Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா விவாதத்துக்கான நேர ஒதுக்கீட்டினால் பெரும் சர்ச்சை; சபை நடவடிக்கை ஒத்திவைப்பு

Featured Replies

ஜெனிவா விவாதத்துக்கான நேர ஒதுக்கீட்டினால் பெரும் சர்ச்சை; சபை நடவடிக்கை ஒத்திவைப்பு

 

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

ஜெனிவா தொடர்பில் கூட்டு எதி­ர­ணி­யினால் சபையில் முன்­வைக்­கப்­ப­ட­வி­ருந்த சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ரணை மீதான விவாதம் ஆரம்­ப­மா­வ­தற்கு முன்­ன  தா­கவே நேர ஒதுக்­கீடு தொடர்பில் ஆளும் தரப்பினருக்  கும் எதிர்த்தரப்­பி­ன­ருக்கும் இடையில் எழுந்த கடும் வாக்­கு­வா­தத்தால் சபை நடவ­டிக்­கைகள் இன்று மு.ப. 10.30 மணிவரை ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. 

பாரா­ளு­மன்றம் நேற்று வியா­ழக்­கி­ழமை மு.ப. 10.30 மணிக்கு சப­ாநா­யகர் கரு ஜயசூரிய தலை­மையில் கூடி  யது. வாய்மூல விடைக்­கான கேள்வி நேரத்தை தொட ர்ந்து நேர­டி­யாக சபை ஒத்தி வைப்பு ஜெனிவா விவாதம் ஆரம்பமானது. 

 இதன்­போது ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் கூட்டு எதிர்க்­கட்சி ஆத­ரவு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்­தன ஜெனீவா விவ­காரம் சம்­பந்­த­மாக சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையை சமர்ப்­பித்து உரை­யாற்­று­வ­தற்கு முன்­ன­தாக தமது ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ரணை விவாதம் தொடர்பில் முக்­கிய விட­ய­மொன்றை கூற­வேண்டும் என குறிப்­பிட்டார்.

அதா­வது, சபா­நா­யகர் அவர்­களே, நாட்­டிற்கு மிகவும் பாதிப்பை ஏற்­ப­டுத்த கூடிய விடயம் தொடர்பில் நாம் பேச­வுள்ளோம். இது தொடர்பில் எவரும் பேசு­வ­தாக இல்லை. எனினும் சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணைக்கு கூட்டு எதி­ர­ணிக்கு 32 நிமி­டங்­களே ஓதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. இது நியா­ய­மில்லை. இதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, மக்கள் விடு­தலை முன்­னணி சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ரணை கொண்டு வந்த சந்­தர்ப்­பத்தில் ஒரு மணித்­தி­யாலம் வழங்­கப்­பட்­டது. எனினும் எமக்கு 32 நிமி­டங்­களே வழங்­கப்­பட்­டுள்­ளன. இது போதாது என்றார்.

பதி­ல­ளித்த சபா­நா­யகர்

கூட்டு எதிர்க்­கட்­சிக்கு நேரம் போதாது எனில் ஆளும் தரப்பில் இருந்து மேல­தி­க­மாக 34 நிமி­டங்கள் வழங்க முடியும். அதற்கு மேல் இதனை விவா­தத்­திற்கு எடுத்து கொள்ள முடி­யாது. நேரம் போதாது என்றார்.

மீண்டும் தினேஷ் எம்.பி

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு, மக்கள் விடு­தலை முன்­னணி போன்ற கட்­சிகள் சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ரணை கொண்டு வந்தால் ஒரு மணித்­தி­யாலம் வழங்­கப்­ப­டு­கின்­றன. ஆகவே எமக்கும் ஒரு மணித்­தி­யாலம் வேண்டும் என்றார்.

குறுக்­கிட்ட அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக்க

சபா­நா­யகர் அவர்­களே இன்று மிகவும் முக்­கி­ய­மான நாளாகும். தவுல் தென ஞானி­சர தேரரின் இறு­தி­கி­ரியை பின்­நேரம் நடை­பெ­ற­வுள்­ளது. ஆகையால் சபை நட­வ­டிக்­கை­களை 3 மணிக்கு முடிப்­ப­தற்கு திட்­ட­மிட்­டுள்ளோம். ஆகவே இதற்கு எவரும் எதிர்ப்பு தெரி­விக்­க­மாட்­டார்கள். இதன்­கா­ர­ண­மாக நேரம் பற்­றா­குறை காணப்­ப­டு­கின்­றது என்றார்.

சபா­நா­ய­கரின் விளக்கம்

 கூட்டு எதிர்க்­கட்சி எம்.பிக்­க­ளுக்கு மேல­தி­க­மாக 34 நிமி­டங்கள் ஆளும் தரப்பில் இருந்த வழங்­கப்­பட்­டுள்­ளன. ஆகவே மேல­திக நேரத்தை பெற்­றுக்­கொண்டு இணக்­கத்­திற்கு வர முடி­யாதா? ஏனென்றால் இது தொடர்­பாக விவாதம் புரி­வ­தற்கு நேரம் இல்லை என்றார்.

