Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கால அவகாசத்தில் உள்ளக விசாரணை ஊடாகவே உண்மைகளை கண்டறிவோம்

Featured Replies

கால அவ­கா­சத்தில் உள்­ளக விசா­ரணை ஊடா­கவே உண்­மைகளை கண்­ட­றிவோம்

Rahitha3-a71c19922a023ee952fbff10f00c8886e0a5dce6.jpg

 

சர்­வ­தேச விசா­ர­ணைக்கோ கலப்பு நீதி­மன்­றத்­துக்கோ இட­மில்லை என்­கி­றது அர­சாங்கம் 
(ஆர்.யசி )

உண்­மை­களை கண்­ட­றியும் நகர்வில் உள்­ளக பொறி­மு­றையின் மூல­மா­கவே தீர்வு ஒன்று பெறப்­படும்.எமக்கு வழங்­கப்­பட்­டுள்ள கால அவ­கா­சத்தில் இறுதி யுத்­தத்தின் போது காணாமல் ஆக்­கப்­பட்ட சம்­ப­வங்கள் மற்றும் சுமத்­தப்­பட்­டு­வரும் யுத்­தக்­குற்­றங்கள் தொடர்பில் உள்­ளக ரீதியில் விசா­ர­ணையை முன்­னெ­டுத்து உண்­மை­களை கண்­ட­றிந்து அறிக்­கையை சமர்ப்­பிப்போம் என்று அர­சாங்கம் தெரி­வித்­தது.  

கலப்பு நீதி­மன்றம் ஒன்றை உரு­வாக்க எந்த விதத்­திலும் அர­சாங்கம் தயா­ராக இல்லை. இலங்­கையின் நீதி கட்­ட­மைப்­பிலும் அதற்­கான அங்­கீ­காரம் இல்லை எனவும் அமைச்­ச­ரவை பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் நேற்று நடை­பெற்ற அமைச்­ச­ரவை முடி­வு­களை வெளிப்­ப­டுத்தும் வாராந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போது பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் இலங்கை அர­சங்­கத்தின் நகர்­வுகள் எவ்­வாறு அமைந்­துள்­ளன என வின­வி­ய­போதே அமைச்­ச­ரவை ஊட­கப்­பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் இலங்­கையின் சட்ட முறை­மை­க­ளுக்கு அமை­யவே அனைத்து நட­வ­டிக்­கைளும் முன்­னெ­டுக்­கப்­படும். இப்­போது வரையில் இது தொடர்­பி­லான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இலங்கை விவ­காரம் சர்­வ­தேச தரப்­பிடம் விவா­திக்­கப்­பட்டு உண்­மை­களை கண்­ட­றியும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க அவர்கள் கோரிக்கை விடுத்­துள்ள நிலையில் நாம் சர்­வ­தேச பொறி­மு­றையை நிரா­க­ரித்து தேசிய விசா­ரணை பொறி­மு­றை­களை கையாளும் நட­வ­டிக்­கை­களை ஏற்­றுக்­கொண்­டுள்ளோம். சர்­வ­தேச பொறி­மு­றையை நிரா­க­ரித்து உள்­ளக பொறி­மு­றை­களை ஏற்­றுக்­கொண்­ட­தையோ அல்­லது உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தையோ தவறு என்று கூற முடி­யாது.

உண்­மை­களை கண்­ட­றியும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­குழு மூலம் சாட்­சி­யங்­களை விசா­ரிக்கும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. இதில் எனது சாட்­சி­யங்­களும் உள்­ளன. சுமார் ஒன்­றரை மணி­நேரம் எனது சாட்­சிகள் அங்கு பதி­வாக்­கப்­பட்­டுள்­ளன. இந்த அறிக்­கையை சர்­வ­தேசம் ஏற்றுக் கொண்­டுள்­ளது. அப்­ப­டி­யாயின் எமது விசா­ரணை பொறி­முறை தர­மா­னது என்­பது உறு­தி­யாக்­கப்­பட்­டது.

 அதேபோல் பர­ண­கம ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்டு அவர்­களின் அறிக்­கையும் இவ்­வாறு தயா­ரிக்­கப்­பட்­டது. ஆனால் பர­ண­கம அறிக்­கையை சர்­வ­தேசம் ஏற்­று­கொள்­ள­வில்லை. எனினும் அந்த அறிக்­கை­யிலும் தர­மான விசா­ரணை பதி­வுகள் உள்­ளன. நான் அண்­மையில் வடக்கில் மக்­களை சந்­தித்து இந்த விட­யங்கள் தொடர்பில் கலந்­தா­லோ­சித்தேன்.

