Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதிப்புற்ற தமிழர்களுக்கு மருந்தளிக்க வேண்டும் பிரதமர் ரணிலின் அரசியல் வரலாறு நூல் வெளியீட்டு நிகழ்வில் இந்திய லோக்சபா உறுப்பினர் சசி தரூர் கோரிக்கை

Featured Replies

பாதிப்புற்ற தமிழர்களுக்கு மருந்தளிக்க வேண்டும்

12-8278b60c54810f451eea09d340457890ca111350.jpg

 

பிரதமர் ரணிலின் அரசியல் வரலாறு நூல் வெளியீட்டு நிகழ்வில் இந்திய லோக்சபா உறுப்பினர் சசி தரூர் கோரிக்கை
(பா.ருத்­ர­குமார்)

முப்­பது வரு­ட­கால யுத்தம் முடி­வ­டைந்து பாரிய துன்­பங்­களை சந்­தித்த மக்­களின் எதிர்­கா­லத்­தைப்­பற்றி அர­சாங்கம் அவ­சியம் சிந்­திக்க வேண்டும். இந்­தியா வழங்கும் உத­வி­களை வடக்கு, கிழக்­கி­லுள்ள மக்­க­ளுக்கு முழு­மை­யாக கிடைக்க உதவ வேண்டும். இடம்­பெ­யர்ந்தும் காணா­ம­லாக்­கப்­பட்டும் அல்­லது வேறு­வி­த­மா­கவும் துன்­பப்­பட்டு வரும்

உற­வு­களின் காயங்­க­ளுக்கு இலங்கை அர­சாங்கம் மருந்­த­ளிக்க வேண்டும் என இந்­திய எழுத்­தா­ளரும் இந்­திய லோக்­சபா உறுப்பினருமான சசி தரூர் தெரி­வித்தார்.

மேலும் இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்க பணி­களில் இந்­தி­யாவின் அனு­ப­வத்தை உள்­வாங்க வேண்டும் எனவும் தமிழ்­மக்­க­ளுக்கு பாது­காப்பை வழங்­கக்­கூ­டி­ய­து­மான ஒரு சூழல் இலங்­கையில் உரு­வாக்­கப்­பட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.

எழுத்­தாளர் தினேஷ் வீரக்­கொ­டி­யினால் எழு­தப்­பட்ட பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அர­சியல் வர­லாறு எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று செவ்­வாய்க்­கி­ழமை பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்வதேச மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. இதன்­போது சிறப்­பு­ரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

இலங்கை இந்­திய வர­லாற்று தொடர்பு வர­லாற்­றுக்­காலம் தொட்டு தொடர்ந்து வரு­கின்­றது. இன்று ஆசிய பிராந்­தி­யத்தில் பொரு­ளா­தா­ரத்தில் வளர்ந்­து­வரும் முக்­கிய நாடாக இலங்கை காணப்­ப­டு­கின்­றது. இலங்கை அர­சாங்­கத்­தி­டம் பாரிய பொறுப்­புக்கள் காணப்­ப­டு­கின்­றன. முப்­பது வரு­ட­கால யுத்தம் முடி­வ­டைந்து பாரிய துன்­பங்­களை சந்­தித்த மக்­களின் எதிர்­கா­லத்­தைப்­பற்றி அர­சாங்கம் அவ­சியம் சிந்­திக்க வேண்டும்.

இந்­தியா எப்­போ­துமே பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உதவ தயா­ரா­க­வுள்­ளது. மனி­தா­பி­மான சவால்­களை வெற்­றி­கொண்டு யுத்த வடுக்­க­ளுக்கும் காயங்­க­ளுக்கும் மருந்­த­ளித்­தாக வேண்டும். குறிப்­பாக வடக்கு கிழக்கில் சுமார் 300 ஆயிரம் தமிழ் மக்கள் இடம்­பெ­யர்ந்தும் காணா­ம­லாக்­கப்­பட்டும் அல்­லது வேறு­வி­த­மா­கவும் துன்­பப்­பட்டு வரு­கின்­றனர். இந்­தியா ஆரம்பம் முதலே பொரு­ளா­தார ரீதி­யா­கவும் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தா­கட்டும் அல்­லது ஏனைய மனி­தா­பி­மான செயற்­பா­டு­களை ஊக்­கு­விப்­ப­தா­கட்டும் முன்­னின்று செயற்­பட்டு வந்­துள்­ளது. அதனை மறுக்க முடி­யாது.

அந்­த­வ­கையில் இந்­தி­யா­வினால் 7 நிலக்­கண்­ணி­வெடி அகற்றும் படை­யினர் இலங்­கைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டனர். அதன்­பி­றகு 50000 குடி­யி­ருப்­புக்­களை அமைத்தல், வைத்­தி­ய­சா­லை­களை அமைத்­தலில் இந்­தி­யாவின் பங்கு அளப்­ப­ரிய­தாகும்.