டலஸ் அழ­கப்­பெ­ரும எம்.பி சபா­நா­ய­கரே கூட்டு எதி­ரணி தொடர்பில் நாட்டு மக்­க­ளுக்கு பிழை­யான தகவல் செல்ல கூடும். ஏனெனில் அம­ர­புர மகா­நா­யக்க தேரரின் இறு­தி­கி­ரி­யைக்கு நாம் எதிர்ப்பு தெரி­விப்­ப­தாக நாட்­டுக்கு தகவல் செல்­லலாம். நேற்று (நேற்று முன் தினம்) நடந்த கட்சி தலைவர் கூட்­டத்தின் போது எமது குழுவின் தலைவர் தினேஷ் குண­வர்­தன தேரரின் இறுதி கிரி­யைக்­காக சபை நட­வ­டிக்­கை­களை மட்­டுப்­ப­டுத்­து­வத்கு இணங்­கினார். இதன்­பி­ர­காரம் இன்­றைய தினம் (நேற்று) 23 இன் 2 கீழ் கேள்­வியும் நாம் எழுப்­ப­வில்லை.

ஆனால் இங்கு வேறு பிரச்­சினை உள்­ளது. கூட்டு எதி­ர­ணிதான் ஜெனீவா தொடர்­பான ஒத்­தி­வைப்பு வேளை மீதான பிரே­ர­ணையை கொண்டு வரு­கின்­றது. எனினும் இதற்கு எமக்கு வழங்­கப்­பட்­டுள்ள நேரம் போதாது.பிரச்­சி­னையின் யதார்த்­ததை புரிந்­துக்­கொள்ள வேண்டும். எனினும் மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கு தரா­ள­மாக நேரம் ஒதுக்­கப்­ப­டு­கின்­றன.

சபை முதல்வர் கிரி­யெல்­லவின் பதில்

உங்­க­ளது பிரச்­சினை தொடர்­பாக பாரா­ளு­மன்­றத்­திற்கு தீர்­மானம் எடுக்க முடி­யாது. ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி தலை­வ­ரு­டனே நீங்கள் பேசி தீர்­மானம் எடுக்க வேண்டும். வேண்­டு­மெனில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­திப்­ப­தற்கு நேரம் பெற்­று­த­ரவா? நீங்கள் அவரை சந்­தித்து பேசிக்­கொள்­ளுங்கள். பாரா­ளு­மன்­றத்தை குழப்ப வேண்டாம் என்றார்.

பிர­தம கொரடா அநுர குமா­ரவின் கடும் சாடல்,

சபா­நா­யகர் அவர்­களே கூட்டு எதி­ர­ணி­யினர் எந்­த­நே­ரமும் எமது கட்­சியின் மீது எதிர்ப்­பினை வௌியி­டு­கின்­றனர். கட்சி உட்­பு­சலை இங்கு கொண்டு வர முடி­யாது. பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யத்தை மீறி செயற்­பட முடி­யாது. தற்­போது எதி­ர­ணிக்கு 30 சத­வீ­தமே நேரம் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் ஆளும் தரப்பில் இரு பிர­தான கட்­சிகள் உள்­ள­மை­யினால் 70 சத­வீதம் ஆளும் தரப்­புக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன.

இதில் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு 40 வீதமும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கு 30 சத­வீ­தமும் வழங்­கப்­பட்­டுள்­ளன. இந்த 30 வீதத்தில் இருந்தே கூட்டு எதி­ர­ணிக்கு நேரம் ஒதுக்­கப்­ப­டு­கின்­றன. அதே­போன்று ஆளும் தரப்­புக்கு ஒத்­தி­வைப்பு பிரே­ர­ணைகள் 2 உம், எதி­ர­ணிக்கு 2 ஒத்­தி­வைப்பு பிரே­ர­ணையும் வழங்­கப்­ப­டு­கின்­றன.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கு வழங்­கப்­படும் ஒத்­தி­வைப்பு பிரே­ர­ணை­யையே கூட்டு எதி­ர­ணிக்கு வழங்­கப்­ப­டு­கின்­றன. முன்­னைய ஆட்­சியின் போது எதி­ர­ணிக்கும் 50 நிமி­டங்­களே வழங்­கப்­பட்­டன. நாம் அப்­போது பல சந்­தர்ப்­பங்­களில் எதிர்த்தோம். எனவே இது பாரா­ளு­மன்­றத்தில் உள்ள பிரச்­சி­னைகள் அல்ல. இது கட்சி உட்­புசல். எமக்கு பொறுத்து கொண்டு இருக்க முடி­யாது. கட்சி உட்­பு­சலை இங்கு கொண்டு வர வேண்டாம் என்றார்.

