deadly-virus/

  • தொடங்கியவர்

டெங்கு வராமல் தடுப்பது, வந்த பின்னர் என்ன செய்வது?- வழிகாட்டும் அரசு சித்த மருத்துவர்கள்

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க என்னென்ன முறைகளை கையாளவேண்டும், நிலவேம்பு கசாயம் ஏன் அவசியம், ரத்த தட்டுகள் இழப்பை எப்படி சரிகட்டுவது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு சித்த மருத்துவர் சங்கத்தினர் விளக்கம் அளித்தனர்.

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆரோக்கிய சித்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர். சிவராமன், மாநில மருந்து கட்டுப்பாடு அலுவலர் பிச்சையா குமார், குழந்தைகள் நல உதவி பேராசிரியர் அரசு சித்த மருத்துவ கல்லூரி மருத்துவர் ஸ்ரீராம் உள்ளிடோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது.

நமது பாரம்பரிய சித்த மருத்துவத்தில் 64 வகையான காய்ச்சல்களை அன்றே பிரித்தறிந்து சிகிச்சை அளித்துள்ளனர். இன்றைக்கு உயிர்க்கொல்லியான டெங்கு பற்றிய புரிதல் இல்லாத்க காலத்திலேயே அதன் குறிகுணங்களை ஒத்த பித்த ஜுரங்களுக்கு மிக அதிக பயனாக அவர்கள் கொடுத்த நிலவேம்பு குடிநீர்தான் தற்போது டெங்குக்கான முதல் நிலை தேர்வாக சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது.

2006 ல் பெரிய அளவில் வந்த சிக்குன் குனியாவுக்கும் நிலவேம்பு கசாயம் கட்டுப்படுத்தியதையும் நம் மாநில அரசும், மத்திய அரசும் புள்ளியியல் ரீதியாக ஆய்வு செய்து உறுதிப்படுத்தியது.

அதன் பின்னர் மாநில அரசின் கீழ் இயங்கும் கிங் ஆய்வகமும் நிலவேம்பு வைரஸைக் கட்டுப்படுத்த செய்வதையும் அது நமக்கு அது நோய் எதிர்ப்பாற்றலை தருவதையும், ஆய்வு செய்து சொன்னது.

காய்ச்சல் வந்த அத்தனை நபரும் நிலவேம்பு கசாயத்தை முதல் தேர்வாய் எடுக்க வேண்டும். காய்ச்சல் வந்தால் பெரியவர்கள் 50 மி.லி. இரு வேலை உணவுக்கு முன்னர் காலை மாலை என ஐந்து நாட்களும், குழந்தைகள் மற்றும் சிறார்கள்(3 முதல் 12 வயதுக்கு உட்பட்டோர்) 15-30 மிலி அளவு அல்லது உடல் எடை மற்றும் பிற விஷயங்களை மருத்துவர்கள் மாற்றக்கூடும்.

அதே போல் ரத்த தட்டுகள் (blood platelets level) குறையும் பட்சத்தில் அதை தடுக்க 1. ஆடாதொடைச்சாறு(15-30 மிலி வரை) ஆடா தொடை மணப்பாகு(5-10 மிலி வரை) 2. பப்பாளிச் சாறு(10-30 மிலி அளவு கொடுக்கவேண்டும்.

தாழ் தட்டுகள்(very low blood platelets) சூழலிலும் தொடர்ந்து தட்டுகள் பின்னடையும் போதும் நவீன மருத்துவம் வழிகாட்டுதல் அவசியம். தட்டுகள்(blood platelets) நேரடியாக ஏற்றப்படவேண்டும். அப்போது நவீன மருத்துவத்தை நாடவேண்டும், சில நேரம் IV Fluids அவசியப்படலாம் இச்சமயங்களில் சித்த மருத்துவரும், நவீன மருத்துவரும் இணைந்து செயலாற்ற வேண்டி இருக்கும்.

வெளியில் விற்கும் நிலவேம்புப் பொடியை பயன்படுத்தி கசாயம் தயாரிக்கலாமா?

கூடாது. நிலவேம்பு ஜுர சூரணம் என்ற பொடியை தகுதியான மருத்துவர்கள் தயாரித்து விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது அங்கீகரிக்கப்பட்ட பொடியா என்று கவனித்து அதைத்தான் வாங்கி பயன்படுத்தப் வேண்டும். சாதாரணமாக நில வேம்பு பொடியால் எந்த உபயோகமும் இல்லை.

நில வேம்பு ஜுர சூரணப்பொடி எங்கெங்கு கிடைக்கும்?