அப்­போதும் காணாமல் ஆக்­கப்­பட்டோர் தொடர்பில் பதி­வு­களை மேற்­கொண்ட பர­ண­கம அறிக்கை தொடர்பில் நம்­பிக்கை உள்­ளதா என வின­வினேன். மக்­க­ளுக்கு இந்த அறிக்­கையில் நம்­பிக்கை உள்­ள­தாக தெரி­வித்­தனர். ஆகவே மக்­க­ளுக்கும் இந்த நட­வ­டிக்­கை­களில் நம்­பிக்கை உள்­ளது. எனினும் உண்­மை­களை கண்­ட­றியும் பொறி­முறை ஒன்று மேற்­கொள்­ளப்­ப­டா­த­மையே சிக்­கலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. எனவே உள்­ளக பொறி­மு­றையின் கீழ் இலங்­கையின் சட்ட திட்­டங்­க­ளுக்கு அமைய விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க முடியும்.

கேள்வி :- அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்­டிற்கு அப்பால் ஜெனி­வாவில் பொய்­யான வாக்­கு­று­தி­களை வெளி­வி­வ­கார அமைச்சர் கொடுத்­துள்ளார் என பொது எதி­ரணி குற்றம் சுமத்தி வரு­கின்­றதே?

 பதில் :-வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர ஜெனி­வாவில் தெரி­வித்த கருத்­துக்­க­ளுக்கும் ஜனா­தி­பதி, பிர­த­மரின் நிலைப்­பாட்­டிற்கும் இடையில் எந்­த­வித முரண்­பா­டு­களும் இல்லை. உண்­மையில் நாம் கால அவ­காசம் பெற்­றுக்­கொண்­ட­மையே எமக்கு கிடைத்த மிகப்­பெ­ரிய வெற்­றி­யாகும். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் அர­சாங்­க­மாக இருந்­தி­ருந்தால் கடந்த 2015ஆம் ஆண்­டுடன் இந்த பிரச்­சி­னை­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்­டி­ருக்கும். அப்­போதே எமக்­கான சர்­வ­தேச தடைகள் விதிக்­கப்­பட்டு எம்­மீ­தான காட்­ட­மான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்கும். எனினும் எமக்கு 2019ஆம் ஆண்­டு­வ­ரையில் பொறுப்புக் கூற­லுக்­கான கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்த காலத்­தினுள் இறுதி யுத்­தத்தின் போது காணாமல் ஆக்­கப்­பட்ட மற்றும் சுமத்­தப்­பட்­டு­வரும் குற்­றங்கள் தொடர்பில் உண்­மை­களை கண்­ட­றிந்து அறிக்­கையை சமர்ப்­பிப்போம்.

கேள்வி:- கலப்பு நீதி­மன்றம் உரு­வாக்­கப்­பட்டு அதற்­க­மைய விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக கூறு­கின்­றமை தொடர்பில்?

பதில் :- இந்த விட­யத்தில் கலப்பு நீதி­மன்றம் ஒன்று உரு­வாக்­கப்­ப­டாது. இலங்­கையின் சட்ட முறை­மை­க­ளுக்கு அமைய இலங்­கையில் கலப்பு நீதி­மன்றம் ஒன்றை உரு­வாக்க முடி­யாது. அதுவே அர­சாங்­கதின் இறு­தி­யான நிலைப்­பா­டாகும். எமது அர­சியல் அமைப்­பிற்கு அப்பால் சென்று எதையும் எம்மால் மேற்­கொள்ள முடி­யாது என்­ப­தையே நாம் ஜெனிவா பேர­வை­யிலும் தெரி­வித்­துள்ளோம். இவற்றை வரி வரி­யாக அங்கு தெரி­விக்க வேண்­டிய அவ­சியம் இல்லை. அவர்கள் அதை தெளி­வாக விளங்­கிக்­கொள்­வார்கள்.

சர்­வ­தேச தரத்­திற்கு அமைய அர­சியல் அமைப்பை உரு­வாக்­கு­வது இலங்­கைக்கு நன்­மை­யே­யாகும். அதில் எந்தத் தவறும் இல்லை. ஊடக சுதந்­தரம் சர்­வ­தேச தரத்தில் அமைய வேண்டும், மனித உரி­மைகள் சர்­வ­தேச தரத்தில் அமைய வேண்டும் என கேட்கும் நபர்கள் ஏன் இந்த விட­யத்தில் முரண் படு­கின்­றனர். அதேபோல் ஐக்­கிய நாடுகள் சபையை மீறி எம்மால் செயற்­பட முடியாது. நாம் ஐக்கிய நாடுகளில் அங்கம் வகிக்கின்றோம். அவ்வாறு இருக்கையில் அவர்களின் கேள்விகளுக்கு நாம் பொறுப்புக் கூறியாக வேண்டும். போர்க்குற்ற விடயங்களிலும் அவ்வாறேயாகும். எனினும் இன்று எமது அரசாங்கத்தை குற்றவாளிகளாக விமர்சிக்கும் நபர்கள் தான் அன்று சர்வதேச தரப்பிடம் போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்வதாக வாக்குறுதிகளை கொடுத்தனர். 13 பிளஸ் தருவதாக கூறினார்கள் . இன்றும் அரசியல் அமைப்பு குழுவில் அவர்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. அவர்கள் ஊடகங்களுக்கு ஒரு கருத்தை கூறிக்கொண்டு செயற்பாடுகளில் வேறு விதமாக நடந்துகொள்கின்றனர் என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-06#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.