Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியப் படகுகளை விடுவிக்கவே கூடாது - மன்னார் மாவட்ட மீனவர் சங்கம் போர்க்கொடி

Featured Replies

இந்தியப் படகுகளை விடுவிக்கவே கூடாது - மன்னார் மாவட்ட மீனவர் சங்கம் போர்க்கொடி
 
 
இந்தியப் படகுகளை விடுவிக்கவே கூடாது  - மன்னார் மாவட்ட மீனவர் சங்கம் போர்க்கொடி
அர­சுக்­காக மட்­டுமே கருத்­து­ரைக் கும் சில மீன­வர் அமைப்­பு­க­ளின் தலை­வர்­கள் கொழும்பு சென்று மீன­வர்­க­ளின் விருப்­புக்கு மாறாக இந்­திய இழு­வைப் பட­கு­களை விடுவிப்பதற்கான அனுமதியை வழங்கியமை கண்டனத்துக்குரியது. இவ்­வாறு மன்­னார் மாவட்ட மீன­வர் சங்­கங்­க­ளின் தலை­வர் யஸ்­ரின் சொய்சா தெரி­வித்­தார்.
 
வடக்­குக் கட­லில் இடம்­பெ­றும் இந்­திய மீன­வர்­க­ளின் அத்­து­மீ­றிய மீன்­பிடி மற்­றும் இலங்­கை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள இந்­திய பட­கு­களை விடு­விப்­பது உள்­ளிட்ட பல விட­யங்­கள் தொடர்­பில் பேச்சு இடம்­பெ­ற­வுள்­ளது.
அது தொடர்­பி­லான முன்­னா­யத்­த­மாக வடக்­கி­லுள்ள 4 மாவட்­டங்­க­ளின் மீன­வர் பிர­தி­நி­தி ­கள் கொண்ட குழுவை மீன்­பி­டித்­துறை அமைச்­சர் கலந்­து­ரை­யா­ட­லுக்­காக அழைத்­தி­ருந்­தார். கலந்­து­ரை­யா­டல் மீன்­பிடி அமைச்­சில் நேற்று இடம்­பெற்­றது.
 
இது தொடர்­பில், மன்­னார் மாவட்ட மீன­வர் சங்­கங்­க­ளின் தலை­வர் யஸ்­ரின் சொய்சா தெரி­வித்­த­தா­வது,
 
இலங்­கை­யில் உள்ள இந்­திய இழு­வைப் பட­கு­களை விடு­விப்­பது தொடர்­பில் வட­ப­குதி மீன­வர்­க­ளின் கருத்து கேட்­கப்­பட்­டுள்­ளது. அதற்கு, வடக்­கில் இருந்து சென்­ற­வர்­கள், பட­கு­களை விடு­விப்­ப­தற்கு இணக்­கம் தெரி­வித்­துள்­ள­னர்.
 
அவர்­கள் அவ்­வாறு கூறி­னா­லும் உண்­மை­யில் வட பகுதி மீன­வர்­க­ளின் கருத்­தாக அத­னைக் கூற முடி­யாது. ஏனெ­னில் இந்த மீன­வர் அமைப்­புக்­கள் கொழும்­புக்­குச் சென்­ற­து­கூட அதி­க­மான மீன­வர்­க­ளுக்­குத் தெரி­யாது. 
 
மீன­வர்­க­ளின் கருத்­தா­கக் கூறும் ஓர் விட­யம் தொடர்­பில் சங்­கங்­கள் தமது மீன­வர்­க­ளி­டம் கருத்தை அல்­லது சம்­மதத்­தைப் பெற்­றுச் சென்­றி­ருக்­க­வேண்­டும். ஆனால் இங்கு அவ்­வாறு எது­வுமே செய்­யப்­ப­ட­வில்லை. இந்­தி­யா­வின் இழு­வைப் பட­கு­க­ளி­னால் எமது மீன­வர்­க­ளின் கோடிக்­க­ணக்­கான சொத்­து­கள் நாச­ம­டைந்­தன என்­ப­தனை மறந்து எந்­த­வி­த­மான ஒரு நிபந்­த­னை­க­ளும் இன்றி இந்த அனு­மதி வழங்­கப்­பட்­டமை கண்­டிக்­கத்­தக்­க­து-­என்­றார்.
 
இந்­தக் குற்­றச்­சாட்­டுத் தொடர்­பில் பேச்­சில் கலந்து கொண்ட மன்­னா­ரைச் சேர்ந்த ஆலத்­தைத் தொடர்பு கொண்டு கேட்­ட­போது,எதிர்­கால இலக்­குக் கரு­தியே மேற்­படி தீர்­மா­னத்­தைக் கூறி­னோம். 2015 ஆம் ஆண்­டுக்­கும் முன்பு கைப்­பற்­றப்­பட்ட பட­கு­களை மட்­டும் விடு­விப்­ப­தற்கே இணக்­கத்­தைத் தெரி­வித்­த­போ­தும் இறுதி முடிவு அமைச்­சர் வசமே.
 
அத்­து­டன் தனி­யாக இந்­திய மீன­வர்­க­ளின் விட­யங்­களை உரைப்­ப­தற்­கா­கச் செல்­ல­வில்லை. எமது மாவட்­டங்­க­ளின் தேவை , பிரச்­சி­னை­கள் தொடர்­பி­லும் கலந்­து­ரை­யா­டி­னோம். வடக்­கின் 4 மாவட்­டப் பிர­தி­நி­தி­க­ளும் பங்கு கொண்­டி­ருந்­த­னர்- என்­றார்.  

http://www.onlineuthayan.com/news/25453

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.