இலங்­கையின் பன்­மைத்­துவம், நல்­லி­ணக்கம் என்­ப­வற்றில் அர­சியல் செல்­வாக்கு அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றது. அதனை நிவர்த்­திப்­ப­தற்­கான வழி­வ­கை­கள் நிச்­சயம் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். வர­லாற்­றுக்­காலம் தொட்டு இந்­தியா அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்க பணி­களில் பாரிய கடின பாதை­களை சந்­தித்து வந்­துள்­ளது. எனவே அர­சியல் பாதையில் நாம் கண்ட அனு­ப­வங்­களை இலங்­கையின் புதிய அர­சி­ய­லமைப்­புக்கு வழங்க இந்­தியா தயா­ரா­க­வுள்­ளது. இவ்­வி­ட­யத்தில் இந்­தியா இலங்­கையின் உள்­வி­வ­கா­ரங்­களில் தலை­யி­டு­கின்­றது என கருத்­திற்­கொள்ள வேண்டாம்.

இலங்­கை­யி­லுள்ள 17 இலட்ச தமிழ் மக்­க­ளி­னதும் தென்­னிந்­திய மக்­க­ளதும் உறவை நாம் மதிக்க வேண்டும். இலங்­கையின் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை தீவி­ர­மான பிரச்­சி­னை­யாக எடுத்து செயற்­பட வேண்டும். இலங்கை இந்­தி­யா­வுக்­கி­டை­யி­லான தொடர்பு வெறு­மனே அர­சி­யலில் மட்டும் தங்­கி­ய­தில்லை. கலா­சாரம் நம்­பிக்­கைகள் சமயம் உள்­ளிட்ட பல துறை­களில் நாம் ஒன்­று­பட்டு வாழ்ந்து வரு­கின்றோம்.

இத­னை­விட இந்­தியா இலங்­கையின் அபி­வி­ருத்தி திட்­டங்­க­ளுக்கும் பல உத­வி­களை வழங்கி வரு­கின்­றது அந்த வகையில் சக்­தி­வளம்,வீதி அபி­வி­ருத்தி, கட்­டு­மானம் போன்­ற­வற்றில் இந்­தி­யாவின் பங்­க­ளிப்பு முக்­கி­ய­மா­ன­தாகும். டிக்­கோயா வவு­னியா வைத்­தி­ய­சாலை அமைப்­ப­தற்கு இந்­தியா பல்­வேறு துறை­களில் உதவி வழங்­கி­யுள்­ளது.

குறிப்­பாக 2.6 பில்­லியன் ரூபா அபி­வி­ருத்தி பணி­க­ளுக்­காக மட்டும் இலங்­கைக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. ஆதில் வடக்கு கிழக்கில் யுத்­ததில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு எந்­த­ள­வு­தூரம் சென்­ற­டைந்­தது என்­பது கேள்­விக்­கு­றி­யான விட­யமே. இலங்­கையின் அர­சியல் கலா­சா­ரத்தில் சீனாவின் பங்­க­ளிப்பு தொடர்பில் பல முக்­கி­ய­மான விட­யங்கள் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன. ஆதில் முக்­கி­ய­மான ஒன்­றுதான் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களில் சீனாவின் ஆதிக்­கமும் இலங்கை மக்­களின் ஆரப்­பாட்­டங்­களும் எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களை தோற்­று­வித்­தி­ருந்­தன. பட்­டுப்­பா­தையில் வர்த்­த­கத்தை மேம்­ப­டுத்­திக்­கொள்ளும் சீனா அதனை இலங்­கையில் எந்­த­ள­வு­தூரம் சரி­யாக பயன்­ப­டுத்­திக்­கொண்­டது என்பது சந்தேகமான விடயம்தான்.

இந்தியா இலங்கையில் அபிவிருத்தியில் முதலிடும் போது பல்வேறு செயற்பாடுகளை உற்றுநோக்குகின்றது. அந்த வகையில் இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களில் சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வை நாம் மதிக்கின்றோம். ஆனால் இவ்வாறான விடயங்களை சீனா கண்டுக்கொள்வதில்லை. அதனால்தான அதிக முதலீடுகளை இலங்கையில் மேற்கொள்கின்றது.

கடந்த வாரத்தில் இந்திய நடிகர் ரஜினிகாந்த் இலங்கைக்கு வராமைக்கு வடக்குகிழக்கு் மக்களின் உள்ளக்குமுறல்களே காரணமாகும். அந்த மக்களின் உண்மையான உணர்வுகளை நாம் மதிக்க வேண்டும் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-05#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.