அநு­ர­வுக்கு தினேஷ் பதில்

அநுர குமார திஸா­நா­யக்­கவின் கருத்து தொடர்பில் எமக்கு கருத்து வேறு­பா­டுகள் இல்லை. எனினும் இங்­குள்ள பிரச்­சினை வேறு. சபை ஒத்­தி­வைப்பு பிரே­ர­ணையை நாமே கொண்டு வரு­கின்றோம். எமக்கு நேரம் போதாது. சபா­நா­யகர் அவர்­களே இதனை நீங்கள் புரிந்­துக்­கொள்ள வேண்டும். முன்­னைய ஆட்­சியின் போது ஆளும் தரப்­புக்கும் எதிர் தரப்­புக்கும் 50 க்கு 50 என சரி­யாக வழங்­கப்­பட்­டன. அப்­போது எமக்கு மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை இருந்­தது. அநுர குமார திஸா­நா­யக்க இதனை புரிந்­துக்­கொள்ள வேண்டும்.

கம்­பன்­பி­லவின் ஆதங்கம்

எனக்கும் பேசு­வற்கு இட­ம­ளிக்க வேண்டும். அநுர குமார திஸா­நா­யக்­கவின் கருத்தை நான் கடு­மை­யாக எதிர்­கின்றேன் என்றார்.

பந்­துல குண­வர்­தன எம்.பி கேட்ட நியாயம்

நாட்­டிற்கு மிகவும் பாதிப்பை ஏற்­ப­டுத்தும் விடயம் தொடர்­பி­லேயே நாம் பிரே­ரணை கொண்டு வர­வுள்ளோம். ஜெனீ­வாவில் எமது இரா­ணு­வத்­திற்கு பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. நாமே இந்த விடயம் தொடர்பில் பேசு­கின்றோம். இரா­ணு­வத்தின் பக்கம் நாமே உள்ளோம். ஆகவே கூட்டு எதி­ர­ணிக்கு 100 நிமி­டங்கள் வழங்­கப்­பட வேண்டும் என்றார்.

மரிக்கார் எம்.பி.யின் எதிர்ப்பு

சபா­நா­யகர் அவர்­களே இரா­ணு­வத்தின் பக்கம் அவர்­களே உள்­ள­தாக கூறி தேசப்­பற்றை காண்­பிக்க முயல்­கின்­றனர். இதனை ஹென்­சாட்டில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.

சபா­நா­ய­கரின் தீர்க்­க­மான முடிவு  

இது தொடர்­பாக என்னால் தீர்­மானம் எடுக்க முடி­யாது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யுடன் பேசியே தீர்­மானம் எடுக்க வேண்டும். எனவே நேரம் ஒதுக்­கீடு செய்­வ­தனை என்னால் மாற்ற முடி­யாது. இது எனக்­கு­ரிய கட­மை­யல்ல. இது என்­னு­டைய முடி­வாகும் என்றார்.

ஆசு­வா­சப்­ப­டுத்­திய தினேஷ் எம்.பி

இவ்­வா­றான சந்­தர்ப்பம் முன்பும் ஏற்­பட்­டது. மைத்­தி­ரி­பால சேனா­நா­யக்க, அநுர பண்­டா­ர­நா­யக்க கட்சி தலைமை மீறி பாரா­ளு­மன்­றத்தில் செயற்­பட்­டனர். ஆகவே கட்சி தலை­மை­யிடம் பேச வேண்­டி­ய­தில்லை என்றார்.

சுபை முதல்வர் அமைச்சர் ல­க்ஷமன் கிரி­யெல்ல வின் கோரிக்கை சபா­நா­யர்கள் அவர்­களே இப்­படி எமக்கு பாரா­ளு­மன்­றத்தை கொண்டு செல்ல முடியாது. ஆகவே சபை நடவடிக்கைகளை ஒத்திவையுங்கள் என்றார். அமைதியற்ற நிலைமை இதன்போது எதிரணி எம்.பிக்கள் கூச்சலிட்டு சபை நடவடிக்கைகளை குழப்பிய வண்ணம் இருந்தனர். 

ஆளும் கட்சி பிரதமகொரடா அமைச்சர் கயந்தவின் கோரிக்கை சரி. நீங்கள் சபை ஒத்திவைப்பு பிரேரணையை கொண்டு வாருங்கள். அரசாங்கத்திற்கு நன்றி கூறி உங்களது பிரேரணையை சமர்ப்பியுங்கள் என்றார்.

விடாப்பிடியாக நின்ற எதிர்க்கட்சி

இந்த சந்தர்ப்பத்தில் சபையில் அமைதியற்ற நிலைமைகளே நீடித்தன. கூட்டு எதிர்க்கட்சி தமக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியவாறே இருந்தனர். இதனால் சபை நடவடிக்கைகளை இன்று காலை 10.30 மணி வரைக்கும் சபாநாயகர் கரு ஜெயசுரிய ஒத்திவைத்தார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-07#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.