அனைத்து மருந்தகங்களிலும் கிடைக்கிறது. இது தவிர இம்ப்காப்ஸ் என்ற நிறுவனம் மிஸ்டு கால் கொடுத்தால் வீடு தேடி கொண்டு வந்து கொடுக்கிறார்கள். தற்போது உள்ள சூழ்நிலையில் பாதி விலையில் அதை சேவையாக கருதி கொடுக்கிறார்கள்.( செல்போன் எண்.9710105678, 9710205678).

நிலவேம்பு சூரணபொடியில் என்னென்ன கலக்க வேண்டும்?

நிலவேம்பு, மிளகு, சுக்கு, கோரைக்கிழங்கு, வெட்டிவேர், விலாமிச்சவேர், சந்தனத்தூள், பற்படகம், பேய்ப்புடல், எனும் ஒன்பது பொருட்கள் சேர்க்கப்பட வேண்டும். இம்மூலிகைகள் தனித்தனியே நோய் எதிர்ப்பாற்றல் உள்ளன.

நிலவேம்பு கசாயத்தை டெங்கு காய்ச்சல் இல்லாமல் குடிக்கக் கூடாது என்கிறார்களே?

அப்படி எல்லாம் இல்லை வாரம் ஒரு தடவையாவது குடிக்க வேண்டும். இது ஒரு நல்ல தடுப்பாக அமையும்.

நிலவேம்பு கசாயத்தை காய்ச்சல் இல்லாமல் குடித்தால் ஆண்மைக்குறைவு ஏற்படும் என்கிறார்களே?

முற்றிலும் தவறானது. வலைதளத்தில் எழுதுவதை எல்லாம் நம்புவதை முதலில் நிறுத்துங்கள். கண்டவனும் கண்டதை எழுதுவது படிக்கும் நம்மை தவறான திசை நோக்கி திருப்பி விடும். அதற்கென்று ஆய்வு செய்த மருத்துவர்கள், நிபுணர்கள் கூறுவதை நம்புங்கள்.

சாதாரணமாக நில வேம்பு கசாயத்தை எப்படி அருந்த வேண்டும்?

உணவுக்கு முன்னர் அருந்த வேண்டும், அல்சர் , காஸ்ட்ரிக் பிரச்சினை உள்ளவர்கள் உணவுக்கு பின்னர் அருந்தலாம்.

குடித்தவுடன் சர்க்கரை போட்டுக்கொள்கிறார்களே அது சரியா?

தவறான ஒன்று. நமக்கு கசப்பு வேண்டும் அதுதான் உடலுக்கு நல்லது. அதே நேரம் முடியாவிட்டால் அல்லது குழந்தைகளுக்கு கொடுக்க தேனை உபயோகப்படுத்தலாம். அது நல்ல இனிப்பு.

காய்ச்சல் வந்தவர்கள் என்னென்ன செய்ய வேண்டும்?

முதலில் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். டெங்கு காய்ச்சலும் சாதாரணமாக வந்துசெல்லும் காய்ச்சல் தான். அதற்கு வேண்டிய முறையான சிகிச்சை தகுந்த நேரத்தில் எடுக்க வேண்டும். காய்ச்சல் வந்து மூன்று நாட்களுக்கு பின்னரே அதன் அறிகுறி தெரியும். நில வேம்பு கசாயம் குடிக்கலாம், பப்பாளி சாறு குடிக்கலாம். ஆனால் டெங்கு கட்டுப்படவில்லை, பிளட் லெட் குறைகிறது என்றால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகிவிட வேண்டும். போன் மாரோவை வைரஸ் தாக்கினால் அது ஆபத்துதான்.

உணவில் இனிப்பை குறைக்க வேண்டும், கசப்பு அதிகம் சேர்க்க வேண்டும். உணவில் காரம் தேவைப்படும் போதெல்லாம் மிளகாய்த்தூளுக்கு பதில் மிளகை அதிகம் பயன் படுத்தலாம்.

தினசரி அருந்தும் நீரின் அளவு 2.5 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை இருக்கலாம். காய்ச்சல் நேரத்தில் நீரோடு சேர்த்து பழச்சாறு, இளநீர், சீரகத்தண்ணீர் முதலியன அதிக இடைவெளியில் கொடுக்க வேண்டும்.

என்னென்ன உணவுப்பழக்கங்களை கையாள வேண்டும்?

அரிசி கஞ்சி, தானியக்கஞ்சி இரு வேளை கொடுக்க வேண்டும். கீரை சூப் கொடுக்க வேண்டும். மீனைத்தவிர புலால் உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்த்து விட வேண்டும்.

அன்னாசிப்பூவை உணவில், தேநீரில் சேர்க்கவும், இலவங்கப்பட்டை போட்ட தேநீர் அருந்தலாம். திரிகடுகம் காப்பி அருந்தலாம். இவை அத்தனையும் நோய் எதிர்ப்பு சக்தி மிக்கது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19840647.ece?homepage=true

 

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.